என்றுமில்லாத அமைதியாய் காரில் வந்தவளைப் பார்த்து” என்ன ? ஏதாவது தொண்டைல அடைச்சுக்குசா ?”
“ம்ஹும் இல்ல. ஒரு விஷயத்தை பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்.”
“அப்பிடி என்ன விஷயம் அது?”
“எப்பிடி உன்கிட்ட லவ் வ சொல்றதுன்னு தான்” என்று பட்டென்று உடைக்க
அவனோ,”வாட்???” என்று அலறி காரை பிரேக்கிட்டு நிறுத்தினான்.
“ஏன் டா இப்பிடி ஷாக் ஆகுற?”
“ நீ..நீ விளையாடுறியா?”
“நான் இப்போ விளையாடுற மூட் ல இல்லைடா கண்ணா” என்று அவன் கன்னத்தை தட்டி விட்டு வெளியில் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.
இவன் தான் முழி பிதுங்கி வெளியே வரும் அளவிற்கு அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சிகளை தான் தாங்குவான் பாவம்.
இனியா காதலிக்கின்றேன் என்று சொன்ன போது வராத தடுமாற்றம் இப்போது வருவதை நினைத்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“நீ…எ..எனக்கு…இல்ல..நீ…வந்து” என்று குலற
மொழியோ அவனைப் பார்த்து “ஏன் டா இப்போ தான் தமிழ் கத்துக்கிட்டியா? இப்பிடி திக்குற?”
“ஆங்!!!”
“சப்பா…..உன்னோட முடியல டா சாமி”
“உன்கிட்ட தெளிவா சொல்றேன் கேளு. உன்மேல எப்போ எப்பிடி லவ் வந்துச்சுனுலாம் தெரியாது. ஆனா உன்னை தவிர வேற யாரையும் லவ் பண்ணவும் மாட்டேன். உனக்கு பிடிச்சா சொல்லு. இல்லையா போய்ட்டே இரு. உன்னை ஃபோர்ஸ் பண்ணமாட்டேன். அதுக்காக உன்னை லவ் பண்ண கூடாது னு லாம் சொல்லாத. புரியுதா? “ என்க
அவன் நொந்து நூடில்ஸ் ஆகி இருக்கையில் சாய்ந்து கண்மூடி அமர்ந்தான். அவளிடம் மறுத்து கூறவும் ஏனோ முடியவில்லை. அதற்காக எனக்கு கொஞ்சம் கொடு என்று கேட்கவும் ஈகோ விடவில்லை.
அவனின் நிலையை பார்த்தவள் அவனின் தோளை வேகமாக
உலுக்கி” டேய் ! டேய்! எந்திரிடா என் அம்மா தேடுவாங்கடா. அப்பா வேற என்னைக் காணோம் னு தவிச்சு போய் இருப்பாரு. என் மாமா வேற மருமகளுக்கு என்னாச்சோ ஏதாச்சோ னு பதறிட்டு இருப்பாரு. மணி வேற எட்டாச்சு” என்று தன் பாட்டுக்கு ஓவர் ரியெக்ஷன் கொடுத்து புலம்புவதை பொறுக்க முடியாமல் “ஏய் !!! நிறுத்து” என்று கத்த
உடனே நல்ல பிள்ளை போல வாயில் விரலை வைத்து அமைதியானாள்.
இதை தான் புயலுக்கு முன் உள்ள அமைதி என்பார்களோ தெரியவில்லை.
“ஐயோ! தலை வேற சுத்துற மாதிரி இருக்கே” என்று முணங்க
அவள் மெதுவாக அவனைப் பார்த்து
“ பிரெக்னென்டா இருக்கியோ?” என்று கேட்டு ஒன்றும் அறியாத பிள்ளை போல முழிக்க
அவன் கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தான்.
வெகு நேரம் தொடர்ந்த அமைதியை குலைக்க அவளே மீண்டும் “ நேரம் ஆச்சு…..வீட்டுக்கு போவமா….?” என்க
அவளை ஒரு பார்வை பார்த்தவன் காரை செலுத்தினான்.
வீட்டிற்கு வந்த பின் அவளை திரும்பி பார்க்காமல் சென்றதை பார்த்து சற்று வருத்தமாக இருந்தாலும் அதை வெளியில் காட்டாது வீட்டிற்குள் சென்றாள்.
“என்னாச்சு மா? அவன் என்ன சொன்னான்”
“எதுவும் சொல்லலை கா. மூஞ்சை தூக்கி வச்சிட்டு போய்ட்டான்” என்று ஸ்கூல் பிள்ளை போல தன் அக்கா திவ்ய பாரதியிடம் கோள் மூட்டினாள்.
“அவனுக்கு கொஞ்சம் டைம் குடு குட்டிமா. உன்னோட அதிரடி லாம் தாங்க அவனுக்கு பெரிய மனசு வேணும் ல?”
“என்னை கலாய்க்கிற இல்ல?” என
அவள் புன்னகைத்தாள்.
“சரி அத்த வுடு. எங்க உன் புருஷன்?”
“கொஞ்சம் கூட மரியாதை குடுக்க மாட்டியா டி அவருக்கு?”
“என்ன பண்றது எனக்கு வர மாட்டேங்குதே” என்று சிரிக்க பாரதியும் சேர்ந்து சிரித்தாள்.
“அவருக்கு இன்னைக்கு பிளைட். அத்தையும் மாமாவும் அவரோட அண்ணன் வீட்டுக்கு போய்ட்டாங்க. அதான் இங்க வந்துட்டேன்.” என்று நான்கு மாத கருவை சுமந்து அன்னை வீடு வந்த தமக்கையை வாஞ்சையாக பார்த்தாள்.
“குட்டி பையன் என்ன சொல்றான்?”
“அவன் என்ன சொல்லுவான். பைளைட் ஓட்ட போன அப்பா என்னைக் கொஞ்சமாலே போய்ட்டாரு. அவர சீக்கிரம் வர சொல்லுங்க னு சொல்றான்” என்று அவள் பெரூமூச்சு விடுவதைப் பார்த்து
“இது அவன் சொன்ன மாதிரி இல்லையே நீ சொல்ற மாதிரி ல இருக்கு.”
“யாரு சொன்னா என்ன. ஜ ரியலி மிஸ் ஹிம். அதோட இவனையும் பைலட் ஆக்க கூடாதுனு சொல்லிடுவேன்”
மொழி,” ஹா ஹா ஹா. பாவம் என் குட்டி பையன்.”
பாரதி,” ஆனா ஒன்னு எதையும் அவன் மனசில திணிக்க மாட்டேன். அவன் என்ன ஆசைப் படுறானோ ஆகட்டும். பைலட் ஆனாலும் ஓகே தான். ஆனா இவன் அப்பா மாதிரி என்னை டென்ஷன் படுத்தி பாக்காம இருந்தா சரி.”
என்று இவர்கள் அலட்டிக் கொண்டு இருக்க, இவர்களின் தாயும் தந்தையும் ஹோட்டலில் இருந்து வேலை முடித்து வந்தவுடன் குடும்பமாக சேர்ந்து பேசி மகிழ்ந்து உண்டனர்.
இங்கு இவனின் நிலைமை தான் மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தது.
இன்று அவள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் வண்டாய் காதில் மொய்க்க
உறக்கம் வராமல் உருண்டு பிரண்டான்.
இனியா தான் வேறொருவரை மணக்க போகிறேன் என்று ஒதுக்கிய பின்னர் அவனிடம் தன் மனதை கூறிய மற்ற பெண்களிடம் , அவர்களை வேண்டாம் என்று மறுத்தவனால் மொழியை மறுக்க முடியவில்லை. ஒரு வேளை சிறு வயதிலிருந்து ஒன்றாக வளர்ந்த பாசமோ என்று குழம்பினான்.
அன்பான அடக்கமான பெண்ணை தன் மனைவியாக்க எதிர்பார்த்தவன், இவளின் அதிரடி குணம் சரி வருமா என்று யோசித்தான்.
அத்தோடு அவளிடம் போட்ட செல்ல சண்டைகள் எல்லாம் அழியா நினைவுகளாக தன் மனதில் பதிவதன் காரணம் தன்னையும் அறியாமல் அதை தன் மனம் விரும்பியதா என்றும் யோசித்தான்.
இப்படியே விடிய விடிய நிறைய யோசித்தவன் காலையில் ஆபிஸிற்கு காலை நான்கு மணிக்கே வந்து மேசையில் படுத்து உறங்கினான்.
ஆனால் அதன் பின்பும் இவன் எழும்ப வில்லை. ஏனென்றால் இவன் இங்கு உறங்குவதை கூட கணக்கில் எடுக்காமல் குறும்பட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அத்தோடு மொழியின் வீர தீர செயல் திரவ்யாவின் மூலம் நட்பு வட்டத்தின் மொத்தத்திற்கும் பரப்பப் பட்டது. ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
பின் நரேஷ் தான் பாவம் பார்த்து காலை எட்டரை மணியிற்கு அவனை எழுப்பி சாப்பிட அழைத்தான்.
சாப்பிட அமர்ந்த போதும் மொழியை அவன் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. ஆனால் அவளோ இயல்பாக எல்லாரிடமும் வாயாடிக்கொண்டிருந்தாள்.
பேச்சு வாக்கில் ஜஸ்டின்,திரவ்யா காதல் விவகாரமும் போட்டு உடைக்கப்பட அந்த இடமே கலகலப்பாக மாறியது.
பின் ஓடும் நேரம் வேலையை ஞாபகப் படுத்த மீண்டும் வேலையோடு ஐக்கியமானார்கள்.
குறும்படத்தின் வெற்றியை பகிர்ந்து கொண்டாடி ஸ்டேட்டஸ்,மற்றும் இன்ஸ்டா ஸ்டோரிகள் எல்லாம் போட்டு முடித்தனர்.
மகிழ், தான் ஒரு தெளிவு பெறும் வரை அவளிடம் சற்று ஒதுங்கி இருப்பது மேல் என்று நினைத்தான்.
ஆனால் அவனால் நினைக்க மட்டுமே முடிந்தது.
ஏனேனில் மொழியின் அடுத்த இம்சைக்கான அடித்தளம் அவனின் அத்தை மூலம் அன்று இரவே போடப்பட்டது.
மகிழும் மொழி மீது தனக்கிருக்கும் எண்ணம் பற்றி அறியவும் இவர்களின் கதை புத்தகத்தில் ‘உ’ என போடப்பட்டது…