Loading

எனதழகா  – 60 ❤️

அனுவும் அர்ஜுனும் ருத்ர மூர்த்தியாக நின்றனர். அவர்களையும் அந்த காகிதங்களையும் மாறி மாறி பார்க்க , கேசவர் “என்ன பேப்பர் அது? ” என்று கூறி, அதை வாங்க முயன்றார்.

ஆனால், அதற்குள் குணா அதை கிழித்தார். உள்ளே வந்த ஆதிராவை நோக்கி தீனா ” ஏதோ முக்கிய வில்லனு சொன்ன , முட்டாப்பயலா இருக்கான் ” . ஆதிராவிற்கு நடந்த நிகழ்வு தெரியாததால்  ஒன்றும் புரியாமல் விழிக்க , அவளை ஒதுக்கிவிட்டு தீனா குணாவின் முன் மண்டியிட்டு “அவன் உன்கிட்ட ஒரிஜினலை கொடுக்க உன்னை மாதிரி முட்டாள்னு நினைச்சியா ? ” என்று கூறி கையை நீட்ட, அனு இருகைகளை கட்டிக் கொண்டு அவரை விழி இடுங்க பார்த்தாள்.

நிமிர்ந்து பார்த்தவர் ஒன்றும் கூறாமல், அமர்ந்திருந்த ஆகாஷின் மண்டையில் தட்டி எழுப்பி விட்டு, வசுதேவர் மற்றும் கேசவர் முன்பு அமர்ந்தார்.

பின்பு, செருமிக் கொண்டு இளங்கோவை கண்டு அருகில் வர கூறியவுடன், ” அய்யா, நீங்க எங்களுக்கு எவ்வளவு தூரம் நல்லது செஞ்சிங்களோ, நெறைய கெட்டதும் பண்ணிக்கிட்டீங்க “

கேசவர் வாயைத் திறக்க வர, “அய்யா, நான் எல்லாத்தையும் உங்க ரெண்டு பேர்டையும் சொல்லனும். நடுவுல எதுவும் கேட்காதீங்க. நானே சொல்லிடுறேன். ” என்று தீனா கூற, வசுதேவர் கேசவரின் கையைப் பிடித்து அமைதியாக இருக்கும்படி கூறினார்.

“அய்யா என் அப்பா சிரமத்துல இருந்தார். ஆனால், நாணயம் ஆனவர். முத்தரசன் மாமா உதவி செஞ்ச அப்போ நாங்க சந்தோஷப்பட்டோம். ஆனா, மாமா எங்களை அடிமை மாதிரி நடத்துனாரு. எதுக்கெடுத்தாலும் எங்க அஞ்சு பேருக்கு நடுவுல அவரு வந்து பஞ்சாயத்து பண்ணுவாரு. அப்போ எங்க வயசு துடிப்பான வயசு. எங்களால அதைப் பார்க்க முடியல. அந்த கோபத்துல இருக்கும் போது தான் எங்க அப்பா சாவு நடந்தது. அந்த கோபத்துல தான் அவரை ஒதுக்குனோம். ஆனால், உண்மையிலேயே அவரு எங்க குடும்பத்தை நல்ல வழிக்கு கொண்டு வரத் தான் ஆசை. ஆனால், சொல்ற விதம் தப்பா போச்சு. அதை இன்னிக்கு தான் புரிஞ்சுக்கிட்டேன்”

ஆகாஷும் ஆதிராவும் மாறி மாறி இருவரையும் பார்க்க, “என்ன இந்த திடீர் மாற்றம்னு நினைக்கிறது புரியுது. பின்னாடி அதுக்கு விளக்கம் தர்றேன் ” என்று ஒரக்கண்ணால் இருவரையும் பார்த்துக் கொண்டே கூறிவிட்டு, குணாவைப் பார்த்து விட்டு, “எங்க அப்பாவை நடத்துற முறை பிடிக்காம நான் இளங்கோட்டையும், குணாடையும் தான் புலம்புவேன். குணாவும் ஆவேசமா தான் பேசுவான். மீராவுக்கு வயசு வந்தவுடனே ஈர்ப்பு வந்துச்சு. அதை குணா கிட்ட சொன்னா வீட்ல சொல்லிடுவான் அப்பிடிங்குற பயத்துல இளங்கோ கிட்ட சொன்னேன். அவன் தான் மீரா கிட்ட ஒரு லெட்டர் நானே எழுதி கொடுத்த மாதிரி கொடுத்தான் ” என்று கூறி மீராவை பார்த்தார்.

ரியா அபியின் அருகில் வந்து “பாருடா உங்க அப்பா பழைய காதலை தூசி தட்டி எழுப்புறாரு” என்று தீனாவை பார்த்துக்  கொண்டே கூற, “ஆமா, காதலிச்சா உடனே ஓகே சொல்லனும் . இல்லைனா இப்படித்தான் வயசான காலத்துல வேடிக்கை தான் பாக்கனும் ” என்று நிவான் கூறிய பிறகே, முறைக்கும் அபியை  நிமிர்ந்து பார்த்தாள்.

“ஆத்தி…… கொடூர பார்வையால இருக்கு ” என்று மனதினில் நினைத்துக் கொண்டு முப்பத்தி இரண்டு பல்லையும் காண்பிக்க, “போதும் பல்லை ஒடச்சிர போறான் “என்று கூறி அசோக் இருவருக்கும் நடுவில் நின்று கொண்டான்.

“டேய் ……. “என்று குணா கத்திய பிறகே அங்கு நடப்பவற்றை பார்க்க, மீரா “அப்போ எனக்கு யாரு மேலையும் எந்த விருப்பமும் இல்லை. இது எதுவுமே எனக்கு தெரியாது ” என்று குணாவை பார்த்துக் கொண்டே மீரா பதைபதைத்து கூறினார்.

“ஆமாம், மீராக்கு எதுவும் தெரியாது. ஒரு நாள், உங்க வீட்டுக்கு வந்தப் போ மாமாவும் யார்கிட்டையோ பேசுனதை  கேட்டேன். அப்போ , எங்க குடும்பத்துக்கு நல்லது பண்ணனும். அதனால், வெங்கடேஷனை கல்யாணம் வைக்க நினைக்கிறேனு.  வெங்கடேஷனு என்னைத்தான் கூப்பிடுவாங்க. தீனாவை இல்லை. நீங்க மாத்தி நினைச்சிருப்பீங்கனு நான் நினைக்கல. அதனால, எப்படியும் தீனாவை கல்யாணம் பண்ணி வைக்கட்டும். நம்ம ராதேயே கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சேன்.

ஆனால், நீங்க மீராவை கல்யாணம் பண்ணி வீட்டோட கூட்டி போவீங்கனு எதிர்ப்பார்க்கல . ஏன்னா, மீராவை பார்த்த வரைக்கும் எங்க வீடு சரி வராதுனு தெரிஞ்சுருச்சு. கல்யாணம் பண்ணிட்டு பிள்ளை பிறந்த அப்புறம் அவளை கொன்னுட்டால் தங்கச்சியை கல்யாணம் பண்ணி வைப்பீங்க. சொத்தும் கிடைக்கும், பிடிச்ச பொண்ணும் கிடைச்சுரும்னு நான் ஒரு கணக்கு போட்டேன்.

பாத்த இடையில பாமா வந்துருச்சு. என் பிளான் எல்லாமே கண்டு பிடிச்சுட்டான் அவன் அப்பன். அதனால, ராதேக்கு அவனும் ஆறுமுகமும் சேர்ந்து அவங்களே மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க. ” என்று குணா கூறிய நொடி, நிசப்தம் சூழ்ந்தது.

வசுதேவரும், லஷ்மியும் ராதேயை பார்க்க, ஆம் என்று தலையாட்டினர். தாயிற்கு தனது பிள்ளை பற்றி தெரியும் அல்லவா. வேகமாக மீராவின் அருகில் நின்று கைகோர்த்தார். சலனமில்லாமல் அவரைப் பார்த்து விட்டு இருக்கையில் அமர்ந்து விட்டார் .

அதை கவனியாமல் குணா “ஆனா, காலம் போக போக எனக்கு மீரா மேலே பிடிப்பு வந்துச்சு. காரணம் என் மகள் ஆருஷி. ஆனால், முன்னாடியே ஆறுமுகத்துக்கும் முத்தரசன் மாமா மேலே கோபம் இருந்ததை புரிஞ்சுக்கிட்டேன் .

ஒரு நாள்  நடு நிசியில குடிச்சுட்டு கண்டபடி திட்டிக்கிட்டே வந்தாரு. அதனால, முத்தரசன் மாமாவோ, ஆறுமுகமோ  இருக்க கூடாது. எங்க அப்பா தான் உங்களுக்கு எல்லாமா இருக்கனும். அப்புறம் நான் இருந்து ஆளனும்னு நினைச்சேன்.

இதுல அர்ஜுன் வேற பிறந்துட்டான். வசதிக்கு ஆசைப்பட்டு ஆருஷியை அர்ஜுனுக்கு கட்டிக்கொடுக்கனும்னு ஆசை. ஆனா, எனக்கு என் மக மட்டும் தான் இருக்கனும்னு ஆசை . இப்படி சொத்து மட்டும் தான் என் கண்ணுக்கு தெரிஞ்சது.

முத்தரசன் மாமாவுக்கு ஆறுமுகத்துக்கும் சண்டைனு தெரிஞ்சு சந்தோஷம் பட முடியலை. எங்க அப்பா போய்ட்டாருனு சேதி வந்துச்சு. அதுல மொத முத்தரசன் மாமாவை ஒழிச்சு கட்டனும்னு நினைச்சேன். அதே மாதிரி தீனாவும் பேச, அவரை ஒதுக்கினோம். ஆனால், திரும்ப திரும்ப வந்தாரு. அந்த நேரம் ஆறுமுகம் குடிச்சிட்டு என் அக்கா கிட்ட அவதூறா நடக்க, அதை வச்சு உள்ள தள்ளலாம்னு பாத்தா, இந்தா இந்த பெரிய மனுசன் வெளிய எடுத்துட்டாரு. அதான் தீனாவை உசுப்பேத்தினேன்.

ஆனால், ஆறுமுகம் வெளிய வந்து எங்க விஷயத்துல தலையிடல. நேரம் பாத்துட்டு இருக்கும் போது என் அக்கா மானத்தை வாங்குற மாதிரி பண்ணுச்சு. அதுக்கு தீனாவும் சப்போர்ட் பண்ணான். எல்லாம் கைமீறி போகுற அப்போ ஆருஷி பிறந்தா . தீனாவுக்கும் கல்யாணம் பண்னோம். இனிமே என் குடும்பத்துக்காக வாழனும்னு நினைச்சு தான் , எங்க வீட்டுக்கு தீ வச்சேன். பொய்யா முத்தரசு மாமானு சொன்னேன்.

தெளிவா என் மகளை மட்டும் வெளிய வர வச்சா, பின்னாடியே இவனுங்க வந்துட்டாங்க. என் தவிர எல்லாத்துக்கும் வாரிசு. அதுவே எனக்கு கடுப்பா இருந்துச்சு. இப்படி எல்லா இடத்துலையும் குளறுபடி. அப்பறம் தீனாக்கிட்ட பேசி ஆக வச்சி, அவனோடேயே அபி, நிவானை கொல்லப் பாத்தேன். அதுவும் முடியல.

அப்பறம் தீனாவை பேசியே ஆக வைச்சு அவன் செத்த மாதிரி எல்லாம் பண்ணி உங்களை நம்ப வச்சேன். அபிக்கும், நிவானுக்கும் கொடுத்த பணத்தை நான் என் தொழிலுக்கு முதலீடு பண்ணேன். இனிமே, அர்ஜுன் கேசவனை கொன்னா போதும்னு நினைக்கிற அப்போ இந்தா இந்த அனு வந்துச்சு. அப்படியே ராதேயே பாத்த மாதிரி இருந்துச்சு.

பழைய காதல் மலர, அவளை தேடி வந்தேன். இங்க அவ பிள்ளையோட சந்தோஷமா இருந்தா . அப்போ தான் அவ புருஷனைப் பாத்தேன், தீனாவுக்கு ஏற்பாடு பண்ண ஆக்சிடென்டுல அவன் செத்துட்டானு . அவ்ளோ சந்தோஷம். ஆனா, அப்போ ராதேக்கு அனு மட்டும் தான் பொண்ணுனு நினைச்சேன் .

அதனால, ராதேயை திரும்ப பிளாக்மெயில் பண்ணி அனுவை அர்ஜுன் கூட சண்டை போட்டு வர வச்சேன். அதை பக்கவா பிளான் பண்ணி பாமா மேலே போட்டுடேன். இதை எல்லாத்தையும் என் பார்ட்னர் கிட்ட சொல்லும் போதே மீரா கேட்டுட்டா. அதான், நிவான் வச்சு மருந்து கொடுக்க வச்சேன். உடல் உறுப்புகளை மட்டும் செயலிக்க வைக்கிற மாதிரி. ஆனா எப்படி எந்திரிச்ச? ஆருஷி ஏன் இப்படி நடந்து கிட்டா? ” என்று நீண்ட விளக்கவுரையை கொடுத்து விட்டு தலையைப் பிடித்துக் கொண்டார்.

அவர் மட்டும் இல்லை அருகில் அசோக்கும் புருவ முடிச்சுகளோடு தலை முடியை கோதினான்.

” இந்த பேப்பர்லாம் பொய். இவுங்களே ஃபேக்கா தயாரிச்சு இருக்காங்க” திடீரென்று குணா கத்த,

“யோவ் யாருய்யா நீ ? பைத்தியம் மாதிரி கத்துற . கம்முனு இரு “காதை குடைந்து கொண்டே ஆகாஷ் கூற, ” இடியட் ” என்று பல்லை நறநறவென கடித்தாள் ஆருஷி.

“இவ வேற “என்று மனதினில் நினைத்துக் கொண்டு, ஆதிரா தீனாவின் அருகில் வந்து ” டோஸ் கம்மியா கொடுத்தீங்களா? “

“என்ன டோஸ்? ” கேசவரும், மீராவும் பயந்து கேட்க, “பயப்புடுற மாதிரி ஒன்னுமில்லை. ட்ரூத் சீரம் கொடுத்திருக்கு ” முதன்முறையாக அனு வாயைத் திறந்தாள்.

கேசவர்” உண்மையை சொல்ல வைக்குமா? “

அர்ஜுன் “ஆமா ” , “என்னது உனக்கும் தெரியுமா? ” ஆகாஷ் பதறி கொண்டு கேட்டான்.

“ஆமா, அனுவை பார்த்த அப்போவே எனக்கு லேசா சந்தேகம் இருந்துச்சு. அதான் விசாரிக்க ஒரு டிடெக்டிவ் கிட்ட போனேன். அப்போ தான் தெரிஞ்சது அதை நடத்துறது நிவான் தானு “

“என்ன இவன் டிடெக்டிவ் ஏஜென்ஸி வச்சுருக்கானா? ” குணாவும், இளங்கோவும் ஒவ்வொரு மனநிலையில் கேட்டனர்.

இளங்கோ பூரித்து தன் மகனை கட்டியணைத்தார். ஆனால், நிவான் எந்த எதிர்வினையும் காண்பிக்கவில்லை. அது புரிந்தாலும் அமைதியாகவே இருந்தார் இளங்கோ தனக்கு இல்லாத உரிமையா என்பது போல்.

அர்ஜுன் பின்பு தொடர்ந்து “அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து விசாரிச்சு ராதே அத்தை, தீனா மாமா இப்படி எல்லாரை பத்தியும் தெரியும் போதுதான் குணா மாமா பத்தி தெரிஞ்சது. அப்புறம், அதை ராதே அத்தைகிட்ட சொல்ல, அவங்க நிவானை சி.பி.ஐ போஸ்ட்டுக்கு எக்ஸாம் எழுத உதவி செஞ்சாங்க. இப்போ அவன் அதுல செலக்க ஆகிட்டான். நானும் அனுவை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். குணா மாமா மிரட்டுனது பத்தி ஒன்னுமே சொல்லாம அவ இங்க வந்துட்டாள் அதுவும் அப்பாகிட்ட வேற மாதிரி சொல்லிட்டு. அதுதான் கோபம் எனக்கு அவமேல  “

“இப்போ அதுவும் இல்லை “காவ்யா கூற, “ஏன் “ஆகாஷ் கேட்டான்.

” பிகாஸ் தே ஆர் பிரெக்னென்ட் ” என்று சிரித்துக் கொண்டே காவ்யாவும், அஞ்சலியும் ஒரு சேரக் கூற, அனைவரும் அதிர்ந்து விட்டனர்.

” அபி என்ன பிடிடா. என் குட்டி இதயம் இதுக்கு மேல தாங்காது டா ” என்று ரியா அபி மேல் சாய, ஆகாஷ் வேகமாக ரியாவை அவன் பக்கம் இழுத்து நின்றான்” அவ்வளவு சீக்கிரம் நெஞ்ச பிடிக்காத . இன்னும் இங்க டிவிஸ்ட் வச்சிருப்பாய்ங்க “என்று கூற, “அதை பிரிச்சு தான் சொல்லனுமோ ” என்று கூறி அபிரியாவின் மறுபுறம் நின்றுக் கொண்டான்.

அசோக் ஆதிராவைப் பார்க்க, “சத்தியமா தெரியாதுடா . இவனுங்க சொல்லாத இன்னும் இரண்டு டிவிஸ்ட் இருக்கு “

பாமா ” சொல்லிடுமா  . எங்களுக்கு இதுக்கு மேல தாங்காது “

கண்ணை சுழற்றி கொண்டு ” அனுவோட இரண்டாவது அண்ணி தான் நம்ம பவி (அர்ஜுனின் தங்கை) . இப்போ  அவ ஒன்பது மாசம். அனு தான் RA2 டெக்னாலஜிஸ் ஓனர். காவ்யா RA ஸ்குயர் கன்ஸ்டரக்ஸன்ஸ் ஓனர். அஞ்சலி  ஃபேப் பிரைடல் ஸ்டோர் ஓனர். ஆல் ஆர் அறிவாளி . அவ்ளோ தான்டா தெரியும். “

தாமரை ஒடி வந்து மகளை வாஞ்சையாக தடவ, தாஸிற்கு பெருமையாக இருந்தது. ஆகாஷோ அவனின் அன்னையிடம் “மம்மி மேக்கப் செலவு கல்யாணத்துல இல்லை நமக்கு ” என்று கூற அங்கு சிரிப்பலைகள் பரவியது.

ஆனால் அனு மட்டும் குணாவை பார்க்க, அவர் நேரம் பார்த்து இடுப்பில் வைத்திருந்த கத்தியை அர்ஜுனிற்கு குறிவைத்து தாக்க முற்பட, அருகிலிருந்த துப்பாக்கியால் அவரின் காலை சுட்டாள்.

பின்பு, அவரின் முன்பு அமர்ந்து “சின்ன வயசுல இருந்து நீ அர்ஜுனை தாக்க வரப்போலாம் சொதப்புனுச்சு இல்லையா. அதுக்கு நானும் அம்மாவும் தான் காரணம். ஆனா, சென்னையிலையும் அப்படி ஆனதுக்கு காரணம் பாமா அத்தை. அவங்களுக்கு எல்லாமே தெரியும். இவ்வளவு பண்ணுறியே மீரா அத்தைக்கு நீ தேவையே இல்லை. அது மாதிரி உன்னை விட ஆருஷியை நிவான் நல்லா பாத்துப்பான் ” என்று அவள் கூறிய நொடி, குணா கதற, அனுவின் கண்சைவில் கருப்பு பூனைகள் வந்து அவரை அழைத்து சென்று விட்டனர்.

ஆருஷிக்குக் கூட வலித்தது. ஆனால், மீரா ஒன்றும் கூறாமல் அமைதியாக சென்று விட்டார். பின்னாலேயே, பொறுக்காமல் ராதேயும் லஷ்மியும் சென்றனர். சாமி அறையில் அமர்ந்து இருந்தார். கண்களில் கண்ணீர் கூட காய்ந்து இருந்தது. ராதே தோளைத் தொட , “நான்  உன் கூட இப்படி பிள்ளைகளோட இங்கேயே இருக்கேனே. இருக்கவா?”

“அக்கா “, “வேணா எதுவும் சொல்லாத ராதே. நான் ரொம்ப சோர்ந்துட்டேன்” என்று மீரா கூற, ராதே லஷ்மியையும் மீராவையும் அவரின் அறையில் இருக்க விட்டு வெளியில் வந்தவர், அனுவை முறைத்து விட்டு ஏதோ பேச வர, “இந்தா அத்தை, போதும் உனக்கு அனுவை பத்தியும் தெரியும், அர்ஜுன் பத்தியும், இப்போ எங்களுக்கு சாப்பாடை போடு . ஹாஸ்பிட்டல் போயிட்டு எல்லாம் பாத்துப்போம். ” என்று ஆகாஷ் கூற, அனைவரும் சிரித்துக் கொண்டே சாப்பிட அமர்ந்தனர்.

அனைவரும் ஒன்று கூடிய நிலையில், அசோக் மற்றும் காவ்யாவின் காதலையும் சேர்த்து கூறி, நிவான் ஆருஷி, அஞ்சலி ஆகாஷின் திருமணம், ஆதிரா ரோஹித்தின் திருமணம் வரிசையாக வைத்துக் கொள்ளலாம் என்று அனைவரும் கலந்து பேச, அபி செருமிக் கொண்டு “உங்க கல்யாணம்லாம் மெதுவா வைங்க. எனக்கு ரியாவை கல்யாணம் பண்ணி வைங்க. நான் டிரிட்மென்டுக்கு அவளை அமெரிக்காவுக்கு அப்பாய்ண்மெண்டுக்கு வாங்கிருக்கேன். அதுவும் என் வைஃப்னு சொல்லி “என்று கூற, தாஸ் மற்றும் தாமரைக்கு கண்கள் பனித்தது.

“நயினா ரொம்ப ஃபீல் பண்ணாத . ரெடி பண்ணது எல்லாம் நானு . புருஷனு சைன் போட்டது மட்டும் அவன் ” என்று சிக்கன் காலை கடித்து விட்டு, முகத்தை உர்ரென்று வைத்து கூற, ரியாவின் மீது அவனுக்கு உள்ள தனி மற்றும் உண்மையான அன்பு அனைவருக்கும் புரிந்ததை விட அபிக்கு நன்றாகவே புரிந்தது.

ஆருஷி தான் சாப்பாடை அளந்து கொண்டு ஒரு மாதிரியாக அமர்ந்திருந்தாள்.நிவான் அருகில் அமர்ந்து கையை பிடிக்க ஆருஷியின் கண்கள் பனித்தது. அவன் ஆறுதலாக இன்னும் கையை இறுக பற்ற , ராதே தோளில் தட்டி , அவளுக்கு பிடிக்கும்  உணவு பதார்தங்களை வைத்து கண் அசைத்து சென்று விட்டார்.

மனம் பாரம் கூடினாலும் மனதிற்கு இதமாக ஆறுதலாக ஒரு வார்த்தை அல்ல ஒரு பார்வையே மயலிறகால் வருடியது போல் இருக்கும். அது போல் ஆருஷிக்கும் தோன்ற, வயிறு பசியை உணர்த்த அமைதியாக உண்ண தொடங்கினாள்.

குண வெங்கடேஷனிற்கு தக்க தண்டனையை கொடுத்து விட்டு வீடு திரும்பினர் ஈஸ்வரி, லெனின் மற்றும் அனுவின் தமையன்கள் . அதை உண்பதற்காக வெளியில் வந்த மீரா கவனித்து அவர்களை காண, ஈஸ்வரி ஒன்றும் கூறாமல் அவரின் தோளைத் தட்டிக் கொடுக்க, சிரித்துக் கொண்டே ராதேயின் கணவர் படத்திற்கு முன்பு அமர்ந்து அவரின் திருமாங்கலய்த்தை சமர்பித்தார்.

அவரின் செயல் அனைவரின் மனதிற்கும் பாரம் கூடியது. சத்தமில்லாமல் உண்ண , மீரா அமர்ந்தவுடன் தனது மகளை காண, நிவானின் ஆதரவு புரிந்து சிரித்து தனது சம்மத்ததை தெரிவித்தார்.

அதைப் பார்த்த ஆதிரா , “ஓகே ஓகே, நிவான் ஆருஷிக்கு கிரின் சிக்னல் விழுந்துருச்சு . ஒருத்தன் ஹஸ்பண்ட்டுனே சொல்லிட்டான். ஒரு கப்புள் கமுக்கமா லவ் பண்ணிருக்காங்க. இன்னொரு கப்புள் நீ லாயக்கு இல்லை நாங்களே கல்யாணம் பண்ணி வைக்கிறோம்னு சொல்லிட்டாங்க. அதனால, ரெண்டு தாத்தாக்கும் சொல்லிடுறேன். என் கல்யாணம் முடிஞ்சவுடனே இவங்களை சேர்த்து வச்சுருவோம். இல்லைனா இந்த அஜ்ஜு ….. ” என்று கூறி அவனை தேட, பின் ஆகாஷை சுரண்டி , “டேய் பாண்டா பாருடா இவனையும் காணாம் அவளையும் காணோம் ” என்று சொன்ன பின்பே அனைவரும் தேடினர்.

ஆனால், தேடிக் கொண்டிருப்பவர்களோ நிலவை ஒளி ஆக்கி, மொட்டை மாடியை குடிலாக்கி, அந்த இருளில் அனுவின் வயிற்றில் கைவைத்து தனது குழந்தையை தாங்கி கொண்டு, இவ்வளவு நாள் பிரிந்திருந்த ஏக்கத்தையும், தன்னை தகப்பன் ஆக்கியதற்கும் சேர்த்து அவளின் இதழை சுவைத்து கொண்டிருந்தான்.

அதனைப் பார்த்து நட்சத்திரமும் , நிலவும் மேகத்திற்குள் மறைந்தது. பின்பு, அவளின் மடியில் சாய்ந்து இவன் கண் அசர, “டொய்ங் ” என்ற அலைபேசி ஒலித்தது.

“மேம் , சார் ஆபிஸில் ஏமாத்துன விக்ரமையும், பரத்தையும் பிடிச்சுட்டோம் . சாருக்கு போட்டியா இருந்த அந்த கம்பெனி டீடெயில்ஸும் அனுப்பிச்சிருக்கேன். அப்புறம் மீட்டிங்கில் சாரை எதிர்த்து பேசுனவனையும் தட்டிடோம் மேம்” என்ற குறுஞ்செய்தி வந்திருந்தது.

அதனைப் பார்த்து சிரித்து விட்டு, தனது அழகனின் தலை கோத மனதினில் நினைத்தாள்

“உனக்காக பிறந்தேனே எனதழகா ❤️”

கீர்த்தி ☘️

கதை முடிந்து விட்டு. எப்படி இருந்தது என்று கமெண்டில் கூறுங்கள்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
1
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்