Loading

“மூச்சு காத்துல மாறாது போல
மாமா வா மார்போடு….
பாஞ்சிக்கோ கொஞ்சம் சாஞ்சிக்கோ
என்ன மேஞ்சிக்கோ நிதானமா…
ராசாவே ஒன் ரோசா பூவு நாந்தானே
நெஞ்சில் என்ன வெதச்சிக்கோ
கொஞ்சம் அணைசிக்கோ…
என்ன வளசிக்கோ தாராளமா ”

என்ற பாடலுக்கு அவனும் அவளும் காதலுடன் நடனமாட இன்னொரு குரலும் கேட்டது எழுந்திரு எழுந்திரு என்று கூடவே அவள் முகத்தில் தண்ணீர் ஊற்றியது போல் இருந்தது பதறியடித்துக் கொண்டு எழுந்தாள் நமது ஹீரோயின் நிரல்யா அம்மணிக்கு கனவு !!!….
எதிரே நின்று அம்மாவிடம் ‘எதுக்குமா இவ்வளவு சீக்கிரம் உசுப்பிவிட்ட செம்ம கனவு எல்லாம் போச்சு ‘என்று சண்டையிட்டாள்…

‘ஆமாம் மணி 6 ஆகுது பாரு பத்தாச்சு எந்திரிச்சு குளிச்சிட்டு கீழே வா ‘என்ற அர்ச்சனைகள் தூவி விட்டு கிளம்பினார் அவளும் துண்டோடு சென்று குளித்து கீழே வந்தாள்… அவள் அப்பா சோபாவில் அமர்ந்து இருப்பதை பார்த்து ….
ஹாய் பா என்று சொன்னாள் அவள் அப்பாவோ போ நிரல் பாப்பா இப்பதான் அப்பாவ பாக்க தோணுச்சு என்று கோபித்துக் கொண்டார்
‘நான் என்னப்பா பண்றது உங்க அம்மா என்ன விடவே மாட்டேன் என்றாங்க ‘

‘அதுக்கு நான் நாளைக்கு காலேஜ்க்கு இன்னைக்கு வர்ரதா ‘என்று கோபித்துக் கொண்டார்… அப்பாவின் கன்னத்தை பிடித்து செல்லம் கொஞ்சி சமாதானம் செய்தாள்.
அவள் அம்மா காபி கப்போடு நமது நிரல்யாவை நோக்கி வந்தார்… நிரல்யா எட்டு வயதில் பாட்டி அழைக்க அவருடன் படிக்கச் சென்றாள் இப்பொழுதுதான் வந்திருக்கிறாள் அதனால்தான் அந்த கோபம் எல்லாம் …..
அம்மா ” நாளைக்கு தேவையானத எடுத்து வச்சாச்சா”
‘ ம்ம்ம் மா ரொம்ப எக்சைட்ஆ இருக்குமா நாளைக்கு ஃபர்ஸ்ட் டே காலேஜ் போறேன் ‘ என்றாள் இன்று முகம் மகிழ்ச்சியோடு
அவங்க அம்மா சரி போய் அத்தையை பார்த்துட்டு வா எத்தனை வருஷம் ஆச்சு , பாத்துட்டு வா..
இன்னைக்கு அயானா ஓட வெளிய போறேன் மா கொஞ்சம் வேலை இருக்குமா நாளைக்கு போய்ட்டு வரேன் என்று கூறி ஓடிவிட்டாள்
இரவு முழுவதும் ஹீரோயின் அம்மனிக்கு காலேஜ் எக்சைட்மென்ட்யில் தூக்கமே வரவில்லை… மறுநாள் சீக்கிரமாக எழுந்து காலேஜுக்கு கிளம்பி விட்டாள் 8 மணிக்கு ஸ்கூட்டியில் தனது தோழி அயானா உடன் கல்லூரிக்கு புறப்பட்டாள்..
கல்லூரிக்குள் நுழைந்து தனது ஐடி டிபார்ட்மென்ட் நோக்கி புறப்பட்டாள் ….

நிசி அர்ஜுன் வேகமாக பிரகாஷ்ஐ அடிக்க ஓடி வந்து கொண்டிருந்தான் அவனது நண்பன் விக்ரமை அடித்தால் …. பிரகாஷ்ஐ இன்னைக்கு ஏதாச்சு பண்ணனும் டா அவனா என்று ஆக்ரோஷத்துடன் அடிக்க ஓடி வந்து கொண்டிருந்தான் …. திடீரென்று இதயம் இனம்புரியாத உணர்வுடன் படபடப்பு கொண்டது யோசித்துக் கொண்டே ஓடி வந்து கொண்டிருந்தான்….

அப்போது எதிரே ஒருவன் வேகமாக ஓடிவந்து நிரல்யா மீது இடித்து நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர் … கையில் சிறாய்புடன் ஆக்ரோஷமாக எழுந்து அவன் கன்னத்தில் பளாரென்று ஓங்கி அறைந்தாள்
கண்ணு பின்னாடி வச்சுட்டு வரியா ஆக்ரோஷத்துடன் கூறிவிட்டு அவ்விடம் விட்டு நடந்தாள் ..அவனோ என்ன நடந்தது என்று ஸ்தம்பித்தான் ஆம் நமது ஹீரோ தான் நிசி அர்ஜுன் தான் … அவளை பிறகு கவனித்துக் கொள்ளலாம் என்று திரும்பவும் ஓடினான் பிராகஷ் அடிக்க

வகுப்பிற்க்கு வந்த அவளோ இன்னும் அதே கோபத்துடன் இருந்தாள் ‘காலைல இப்படி மூட ஸ்பாயில் பண்ணி விட்டானே’ என்று புலம்பிக்கொண்டே இருந்தவளை சமாதானப்படுத்தி வகுப்பு கவனிக்க வைத்திருந்தால் அயானா ….
மாலை வீடு திரும்பினாள் அவள் அம்மா அப்பா காலேஜ் எப்படி இருந்துச்சு கேட்க அவள் ஆத்திரத்துடன் காலையில் நடந்ததை கூறி விட்டு அவள் அறைக்கு சென்று காயத்திற்கு மருந்து போட சென்றாள்… அவள் அம்மா சரி பிரஸப் ஆயிட்டு அத்தைய போய் பார்த்துட்டு வா அப்படியே ஓ அத்தை பையன் நிஷி அந்த காலேஜ்ல தான் படிக்கிறான் அவன் கிட்ட உன்ன இடிச்சவன் பத்தி சொல்லி கண்டிக்க சொல்லு அவளும் பல வருடங்களுக்கு பிறகு தனது சிறுவயது தோழனை காணும் மகிழ்ச்சியில் கிளம்பி அத்தை வீட்டிற்கு சென்றாள்…
அத்தை வீட்டிலும் அதே கேள்வி இப்பதான் பார்க்க தோணுச்சா பிறகு அவரை சமாதானப்படுத்தி நலம் விசாரித்த பிறகு மாமா என அனைவரையும் பற்றி கேட்டுவிட்டு இன்று காலையில் நடந்ததை கூறினாள் ..
‘ஒரு பொறுக்கி வந்து இடிச்சிட்டான் அத்தை அதான் அஜூ சொல்லிட்டு போலாம்னு வந்தேன் ‘ இருக்கும்போது வெளியே ஒரு பைக் சவுண்ட் கேட்டுச்சு…
பைக்கை பார்க் செய்து வீட்டில் உள்ளே நுழைந்தான் அவளின் அவன் மறுபடியும் கல்லூரியில் தோன்றிய அதே உணர்வு படபடத்தது இதயம்
இந்த நிசியே வந்துட்டா சொல்லிட்டு போ என்று கூறினார் அவர் … ஹனியின் மனது படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது இனம் தெரியாத ஒரு உணர்வு பல வருடங்களுக்குப் பிறகு தனது அஜூவை பார்க்கப்போகும் சந்தோசத்தில் மெதுவாக வாசலை நோக்கி பார்த்தாள்..

அவனைப் பார்த்து அதிர்ச்சியானாள் நீயா ? என்று கேட்டு எழுந்தாள்
அவள் அத்தை நிசிய முன்னாடியே பாத்துட்டியா

அப்போது நிசி ‘ யாருமா இது’

‘ உன்னோட ஹனி டா’

அவ்வளவுதான் தனது ஹனியா காலையில் தன்னை அடித்தது என்று நினைத்து சிரித்துக் கொண்டு ஓடிவந்தான் நிரல்யா முன்னின்று இரண்டு கணத்தையும் நன்றாக பிடித்து இழுத்த சிவக்க வைத்தான்…. அவள் அத்தையும் ‘ விடுடா விடுடா விடுடா ‘ என்று கூறி விலக்கி விட்டார்..
‘ பாருங்க அத்தை அஜூ என்ன பண்றானு ‘ என்று தங்கள் சிவந்த கன்னத்தை தேய்த்துக் கொண்டே கூறினாள்..

‘என்னடா இன்னும் அவ கன்னத்தை கிள்ளுவது விடலையா பாவம் அவ ‘ என்று கூறி சமாதானப்படுத்தினார் …

.நிரல்யாவும் கோபித்துக்கொண்டு சரி ‘ நான் போயிட்டு வர்றேன் ‘
நிசி செய்வதறியாது ஒரு பரவசத்துடன் சென்றான் அவன் முகத்தில் அவ்வளவு சிரிப்பு தனது ஹனியை கண்டுவிட்டான் அல்லவா அவளது இரண்டு சந்திப்பும் கொடுத்த இனம் புரியா உணர்ச்சி என்று எல்லாத்தையும் நினைத்து ரசித்துக்கொண்டே தனது அறைக்குச் சென்றான்

சில வருடங்களுக்கு முன்பு

3ஆம் வகுப்பு படிக்கும் நிரல்யாவின் கன்னத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான் அஜு அவள் தனது சிவந்த கண்ணத்தை தேய்த்துக்கொண்டு அவள் அத்தையிடம் கம்பிளைன் செய்தாள்
அஜூ அவள் கன்னத்தைப் சிவக்க வைப்பதுதான் தனது பணி என்று எப்பொழுதும் கிள்ளி கொண்டே இருப்பான் …அவளின் குண்டான ஆப்பிள் கனி போன்ற கண்ணம் மிகவும் பிடிக்கும் நமது அஜுக்கு… அதனால்தான் அவளை ஹனி என்று அழைப்பான் .. எப்பொழுதும் அவலுடன் வம்பிழுத்து கொண்டே இருப்பான் ரசித்துக் கொண்டும் இருப்பான்.. 4ஆம் வகுப்பு படிக்கும் அஜு தனது அப்பாவுடன் ஃபாரின் செல்ல கிளம்பினான் வேதனையுடன் இனி யாரையும் பார்க்க முடியாது என்று அழுது கொண்டே கிளம்பினான் அப்பொழுது அவன் கண்முன் தோன்றிய அவனின் ஹனி அருகில் சென்று அவள் குண்டு கன்னத்தில் இதழ் பதித்து பாய் என்று கூறி விட்டு அழுது கொண்டே சென்றான்…

இப்பொழுது தான் இருவரும் பல வருடங்கள் பிறகு சந்திக்கின்றன… அதை நினைத்து சிரித்துக்கொண்டிருந்தான் அஜு…
கன்னத்தை தேய்த்துக்கொண்டே சிரிப்புடன் வீட்டுக்கு வந்தாள் கட்டிலில் படுத்து தனது சிறுவயது அஜுவையும் இப்பொழுது உள்ள அஜுவையும் நினைத்து ரசிக்க ஆரம்பித்தாள் உறங்கியும் போனாள் …..நாட்கள் அதன் போக்கில் சென்றது இருவரும் பேசாது காதலை வாயால் சொல்லாது கண்களால் பகிர்ந்தது கொண்டனர்..
சில நாட்களில் கல்ஜூரல்ஸ் வர அனைவரும் டிரடிஷனல் வந்தனர் இங்கு ஹனியோ தனக்கு பிடித்த பிளாக் கலர் சாரி கட்டி கல்லூரி வாயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் …அப்போது அங்கிருந்த நிசி ஹனியை பார்த்தான் காற்றில் பறக்கும் அவளது கேசமும் அவள் கலருக்கு ஏற்ற புடவையும் உறுத்தாத அழகு ஒப்பனையும் அவனை மயங்க வைத்தது… இங்கு ஹணிக்கும் அதேதான் அவனது அழகை பார்த்து மயங்கினாள் வேஷ்டி கருப்பு சட்டையில் கன்னத்தில் குழி விழ அழகாக நின்றான்… இருவரும் மெய்மறந்து நடந்து வந்து கொண்டிருந்தனர் அப்பொழுது ஹனியின் கால் தடுக்கி விட அர்ஜுன் ஓடி வந்து அவளது இடையை பிடித்து நின்றான் இருவர் கண்களும் நோக்கிட அளவில்லா காதலை இருவரும் கண்டனர் அவர்களின் கண்களில்… இந்த நிலையை இரு கண்கள் தனது செல்பேசியில் போட்டோ எடுத்தது.. எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்கள் என்று தெரியவில்லை வண்டிஹாரனில் மோன நிலையை கலைத்தனர் ஹனிகோ கன்னம் சிவந்தது வெட்கத்தில் ..

சிறிது நேரத்தில் வகுப்பை விட்டு வெளியே வெளியே செல்லலாம் என்று கேன்டினை நோக்கி நடந்து வந்தாள் ஹனி … அனைவரும் தன்னைப் பார்த்து சிரிப்பது போன்று தோன்ற யோசனையுடன் நடந்து கொண்டு வந்திருந்தால் அப்பொழுது நோட்டிஸ் போர்டில் இருந்த போட்டோவை பார்த்து ஆத்திரம் கொண்டாள்… அங்கே இருந்தது சிறிது நேரத்திற்கு முன் நடந்த அவர்களின் மோன நிலையின் போட்டோ வித் ஹெட்லைன்ஸ் “நிசியின் குஷி ” கீழே பை நிசி அர்ஜுன்…

எல்லை இல்லா கோபத்தோடு அஜூவை நோக்கி நடந்தாள் பலார் என்று கன்னத்தில் அறைந்து ” என்ன நினைச்சுகிட்டு இருக்க ” …. அவனோ அவளை விட அதிக கோபம் பெற்றான் நோட்டீஸ் போர்டு பார்த்து படித்துவிட்டு. அவளிடம் தான் செய்யவில்லை என்று கூறினான்…. அவளோ கண்டுக்காமல் அங்கிருந்து சென்றாள் கெட் லாஸ்ட் என்ற வார்த்தையுடன்… கல்லூரியை விட்டு கிளம்பிவிட்டான் வீட்டிற்கு போகும் செல்லும் வழியில் கண்களில் கண்ணீர் தனது ஹனி தன்னை இப்படி நினைத்து விட்டாலே என்று தன்னை நம்பவில்லை என்று அழுதுகொண்டே வீட்டை அடைந்தான்…
இங்கு ஹனியும் ஆத்திரத்துடன் அந்த நோட்டீசை கிழித்து விட்டு வகுப்பிற்கு சென்றாள் …….அங்கே வந்த பிரகாஷ் எப்படி ஹனி என் கல்ஜூரல்ஸ் கிப்ட் என்று கேட்டான்… என் கிட்ட வம்பு வச்சுக்கிட்டா இதுதான் நடக்கும் என்று கூறிவிட்டு கிளம்பினான்.

சில நாட்கள் முன்பு

சீனியர் எல்லாம் ஜூனியர்ஐ ரேகிங் செய்து கொண்டிருக்க அங்கே வந்த ஹனியை பிரகாஷ் தன்னிடம் ப்ரொபோஸ் செய்யுமாறு கூறிக் கொண்டிருந்தான்… அவள் மறுத்தாள் அழும் நிலைக்கு சென்று விட்டால் அப்போது அங்கு வந்த அஜூ பிரகாஷ் வார்ன் செய்துவிட்டு ….ஹனி கூட்டி க்கொண்டு விட்டு கிளம்பி விட்டான் அங்கு நின்ற அனைத்து ஜுனியர்ஸ் முன்னாளில் அவமானப்படுத்திய இவங்களை அசிங்கப்படுத்த வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தான்….

அதுதான் இவனின் இன்று செய்தது தப்பு ஏதும் செய்யாத அவளது அஜுவை அடித்து விட்டோம் என்று நொந்து கொண்டாள்…. அஜுவை சமாதானம் படுத்தலாம் என்று அவளது அத்தை வீட்டை நோக்கி சென்றோள் அங்கு அர்ஜுனும் ஆத்திரத்தில் ரூம்பில் எல்லாத்தையும் உடைத்துக் கொண்டிருந்தான் இதைப்பார்த்த ஹனி பயந்து கொண்டே உள்ளே சென்றாள்…. அர்ஜுனிடம் சாரி கேட்கையில் அவனோ அவளது கழுத்தை நெரித்து சுவரோரம் சாய்த்தான்
” என்னடி நெனச்சிட்டு இருக்க நான் அப்படி பண்ணுவேனா உன்னை அசிங்க படுத்த நான் நினைப்பேனா என் மேல அவ்வளவுதான் நம்பிக்கையா ” என்று ஆத்திரத்துடன் கத்திக் கொண்டிருந்தான்
மூச்சுவிட முடியாமல் திமிறினாள் அவனது கோபம் அவனை பயமுறுத்தியது மூச்சு விட சிரமப் படுவதை பார்த்து அர்ஜுன் அவளை இறக்கி விட்டான் ..
அவள் அப்படியே பயந்து நடுங்கிக் கொண்டு நிற்பதைப் பார்த்து அவளை இறுக அணைத்துக் கொண்டான் அவனுக்கு அவள் நடுங்கும் உடல் தெரிந்தது… நடுக்கம் குறையும் வரை அப்படியே அணைத்து இருந்தான் பிறகு தன்னை நம்பவில்லை என்ற வலியோடு அவளை நோக்கினான் சாரி என்றாள்
அவள் எவ்வளவு கூறியும் அவன் கண்டுகொள்ளாமல் கெட் அவுட் என்று கத்தினான் அவனுக்குத் தன்னை நம்பவில்லை என்ற ஆதங்கம்..
இவளும் அழுதுகொண்டே வெளியே வந்தாள் தன் மனதார காதலிக்கும் அவனை எவ்வாறு சந்தேகம் கொள்வேன் என்று புலம்பிக்கொண்டே சென்றாள்.. நிமிடத்தில் அர்ஜுனும் தான் செய்த தவறு புரிந்து ஹனியை தேடி வெளியே வந்தான் அப்போது வேகமாக வந்த கார் ஹனியே தூக்கி அடித்து விட்டு சென்றது.. அஜு கண்களில் தாரை தாரையாய் ஊத்தியது கண்ணீர் ஹனியின் அருகில் சென்றாள் ரத்தவெள்ளத்தில் கிடந்த அவளைப் பார்க்கவே அவனுக்கு என்னவோ செய்தது அவளை தூக்கிக்கொண்டு காரில் ஹாஸ்பிடல் நோக்கி சென்றான் போகும் வழியில்
” ஒன்னு இல்ல ஒன்னு இல்ல உனக்கு எதுவும் ஆகாது நான் இருக்கேன் நான் இருக்கேன் ” என்று புலம்பிக் கொண்டே சென்றான் …ஹனி அவனைப் பார்த்து
சாரி அஜு நான் உன்ன என்று திக்கித் திணறி கூற ஆரம்பித்தாள்.. அவன் ” எதுவும் பேசாத அமைதியாக இரு ” என்று கூறி அழுது கொண்டே சென்றான். மருத்துவமனையில் அட்மிட் செய்ய அரை மணி நேரம் கழித்து வெளியே வந்த டாக்டர் உயிருக்கு எதுவும் ஆபத்து இல்லை என்றார். அப்பொழுதுதான் அர்ஜுனுக்கு உயிரே திரும்பி வந்தது ஈவினிங் அவளை டிஸ்சார்ஜ் செய்து கொண்டு வீட்டிற்கு கிளம்பினான் ஹனி காயம் தன்னால்தான் என்று சரியாகும் வரை அவன் உடனே இருந்து அவளைத் தாங்கிக் கொண்டே இருந்தான் ஒரு வாரத்தில் அனைத்து காயங்களும் சரியாக இருவரும் பழையபடி கல்லூரிக்கு கிளம்பினர் …அர்ஜுனே ஹனியையும் கூட்டி சென்றான்

அவளை வகுப்பறை விட்டுவிட்டு அவனது வகுப்பிற்கு சென்றான் அங்கே நோட்டீசை வைத்தது யார் என்று விசாரித்தான் இதற்கெல்லாம் காரணம் பிரகாஷ் என்று தெரிந்து அவனை தேடி அலைந்தான் …..அவன் கண்ணில் பட்டு விட ஓடிப்போய் அடித்தான் வெறித்தனமாக அடித்தான் ஹனி அழுதது அவள் ரத்த வெள்ளத்தில் மிதந்தது எல்லாம் அவன் கண் முன் வர அவனை கண்மூடித்தனமாக அடித்தான் அவனது உதடுகளிள் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது உடம்பெல்லாம்ல காயம் பத்தாதற்கு கையையும் உடைத்துவிட்டான்…
இது தெரிந்து பதறியடித்துக் கொண்டு வந்தாள் ஹனி அங்கு அஜுவை எவ்வளவு தடுத்தும் அவன் நிறுத்துவதாக இல்லை ..
ஓங்கி அவனை அறைந்தாள் தரதரவென இழுத்துக் கொண்டு மெடிக்கல் ரூமிற்கு சென்றான் அவனை முறைத்துக் கொண்டே அவன் கையிலிருந்த காயங்கள் எல்லாம் சுத்தப்படுத்தி மருந்திட்டாள் அவளது மௌனம் இவனை வாட்ட சாரி என்றான்
அவளோ ” ஏன் அப்படி பொறுக்கி மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கே ” என்று திட்டினாள் ” நான் என்ன பண்ணேன் அவ பண்ண தப்புக்கு பனிஷ்மென்ட் தான் கொடுத்தேன் ” என்று சண்டை நடந்து கொண்டிருக்கையில் வாசலில் அயானா இருவரையும் பிரின்ஸ்பல் அழைப்பதாக கூறினாள் .. அங்கே அவர் விசாரித்துவிட்டு அஜுவை எவ்வளவு முடியுமோ அவ்வளவு திட்டிவிட்டு பிரகாஷ் தான் நோட்டீஸ் போர்டில் ஒட்டியதால் அவனை 3 மாதம் சஸ்பெண்ட் செய்தார்
அவரிடம் சாரி கேட்டு ஆத்திரத்துடன் திரும்பக் வீட்டிற்கு திரும்பினாள் ..அஜு பேசாத சென்றதில் வேதனையுற்றான்…..
மாலை அவளது வீட்டிற்கு சென்றான் வாசலில் நின்ற அவனது அத்தை” என்ன புதுசா வீட்டுக்கெல்லாம் வந்திருக்க ” என்று கிண்டலடித்தார் ..
அதற்கு அவனோ ‘பால் வைத்திருந்தால் பூனை வந்துதானே ஆக வேண்டும்’ மனதில் நினைத்து சிரித்துக் கொண்டான்

காலையில் நடந்ததை அவரிடம் கூறிவிட்டு ஹனியை சமாதானப்படுத்த அவளது அறையை நோக்கி சென்றான்…. அங்கே அவள் பால்கனியில் நிலாவை ரசித்து கொண்டிருந்தாள் ……அவளுக்கு அவ்வளவு சந்தோசம் தனக்காக அஜூ இத்தனை நாள் செய்தது எல்லாம் நினைத்து ரசித்துக்கொண்டிருந்தாள் அவளுக்கு அவளது அர்ஜுன் மேல் எவ்வாறு கோபம் வரும் கோபம் கொண்டது போல் நடித்துக் கொண்டிருந்தாள்…. இங்கு அர்ஜுனும் மெதுவாக கதவை திறந்தான் அவள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து மெதுவாக அவள் பின்னே சென்றான் திடீரென சூடான மூச்சுக்காற்று அவளது முதுகில் படுவது போன்று தோன்ற திரும்பிப் பார்த்தாள் .. அஜு மிக அருகில் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான் முதலில் அவன் பார்வையை பார்த்து வெட்கம் வந்தாலும் அவனை தள்ளி விட்டு ….

“இப்போ எதுக்கு இங்க வந்த ”

அவனும் எவ்வளவு கெஞ்சியும் அம்மனிக்கு மனம் இரங்கவில்லை …..

அவனும் சோகத்துடன் வீட்டுக்கு சென்று விட்டான் இரவும் அவளை எவ்வாறு சமாதானப்படுத்துவது என்று யோசித்துக் கொண்டே இருந்தான்
மறுநாள் ஞாயிற்றுக் கிழமையாக இருக்க அவள் வீட்டிற்கு சென்றான் அவள் அத்தையிடம் ரகசியமாக தனக்கு ஹனியை கரெக்ட் பண்ண ஐடியா தருமாறு கேட்டான்…
அவளது அத்தையும் ” என் பொண்ண கரெக்ட் பண்ண ஐடியா கேக்குறியே டா”
ஆம் அனைவருக்கும் தெரிந்தது இவர்கள் ஆடும் கண்ணாமூச்சி காதல் ஆட்டம் …பிறகு அவர் யோசித்து விட்டு அவளை எங்கேயாவது வெளியே கூட்டி சென்று அவளுக்கு பிடித்ததை வாங்கித் தருமாறு கூறினார் ….அவ நா கூப்டா வர மாட்டா… நீங்க சொல்லி கூட அனுப்பிச்சு விடுங்க அப்படின்னு அவள் அத்தையிடம் கெஞ்சி கொண்டிருந்தான் ….அவரும் நொந்துகொண்டு நிரல்யா என்று அழைத்தார் .. வெளியே வந்து பார்க்க அர்ஜுன் நிற்பதை பார்த்து மனதுக்குள் ரசித்துக் கொண்டு வெளியே கோபம் முகத்தை காட்டினாள்…. அவள் அவனுடன் வருவது போவது பிடிக்காதது போல் பாவனை செய்து ரசித்துக் கொண்டே சென்றாள் ..
அவன் பேசிக் கொண்டே வருகையில் இவள் எதுவும் பதில் அளிக்கவில்லை

அவனோ ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சாரி சாரி சாரி இனிமே அப்படி பண்ண மாட்டேன் ஆயிரம் தடவை சொல்லி விட்டான் ஆனாலும் அவனது ஹனி சம்மதிப்பதாய் தெரியவில்லை …
காதலனாக ட்ரை பண்ணலாம் என்று விட்டு அவளை ஒரு கடைக்கு கூட்டி சென்றான் அங்கே அழகான ஒரு சிகப்பு ரோஜா பூங்கொத்து வாங்கினாள்… நேராக அஜூ அவளது ஹனியை நோக்கி வந்தான் அவள் இதயம் தாறுமாறாகத் துடிக்க நின்றிருந்தாள்….
அவனருகில் வந்து இந்த ஹனி உனக்குத்தான் என்று கண்ணடித்துக் கூறினான் என்று அவன் அவளை நோக்க யில் அவளது பயம் கலந்து முகத்தை பார்த்து ரசித்துகொண்டே இந்தா என்றான்…. அவளும் இனி ஏதாவது செய்து விடுவான் என்று வாங்கிகொண்டாள்… இருவரும் காதலை கண்ணால் பகிர்ந்து கொண்டிருந்தனர் அஜு பார்வையில் அவள் வெட்கம் கொள்ள கண்ணன் தானாக செவ்வானமாக சிவந்தது அதைக்கண்டு இவன் ரசித்துக்கொண்டு நிற்க அவள் கண்ணம் சிவப்பதை மறைக்க வழி தெரியாத நின்றாள்…..அஜு மெதுவாக அவனது விரல்களை அவள் கன்னம் நோக்கி கொண்டுசென்றான் அவள் தலை குனிந்து நின்று கொண்டாள்… மெதுவாக வருடினாள் அவளது போன் ஒளிர திடுக்கென்று இருவரும் விலகி நின்றனர்…
பிறகு ஒருவர் முகத்தை ஒருவர் காணாமலேயே நிரல்யா அம்மா கூறிய அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றனர் …

இப்பயாவது ” என்ன மன்னிச்சிடு ” என்று கேட்டான் அவள் சிரித்து விட்டு உள்ளே சென்றார் ….
அவள் புன்னகையில் மெய் மறந்து ரசித்து நின்று கொண்டிருந்தான் …பின்னே வந்த நிரலின் தந்தை அவன் வாயை மூடினார்.. அவன் அசடு அசடு வழிந்து வீட்டிற்கு ஓடியே விட்டான்…
சில நாட்கள் அப்படியே அவர்கள் காதல் சொல்லாமல் கண்களால் காதல் கொள்ள இருவரின் நாட்கள் அதன் போக்கில் சென்றது….

அர்ஜுன் யோசித்துக் கொண்டே இருந்தான் நாளை ஹனியின் பிறந்தநாள் அவனது ஹனிக்கு என்ன கிப்ட் வாங்குவது என்று யோசித்துக் கொண்டே இருந்தான் ….அவன் அம்மா அருகில் வந்து
” என்னடா ரொம்ப யோசிக்கிறேன் வாழ்க்கையில் எப்படி முன்னேறதுனு யோசிக்கிறியா ”
” அவன் போங்கம்மா அதெல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம் நாளைக்கு என் ஆளு ஹனி பர்த்டே என்ன வாங்கலாம் சொல்லுங்க அப்படி என்ன ஐடியா கேட்டான்” ……
யோசித்துவிட்டு நீ ஹனிட பிரப்போஸ் செய்ட என கூற
அவனும் சரி என்று யோசித்துக்கொண்டே கிளம்பினால் அவளுக்கு கிப்ட் வாங்க ஒரு ஜுவல்லரி ஷாப்புக்கு சென்று மோதிரம் செலக்ட் செய்ய ஆரம்பித்தான் அப்பொழுது அவன் கண்கள் மின்னிட ஒரு மோதிரம் தெரிந்தது ஒரு ஹாட் இன்னொரு ஹார்டை கனெக்ட் செய்வது போல ….அது அவனுக்கு பிடித்து விட அதை செலக்ட் செய்து கொண்டு வீட்டிற்கு வந்தான் …
நாளைக்கு எவ்வாறு ப்ரபோஸ் செய்வது என்று பார்த்து செய்து கொண்டிருந்தான்

” எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்”
ஸ்டார்டிங் நல்லாவே இல்ல வேற ஏதாச்சு யோசிக்கணும்..
” எத்தனையோ பொண்ணுங்க பார்த்திருக்கேன் ஆனா நீதான் என் ஹர்ட்டுக்குள்ள வந்து என்ன மயக்கிட்ட” சீச்சீ இது வேண்டாம்
இவன் இவ்வாறு அக்கப்போர் செய்து கொண்டிருக்க.. வீட்டின் காலிங் பெல் சத்தம் கேட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தால் அங்கே ஹனி அவள் அத்தையிடம் பேசிக்கொண்டிருந்தாள்…பிறகு அர்ஜுனிடம் வந்து
” நாளை பர்த்டே பார்ட்டி இருக்கும் நீ வந்துரு ”
கூறிவிட்டு திரும்பயில் அவன் அவள் கையை லாவகமாக பிடித்தான் இழுத்து நிற்க வைத்தான் அவனும் திடீர் தாக்குதலில் செய்வதறியாது நின்று கொண்டிருந்தான்….
” அஜூ விடு என்ன இது ” என்று பேச முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்..

” என்னை மாமானு கூப்பிடு ” என்று வம்பிலுத்தான் …இந்த பேச்சில் அவள் மெய் மறந்தாலும் திமிரி கையை விலக்கி கொண்டு ஓடிவிட்டாள் …இந்த நிசியோ சற்று முன் தோன்றி அவளது முகபாவனைகளை எண்ணி ரசித்து சிரித்துக் கொண்டிருந்தான் ..என்ன அழகு மயக்கிறாலே என்ன என்று அவளை ரசித்துக் கொண்டிருந்தான் ……இரவு 12 மணிக்கு அவன் தான் முதலில் விஷ் செய்ய வேண்டும் என்று முழித்துக் கொண்டிருந்தான்…… அவளும் அவனுடைய விஷ்காக காத்துக் கொண்டிருந்தாள் ..12 மணியானதும் அவளுக்கு போன் செய்து ” விஷ் யூ மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் த டே ” என்று மட்டும் சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டான் நாளை ப்பிரபோஸ் செய்யப்போகும் குஷியில்…..அவள் மனம் வேதனை கொண்டது வேறு எதுவுமே பேசாமல் போனை வைத்து விட்டான் என்று ஏமாற்றம் கொண்டது……

மறுநாளும் அழகாக விடிந்தது அன்று அவள் கல்லூரிக்கு செல்லாமல் கட்டையைப் போட்டு கோவிலுக்கு செல்கிறேன் என்று கிளம்பிவிட்டாள்….. அவளது வரவை எதிர்பார்த்து காத்துக் கல்லூரியில் காத்துக்கொண்டிருந்த அஜுக்கு ஏமாற்றமே….
பிறகு அவள் அத்தையிடம் அவன் போன் செய்து என்னவென்று கேட்க
” ஹனி கோவிலுக்கு சென்று கொண்டிருப்பதாக கூறினார் …..

பிறகு அவனுக்கு என்ன வேலை காலேஜ்ல அவனும் கிளம்பி விட்டான் அவள் சென்ற கோயிலை நோக்கி சென்றான்…. ஹனியை வெகுநேரமாக தேடி கண்டு பிடித்தான் அப்படியே மெய்மறந்து சிலிர்த்து நின்றான் ….அங்கு அவள் சிவப்பு நிற சேலையில் மல்லிகை தலையில் சூடி இருக்க கண்களோ மையுடன் சிமிடிட அவள் காதில் போட்டதோடு அவள் பேசுகையில் அங்குமிங்குமாக ஆட… அவளது உதடு உறுத்தாத லைட் ரெட் லிப்ஸ்டிக் கொண்டிருக்க அப்படியே மெய்மறந்து ரசிக்க ஆரம்பித்தான் … அவளை நோக்கி சென்றான் பிறகு இருவரும் வீட்டிற்கு சென்றனர் …அவனும் அவன் அம்மாவும் 7 மணிக்கு ஹனியின் வீட்டை நோக்கி சென்றனர் அங்கே வீடு அழகாக மின்ன அனைவரும் ஹனிகா காத்திருந்தனர்…… சிறிது நேரத்தில் அவரது அம்மா கேக்கை ஓபன் செய்து விட்டு ஹனியை அழைக்க… கதவை திறந்து அந்த ஹனியை பார்த்து இவன் வழக்கம் போல வாயை மூட மறந்து ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தான்…
அவனது அம்மா அருகில் வந்து மானத்தை வாங்குதாடா வாய மூடு என்று கூறினார்…..அவன் அசடு வழிந்து அவளை ரசிக்க தொடங்கினான்

அவளோ டார்க் ப்ளூ கலர் ஃபுல் குர்த்தியல் தேவதையை மின்னிக் கொண்டு நடந்து வந்த பிறகே கட் செய்துவிட்டு அனைவருக்கும் ஊட்டியும் விட்டால் அர்ஜுனனுக்கு ஊட்டி விட்டாள்……பிறகு அனைவரின் கிப்ட் கொடுக்க அர்ஜுன் அருகில் வந்தவுடன் ஆரம்பித்தான்

நான் விழிக்க உன் முகம் வேண்டும்
நான் நடக்க உன் துணை வேண்டும்
என் தலை சாய்க்க உன் மடி வேண்டும் என் பிள்ளைக்கு நீ தாயாக வேண்டும் இதற்கு
நீ என் கை சேர வேண்டும்

என்று கூறி முட்டியிட்டு தான் வாங்கிய மோதிரத்தை அவனிடம் நீட்டினாள் அவள் உச்சகட்ட அதிர்ச்சியில் பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து நின்றாள்….. அவன் ஐ லவ் யூ என்று கூறி எழுந்து நின்றான் ..அனைவரும் கைத்தட்ட அவள் அப்பொழுது தான் சுயநினைவிற்கு வந்தாள் பிறகு கன்னங்கள் சிவக்க …..அவன் மோதிரம் போட வா என்று கண்ணாலேயே கேட்க அவளும் ஆமாம் உதித்த பிறகு அவன் கையில் அவள் அவளுக்காக வாங்கி வந்த மோதிரத்தை அணிந்து விட்டான் ..
அவள் வெட்கம் தாளாது அவள் அறைக்கு ஓடிவிட்டாள் அவனும் அவளைப் பின் தொடர்ந்து ஓடினான்….அவள் அறையை மூடும் போதே லாவகமாக உள்ளே நுழைந்தான் அவன் கள்வன் …
” கதவை சாத்திட்டு எங்க தப்பிக்கப் பார்க்கிற எனக்கு பதில் சொல்லிட்டு போ” என்று அவள் கையை பிடித்து இழுத்தான்…. அவளுக்கோ அவள் முகம் பார்க்க முடியாமல் தலை குனிந்து நின்றாள் அவன் அவள் தாடையைப் பிடித்து நிமிர்த்தி கண்ணில் காதல் செய்ய அவள் கண்ணம்மோ எல்லை மீறி சிவந்தது திரும்பவும் இவன் ஐ லவ் யூ என்று காதலோடு கூற அவளும் தன்னை சமன்படுத்தி ஐ லவ் யூ டூ என்று கூறினாள் கூறிய நிமிடங்களில் அவன் அவளை இதழை கொய்தான்

அங்கே அவர்களின் சிறு வயது முதல் கொண்ட காதல் காவியம் அழகாக அரங்கேறியது….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. நிரல்யா அஜுவின் காதல் கண்ணாமூச்சி ஆட்டம் அழகா இருந்துச்சு..காதல்ல நம்பிக்கை தான் அனைத்தும்..‌ஹனி அஜூவை நம்பியிருக்கணும்..