
பூகம்பம் – 34
“எல்லாரும் நாத்தியை கண்டு சிடுசிடுப்பாங்க.. நீ என்னடானா அவங்கள கிண்டல் பண்ணிட்டு இருக்க.?” என்று அவளை கலாய்க்க, “ஹலோ கண்ணை வெக்காத.. ஒரு நாத்தி தான் எனக்கு நல்லவங்க.. இன்னொரு நாத்தியை பார்த்தா நான் கடுப்பாகிருவேன்..” என்ற காவ்யா முறைத்தாள்.
“ஹப்பாடி எனக்கு இந்த நாத்தி பிரச்சனை எல்லாம் இல்லை..” என்று ஆதிரா பெருமூச்சு விட, அவளின் காதலை அறியாத சுமதியோ “அன்னைக்கு பொண்ணு கேட்டு வந்தாங்கனு சொன்னீங்களே அவங்க ஒரே பையனா.?” என்று கேட்டு வைக்க, காவ்யாவும் துருவியும் கலகலவென சிரித்தனர்.
இவர்களின் சிரிப்பு எதற்கென்று புரியாமல் “ஏன் சிரிக்கறீங்க.?” என்று அப்பாவியாக கேட்க, “அய்யோ அண்ணி அந்த பையனை எல்லாம் துரத்தி விட்டு ரொம்ப நாளாச்சு.. மேடம் லவ்வு லவ்வு பண்றாங்க..” என்று கேலியுடன் கூறினாள்.
“என்னது.?” என்று சுமதி அதிர்ந்து “வீட்டுல தெரிஞ்சா பிரச்சனையாகிரும் ஆதிரா.. அம்மா அப்பா உன்னைய ரொம்ப நம்பறாங்க.. அவங்கள விடு.. இப்ப யாரை நம்பறது.? நம்பாம போறதுனு தெரில.. கொஞ்சம் யோசிச்சுக்கடா..” என்று ஒரு அக்காவாக அவளின் நலத்தை பேண, “அக்கா நீங்க ரொம்ப பயப்பட வேணாம்.. அந்த பாவப்பட்ட ஆளு ரூபன் மாமா தான்..” என்றாள் துருவினியே.!
‘ரூபனா.?’ என்று இதற்கும் அவளிடம் திகைப்பே.!! அவளின் காதல் கதையையும் அதனால் தான் நொந்த கதையையும் காவ்யாவே எடுத்து கூறிட, வாயை பிளந்த சுமதி ‘அடிப்பாவி’ என்ற ரீதியில் ஆதிராவை பார்க்க, அவளோ தோழியை உக்கிரமாக முறைத்து கொண்டிருந்தாள்.
“இப்ப நீங்களே சொல்லுங்க.. இவ லவ் பண்றானு இவளை நினைச்சு வருத்தப்படணுமா.? இல்ல இவளை லவ் பண்ற ரூபன் அண்ணாவை நினைச்சு வருத்தப்படணுமா.?” என்ற வினாவில் சுமதியே”ரூபனை நினைச்சு தான்” என்றாள் சிரிக்காமல்.!
தமக்கையை பார்த்து வாயை மூடி துருவினி நகைத்திட, “என் அபி இப்படியெல்லாம் நினைக்க மாட்டான்.. அவன் ரொம்ப ஸ்வீட்டு.. நீங்க எல்லாம் ரொம்ப ஹீட்டு.. உங்ககிட்ட இருந்து தள்ளி தான் இருக்கணும்..” என்றவள் முகவாயை திருப்பி கொண்டாள்.
தோழியை கலாய்த்தது போதும் என்று நினைத்தாளோ “துரு தங்கம் அக்கா கல்யாணம் வேணாம்னு சொன்னா தங்கச்சியை பிடிச்சு கட்டி வெச்சுருவாங்க.. அது உனக்கு தெரியுமா.?” என்று நகைத்து காவ்யா வினவ, அவளோ சாதாரணமாக “நான் இப்பவே ரெடி தான்” என்று கூறி அவர்களை திகைக்க செய்தாள் துருவினி.
இவர்களுடன் மாட்டி கொண்ட சுமதி தான் பாவம்.. இவர்களின் பேச்சை கேட்டு இன்னும் மயக்கமடையாமல் இருப்பதே அதிசயம். “ஹேய் ஸ்டாப் இட்.. கல்யாண பொண்ணு பயந்துருச்சு.. இப்ப நம்ம ஒரு கேம் விளையாட போறோம்..” என்று அப்படியே வேறுபுறம் பேச்சை திசை திருப்பினாள் ஆதிரா.
ஒரு பேப்பர் துண்டில் சீரியல் பெயர்களை எழுதி மடித்து அதை குலுக்கி கீழே போட்டு ஒவ்வொருவராக ஒரு பேப்பரை எடுக்க வேண்டும்.. அதில் வரும் சீரியலை பற்றி ஒரு வார்த்தை கூற வேண்டும்.. இது மற்ற மூவருக்கும் பழக்கம்.. சுமதியோ நான் வரவில்லை என்று மறுக்க, வற்புறுத்தி அவர்களுடன் அமர வைத்திருந்தனர்.
முதலில் துருவினி குலுக்கிட, அதிலிருந்து ஒரு துண்டை எடுத்த ஆதிரா அதை காவ்யாவிடம் நீட்டினாள்.. அவளும் அதை வாங்கி பிரித்து “பாண்டியன் ஸ்டோர்ஸ்” என்றதும் “ச்சைக் அதுவா.?” என்று நினைத்தாள்.
“ஹேய் சீக்கிரம் சொல்லுடி..” என்று காவ்யா அவசரப்படுத்த, “ஒரே வார்த்தை ஒரே வார்த்தை அது பாத்ரூம் ஸ்டோர்ஸ்.. அவ்வளவுதான்.. நெக்ஸ்ட்டு.?” என்றிட, “ஹஹஹஹ கரெக்ட்டு தான்..” என்ற காவ்யா இம்முறை பேப்பர் துண்டை எடுத்தாள்.
வாங்கிய துருவினி சிரித்தபடி “பாக்கியலட்சுமி” என்றிட, “அது பேக்கு லட்சுமி..” என்று தன் முறையை முடித்திருக்க, சுமதி எடுக்க மாட்டேன் என்றதில் துருவினியே எடுத்தாள்.
“அட தமிழும் சரஸ்வதியும்” என்ற ஆதிராவிடம் “அது முட்டாள் கோதையும் தியாகி சரஸ்வதி” என்று கூறிய துருவினி “விஜய் டிவில கொஞ்சம் உருப்படியான சீரியல் இது..” என்றாள்.
“ஹலோ எங்க சீரியல் தெரியுமா.? அதுல தியாகி தனம் இருக்காங்க..” – ஆதிரா
“ஹலோ ஹலோ எங்க சீரியல்ல பேக்கு லட்சுமி தெரியுமா.? அவங்க ரொம்ப தியாகியா இருந்துருக்காங்க..” – காவ்யா
“அட நம்ம சரஸ்வதி தான்பா ரொம்ப தியாகி.. அவங்கள கேவலமா திட்டியும் வெளில போன்னு அடிச்சு துரத்தியும் வெக்கமே இல்லாம மறுபடியும் அவங்ககிட்டயே போய் நிற்பாங்க..” – துருவினி
“இங்க மட்டும் என்ன வாழுதாமா.? காறி துப்புனாலும் நம்ம தனம் துடைச்சுக்கும்..” – ஆதிரா
“ஹலோ எங்க கோதை ஆண்ட்டியை தெரியுமா.? பையன் எந்த தப்பும் பண்ணல.. ஆனா அவனுக்கு எதிராக நின்னுட்டு.. இப்ப பொண்ணு தப்பு பண்றானு தெரிஞ்சும் அவளுக்கு சப்போர்ட்டா பேசிட்டு இருக்கு.. இப்படி கேவலமான தாய்குலத்தை நீங்க எங்கையாவது பார்த்துருக்கீங்களா யுவர் ஆனர்.?” – துருவினி
“ஹலோ நீங்கெல்லாம் அப்படி ஓரமா போங்க.. எங்க கோபி அங்கிள் முன்னாடி இதெல்லாம் சர்வசாதாரணம்.. தாத்தா ஆக வேண்டிய நேரத்துல மாப்பிள்ளையாகி.. இப்ப தப்பு பேக்குலட்சுமி மேலனு அவருக்கு எதிரா வில்லத்தனம் பண்ணிட்டு இருக்காரு.. என்னத்த சொல்ல.?” என்று நொந்தாள் காவ்யா.
பே வென்று சுமதி இவர்களை பார்த்திருந்தாலும் மறுபக்கம் வெளியில் நின்றிருந்த அசோக்கும் ரூபனும் திறந்த வாய் மூடாமல் இவர்களின் சண்டையை கண்டு திகைத்திருந்தனர்.
“என்னடா நடக்குது.?” என்று ரூபன் வாய்விட்டு புலம்ப, “இவங்க முழுநேரம் சீரியல் பைத்தியமா மாறிட்டாங்க போல.. இவங்களுக்கு வெட்டியா மாசமாசம் சம்பளம் வேற..” என்ற அசோக் வெளிப்படையாகவே தலையிலடித்து கொண்டான்.
எதேச்சையாக வாசல்புறம் பார்வையை திருப்பிய துருவினி “ஹேய் ரூபன் மாமா..” என்று கத்த, அனைவரும் திரும்பினர். ‘அய்யோ சுமதி அக்கா வேற இருக்காங்களே.?’ என்று நினைத்து ரூபன் நெளிந்திட, “ஹேய் அபி வாட் ஆ சர்பாரைஸ்.. வர்றேனு சொல்லவே இல்லயே..” என்று ஆதிராவும் கேட்டாள் சாதாரணமாக.!
ரூபனின் மனநிலையை உணர்ந்து “அண்ணா சுமதி அண்ணிக்கும் உங்க காதல் தெரியும்.. பயப்படாதீங்க..” என்று கேலியுடன் காவ்யா உரைக்க, ‘இது எப்ப.?’ என்று ரூபன் நினைத்தாலும் சிரிப்பை மட்டுமே பதிலளித்தான்.
“வா ரூபன்.. அம்மா நல்லா இருக்காங்களா.? அவங்களையும் கூட்டிட்டு வந்துருக்கலாம்ல.?” என்று சுமதி வினவ, ரூபனும் “நல்லா இருக்காங்க.. நான் ஒரு மேரேஜூக்கு வந்துட்டு கிளம்பறப்ப இவன் என்னைய பார்த்துட்டான்.. விடாம இங்க கூட்டிட்டும் வந்துட்டான்..” என்று சிரிப்புடன் விளக்கமளித்தான்.
“வர்றேனு ஒரு வார்த்தை சொல்ல கூட சாருக்கு கசக்குது.. ஏன் திரா நீ கூட சொல்லல.?” – அசோக்
“அண்ணா அவன் வர்றது எனக்கே தெரியாது.. என்கிட்ட எதுவும் சொல்லல..” – ஆதிரா
“அடப்பாவி.. எதுக்குடா இப்படி திருட்டுத்தனமா வந்துட்டு போகணும்னு நினைச்ச.?” – அசோக்
“நான் இங்க வந்துட்டா அம்மா தனியா இருப்பாங்கடா.. நான் கல்யாணத்துக்கே போகலனு தான் சொன்னேன்.. அம்மா தான் விடாம அனுப்பி விட்டாங்க.. சரினு வந்துட்டு அப்பவே கிளம்பிற ப்ளானோட தான் வந்தேன்.. உன்னைய பார்த்ததுல என் ப்ளானும் சொதப்பிருச்சு..” என்றான் ரூபன்.
“அண்ணா இதெல்லாம் டூ மச்.. இருந்தாலும் நீங்க சொல்லிருக்கணும்..” என்ற காவ்யாவிடம் “அதுக்கு முதல்ல எங்களைய நீ பேச விடணும்.. நீ போன் பண்ணுனா உன் புலம்பலை தான் சொல்றீயே தவிர எங்களைய எப்பமா பேச விட்டுருக்க.?” என்றதில் அசடு வழிந்தாள் பெண்ணவள்.
ஒருவழியாக கோவத்தை விடுத்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவுண்டனர்.. இருவரும் நாளை இரவு ஒன்றாக கிளம்புவதாக முடிவு செய்து அதை ரூபனின் அன்னைக்கும் தெரிவிக்க அவரும் சரியென்று விட்டார்.
தனியாக தன்னிடம் சிக்கிய தன்னவனின் சட்டையை பிடித்த ஆதிரா “ஏன்டா வர்றதை என்கிட்ட சொல்லல.?” என்று கோவமாக கேட்க, “அடிப்பாவி அதுக்குனு சட்டையை எல்லாம் பிடிப்பீயா.?” என்று அதிரந்தான்.
“ஆமா பிடிப்பேன்.. நீ வர்றதை என்கிட்ட சொல்லிருக்கணும்..” – ஆதிரா
“சொன்னா நீ கம்முனு இருப்பீயா.?” – ரூபன்
“நான் ஏன் இருக்கணும்.?” – ஆதிரா
“புரியாம பேசாத ஆதி.. எத்தனை நாளைக்கு இப்படி அசோக் வீட்டுலயே வந்து இருக்க முடியும்.? சங்கடமா இருக்குடா.. அதான் அப்படியே கிளம்பலாம்னு நினைச்சேன்..” – ரூபன்
“இப்ப புரியுது அபி.. எப்படி அண்ணாவை பார்த்த.?” – ஆதிரா
“நான் எங்க பார்த்தேன்.? பஸ் ஏறலாம்னு போன நேரத்துல கரெக்ட்டா என் முன்னாடி வந்து நிற்கறான்..” – ரூபன்
“அதான் எப்படிடா.?” – ஆதிரா
“யாரையோ பஸ் வெச்சு விட வந்தேனு சொன்னான்.. அப்ப என்னையும் பார்த்து தொலைஞ்சுட்டான்.. வீடு வர்ற வரைக்கும் என் சொல்லலனு ஒரே திட்டு..” – ரூபன்
“ஹஹஹஹ உனக்கு தேவைதான்.. கல்யாணத்துக்கு சிவா மாமாவும் வந்தாங்களா.?” என்று ஆதிரா கேட்க, “ம்ம்ம் வந்தாங்க ஆதி.. பேசுனேன்.. அவங்களும் ஊருக்கு வர சொன்னாங்க.. அவங்கள சமாளிச்சு தப்பிச்சு வந்தா இவன்கிட்ட மாட்டிட்டேன்..” என்றான் பாவமாக.
“உன்னைய எப்ப பார்ப்பேனு இருந்தேன்.. ஒரு வழியா என் அபியை பார்த்துட்டேன்.. மிஸ் யூ சோ மச் அபி..” என்றவளிடம் “மீ டூ ஆதி..” என்றான் காதலாக.
“ஆஹான் நம்பிட்டேன்.. என்னைய பார்க்காம அப்படியே போலாம்னு தானே நீ கிளம்புன.? போ உன்மேல கோவம்..” என்று முகத்தை திருப்பி விட்டு பெண்ணவள் நகர, ‘இவ்வளவு நேரம் நல்லா தான இருந்தா.?’ என்று நினைத்த ரூபன் பெருமூச்சு விட்டான்.
ஆதிராவுக்கு அழைத்த சிவா “உன்கூட தனியா பேசணும்..” என்றிட, “என்ன மாமா.?” என்ற ஆதிரா சற்று பயந்து போக, “உன் கல்யாணத்தை பத்தி தான் பேசணும்.. நாளைக்கு வீட்டுக்கு வர்றேன்.. எங்கயும் வெளில போய்ராத..” என்றவனின் குர
லில் என்றுமில்லாத திருநாளாய் இன்று மாற்றத்தை உணர்ந்த ஆதிரா அச்சத்தில் வெளிறி போனாள்.
ஆதிராவும் சிவாவும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். பெண்ணவளுக்கு உள்ளுக்குள் கலக்கமாக இருந்தாலும் வெளியே சாதாரணமாக இருப்பதை போல் காட்டி கொள்ள, “உனக்கு ரஞ்சித்தை பிடிக்கலயா.?” என்று கேட்டு அமைதியை கலைத்தான் சிவா.
இனி மறைத்தும் பயனில்லை என்பதை நன்றாக உணர்ந்திருந்தவள் “பிடிக்கலனு இல்ல மாமா.. அவனை ஒரு ப்ரெண்ட்டா பிடிக்கும்.. ஆனா கல்யாணம் பண்ணிக்கற அளவுக்கு எல்லாம் நினைக்கல..” என்றாள் அமைதியாக.!
“அவனை கல்யாணம் பண்ணிக்கற ஐடியால நீ இல்ல.?”
“ஹூம்..”
“ஆனா அவங்க வந்தப்ப அமைதியா இருந்தீயே.?”
“வேற என்ன மாமா பண்ண முடியும்.? எதுக்கு வந்தீங்கனு கேட்டு துரத்தி விடவா முடியும்.?”
“ப்ச் திரா.. அவங்க இப்ப கேட்டதுக்கு மாமாவும் சரினு சொல்ல சொல்லிருக்காங்க.. நிவே அவங்ககிட்ட பேசலாம்னு நிற்கறா.. உனக்கு பிடிக்கலனா நீ முதல்லயே சொல்லிருக்கணும்ல.? இவ்வளவு நாள் ஏன் அமைதியா இருக்க..
எப்படியும் நீ வேறவனை கல்யாணம் பண்ணி தான் ஆகணும்.. அது ரஞ்சித்தாவே இருந்துட்டு போகட்டுமே.. அவனுக்கும் உன்னைய பத்தி தெரியும்.. உனக்கும் அவனை பத்தி நல்லாவே தெரியும்.. இதுக்கு மேல என்ன வேணும்.?” என்று கேட்டான் நொந்து கொண்டு.!
“நிவே அக்கா ஏன் இவ்ளோ அவசரப்படறாங்கனு எனக்கு புரில மாமா.. வாழ போறது நான்தானே.? என்கிட்ட அப்பா கேட்கறப்ப நான் பிடிக்கலனு தான் சொல்ல போறேன்.. என் முடிவுல நான் உறுதியா இருக்கேன்..” என்றாள் அழுத்தமாக.
நெற்றியை நீவி கொண்டவன் “உன் மனசுல வேற யாராவது இருக்காங்களா.?” என்று ஒரு வார்த்தைக்கு கேட்டதில் எதையும் யோசிக்காமல் ஆதிராவும் “ஆமா மாமா
” என்று விட்டாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1

