இதோ இங்கு அமர்ந்து ஏதோ ஒரு சின்னப் பெட்டிக்குள் உலகத்தையே கற்றுக் கொண்டிருக்கிறாளே இவள் தான் இவ்வீட்டின் ஒரே பெண் வயது 12. முன்பெல்லாம் இவ்வயது குழந்தைகள் துறுதுறுவென்று ஓடியாடி விளையாடிக்கொண்டு திரிவார்கள். ஆனால் இவள் எங்கும் செல்ல மாட்டாள், யாரிடமும் பேச மாட்டாள். பேச மாட்டாள் என்பதைவிடப் பேசுவதற்கு யாருமில்லை என்றே கூறலாம். எங்கு! இவளுடைய அப்பாவிற்கு அரவணைக்க அக்கா, அடித்துப் பிடிக்க அண்ணனென இருந்தார்கள். இவளோ ஒற்றைப் பனைமரம். எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்கிறீர்களா? நான் இந்த வீட்டின் மூன்று தலைமுறைகளைக் கண்டவனாக்கும்.
சரி குழந்தை அரைமணிநேரமாக அப்பெட்டிக்குள் எதைத்தான் தேடுகிறதென்று கொஞ்சம் எட்டி பார்ப்போமே!
ம்ம்க்கும்.. குழந்தைக்கு வயிறு சரியில்லை போலும். அதற்கு என்ன செய்வதென்று அப்பெட்டியை தட்டுகிறாள். இதைக்கூட அன்னையிடம் கேட்க அவளிருப்பதில்லையே..! அன்றெல்லாம் இந்த வீட்டின் பெரியம்மாள் அவர் மகளுக்கு எதெதையோ கூறுவார். அடுத்தவரிடம் எப்படி நடக்க வேண்டும், யார் யாரிடம் எப்படிப் பேசவேண்டும், இன்னும் பிற பெண்களுக்குரிய விஷயங்கள். அதெல்லாம் என் காதில் விழும்போது ஆண்பிள்ளையான எனக்கு “இதைப்போய்க் கேட்டு விட்டோமே..” என்றாகிவிடும். இன்று சாதாரண விஷயத்தைப் பகிர கூட இவள் அன்னைக்கு நேரமில்லை. என்ன விசித்திர மனிதர்களோ..! தலைமுறைக்குத் தலைமுறை மாறுகின்றனர். இவள் பெற்றோர் ஓடி ஓடி உழைப்பதெல்லாம் யாருமின்றி ஒடுங்கி கிடக்கும் இவளுக்குத்தானே. நேரமின்றி ஓடும் இக்கால மனிதருக்களுக்குத் தெரியவில்லையா? அந்நேரம் காட்டும் நாங்கள் எக்காலமானாலும் ஒரு நிமிடத்திற்கு 60 நொடிகள் தான் ஓடுகிறோமென்று.
காலமும் வேகமா போகுது.. எல்லாரும் எதுக்கு ஓடுறோம்ன்னு தெரியாமலே ஓடுறாங்க.. கேட்டா எதிர்காலத்துக்காம் 🤦♀️🤷♀️
எதிர்காலத்துக்காக ஓடி நிகழ்காலத்தை இழக்கின்றனர்🤷♀️..
மிக்க நன்றிகள் அக்கா🤩😍🤩😍🤩😍🤩😍😊☺😊☺😊☺😊🤗🤗🤗🤗🤗🤗🤗
Nishalini …sema ma ..unmai tha .ini intha generation epdi tha irukumnh nenaikiren..idelam kasapana unmaigalum kuda
உண்மைதான்🙂..
Thankyou so much😍🤩😍🤩😍🤩😍😊☺😊☺😊☺😊🤗🤗🤗🤗🤗🤗🤗
சூப்பரான கதை
மிக்க நன்றிகள்😍🤩😍🤩😍😊☺😊☺😊☺😊🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
ஆழமாக மனதை வருடிய கதை. குறுகிய வார்த்தைகளை பயன்படுத்தி நிறைவான கதையை தந்தமைக்கு வாழ்த்துகள்
மிக்க நன்றிகள்😍🤩😍🤩😍😊☺😊☺😊☺😊🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
ஆழமாக மனதை வருடிய கதை. குறுகிய வார்த்தைகளை பயன்படுத்தி நிறைவான கதையை தந்தமைக்கு வாழ்த்துகள்
மிகவும் அருமை. வாழ்த்துகள்
மிகவும் அருமை. வாழ்த்துகள்
தற்போதைய இயந்திர உலகத்துக்கு ஏற்ற படைப்பு..கிடைக்கும் நேரத்திலும் வீட்டிலுள்ளவர்களுடன் நேரம் ஒதுக்காது செல்போனிலையே மூழ்கிப் போகிறோம்..சிறந்த பதிவு.. வாழ்த்துக்கள் சிஸ் 💐💐💐