Loading

பூகம்பம் – 30

பெண்கள் இருவரையும் புரியாமல் பார்த்த ரஞ்சித் “ஏன் இப்படி நிற்கறீங்க.?” என்று கேட்க, “ஹான் எப்படி.?” என்று காவ்யாவும் “ஏன் எங்களுக்கு என்ன.?” என்று ஆதிராவும் ஒருசேர கேட்டு முறைக்க, ‘அய்யோ இப்ப நான் என்ன சொல்றது.?’ என்று மனதினுள் புலம்பினான் ரஞ்சித்.

அவனை இன்னும் சோதிக்காமல் “என்ன உன் கண்ணு என் தங்கச்சி பக்கம் போகுது.. இது சரியில்லயே..” என்று ஆதிரா மிரட்டலுடன் கூறிட, சட்டென்று துருவினியின் ஞாபகம் எழுந்ததில் அவளை இவன் தேடிட, “ஓய் கண்ணை நோண்டி காக்காய்க்கு வீசிருவோம்..” என்று அவன் விழிகளின் முன்பு கை விரல்களில் இரண்டை ஆட்டி கடிந்ததில் பயந்து அவனும் பின் வாங்கினான்.

அவர்களை சமாளிக்கும் பொருட்டு “நான் உன் தங்கச்சியை பார்க்கலயே ஆதிரா..” என்றிட, “அப்ப நான் பொய் சொல்றேனு சொல்றீயா.?” என்றவள் இடுப்பில் கை வைத்து அவனை சினந்து பார்த்திட, பதறிய அவனும் “இல்ல இல்ல நான் அப்படி சொல்லல” என்றான்.

“வேற எப்படி சொல்ற.?”

“நீயும் பொய் சொல்லல.. நானும் பொய் சொல்லல..”

“அடிங்ங்ங்க.. நான் தான் பார்த்தேன்ல.? என்னமோ பொண்ணையே இவன் பார்க்காத மாதிரி அந்த பார்வை பார்க்கறான்டி அவளை..” என்றிட, “ச்சே அதைய நான் பார்க்காம விட்டுட்டனே.!” என்று நேரங்காலம் புரியாமல் வருந்தினாள் காவ்யா.

அவளை முறைத்து பின்பு “என்ன லவ்வா.?” என்று நேரடியாகவே ஆதிரா கேட்டிட, அவள் கேள்வியில் விதிர்விதிர்த்து போன ரஞ்சித்தோ ஆமாவென்றும் கூறாமல் இல்லையென்றும் உரைக்காமல் நாலாப்பக்கமும் தலையாட்டி வைத்தான்.

“டேய்ய்ய் ஒழுங்கா பதில் சொல்லு..” என்று மிரட்டிட, ‘டேயா.?’ என்று உள்ளுக்குள் திகைத்து “பிடிச்சுருக்கு ஆனா காதலானு தெரில..” என்று விட்டான்.

“ஆமா இதே டையலாக்கை தானே ஆதிராக்கும் சொன்ன.. இவளையும் பிடிச்சுருக்கு.. இவ நோ சொன்னதும் இவ தங்கச்சியையும் பிடிச்சுருக்குனு சொல்ற.? அப்ப இந்த குடும்பத்துலயே வாக்கப்படணும்னு முடிவு பண்ணிட்டியா.?” என்ற அதிமுக்கியமான வினாவை கேட்டாள் காவ்யா.

அதில் இவனோ திருதிருவென முழித்து “இவங்க பிடிக்கலனு சொன்னதும் நானும் விலகிட்டேன்ல.? அப்பறம் ஏன் இப்படி சொல்றீங்க.?” என்று அப்பாவியாக வினவ, “விலகாம சண்டை போடலாம்னு நினைச்சீயா என்ன.?” என்று ஏட்டிக்கு போட்டியாக அவனை வறுத்தெடுத்தாள் ஆதிராவும்.

“அய்யோ நான் அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்.. உங்களுக்கு பிடிக்கலனா விலகறது தானே நல்லது.. பிடிக்காதவங்கள வற்புறுத்தி கல்யாணம் பண்ணி என்னவாக போகுது.? எனக்கு எப்படி உங்களைய பிடிச்சுருக்குனு சொல்ல உரிமை இருக்கோ அதே மாதிரி என்னைய பிடிக்கலனு சொல்ல உங்களுக்கும் உரிமை இருக்குல.?

ஜஸ்ட் உங்களைய பிடிச்சது.. நானும் உங்ககிட்ட சொல்லிட்டேன்.. நீங்களும் அதுல விருப்பமில்லனு சொல்லிட்டீங்க.. அதற்காக நான் கல்யாணமே பண்ணிக்காம இருக்க முடியுமா.? உங்க தங்கச்சி கூட பேசுனதும் பிடிச்சுச்சு.. ஜஸ்ட் சைட்டடிச்சேன்.. பிடிச்சுருக்குனு சொல்ல ஏன் தயங்கணும்.?

அவங்களும் பிடிக்கலனு சொன்னா விலகி தானே ஆகணும்.. த்ரிஷா இல்லனா நயன்தாரா.. ரெண்டும் இல்லனா ஒரு சமந்தா.. அதுவும் செட்டகலனா ஒரு அனுஷ்காவை தேட வேண்டியது தான்.. அவ்ளோதான் ஆதிரா.. இதுக்கு ஏன் சண்டைக்கு நிற்கறீங்க.?” என்று நீளமாக பேசி முடித்து பெருமூச்சு விட்டான்.

பின்பு தான் பெண்கள் இருவரையும் காண, அவர்களோ இடுப்பில் கை வைத்து அவனை முறைத்த முறைப்பில் சற்று பயந்து பின்வாங்கி “ஏஏஏன்.? என்ன ஆஆச்சு.?” என்று தயங்கி கேட்க, “அந்த பிசாசை சைட்டடிச்சேனு சொன்னதை கூட மன்னிச்சுருவேன்டா.. அவளை போய் என் தலைவி சமந்தா கூட கம்பேர் பண்ணுன உன் தலைல இந்த கல்லை தூக்கி போட்ட என்னனு இருக்கு.?” என்று எகிறினாள் ஆதிரா.

‘அய்யோ இப்ப நான் சைட்டடிச்சதை தப்புனு சொல்றாங்களா.? இல்ல சமந்தா கூட கம்பேர் பண்ணுனதை தப்புனு சொல்றாங்களா.? ஒன்னுமே புரில’ என்று மனதினுள் புலம்பினாலும் “சாரி ஆதிரா” என்று அவளிடமே சரணடைந்து விட்டான்.

‘அடப்பாவி’ என்பதை போல் வாயை பிளந்த காவ்யா “பிழைச்சுக்குவ மகனே நீ நல்லா பிழைச்சுக்குவ..” என்று அவனை மெச்சி கொள்ள, பெரிய மனது செய்ததை போல் “உன்னைய பார்க்கவும் பாவமா தான் இருக்கு.. என் குழந்தைக்கு சித்தப்பாவாக ரெடி ஆகிக்கோ..” என்று மறைமுகமாக அவனின் விருப்பத்திற்கு சம்மதமளித்தும் விட்டாள்.

ஆனால் இது அவனுக்கு புரியாமல் போய் விட, ஏதேதோ யோசித்து குழம்பியவன் அது தெளிவடையாமல் போனாலும் இறுதியில் “நான் மாமாவாக தான் நினைக்கறேன் ஆதிரா” என்றும் விட்டான்.

‘எதே.?’ என்று அதிர்ந்த பெண்கள் இருவரும் தலையிலடித்து கொண்டனர். ‘துரு கிட்ட உதை வாங்கியே வாழ்க்கையை ஓட்டணும்னு இந்த அப்பாவி தலைல எழுதி இருக்கு போல.. என்னத்த சொல்ல.?’ என்று நினைத்தாள் காவ்யா.

இதில் ஏகத்துக்கும் கடுப்பாகி விட்ட ஆதிரா “பைத்தியம் பைத்தியம்” என்று சீறி அவனை இரண்டடியும் விட்டு “அப்பாவியா இருக்கலாம் தப்பில்ல.. ஆனா இந்தளவுக்கு அப்பாவியா இருந்து ஏன்டா என் உயிரை வாங்கற.?” என்று புலம்பினாள்.

“நான் தப்பா சொல்லிட்டனா.? அச்சோ சாரி ஆதிரா.. எனக்கு இந்த உறவுமுறை எல்லாம் தெரியாது..” என்று மன்னிப்பு வேண்ட, அவனை பார்க்க பாவமாக இருந்ததால் மலையிறங்கிய ஆதிரா “என் தங்கச்சி குழந்தைக்கு நான் எந்த உறவுமுறைல வருவேன்.?” என்ற கேள்வியை எழுப்பினாள்.

பட்டென்று “பெரிம்மா.. கரெக்ட்டா.?” என்று கண்கள் விரிய ரஞ்சித் கேட்டிட, ‘இது மட்டும் தெரியும்.. ஆனா அது தெரியாது..’ என்று கருவி “அப்ப என் குழந்தைக்கு என் தங்கச்சி எந்த உறவுமுறைல வருவா.?” என்று அப்படியே திருப்பி கேட்டாள்.

சிறிது யோசித்தவன் “சித்தினு நினைக்கறேன்” என்றிட, “நினைக்கறீயா.? யோவ் அது தான்யா வரும்..” என்றவளிடம் “ஓஓஓஓ ஓக்கே ஓக்கே..” என்று அவனும் தலையாட்ட, அவனை ஜந்துவை போல் பார்த்து ‘இது தேறாத கேஸூ போல’ என்று எண்ணினாலும் “என் தங்கச்சியை கல்யாணம் பண்ணுனா என் பேபிஸ் எப்படி உன்னைய கூப்பிடும்.?” என்று மீண்டும் அவனிடமே வினவினாள்.

முதலில் திருதிருவென விழித்தவன் பின்பு ஏதோ ஞாபகம் எழுந்ததில் துள்ளலுடன் “சித்தப்பா.. கரெக்ட்டா.?” என்று கேட்க, “நீ சித்தப்பாவாக நான் சம்மதம் சொன்னா.. எனக்கு அண்ணனாக தான் நீ விரும்பற போல.?” என்று நக்கலாக கேட்டதும் தான் ஆடவனுக்கு புரிந்தது.

“அய்யய்யோ சாரி சாரி ஆதிரா.. நான் காவ்யா பேபீஸூக்கு தான் சொன்னேன்..” என்று சமாளிப்பதாக நினைத்து காவ்யாவை இடையில் இழுத்து விட, அதுவரை அவளோ ‘இங்க என்னடா நடக்குது.?’ என்று காவ்யா இருவரையும் மாறி மாறி பார்த்து நின்றிருந்தாள்.

பேச்சின்றி நின்றிருந்தவளை இடித்து “உன் பேபிக்கு மாமாவாக சாருக்கு ரொம்ப ஆசையாமா.?” என்றிட, “ஓஓஓஓ அப்ப எனக்கு அண்ணனாக ரெடியா.?” என்று கேட்டு “டேய் அண்ணா.. வெயில்ல போனா நான் கறுத்து போய்ருவேன்.. நீ கார்ல தானே வந்துருக்க.. என்னைய வீட்டுல விட்டுட்டு அப்பறம் நீ போ..” என்று ரஞ்சித்தின் கையை பிடித்து இழுத்தாள்.

அவன் திகைத்து “உங்க அம்மா பார்த்தா திட்ட மாட்டாங்களா.? உங்களுக்கு பயம் இல்லயா.?” என்று கேட்க, சிரிக்க முயன்ற இதழை அடக்கி “ஏன் உனக்கு பயமா இருக்கா.?” என்று கோவமாக கேட்பதை போல் கேட்க, பதிலின்றி விழிகளை பெரியதாக விரித்து அவளை பார்த்தான் ரஞ்சித்.

ஸ்கூட்டியை எடுக்க சென்றிருந்த துருவினி ஆடி அசைந்து அப்போது தான் அவர்களின் முன்பு வண்டியை நிறுத்த, “இவ்வளவு நேரம் என்னடி பண்ணுன.?” என்று தங்கையை கடிந்தாள்.

“என் ப்ரெண்ட்டு ஒருத்தியை பார்த்தேன் அதான் பேசிட்டு வந்தேன்.. உனக்கு அவசரம்னா நீயே அங்க வந்துருக்க வேண்டியது தானே.? இங்க நீயும் ஜாலியா அரட்டை அடிச்சுட்டு தானே நிற்கற.?” என்று துருவினியும் எதிர்மொழியை விடுத்தாள்.

“இவ தான் உனக்கு வேணுமா.?” என்று காவ்யாவோ ஹஸ்கி குரலில் ஆடவனிடம் கேட்க, ‘ஹான்’ என்று விழித்தவன் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தடுமாறினான்.

“சரி சரி கிளம்பலாம்.. நீங்க உங்க சண்டையை வீட்டுல போய் கண்டன்யூ பண்ணிக்கங்க.. கிளம்பலாம் கிளம்பலாம்..” என்றவள் “அண்ணா நான் உங்களுக்கு போன் பண்றேன்.. இந்த தங்கச்சியை மறந்தராதீங்க அண்ணா.. பார்த்து வீட்டுக்கு போங்க அண்ணா.. எதாவது யோசனைல வண்டியை லாரில விட்டு போய் சேர்ந்தராதீங்க அண்ணா..

உங்களைய நம்பி தான் நான் இருக்கேன் அண்ணா.. நம்ம மறுபடியும் மீட் பண்ணலாம் அண்ணா..” என்று வார்த்தைக்கு வார்த்தை அண்ணா என்றழைத்து அவனை விரட்டாத குறையாக விரட்டி விட்டிருந்தாள் காவ்யா.

“அடிப்பாவி பாவம்டி அவன்..” என்று ஆதிரா சிரிக்க, “ப்ச் அவன் ஒரு பக்கம் இருக்கட்டும்.. முதல்ல வீட்டுக்கு போலாம்டி.. வீட்டுல என் அம்மா வேற வெச்சு செய்யும் இவ்ளோ நேரம் என்ன பண்ணி தொலைச்சீங்கனு..” என்றவளுக்கு அவள் கவலை.

“இங்க மட்டும் என்னவாமா.?” என்று அலுத்து கொள்ள, “இந்த மம்மிஸ் சங்கம் மாதிரி அவங்களால பாதிக்கப்பட்ட மகள் சங்கம்னு ஒனத்தை ஆரம்பிச்சு விட்டு இதுக்கெல்லாம் நியாயம் கேட்கணும்டி” என்ற காவ்யாவை “ச்சீ நடிக்காம கம்முனு வா” என்றனர் கோரசாக.

வீட்டுக்கு வரும்போதே ‘பொறுமையாக பேசு’ என்று பலமுறை அசோக்கிடம் கூறி இருந்தான் ரூபன். அவன் அம்மாவை பார்க்கவும் பாவமாக இருக்கிறது.. அதே சமயம் இவன் படும் கஷ்டங்களையும் கண்டு வருந்தினான்.

அவனின் அன்னையை காணவில்லை. இளைய தமக்கை சுமதி தான் ஓரமாக சுருண்டிருந்தாள். இந்த பிரச்சனையில் அனைவரும் உணவுண்ண மறந்திருக்க, “வீட்டுக்கு வந்த உன்னைய பசியோட விட்டுருக்கேன்.. சாரிடா..” என்று நண்பனிடம் வருந்தினான் அசோக்.

“ப்ச் எனக்கு பசிக்கலடா.. பசிச்சா கடைல சாப்பிட போறேன்.. இதுல என்ன இருக்கு.? முதல்ல அக்காகிட்ட பேசுடா.. அவங்கள பார்க்க பாவமா இருக்கு..” என்ற ரூபன் இவர்கள் வந்ததை இன்னும் உணராமல் ஓரத்தில் சுருண்டிருந்த சுமதியை பார்த்து வருத்தமாக உரைத்தான்.

“பேசணும்டா.. அக்காக்கு பிடிக்கலனா இந்த கல்யாண பேச்சை இதோடு விட்டரணும்.. அவங்களுக்கு பிடிக்காம ஒன்னும் பண்ண கூடாது..” என்று தமக்கையை பார்த்தவாறு கூறிய அசோக் “இருடா சாப்பிட ஏதாவது செய்யறேன்.. இன்னும் யாருமே சாப்பிடல..” என்று சமையலறைக்கு சென்றான்.

நண்பனையும் பார்த்தான்.. திரும்பி அவன் தமக்கையையும் பார்த்தான்.. இருவரின் முகத்திலும் சொல்லவொண்ணா வருத்தங்கள்.. பெண்ணவள் அழுது அதை வெளிக் காட்டி விடுகிறாள்.. ஆனால் ஆடவனோ அதை உள்ளுக்குள் புதைத்து விடுகிறான்.

குழந்தை இல்லையென்றால் பெண்ணை மலடி என்றழைக்கும் சமுதாயம் அதே ஆண்களை எதுவும் கூறுவதில்லை..

பெண் அழுதால் வருத்தப்படும் அதே சமுதாயம் ஆண் ஒருவன் அழுதால் கோழை என்று பெயர் சூட்டி விடுகிறது.

பெண்களுக்கு ஒரு சட்டம் என்கிறவர்கள் ஆண்களுக்கும் இங்கு ஒரு சட்டம் இருக்கிறது என்பதை மறந்து விடுகின்றனர். ஆணோ பெண்ணோ இந்த சமுதாயத்தில் நிம்மதியாக வாழ்வது என்பது மட்டும் இப்போது நடக்காத காரியம்..

‘எனக்கு நம்பிக்கை இருக்கு நீ காவ்யா கூட சந்தோசமா வாழ்ற

தை நான் பார்ப்பேனு..’ என்று நினைத்த ரூபன் நண்பனை ஏறிட்டான் மிதமான புன்னகையுடன்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்