
பூகம்பம் – 36
“அப்பறம் எப்படி ஆதிராவை லவ் பண்ண வெச்சீங்க.?” என்று அதிமுக்கியமான வினாவை கேட்டதில் பக்கென்று சிரித்து விட்ட ரூபனோ “நான் எங்க லவ் பண்ண வெச்சேன்.? மேடம் தான் விடாம பேசியே என்னைய லவ் பண்ண வெச்சுட்டாங்க..” என்றவன் அவர்களின் காதல் கதையையும் கூறினான்.
“அடப்பாவி.. என்கிட்ட சொன்ன அத்தனையும் பொய் ப்ரோ..” என்று இப்போது தான் அவன் அதையவே கண்டுபிடிக்க, “அதைய தான்டா நானும் அசோக்கும் ஆரம்பத்துல இருந்தே சொல்லிட்டு இருக்கோம்.. அவ எப்ப எப்படி பேசுவானு உனக்கு தெரியல.. நீ இன்னும் வளரணும் தம்பி” என்றான் கிண்டலுடன்.
“ப்ச் இந்தளவு வளர்ந்ததே போதும் ப்ரோ.. இப்பவே என் ஆளு என் தோள்பட்டை அளவு கூட இல்ல..” என்று துருவினியை நினைத்து கூறிட, “உன் ஆளா.? அது யாருடா.?” என்று ரூபனும் வினவ, “சொல்ல மாட்டனே.. ஆனா நீங்க கண்டுபிடிச்சுருப்பீங்கனு எனக்கும் தெரியும்..” என்று அவனை சரியாக கணித்து கூறினான்.
“ஹஹஹஹ நீ நல்லா இருந்தா அதுவே எனக்கு போதும்டா..” என்று உண்மையான பாசத்தில் கூறிய ரூபன் “உனக்கு என் மேல கோவமே இல்லையா.?” என்று மனதை உறுத்திய கேள்வியை கேட்டு விட்டான்.
“எதுக்கு ப்ரோ உங்கமேல நான் கோவப்படணும்.?”
“ஆதியை நீங்க லவ் பண்ணி கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்தீங்க.. நான் இடைல புகுந்து அத்தனையும் கெடுத்துட்டனே..”
“அட.. காதல் ரெண்டு பேருக்கும் இருந்தா தான் வாழ்க்கை இனிக்கும் ப்ரோ.. நான் மட்டும் காதலிச்சா போதுமா.? ஆதிராவுக்கும் பிடிக்கணும்ல.?”
“என்னைய பார்க்கலனா அவ உன்னைய கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லிருப்பா தானே.?”
“சான்ஸ் கம்மி தான் ப்ரோ.. ஆரம்பத்துல இருந்தே அவ என்னைய ப்ரெண்ட்டா மட்டும் தான் பார்த்துருக்கா.. நான் தான் அதைய தப்பா புரிஞ்சுட்டு காதலிக்கறேனு சுத்திட்டு இருந்தேன்..”
“வருத்தமே இல்லையாடா.?”
“கல்யாணங்கறது விளையாட்டு இல்லை.. ரெண்டு பேரும் மனசார சேர்ந்து இணைஞ்சா தான் அதுக்கு மதிப்பே.. ஆதிராவுக்கு உங்களைய பிடிச்சுருக்குனு தெரிஞ்சதும் விலகறது தான் நல்லது ப்ரோ.. பிடிக்காம நீ என்னைய தான் லவ் பண்ணனும்னு அடம்பிடிச்சா அதுல என்ன கிடைக்க போகுது.?
இப்ப கூட எனக்கு நல்லது தான் நடந்துருக்கு.. அண்ணன் மச்சானு உரிமையா சொல்ல ரெண்டு பேரு கிடைச்சுருக்கீங்க.. எல்லாத்தையும் பாசிட்டிவ்வா எடுத்துக்கிட்டா வாழ்க்கையும் அப்படியே போகும்.. இது என் நம்பிக்கை..” என்றான் சாதாரணமாக.
அவனை அணைத்து விடுவித்த ரூபனோ “உன்னைய மாதிரி பரந்த மனசு எல்லாம் எனக்கு இருக்குமானு தெரிலடா.. உன் இடத்துல நான் இருந்துருந்தா இப்படி இருப்பனானு சந்தேகம் தான்.. உன் நல்ல மனசுக்கு நீ ரொம்பவே நல்லா இருப்ப..” என்று மனதார உரைத்தான்.
“அட போதும் ப்ரோ.. இதையவே எத்தனை தடவை சொல்லுவீங்க.. மச்சான் தனியா வேலை பார்த்துட்டு இருப்பாரு வாங்க போய் ஹெல்ப் பண்ணலாம்..”
“ம்ம்ம் போலாம்டா..”
“எப்ப ஊருக்கு கிளம்பறீங்க.?”
“நாளைக்கு நைட்டு போய் தான் ஆகணும்.. நீ.?”
“நானும் நாளைக்கு தான் ப்ரோ.. அம்மா வேற கால் பண்ணிட்டே இருக்காங்க.. அப்படியே நிவே வீட்டுக்கும் போய்ட்டு வர சொல்லி..”
“இதுல என்ன.? போய்ட்டு வாடா..”
“அட போங்க ப்ரோ.. அவ பேசறது இப்ப எல்லாம் எனக்கு எரிச்சலா இருக்கு.. தெரியாதனமா நானும் ஆதிராவும் லவ் பண்றேனு சொல்லி தொலைச்சுட்டேன்.. அதைய நானே மறந்தாலும் நிமிசத்துக்கு நூறு தடவை சொல்லி என்னைய டென்சன் பண்றா.. எப்படித்தான் சிவா அண்ணா சமாளிக்கறாங்களோ.?”
பேசியபடி இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
வாசலிலே வழியை மறைத்து நின்ற ஆதிராவும் காவ்யாவும் அவர்களை கண்டதும் இடுப்பில் கை வைத்து கடுமையாக முறைக்க, “இவங்க எதுக்கு முறைக்கறாங்க.?” என்று ஹஸ்கி குரலில் ரஞ்சித் வினவியதும் ‘தெரிலயே’ என்று உதட்டை பிதுக்கினான் ரூபன்.
“என்ன ஆச்சு.? ஏன் இப்படி நிற்கறீங்க.?” – ரஞ்சித்
“ஹான் கேட்கல.. கொஞ்சம் சத்தமா கேளு..” – ஆதிரா
“ஆதிமா என்னடா.? எங்களுக்கு ஒன்னும் புரில..” – ரூபன்
தன்னவனின் செல்ல அழைப்பில் கோவத்தை விடுத்து “அபி…” என்று பேச வந்த தோழியின் கையை பிடித்து ‘சாவடிச்சுருவேன்’ என்று மிரட்டிய காவ்யா “அப்படியே நீங்களும் கிளம்பிருக்க வேண்டியது தானே.? இங்க எனத்துக்கு திரும்பி வந்தீங்க.?” என்று கேட்டாள் கடுப்புடன்.
“அபி போய்ட்டு சீக்கிரம் வர மாட்டிங்களா.? பாவம் அசோக் அண்ணா.. தனியா எல்லா வேலையும் பார்த்து இப்ப பாத்திரத்தை எல்லாம் குடுக்க கிளம்பிட்டாங்க.. இன்னும் மண்டபத்துக்கு பணம் குடுக்கணும்.. சமையல் ஆட்களுக்கும் பணம் தரல.. அங்க வேற போகணும்னு சொல்லிட்டு இருந்தாங்க..
நீங்களும் இந்த தடிமாடு கூட சேர்ந்து சுத்திட்டு இருக்கீங்க.? இவன் கூட சேராதீங்க நீங்களும் கெட்டு போய்ருவீங்க..” என்று ரஞ்சித்தை முறைத்தாள்.
‘அடிப்பாவி.. சும்மா இருந்த என்னை உன் ஆளு தான் வாடா போய் அம்மாவை பஸ் விட்டு வரலாம்.. தனியா போக ஒரு மாதிரி இருக்குனு சொல்லி கூட்டிட்டு போனாங்க.. அப்ப மட்டும் நீ கோமாவுக்கு போய்ட்டீயா என்ன.?’ என்று நினைக்க தான் முடிந்தது அவனால்.!!
“அய்யோடா உன் ஆளு சின்ன பையன் பாரு.. இவன் கூட சேர்ந்ததும் கெட்டு போக.. பொய் சொன்னாலும் நம்ப மாதிரி சொல்லி தொலை..” என்று காவ்யா சிடுசிடுக்க, “எம்மா தங்கச்சி.. இருமா நான் உன் ஆளுக்கு ஹெல்ப் பண்ண போறேன்..” என்று கூறிய ரூபன் தப்பித்து விட்டான்.
இங்கிருந்தால் ஒரு வழியாக்கி விடுவார்கள் என்று பயந்து ரஞ்சித்தும் அவனின் பின்னே ஓடி விட்டான்.
“ஹோய்” என்ற துருவினியின் குரலில் ஆடவனின் நடை தடைப்பட்டு நிற்க, “ரூபன் மாமா கூட சேர்ந்து எங்க சுத்திட்டு இருக்க.?” என்று கேட்க, “அதைய உரிமை இருக்கறவங்க கிட்ட தான் சொல்ல முடியும்..” என்று கூறினான்.
“ஓஹோ.. ஏன் என்கிட்ட சொல்ல மாட்டிங்களா.?”
“நான் ஏன் சொல்லணும்.?”
“ஏன் சொன்னா என்னவாமா.?”
“உரிமையா கேளுங்க நான் சொல்றேன்..” என்றவனை கேவலமாக பார்த்து “உரிமையா தான்டா கேட்கறேன் பைத்தியமே.. அதைய கூட புரிஞ்சுக்க முடியாத டியூப்லைட்டா இருக்க.?” என்று மண்டையில் தட்டி விட்டு சென்றாள்.
அவள் கூறியதை புரிந்து கொள்ளவே இவனுக்கு நிமிடங்கள் பிடித்தது. சட்டென்று பெண்ணவளை திரும்பி பார்க்க, அதற்காகவே அவள் காத்திருந்ததை போல “இந்த டியூப்லைட்டை பிரகாசமா ஒளிர வெக்க என் வாழ்க்கையை தியாகம் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்..” என்று கண்சிமிட்டினாள்.
அடிப்பாவி துருவினி இப்படி யாரும் காதலை சொல்லிருக்க மாட்டாங்கடி.. உன் அக்காகிட்ட இருந்து தப்பிச்ச இவன் உன்கிட்ட மாட்டிக்கிட்டான்.. சரி விடு உன்கிட்ட தான் மிதி வாங்கணும்னு அவன் தலைல எழுதி இருந்தா நம்மளால மாத்த முடியுமா.?
சந்தோசத்தில் அவனுக்கு பேச்சு வர மறுத்திட, ஏங்க.. ஏங்க என்று இவன் கத்தியதை காதில் வாங்கியும் கேட்காதது போலவே அவள் சென்று விட, இவனோ ஏமாற்றமாக நின்றிருந்தான்.
கார் ஹாரனை விடாமல் அழுத்தி அவனை சுயத்திற்கு வர செய்த ரூபன் “டேய் வர்றீயா.? இல்லையா.? நான் மட்டும் போகவா.?” என்று கத்த, “இருங்க ப்ரோ வர்றேன்..” என்றவன் மீண்டும் திரும்பி வீட்டினுள் ஒரு பார்வையை பதித்து விட்டே சென்றான்.
அவன் செல்லும் வரை மறைவில் நின்று பார்த்திருந்த துருவினியோ சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட்டு சிரித்தபடி நகர்ந்தாள்.
பெற்றோரிடம் தன் காதலை பற்றி சொல்ல இவள் காத்திருக்க, அவள் கூறாமலே அவர்களுக்கு தெரிந்ததும் விழுந்த அடியையும் வாங்கியவள் அவர்களின் முன்னே அசராமல் நின்றாள்.
விடாமல் அடித்த அன்னையின் அடியையும் வாங்கி கொண்டு ஆதிரா அப்படியே நிற்க, “என்னடி காரியம் பண்ணி வெச்சுருக்க.? விளையாட்டுத்தனமா இருந்தாலும் எங்கள மீறி எதுவும் பண்ண மாட்டேனு நம்பி இருந்தோம்.. அந்த நம்பிக்கைல மண்ணை அள்ளி போட்டுருக்க.?” என்று சீறினார்.
“அம்மா இப்பவும் உங்கள மீறி எதுவும் பண்ண மாட்டேன்..”
“பேசாத நீ.. வேலைக்கு போய் கிழிச்சது எல்லாம் போதும்.. நாங்க பார்க்கற பையனை கல்யாணம் பண்ற வழியை பாரு”
“எனக்கு என் அபி தான் வேணும்” என்றவளுக்கு மீண்டும் அடி விழுந்தது. “எனக்கு அவன் தான்மா வேணும்” என்று அழுகையுடன் இவள் கூற, “எனக்கு கொல்லி வெச்சுட்டு அப்பறம் அவன் கூடயே போ” என்று முடிவாக உரைத்த அவளின் தந்தை சென்று விட்டார்.
“எங்கள விட இப்ப வந்த அவன் தான் முக்கியமா போய்ட்டான்ல.? உன் அப்பா எப்படி பேசிட்டு போறாருனு பாரு.. உங்களுக்காக ஓடி ஓடி உழைச்சாருடி.. அவரு நம்பிக்கையை இப்படி உடைச்சுட்டியே..
நிவேதா கிட்ட என்னனு சொல்லுவேன்.? இனி எங்களால தலை நிமிர்ந்து தான் நடகக முடியுமா.? ஏன்டி உன் புத்தி இப்படி போய் தொலைஞ்சுச்சு.? அவன் தான் ஏதாவது பண்ணிருக்கணும்..” என்று இவளுக்கு மட்டுமில்லாமல் ரூபனுக்கும் சேர்ந்தே திட்டு விழுந்தது.
“என் அபி தான் வேணும்.. இல்லனா நான் இப்படியே இருந்துருக்கறேன்” என்று ஆதிராவும் முடிவாக கூற, இதற்கும் அடி கிடைத்தது.
துருவினி தான் தமக்கையை காப்பாற்றி உள்ளே அழைத்து செல்ல, கலங்கிய விழிகளை துடைத்தெறியவும் தோணாமல் அப்படியே இருந்தாள். ரூபனுடன் பேசலாம் என்று போனை எடுத்த சமயம் விறுவிறுவென அவளிடம் வந்த அவளின் அன்னை அலைப்பேசியை பிடுங்கி விட்டு செல்ல, மொத்தமாக துவண்டு போனாள்.
“அக்கா மாமா கிட்ட நான் பேசறேன்.. உன் முடிவுல உறுதியா இருக்க தானே.?”
“ம்ம்ம்ம்ம்”
“அப்பறம் எதுக்கு கவலைப்படற.? இப்படி நடக்கும்னு தெரிஞ்சு தானே லவ் பண்ணுன.? அழுது புரண்டு சம்மதம் வாங்கறதை விட்டுட்டு இப்படியே அழுதுட்டு உட்கார்ந்தா எல்லாம் சரியாகிருமா.?”
“சம்மதிப்பாங்கனு நீ நினைக்கறீயா.?”
“சம்மதிக்க வெக்கணும்.. கேட்டதும் சரினு யாரும் சொல்ல மாட்டாங்க.. நீதான் அடம்பிடிச்சு சரினு சொல்ல வெக்கணும்.. ஏதாவது பண்ணலாம்க்கா.. நீ இப்படி இருக்காத” என்ற தங்கையை அணைத்து கொண்டாள் ஆதிரா.
வீட்டிலே சிறை வைக்கப்பட்டாள் ஆதிரா.. வேலை செய்யும் நேரத்திலும் அவளின் அன்னை அவளை கண்கொத்தி பாம்பாக சிறையெடுத்தே வைத்திருக்க, அப்போதெல்லாம் ஏற்படும் சினத்தை அடக்கவே பெரும்பாடு பட்டு போவாள்.
ரூபனிடம் ‘நான் பேசும் வரை நீ அழைக்காதே’ என்று மட்டும் கூறி இருக்க, அவனும் இதுதான் விசயம் என்று புரிந்து கொண்டான்.
நான்கு நாட்களுக்கு பிறகு பலவித கட்டளைகளுக்கிணங்க தான் துருவினியை கல்லூரிக்கே செல்ல அனுமதியளித்தனர் அவளின் பெற்றோர்.
வீட்டை விட்டு வெளியில் வந்ததுமே ரூபனுக்கு அழைத்து “ஹலோ மாமா” என்றிட, “சொல்லுடா.. ஆதிரா நல்லா இருக்கா தானே.?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் நல்லா தான் இருக்கா.. உங்க லவ் தான் வீட்டுல தெரிஞ்சுருச்சு..”
“முடியாதுனு சொல்றாங்களா.?”
“அவங்க என்ன முடிவு எடுக்க போறாங்கனு எனக்கு தெரில மாமா.. நீங்க சிவா மாமாகிட்ட பேசுங்களேன்..”
“நான் முதல்ல அம்மாகிட்ட பேசணும்டா.. அப்பறம் தான் சிவா அண்ணாகிட்ட பேச முடியும்..”
“எது பண்றதா இருந்தாலும் கொஞ்சம் சீக்கிரமா பண்ணுங்க..”
“ம்ம்ம்ம் ஓக்கேடா..”
தயக்கத்துடன் “மாமா நான் ஒன்னு சொல்லட்டுமா.?” என்று கேட்க, சொல்லுடா.. எதுக்கு தயக்கம்.? என்றவனிடம் “வீட்டுல சம்மதிக்கற வரைக்கும் வெய்ட் பண்ணுங்க மாமா.. அக்காவே வர்றேனு சொன்னாலும் வேணாம்னு சொல்லுங்க..
அவ அப்படி ஏதாவது பண்ணிட்டா அம்மாவால தாங்க முடியாது.. அந்த அவமானம் சாகற வரைக்கும் அவங்களால மறக்க முடியாம போய்ரும்.. வெய்ட் பண்ணுங்க கண்டிப்பா சம்மதிப்பாங்க.. ப்ளீஸ் மாமா..” என்றாள் கெஞ்சலுடன்.
“நீ சொல்லணும்னு அவசியமில்லடா.. அவளே வர்றேனு சொன்னாலும் நான் சம்மதிக்க மாட்டேன்.. என் ஆதியை இந்த உலகத்துக்கு கொண்டு வந்தவங்கள அழுக வெச்சுட்டு அந்த அழுகைல எங்க வாழ்க்கையையும் ஆரம்பிக்கற அளவுக்கு எனக்கு கல்நெஞ்சமில்லடா..
கவலைப்படாத.. வீட்டுல சம்மதிக்கலனா ஆதியை விட்டு குடுக்கவும் தயாரா தான் இருக்கேன்.. ஆனா இப்படி நடக்காதுனு நம்புவோம்” என்றவனின் குரலே வேறுப்பட்டு வந்தது.
அதில் வருந்தியவள் “சாரி மாமா” என்றிட, “அட நீ ஏன்மா சாரி சொல்லணும்.? ஆதியை எப்படியாவது ஒரு தடவை மட்டும் என்கூட பேச சொல்லுமா.. அது போதும்” என்று கேட்டவனுக்கு சரியென்று விட்டாள். ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமில்லை என்பதை அவளும் அறிவாள்.
அவளின் அன்னை தான் இருவரையும் கண்கொத்தி பாம்பாக கண்காணித்து கொண்டிருக்கிறாரே.. இருவரும் லேசாக சிரித்தால் கூட அவரின் சந்தேகம் தலைதூக்கி இருவரையும் வாங்கு வாங்கு என்று வார்த்தைகளால் வாங்கி விடுகிறாரே.!!
பெருமூச்சை வெளியிட்டவளுக்கு ரஞ்சித்துடன் பேச வேண்டும் என்ற எண்ணம் எழுந்தாலும் பயமாகவே இருந்தது.
பேசி விடுவோம் என்ற முடிவுடன் அவனுக்கு அழைத்து காத்திருக்க, “ஹலோ துருவினி.. என்னமா ஆச்சு.? நாலு நாளா மெசேஜ் பண்ணாலும் ரிப்ளை பண்ணல.. கால் பண்ணுனாலும் அட்டன் பண்ணல.. ஏதாவது பிரச்சனையா.?” என்று பதட்டப்பட்டான்.
“உங்ககிட்ட எதுவும் சொல்லலயா.?” – துருவினி
“யாரு என்ன சொல்லணும்.?” – ரஞ்சித்
“என் அப்பா உங்க வீட்டுக்கு போன் பண்ணுனாங்களானு கேட்கறேன்..” – துருவினி
“இல்லடா.. அப்படி எதுவும் பண்ணல.. ஏன்டா.? ஆதிரா விசயம் தெரிஞ்சுருச்சா.?” – ரஞ்சித்
“ம்ம்ம்ம்” – துருவினி
“ஆதிராவே சொல்லிட்டாங்களா.?” – ரஞ்சித்
“நோ அவ சொல்லல..” – துருவினி
“அப்பறம் எப்படி.?” – ரஞ்சித்
“சுமதி அக்கா கல்யாணத்துல இவங்க ரெண்டு பேரும் பேசறதை யாரோ கேட்டுருக்காங்க.. அவங்க தான் அப்படியே அப்பாகிட்ட பத்த வெச்சுருக்காங்க” என்றிட, “இப்ப வீட்டுல என்ன சொல்றாங்க.?” என்று கேட்டான்.
“அவளை ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி வெச்சுருக்காங்க ரஞ்சித்.. முடியவே முடியாதுனு சொல்லிட்டு இருக்காங்க..”
“ரூபன் ப்ரோ கிட்ட சொன்னீயா.?”
“ம்ம்ம் இப்பதான் பேசுனேன்.. வீட்டுல பேசிட்டு சிவா மாமாகிட்ட பேசறேனு சொல்லிருக்காங்க..”
“நான் வேணா சிவாகிட்ட பேசட்டுமா.?”
“வேணாம்” என்று மறுத்து “எப்படியும் ஆதிராவுக்கு கல்யாணம் பண்ணி வெக்க தான் நினைப்பாங்க..” என்று கூறிட, “ப்ச் அப்படி எல்லாம் நடக்காது.. எப்படியும் சம்மதிச்சுருவாங்க” என்று நம்பிக்கையளித்தான்.
“எனக்கு பயமா இருக்கு..” – துருவினி
“பயமா.? எதுக்கு.?” – ரஞ்சித்
“……” – துருவினி
“துரு இருக்கீயா.?” – ரஞ்சித்
“ம்ம்ம்” – துருவினி
“எதுக்கு பயம்.?” – ரஞ்சித்
“இனி நம்ம பேச வேணாம்..” – துருவினி
“ஏய் ஏன்.? நான் என்ன பண்ணுனேன்.?” – ரஞ்சித்
“மறுபடியும் அம்மாவுக்கு நானும் ஏமாற்றத்தை தர விரும்பல.. அக்கா இப்படி பண்ணுனதையே அவங்களால ஏத்துக்க முடில.. இனி நம்ம பேச வேணாம்.. என் அம்மா சொல்ற பையனை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்.. எல்லாத்துக்கும் சாரி ரஞ்சித்.. இனி என்னைய டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்று அழுகையுடனே கூறியவள் வைத்து விட்டாள்.
அருகில் இருப்பவர்கள் இவளை ஒரு மாதிரியாக பார்த்து வைக்க, அதில் தான் சுயத்திற்கு வந்து கண்களை துடைத்து கொண்டு சாதாரணமாக இருப்பதை போல் நடிக்க தான் செய்தாள்.. ஆனால் அவளையும் மீறி கண்ணீரும் ஆறாய் பொழிந்தது.
எப்படியோ அன்னை இல்லாத சமயத்தில் ரூபனுடன் ஆதிராவை பேச போன் செய்து குடுத்த துருவினி வெளியில் வந்து நின்று விட்டாள் அன்னை வருகிறாரா.? என்று பார்க்க.!!
இருவருடமும் மௌனம்..!! பேசாமல் இருந்த நாட்களின் தவிப்புகள் தான் இப்போது இருவரிடமும் மௌனமாக வெளிப்பட்டது. அமைதியை ரூபனே கலைத்தான்.
“ஆதி” என்ற அவனின் அழைப்பில் “அபி” என்று இவள் கலங்க, “அழுகற அளவுக்கு எதுவுமாகல.. நான் அம்மாகிட்ட பேசிட்டு சிவா அண்ணன்கிட்ட பேசறேன்மா.. உன்னைய விட்டுட்டு போய்ர மாட்டேன்” என்றான் அழுத்தமாக.
“நீ விட்டுட்டு போகணும்னு நினைச்சாலும் நானே உன்னைய தேடி வந்துருவேன் அபி..”
“ஹூம் இது தப்பு.. வீட்டுல சம்மதிச்சா மட்டும் தான் நம்ம கல்யாணம் நடக்கும்.. நீயே வந்தாலும் நான் உன்னைய ஏத்துக்க மாட்டேன்..”
“அப்ப நான் உனக்கு வேணாமாடா.?”
“நீ எனக்கு வேணும் தான்.. அதே சமயம் உன் குடும்பமும் உனக்கு வேணும்டா.. யாரையும் அழுக வெச்சுட்டு நம்ம வாழ்க்கையை தொடங்கறதுல எனக்கு விருப்பமில்லை”
“உனக்கு நான் வேணாமாடா.?” என்று அழுகையுடனே ஆதிரா வினவ, “எனக்கு நீ மட்டும் தான் ஆதிமா வேணும்.. கண்டிப்பா சம்மதிப்பாங்க.. பொறுமையா இரு.. உனக்கு அப்பறம் துருவினியும் இருக்காங்க.. அவங்க வாழ்க்கையையும் யோசிச்சு பாரு..
நம்ம வெய்ட் பண்ணலாம்.. ஒருநாள் சம்மதம் சொல்லுவாங்க.. அது வரைக்கும் பேச வேணாம் ஆதிமா..” என்றதும் ஆதிராவிடம் பதிலில்லை.
இருந்தும் “ஆதி ஐ லவ் யூ” என்று ஆடவன் கூறிட, ஐ ஹேட் யூ என்றவள்”நீயே என்கிட்ட பேசற வரைக்கும் நான் உன்கிட்ட பேச மாட்டேன்.. ஹேட் யூ.. ஹேட் யூடா..” என்று தேம்பலுடனே கூறினாள்.
சிறிது நேரம் பேசாமல் அப்படியே இருந்தவர்கள் சீக்கிரம் உன்னைய தேடி நானே வருவேன் ஆதிமா.. எனக்காக காத்திரு என்று விட்டு இணைப்பை துண்டிக்க,
பதிலின்றி அலைப்பேசியை பார்த்தவளின் விழிகள் கலங்கி கண்ணீரை உகுத்தது.
காதலின் சுகமே
காத்திருப்பது தானே.!!
இவளுக்காக அவனும்
அவனுக்காக இவளும்
சிலகாலம்
காத்திருக்கட்டும்.!!
அந்த காதலே
இருவரையும்
சேர்த்து வைத்திடும்.!!
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1

