Loading

பூகம்பம் – 38

இந்த கழுதையை அவ இஷ்டத்துக்கு விட்டது தான் தப்பு.. பொண்ணுனு இவ அப்பா செல்லம் குடுத்ததுக்கு இவளால என்ன பண்ண முடியுமோ அதைய பண்ணிட்டா.. மனுசன் நொந்து போய் இருக்காரு” என்று மூக்கை சிந்திய அன்னையை கடுப்புடன் பார்த்தனர் அக்காவும் தங்கையும்.

சிவாவும் “அத்தை நீங்க இப்படி புலம்பற அளவுக்கு ஆதிரா என்ன பண்ணிட்டா.? காதலிச்சது ஒரு குத்தமா.? உங்க சம்மதத்தை எதிர்பார்த்து தானே இவ நிற்கறா.. இதுல என்ன அத்தை தப்பு இருக்கு.?

இந்த காலத்து புள்ளைக பெத்தவ சம்மதத்தை எதிர்பார்த்து நிற்குதா என்ன.? அவளுக்கு புடிச்சிருக்கு.. வாழ போறதும் அவதான்.. அவ ஒன்னும் கெட்டவனை கைகாட்டி அவன்தான் வேணும்னு சொல்லல.. ரூபனுக்கு என்ன குறை அத்தை..

அவனை என் கூட பிறந்தவனா தான் இப்ப வரைக்கும் நினைச்சுட்டு இருக்கேன்.. இனியும் அப்படித்தான் நினைப்பேன்.. மாமா தான் புரியாம பேசறாங்கனு பார்த்தா நீங்களும் அவ என்னமோ கொலைகுத்தம் பண்ணிட்டாங்கற அளவுக்கு பேசறீங்க.?” என்றான்.

“நீயும் இவளுக்கு கூட்டா.? நீ என்ன சொன்னாலும் சரி அவ இஷ்டத்துக்கு நாங்க சம்மதிக்க மாட்டோம்.. நாங்க வேணுமா.? இல்ல அவன் வேணுமானு அவளே முடிவு பண்ணட்டும்..” என்றவள் மகளை முறைத்து விட்டு அகன்றார்.

நொந்து போய் சிவாவை பார்த்த ஆதிராவும் “எனக்கு என் அபி தான் வேணும்.. அவனை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கவும் மாட்டேன்.. இவங்களுக்கு மகளாவே கடைசி வரைக்கும் இருக்கவும் நான் தயார் மாமா..” என்றாள் கண்கள் பனித்திட.

“பேசலாம்டா.. நீ பாட்டுக்கு ஏதாவது பண்ணிராத.. அவங்க கோவமும் நியாயம் தான்.. சோ இந்த விசயத்துல விட்டு குடுத்து தான் போகணும்.. பொறுமையா வெய்ட் பண்ணு சம்மதம் கிடைக்கும்..” என்ற சிவா அப்போதே கிளம்பியும் விட்டான் வேலை இருந்ததால்.!!

ஆதிராவை கண்டாலே அவளின் அன்னையும் தந்தையும் முகத்தை திருப்பி கொள்ள, “நான் என்னமோ கொலைக்குத்தம் பண்ணிட்ட அளவுக்கு இவங்க பில்டப் இருக்குடி.. இப்படியே பண்ணிட்டு இருக்கட்டும் நான் ரூபன் கிட்ட போகாம வேற எங்கையாவது போய் தொலைஞ்சு போறேன்..” என்று தங்கையிடம் கடுகடுத்தாள்.

“சிஸ்டர் உண்மையாவே இந்த முடிவுக்கு வந்துட்டீயா.?” என்று கேட்டவளின் எண்ணம் அறியாமல் “ஆமா துரு.. அப்ப தான் இவங்களுக்கு என் அருமை புரியும்” என்று சினந்திட, “நீ காணாம போய்ட்டா உன் டிரெஸ், ஸ்கூட்டி, லேப்டப் எல்லாம் எனக்கு தானே.?” என்ற தங்கையை கடுப்பாக பார்த்த ஆதிரா இரக்கம் காட்டாமல் மொத்தி எடுத்தாள்.

“ஹேய் கூல் கூல்டி.. ரொம்ப சூடா இருக்கீயே ஜில் பண்ணலாம்னு காமெடி பண்ணுனா இப்படி அடிக்கற.?”

“கடுப்பாகற மாதிரி காமெடி பண்ணுனா அடிக்காம பல்லை காட்டவா முடியும்.?”

“நான் கேட்டதுல என்ன தப்பு இருக்கு.? நீ காணாம போனாலும் சரி ஓடி போனாலும் சரி உன் திங்க்ஸ் எல்லாம் எனக்கு தானே.?”

“செருப்பால அடிப்பேன்..”

“அடிச்சுக்கோ.. நீ போய் சேர்ந்தா கூட உன் திங்க்ஸ் எனக்கு தான் வரும்டி வெண்ணை.. ஒரு வீட்டுல ரெண்டு பொண்ணுக இருந்தா பெரிசு யூஸ் பண்ணிட்டு வேணாம்னு போட்டது எல்லாம் சிறுசுக்கு தான் வரும்.. அந்த அர்த்தத்துல தான் நானும் சொன்னேன்..”

“அடியேய்.. போய் தொலை.. இருக்கற நிலைமைக்கு உன் தொல்லை வேற எலித்தொல்லையா இருக்கு” என்று சீறியவள் உம்மென்று இருந்தாள்.

இங்கு நடந்த விசயம் காவ்யாவையும் எட்ட, அவள் வேறு “டி திரா எனக்கு வேற பயமா இருக்குடி.. என் விசயம் தெரிஞ்சாலும் இப்படித்தான் பண்ணுவாங்களா.?” என்று கேட்டு இவளின் கோவத்தை அதிகப்படுத்த தான் செய்தாள்.

‘அய்யோ ஆண்டவா.. என் பிரச்சனையை தீர்க்க ஒரு வழியை சொல்லாம இதுக இப்பதான் அதுக பிரச்சனையை சொல்லி என்னைய கடுப்பாக்கிட்டு இருக்குதுக.. உலகத்துல என்ன என்னமோ நடக்குது.. இதுகளுக்கு ஒரு கேடு வர மாட்டிங்குதே..’ ஒன்று புலம்பினாள்.

நிவேதா விடாமல் நச்சரித்ததில் ஆதிராவும் ரூபனும் காதலிக்கும் விசயத்தை சிவா கூறி இருக்க, “என்னங்க சொல்றீங்க.?” என்று முதலில் அதிர்ந்து பின்பு “ரூபனை போய் நல்லவன் நல்லவனு சொல்லிட்டு இருந்தீங்க.. வீட்டுக்குள்ள விட்டதற்கு என்ன காரியம் பண்ணிருக்கானு பாருங்க.. ச்சை நன்றி கெட்டவன்” என்று திட்டினாள் நிவேதா.

சிவாவின் அன்னையும் “நான் தான் அப்பவே சொன்னேன்.. நீயும் உன் அப்பனும் கேட்டீங்களா.? இந்த சிறுக்கியும் சேர்ந்து ஆடிருக்கா பாரு.. இதுதான் அவ அம்மா அவளை வளர்த்த லட்சணமா.? நான் அப்பவே நினைச்சேன் இந்த கழுதை அடங்காது..

எவனையாவது இழுத்துட்டு போகும்னு அது சரியா இருக்கு.. பொட்டப்புள்ளையை வீட்டோட வெக்கறதை விட்டுப்புட்டு வேலைக்கு அனுப்புனா இப்படி பண்ணத்தான் செய்யும்.. காலாங்காலத்துல கல்யாணம் பண்ணிருந்தா இந்த ஏழரையை அவ கூட்டிருப்பாளா என்ன.?

பெரிசே இப்படினா அதுக்கு கீழ ஒன்னு இருக்கு.. அது அவ அபபனையும் ஆத்தாளையும் என்ன பண்ண காத்திருக்கோ.? நம்ம சொன்னா கேட்கவா போறாங்க.?” என்று அங்கலாய்த்து கொண்டார்.

“அவ ரஞ்சித்தை தானே காதலிக்கறானு அவன் சொன்னான்.. இப்ப என்ன இப்படி சொல்றீங்க.?” என்று மாமியார் இருப்பதை மறந்து நிவேதா கேட்டு விட, “எது.? அவனையுமா.? கருமம் கருமம்.. இது என்ன கேடுகெட்ட கூத்து.? உலகத்துல இப்படி யாராவது இருப்பாங்களா.?” என்று காறி துப்பாத குறையாக சீறினார்.

மனைவியை கடுமையாக முறைத்து “அப்படினு அவன் தான் சொன்னான்.. ஆதிரா காதலிச்சது ரூபனை மட்டும் தான்.. அவன் சொன்னானு ஆதிராகிட்ட அது உண்மையா.? இல்லையானு ஒரு வார்த்தை கேட்காம அது உண்மைனு நீயே முடிவு பண்ணிக்கிட்டா அவ என்ன பண்ணுவா.?

நீயே ரஞ்சித்துக்கு போன் பண்ணி ஆதிரா அவனை காதலிக்கறாளா.? இல்லையானு கேளு.. அப்பறம் உனக்கே புரியும்.. எதுவும் தெரியாம பேசறது.?” என்று சிடுசிடுத்து வார்த்தையை கடித்து துப்பினான்.

“இல்லங்க அவளும் அன்னைக்கு அமைதியா தானே இருந்தா.. சரி ரஞ்சித்துக்கு என்ன குறை.? ரூபனை விட அவன் பெஸ்ட் தான்.. அவ தான் வேணாம்னு சொன்னா நீங்க எடுத்து சொல்றதை விட்டுட்டு அவளுக்கு சாதகமா பேசிட்டு இருக்கீங்க.?” என்று அப்போதும் தான் நினைத்தது நடந்து விட வேண்டும் என்ற எண்ணத்திலே கூறினாள் நிவேதா.

அவளின் குணமறிந்து “இது அவ வாழ்க்கை.. நீயோ நானோ முடிவு பண்ண கூடாது.. ஆதிராவோட முடிவு எதோ அது தான் முக்கியம்..” என்றதோடு பேச்சை முடித்து விட்டான்.

ஆனால் மாமியாரும் மருமகளும் இவ்விசயத்தையே நுனியில் இருந்து அடி ஆழம் வரைக்கும் தோண்டி துருவி ரூபனையும் ஆதிராவையும் வறுத்தெடுத்து அதன் பிறகே ஓய்ந்தனர்.

சிவாவின் அன்னையோ ஊருக்குள் இவ்விடயத்தை பரவவும் விட்டு விட்டார். சிவாவின் தந்தை வேலையாக வெளியூர் சென்று விட்டு அப்போது தான் ஊருக்கே வர, விசயத்தை அறிந்ததும் மனைவியை தான் சாடினார்.

“அவ என்னமோ பண்ணிட்டு போறா.. அதுல உனக்கு என்ன பிரச்சனை.? என்னமோ ரெண்டு பேரும் கொலைக்குத்தம் பண்ணுன அளவுக்கு ஊருக்குள்ள பேசிட்டு இருக்க.? எனக்குனு ஒரு மதிப்பு மரியாதை இருக்கு.. அதைய நீயே கெடுத்து விட்ட பேசிட்டு இருக்க மாட்டேன்.. சாவடிச்சுருவேன்..

போ போய் வேலையை பாரு.. அதைய விட்டுட்டு இது தான் சாக்குனு என் தங்கச்சியை திட்டிட்டு இருக்கறது.? ஆதிரா பண்ணுனதுக்கு அவ என்ன பண்ணுவா.? என்னமோ அவதான் இப்படி பண்ணு சாமினு சொல்லி குடுத்த மாதிரி பேசிட்டு இருக்க.?” என்று எகிறினார்.

“ம்ம்க்க்க்கும் ரொம்பத்தான் தங்கச்சிக்கு சப்போர்ட்டு பண்றது.?” என்று முகவாயை இடித்து கொண்டு நகர்ந்தார்.

விடாமல் தேம்பி தேம்பி ஆதிரா அழுது கொண்டிருக்க, “ஏய் பைத்தியமே அழுகறதை நிறுத்து” என்று அவளின் அழுகையை நிறுத்த வழியில்லாமல் முழித்து நின்றிருந்தாள் துருவினி.

“அடி பைத்தியமே அழுகறதை நிறுத்தி தொலை.. இல்லனா எதுக்கு அழுகறேனு சொல்லிட்டு அழுகு.. எனக்கு வேற பயந்து பயந்து வருதுடி” என்ற துருவினியின் பேச்சை காதில் வாங்காமல் தேம்பினாள் ஆதிரா

“அப்பா ஏதாவது சொன்னாங்களா.?”

“ஹூம்”

“அம்மா திட்டுச்சா.?”

“அவங்க எப்ப திட்டாம இருந்துருக்காங்க.?”

“அதுவும் சரிதான்.. அப்பறம் என்ன தான்டி உன் பிரச்சனை.?”

“……”

“ரூபன் மாமா ஏதாவது சொல்லிட்டாங்களா.?”

“அவன் தங்கம்டி.. என்கிட்ட கொஞ்சம் சத்தாம கூட பேச மாட்டான்..”

“அப்பறம் என்ன கேடு வந்துச்சுனு ஒப்பாரி வெச்சுட்டு இருக்க.?” என்று கடுப்பாக துருவினி வினவ, ஆதிராவோ பதிலின்றி கையை மட்டும் காட்டினாள்.

அவள் கை காட்டிய திசையை கண்ட துருவினி ஏகத்துக்கும் சினமாகி தான் போனாள். தொலைக்காட்சியில் இயற்கை படம் ஓடி கொண்டிருந்தது.

“படத்தை பார்த்துட்டு ஒப்பாரி வெக்க நீ‌‌ என்ன‌ சின்ன‌‌ குழந்தையாடி.?”

“ஏன் சின்ன குழந்தை மட்டும் தான் அழுகணுமா என்ன.? இந்த படத்தை பார்த்தா எல்லாரும் அழுக தான் செய்வாங்க..”

“கிழிப்பாங்க.. நானே என்னமோ ஏதோனு பயந்துட்டேன் மெண்டலு..”

“ப்ச் இந்த படத்துல கேப்டன் வராமலே இருநதுருக்கலாம்.. மருது பாவம்ல.?” என்றவளை மேலும் கீழுமாக பார்த்து “நீ இருக்கற நிலைமைக்கு இது ஃபீலிங் தேவையா.?” என்று கேட்டாள்.

“ஏன் எனக்கு என்ன.? நான் நல்லா தானே இருக்கேன்..”

“ஆமா ஆமா நீ நல்லாதான் இருப்ப.. உன்னால எங்களுக்கு ஏதாவதுமாக இருந்தா சரி தான் போல..”

“ரொம்ப பேசற நீ.?”

“ரொம்ப பண்ற நீ..”

“நான் என்னடி பண்ணுன.?”

“உன்னால அம்மா ஒரு பக்கம் அழுதுட்டு இருக்கு.. அப்பா ஒரு பக்கம் புலம்பிட்டு இருக்கு.. நடுவுல நான் மாட்டிட்டு அல்லல்பட்டுட்டு இருக்கேன்.. இதுல நீ படத்தை பார்த்து அழுதுட்டு இருக்க.?

உன்னைய எந்த நேரத்துல தான் அம்மா பெத்தாங்களோ.? டிசைன் டிசைனா பிரச்சனை வந்தாலும் நீ மட்டும் ஹாயா எனக்கு என்ன வந்துச்சு நான் சந்தோசமா இருப்பேனு இருந்துட்டு இருக்க..” என்று சீறினாள்.

“ஆமா ஹாயா தான்டி இருப்பேன்.. அப்பறம் என்ன அம்மா மாதிரி எப்ப பார்த்தாலும் அழுது வடிஞ்சுட்டா இருக்க முடியும்.? இப்ப நான் என்ன பண்ணிட்டேனு இவங்க இப்படி பண்ணிட்டு இருக்காங்க.? காதலிச்சது என்ன கொலைக்குத்தமா.?”

“இவங்களுக்கு கொலைக்குத்தம் தான்.. அது தெரிஞ்சும் நீயே இப்படி கேட்கற.?”

“இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படியே இருப்பாங்களாமா.?”

“என்னைய கேட்டா..?? நானே எனக்கும் ஆப்பு வெச்சுருவாங்களானு பயந்துட்டு இருக்கேன்..”

“பயப்படாத தங்கச்சி.. எப்படியும் என்னைய துரத்தி விட்டுட்டு தான் உனக்கு ஆப்பு வெப்பாங்க.. அது வரைக்கும் ஜாலியா இரு” என்றவளை ஈரடி விட்டு பின்பு முறைத்து பார்த்தாள்.

“துரு செல்லம் ரூபன் கிட்ட பேசி அவன் எப்படி இருக்கானு கேட்டு சொல்லுடி.”

“நீயே பேசிக்கோ..”

“நான் பேசுனா அவன் கண்டிப்பா பேச மாட்டான்டி.. ப்ளீஸ்டி ப்ளீஸ் தங்கம்..”

“ப்ச் உன்கூட நான் பிறந்துட்டு நான் படறபாடு இருக்கே..? காலேஜ் போறப்ப தான் பேசுவேன்.. இங்கேயே எல்லாம் பேச மாட்டேன்..”

“எப்படியோ பேசிட்டு சொல்லு அது போதும் எனக்கு..” என்ற ஆதிராவுக்கு ரூபனின் நினைவடுக்குகள் தான்..

அசோக் வந்திருப்பதை அறிந்த காவ்யா அவனின் முன்பு நின்றாள். ‘என்ன.?’ என்பதை போல் பார்த்தவனை இவளும் எதிர்ப்பார்வை பார்த்து பின்பு “எனக்கு என்ன பதில் சொல்ல போற.?” என்று கேட்டாள்.

“உனக்கு நான் என்ன பதில் சொல்லணும்.?”

“ப்ச் விளையாடாத.. விடாம உன் பின்னாடி சுத்திட்டு இருக்கேன்.. உனக்கு என்னதான்டா பிரச்சனை.?”

“டா போட்டு பேசுனா பல்லை தட்டிருவேன்..”

“ப்ச் பேச்சை மாத்தாம நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..”

“நீ எத்தனை தடவை கேட்டாலும் என் பதில் முடியாதுனு மட்டும் தான்.. இந்த பேச்சை விடு ஆதிரா எப்படி இருக்காங்க.? வீட்டுல என்னதான் சொல்றாங்க.?” என்று வினவினான்.

“அவ அப்பா தான் முடியவே முடியாதுனு முரண்டு புடிச்சுட்டு இருக்காங்க.. இதுல ஆபிஸுக்கு வேற வர சொல்லிருக்காங்க.. அவ என்ன பண்ண போறானு தெரில.. ரூபன் அண்ணா எப்படி இருக்காங்க.?”

“இருக்கான்.. அவனும் அம்மாகிட்ட பேச சமயம் பார்த்துட்டு இருக்கான்.. சிவா ப்ரோவும் அவன்கிட்ட சரியா பேசலனு வருத்தப்பட்டு புலம்பறான்..”

“சிவா அண்ணா இவங்க காதலுக்கு முழுசப்போர்ட்டையும் தராங்க.. என்ன ரெண்டு பேரு மேலயும் கொஞ்சம் கோவமா இருக்காங்க அவ்ளோதான்..”

“என்ன சொல்ற.?”

“உண்மையா தான்.. ரூபன் அண்ணாக்காக ஆதிரா அப்பாகிட்ட சிவா அண்ணா வீட்டுல பேசிருக்காங்க.. அதுல திராவோட அப்பாக்கு சிவா அண்ணா மேல கோவம்.. திரா அம்மாவும் சிவா அண்ணனை திட்டுனாங்கனு துரு சொன்னா..” என்று அங்கு நடந்ததை கூறினாள்.

“எனக்கு என்ன சொல்றதுனு தெரில..”

“அட எனக்கு என்ன பண்றதுனே தெரில..”

“நீ என்ன பண்ண போற.?”

“அவ என் ப்ரண்டுடா ப்ரண்டு.. அவளுக்கு ஒன்னுனா அது எனக்கும் தானே.?” என்ற காவ்யாவை கேவலமாக பார்த்த அசோக் “ரொம்ப நடிக்காத.. பார்க்க அசிங்கமா இருக்கு” என்றான்.

“கண்டுபிடிச்சுட்டீயா.? சரி விடு அவளே ஏதாவது பண்ணிக்குவா.. நான் கிளம்பிருவேன்.. அடுத்த தடவை பார்க்கறப்பவாவது எனக்கு நல்ல பதிலை சொல்லு மேன்.. எனக்கும் குடும்பத்தலைவியா மாறலாம்னு ஆசை இருக்குமா.? இருக்காதா.?”

“அவ்ளோ ஆசை இருந்தா உன் அப்பாகிட்ட சொல்லி மாப்பிள்ளை பார்க்க சொல்லு.. என்னைய ஏன் உயிரை வாங்கற.?”

“நான் நல்லா வேண்டிக்கறேன்..”

“என்ன.? சம்பந்தமில்லாம பேசற.?”

“கடவுள்கிட்ட நல்லா வேண்டிக்கறேன் உனக்கு நல்ல புத்தியை குடுனு..” என்று சீரியஸான முகபாவனைகளுடன் உரைத்தவளை முறைத்தவன் “இப்ப மட்டும் மூளை இல்லாமயா சுத்திட்டு இருக்கேன்.?” என்று சீறினான்.

“அதைய வேற ஆமானு நான் தனியா சொல்லணுமா என்ன.?”

“ஏய்ய்ய்ய்..”

“பின்ன என்னடா.? வேறவனை கல்யாணம் பண்றதா இருந்தா நான் ஏன் உன் பின்னாடி சுத்திட்டு இருக்க போறேன்.? நீ பாட்டுக்கு ஈசியா சொல்லிட்டு இருக்க.?”

“……”

“அடுத்த தடவை பார்க்கறப்ப எனக்கு நல்லா பதிலா சொல்ற.. இல்லனா…?”

“இல்லனா என்ன பண்ணுவ.?”

“கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணிக்குவேன்..” என்று குறும்புடன் இவள் கூறிட, ‘ஹான்..?’ என்று ஆடவன் முழித்து நிற்க, அவனின் கன்னத்தை கிள்ளி இதழில் ஒட்டி கண்சிமிட்டியவள் சிட்டாக பறந்திருந்தாள்.

செல்லும் பெண்ணவளையே பார்த்து நின்றவனின் விழிகளில் இருந்தது காதலா.? இல்லை நிறைவேறாத ஆசையோ இது.? என்ற ஏக்கமா.? என்பது யாரும் அறிந்து கொள்ள இயலாத ஒன்றே.!!!

துருவினியிடம் பேச ரஞ்சித் முயல, அவளோ அவன் அனுப்பிய செய்திகளை பார்த்தாலும் பதிலுரைக்காமல் இவனை தவிப்பாய் தவிக்க விட்டிருந்தாள். இதற்கு மேல் முடியாமல் அவளை தேடி கல்லூரிக்கே வந்து விட்டான் இவன்.!!

தூரத்தில் அவனை பார்த்ததும் திடுக்கிட்ட மனதை களவாளமிட்டு அடக்கிய துரு அவனை பாராதது போல் கடந்து செல்ல, “துருவினி ஒரு நிமிசம்..” என்று குரல் குடுத்து பெண்ணவளின் நடையை நிறுத்தினான்.

சாதாரணமாக அவளும் “என்ன.?” என்று கேட்க, “ஏன் என்னைய அவாய்ட் பண்ணிட்டு இருக்க.? நான் என்ன பண்ணுனேன்.?” என்று மனதை அரித்திருந்த வினாவை அவளின் முன்பு கேள்வியாக வைத்தான்.

“நான் எதுக்கு உங்ககிட்ட பேசணும்.?”

“துரு..”

“ப்ச் இனி அவசியமில்லனு சொல்றேன்..”

“ஹேய் என்னதான்மா ஆச்சு.?”

“எனக்கு எதுவும் ஆகல.. ஆதிரா பண்ணுனதையே நானும் பண்ண விரும்பல.. இனி என்னைய தொந்தரவு பண்ணாதீங்க..”

“துரு என்னடா.? ஏன் இப்படி எல்லாம் பேசற.? மாமா அத்தைகிட்ட நான் பேசறேன்டா..”

“வேணாம்.. ஆதி இப்படி பண்ணுனதையே அவங்களால ஏத்துக்க முடியல.. நானும் அதையவே பண்ணுனா அது என் அம்மாவை உயிரோட சாகடிக்கறதுக்கு சமம்..”

“ஏய்ய்ய்ய் விளையாடாத துரு.. நான்தான் பேசறேனு சொல்றேன்ல.?” என்று கொஞ்சம் கோவமாக கூறினாலும் அதில் கெஞ்சலே நிறைந்திருக்க, அதில் துளிர்க்க முயன்ற விழி நீரை அடக்கி “ஒரு தடவை சொன்னா உங்களுக்கு புரியாதா.?” என்று சினந்தாள்.

“நீ கோவப்பட்டு கத்துனா போய்ருவேனு நினைக்காத.. புரிஞ்சுக்கடா.. ஆதிரா மாதிரி எல்லாம் எதுவும் நடக்காது..”

“ஹூம் என்னைய விட்டுருங்க..”

“ப்ளீஸ்மா..”

“ப்ளீஸ் போய்ருங்க..”

“ப்ளீஸ்டா நான் சொல்ல வர்றதை கேளு..”

“ஹூம் நீங்க போங்க..”

“துரு..”

“ப்ளீஸ் நீங்க முதல்ல போங்க” என்று கை எடுத்து கும்பிட்டு அழுகையுடன் கூறியதில் பதறியவன் அதற்கு மேல் அவளை வற்புறுத்த விரும்பாமல் அகன்றான் அவ்விடத்தை விட்டு.!!!

அவனை காயப்படுத்தியதில் இவளும் ஊமையாய் அழுது நிற்கிறாள் சிலையாக.!!!

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்