Loading

அழகான மாலை . சில்லென்று வீசிய குளிர் காற்று. சாராலாய் தூறத்தொடங்கியது மழை. நித்திலா அருகிலிருந்த நிழற்குடைக்குள் வேகமாக ஒதுங்கினாள். அங்கே கரிய நிறமும் பருத்த உடலும் கண்கள் இரண்டும் சிவப்பு நிறத்துடனும் தலைமுடிகளெல்லாம் அலங்கோலமாக காட்சியளிக்க பார்த்தவுடன் பயத்தை கொடுக்கும் தோற்றத்துடன் ஒருவர் நின்றிருந்தார்.

நித்திலா பயத்துடன் வெளியே யாராவது வருகிறார்களா என பார்த்துக்கொண்டிருந்தாள். அந்நேரம் நன்றாக உடையணிந்த அழகான வாலிபன் ஒருவன் நிழற்குடையினுள் ஒதுங்கினான். அவனைப் பார்த்ததும் நித்திலா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

சிறிது நேரம் கடந்தது. மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நித்திலாவிற்கு தன்னை யாரோ உற்றுநோக்குவதாக தோன்றியது. அந்த விகாராமான மனிதனாக தான் இருக்கும் என்று நினைத்தபடி திரும்பியவளின் அருகில் உரசுவது போல வந்து நின்றான் அவ் அழகிய வாலிபன் . அவனது பார்வைகள் அத்தனை உவப்பானதாக அமையவில்லை. அவள் சற்று விலகி நின்றாள். அவனோ சட்டென அவளது கைகளை பிடித்துவிட்டான். நித்திலா அரண்டுபோய் நின்றுவிட்டாள்.

அப்போது நித்திலாவால் விகாராமான மனிதனாக விழிக்கப்பட்ட அந்நபர் அவ் வாலிபனின் கைகளிலிருந்து அவள் கைகளை விலக்கி என்னடா என் தங்கச்சி கிட்டையே சேட்டை பண்றியா
என அவனை நன்றாக திட்டித் தீர்த்தார். பின்னர் நித்திலாவைப் பார்த்து தோற்றத்தைப் பார்த்து ஒருவரை எடை போடக்கூடாது அம்மா. பேரூந்து வந்துவிட்டது வா போகலாம் என அவளை அழைத்துக் கொண்டு பேரூந்தில் ஏறினார். நித்திலா அந்த விசித்திர மனிதனை உள்ளுக்குள்ளே வியந்தபடி வீட்டை வந்தடைந்தாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

10 Comments

  1. உடையிலும் உருவத்திலும் என்ன இருக்கின்றது..அதையெல்லாம் தாண்டி உள்ளத்தையே பார்க்க வேண்டும்..சிறந்த படைப்பு.. வாழ்த்துக்கள் சிஸ் 💐💐💐