Loading

 

 

ஈர்ப்பு 21

 

‘இவன் எது பிடிச்சுருக்கான்னு கேட்குறான்?’ என்று யோசித்தவாறே அவனை பார்த்தேன்.

 

அவனோ சிரிப்புடன் கண்ணாடியில் தெரிந்த எங்கள் பிம்பத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

‘ஒருவேளை ட்ரெஸ் பிடிச்சுருக்கான்னு கேட்குறானோ?’ என்று நான் குழம்பிக் கொண்டிருக்கும்போதே என் முன் சொடக்கிட்டு, “ஹலோ என்ன ட்ரீம்ஸா? இந்த ட்ரெஸ் அவளுக்கு பிடிக்கும்மான்னு கேட்டேன். கேட்டு ரெண்டு நிமிஷம் ஆச்சு, இன்னும் பதில் வரல. இந்த ட்ரெஸ் நல்லா இல்லையா?” என்றான்.

 

‘ஓஹ் ட்ரெஸை தான் கேட்டானா? அதனென்ன ஃபர்ஸ்ட் பிடிச்சுருக்கான்னு கேட்டுட்டு இப்போ பிடிக்குமான்னு கேட்குறான்! ஃபர்ஸ்டே பிடிக்குமான்னு தான் கேட்டுருப்பானோ! நம்ம காதுல தான் பிடிச்சுருக்கான்னு விழுந்துருக்குமோ?’ என்று உள்ளுக்குள் யோசித்தாலும், அவனிடம், “இந்த ட்ரெஸ் புது கலெக்க்ஷன். நல்லா மூவிங்ல இருக்கு. அவங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.” என்று ஒப்பித்தேன்.

 

‘எவங்களுக்கு?’ என்று என் மனசாட்சி கவுண்டர் கொடுத்தது.

 

“ம்ம்ம், இதை கொடுத்து தான் அவளுக்கு ப்ரொபோஸ் பண்ண போறேன்.” என்றான் கூடுதல் தகவலாக.

 

‘அடப்பாவி! யாரை சொல்றான் இவன்? நமக்கு தெரியாம யாரையாவது லவ் பண்ணி தொலைச்சுருப்பானோ! இன்னும் அவன் எதையாவது சொல்லி குழப்புறதுக்குள்ள இதை பில் போட்டு கொடுத்துடணும்.’

 

அவனிடம் அந்த உடைக்கான தொகையை சொன்னதும் அவன் அதை செலுத்திவிட்டு உடையை வாங்கி ஒரு தலையசைப்புடன் சென்றுவிட்டான்.

 

‘அந்த ட்ரெஸ் உனக்குன்னு தான நினைச்ச!’ என்று வழக்கம் போல் என் மனசாட்சி கிண்டல் செய்தது.

 

‘ப்ச், சும்மா இரு. நானே எனக்கு தெரியாம யாரு அந்த புது கேர்ள்-பிரென்ட்னு குழம்பிட்டு இருக்கேன்!’ என்று எரிச்சலில் அதை அடக்கினேன்.

 

அப்போது அங்கு வந்த சாண்டி, “ஹே என்ன டி நல்ல ரொமான்ஸா?” என்று எரியும் அடுப்பில் எண்ணையை ஊற்றியது போல வினவினாள்.

 

“ம்ம்ம், அங்க ஒருத்தன் என்னை புலம்ப விட்டு போய்ட்டான். இவ என்னன்னா ரொமான்ஸான்னு கேட்குறா! எல்லாம் நேரம்!” என்று வாய்க்குள்ளே முனங்கிக் கொண்டேன்.

 

“என்ன டி முணுமுணுக்குற?” என்று சாண்டி வினவ, நான் பதில் சொல்லும் முன்பே அங்கு ஜீவிகாவும் அவள் அம்மாவும் வந்தனர்.

 

“என்ன ஜீவி செலக்க்ஷன் முடிஞ்சுதா? எல்லாம் பிடிச்சுருக்கா?’ என்று நான் வினவ, “எல்லாம் சூப்பர் நதிக்கா. சாண்டி அண்… அக்கா தான் எனக்கு செலக்ட் பண்ண ஹெல்ப் பண்ணாங்க. நெக்ஸ்ட் டைம் புது கலெக்க்ஷன்ஸ் வந்தா சொல்லுங்க அக்கா உடனே கிளம்பி வந்துடுறேன்.” என்று ஆர்வமாக பேசினாள் ஜீவிகா.

 

“பார்த்தியா நான் செலக்ட் பண்ணி கொடுத்ததுனால தான் நமக்கு ஒரு ரெகுலர் கஸ்டமர் கிடைச்சுருக்காங்க.” என்று சாண்டி இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொள்ள,  “ஜீவி, நீ இவளை தூக்கி வச்சு பேசுறதுனால தான் இவ்ளோ ஆடுறா! என்று சாண்டியை பார்த்துக் கொண்டே சொன்னேன்.

 

அவளோ அதை சிறிதும் கண்டு கொள்ளாமல் கூலிங் கிளாஸை போட்டுக் கொண்டிருந்தாள்.

 

“அடியேய் இப்போ எதுக்கு டி கூலிங் கிளாஸ்?” என்று நான் வினவ, “சும்மா தான், எல்லாரும் என்னை பத்தி பெருமையா பேசுறீங்கள, அதான் ஒரு பில்ட்-அப்புக்கு.” என்று அவள் கூற, “அடிங்…” என்று நான் அவளை துரத்தப் போக, என்னை பிடித்த காயத்ரி ஆன்ட்டி ஏதோ சைகையில் கூறினார்.

 

“நீங்க ரெண்டு பேரும் இன்னும் பெருசா வரனும்னு உங்களை வாழ்த்துறாங்க.” என்று ஜீவிகா கூறினாள்.

 

“தேங்க்ஸ் ஆன்ட்டி!” என்று கோரசாக கூறினோம் நானும் சாண்டியும்.

 

அவர் சாண்டியின் கைகளை பிடித்து ஏதோ சைகையில் கூறினார்.

அதற்கு சாண்டியோ, “பரவால ஆன்ட்டி, அப்போ இருந்த டென்ஷன்ல தான் நானும் கொஞ்சம் எமோஷனலாகி கத்திட்டேன்.” என்று கூறவும் எனக்கு ஆச்சரியம்.

 

‘என்ன டா இது! என்கிட்ட இது மாதிரி ரெண்டு தடவை இது மாதிரி பேசிருக்காங்க. ஆனா, எனக்கு எதுவும் புரியல. இவகிட்ட இப்போ தான் பேசுறாங்க. உடனே அவளும் திரும்ப ரிப்ளை பண்றா. என்ன நடக்குது இங்க?’ என்று நான் பேந்த பேந்த விழிக்க, நான் யோசித்த விஷயத்தை ஜீவி அவளிடம் கேட்டாள். “எப்படி அண்… அக்கா உங்களுக்கு அம்மா சொல்றது புரிஞ்சது?”

 

“அது நான் சின்ன வயசுல ஆர்ஃபனேஜ் போனப்போ, அங்கயிருந்தவங்கள்ள பாதி பேரு காது கேட்காம வாய் பேச முடியாம தான் இருந்தாங்க. அவங்க கூட பேசிப் பழகுனதுனால எனக்கும் சைன் லாங்குவேஜ்  தெரியும்.” என்று சாண்டி கூறவும், “ஹே சாண்டி, உனக்கு இப்படி ஒரு திறமை இருக்கா?” என்று வியந்தேன்.

 

அவள் என்னை பார்த்து சிரித்து விட்டு, ஜீவியிடம், “ஜீவி நீ எப்போ லோன்லியா ஃபீல் பண்ணாலும் இங்க வந்துடு.” என்று அவள் கூற, “எதுக்கு இங்க வேலை செய்யாம இருக்கவா? ஒழுங்கு மரியாதையா வீட்டுல போய் உங்க ஸ்ட்ரெஸ் ரிலீஃப வச்சுக்கோங்க.” என்றேன் விளையாட்டாக.

 

“பார்றா, மேடம் இங்க நானும் பார்ட்னர் தான். நீ இங்கயே வா ஜீவி.” என்றாள் என்னை பார்த்துக் கொண்டே.

 

எங்களின் இந்த சண்டையைக் கண்ட ஜீவி, “இல்ல அண்… அக்கா நான் உங்க வீட்டுக்கே வரேனே.” என்றாள் பயந்துக் கொண்டே.

 

அவள் சொன்னதைக் கேட்ட நாங்கள் இருவரும் சிரித்தோம். நான், “ஹாஹா ஜீவி, நாங்க சும்மா சொன்னோம். நீ எங்க வேணும்னாலும் வரலாம்.” என்று கூறினேன்.

 

“ஆமா ஜீவி, அது சரி நீ ஏன் என்னை கூப்பிட இவ்ளோ தயங்குற? உனக்கு எப்படி தோணுதோ அப்படியே கூப்பிடு.” என்றாள் சாண்டி.

 

“அண்ணின்னு கூப்பிட்டாலும் ஓகேவா?” என்றேன் அவளுக்கு மட்டும் கேட்குமாறு.

 

அதைக் கேட்ட சாண்டி என்னை முறைத்தாள். அப்போது அங்கு வந்த ராகுல் என்னை காப்பாற்றினான்.

 

“என்ன ஜீவி பர்ச்சேஸ்லாம் முடிஞ்சதா?” என்று அவன் வினவ, “ம்ம்ம் ஆமா அண்ணா எல்லாம் முடிஞ்சது.” என்றாள்.

 

இப்போது சாண்டியின் முறை!

 

“என்ன டி நியாயமா பார்த்தா உன்னை தான் அவ அண்ணின்னு கூப்பிடணும்.” என்று சாண்டி கூற, நான் அவளை முறைத்து விட்டு வழக்கம் போல ஏதோ வேலை செய்வது போல அவர்களை கவனித்துக் கொண்டிருந்தேன்.

 

“அண்ணா உங்க பர்ச்சேஸ் முடிஞ்சதா? உங்க கேர்ள்-பிரென்ட்டுக்கு ட்ரெஸ் எடுத்தாச்சா?” என்று வேண்டுமென்றே வினவினாள் சாண்டி.

 

“அதெல்லாம் எடுத்தாச்சு.” என்று சிரிப்புடனே கூறினான் ராகுல்.

 

“அத எப்போ கொடுக்க போறீங்க அண்ணா?” என்று சாண்டி ஆர்வமாக வினவ, ‘ம்ச், இவ எதுக்கு இப்போ துருவி துருவி கேள்வி கேட்குறா?’ என்று மனதிற்குள் சலித்துக் கொண்டேன்.

 

“அதை கொடுத்து தான் ப்ரொபோஸ் பண்ணலாம்னு இருக்கேன். நீ என்ன நினைக்குற?” என்று அவனும் சும்மா இருக்காமல், சாண்டியிடம் வினவ, “சூப்பர் அண்ணா ட்ரெஸ் கொடுத்து ஒரு ப்ரொபோசலா. நதி சுப்பர் ஐடியால!” என்றாள் என்னையும் கோர்த்து விட்டாள்.

 

நானோ பல்லைக் கடித்துக் கொண்டு, என்ன சொல்வதென்று யோசித்துக் கொண்டிருக்க அப்போது ராகுலோ, “ஓகே ஜீவி, நம்ம கிளம்பலாமா?” என்று கேட்டான்.

 

அனைவரும் கிளம்ப சாண்டி அவர்களை வழியனுப்ப சென்றாள். நான் இன்னமும் ராகுலின் கேர்ள்-பிரென்ட் யாரென்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் காதருகே, “குழம்பாம வேலைய பாரு!” என்று கேட்ட குரலில் அடித்துப் பிடித்து திரும்பிப் பார்த்தேன்.

 

அங்கு ராகுல் அவன் விட்டுச் சென்ற பைகளை எடுத்துக் கொண்டிருந்தான்.

 

‘இவன் தான் பேசுனானா?’ என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அவன் என்னைப் பார்த்து ‘என்ன’ என்று புருவம் உயர்த்தினான். எப்போதும் போல் மயங்கத் துடித்த மனதை அடக்கி ’இல்லை’ என தலையாட்டினேன். அவனும் சிரித்துக் கொண்டே சென்று விட்டான்.

 

‘ஹ்ம்ம்’ என்று பெருமூச்சு விட்டு நான் திரும்ப அங்கு நேஹா ஒவ்வொரு உடையையும் தனக்கு வைத்து கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருக்க அவள் பின் நின்று ஆனந்த் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“க்கும், நான் ஒருத்தி இங்க தான் இருக்கேன்!” என்றதும் ஆனந்த், “ஹே நதி நீ எப்போ வந்த?” என்று கேட்டான்.

 

“ஹலோ மிஸ்டர் இது என் பொடிக். நீங்க தான் இங்க வந்துருக்கீங்க. லவ் மூட்ல இருந்தா எங்க இருக்கோம்னே மறந்துருமோ?” என்று நான் வினவ, அவனோ அசடு வழிந்தான்.

 

“என்ன இன்னும் ஃபோன் கால் வரலையா?” என்று நான் கிண்டலாக வினவ, “அட கரெக்ட்டா சொல்லிட்டியே, ஆர்ஜெண்டா ஒரு கால் பண்ணனும். பண்ணிட்டு வரேன்.” என்று நழுவினான்.

 

“அடப்பாவி மறுபடியும் எஸ்கேப் ஆகிட்டான்!” என்று கூறியபடி திரும்பினேன்.

 

அங்கு நேஹாவோ மும்முரமாக உடையை தேர்வு செய்து கொண்டிருந்தாள்.

 

“நேஹா, இப்போ இங்க நடந்தது எதுவும் உனக்கு தெரியாதுல?” என்று அவளையும் வம்பிழுத்தேன்.

 

“என்ன நடந்துச்சு நதிக்கா?” என்று அவள் அறியாத பிள்ளையாக வினவ, “நல்லா வருவ மா நீ!” என்று பெருமூச்சுடன் கூறினேன்.

 

அவளோ அதற்கு சிரிக்க, இம்முறை சற்று தீவிரமான குரலில், “நேஹா, நான் இப்போ கேட்குறதுக்கு உண்மையா பதில் சொல்வியா?” என்றேன்.

 

“அக்கா, நீங்க என்ன கேட்க போறீங்கன்னு எனக்கு தெரியும். உங்க பிரெண்டை எனக்கு எப்படி தெரியும்னு தான கேட்க போறீங்க?” என்று கூற, “பரவாலையே கேள்வி கரெக்ட் தான். அதே மாதிரி பதிலையும் கரெக்டா சொல்லிடு.” என்றேன்.

 

“நான் எதுக்கு டெல்லில இருந்து இங்க வந்து காலேஜ் சேர்ந்தேன்னு தெரியுமா? அங்க நான் படிச்சப்போ ஒரு மினிஸ்டரோட பையன் என்னை லவ் பண்ண சொல்லி  டார்ச்சர் பண்ணான். ஒரு நாள் ரொம்ப பேசுனான்னு அடிச்சிட்டேன். நான் அடிச்சது டிவில வந்து அவங்க அப்பாக்கு ரொம்ப அவமானமா இருந்துச்சுன்னு எங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்டாங்க. அப்பா போலீஸ்ங்கிறதால அவங்களை பார்த்து பயப்படாம எதிர்த்து நின்னாரு. ஆனா அவங்க அப்பாவை…” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே தேம்பினாள்.

 

“ஹே நேஹா, என்னாச்சு மா? எதுக்கு அழுகுற? சொல்ல முடியலேனா விட்ரு டா. சாரி பழசெல்லாம்  ஞாபகப்படுத்திட்டேனா?”என்று அவளை தேற்ற முயன்றேன். அவள் விம்மலிலேயே என்ன நடந்திருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தது.

 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல அக்கா. எனக்கும் இதெல்லாம் யாருகிட்டயாவது சொல்லணும்னு தோணுது. உங்ககிட்ட சொல்லலாம்ல அக்கா.” என்று அவள் பாவமாக வினவ, “அட, இதுக்கெல்லாம் எதுக்கு பெர்மிஷன் கேட்டுட்டு. என்கிட்ட சொல்றதுனால நீ ரிலாக்ஸ்டா ஃபீல் பண்ணா தாராளமா சொல்லு. ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு.” என்று அவளுக்கு தண்ணீர் பருகக் கொடுத்தேன்.

 

“தேங்க்ஸ் அக்கா!” என்று அவள் கூற, “நேஹா ஏன் இப்படி அழுகுற? நம்ம தான் மத்தவங்களை அழுக வைக்கணும். நம்ம அழக்கூடாது. சும்மா கெத்தா இருக்கணும். ஓகே வா?” என்றவாறே அவளை சிறிது சமாதானப்படுத்தினேன்.

 

அதில் சற்று தெளிந்தவள், மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள்.

 

“ம்ம்ம், கொஞ்ச நாள் அவங்க தொல்லை இல்லாம நிம்மதியா காலேஜ் போயிட்டு வந்தேன். ஒரு நாள் அப்பாக்கு ஏதோ ஆக்சிடென்ட்னு ஹாஸ்பிட்டலுக்கு போனேன். ஆனா, அங்க போனப்போ அந்த மினிஸ்டரும் அவங்க பையனும் இருந்தாங்க. எங்களை எதிர்த்தா இது தான் கதின்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. அப்போ என்கிட்ட அவன் தப்பா நடக்க முயற்சி பண்ணான். அப்போ ஆனந்த் தான் அவன்கிட்டேயிருந்து என்னை காப்பாத்தினாரு.  அப்பா ஹாஸ்பிடல இருந்த வரைக்கும் எங்களுக்கு துணையா இருந்தாரு. நாங்க கேட்டதுக்கு அத்து தான் அவரு வரமுடியாததுனால ஆனந்தை அனுப்பினதா சொன்னாங்க.”

 

‘என்னாது ஆனந்தை அப்பவே ராகுலுக்கு தெரியுமா? அப்போ ஊட்டில தெரியாத மாதிரி நடந்துகிட்டாங்களே ஏன்? சம்திங் ஃபிஷி!’ என்று என் டிடெக்டிவ் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது.

 

“அப்பாக்கு ஆக்சிடெண்ட்ல கால் எடுக்க வேண்டியதாகிடுச்சு. அதுக்கப்பறம் அப்பாவும் ரொம்ப பயப்பட ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு அம்மாவும் இல்லைங்கிறதால என்னோட வாழ்க்கை பத்தின கவலை அவருக்கு வந்துடுச்சு. அத்து வந்ததும் என்னை அவங்க கூடவே கூட்டிட்டு போக சொல்லிட்டாங்க. இப்படி தான் நான் இங்க வந்தேன்.” என்று அவள் சொல்லி முடித்தாள்.

 

“இப்போ அப்பா அங்கேயேவா இருக்காங்க?” என்று நான் வினவ, “ஆமா அக்கா, அப்பாவால அம்மா இருந்த வீட்டை விட்டு வர முடியாதுன்னு சொல்லிட்டாரு!” என்றாள் நேஹா.

 

“இப்போ அவங்களால அப்பாக்கு எந்த தொந்தரவும் இல்லையா?” என்று நானா கேட்க, “அது பத்தி போன வாரம் வரைக்கும் எதுவும் தெரியாது அக்கா. அத்து கிட்ட கேட்டாலும் அதை பத்தி எதுவும் சொல்ல மாட்டாரு. அதான் அவரை உங்க வீட்டுல பார்த்தவுடனே அவரு கிட்ட கேட்கலாம்னு  அவரை பார்க்கப் போனேன்.” என்றவளின் குரல் தேய்ந்து ஒலித்தது.

 

“ஆஹான், யாரு அந்த அவரு?” என்று நான் கேலியாக வினவ, “அதான் உங்க பிரெண்ட்!” என்று மெல்லிய குரலில் கூறினாள் நேஹா.

 

“ஏன் என் பிரெண்டுக்கு பேரு இல்லையா?” என்று நான் வேண்டுமென்றே கேட்க, “ம்ச்சு அக்கா!” என்று சிணுங்கினாள் அவள்.

 

“சரி சரி சொல்லு உன் லவ் ஸ்டோரியை.” என்றேன்.

 

“அச்சோ லவ்லாம் கிடையாது அக்கா.” என்று அவள் பதற, “நீ சொல்லு அதை நான் டிசைட் பண்ணிக்கிறேன்.” என்றேன்.

 

“நான் அவரை உங்க வீட்டுல பார்த்ததுக்கு அப்பறம் அவரு கிட்ட பேசணும்னு நினைச்சேன். ஆனா அவரை எப்படி காண்டக்ட் பண்றதுன்னு தெரியல. அப்போ தான் ஒரு நாள் அவரை பார்க்ல பார்த்தேன். ரொம்ப கோபமா யாருக்கிட்டயோ போன்ல பேசிட்டு இருந்தாரு. எனக்கு பக்கத்துல போய் பேச பயமா இருந்துச்சு. அங்க இருந்து கிளம்பலாம்ன்னு நினைச்சப்போ அவரே என்னை பார்த்துட்டு கூப்பிட்டாரு.” என்றவளின் மனமும் பின்னோக்கி சென்றது.

 

நேஹா, நீ என்ன இங்க பண்ற? 

 

 

“சும்மா தான் வந்தேன்.”

 

 

“ஓஹ், நேரமாச்சு சீக்கிரம் வீட்டுக்கு போ. எப்போ பார்த்தாலும் வெளிய சுத்திட்டு இருக்காத!

 

 

“ம்ச்சு, நான் எப்போ வெளிய சுத்தினதை நீங்க பார்த்தீங்க?

 

ப்ச், பதிலுக்கு பதில் பேசிடணுமா?”

 

 

….”

 

 

“என்ன இன்னும் கிளம்பலையா நீ?”

 

 

‘அச்சோ, இவரு கிட்ட என்ன கேட்கணும்னு நினைச்சேன். ஆனா இப்போ என்ன பேசிட்டு இருக்கேன்?

 

 

“அது… அது வந்து…”

 

 

“என்ன இழுக்குற? சீக்கிரம் சொல்லிட்டு கிளம்பு.

 

 

“டெல்லில என்ன ஆச்சு? நான் வந்ததுக்கு அப்பறம் அங்க என்ன நடந்துச்சுன்னு கேட்டா யாரும் எதுவும் சொல்ல மாட்டிங்குறாங்க. ப்ளீஸ் அங்க என்ன தான் நடந்துச்சுன்னு சொல்லுங்க.”

 

 

“ஹ்ம்ம், சரி சொல்லுறேன். ஆனா சொன்னதுக்கு அப்பறம் ஏன், எப்படின்னு கேள்வி கேட்காம உடனே கிளம்பிடனும். ஓகேவா?”

 

 

“ம்ம்ம் சரி.

 

 

“உன்னை டார்ச்சர் பண்ண அந்த பையன் என்கவுண்டர்ல இறந்துட்டான். அவங்க அப்பாவை ஊழல் வழக்குல கைது பண்ணிட்டாங்க. அந்த கேஸ் இப்போ நடந்துட்டு இருக்கு.”

 

 

“வாட் என்கவுண்டரா! எதுக்கு?

 

 

“இப்போ தான சொன்னேன் எதுக்குன்னு கேட்க கூடாதுன்னு!”

 

 

“அது… இப்போ அப்பா…”

 

 

“உங்க அப்பா சேஃபா தான் இருக்காங்க. உன்னோட இன்வெஸ்டிகேஷன் முடிஞ்சதா. நான் கிளம்பலாமா?”

 

 

“சாரி அண்ட் தேங்க்ஸ், என்னோட ரொம்ப நாள் டவுட்டை க்ளியர் பண்ணதுக்கு. நான் கிளம்புறேன்.”

 

 

“வெயிட் நானே ட்ராப் பண்றேன்!”

 

 

“இல்ல பக்கத்துல தான் என் ஹாஸ்டல். நானே போயிடுவேன்.”

 

 

“இது தான் நடந்துச்சு. அவங்க முறைச்சு பார்த்ததுல, நான் வாய மூடிட்டு அவங்க பைக்ல ஏறிட்டேன்.” என்று நேஹா கூறினாள்.

 

“ஓஹ், ஆனா உன் முகத்தை பார்த்தா இன்னும் ஏதோ நடந்துருக்கு போலயே!” என்றேன்.

 

“அது வந்து…” என்றாள் சிறிது தடுமாற்றத்துடன்.

 

“ஹாஹா சொல்ல முடியாத மாதிரி ஏதோ ரொமான்ஸ் நடந்துருக்கோ?” என்று நான் வினவ, “க்கும், ரொமான்ஸ் ஒன்னு தான் கேடு!” என்று அவள் முணுமுணுக்க, “ஓஹோ, ரொமான்ஸ் நடக்கலன்னு தான் ஃபீலிங்கா!” என்றேன் சிரித்தபடி.

 

“அச்சோ நதிக்கா அப்படி எல்லாம் இல்ல. உங்க பிரெண்ட் என்னை திட்டுனாரு. அதான் அதை சொல்ல யோசிச்சேன்.” என்றாள் பாவமாக.

 

“என்ன திட்டிட்டானா! எதுக்கு திட்டுனான்?” என்று நான் விசாரிக்க, “அது ரித்தீஷ் விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சுடுச்சு போல. அதான் ‘காலேஜ் போனா படிக்கிறதை விட்டுட்டு லவ் கேட்குதா? ஒழுங்கா படிக்கிறதை பாரு. அதை விட்டுட்டு லவ்வுன்னு சுத்துறது தெரிஞ்சுச்சு தொலைச்சுடுவேன். புரிஞ்சுச்சா?’ இப்படி திட்டிட்டாரு.” என்று ஆனந்தை போலவே பேசிக் காண்பித்தாள்.

 

‘அடப்பாவி! சைலண்ட்டா இருந்துட்டு எப்படி கலாய்க்கிறா?’ என்று ஆச்சரியப்பட்டேன்.

 

நான் வாசலை நோக்கி அமர்ந்திருக்க, நேஹா எனக்கு எதிரில் அமர்ந்திருந்தாள். அவளிடம் விளையாடிப் பார்க்க எண்ணிய நான், “ஹே ஆனந்த் நீங்க எப்போ வந்தீங்க?” என்றேன்.

 

அதைக் கேட்டதும் அவள் முகமோ விளக்கெண்ணெயை குடித்தது போல மாறியது. என்னையே பயத்துடன் பார்த்தாள். நானோ சிரிப்பை அடக்கப் படாத பாடு பட்டேன். இரண்டு நிமிடங்கள் ஆகியும் எந்த மறுமொழியும் வராததால் அவள் திரும்பிப் பார்க்க, அங்கு யாரும் இல்லை.

 

“நதிக்கா!” என்று பல்லைக் கடித்தவாறே திரும்பினாள் நேஹா.

 

“இவ்ளோ பயம் இருக்குறவ எதுக்கு அவனை மாதிரி பேசணும்?” என்று கிண்டலாக நான் வினவ, “பயமா… எனக்கா? ச்சே, அதெல்லாம் இல்ல!” என்று அவள் கெத்தாக காட்டிக் கொண்டாள்.

 

“ஓஹ், நம்பிட்டேன்!” என்று நம்பாத பாவனையுடன் நான் கூற, “ஹ்ம்ம், ஆனா உங்க பிரெண்ட் எப்போ பார்த்தாலும் என்னை திட்டிட்டு தான் இருக்காங்க. அவங்களுக்கு என்னை பார்த்தா எப்படி இருக்கும்னு தெரியல?” என்று சலித்துக் கொண்டாள்.

 

“ம்ம்ம், பின்னாடி தான் இருக்கான். வேணா கேட்டு சொல்லவா?” என்று நான் கேட்கக், “என்ன திரும்பியும் என்னை பிராங்க் பண்றிங்களா? நான் நம்ப மாட்டேன்.” என்று அவள் கூறினாள்.

 

“அது உன் இஷ்டம். சொல்ல வேண்டியதை நான் சொல்லிட்டேன்.” என்று தோள் குலுக்கலுடன் நான் கூற, “என்ன உங்க பிரெண்ட் பின்னாடி நிக்கிறாருன்னு சொன்னா நாங்க பயந்துடுவோமா? அதெல்லாம் ஃபர்ஸ்ட் டைம் மட்டும் தான் ஏமாறுவோம்!” என்று நேஹா கூற, “உன் விதி! இன்னிக்கும் அவன் கிட்ட திட்டு வாங்கணும்னு இருந்தா, நான் என்ன பண்றது?” என்றேன்.

 

“அச்சோ நதிக்கா, ரொம்ப ஓவரா ஓட்டாதிங்க.” என்று அவள் சிணுங்க, அப்போது அவள் பின்னிலிருந்து ஒலித்த, “ஹாய் நதி.” என்ற குரலில் ஒரு நொடி அதிர்ச்சியாகி என்னை பார்த்தாள்.

 

நானோ உதட்டை பிதுக்க, எச்சிலை விழுங்கியவாறு அவள் இருக்க, அவளருகில் அமர வந்தான் ஆனந்த். உடனே அடித்து பிடித்து எழுந்து என்னருகில் வந்து அமர்ந்தாள் நேஹா. அவள் செய்கையில் சிரிக்க துடித்த என்னை நானே மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டு அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

 

என் எதிரில் அமர்ந்திருந்த ஆனந்திற்கும் சிரிப்பினால் உதடு துடிக்க அவனும் கட்டுப்படுத்திக் கொண்டே அமர்ந்திருந்தான்.

 

“என்ன ஒரே சிரிப்பா இருக்கு?” என்றான் பாவனையை மாற்றியபடி.

 

‘பார்றா, அதுக்குள்ள ரியாக்ஷனை மாத்திட்டான்!’ என்று நான் வியக்க, நான் பதில் சொல்வதற்கு முன்பே நேஹா, “சும்மா படத்துல வர காமெடி சொல்லி சிரிச்சுட்டு இருந்தோம்.” என்றாள் என்னை பார்த்து கண்களால் கெஞ்சியவாறே.

 

“ஆமா ஆமா, செம காமெடி!” என்றேன் நான்.

 

“ம்ம்ம், சரி வா நானே உன்ன ட்ராப் பண்றேன்.” என்றான் ஆனந்த், நேஹாவை பார்த்து.

 

“இல்ல அத்து…” என்று அவள் இழுக்க, “உங்க ‘அத்து’ தான் ட்ராப் பண்ண சொன்னாரு. போலாமா?” என்றான் கோபமாக. ‘அத்து’ என்ற வார்த்தை அவனிடம் படாத பாடு பட்டது!

 

‘ஹாஹா, சாருக்கு ‘அத்து’ன்னு சொல்றது பிடிக்கல போல. ஆனா பாவம் பச்ச பிள்ளையை போட்டு இப்படி திட்டுறான்! ஹும்ம், திட்டுற மாதிரி ஏமாத்துறான். ஒரு நாள் இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு செய்யப் போறா!’ என்று நினைத்துக் கொண்டேன்.

 

அவன் வண்டியை கிளப்ப வெளியே சென்ற போது, “அவங்க எப்போ வந்தாங்க?” என்று என்னிடம் வினவினாள் நேஹா.

 

“நீ, ‘பயமா… எனக்கா…’ன்னு பஞ்ச் டயலாக் பேசுறப்போவே வந்துட்டான்.” என்று சிரிப்புடன் நான் கூறினேன்.

 

“அச்சோ போச்சு இன்னிக்கும் திட்டப் போறாங்க!” என்று அவள் புலம்ப, “அவன் தான் இவ்ளோ திட்டுறான்ல, நீ உங்க ‘அத்து’ கிட்ட சொல்ல வேண்டியது தான.” என்றேன் அவளின் விடையை தெரிந்து கொள்ள ஆவலாக.

 

“அது வந்து… அவங்க…“ என்று அவள் சொல்லும்போதே வெளியில் கேட்ட ஹாரனில், “அச்சோ அவங்க ஹாரன் சவுண்ட் தான். இப்போ போகலனா அதுக்கும் திட்டுவாங்க. பை நதிக்கா.” என்று வேகவேகமாக கூறி சென்றுவிட்டாள்.

 

‘அடப்பாவி இவ்ளோ பயமுறுத்தி வச்சுருக்கான். இவளும் அதை நம்புறா! ஹ்ம்ம், இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ?’

 

‘ஆனா ஏதோ தப்பா தெரியுதே. ஏற்கனவே நேஹா சொன்னதுல இருந்து ஆனந்தும் ராகுலும் கூட்டுக் களவாணிங்கனு தெரியுது. இதுங்க ரெண்டு பேரு மட்டும் தானா இல்ல வேற யாராவது இருக்காங்களான்னு தெரியலையே?’ என்று நான் யோசித்துக் கொண்டிருக்க, அங்கு வந்த சாண்டி, “ஹே என்ன டி ஸ்பேஸ்ல ராக்கெட் விடப் போறவ மாதிரி இப்படி தீவிரமா யோசிச்சுட்டு இருக்க?” என்றாள்.

 

“என்ன டி நக்கலா?”

 

“இல்ல கிண்டலு!”

 

அவளிடம் நேஹா கூறியவற்றையும் என் சந்தேகத்தையும் கூறினேன்.

 

“ஓஹ், இவ்ளோ நடந்துருக்கா? இப்போ என்ன டி பண்ணப் போற?” என்று சாண்டி வினவ, “இப்போ ஃபர்ஸ்ட் ஆனந்தை கூப்பிட்டு விசாரிக்கணும்.” என்றேன் யோசனையாக…

 

“ஆமா இவ பெரிய சி.ஐ.டி விசாரிக்க போறாங்கலாம்!” என்று அவள் கூற, நானோ அதற்கு பதில் கூறாமல் ஆனந்திற்கு அழைத்தேன்.

 

“ஹலோ, என்ன சார் உங்க டிரைவர் வேலையெல்லாம் முடிஞ்சதா?” என்று நான் வினவ, “என்னாது டிரைவரா?” என்று மறுமுனையில் அதிர்ச்சியான குரல் கேட்டது.

 

“ஆமா எப்போ பார்த்தாலும் பிக்-அப்பு ட்ராப், அப்போ டிரைவர் தான?”என்று உதட்டை சுழித்தபடி கூறினேன்.

 

“ஹ்ம்ம், அதெல்லாம் இல்ல.” என்றான் ஆனந்த் மெல்லிய குரலில்.

 

“ஓஹ், இன்னும் பிக்-அப் ஆகலையா?” என்று நமுட்டுச் சிரிப்புடன் நான் வினவ, “நதி மா மீ பாவம், இன்னைக்கு ஃபுல் ஃபார்ம்ல இருக்க போல. என்ன விட்டுடு மா!” என்று பாவமாக கூறினான் அவன்.

 

“ஹாஹா, அப்போ சரி இன்னைக்கு ஈவினிங் சார் ஃப்ரீயா?” என்று நான் கேட்க, “இன்னைக்கு ஈவினிங்கா? ஹான், இன்னிக்கு ஒரு மீட்டிங் இருக்கு.” என்றான் அவன்.

 

“ஓஹ், அப்போ அதெல்லாம் கான்செல் பண்ணிட்டு வீட்டுக்கு வாங்க.” என்றேன் சாதாரணமாக.

 

“அதெல்லாம் முடியாது, ரொம்ப முக்கியமான மீட்டிங்!” என்று அவன் கூற, “அப்போ நேஹா கிட்ட நீ ஒரு டம்மி பீஸ்னு சொல்லிடுறேன்.” என்று மிரட்டினேன்.

 

“ஐயோ, அவகிட்ட தான் கெத்தா ஒரு இமேஜை உருவாக்கி அது அப்படியே ட்ராவல் ஆகிட்டு இருக்கு. அதை கெடுத்து விட்டுடாத மா.” என்று அவன் வேண்ட, “ஆனா உன்னை போய் அந்த பொண்ணு டெரர்னு நம்புது பாரு. அதான் எனக்கு தாங்க முடியல.” என்று சிரித்தேன் நான்.

 

பதிலுக்கு சிரித்த அவனும், “அது ஐயாவோட பெர்சனாலிட்டி அப்படி!” என்று கூற, மேலும் அவனை கலாய்த்து விட்டு அலைபேசியை வைத்தேன்.

 

அப்போது அங்கு வந்த ப்ரியாவின் கைகளில் தூக்க முடியாத அளவுக்கு உடைகளும் அதற்கான அக்ஸசரிஸும் இருந்தன.

 

“ஹே என்ன டி, ஒரே நாள்ல கடையை காலி பண்ணிடலாம்னு நினைச்சியா?” என்றேன் நான்.

 

“இது இப்போதைக்கு மட்டும் தான். நெக்ஸ்ட் வீக் புது கலெக்க்ஷன் வரும் போது திரும்ப வந்து பர்சேஸ் பண்ணிக்குறேன்.” என்று அவள் கூறிக் கொண்டிருக்கும்போதே அங்கு வந்த அபி, “நதி இங்க எல்லாம் ஓரளவுக்கு செட் ஆகிடுச்சுல நான் ரெஸ்டாரன்டுக்கு போறேன்.” என்றான்.

 

“ஒரு நிமிஷம் ப்ரோ, இதுக்கு பில் போட்டுட்டு வரேன்.” என்று ப்ரியா எடுத்து வைத்ததற்கு பில் போட்டேன்.

 

“இந்தா டி.” என்று அவளிடம் உடைகளைக் கொடுத்து அதற்கான தொகையைக் கூறினேன்.

 

“அதெல்லாம் உங்க அண்ணா பே பண்ணிடுவாரு.” என்று கூறியவாறே செல்ல முற்பட்டாள்.

 

‘ஹாஹா, ப்ரியா மா உன் வேலைய ஆரம்பிச்சுட்டியா. ப்ரோ இனி உன் நிலைமை கொஞ்சம் பரிதாபமா தான் இருக்கப் போகுது!’ என்று நினைத்துக் கொண்டேன்.

 

அபியின் முகமோ ஒரு நொடி அதிர்ச்சியாகி பின் தெளிந்தது.

 

“ஹே நில்லு, நீ பாட்டுக்கு நான் பில்  பே பண்ணிடுவேன்னு கிளம்புற. என்னை பார்த்தா எப்படி தெரியுது?” என்று கேட்டான் அபி.

 

“கொஞ்சம் பாவமா தான் தெரியுது!” என்று அவள் உதட்டை பிதுக்கியபடி ப்ரியா கூற, “என்ன?” என்று அதிர்ந்தான் அபி.

 

“ஹலோ, என்ன சவுண்ட் ரைஸ் பண்றீங்க? நான் அவசரமா ஊருல இருந்து கிளம்பி வந்ததுனால தான் ட்ரெஸ் எதுவும் எடுக்கல. நான் அப்படி அவசரமா வந்ததுக்கு நீங்க தான காரணம். உங்களை பார்க்க தான வந்தேன். சோ நீங்க தான பே பண்ணனும்.” என்று இல்லாத காரணத்தை உருவாக்கி அவள் கதை புனைய, ‘அட அட அட என்ன ஒரு ரீசன்! கலக்குற ப்ரியா!’ என்று அவளை மனதிற்குள் பாராட்டினேன்.

 

இம்முறை அதிர்ச்சி சற்று அதிகமே! அவளோ அவனை தாண்டிச் சென்றே விட்டாள்.

 

”ஹலோ ப்ரோ, என்ன இன்னும் ட்ரீம்ஸ்ஸா? அதுலயிருந்து வெளிய வாங்க. வந்து பில்ல பே பண்ணிட்டு ரெஸ்டாரண்ட் கிளம்புங்க.” என்று நக்கலாக கூறினேன்.

 

“எவ்ளோ ஆச்சு?” என்றான் அபி சலிப்பாக.

 

நான் கூறிய தொகையைக் கேட்டு மயக்கம் வராத குறையாக மீண்டும் அதிர்ந்தான்.

 

“என்னாது அவ்ளோக்கா ஷாப்பிங் பண்ணா?” என்று அதிர்ச்சி விலகாமலேயே அவன் வினவ, “ப்ரோ அவங்க நெக்ஸ்ட் வீக்கும் வரேன்னு சொன்னாங்க.” என்றாள் சாண்டி.

 

“இவ பண்ற ஷாப்பிங்கு நான் பேங்க்கை தான் கொள்ளையடிக்கணும்!” என்று முணுமுணுத்தவாறே பில்லைக் கட்டினான்.

 

பொட்டிக்கில் அன்றைய நாள் இனிதே கழிந்தது. அன்றைய கணக்கு வழக்குகளை பார்த்து விட்டு பொடிக்கை பூட்டிக் கொண்டு கிளம்பினோம்.

 

நான் என் டியோவில் சாண்டியை அவளின் வீட்டில் ட்ராப் செய்தேன்.

 

“ஹே ஆனந்த் என்ன சொன்னாங்கன்னு அப்பறமே ஃபோன் பண்ணி சொல்லு டி!” என்று சாண்டி ஆர்வமாக கூற, “ம்ம்ம் சரி டி” என்று யோசனையுடனே வண்டியை கிளப்பினேன், வீட்டில் எனக்கான அடுத்த அதிர்ச்சி காத்திருப்பது தெரியாமல்!

 

ஈர்ப்பான்(ள்)…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
17
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்