Loading

மணியடித்ததும் வேக வேகமாக ஓடி இடத்திற்கு வருவோம். அவிச்ச முட்டை கிடைக்காமல் போய்விடுமோ?

என்கிற பயத்தில்.

 

“முதல் இடத்தை யார் பிடிப்பது?”

என்று எங்களுக்குள் சண்டை நடக்கும். 

என்றைக்கும் போல் குழைந்து போன சோறும், தாளித்துக் கொட்டிய வெங்காயம் மிதக்கும் பருப்புக் குழம்பும் 

அமுதமாய் இருக்கும்.

 

வேப்ப மரத்தின் நிழலில் அமர்ந்து கதை பேசிக்கொண்டே சாப்பிடுவோம். காற்று வீசி, தட்டில் பழுத்த வேப்பிலை விழ, “லேய்! நாளைக்கு உங்க வீட்டுக்குச் சொந்தக்காரங்க வருவாங்க பாரு” என்பான் ஓட்டப்பல்லு சின்னத்துரை.

 

மஞ்சள் கருவைச் சாப்பிடாமல் வைத்திருந்து, கடைசியில் கொஞ்சமாக இருக்கும் சோற்றில் அதை விரவிச் சாப்பிடுவோம். சிலநாளில், 

அவித்த முட்டையைப் புத்தகப்பையிலே வைத்து எடுத்துச் செல்வோம். வீட்டுக்குச் செல்வதற்குள் அது பையிலேயே ஆம்லேட்டாய் மாறிவிடும் .

 

இப்படியே சந்தோசமாய்ச் சென்று கொண்டிருந்த நாள்கள் வேகமாக ஓடின. நிற்காமல் ஓடிய காலநதியில் 

நண்பர்கள் நாங்கள் ஆளுக்கொரு திசையில் சென்றோம். 

 

இப்பொழுது சென்னையில் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரிக்காத ஒரு வெளிநாட்டுக் கம்பெனியில் அமர்ந்து இந்தக் கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

 

இங்கே குளிரூட்டப்பட்ட கேண்டீனில் முட்டைப் பப்ஸ் மட்டுமே கிடைக்கிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்