Loading

அமெரிக்க சென்ற துருவனும் ஒரு வாரம் கழித்தே தனது குடும்பத்துடன் அலைபேசி வழியே பேசினான்.

சில பல வேலைகளை முடித்துக் கொண்டு அவர்களிடம் அமெரிக்கா வந்த செய்தியையும் தனது பாதுக்காப்பு செய்தியையும் சொன்னவன்,  ராதாவின் அழுகையை கேட்டு ஆறுதல் சொல்லி, மற்றவர்களிடம் கேலியும் கிண்டலுமாகப் பேசினான்.

ருத்ரன், மதுவின் ஒரு வார தவிப்பை ஜாடையாகச் சொல்ல, தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லியவன், மீண்டும் ஒரு தரம் அவர்களிடம் பேசி வைத்து விட்டான்.

குடும்பத்துடன் அவன் பேசுவதை  ஏக்கமாகப்  பார்த்தவள் கைகளில் இருந்த கைபேசியை பார்த்து விட்டு அறைக்குள் சென்று விட்டாள்.

மெத்தையில் அமர்ந்து, வழக்கம் போல ‘அவருக்கு என்னை பிடிக்கவில்லையோ ! அதுனால் தான் என்னை தவிர்க்கிறாரோ ! என்னை சரிகட்ட, என்னுடன் பேசுவதாக சொல்லி விட்டுப் போனாரா? என்னை அவருக்கு பிடிக்கவில்லை அது தான் உண்மை”என்று அவளது எண்ணம் முழுவதையும்  கற்பனைக்கு குத்தகை கொடுத்து  விட்டாள்.

விளைவு அதில் விளைந்த கண்ணீரும், வேதனையும் தான். தினமும் கொஞ்சம் கொஞ்சமாக அதை அருவடை செய்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் அதை எல்லாம் பொய்யென  உணர்த்த அவனது அழைப்பு வந்து கைபேசியை அதிரச் செய்தது. எடுத்து பார்த்தாள் அவன் தான்.

இன்ப அதிர்வு அவளது கற்பனையை தரை மட்டமாக்கியது.

வேகமாக கண்ணீரை துடைத்து அவனது அழைப்பை எடுத்து காதில் வைத்தாள் ஆனால் பேசவில்லை.

“ஹலோ “என்று ஆரம்பித்தான்.

இவளோ பேசவில்லை அமைதியாக இருந்தாள்.

“என்ன மேடம் கோபமா? ஹலோ கூட சொல்ல மாட்டீங்களா?”என்றான்.

அப்போதும் அவள் அமைதியாக இருந்து பேசாமல் முரண்டு பிடித்தாள்.

அவனுக்கு அவளை சமாதானம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை தான். ஆனாலும் அவளுக்காக அவன் அதை செய்தான். ஏனோ செய்ய தூண்டியது அவன் மனது.

“இங்க வந்ததும் சிம் வாங்க, ஆக்டிவேட் பண்ண, வேலை தேட வீடு பார்க்கன்னு கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன் மது. இப்போ தான் எல்லாம் செட் ஆச்சு ! அதான் கால் பண்ணினேன்… ஒன் வீக் பேச முடியல சாரி ! கொஞ்சம் உங்க கோபத்தை குறைச்சுட்டு பேசலாமே என் கூட?”என அவன் மென்மையாக பேசியே அவள் கோபத்தை சட்டென கரைத்து விட்டான்.

அவளும் கண்களை துடைத்துக் கொண்டு “ஹலோ “என்றாள். இவன் உடனே சிரித்து விட்டான்.

“என்ன ரொம்ப மிஸ் பண்ணீயா?”

“ம் “என்றாள்.

“என்னை திட்டிருப்பீயே ! இவனுக்கு என்னை  பிடிக்கல போலனு நீயா ஏதோ கற்பனை பண்ணி  ஏதாவது யோசித்து அழுதிருப்பீயே ?”என அவன் நேரில் பார்த்தது போல சொல்ல, இவள் விழிகளை அகல விரித்து பார்த்தாள்.

“இப்போ, கூட கரெக்ட்டா சொல்றானேனு உன் குட்டி கண்ணையும் பெரிசா விரிச்சி வச்சிருப்பீயே !”என்றதும் அவளுக்கு பக்கென ஆனது. அறையை சுற்றி பார்த்தாள்.

“இப்போ கூட கேமிரா வச்சிருக்கான தான பார்க்கற !”அதையும் கரெக்டா சொல்ல,

“இல்ல நீங்க அமெரிக்கா தான் போனீங்களா? இல்ல இந்தப்பக்கமா பிளைட் ஏறி அந்தப் பக்கமா இறங்கி பஸ் பிடிச்சி வீட்டுக்கு வந்து என்னை வேவு பார்க்கறீங்களா?” என  அவள் கேட்டதும்  வாய் விட்டு சிரித்தவன்,

“இதெல்லாம்  இங்க இருந்து நான் பண்ற கற்பனை? இதை தான் நீ செஞ்சிருப்ப கற்பனை பண்ணி சொன்னேன் அது சரியாக இருக்கு !”என்றதும் அவளுக்கு ஆச்சர்யம்..

“மது !”என்றான்.

“கோபம் போயிடுச்சா?”

“போக வச்சிட்டீங்க !  தாக்கு பிடிக்கல  நொடி கூட ! உங்களோட பேச்சை ரசிக்க வைக்கும் போது மத்த உணர்வுகள் எங்க போகுதுனு தெரியல ! இப்படியே பேசிட்டே இருக்க தோணுது ! “என்றாள் தன்னை அறியாமல்.

“இப்படியே பேசிட்டே இருந்தால், உன் வயிறும் என் வயிறும் நமக்கு சாபம் விட்டுடும்.. அப்புறம் பசி வந்தாலும் சாப்பிட முடியாது ! அப்படியொரு சாபத்தோட வாழச் சொல்றியா?”என கேட்டதும் இவள் சிரித்தாள்.

“மது ! என்னால வேலையை பொறுத்து தான் நான் உனக்கு கால் பண்ண முடியும் ! அதனால எப்போ கால் பண்ணுவான் காத்திட்டு இருக்காத ! உன்னோட ரோட்டின் வேலையை பாரு. வேலைக்குப் போ ! நான் இல்லாத இடத்துலே நீ இருந்து பார்க்கணுமில்லையா ! பிளீஸ் நான் போன் பண்ண பேசலலேனு எதையும் ஸ்கிப் பண்ண கூடாது ! முக்கியமா சாப்பாடு ! நீ சாப்பிடலைனா நான் பீல் பண்ணுவேன்… நீ குடும்பத்தோட இருக்க, நான் தனியா இருக்கேன் எவ்வளவு கஷ்டமா இருக்கும் எனக்குனு உனக்கு தெரியும் தான, இன்னமும் நான் பீல் பண்ணனும் நினைக்கறீயா?”எனக் கேட்டான்.

“சரி ! இனி எதையும் ஸ்கிப் பண்ண மாட்டேன். சாப்பாடு உட்பட, அதே போல நீங்களும் எதையோ நினைச்சிட்டு சாப்பிடறத ஸ்கிப் பண்ணிடாதீங்க ! எவ்வளவு சொந்தம் நம்மல சுத்தி இருந்தாலும் மனசுக்கு புடிச்ச ஒருத்தர் இருந்தா தான் அங்க நிறைவா இருக்கும். அவங்க இல்லைனா எல்லாரும் இருந்தும் தனிமையில இருக்கறது போல தான் இருக்கும்… அதுனால…!” என தன் நிலையை சொல்லி கடைசியில் இழுக்க, அவனுக்கு புரிய தான் செய்தது.

“ம்ம்… புரியுது மது ! சீக்கிரமா வான்னு சொல்ற !”

“சரி தான். ரொம்ப நாள் கழிச்சு என் மனசும் பேச்சும் உங்களுக்கு புரிஞ்சு இருக்கு. ரொம்ப சந்தோசம்  உங்களுக்காக காத்திட்டு இருக்கேன்…!”என்று வைத்து விட்டாள்.

அவனோ அவளது காதலையும் பேச்சையும் எண்ணி மலைத்து போயிருந்தான். ‘இவளை ஏன் முன்பே சந்திக்கவில்லை?’என்ற கேள்வி அவனுக்குள் எழாமில்லை. இருந்தும் ‘விதி’ என்ற விடையை மட்டுமே பதிலாக இருப்பின் அதற்கு மேல் கேள்விகள் இல்லையே…

இருவரது மனமும் இணைய, இணைய தொடர்பே வழியாக அமைந்தது. முதலில் ஒரு முறை பேச்சு, இரு முறையானது. இரு முறை பேச்சை, மூன்று முறையானது. மூன்று முறையும் பல முறையானது. காலம் நேரமெல்லாம் மறந்து நீண்டது அவரது பேச்சுக்கள்.

இவ்வாறு மூன்று மாதங்கள் ஓடி விட்டன.

ஆரோன், தந்தையின் உதவியில் அவரது செக்கியுரிடிட்டு சர்வீஸை பார்த்துக் கொள்ள ஆரம்பித்தான். அவனுடன் எட்வர்டும், நிவாஸ்ம் உறுதுணையாக இருந்தனர். அவர்களுக்கு கீழ் ரவி ஶ்ரீ, அசோக் வேலை செய்தனர்.

பெண்கள் அனைவரும் வீட்டை கவனித்தனர். விடுமுறை நாட்களில் ஒன்று கூடி கொட்டமடித்தனர்.. ஆனால் ஜெஸி மட்டும் எட்வர்டுடன் பேசுவதில்லை… அவனும் மன்னிப்பு கோரினான் தான். ஆனாலும் அவள் மனமிறங்கவில்லை. நிவாஸ் அவன் செய்த தவறை அவனுக்கு புரிய வைத்தான். அவனுக்காக அவளிடம் பேசினான். ஆனாலும் அவன் பேச விரும்பவில்லை… அது மட்டும் குறையாக அவர்களுக்குள் இருந்தது…

வழக்கமாக விடியல் காலையிலே எழுந்து சமையிலறையில் மின் அம்மியை போல சுழல ஆரம்பிப்பவள் இன்று நேரம் கடந்தும் எழவில்லை…

அவனும் அவளை எழுப்பாமல், மகனை மட்டும் எழுப்பி பள்ளிக்கு செல்ல அவளை தயாராக்கிக் கொண்டிருந்தான். அப்பொழுதும் அவள் எழுந்திருக்கவில்லை .

“அம்மா ! எப்போ  எழுந்திருப்பாங்க அப்பா? மார்னிங்கே எந்திருச்சிடுவாங்க, இன்னும்  ஏன் ப்பா எந்திருக்கல?”

“அவங்களுக்கு உடம்பு சரியில்ல கொஞ்சம் பீவிரிஸ் இருக்கும் போல அதான்  எந்திருக்கல ! அவங்க தூங்கட்டும் ! அவங்க எழுந்ததும் அப்பா அம்மாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போவேன். நீங்க ஸ்கூலுக்கு போயிட்டு வாங்க !”என்றான்.

“நானும் அம்மா கூட இருக்கேன் ப்பா ! அம்மாவை நானும் பார்த்துப்பேன் பா !”என்று கெஞ்சியவனை இடையில் கைவைத்து முறைத்தான் ஆரோன்.

“இன்னைக்கி டெஸ்ட் இருக்கு டெனி! அம்மாவ சாக்கா வச்சு கட்டடிக்கலாம் பார்க்கறீயா பிச்சு பிச்சு ! ஒழுங்கா ஸ்கூலுக்கு ஓடிடு ! உன் அம்மா எழுந்தா என்னை க்லோஸ் பண்ணிடுவா ! கிளம்பு கிளம்பு “என்றவனை அவன் பாவமாக பார்க்க,

“நோ வே ! இப்படி முகத்தை வச்சிட்டு பாவமா பார்த்தா பரிதாபப்படுவேன் நினைக்காத மை சன். நீ இன்னைக்கி ஸ்கூலுக்கு போய் தான் ஆகனும்”என்க, அவனோ முகத்தை சட்டென மாற்றி முறைத்து விட்டு வெளியே நடந்தான்.

இவனும் இதழை குவித்து ஊதி விட்டு, மணியாளை பார்த்து “எப்படி தான் இவனை சமாளிக்கிறியோ?!”என தூங்கும் அவளிடம் கேட்டு விட்டு வெளியே சென்றான்.

ஆரோக்கிய பேரனுக்காக சமைத்து டிபன் பாக்ஸில் மதிய உணவையும் அதக்கி வைத்து காலை உணவையும் அவனுக்காக செய்து வைத்திருந்தார்.

அவனுக்கு ஊட்டி விட்டுக் கொண்டே”என்னப்பா ஆச்சி ஜெஸிக்கு? இன்னும் ஏன் எழல? எனக்கு முன்னாடியே எந்திருச்சிப்பாளே இன்னக்கி என்ன ஆச்சி ஆரோன்? காய்ச்சல் எதுவும் அடிக்குதா பார்த்தியா?” அக்கறையாக கேட்டார் ஆரோக்யா,

“உடம்பு நார்மலா தான் இருக்கு. காய்ச்சல் எதுவும் இல்லமா ! அவ தூங்கிட்டு இருக்காளேனு எழுப்பல டெனிய ஸ்கூல் விட்டுடு என்னனு பார்க்கிறேன் மா !”என்றான்.

“ஆரோன் ! நான் என் பேரனை கூட்டிட்டு போறேன் . நீ  ஜெஸிக்கு என்னனு பாரு !” என்றார் ஆப்ரஹாம்.

அவனும் சரியென்று மகனை பள்ளிக்கு தந்தையுடன் அனுப்பி வைத்து விட்டு அறைக்குள் நுழைய, அங்கே ஜெஸி கண் விழித்திருந்தாள்.

ஆனால் மெத்தையிலிருந்து எழலவில்லை… கையில் எதையோ வைத்து பார்த்திருந்தாள்.

அவள் விழித்திருப்பதை கண்டதும் அருகே சென்று அவளை இறுக அணைத்து அவள் கழுத்தில் முகத்தை புதைத்து முத்தம் வைத்து.

“இன்னைக்கி என் ஜெஸிக்கு என்னாச்சி? இந்நேரம் பம்பரமா கிட்சனுக்கும் ரூமுக்கு சுத்துவீங்க, இப்போ என்ன மேடம் படுத்திருக்கீங்க? என்னாச்சி உங்களுக்கு ?”எனக் கேட்க,  அவன் பக்கம் திரும்பி அவன் கழுத்தில் முகத்தை புதைத்தாள்.

“ஆரோ !”என்றவளுக்கு அடுத்து சொல்ல வார்த்தை வராமல் அழுகை தொண்டையை அடைத்தது.

“எதுக்கு அழற ஜெஸி? என்ன தான் ஆச்சு உனக்கு? ஏன் அழற சொல்லுமா?”அவன் முகத்தை கையிலேந்தி கண்ணீரை துடைத்து விட்டு கேட்டான்.

“உன்னை போல என் வயித்துல வளர்ந்த உன்  இரண்டாவது குழந்தையையும் என்னை அறியாமையிலே இழந்துட்டேன் ஆரோ ! ஆனாலும் நீ எனக்கு கிடச்சது போல மறுபடியும் உன் பொண்ணும் நமக்கு கிடைச்சிருக்கா ! வீ ஆர் பிரேக்னட் நவ்!” என இரு கோடுகள்  தாங்கிய அட்டையை அவனிடம் காட்டிச் சொன்னாள்.  அந்தக் அட்டையை கண்டதும்  அவனுக்கும் பேச்சு எழவில்லை. மாறாக அவனது கண்களும் கலங்கி போயிருந்தன.

“என்னையும் இழந்து நம்ம குழந்தையும் இழந்து எவ்வளவு வலி அனுப்பவிச்சு, எந்த துணையும் தேடிக்காம, என் காதலும் நான் கொடுத்த உறவும் போதும் எப்படி ஜெஸி உன்னால இருக்க முடிந்தது? நான் என்னடி பண்ணிட்டேன் என்னை இவ்ளோ காதலிக்கிற?”என அழுது கொண்டே  கேட்டவன் அவள் பதிலை எதிர்பாராது, அவள் இதழில் முத்தம் பதித்து ‘ ஐ லவ் யூ  ஜெஸி !  லவ் யூ ஜெஸி ! தேங்க்ஸ்டி உன் காதல்ல இருந்து இந்த குழந்தை வரைக்கும் தேங்க்ஸ் டி.  என் கூட  கடைசி வரைக்கும் வர போறதுக்கும் தேங்க்ஸ் தேங்க்ஸ் டி”என்று ஒவ்வொரு நன்றிக்கும் இதழில் முத்தம் வைத்தான். பதிலுக்கு இவளும் அவனுக்கு நன்றி  சொல்லி முத்தம் பதித்து பரிமாறிக் கொண்டனர் நன்றியுடன் முத்தங்களை.

“வா !! அத்தை,  மாமா கிட்ட சொல்லணும்”என்று எழ, அவனும் எழுந்தவன் என்ன நினைத்தானோ, கேலண்டர் அருகே சென்றவன் இன்றைய நாளை குறித்து வைத்தவன், தனது செல்லிலும் குறித்துக் கொண்டான்.

“என்ன பண்ற ஆரோ?!”

“என் பையன் கண்ஃபார்ம் டெட் எனக்கு நியாபகத்துல இல்ல… என் பொண்ணு டேட் நியாபகத்துல இருக்கு இருந்தாலும் பழசெல்லாம் நியாபகம் வந்து இந்த நாளை நான் மறைந்துட்டா? அதுக்கு தான் எழுதியும் வைக்கிறேன் போன்ல ஸ்டோர் பண்றேன்…சரி வா போலாம்”என அவன் முன்னே நடக்க இவனுக்கு அவன் பேச்சு ஒரு வித கலக்கத்தை கொடுத்தது.

அவள் உண்டான விஷயத்தை சொன்னதும் ஆரோக்யாவும் ஆப்ரஹாமும் அவளை வாழ்த்தி சந்தோஷப்பட்டனர். இந்த நல்ல செய்தியை நண்பர்களுடன் பகிரவும் குடும்பத்துடன் வந்து விட்டனர். அந்த சந்தோஷ செய்தியை கொண்டாட, மருத்துவமனைக்கு சென்று உறுதி செய்து விட்டு சர்சுக்கு சென்று கடவுளிடமும் ஃபாதரிடமும் சென்று ஆசீர்வாதமும் வாங்கி விட்டு வந்தனர்.

அவனது கர்ப்பச் செய்தியை துருவனிடமும் பகிர்ந்தாள். அவனால் இழந்த உயிர் மீண்டும் அவள் வயிற்றில் ஜனித்து  இருப்பதை கண்டு அவனுக்கு மகிழ்ச்சி தான்.  முன்பு போல் வருத்தமோ ஆதங்கமோ வலியோ இல்லை அவனுக்கு… அதை அவளிடம் பேசும் போது உணர, எல்லாம் மதுவின் அன்பு, ஏனோ கொஞ்சம் கொஞ்சமாக அவனது வலிகளை மறந்து அவள் பக்கம் சாய வைத்தாள்.

“மை லிட்டில் பிரின்ஸஸ் பார்த்துக்கோ ! சீக்கிரமா என் செல்லக் குட்டிய பார்க்க வருவேன்”என்றான் அவனும் மகிழ்ச்சி பொங்க..

நாட்கள் செல்ல, ஜெஸியை ஆரோக்யாவிலிருந்து டெனி வரைக்கும் தாங்கு தாங்கென்று தாங்கினர். அவள் அசைந்தாலும்  வேகமாக எழுந்தாலும்  உடனே  மகனிடமோ கணவனிடமோ “பார்த்தும்மா பாப்பா இருக்குல”எச்சரிக்கை கண்டனம் வரும். இருவரையும் முறைத்து தள்ளுவாள்.

அவ்வாறு அவளது மாதங்கள் ஓட ஐந்துமாத கருவை சுமந்து கொண்டு வலம் வந்தாள்.

அன்று அவர்கள் வணங்கும் மாதா கோவிலில் திருவிழா. ஏராளமானோர் அங்கு கூடிருக்க, மனைவிக்கு மெய்காப்பாளானான்  அந்தக் காதல் காவலன்.

முதலில் கூட்டத்தை நினைத்து ‘வரவேண்டாம் ‘ என்றவன், அவள் முகம் சோர்ந்து போனதை கண்டு மனதை மாற்றி அந்தக் கூட்டத்திலும் பாதுகாப்பாய் அழைத்து போனான். பத்து நாள் நடந்த திருவிழாவிலும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

கடைசி திருவிழாவில் மாதாவை சப்பரத்தில் ஏற்றிக் கோவிலை சுற்றி வலம் வர, பெரியவர்கள் சப்பரத்தின் பின்னே சென்று விட்டனர். இளசுகள் மட்டும் கோவிலில் இருந்து கொண்டனர்.

சப்பரம் உள்ளே வருவதற்காக காத்திருந்தனர். அதுவும் ஜெஸியின் உடல் நிலை கருதி அங்கே இருந்துக் கொண்டனர்.

ஆரோனின் அலைபேசி அலற, பாட்டு சத்தத்தில் கேட்காததால் கோவிலுக்குள்  தள்ளி சென்று பேசினான்.

அவன் அருகே இருந்த ஆலயத்தின் பெரிய மணியை அவன் கவனிக்கவில்லை… கோவிலின் உள்ளே இருக்கும் மிகப் பெரிய மணி அது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அடித்து வசனமும் நேரத்தையும் சொல்லும்.

அந்த இடத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தான். சரியாக மணி இரவு ஒன்பதை  தொட்டிருக்க, அது பெரும் சத்தத்துடன் அடித்தது.

அதன் அருகே அவன் இருந்ததால் சத்தத்தை கேட்டவனுக்கு காதிலிருந்து மூளை வரை அதிர்வு ஏற்பட தலையை பிடித்துக் கொண்டு மயங்கி சரிந்தான் ஆரோன்.

எட்வார்டு அவனை தேடி வர, அவன் மயங்கி கிடப்பத்தை கண்டதும் பதற்றத்துடன் அவன் அருகே ஓடி அவனை எழுப்ப முயன்றான்.

அவனை மயக்கத்திலிருந்து விழிக்க வில்லை.. பயத்தில் அலறி விட்டான். அவனது அலறலை கேட்டு நிவாஸ்,  ஜெஸி என அனைவரும் ஓடி வந்தனர். அவனை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

அவனை பரிசோதித்து விட்டு வெளியே வந்த மருத்துவர், அவர்களிடம், “அவருக்கு ஒண்ணுமில்ல சின்ன மயக்கம் தான்… ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கோம். மயக்கம் தெளிந்தும் போய் பாருங்க.  கண் விழிக்கட்டும் அவரது கண்டிசன் என்னன்னு பார்க்கலாம்”என்று சொல்லி விட்டு செல்ல, அனைவரும் அவன் கண் விழிக்கும் தருணத்திற்காக காத்திருந்தனர்.

அவனும் கண் விழிக்க அனைவரும் உள்ளே சென்றனர். கடைசியாக சென்றாள் ஜெஸி.

அவளுக்கு ஓரத்தில் சிறு கலக்கம் இருந்தது. தன் வயிற்றை தடவிக் கொண்டபடி உள்ளே நுழைந்து ஷர்மி பின் நின்றிருந்தாள். நிவாஸ்ம் உள்ளே நுழையாமல் பயத்துடன் வெளியே நின்றான்.

எட்வர்டு தான் அவன் அருகே சென்று”ஆரோன்”என்றான்.

ஆரோனும் கண்களை மூடி நடந்ததை எல்லாம் யோசித்து கொண்டிருந்தான். பின் மண்டை வேறு வலித்தது.

மீண்டும் “ஆரோன்” என்றான். அவன் கண் விழித்து வந்தவர்களை பார்த்தான்.

வெளியே நின்ற நிவாஸ்க்கு உள்ளுக்குள் படபடப்பாக இருந்தது.

‘அவன் என்ன சொல்ல போகிறான்’ என்று.

“யாரு என்ன காப்பாத்தினது எட்வர்டு? என்னை அவங்க கிட்ட இருந்து யார் காப்பாத்தினது? அந்த வீரமதி மேம் தான் டா அந்த மினிஸ்டர கொன்னது. அதுக்கு நம்ம  நிவாஸ் துணைக்கு போனான் டா ராஸ்கல் ! நான் போய் போலீஸ் கிட்ட எல்லா உண்மையை சொல்லணும்”என்று பறந்தவனை கண்டதும் அவனுக்கு பழைய நியாபகங்கள் வந்து விட்டது என அனைவரும் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டனர். மெத்தையிலிருந்து இறங்க துடிப்பவனை அடக்கினான் எட்வர்டு.

தட்டு தடுமாறி ஜெஸி அவன் அருகே சென்றாள். “ஆரோ !” என்றவள் அவனை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு அழுதாள்.

அவனும் அவளை அணைத்தவன்,”எனக்கு ஒண்ணுமில்ல டி நான் நல்லா இருக்கேன்”என்று அவளை ஆறுதல் படுத்தினாலும் அவள் அழுகையை நிறுத்தவில்லை.

வெளியே நின்ற நிவாஸ் ‘எங்கே தனது நண்பன் தன்னை ஏற்றுக் கொள்ள மாட்டானோ’ என்ற பயம் கண்களில் கண்ணீருடன் தேங்கி நிற்க, அவர்களுக்கு தனிமை தந்து வெளியே வந்தான் எட்வர்டு.

“எட்வர்டு அவன் என்னை வெறுத்துடுவானா டா ! நான் கொலைகாரன் என்னை ஒதுக்கிடுவானா டா! நான் அவன் கிட்ட பேசணும் டா ! என்னை பத்தி சொல்லணும். நான் எந்த தப்பும் செய்யல சொல்லனும் டா !” என்று துடிக்க, அவனை அடக்கியவன்,

“நான் சொல்றத கேளு நிவாஸ் ! இப்போ நீ அவன் கிட்ட போய் பேசறது சரியில்ல… அவன் இப்போதான் சரியாகிட்டு இருக்கான்… இப்போ உன் மேலே கோபப்பட்டு எமோஷன் ஆக கூட வாய்ப்பிருக்கு… அவனுக்கு தான்டா அதுல பாதிப்பு. கண்டிப்பா ஜெஸி நடந்ததை சொல்லுவா உன்னை பத்தி புரிய வைப்பா ! இப்போ நீ வீட்டுக்கு போ ! நாளைக்கு வீட்டுக்கு வா ! ஆரோ உன் கிட்ட நல்லா பேசுவான்… ஜெஸிய நம்பு “என்று அவனை சமாதானம் செய்ய, அவனும் அரை மனதாய் ஒத்துக் கொண்டு ஷர்மியுடன் கிளம்பினான். இவனும் வெளியே அவனுக்காக காத்திருந்தான்.

“ஏன்டி அழுதுட்டே இருக்க என்னாச்சி உனக்கு? நான் நல்ல படியே திரும்பி வந்துட்டேனே  ஏன் அழற?”என அவளிடம் பிரிந்து  கேள்விக் கேட்டவன் அதிர்ச்சியுடன் அவள் மணி வயிற்றை தடவினான்.

அதில் அவளோ அதிர, அவனும் அதிர்ந்து அவளை பார்த்தான்.

“நா… நான்  கோமால இருந்தேனா ஜெஸி?! இவ்வளவு நாள் நான் எந்த நினைவும் இல்லாமல் இருந்தேனா ஜெஸி? இவ்வளவு நாள் என்னடி பண்ணிட்டு இருந்தேன் நான்? எனக்கு எதுவுமே நியாபகத்துல இல்ல ஏன்? சின்ன கருவா உன் வயித்துல இருந்தது, இப்போ வளர்ந்து இருக்கே, ஆனா எனக்கு அது கூட நியாபகமில்லை என்னடி ஆச்சு எனக்கு?” தலையை பிடித்துக் கேட்டான்.

” அப்போ நான் கர்ப்பமாக இருந்தது உனக்கு தெரியுமா ஆரோன்?”

“உனக்கு தாண்டி தெரியாது. ஆனா உன்னோட ஒவ்வொரு அசைவும் எனக்கு தெரியும். டெனிய போல  இந்தக் குழந்தை உண்டானத நான் தான் கண்டு பிடிச்சேன்.  அந்த சந்தோசத்தை கொண்டானும் நினைச்சேன்… ஆனா அதுக்குள்ள என்னமோ நடந்துச்சு! “என்றவன் தலையை தாங்கி இருக்க,

மருத்தவர் வந்து அவனை பரிசோதித்து விட்டு ஒரு பிரச்சனையும் இல்லை என்றவர், வீட்டுக்கு அழைத்து போக சொல்லி விட்டார்.

வீட்டிற்கு அழைத்து வர, தாய், தந்தையை கண்டதும் அணைத்துக் கொண்டான்.. அவர்களும் அவளை ஆர தழுவி முத்தங்களிட்டு மகிழ்ச்சியை தெரிவித்தனர். டெனியை தூக்கி இறுக அணைத்து முத்தமிட்டான்.

மறு ஜென்மம் போல உணர்ந்தான். குடும்பமாக இருந்து கடவுளுக்கு பிரெயர் செய்தனர்.

இருவருக்கும் தனிமை கொடுத்து விட்டு பேரனை அழைத்துக் கொண்டு உறங்கச் சென்றனர்.

அவள் மெத்தையில் அமர்ந்திருக்க அவளருகே அமர்ந்து என்ன நடந்தென்று கேட்க, அவளும் அழுகையூடே அனைத்தையும் சொல்லி முடித்தாள். அவனோ ஸ்தம்பித்து போயிருந்தான்.

“ஆரோ ஆரோ !”என பயத்தில் அவனை உலுக்க, “என்னால நீ எத்தனை கஷ்டம் அனுபவிச்சட்ட? எனக்காக இவ்வளவு ரிஸ்க் எடுத்துருக்கீயே! உன்னை காலம் முழுக்க சந்தோஷமா வச்சுக்கணும் நினைச்ச நானே தினமும் அழும்படியா செஞ்சிட்டேனே! என்னை மன்னிச்சிருடி !”என்று அவள் கைகளில் முகம் புதைத்து அழுதான்.

“உன் மேலே எந்த தப்பும் இல்லை ஆரோன். இதெல்லாம் எழுதி வச்சது. மாத்த முடியாது.தடுக்கவும் முடியாது. நீ திரும்பி வந்ததுல இருந்தே நான் சந்தோசமா தான் இருக்கேன். என் சந்தோஷத்துக்கு இப்போ ஒரு குறையும் இல்லை… நீ என் கூட இருக்குறதே போதும் ஆரோ”என அவன் தோள் சாய்ந்து அழுது கொண்டே அவனை சமாதானம் செய்தாள். அவள் தலை வருடினான்.

“என் மேலே கோபமோ சந்தேகமோ வரலையா ஆரோ ?!”அவன் முகத்தை பார்த்து தவிப்பாகக் கேட்டாள்   அவள் முகத்தை ஏந்தி இதழ் மேல் இதழை வைத்து எடுத்தவன் “உன்னை சந்தேகப்பட்றது என் தாய சந்தேகப்பட்றதுக்கு சமம்டி !”என்று. நெற்றி முட்டி சொன்னான்.

அதை கேட்டவள் நெகிழ்ந்தவள் அவனுக்கு முத்தம் கொடுத்தாள். அது வலுப்பெற, அவனோ அவளிடமிருந்து பிரிந்தான்.

“போதும் ஜெஸி ! எல்லை மீறிடுவேன். உள்ள பாப்பா வேற இருக்கா வேண்டாம்டி!”என்று விலக

அவன் கழுத்தை பற்றி தன் பக்கம் இழுத்தவள், “எனக்கு நீ வேணும் ஆரோ ! ஐ நீட் யூ பேட்லி”என்று முத்தமிட்டு அவனை அழைக்க தன் மனைவியின் ஆசையை  உணர்ந்து, அவளது நிலமையை கருத்தில் கொண்டு, மெல்ல அவள் தேவையை தீர்த்து வைத்து தன்னோடு அணைத்துக் கொண்டான்.

மறுநாள் நிவாஸ் அவனை தேடி வந்து மன்னிப்பு வேண்ட, அவனை ஏற்றுக் கொண்டான். எட்வர்டும்  இருவரிடம் மன்னிப்பு கேட்க, அவன் நடந்ததை சொன்னான்.

“என்னை நீயே சந்தேகப்படலாமா டா?”எனக் கேட்ட கேள்வியில் முதலில் புரியாமல் அவனை பார்த்தவன் பின் புரிந்து விட மன்னிப்பு யாசிக்க, அவன் தோள் தட்டியவன் ஆறுதல் சொல்லி விட்டு, ஜெஸியை பார்த்து கண்களால்  கெஞ்ச, ஆரோனுக்காக அவனை மன்னித்தாள்.

நாட்கள் பறந்தோடியது.

அவனது பிரசவ நாளும் வர பெண் மகவை ஈன்றெடுத்தாள்.அனைவரும் வந்து வாழ்த்து சொல்லி மகிழ்ந்தனர்.

துருவன் வீடியோ காலில் அவனது பிரின்ஸஸைக் கண்டான். அவனால் இழந்த உயிர் மீண்டும் கிடைத்தது போல எண்ணிக் கொண்டான்.

மகளுக்கு பெயர் சூட்டு விழா வைத்தனர். அதில் டெனியே தன் தங்கைக்கு ‘டெனிஷா’ என்று பெயர் வைத்தான். அன்றைய நாளை போல

ஜெஸி ஆரோனின் காதல் வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருந்தன.

ஒரு வருடம் கடந்த நிலையில் டெனிஷாவிற்கு பிறந்த நாள் விழா கொண்டாடி முடித்திருந்தனர்.

சரியாக இரண்டு வருடம் கழித்து அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்திருந்தான் துருவன். அவனது இல்லத்திற்கு செல்லாமல் நேராக ஜெஸியின் இல்லத்திற்கு வந்தான்.

அவனை இன்னொரு மகனாய் வரவேற்று உபசரித்தனர் ஆரோக்கிய ஆப்ரஹாம்  தம்பதியினர். டெனியுடன் அவனுக்காக கொண்டு வந்த விளையாட்டு பொருளை வைத்து விளையாடியவன்

டெனிஷாவையும் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சி மகிழ்ந்தான்..

அனைவரிடமும் நன்றாக பேசினான். ஜெஸியிடம் பேசும் போது மட்டும் ஆரோனுக்கு ஏனோ புகைச்சலாக இருந்தது. ஆரோக்யா அவனுக்காக சமைக்கச் சென்றார். இவர்கள் மூவர் மட்டுமே கூடத்திலிருந்தனர்.

டெனிஷாவிடம் “துருவா சொல்லு  துருவா சொல்லு !”என துருவன் கொஞ்சிக் கொண்டிருக்க, “மாமா சொல்லு மாமா சொல்லு”என்று ஆரோனும் இந்தப் பக்கமிருந்து சொல்ல, துருவனோ ஆரானைப் பார்த்து ” மாமா வா?!”என்றான்.

அவனும் “ஆமா ஜெஸிக்கு நீ பிரதர்னா, என் பொண்ணுக்கு நீ மாமா தான என்ன ஜெஸி?”என்க, ஜெஸி துருவனை பார்த்தாள்.

அவனோ காதில் புகை வராத குறையாக ஆரோனை முறைத்தவன் “நான் ஜெஸிக்கு பிரதர் எல்லாம் இல்ல… பிரண்ட் ஓகே ! என் வரலாறு தெரியாதா உங்களுக்கு?”என்று பல்லை கடித்தபடி சொன்னான்.

அதில் கடுப்பான ஆரோன், ஜெஸியிடம் தண்ணீர் எடுத்து வர சொல்லி பணித்தவன், துருவன் அருகே வந்து அமர்ந்து அவன் காதில் “எத்தனை பேர் வேணா அவளை காதலிக்கலாம். ஆனா அவ காதலுக்கு கொடுத்து வச்சது நான் தான் நான் மட்டும் தான். அவளுக்கு என்னை தவிர மத்த எல்லா ஆண்களும் அண்ணன்,  தம்பி. நீ உட்பட, சோ அந்த லெவல்ல பழகற என்ன ?!”என சிரித்துக் கொண்டே மிரட்டல் விட்டான்.

“சரிதான்…! உங்க மிரட்டல்ல  நினைச்சி எனக்கு பயந்து வருது மிஸ்டர் ஆரோன் ப்ரோ ! ஓவர் பொஸஸ்சிவ் தான் உங்க பொண்டாட்டி மேலே ! ஆனா அதெல்லாம் எங்க ப்ரெண்ட்ஷிப்க்குள்ள பழிக்காது. நான் இப்படி தான் இருப்பேன் என்ன பண்ணனுமா பண்ணிக்கோங்க? “என்றவன்

மீண்டும் குழந்தையுடன் விளையாட அவனை முறைக்க முயன்று தோற்றவன் அவனது தோளை அணைத்துக் கொண்டான். அவனும் சிரித்துக் கொண்டே அவன் தோள் மீது சாய்ந்து “சாரி”என்றான் அவனும் அவன் தலையை வருடிக் விட்டான். இருவரையும் மகிழ்வுடன் பார்த்தாள் ஜெஸி.

அன்று இல்லம்  திரும்பியவனை பாசத்துடன் அரவணைத்தது அவனது குடும்பம். அவனது விழிகள் மதுவை தேட, ருத்ரனோ “‘கழுதை கண்ட குட்டி சுவர்’ மாதிரி அவளுக்கு உன் ரூம் தான். அங்க தான் இருக்க போய் பாரு” “என்றான்.

அவனும் ஆசையாக இரண்டு படியாக தாவி குதித்து  அவனது அறைக்கு சென்றான். அவள் அவன்  புகைப்படத்துடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.

இவர்கள் இருவர் காதலை மட்டும் தான் சொல்ல வில்லை ஆனாலும் காதலித்து கொண்டிருந்தனர்.

அவள் பின்னே பூனை நடையுடன் வந்து நின்றான். அவளோ அவன் புகைப்படத்துடன்” இன்னும் எத்தனை நாள் தான் காக்க வைப்ப?! பாவம் இல்லையா உன் பொண்டாட்டி? ஏங்கி போய் இளச்சி போயிருக்கேன். கொஞ்சமாவது என்னை பார்க்கனும் அக்கறை இருக்கா உனக்கு? போடா அந்த அமெரிக்காவை கட்டியே அழு !யார் கேட்டா உன்னை…? நீ எனக்கு வேணா போ ! நான் வேற பையனை பார்த்து கல்யாணம் பண்ணிக்க போறேன்…”என்று சொன்னாலும்  மனசு கேளாமல்”அப்படி பண்ணலாம் மாட்டேன். நீ வந்தா அடுத்த நிமிசமே உன்னை !”என்றவளுக்கு சகலமும்

அடங்கியது அவனது அணைப்பில்.

” சொல்லுடி அடுத்த நிமிஷமே என்னை “என்று அவளது காது மடல் சிவக்க, தன் இதழ்கள் உரசக் கேட்டான்.

அவளது நாக்கு அன்னத்தோடு ஒட்டிக் கொண்டது பேச முடியாமல் தவித்தாள்.

“ம்ம்… இப்போ பேசுடி !”என்று இடையை இன்னும் இறுக, கண்கள் சொருக மயங்கி அவன் மீதி சரிந்தாள். அவனும் பதறி அவளை மெத்தையில் கிடத்தி தண்ணீரை தெளிக்க, அவள் கண்களை திறந்தவள் தாவி அணைத்துக் கொண்டாள்.

“அடுத்த நிமிஷம் இதை தான் செய்வேன். இனி உங்களை எங்கயும் விட மாட்டேன். நீங்க எங்கயும் போகவும் கூடாது…. ஐ லவ் யூ மாமா “என்றாள்.

அவளது அழைப்பில் சொக்கிப் போனவன் அவள் மீது சரிந்தான். “சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கலாம்டி அதுக்கு முன்ன…”என இழுக்க, அவளோ அவனை தள்ளி விட்டு அவன் நெஞ்சில் படர்ந்து “அதுக்கு முன்ன…”என இதழில் தன் இதழை பதித்து அவனை அதிர்ச்சி அடைய செய்தாள்.

அடுத்த என்ன கல்யாணம் தான். வீரமதியின் ஆசியில் ஜெஸி முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடந்தது.

மணமக்களோடு வீரமதியுடனும் வாசனுடம் ஆசிர்வாதம் வாங்கினார்கள். தாயை நினைத்து அவன் கண்கள் கலங்க, அவரோ மதுவிடம் மகனை பார்த்துக் கொள்ளுமாறு பணித்தார். நான்கு வருடம் கடந்த நிலையில் இன்னும் நீள இருக்கிறது அவரது சிறை வாசம்…

***

ஒரு வருடம் சென்ற நிலையில்…

“துருவா ! துருவா!”  என அழைத்த படி பின்னால் ஓடினாள் ஜெஸி

அந்த ஆறு வயது துருவனோ அவளுக்கு போக்கு காட்டிக் கொண்டு ஓடினான்.

சரியாக அவளது அலைபேசி அலற காதில் வைத்தாள். அங்கு நைதுருவன் அவளை அழைத்திருந்தான்

“என்னடா?!”என்றவள்

“துருவா ஓடாத டா நில்லு !”எனக் கத்தினாள்.

“நான் எங்கடி ஓடுறேன் நின்னுட்டு தான இருக்கேன்…”என்றான்.

“உன்னை இல்லைடா இங்க இருக்க ஒருத்தனை… துருவன் பேர் வச்சவன் எல்லாம் என் உயிர வாங்க தான் பிறந்திருக்கானுங்க போல…!”என சலித்து கொண்டாள்.

“என்னடி ரொம்ப தான் சலிச்சிக்கற? சரி யார் அந்த துருவன்? அவன் ஏன் உன்னை டார்ச்சர் பண்ணனும்?”என விசாரிக்க,

“அதுவா ! ஒரு சினிமா ஆக்டர் பையன். ஸ்கூல் போறான். அவனுக்கு பாடிகார்ட் வேணும் கேட்டிருந்தாங்க…! நான் சும்மா இருக்கேன் போறேன் சொன்னேன்.  அதுக்கு தான் இப்படி வச்சு செய்றான்…”எனும் போதே அவன் வாய் விட்டு சிரித்தான்.

“என் நிலமை உனக்கு சிரிப்பா இருக்குல்ல எதுக்கு போன் பண்ண சொல்லு !”

“அது ! என் பொண்ணுக்கும் பாடிகார்ட் வேணும் அதுவும் நீ தான் வேணும் சோ  உனக்கு கால் பண்ணினேன் ஜெஸி ! அந்த வேலை ரீசைன் பண்ணிட்டு இங்க வந்து என் பொண்ணுக்கு பாடிகார்ட் இரு !”என்றான் கேலியாக

“ஏன்டா இன்னும் உலகத்தையே பார்க்காத உன் பொண்ணுக்கு நான் பாடிகார்டா இருக்கணுமா? நோ வே நீ எதுக்கு இருக்க? உன் பொண்ணுக்கும் உன் பொண்டாட்டிக்கும் நீ தான் பாடிகார்ட் அவங்களை பத்திரமா பார்த்துக்க… பாடிகார்ட் வேணுமாம்ல சாருக்கு. அவங்களை பார்த்துக்கறது விட உனக்கு என்ன பெரிய  புடுங்கற வேலை?”என காரசாரமாக கத்தினாள்.

காதை குடைந்தவன்”தெரியாம  கேட்டு தொலைச்சிட்டேன் தாயே விடு! மது உன்னை பார்க்கனும் சொன்னாள். அதன் இந்த சண்டே இன்வைட் பண்ண உன்னைக் கூப்பிட்டேன். நீயும் மை டூ பிரின்ஸ் அப்புறம் உன் புகைச்சல் புருஷனை  கூட்டிட்டு வா “என்றான்.

“யாருடா புகைச்சல் புருசன். என் புருஷனை பத்தி பேசினா, இன்னும் புல்லட் லோடாகி தான் இருக்கு என் துப்பாக்கி எடுத்து  மண்டையிலே போட்டுடுவேன் “என்று மிரட்ட,  அவனுக்கு பழைய நியாபகங்கள் வந்தன… சிரித்து கொண்டே அவளை மீண்டும் அழைத்து விட்டு வைத்தான்.

அன்று ஞாயிறு மதுவையும் அவனையும் பார்க்கச் வந்திருந்தனர் ஆரோன், எட்வர்டு , நிவாஸ் குடும்பம்.  மது எட்டுமாத கருவை சுமந்திருந்தாள்.

நிவாஸ் அந்த வீட்டில் ஒருவனாகிப் போனான். அவனை அண்ணனாக இருவரும் என்றோ ஏற்றுக் கொண்டனர். தனியாக இருந்தாலும் குடும்பத்துடன் பாசமாக தான் இருந்தான்.

அந்தப் பெரிய வீட்டில் அனைவரும் கூடிப் பேசி கேலி செய்து சிரித்து விளையாடி மகிழுந்து அந்த நாளை சிறப்பாக கழித்தனர்.

அவர்கள் கிளம்பும் தருவாயில் துருவன் ஜெஸி அருகே வந்து,”நான் கூப்பிட்டத்தும் ஈகோ பார்க்காம வந்ததுக்கு தேங்க்ஸ் ஜெஸி “என்றவன் சலிப்புடன் பார்த்தவள்,

“என்ன பார்மலா நல்லவன் போல பேசுற? எப்பவும் போல பேசு ! நான் கூப்பிட உடனே உன் குடும்பத்தோட வந்தது இல்லையா? பெரிய வி. ஐ. பி கிட்ட பேசறது போல பேசற, அதெல்லாம் தேவையில்ல நார்மலா பேசு , இரு… மதுவை ஜாக்கிறதையா  பார்த்துக்க விளையாட்டு தனமா  இருக்காத !”எச்சரிக்கை விடுக்க, அவனுக்கு ஏனோ பழைய நியாபகங்கள் வந்தன.

“சாரி ஜெஸி”என்றான் வருத்துடன்.

“பச்! என்ன இது? நான் அதை எப்பவோ மறந்துட்டேன் டா ? ஃப்ரீயா விடு!”என்றாள்.

“நீ எனக்கு கிடைச்ச கிப்டி டி”என்றவன் அவளை அணைக்க வர, அதுவரை அவர்கள் பேச்சை ரசித்தவன் அவன் அணைக்க போகும் தருணத்தில் அவர்களுக்குள்ளே புகுந்த  துருவனை அணைத்து விட்டு விடுவித்தான்.

“இதெல்லாம் ஓவரா இல்ல உங்களுக்கு?! என் ஃப்ரெண்ட ஒரு ஹக்கி கூட பண்ண கூடாதா?”

“கூடாது டா ! உனக்கு கட்டிப்பிடிக்கணும்னா உன் பொண்டாட்டிய போய் கட்டி பிடி ! எதுக்கு என் பொண்டாட்டியா கட்டிப்பிடிக்கற?!”என  தன் உடமையை தொடக்கூடாதென சண்டையிடும் சிறு பிள்ளை போல இருந்தான் ஆரோன்.

“மகூக்கும் என் பொண்டாட்டிய கட்டிப்பிடிக்க எங்களுக்கு தெரியும் நீங்க போங்க !”என இதழை சுழிக்க, புன்னகையுடன் அவனை அணைத்துவிட்டு காரில் ஏறினான் ஆரோன். ஜெஸி இருவரையும் கண்டு தலையில் அடித்துக் கொண்டாள்.

இரவில் மகளையும் மகனையும் தந்தையிடம் அனுப்பி வைத்து அறைக்குள் நுழைந்தவன், தனியாக பால்கனியில் அமர்ந்திருக்கும் ஜெஸியின் அருகே வந்து அவளை தூக்கி மடியில் அமர்த்தி ஆசையாக முத்தம் வைத்தான்.

“ரெண்டு பிள்ளை ஆச்சி டா  உனக்கு! இன்னும் பொஸஸ்ஸிவா அவன் கூட சண்டை போட்டுடு  இருக்க ! உங்க அலம்பல் தாங்க முடியல டா !”என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

“இப்படி அழகான பொண்டாட்டி வச்சிட்டு  பொஸஸ்ஸிவா கொஞ்சம் கூட இல்லைனா அவன் மனுசனே இல்லடி. அவன் உன்னை வச்சி என்னை டீஸ் பண்றான். சும்மா இருக்க சொல்றியா? நீ என் பொண்டாட்டி,  எனக்கு மட்டும் தான். உன்னை அணைக்கறதும் உனக்கு முத்தம் கொடுக்கறதும் நானா தான்  இருக்கணும்.  ஓரளவுக்கு மேலே என் பசங்களுக்கு கூட அந்த உரிமை இல்லடி, என் கா(த)வல் கண்ணாட்டி எனக்கே எனக்கு மட்டும்”என அவளை முத்தாட,

“சரி தான். பசங்களுக்கும்மா இந்தத் தடை?”

“ஆம் “என்றான் கழுத்திலும் அதன் இறக்கத்திலும் முத்தம் வைத்துக் கொண்டு

“அப்போ ! உனக்கும் அந்த ரூல்ஸ் உண்டு. நீயும் உன் பொண்ணை அளவா தான் கொஞ்சனும். அதுவும் என் முன்னாடி ஓவரா கொஞ்சவும் கூடாது. உனக்கு பர்ஸ்ட் நான் தான்…  ஒரு கோட்டா மேலே அவளை கொஞ்சின ! உன்னை கொன்னுடுவேன். என்ன?! “என்று அவன் கழுத்தை பிடிக்க, அவள் கையை பிடித்து முத்தம் வைத்தவன், “சரி தான். உனக்குள்ளையும் அந்த பொஸஸ்ஸிவ் இருக்கும் போல”அவளை தன்  நெஞ்சோடு இறுக,

“பின்ன இப்படி அழகான புருசனும் அவனோட அழகான கொஞ்சலையும் முத்தத்தையும் எனக்கே எனக்கு தான் வேணும் நினைக்கிறதுல என்ன தப்பு இருக்கு? அதுனால அது என் கடைசி மூச்சு இருக்கற வரைக்கும் எனக்கே எனக்கு மட்டும் அதிகமா கிடைக்கனும் அவனும் அவனோட காதலும் இந்தக் கொஞ்சலும் முத்தமும்”என்று அவன் முகம் முழுவதும் முத்தமிட்டுச் சொல்ல,  இவனோ  அவள் விட்ட இடத்திலிருந்து தொடர, அவளோ இடத்தை சுட்டிக் காட்டி கண்களால் உள்ளே அழைக்க, அவளை தூக்கி மஞ்சம் சேர்ந்தவன், அவளுடன் ஒன்றென கலக்க ஆரம்பித்தான்.

உயிருள்ளமிணைந்த தேகங்கள் பிரிந்து துணையில்லாமல் வாடிக் கொண்டு காதலில்லாமல் வறண்டு போய் விட உண்மையான காதல் விதியோடு போராடி தன் இணையோடு ஒன்றிணைந்தது.

காவல் கஞ்சுகனின் காதல் கண்ணாட்டியுடன்  இனி வரும் நாட்களில் காதலோடு கடக்கட்டும்..

முற்றும்

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்