விரியாதிருந்த வானம்விழிதிறவாத மனிதர்களின் நடுவே காத்திருந்தாள் அவள். இமைகள்சிமிட்டாது, இரவென்பதும் மறந்து சிரித்து கொண்டிருந்தாள் அழகான பெண்ணவள்.
காலத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாது கடவுளின் திட்டத்திற்கு இணையாக போரிடாது வாழ்வை முடிக்க துணிந்தவள் சிரித்து கொண்டிருக்கிறாள் விண்மீன் தோட்டத்தில் நிலவு பூ பூத்திருந்த நேரத்தில். மூன்று வருடத்திற்கு முன் இது போல் ஒரு முழு பௌர்ணமி நாளில் தான் வாழ்க்கையை முடிக்க எண்ணினாள்.
வேதனை சூழ கண்ணீர் அருவியாய் பொழிய மனபாரம் தாங்கா நிலையில் அனைத்தையும் இறக்கி வைத்து நீண்ட நித்திரை வேண்டி நின்றவள் இதோ நித்திரை இழந்து நிதமும் தவிக்கிறாள் அந்த கருப்பு கூண்டுகளின் வெளியே… மனிதபிறவியாய் இருந்தவள் இப்போது எங்கனமோ?
எவரும் அறியவில்லை யார் அவள் என்பது…
இருட்டில் நீண்ட கூந்தல் பிரித்திட்டு நடப்பதால் பேய் எனப்பட்டாள் அவள்.
கூந்தல் பிரித்திட்டு சாவின் விளிம்பை தொட்டு திரும்ப வந்ததால் மனிதபிறவி என நம்புகின்றனர் அவளை. இன்றும் இருவரும் ஒருவரே என யாரும் அறியவில்லை. அறிந்துகொள்ள விரும்பவில்லை.
பயத்தினால் இரவுபொழுதிலே வெளியே வராத மாந்தரை நினைத்து
கேலிபுன்னகை சிதறியவள் தன் நாசியை திறந்து மணம்பிடிக்க ஆரம்பித்தாள் நாயினை போல் புதிதாய் அரங்கேற்றப்பட்ட வெள்ளைகோட்டையை வாசம் பிடித்தாள்.
சுண்ணாம்பு வாசம் ஆளைத்தூக்கியது. நீண்டதாய் வாசம் இழுத்தவள் முகத்திலோ பேரானந்தம்.
மனிதனா?மிருகமா?ஆவியா?
யாரும் அறியா கேள்விக்கு பதில் அவளிடம் மட்டுமே…வாய் திறவாளா
விசித்திரமானவள்….
கல்லறை காதலி அவள்
இந்த சௌமி அக்கா கூட சேர்ந்து சேர்ந்து அவளை போல தற்கொலையை குழப்பி குட்டம் அடிச்சு இப்போ பேயை குழப்பி அடிக்குற அக்கா நீ 😐😐😼😼
இரண்டும் சேர்க்கை சரியில்ல 😪😜😜 .
பட் கதை வேற லெவல் அக்கா .
தொடர்ந்து எழுதுங்க 🤗🤗
உங்கூட சேர்ந்து தான் இரண்டுபேரும் இப்படி ஆகிட்டோம் 😜😜 மிக்க நன்றி டா ❤️
🙄🙄🙄🤔அவ பேயா இல்லயா 🤔🤔🤔
தெரியலயே மா 🥺🥺🤪🤪
மிக்க நன்றி சகி ❤️
மிகவும் அருமை. வாழ்த்துகள்
அருமையான பதிவு. வாழ்த்துகள் சகி ❤
மனிதனா!!மிருகமா!!ஆவியா!!நிஜமா விசித்திரமான படைப்பு தான்🤩🤩.. வாழ்த்துக்கள் சிஸ் 💐💐
சூப்பரான கதை