Loading

அவனது பார்வைக்கு கொஞ்சமும் அசராத பார்வை பார்த்து கொண்டிருந்தாள் ஜெஸி.

“என்ன பார்க்கற ஜெஸி ! நீ சொன்ன பொய்களை வீட்ல இருக்க பெரியவங்க நம்பலாம். நான் நம்பல ! உண்மைய சொல்லு ஜெஸி, நீ அந்த துருவன விரும்பின தான …சோ நீ அடுத்த வாழ்க்கைக்கு தயாராகிட்ட…! இப்போ ஆரோன் வந்ததும் அந்த துருவனை சரி கட்டிட்டு வர அப்படி தான?” என நரம்பில்லாத நாக்கு எதையும் பேசும் என்று நிரூபித்தான் எட்வர்டு

“பரவாயில்லை எட்வர்டு ! எனக்கு துருவனுக்கும் கள்ள தொடர்பு இருந்தது.  புருசன் வந்ததும் முடிச்சிட்டு வர்றேன் சொல்லாம விட்டியே”என்றதும் அவனுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவள் அப்படி பட்டவள் இல்லை என்று அவனுக்கு தெரியும்… அவன் அப்படி நினைக்கவும் இல்லை… அவள்  ஆரோனை மறந்து வேறொரு காதல் , வேறொரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்து விட்டாள் என்ற கோபம் தானே தவிர அவளை தவறாக கண்ணோட்டத்தில் நினைத்து பார்த்தது இல்லை.

“ஜெஸி ! நான் என்ன சொல்றேன். நீ என்ன பேசிட்டு இருக்க?”என கோபத்தில் பல்லைக் கடித்தான்.

“ஏன் கோபப்படற எட்வர்டு ரெண்டுக்கும்  என்ன வித்தியாசம் இருக்கு சொல்லு?”என்றதும் அவன் அமைதியாகி விட்டான். அவளோ விரக்தியாக புன்னகைத்தாள்.

“ஏன் எட்வர்டு உன் பிரண்டோட காதலை மறந்து நான் இன்னொருத்தன ஏத்துக்கறது உனக்கு பிடிக்கல… காரணம் நான் உன் ஃப்ரெண்டோட ஒயிப்ன்றனால !நான் அவன மட்டுமே நினைச்சிட்டு கடைசி வரைக்கும் வாழனும்… இதுவே என் இடத்துலே உன் தங்கச்சி இருந்தால் கடைசி வரைக்கும் உன் புருஷனை நினைச்சி வாழு சொல்லியிருப்பீயா? அவளுக்கு ஒரு வாழ்க்கை இருக்கு நினைச்சு இன்னொரு திருமணம் செஞ்சு வைக்க மாட்டியா ! நான் உனக்கு தோழியாவும் தெரியல தங்கையாவும் தெரியல பிராண்டோட பொண்டாட்டியா மட்டும் தெறியறேன்  இல்ல !”என்றதும் அவன் தலை குனிந்தான்.

“ஆரோன் திரும்ப வர்றாம போயிருந்தால் நானும் டெனியும் தனியாவே ஆரோன நினைச்சிட்டு காலம் முழுக்க இருக்கணும் வாழனும் இல்ல…! நல்ல எண்ணம் தான். நீ சொன்னாலும் சொல்லலைனாலும்  நான் அப்படி தான் இருந்திருப்பேன். பிகாஸ், ஆரோன வெறும் புருசன் மட்டும் இல்ல எனக்கு எல்லாமே அவன் தான், எல்லா உறவகளோட சாயலும் அவன் தான், எல்லா உறவையும் மறக்க  முடியுமா??”

அவன் பதில் பேசவில்லை…

“உனக்கு என் மேல ஏன் இப்படி சந்தேகம் வந்தது எனக்கு தெரியல ! ஆனா நான்  ஒரு போதும் உன் சந்தேகத்துக்கு பதிலோ விளக்கமோ தரமாட்டேன்.. எனக்கும் துருவனுக்கும் இடையில என்ன இருக்கு, என்ன உறவுனு உனக்கு விளக்கணும் என்ன அவசியம் இருக்கு. நீ  என் நண்பன் இல்ல, சகோதரனும் இல்ல என் புருசனோட பிரண்ட் , சோ எதுக்கு உங்க கிட்ட எக்ஸ்பிளனேசன் தரனும்..

அப்படியே உங்களுக்கு என் மேல எதுவும் சந்தேகம் இருந்தால் என் புருசன் கிட்ட கேட்டு தெரி(ளி) ஞ்சுக்கோங்க…!”என்று தன் வார்த்தைகளால் அவனுக்கு சாட்டை அடி கொடுத்து விட்டாள்.

எட்வர்டு விக்கித்து நின்றான். ஒரு நொடியில்  அவனது நட்பை துறந்து விட்டு சென்று விட்டாள் ஜெஸி !

இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரெக்ஸ்லின் எட்வர்டிடம் வந்தாள்.

“இதென்ன புதுப் பழகம் எட்வர்டு? எப்போ இருந்து உனக்கு இந்த சந்தகப்புத்தி வந்தது?  உனக்கு ஜெஸிய பத்தி தெரியாதா? இல்ல இத்தனை வருஷமா நட்பா இருந்தது பொய்யா? ஏன்டா உன் புத்தி இப்படி போகுது? அவளும் ஆரோனும் எப்படி லவ் பண்ணுனாங்க உனக்கு தெரியாதா? ஆரோன்  இல்லேனா, அவ  ஆண்களுடன் நட்பு கூட வச்சுக்க கூடாதுல.. சராசரி ஆண்கள் கூட்டத்துல ஒருத்தன் தான் நான் நீ சொல்லலாம சொல்லிட்டா ! ஆனா ஆரோனும் ஜெஸியும் அப்படி இல்ல.. ஏன் நான் கூட ஜெஸி நிலைமையில்  இருந்திருந்தால் ஆரோன் இப்படி சந்தேகப்பட்டிருக்க மாட்டான் என் வாழ்க்கையை பத்தி யோசித்து  இருப்பாங்க… ஒரு நிமிஷத்துல உன் சந்தேகத்தால் ஒரு நல்ல பிரண்ட் ஷிப் ஒரு சிஸ்டர இழந்துட்ட  எட்வர்டு ! வா இனி இங்க இருக்க வேணாம்… இனியாவது அவ வாழ்க்கையில் சந்தோசம் வரட்டும்”என்று அவள் முன்னே நடக்க, உள்ளுக்குள் ஜீவன் மடிந்து வெறும் நடை பிணமாய் போனான்.

உள்ளே வந்தவளை பிடித்துக் கொண்டு ஆரோக்யாவும்  ஆப்ரஹாமும் விசாரிக்க, அவர்களுக்கு நடந்ததை சொல்லி துருவனது மனமாற்றதையும் சொல்ல அவர்களோ கடவுளுக்கு நன்றி செலுத்தினார்கள்.  ஆனா ஜெஸி உள்ளே நுழைந்து எட்வர்டு நினைத்து கலங்கியவள் பின்  வெகுவாய் தன்னை இயல்பாக மாற்றிக் கொண்டாள்.

அன்றைய பொழுது செல்ல இரவும் வந்து சேர்ந்தது. இரவு உணவை முடித்துக் கொண்டு ஆரோக்கியாவிற்கு உதவி செய்து விட்டு உள்ளே வர, மகனை மேலே போட்டுக் கொண்டு தட்டிய படியும் இன்னொரு கையை நெற்றியில் வைத்து கண்களை மூடி படுத்திருந்தான்.

ஆறு மாசமாக  அவனில்லாத  அந்த வெற்று இடத்தை அவளது கற்பனை நிரப்பிக் கொண்டிருந்தது.

  ஆனால் இன்று அவனே வந்திருப்பது எதிர்பார்க்கவில்லை… கண்கள் கலங்கி நின்றாள். பின் தன்னை சமாளித்துக் கொண்டு குளியறை சென்று வந்தவள், அவன் பக்கத்தில் படுத்து கொண்டு அவனையே பார்த்தாள்.

அவள் பார்வை அவனை துளைக்க, விழி திறந்து பக்கவாட்டில் திரும்பி பார்த்தான், தன்னை விழுங்கும் பார்வை பார்த்து கொண்டிருந்த ஜெஸியை பார்த்து “என்ன?”என்றான்.

மகன் படுத்திருக்கும் இடத்தை காட்டி” அது என் இடம்? நான் தான் அங்க படித்திருப்பேன் எனக்கு அந்த இடம் தான் வேணும்” என்று சிறுபிள்ளை போல சொல்ல அவளை ஒரு மாதிரி பார்த்தவனோ

“இப்போது என்ன செய்ய?” கண்களால் டெனியை காட்ட,  அவளோ வேகமாக அவனது வலது கையை எடுத்து தன் தோளில் போட்டுக் கொண்டு அவன் நெஞ்சில் படுத்துக் கொண்டாள். அவன் இதை எதிர்பார்க்கவில்லை. அவளை அணைக்க தயங்கிய கையை பார்த்து அவளுக்கு வலித்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாது.

அவனை மேலும் இறுக அணைத்தாள்.

“நான் நிம்மதியா தூங்கி ரொம்ப நாள் ஆச்சு ஆரோ ! பிளீஸ் இன்னைக்கு நிம்மதியா உன் அணைப்புல தூங்க நினைக்கறேன் துங்கட்டுமா? “எனக் அவன் முகம் பார்த்து கேட்டவள் பதிலை எதிர்பாராது அவன் நெஞ்சில் மீண்டும் சாய்ந்து கொள்ள , அதில் வெம்மை  நீர் சுரந்து அவன் நெஞ்சை நனைத்தது.

“பிளீஸ் ஜெஸி ! அழாதீங்க, எனக்கு வலிக்குது. அழாம  நிம்மதியா தூங்குங்க ! நான் தான் உங்களோட இருக்கேனே !”என்று அவள் வலி புரிந்து இறுக அணைத்துக் கொண்டான். அவளும் அவனது அணைப்பில் உறங்கி போனாள்.

மறுநாள் விடிய அவன் கண் விழித்த போது தந்தையும் மகனும் இல்லை… அவள் எழுந்து இருவரையும் தேட, அவன் தரையில் புஷ்ஷப் செய்து கொண்டிருக்க, மகனோ அவன் மேல் அமர்ந்து  எண்ணிக் கொண்டிருந்தான். எல்லாம் டெனி தான் அவனை அவ்வாறு செய்ய சொல்லி இருந்தான். அவன் பேச்சை கேட்டு தான் ஆரோனும் செய்தான்.  ஆரோனுடான நாட்கள் மீண்டும் டெனிக்கு கிடைத்ததில் அவளுக்கு பேரானந்தம் தான்.

“மா, நீங்களும் வாங்க ! நீங்களும்  அப்பா மேலே உட்கார்ந்து கவுண்ட் பண்ணுங்க !”என்று அவன் சொல்ல,

“ஏதே உங்க அம்மாவையா??? “என்று கைகளை ஊண்டிருந்தவன் பட்டென தரையில் விழுந்து, அவளை பாவமாக பார்க்க, அவளோ இருவரையும் முறைத்து விட்டு போனாள்.

அதன் பின் வந்த நேரங்களில் எல்லாம் அவள் முகத்தை திருப்பிக் கொண்டு செல்லமாக கோபம்  கொள்வது அவனுக்கு ஏனோ பிடித்திருந்தது.

அவளை சமாதானம் செய்யும் பொருட்டு அவள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அவனும் தயங்கி தயங்கி சென்றான். ‘ஏன் அப்படி செய்கிறோம் ?’என்று புறியாமலே இதை எல்லாம் செய்தான்.  அவளுக்கும் பிடித்து இருந்தது.

பொறுமை இழந்த ஆரோன் அவளை அறையிலே மடக்கி விட, இவளோ முகத்தை திருப்பினாள்.

“நிஜமா உங்களை சுமக்க முடியும் எனக்கு தோணலை ஜெஸி…!”என உதட்டை பிதுக்கிச் சொல்ல.

அவனை முறைத்தவள்”அப்போ நான் உங்களை உயிராலும் உடலாலும் சுமந்தேனே ! உங்க புள்ளைய சுமந்தேனே எப்படி? அதெல்லாம் சுமக்கணும் முடிவு பண்ணிட்டா சுமக்கலாம் உங்களுக்கு தான் அந்த எண்ணம் இல்லையே !”என்று முறுக்கி கொள்ள, அவனோ அவளை பாவமாக பார்த்து வைத்தான்.

மாட்டிக் கொண்ட சிறுவனை போல முழிக்க, அதை இரசித்தவள், அவனது சட்டையைப்பற்றி இழுத்து “கொல்.ற டா என்னை…!”என்று அவன் உதட்டில் வன்மையாக முத்தம் வைத்தாள். அவனும் அந்த அதிரடியை எதிர்பார்க்கவில்லை… விடுபட  முடியாமல் மீண்டும் அவளுள் அடங்கிப் போனான்.

அவனை விடுவித்தவள்”  சீக்கிரமா நீ என்னை சுமப்ப ! சுமக்க வைப்பேன்”என்று போய் விட, ஆடிப் போய் நின்றவன் தலையை உலுக்கி விட்டு வெளியே சென்றான்.

நேரம் கழித்து எட்வர்டு ரெக்ஸ்லின் வந்து சேர்ந்தனர். அவர்களை அவள் தான் அழைத்திருந்தாள். சரியாக வெளியே கார் வந்து நின்றது இவள் தான் சென்று வரவேற்றாள்..

உள்ளிருந்தவர்கள் யாரென பார்க்க நிவாஸ் ஷர்மி அவர்களது குழந்தைகளுடன் வந்தனர். நிவாஸை கண்டு ஆறுமாதம் காலம் ஆகி விட்டதால் அவனை ஆச்சர்யமாக பார்த்தனர் பெரியவர்கள் இருவரும்.

நிவாஸ்க்கு கொடுத்த சிகிச்சை பலன் தர, அவனுக்கும் பழசெல்லாம்  நியாபகம் வந்து விட்டது. தன் மனைவி , குழந்தைகளை அணைத்துக் அழுது தீர்த்து விட்டான். பின் ஆரோன் எனவும் அவன் உயிரோடு இருக்கும் விஷயத்தை கேட்டு அவனை பார்க்க துடிக்க, ஜெஸி தான் சென்னைக்கு வர சொன்னாள்.

நிவாஸ்  ஆரோனின் காலில் விழுந்து விட, அவனும் தாங்கிக் கொண்டான்.

“என்னை மன்னிச்சிடு ஆரோன் !நான் உன்னை கொல்லனும் நினைக்கல டா    ! உனக்கு காப்பாத்தனும் தான் நினைச்சேன். ஆனா அவங்க ஒத்துக்கல, என்னை சரிகட்டி உன்னை கொல்ல பார்த்தாங்க… நீ இறந்துட்ட நினைச்சேன். ஆனா உயிரோட வந்து என்னை பாவத்துல இருந்து மிட்டிட”என அழுக,

அவனோ சங்கட்டமாக  ஜெஸியை தான் பார்த்தான். அவளும் கண்களை திறந்து மூடினாள்.

“நிவா! அவனுக்கு எதுவும் நியாபகம் இல்ல டா ! அப்படியே நியாபகம் இருந்தாலும் அவன் உன்னை மன்னிப்பான். நீ அழுகாத ! இனி நம்ம வாழ்க்கையில அழுகையே இல்ல சந்தோசம் மட்டும் தான்”என்று எட்வர்டு சொல்ல, அவனோ தலையை ஆசைத்து விட்டு  ஜெஸியை பார்க்க மெல்ல சிரித்தாள்.

அதன் பின் வந்த நாட்கள் பரபரப்பாக சென்றது. ஆரோனை அழைத்துக் கொண்டு மருத்துவரிடம் சென்று வந்தாள் மேலும் அவன் உயிரோடு இருக்கும் விஷயத்தை போலீஸ்க்கு தகவல் சொன்னாள்.அவர்களும் அவனிடம் விசாரித்தனர்.

பின் அவனது இறப்பு சான்றிதழை ரத்து செய்தனர். இதர விஷயங்கள் அணைத்தும் முடிந்திட, அவனை அழைத்துக் கொண்டு வீரமதியை பார்க்க வந்தாள்.

ஆரோன் வந்த செய்தி இன்னும் அவரது காதுகளுக்கு எட்டவில்லை, இன்னமும் குற்றவுணர்வில் ஜெயில் தன் நாட்களை கடத்துகிறார்.

அவரது குற்றவுணர்வு போக்கிட ருத்ரன் தான் ஜெஸியிடம் பேச, மறுக்காது ஆரோனையும் நிவாஸ் அழைத்துக் கொண்டு வீரமதியை பார்க்க சிறை சாலைக்கு சென்றாள்.

கம்பீரமாக நடந்து வரும் வீரமதியை கண்டு வியந்தவள் இன்று தளர்ந்த நடையை கண்டு மனம் வருந்தினாள்.

இனி உங்களுக்கு எந்த குற்றவுணர்வு மில்லை என்று அவர் கைகளை பிடித்து சொன்னவள் ஆரோனை காட்ட அவரோ அதிர்ச்சியுடன் அழுகையுடன் நின்றிருந்தார்

வீரமதி சிறை சென்று ஒரு மாத காலம் ஓடி விட்டது. ருத்ரன் மட்டும் தான் தாயை பார்த்து விட்டு வருவான். வீரமதியும் யாரையும் இங்கே அழைத்து வர வேண்டாம் என்று தெளிவாக சொல்லி விட ருத்ரன் மட்டுமே அவ்வபோது அவரை நலம் விசாரித்து வீட்டில் நடப்பவை எல்லாம்  சொல்லுவான்.

சில நேரம் அவனையும் பார்க்க வராமல் மறுத்து விடுவார் சோர்வுடன் தான் அவனும்  வீட்டிற்கு செல்வான்.

ஆரோன் உயிரோடு இருக்கும் செய்தியை இன்னும் யாரும் அவரிடம் பகிரவில்லை. இவனும் பகிர வர, அவனை பார்க்க முடியாது என்று சொல்லி விட சோர்வுடன் இல்லம் வந்தான். அவர் மறுக்க காரணம் குற்றவுணர்வு தான் என்று அறிந்து கொண்டவன், ஜெஸியை  அழைத்தான்.

அவளும் அவனிடம் பேசினாள்.

“ஜெஸி ! எங்க அம்மா ஜெயில் இருக்கறத பெருசா நினைக்கிறது இல்ல… அதுவும் வீடு போல தான் இருக்காங்க… ஆனா அவங்களுக்கு இன்னமும் ஆரோன் உயிரோட இருக்கற விஷயம் தெரியாது. அவனை நினைச்சி இன்னமும் குற்றவுணர்வோடு எங்களை கூட பார்க்க மறுக்கறாங்க… அடுத்த முறை  நான் போகும் போது நீங்களும் வரணும் ஆரோனையும் கூட்டிட்டு உங்களால வர முடியுமா?” தயக்கத்துடன் கனிவாக கேட்க, முதலில் யோசித்தாள் பிறகு வீட்டில் பேசிவிட்டு சொல்வதாக சொல்லியவள்,

மாமனார் மாமியாரிடம் கலந்து பேச, ருத்ரன் கேட்பது சரியெனப் பட்டது அந்த இரக்கம் நிறைந்த இரு தெய்வங்களும், ஒத்துக் கொண்டனர்.  ருத்ரனுக்கு அழைத்து தகவல் சொன்னாள் ஜெஸி.

அவனும் அதற்கான ஏற்பாடுகள் செய்தவன் முதல் நாளும் சென்று தாயை பார்த்து துருவன் செய்த முட்டாள் தனத்தையும் ஜெஸி அவன் மனதை மற்றியதையும் சொல்ல அவனிடம்  அழுது கரைந்தவர், ஜெஸியை பார்க்க வேண்டும் என்று கேட்டார்,”நாளைக்கு வருவாங்க மா ஏற்பாடு செய்திருக்கேன்” என்று சொல்லி விட்டு போய் விட்டான்.

மறுநாள் ஜெஸி , தன் கணவனையும் நிவாஸையும் அழைத்து கொண்டு சிறைக்கு செல்ல அவர்களுடன் எட்வர்டும் வந்தான்.

ஜெஸியிடம் நன்றி சொல்ல வந்தவருக்கு பேரதிர்ச்சி ஆரோனை பார்த்தும்

“இ… இ… இது… ஆரோனா”என அவர் வாய் தந்தி அடிக்க,

“ஆரோன் தான் உயிரோட தான் இருக்கார். நீங்க அடிச்ச அடியில அவர் மயக்கம் தான் ஆனார்”என்று உண்மையை  அனைத்தும் சொல்ல, அவரோ உணர்ச்சி வசப்பட்டு ஜெஸியின் கைகளை பிடித்துக் கொண்டார்.

“உங்க குற்றவுணர்வுக்கு முற்றுப் புள்ளி வைக்க உங்க பிள்ளை ஆரோன் உயிரோட இருக்க செய்தி உங்க கிட்ட சொல்ல எங்களை கூப்பிட்டார். நானும் நீங்க கொன்னதா சொல்லப்பட்ட என் புருஷன் உயிரோட தான் இருக்கான் உங்களுக்கு சொல்ல கூட்டிட்டு வந்துட்டேன்… ஆரோன பார்த்ததும் உங்க குற்றவுணர்வு சட்டுனு போயிடுமா? அவன நான் கொல்லல உயிரோட தான் இருக்கான்னு உங்க மனசாட்சி கிட்ட சொல்வீங்களா? உடனே உங்களை உங்க மனசாட்சி ஏத்துக்குமா? அப்படி ஏத்துக் கிட்டா அது மனசாட்சியே இல்லேல..

நான் வணங்கற கடவுள் தான் அவனை திருப்பிக் கொடுத்திருக்கு… இல்லேனா காலம் முழுக்க என் நிலமை? என்னை யாருனு தெரியாத அளவுக்கு அவனை நீங்க காயப்படுத்திருக்கீங்க… ஆனா உங்க குற்றவுணர்வு குறைய இவனை இங்க அழைச்சுட்டு வந்திருக்கேன்.  நான் தியாகில !

ஆனா எனக்கு அது பிடிக்கல… உள்ள ஒன்னு வச்சிட்டு எனக்கு நடிக்கணும் தோணல!  என்னை பொறுத்தவரைக்கும் இங்க இருந்து நீங்க ஆயுள் தண்டனை அனுப்பவிக்கறது பெருசு இல்ல…! உங்க புள்ளை நீங்க குற்றவுணர்வோட இருக்கறதா சொல்றாரே அதான்  வேணும்…! உங்களுக்கு எந்த தீங்கும் செய்யாத என் ஆரோன கொல்ல நினைச்சதே தப்பு தான். உங்க சுயநலத்துக்காக பண்ணீங்க… இப்போ அவன் உயிரோட இருக்கான்னு சொன்னதும் நீங்க பண்ணது குற்றமில்லைனு ஆகாது…! இவனை பார்த்ததும் இன்னும் குற்றவுணர்வோட தவிக்கணும் தான் கூடிட்டு வந்தேன்  ஒரு புள்ளை கிட்ட இருந்து தகப்பனையும் ஒரு மனைவி கிட்ட இருந்து கணவனையும் பெத்தவங்க கிட்ட இருந்து புள்ளையும் பிரிச்ச பாவத்துக்கு நீங்க இங்க நிக்கறீங்க…

உங்களால எப்போ நிம்மதியா தூங்க முடியுதோ அப்ப தான் உங்க பாவம் மன்னிக்கப் பட்டதுன்னு நினைச்சிக்கோங்க. ஆனா நான் உங்களை மன்னிக்க மாட்டேன். என் ஆரோன் கிட்ட கூட என்னால நெருங்க முடியல… எல்லாத்தையும் மறந்துட்டு நிக்கறான் எப்போ நியாபகம் வந்து எங்க வாழ்க்கைய நாங்க தொடங்க?? இவ்வளவு செய்துட்டும் உங்க குற்றவுணர்வு இவனை பார்த்ததும் மறஞ்சிடுமா?”என இதழை கேலியாக வளைத்தவள் உள்ளே எழுந்த ஆத்திரத்தை கண்ணீர் கண்களுடன் கேட்டாள்.

“என் அக்கா மாமா சாவுக்கு நியாயம் கற்பிக்க நினைச்ச நான், உன் விஷயத்துல குற்றவாளி கூண்டுல நிக்கும் படியாகிட்டேன். ம்ம்… சுயநலம் தான். என் குடும்பம் குழந்தைங்க  நினைச்ச நான், ஆரோனுக்கும் குடும்பம் இருக்குங்கறத மறந்துட்டேன். நான் எதையும் சோப்புக்கு சொல்லல ! உண்மையாவே அந்த இடத்தில என்னை காப்பாத்திக்க இன்னொரு உயிரை பலி கொடுத்துட்டு எனக்கும் என் கணவருக்கும் வித்தியாசம் இல்லன்ற அளவுக்கு நான் நடந்து கிட்டது தப்பு தான். என் மகன் என் மேலே உள்ள பாசத்துல ஆரோன் உயிரோட இருக்கற செய்தி கேட்டாதாலோ ஆரோன் பார்த்ததாலோ என் குற்றவுணர்வு போயிடும் நினைச்சிட்டான். ஆனா நீ சொன்னது போல கண்டிப்பா நான் குற்றவுணர்வோட ஆயுள் தண்டனை அனுபவிப்பேன் ஜெஸி !  நீ கேட்டது எல்லாம் சரி… நான் மனசார(ல) தண்டனை  அனுபவிச்சிட்டு தான் இருக்கேன்… சாகறத்துக்ககுள்ள என்னை மன்னிச்சிடு ஜெஸி !”என்று கையெடுத்து கும்பிட்டார்.

அவளோ அவரை வெறித்தாள்.”நானும் என்  மகனும் உன்னை ரொம்ப நோகடிச்சிட்டோம். என் மகனையாவது மன்னிச்சிடு ஜெஸி ! அவன் இப்படி நடந்துப்பான் நான் ஒருக்காலும் நினைச்சது இல்ல… ஆனா

நண்பன்ற ஒரே காரணத்துக்காக அவன் கொடுத்த  இன்னலையும்  பொறுத்து அவனை காப்பாத்த நினைச்ச மனசு எத்தனை பேருக்கு வரும்? எனக்கு அந்த மனுசு இல்லாம தான் இங்க வந்து தவிக்கிறேன் மா  ஒரு கொலக்காரியோட  மகன் நினைக்காம, அவனை மாத்தனும் நினைச்சியே நன்றி ஜெஸி ! நான் செஞ்ச பாவத்துக்கு பரிகாரமா ஆரோனுக்கு எல்லாம் நியாபகம் வரணும் வேண்டுகிறேன்.நீயும் அவனும் சந்தோசமா வாழ்வீங்க…!”என்றார்.

அவள் பதில் சொல்லாமல் அமைதியாக அங்கிருந்து நகர்ந்து விட, ஆரோன் அவரை பார்த்தான். அவரும் அவனை பார்த்து கைகூப்பி மன்னிப்பு கேட்க, அவர் அருகே நெருங்கினான்

“எனக்கு எதுவும் நியாபகம் இல்ல… உங்க கிட்ட என்ன பேச தெரியல… எனக்கு சேர்த்து அவளே பேசிட்டா ! நான் பேசி உங்களை ஹார்ட் பண்ண விரும்பல ! உங்க தண்டனை காலமும்  குற்றவுணர்வும் சீக்கிரம் குறையும்… நான் வேண்டுகிறேன்… வர்றேன்”என்று அவனும் சென்று விட, நிவாஸ் தான் அவரை கையை பிடித்துக் கொண்டான்.

“உனக்கு சரியாகிடுச்சா நிவாஸ்?!”

மகனை உச்சி முதல் பாதம் வரை பார்த்து விட்டு கேட்டார்.

“சரியாகிடுச்சி மா  ! ஜெஸியும் எட்வர்டும் தான் என்னை பாதுகாத்து எனக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தாங்க… நான் இப்போ தெளிவாகி நல்லா இருக்கேன் மா. ஆனா நீங்க இங்க இருக்கறதா பார்க்க கஷ்டமா இருக்குமா?”

“அது நான் செஞ்ச பாவத்துக்கு அனுபவிக்கிறேன் நிவா !”

“ஏன் மா என் பேர கோர்ட்ல சொல்லல, எனக்கும் இதுல சம்பந்தம் இருக்கு ஏன் சொல்லல, நீயும் மாமாவும் மட்டும் ஏன் தண்டனை அனுபவக்கிறீங்க? “

“நீ என்னப்பா தப்பு பண்ண? அவரை  கொன்னது நான் தான் நீ இல்ல…! நீ வாழ வேண்டியவன் டா ! ஜெயிலுக்கு வந்து உன் வாழ்க்கை அழிச்சிக்க அம்மா ஒரு காலும் அனுமதிக்க மாட்டேன். நீ சந்தோசமா இருக்கணும்…”என்று அவன் கன்னத்தை தாங்க…

“இதே போல ஆரோனை நினைச்சிருந்தா உங்களுக்கு இந்த குற்றவுணர்வு வந்திருக்காதுல மா?”எனக் கேட்டதும் அவருக்கு சுருக்கென்று இருந்தது.முகம் மாறியது.

“சாரி மா உங்களை குத்திக் காட்ட நான் இதை சொல்லல ! நான் அவ்வளவு சொல்லியும் நீங்க ஆரோன் அடிச்சது விளைவு தான் மா இது ! மாட்டிபோம் மா நாம செய்த தவறு என்னைக்கும் மறையாது புரிந்தது மா. நீங்க உள்ள இருந்து அனுபவிக்கறீங்க நான் வெளிய இருந்து அனுபவிக்கிறேன் மா ! அதான் வித்தியாசம்.நானும் ஆரோன கொல்லும் போது கூட இருந்தேனே மா”என்றான் வருத்தத்துடன்.

“ஷ்ஷ்… நீ இப்படி பேச கூடாது நிவாஸ் ! தண்டனை அனுபவிக்கறத அம்மா பார்த்துக்கிறேன். நீ உன் குடும்பத்தோட வாழ பாரு… நீ நம்ம வீட்டுக்கு போ ! ருத்ரன் உன்னை பார்த்துப்பான்…. நீ தான் அந்த வீட்டு மூத்த வாரிசு டா நீ அங்க தான் இருக்கணும்”என்றார்

“இல்லம்மா ! நான் என் பிரண்ட்ஸ் கூட இருந்திக்கிறேன். புதுசா வாரிசா நுழைய எனக்கு விருப்பம் இல்ல… நீங்க தான் அந்தக் குடும்பத்துக்கும் எனக்கு உள்ள தொடர்பு. நீங்க இங்க இருக்கும் போது நான் எப்படி உரிமை எடுத்துக்க என்னால முடியாதுமா என்னை மன்னிச்சு ஏத்துக்கிட்ட என் பிரண்ட்ஸ் கூட இருக்கேன் மா போர்ஸ் பண்ணாதீங்க… உடம்ப பார்த்துக்கங்க நான் வர்றேன்”என்று அவனும் கிளம்பி விட இவர் அமைதியாக உள்ளே போனார்.

****.

நாட்கள் செல்ல, ஜெஸியின் நினைவு போராட்டத்தில் பல முறை தோத்து தன்னை மீட்டெடுக்க போராடி போராடி ஓய்ந்து போன துருவனுக்கு ருத்ரன் தான் ஆறுதலாக மாறி அவனோடு ஒரு நண்பனை போல இருந்து அவன் சாய தோள் தந்து  தேற்றினான்.

இருந்தும் அவளால் ஏற்பட்ட பாதிப்பை குறைக்க, வெளிநாட்டு செல்வதாக முடிவு செய்து அண்ணனிடம் சொல்ல அவனுக்கும் சரியென பட இன்னும் இரண்டு மூணு நாளில் அவன் மீண்டும் அமெரிக்கா செல்ல இருந்தான்.

அன்று கூட அவனது அறையில் ஜெஸியின் நினைவு கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே சுழற்ற, இவனும் கவனத்தை திசை திருப்பும் படி அலைபேசியில் படம் ஒன்றை ஓட விட்டு பார்த்துக் கொண்டான்.

அவனது கதவு தட்டப்பட்டது. யாரென பாராமல் “எஸ் கமின்”என்றவன் திரையிலிருந்து கண்ணை விளக்கவில்லை…

“ஜுஸ் ” என மெல்லிய குரல் அவன் சேவியை அடைய , குரலுக்கு சொந்தமானவள் யாரென ஆராயாமல் திரையில் கவனம் பதித்தவன்”வச்சுட்டு போங்க”என்றான்.

அவளும் டேபிலில் வைத்தவள் நகராமல் தயங்கியே நின்றாள்.

இன்னும் அந்த உருவம் மறையாமல்  நிற்பதை கண்டு யாரென  ஏறிட்டு பார்த்தான். மது தான் தயங்கிய படி நின்றாள்.

“மது நீயா ? சாரி நான் கவனிக்கல  ! என்ன வேணும் மது?” என்றான் கனிவாக,

“உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் !”என்றாள் கொஞ்சம் திக்கி.

“இங்க உட்கார்  பேசலாம்”என்றான் மெத்தையை காட்டி. அவளும் ஓரத்தில்  மெத்தைக்கு வலிக்காமல்

அமர்ந்தாள்

“சொல்லு மது !”

“நீங்க ஊ… ஊருக்கு போயிதான் ஆகணுமா? இங்க இருக்க மாட்டீங்களா?”தவிப்புடன் கேட்டாள்.

அவளது கேள்விக்கு அவன் கோப்பபடுவான் என்று எண்ணினாள்.. மாறாக அவனோ சிரித்துக் கொண்டு “போய் தான் ஆகனும். இங்க இருந்ததால் பைத்தியமா ஆகிடுவேன். ஜெஸியை மறக்க இங்க ரொம்ப கஷ்டப்பட்றேன். அங்க போன என்னால முடியும் நினைக்கறேன்”என்றான்.

அவளும் ‘ ம் ‘ என்றாள் மனசே இல்லாமல்… அவனுக்கு அவளது ‘ ம் ‘ ல் சிரிப்பு வந்தது.

“நான் வர்றேன்”என்று எழ, “உன் கிட்ட கொஞ்சம் பேசணும் மது ! உட்கார் “என்றான்.

அவளோ ஆச்சர்யமாக அவனை பார்த்தாள். அவனும் அவள் பார்வை பொருள் அறிந்து புன்னகை பூத்தான்.

“நீ என்னை லவ் பண்ற தான?”எனக் கேட்டதும் தனது அழகிய கண்ணை பெரிதாய் விரித்து அதிர்ச்சியானாள்.

மீண்டும் முறுவலுடன்” எனக்கு தெரியும். சரி சொல்லு எப்போ இருந்து என்னை லவ் பண்ற நீ? இங்க வந்ததுல இருந்தா?”

“இல்லை”என்று அவள் தலையை அசைக்க, அவனை புருவ முடிச்சுடன் அவளை ஏறிட்டான்.

“அப்போ எப்போல இருந்து காதலிக்கற?”

“சின்ன வயசுல இருந்து உங்க மேலே கொஞ்சம் ஈடுபாடு இருந்தது. அப்படியே அது காதலா மாறிடுச்சி !”என்றாள்

“வாட் சின்ன வயசில இருந்தா? எப்படி?”என்றான் அதிர்ச்சியுடன்

“மாமாக்கு தெரியாம அத்தை எங்க வீட்டுக்கு வருவாங்க.. அப்போ உங்களை பத்தி தான் அதிகம் பேசுவாங்க… உங்க பெயருல இருந்து கொஞ்சம் கொஞ்சமா உங்களை பிடிக்க ஆரம்பிச்சது. உங்க ஸ்கூல் டேஸ் ஆல்பம் கொண்டு வருவாங்க… நீங்க வாங்கினா பிரைஸ் போட்டோ காட்டுவாங்க நான் அதை வச்சுப்பேன். உங்களை பத்தி சொல்லி சொல்லி என் மனசுல உங்க மேலே காதல் வர வச்சிட்டாங்க..! உங்களுக்கு ஒன்னு காட்டணும் காட்டடுமா?”என்க, அவனும் சரி என்றதும் அவளும் வேகமாக சென்று ஒரு பெரிய பழைய நோட்டை எடுத்து வந்து அவனிடம்  நீட்ட  அதை வாங்கி பார்த்தவனுக்கு அதிர்ச்சி.

பிறந்த நொடியிலிருந்து தற்போதைய தோற்றம் வரையிலான அவனது புகைப்படங்களை ஓட்டி வைத்திருந்தாள். அருகே சிறு கவிதையும் எழுதி இருந்தாள்.

அவனுக்கு பார்க்க ஆசையாக இருந்தது பொறுமையாக அனைத்தையும் பார்த்தான்.

“இதை நான் என்னோட எடுத்துட்டு போகட்டுமா?”என்று  கேட்டவனை விழுக்கென பார்த்தாள்.

“எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு ! இது வேணும் “என்றான் அவளும் தலையை ஆட்டினாள்.

“தேங்க்ஸ்”என்றான்.

“மம் “அவளும் எழுந்துக் கொள்ள, மீண்டும் “மது”என்றான். அவளும் அவனை ‘ என்ன ?!”என்று பார்க்க,

“நான் உன் கிட்ட என்னை மறந்திடு ! நான் உனக்கு கிடைக்க மாட்டேன் சொன்னா  என்ன  செய்வ?”

“செத்துடுவேன் துருவ் !”என்றதும் அவனும் பதறி போனான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்