Loading

“நம்ம ஷாம்பவி இதோ நிக்குறால இவ தான். அதாவது இப்ப சம்யுக்தா அப்போ ஷாம்பவி. நான் சொல்றது சரியா.” என்று கேட்க, சஞ்சய்க்கு அதிர்ச்சி என்றால், மற்றவர்களுக்கு அவனுக்கு எப்படி இந்த உண்மை தெரிந்தது என்று அதிர்ச்சி.

“உனக்கு எப்படித் தெரியும் ரிஷி??” என்று அதிர்ச்சியுடன் ஆகாஷ் கேட்டான்.

ரிஷி சிரித்துக் கொண்டே,”அப்ப நான் சொன்னது உண்மை. அப்படி தான??” என்று கேட்க, மற்றவர்களுக்கு மேலும் அதிர்ச்சி.

“ஆமா நான் தான் ஷாம்பவி. இப்ப அதுக்கு என்ன??” என்று கோவத்துடன் கேட்டாள் சமி.

“அதுக்கு ஒன்னுமில்லை யுகி. இன்ஃபேக்ட் எனக்கு சந்தோஷம் தான். எனக்கு பிடிச்ச ஷாம்பு என்னோட யுகினு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷம் தான். ஆனால் ஏன் இந்த விளையாட்டு?? அந்த பொண்ணு சொன்னதெல்லாம் உண்மையா இல்லை அதுவும் பொய்யா??”

“போதும் ரிஷி. அவ சொன்னதெல்லாம் உண்மை. அதுல மறைக்கப்பட்ட உண்மை என்னனா இவங்க போன லாரி விபத்தாச்சுல அது சாதாரண விபத்து இல்லை. தீ விபத்து. அதுல சமிக்கு முகத்துல பயங்கர காயம். அப்பா அவளை அத்தையோட ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணாங்க. பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணனும்னு சொல்லிட்டாங்க. அப்போ அவ்ளோ டெக்னாலஜிஸ் நம்ம ஹாஸ்பிட்டல்ல இல்லை. ஸோ வேற ஹாஸ்பிட்டல்ல தான் செஞ்சோம். அத்தையும் மாமாவும் அவங்களோட பொண்ணோட முகத்தை சமிக்கு தந்தாங்க.”

“என்ன சொல்ற ஆகாஷ்??”

“ஆமா ரிஷி, அத்தைக்கும் மாமாவுக்கும் ஒரு பொண்ணு இருந்தது. அவ பெயர் லேகா. அவள் ஒரு விபத்துல இறந்துட்டா. உயிரோட இருந்திருந்தா இந்நேரம் ப்ரீத்தி வயசு இருந்துருக்கும். ஆனால் அவளோட விபத்து நடந்தது அவளோட ஏழாவது வயசுல. அதனால அத்தையும் மாமவும் சமிக்கு லேகா முகத்தை தந்தாங்க. ஆப்ரேஷன் நல்லபடியாக முடிஞ்சது. ஆனால் சமிக்கு எதுவும் ஞாபகத்துல இல்லை. மாமா பக்கத்துல இருக்கிறதைப் பார்த்து அவர் தான் அவளோட அப்பானு நினைச்சு அப்பானு கூப்பிட்டா. அதுல மாமா அவங்க பொண்ணே திரும்ப வந்துட்டதா நினைச்சாங்க. அது மட்டுமில்லாம அப்பா எவ்ளவோ தேடி பார்த்துட்டாங்க, தமிழ்நாட்ல எந்த ஸ்டேஷன்லயும் மிஸ்ஸிங் கேஸ் எதுவும் ஃபைல் ஆகலை. ஸோ மாமாவும் அத்தையும் சமியை அவங்க பொண்ணா தத்து எடுத்துட்டாங்க. அவளுக்கு சம்யுக்தானு பெயரும் அவங்க தான் வச்சாங்க.”

“அப்போ உனக்கு எப்ப ஞாபகம் வந்துச்சு??”

“இரண்டு வருஷத்துலயே எனக்கு எல்லாம் ஞாபகம் வந்துடுச்சு. திடீரென ரொம்ப தலை வலி வந்துச்சு. அதுல மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டேன். முழுச்சு பார்க்கும் போது எனக்கு எல்லாம் ஞாபகத்துல இருந்துச்சு.”

“அப்போ பிளான் பண்ணி தான் இங்க வந்தியா??”

“இல்லை. நான் எதார்த்தமா தான் இங்க வந்தேன். நாங்க வந்த முதல் நாள் கங்கா பாட்டியைப் பார்த்ததும் எல்லாம் புரிஞ்சு போச்சு. அப்போ நந்து என்கிட்ட பேசுவதைப் பார்த்து ஆர்த்தி கோவப்பட்டாள். அப்புறம் ஜெய் சொன்னான் உனக்கும் ஆர்த்திக்கும் கல்யாணம் நடக்கப் போறதுனு. அவளை அழ வைக்கணும்னு அப்போ தான் தோனுச்சு. அவ அழுதா அந்தக் கிழவிக்கு தாங்காது. உன்னை அவகிட்ட இருந்து பிரிக்கனும்னு நினைச்சேன். ஆனால் நான் எதுவும் செய்யாமலே அவளோட நடவடிக்கைனால நீயே அவளை வேண்டாம்னு சொல்லிட்ட.”

“சரி யார் இந்த பொண்ணு?? எதுக்கு இந்தப் பொண்ண ஷாம்பவியா நடிக்க வச்சீங்க??”

“ஏனா எனக்குச் சில உண்மைகள் தெரியனும். அதுக்காகத் தான் ஷாம்பவினு ஒருத்தி அந்த வீட்டுல இருந்ததை அவங்களுக்கு ஞாபகப்படுத்த நினைச்சேன். அதே மாதிரி எனக்கு அவங்கக் கூட எந்த உறவும் வேண்டாம். அப்புறம் முக்கியமான விஷயம் எனக்கு ஷாம்பவியா இருக்குறத விட சம்யுக்தாவா இருக்கத் தான் புடிச்சிருக்கு. நான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அப்புறம் இவளும் என்னைப் போல் அந்த கடத்தல் கும்பலில் மாட்டியவள் தான். அவளோட அப்பா அம்மா இறந்ததற்கு அப்புறம் இவளை ஒரு ஆஸ்ரமத்துல சேர்த்தாங்க. அதுல வேலை செய்றவன் ஒருவன் இந்தக் கும்பலை சேர்ந்தவன். அவன் மூலமா தான் இவ அங்க வந்தது. இவளோட அதிர்ஷ்டம் இவ வந்த ஒரே வாரத்துல போலிஸ் ரெய்ட் வந்துருச்சு. இவளோட பேரும் ஷாம்பவி தான்.”

“ஓ!!! அப்புறம் ஏதோ உண்மைன்னு சொன்னீயே?? அது என்ன உண்மை??”

“சொல்றேன் நந்து. அதுக்கு முன்னாடி உனக்குத் தெரியுமா நீ ப்ரகாஷ் அங்கிள் பையன் கிடையாது.”

“எனக்குத் தெரியும்.” என்று ரிஷி கூற, இப்பொழுது அனைவரும் அதிர்ச்சியாக ரிஷியைப் பார்த்தனர்.

“அண்ணா உனக்கு எப்படி தெரியும்??”

“உனக்கு ஞாபகம் இருக்கா சஞ்சய்?? நான் எம்.ஈ. படிச்சிட்டு இருக்கும் போது ஒரு நாள் யார்கிட்டயும் எதுவும் பேசலை!! எல்லாரும் என்னாச்சுனு என்கிட்ட கேட்ட பொழுது எல்லார் மேலயும் எரிஞ்சு விழுந்தேன். ஞாபகம் இருக்கா??”

“இருக்கு அண்ணா. என்னைக்கும் கோவப்படாத நீ அன்னைக்கு ரொம்ப கோவப்பட்ட.”

“ஆமா அன்னைக்குத் தான் எனக்கு உண்மை தெரிஞ்சது. ஆர்த்தியோட பாட்டியும் அப்பாவும் பேசிட்டு இருந்தாங்க. அதை நான் கேட்டுட்டேன். இத்தனை நாள் எப்படி என்கிட்ட உண்மையை சொல்லலைனு கோவம். அதான் யார்கிட்டயும் பேசலை. அப்புறம் தான் புரிஞ்சது அம்மாவும் அப்பாவும் என்னையும் உன்னையும் வேற வேற மாதிரி நடத்தலை. அதான் மனசை தேத்திக்கிட்டேன். என்னைப் பெத்தவங்களுக்கு நான் திதிக் குடுக்கும் போதும் எதுவும் தெரியாத மாதிரி இருந்தேன்.” என்று ரிஷி கூற, சஞ்சய் அவனை அணைத்துக் கொண்டான்.

“சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்??” என்று ரிஷி சமியைப் பார்த்துக் கேட்க,

“ஏனா உன்னோட அப்பா,அம்மா, தாத்தா அப்புறம் என்னோட ஈஸ்வர் அப்பாவ கொலை பண்ணது உன்னோட ப்ரகாஷ் அப்பா தான்.” என்று சமி கூற, அதைக் கேட்ட இருவரும் பேச்சிழந்து அதிர்ச்சியாக அவளை நோக்கினர்.

“நீ பொய் சொல்ற!!! கண்டிப்பா அப்பா அப்படி பண்ணிருக்க மாட்டார்.” என்று ரிஷி கூற,

“ஆமா சமி. கண்டிப்பா அப்பா இப்படி பண்ணிருக்க மாட்டார்.” என்று சஞ்சயும் கூற, சமி ஒரு விரக்தி புன்னகை ஒன்றைச் சிந்தி,”நீங்க நம்ப மாட்டீங்கனு எனக்குத் தெரியும். ஜெய் அன்னைக்கு உங்க அப்பாவ நாங்க ஏன் கடத்துனோம்னு கேட்டல??( ஆமா என்று சஞ்சய் தலை ஆட்டினான்.) நாங்க உங்க வீட்டுல இருந்து வரும் போது, ஆர்த்தியோட பாட்டி உங்க அப்பாவ மிரட்டுன மாதிரி பேசுனாங்க. நீங்க கவனிச்சீங்களானு எனக்குத் தெரியாது. அன்னைக்கு உங்க வீட்டுல அவ்ளோ பிரச்சனை நடந்த போதும் உங்க அப்பா நந்துக்குக் கண்டிப்பா ஆர்த்தியோட கல்யாணம் நடக்கும்னு சொன்னார். இது எங்களை யோசிக்க வைச்சது. அதான் உங்க அப்பாவ நாங்க கிட்னாப் பண்ணோம். நீங்க எல்லாம் அவரைத் தேடிப் போன சமயம் ஆகாஷ் உங்க வீட்டு ஆஃபிஸ் ரூம்ல ஸ்பை கேமிரா அண்ட் மைக் செட் பண்ணிட்டான். அதே மாதிரி கடத்திட்டை போனப்ப உங்க அப்பாகிட்ட நாங்க ஒரு கேள்வி தான் கேட்டோம். பண்ணிரென்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த கொலையை ஏன் ஆக்ஸிடெண்ட்டா மாத்துனீங்கனு. அதுக்கு உங்க அப்பா ஆச்சர்யப் படலை, கோவப்படலை. ஆனால் அதிர்ச்சியா இவங்களுக்கு எப்படி இது தெரிஞ்சதுனு ஒரு பார்வை பார்த்துருக்கார். அது மட்டுமில்லாம எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொல்லிட்டார். இதை அவர் உங்ககிட்ட சொல்லலை ஆனால் ஆர்த்தியோட பாட்டியைத் தனியா கூப்பிட்டுப் போய் சொல்லிட்டார். அவர் பேசுவதை நாங்க ரெக்கார்டு பண்ணிருக்கோம். கேளுங்க,” என்று கூறி தன் லேப்டாப்பில் உள்ளதைப் போட்டுக் காட்டினாள்.

“பண்ணிரென்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த கொலையை ஏன் ஆக்ஸிடெண்ட்டா மாத்துனீங்கனு கேட்டான். எனக்கு ஒரு நிமிஷம் உயிரே போயிடுச்சு. அப்புறம் சுதாரித்து நீங்க என்ன பேசுறீங்க எனக்கு புரியலைனு கடைசி வரைக்கும் சொன்னேன். அப்புறம் அவனே என்னைக் கொண்டு போய் விடச் சொல்லிட்டான். எனக்குப் பயமா இருக்கு. நம்ம இரண்டு பேருக்கு மட்டும் தெரிஞ்சு விஷயம் எப்படி அவனுக்கு தெரிஞ்சது??”

“ப்ரகாஷ் நீ எதுக்கும் பயப்படாத. நான் பார்த்துக்கிறேன். நீ எதுவும் உளறாம இருந்தா சரி.” அந்தப் பதிவு முடிய சஞ்சயும் ரிஷியும் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“இந்த விஷயத்தை வைச்சுத் தான் உங்க அப்பாவை பிளாக்மெயில் பண்ணி உன்னை ஆர்த்தியோட கல்யாணம் பண்ணி வைக்கப் பார்க்குது அந்தக் கிழவி.”

“சமி இப்ப கூட அந்தம்மா ப்ரகாஷ்கிட்ட ஏதோ பேசிருக்கு. ஸிக்னல் வந்தது. இருங்க போடுறேன் எல்லாரும் கேட்போம்.” என்று கூறி ராம் அந்தப் பதிவைப் போட்டார்.

“சொல்லுங்க.” ஒரு இறுக்கத்துடன் கேட்டார் ப்ரகாஷ்.

“என்ன ப்ரகாஷ் பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு??”

“எப்படி இருக்கு?? நான் எப்பவும் போல தான் பேசுறேன்.”

“இல்லையே கொஞ்சம் கூட மரியாதையே இல்லையே உன் பேச்சுல.”

“ஆமா மரியாதை ஒன்னும் தான் குறைச்சல். என்ன பேச வந்தீங்களோ அதைப் பேசிட்டு கிளம்புங்க.” அலட்சியமாகக் கூறினார்.

“என்ன பயம் விட்டுப் போச்சா??”

“இங்க பாருங்க எப்ப நீங்க என் பையனை போலிஸ்ல கம்ப்ளைன்ட் குடுத்தீங்களோ அப்பவே உங்க மேல இருந்த பயம் போயிடுச்சு.”

“ஓ அப்போ நான் இப்பவே போலிஸ்ஸ கூப்பிடுறேன்.” என்று தன் கைப்பேசியை அவர் எடுக்கப் போக, ப்ரகாஷ் அவரைத் தடுத்து,”கூப்பிடுங்க. நான் மட்டுமல்ல நீங்களும் ஜெயிலுக்கு போகனும். சரினா கூப்பிடுங்க.” என்று கூற, பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன சொல்ற நீ?? நான் எதுக்கு ஜெயிலுக்கு போகனும்??”

“ஏனா லாரி ஏத்தி விபத்தை பண்ணாங்கனு அவங்க இரண்டு பேரையும் ஆள் வைச்சு தீர்த்துக் கட்டுனீங்களே, அவங்க இப்ப என்னோட கஸ்டெடில இருக்காங்க. உங்களுக்கு எதிராகச் சாட்சி கொடுக்கவும் ரெடியா இருக்காங்க. நீங்க என்கிட்ட கேட்கலாம் அப்புறம் ஏன் நான் இத்தனை நாள் அமைதியா இருந்தேனு. அதுக்கு காரணம் ஆர்த்தியோட வாழ்க்கை கெட்டுப் போய்டக் கூடாதுனு தான். ஏனா அவங்க நிச்சயதார்த்தம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் எனக்கு அவங்க கிடைச்சாங்க. அதுனால தான் நான் அமைதியா இருந்தேன். ஆனால் எப்ப ஆர்த்தியும் உங்ககூட சேர்ந்து இந்த நாடகத்தை நடத்தினாளோ அப்பவே முடிவு பண்ணிட்டேன் இனி ஆர்த்தியோட வாழ்க்கைனுலாம் யோசிக்கக் கூடாதுனு. அதனால இனி இந்த மிரட்டல்லாம் என்கிட்ட வேண்டாம்.” என்று கூற, பாட்டிக்கு என்ன பேசவென தெரியலை.

“இப்ப என்ன உங்களுக்கு என் பசங்களோட ஷேர்ஸ் வேண்டும். அந்தக் கம்பெனி முழுசா உங்களுக்கு வேண்டும். அவ்ளோதான, என் பசங்க எல்லாத்தையும் உங்க பேர்கு மாத்தி தரேனு சொல்லிட்டாங்க. போதுமா.” என்று கூற, பாட்டியின் கண்களில் ஒளி வந்தது.

“இது தான நீங்க எதிர்பார்த்தீங்க. எனக்கு தெரியும் நீங்க இந்த ஷேர்ஸ்காக தான் இந்த கல்யாணம் நடக்கனும்னு எதிர்பார்க்குறீங்கனு. எனக்கு என் பசங்க சந்தோஷம் தான் முக்கியம். அதனால எல்லாத்தையும் நீங்களே வச்சுக்கோங்க.”

பாட்டி வாய் எல்லாம் பல்லாக,”எனக்கு இது போதும் ப்ரகாஷ. இனி நான் உன்னை எதுக்கு தொந்தரவு பண்ண போறேன்?? நீ அந்த கொலையைப் பண்ணலை. எனக்கும் எதுவும் தெரியாது. நான் நம்ம லாயரை வரச் சொல்றேன். சீக்கிரமே எல்லாத்தையும் மாத்திடலாம்.”

“அப்போ கல்யாணம்??”

“அது எதுக்கு?? அதான் எனக்கு வேண்டியது என் கைக்குக் கிடைக்கப் போகுதுல. எனக்கு அது போதும். உங்களை விட பெரிய வசதியான மாப்பிள்ளையா பார்த்து நான் என் பேத்திக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன். அப்போ நான் வரேன்.” என்று பாட்டி கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

இதைக் கேட்ட எல்லாரும் பாட்டியும் குணத்தைப் பார்த்து அருவருத்தனர். சமி, சஞ்சய் மற்றும் ரிஷியைப் பார்த்து,”இப்ப என்ன சொல்றீங்க?? மிஸ்டர் ப்ரகாஷ தான் இந்தக் கொலையைப் பண்ணிருக்கிறார்.”

“எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை. அப்ப குற்றவுணர்ச்சில தான் இத்தனை நாள் என்னை அவங்க பையனா பார்த்துக்கிட்டாங்களா?? இல்லையே நான் உண்மையான பாசத்தை தான அவங்ககிட்ட நான் பார்த்தேன். யுகி இதுல வேற ஏதோ இருக்கு. எனக்கு இப்பவும் நம்பிக்கை இருக்கு யுகி, அப்பா அப்படி பண்ணிருக்க மாட்டார்.”

“ஆமா சமி. எங்களுக்குக் கொஞ்சம் டைம் குடு. நாங்க நிரூபிக்கிறோம்.”

“மாமா என்ன செய்யலாம்??”

“உங்களோட நம்பிக்கையை நான் கெடுக்கப் பார்க்கலை. உங்க அப்பாகிட்ட நேரடியா கேளுங்க. அப்புறம் உங்க அப்பாகிட்ட தான் அந்த விபத்தை பண்ணவங்களை கொலை பண்ணவங்க இருக்காங்க. அதையும் உங்க அப்பாகிட்ட கேளுங்க. அவங்க மூலமா கூட நமக்கு தகவல் கிடைக்கலாம்.”

“சரிங்க அங்கிள். நாங்க அது என்னனு பார்க்குறோம்.” என்று கூறி தங்கள் வீட்டுக்குச் சென்றனர்.

ரிஷியும் சஞ்சயும் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அங்கு ஸோஃபாவில் அமர்ந்து காஃபி குடித்துக் கொண்டிருந்த ப்ரகாஷிடம் சென்று,”அப்பா உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்.” என்று ரிஷி சத்தமாகக் கூற, அவன் சத்தத்தைக் கேட்டு நளினி அங்கு வந்தார்.

“என்னாச்சு ரிஷி?? எதுக்கு இப்ப இப்படி கத்துற??”

“அம்மா உங்களுக்கு தெரியுமா?? இல்லை தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருக்கீங்களா.?”

“என்னடா பேசுற?? எனக்கு ஒன்னும் புரியலை.”

“அது ஒன்னுமில்லை அம்மா. அண்ணா என்ன கேட்குறானா தாத்தா அப்புறம் சித்தி,சித்தப்பாவ அப்பா தான் கொலை செய்தார். அது உங்களுக்குத் தெரியுமா தெரியாதுன்னு கேட்கிறான்.” என்று சஞ்சய் கூற, நளினி அதிர்ச்சியில் அப்படியே நிற்க, ப்ரகாஷ் அதிர்ச்சியில் இருக்கையிலிருந்து எழுந்து நின்றார்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்