வரமாய் வந்த துணை நீதான்
The love between me and you is like a union of body and soul..
காதல்..
உனக்கும் எனக்கும் இடையே இருக்கும் அந்த காதல் உடலயும் உயிரையும் ஒத்தது.. இரண்டாலும் தனித் தனியே உலகில் ஜீவித்திருக்க இயலாது.. அது கடவுள் தந்த வரம்..
அத்தியாயம்: 1
அது காடும் காடு சார்ந்த இடமுமாம் முல்லை நிலம்..
அந்நிலத்தின் மரங்கள் அடர்ந்த கானகத்தின் நடுவே, கானம் பாடும் குயில் போல் கேட்டது மங்கையின் சிரிப்பொலி..
கானகம் பல சிற்றருவிக்கு தாயகம் என்பதால், அங்கு ஓடிய சிற்றோடையை பாறை மேல் அமர்ந்து, தன் சகாக்களுடன் சந்தோஷமாக கால் நனைத்துக் கொண்டிருந்தது ஆடவனின் பிரபஞ்சம்..
நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் அது இன்றி பிரபஞ்சம் கிடையாதே.. அவை அனைத்தையும் ஒரிடத்தை கொண்ட பெண் இல்லாது அவன் இல்லை..
ஏற்றமும் இறக்கமும், மேடும் பள்ளமும், வளைவுகளும் கொண்டது நிலம் என்றால், அத்தகைய வதனத்தை கொண்டவள் ஆடவனின் ஜகம் தான்..
நீந்தி கரை சேர முடியாது ஆழமான பகுதியை கடல் என்றால், மங்கையின் கூந்தலும் கருங்கடல் தான்.. அலையலையாய் காற்றில் அசைந்தாடும் கூந்தலில் சிக்குண்டவன் மீள முடியாத அந்த ஆழியில் விரும்பியே மூழ்கிப் போவான்..
ஜீவனை உயிர்ப்புடன் வைத்திருப்பதும் அதை தூக்கி எரிவதும் வாளி தான்.. அந்த வாளியின் சக்தியை பெண்ணவனின் நேத்திரத்தில் உணர முடியும்.. நங்கையின் பார்வையில் தான் உயிர் ஜனிக்கும் இடமும், உயிர் குடிக்கும் வாலும் ஒளிந்துள்ளது..
தன்னை சரணடையும் யாரையும் தன்னுள் ஸ்ரீகரித்து ஏற்றுக் கொள்ளும் தன்மை அக்னிக்கு உண்டென்றால்.. அவளின் தகிக்கும் மேனியை அணைத்து, அவளுள் புதைந்து சாம்பலாகி அவளின் மேனி தழுவிக் கிடக்க சம்மதம் சொல்லாதவர் யாரிருப்பர்..
யாரும் வரையறை செய்ய இயலாத பேதையுடன் காதலாய் காமம் நிவர்த்தியடைய, கலவியலில் பாம்பை போல் பிண்ணி கூடி சுகமறிந்து கழிக்கும் அந்த நிமிடங்களில் உடலும் மனமும் நிலம் விட்டு ஆகாயம் பறந்திருக்கும் அவளோடு..
இப்படியாக பஞ்சபூதங்களையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் மங்கையின் அழகை கண்களால் தழுவி, அவளின் சிணுங்கள் மொழிக்கு செவி சாய்த்து, பெண்மையின் வாசம் நுகர்ந்து, தேன் கலந்திட்ட பாலான உமிழ் நீரின் சுவையறிந்து, மெய்யுடன் மெய் கலந்து ஈருடலை ஓர் உயிர்காக்கி, தன் ஐம்புலன்களாலும் ஆட்சி செய்யும் நோக்குடன் நின்றிருந்தான் அந்த இளைஞன்..
பாறையின் மேல் அமர்ந்திருந்த அவனின் அப்சரஸ்ஸை காண்கையில் தன்னை சுற்றி இருக்கும் நண்பர்கள் யாவரும் மாயமாய் மறந்து போனதை போல் ஓர் உணர்வு அவனுள்..
தன்னுடன் வந்த அனைவரும் ஆனந்தமாய் இயற்கையில் லயித்திருக்க இவனோ அவளிடம் லயிக்க விருக்கும் நேரத்திற்காக தவமிருந்தான்..
தவத்தின் பலனாய் வரம் கிடைக்க வேண்டி.. தன்னருகே அவளை வரச் சொல்லி சமிக்ஞை செய்ய..
மங்கையோ, தன் மருண்ட விழிகளால் மறுப்பை நாணத்துடன் தெரிவித்தாள்..
ஆடவனின் விழிகள் கோபத்தை காட்டினாலும், மங்கையின் பாவணையில் உதடுகள் வளைந்து புன்னகை சிந்தி அந்த கோபத்தை பொய் கோபம் என்றது..
உடலின் ஒவ்வொரு அணுவும் தன்னவளுக்காக பித்து பிடித்து கிடக்க.. ஏக்கம் தீர்த்து வைக்க வேண்டியவளோ தன் மோகன பார்வையாலும் வசீகர சிரிப்பாலும் அதை கூட்டிக் கொண்டே சென்றாள்..
இருள் கவியத் தொடங்க.. வந்த கூட்டம் தன் கூடு தேடி செல்லத் தொடங்கியது.. இதை விட அறியதொரு சந்தர்ப்பம் அமையாதென எண்ணி பிறர் அறியா வண்ணம் அவளின் கரம் பற்றி இழுத்துச் சென்றான் மீண்டும் அந்த அருவிக் கரைக்கே..
சூழ்ந்து கொள்ளும் இருள் ஒருவித பயத்தை தந்து என்றால், தாபம் கொண்டு மோகத்தீயால் எறிந்த படி தன் முன் நின்ற ஆடவனும், அவனின் அணைப்பும் உணர்ச்சி சுழலுக்குள் சிக்க வைத்தது..
நெற்றியில் உருண்டோடிய முடிக் கற்றையை காது மடலில் சிறை வைத்தவனின் விரல்கள், நங்கையின் மேனியில் ஊறத் தொடங்கியது..
அச்சத்தாலும் நாணத்தாலும் சிறு சிறு புள்ளியாய் மெவி நின்ற வியர்வை துளியை அமுதமென பருகியவன்.. தன் மங்கையையும் பருகத் தொடங்கினான்..
எத்தனை மணித்துளிகள் தந்தாலும் திருப்தி படுத்த முடியாத, தன்னிறைவு அடைய விரும்பாது ஒன்று உண்டென்றால் அது தன் இணை சேரும் இனிய பொழுது தான்..
இங்கு இவனுக்கு கிடைத்ததோ பத்து நிமிடங்களுக்கும் குறைவான நேரம்.. அதற்குள் தன் தேடலின் ஆரம்பத்தை தொடங்கி, முதல் சுற்றை முடித்திருத்தான் அவசர அவசரமாக..
ஒற்றை கூடல், இது போதாது என உடலும் உள்ளும் சேர்ந்து கதற, அடுத்த கூடலுக்கு தயாராகி தன் இணையை நாடி அவளின் முகம் கண்டு நிதானித்தான்..
பெண்ணவளின் நடுங்கும் உதடுகளும்.. கலங்கிய கண்களும்.. நலிந்த தேகமும் ஆடவனை புன்னகைக்கச் செய்தது..
“Don’t you like this, bunny?.” என அவன் கேட்க கேள்விக்கான பதிலை அவனின் இதழில் அழுத்தமாக தன் இதழ் பதித்து சொல்ல..
“அப்ப ஏ அழற.. ” என்றவன் திரண்டு நின்ற விழி நீரை துடைத்தெரிந்தான்.. ஆனால் அது நிறுத்த மாட்டேன் என்பது போல் வடிந்து கொண்டே இருந்தது..
“என்னால உன்னோட கண்ணீர பாக்க முடியாது bunny.. speak up.. ” என அவளின் உள்ளத்து உணர்வை வெளிமொழியச் சொல்ல..
“இது தப்பில்லயா.. ” என்றாள் பெண்..
“தப்பு தா.. பட் உங்கிட்ட நா.. தப்பில்ல.. you are my soul.. என்னைக்கும் அது பிரிஞ்சி போகாது.. ” என்றவன் நெற்றியில் முத்தமிட.. நங்கையின் கரங்கள் ஆடவனை ‘ என்னை விட்டுச் சென்று விடாதே..’ என்பது போல் இறுக்கமாக கட்டிக் கொண்டது..
அந்த அணைப்பு தணிந்திருந்த மோகத்தை விசிறி விட்டு செல்ல.. மீண்டும் பற்றி எரிந்தது உணர்வுகள்..
ஆனால் இம்முறை தேடுதல் முற்று பெறாது போனது..
ஏனெனில் பெண்ணவளை அணைக்கும் முன் அவன் கடிகாரத்தை அணைக்க வேண்டி இருந்தது..
அவனை எழுப்பி விடும் பணியை அதனிடம் ஒப்படைத்திருந்ததால், அது செவ்வனே தன் வேலையை செய்து கனவுலகில் இருந்து அவனை நிலத்திற்கு இழுத்து வந்தது..
மணி ஆறு பதினைந்து என்று காட்ட.. அதை எடுத்து பார்த்தவனின் உடல், காற்றில் மிதப்பது போன்றதொரு உணர்வு..
நிச்சயம் அந்த கலவியல் பயிற்சி கனவில் கற்றுத் தரப்படவில்லை என்று சொல்வது போல் உடல் வியர்வையால் ஈரமாக.. எழ மனமில்லாமல் கனவில் வந்தவளின் நினைவிலேயே விழி மூடி படுத்திருந்தான்..
அதற்கும் விட மாட்டேன் என்பது போல் படுக்கையின் வலது புறத்தில் இருந்த தொலைபேசி இசைத்தது.. அதை எடுத்து காதில் வைத்தவனுக்கு..
“ஸார் இன்னும் டூ ஹவர்ல பஸ் வந்திடும்.. நீங்க ரெடியா இருங்க.. ” என ஆங்கிலத்தில் தகவல் சொல்ல.. அவன் தலையை அழுந்தி கோதிய படி எழுந்து குளியலறைக்குள் சென்றான்..
தலையில் கொட்டிய நீர் மீண்டும் அருவிக் கரையை நினைவு படுத்த.. தன் முன் இல்லாத மங்கைக்கு சாபமிட்டான்..
‘எனக்கு பிடிக்கல bunny, நீ விளையாடுற இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம்.. எங்கடி இருக்க.. நிச்சயம் சந்தோஷமாத்தா இருப்ப.. இருந்துக்கோ.. எவ்ளோ முடியுமே அவ்ளோ சந்தோஷமா இருந்துக்கோ.. எல்லாம் நீ என்னோட கண்ணுல சிக்காத வர மட்டும் தா… சிக்கினா காலம் முழுக்க எங்கூடவே இருக்குற தண்டன தா உனக்கு.. தயாரா இரு.. தண்டனைய அனுபவிக்க.. ‘ என முணுமுணுத்தபடி குளித்து முடிந்து அவன் வெளியே வரவும், கதவு தட்டப்படவும் சரியாக இருந்தது..
“ஸார் உங்க ப்ரேக் பாஸ்ட்டுக்கு.. ” என கையில் சிறு குறிப்பு நோட்டுடன் வந்த அந்த ஹோட்டலின் ஊழியரும், ஆர்டரை வாங்கிக் கொண்டு, சரியா எட்டு மணிக்கு பேருந்து தயாராக இருக்கும் என நினைவூட்டி விட்டு செல்ல.. சிறு தலையசைப்புடன் உடை மாற்றச் சென்றான்..
தன் பையில் இருந்து மஞ்சளும் நீலமும் கலந்த டிசர்ட்டையும் ஷார்ட்ஸ்ஸையும் எடுத்தவனுக்கு, அதன் அடியில் இருந்த சிறுமிகள் தலையில் மாட்டும் ரீத் காட்சியளித்தது.. அவளின் நினைவாக அவனிடம் இருப்பது இது மட்டுமே..
கூடவே ஒரு பந்தும் அந்த பையில் இருந்தது..
ரீத்தை தன் தலையில் சொருகிக் கொண்டவன்.. பந்தை இரு கரங்களுக்குள் பொத்திக் கொண்டு முத்தமிட்டு..
“இன்னைக்கி பிக் டே.. ரொம்ப முக்கியமான நாள்.. எங்க நீ வராம போய்டுவியோன்னு பயந்திட்டேன்.. எனக்கு எப்பப்பெல்லாம் நீ தேவையோ அப்பப்பெல்லாம் வந்திட்டே தா இருக்க டி.. கனவுல பாக்குற உன்ன நேர்ல பாக்கனும்னு ஆசையா இருக்கு டி.. I love you bunny.. எங்க இருக்க நீ.. ” என தலையில் இருந்த ரீத்தை தடவிய படி பேசிக் கொண்டிருக்கும் போது கதவை திறந்து கொண்டு வந்தான் அவனின் நண்பன்..
“எல்லாரும் சாமி படத்துக்கு முன்னாடி மண்டி போட்டு வேண்டுதல் வச்சா.. நீ மட்டும் வித்தியாசமா வேண்டிட்டு இருக்க.. வா நேரமாச்சி.. ” என அழைக்க, வந்திருந்த உணவை உண்டு விட்டு தோலில் பொதியை சுமந்து கொண்டு சென்றனர் இருவரும்..
அந்த ஹோட்டல் வராண்டாவில் அவனை போல் பலர் மஞ்சள் வண்ண ஆடையுடனும் பேக்குடனும் தயாராக இருந்தனர்..
“குட் மார்னிங் நவீத்.. நைட் சரியா தூங்கலயா.. கண்ணெல்லாம் சிவந்திருக்கு.. ” என ஹிந்தியில் கேட்ட படி ஒரு சிங் இந்த கதையின் நாயகன் நவநீத கிருஷ்ணனின் தோலில் கை போட..
“எப்படி தூக்கம் வரும்.. வழக்கமா வர்ற மோகினி வந்து ஜல்சா பண்ணிட்டு போயிருப்பா.. இவனும் அது கூட கூடி குலாவி தூக்கத்த கெடுத்திருப்பான்.. சரியா.. ” என ஆங்கிலத்தில் கேட்டபடி மற்றொரு வெளி நாட்டவன் வந்தான்..
இருவருக்கும் பதில் சொல்லாது புன்னகைத்தான் நவீத்..
“இப்படி சிரிச்சா என்ன அர்த்தம்.. இது உனக்கு கல்யாணம் ஆக வேண்டிய வயசு.. அதா கண்ணா பின்னான்னு மனசு அல பாயுது.. அனுபவஸ்தன் சொல்றேன் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க.. ” என்றான் சிங்..
“அரே என்ன சிங் நீ.. மோகினிக்கி பயந்து யாராது கல் கட்டிட்டு கடல் குதிப்பாங்களா.. எங்கிட்ட ஒரு நல்ல ஐடியா இருக்கு.. என்ன பண்றன்னா இன்னைக்கி நைட் எங்கூட வா.. நா உனக்கு சொர்க்கத்த நிஜத்துல காட்டுறேன்..” என்ற வெள்ளைக்காரனுக்கு பெரிய கும்பிடு போட்டவன்..
“உங்க ஐடியாவையும் அட்வைஸ்ஸையும் பத்திரமா உங்க கிட்டயே வச்சிக்கங்க, தேவ படும் போது நானே கேட்டு வாங்கிக்கிறேன்.. எம்மேல அக்கற வச்ச உங்களுக்கு மிக்க நன்றி.. ” என கூறியபடி நழுவிச் சென்றான் நவீத்..
“நவீத், வாழ்க்கைல ஷாட் பீரியட் தா இளமை.. அத வேஸ்ட் பண்ணிடாத.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க.. ” சிங்..
“அது பண்றியோ இல்லயோ உன்னோட இளமைக்கு ஒரு பொண்ணு வேணும்.. Women create both heaven and hell. Don’t waste time being a spectator without experiencing either.. ” என்றான் வெள்ளைக்காரன்..
அதாவது ‘பெண்கள் சொர்க்கம் மற்றும் நரகத்தை உருவாக்குகிறார்கள். இரண்டையும் அனுபவிக்காமல் பார்வையாளராக நேரத்தை வீணடிக்காதே.. ‘ என்க.. நவீத் தலையசைத்துக் கொண்டே வந்து நின்ற சொகுசு பேருந்தில் ஏறி அமர்ந்தான்..
விடாது கருப்பு போல் இருவரும் அவனுக்கு இரு பக்கம் அமர்ந்து கொண்டு பேச.. சட்டென எழுந்து விட்டான்..
“இன்னைக்கி நா நல்ல மூடுல இருக்கேன்.. அத்தோட எனக்கு இன்னைக்கி முக்கியமான நாள்.. சோ ப்ளீஸ் என்ன விட்டுடுங்க.. ” என கதற..
“உனக்கு மட்டுமில்ல மேன், நாம எல்லாருக்கும் இன்னைக்கி முக்கியமான நாள் தா.. குறிப்பா நம்ம கோச் க்கு.. இன்னைக்கி அவரு ரிட்டயர் ஆகப் போறாரு.. அவரோட மேற் பார்வைல விளையாடப் போற கடைசி டீம் நாம தா.. அவருக்கு மறக்க முடியாத வெற்றி பரிசா, கோப்பைய வாங்கித் தந்து வழியனுப்பி வைக்கனும்.. அதுக்கு.. ” என்றபடி அணித்தலைவன் பேருந்திற்குள் வர..
“நாம வின் பண்ணனும்.. Let’s achieve success… ” என ஆர்ப்பரித்தனர் அந்த பேருந்தில் இருந்தவர்கள்..
அவர்களின் உற்சாக குரலுடன் நகர்ந்த பேருந்து, நிறுத்தப்பட்ட இடம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானம்..
அவர்கள் அனைவரும் மட்டைப் பந்து வீரர்கள்.. இந்தியன் பிரீமியர் லீக் கோப்பைக்காக நடக்கும் இறுதி போட்டி அது..
சென்னையும் கல்கத்தாவும் மோத விருக்கும் போட்டிக்காக சென்னை அணி, நட்சத்திரம் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தது..
தொடர் வெற்றியும் ஆங்காங்கே ஒன்றிரண்டு தோல்வியையும் சந்தித்து, அணி இப்போது வெற்றியின் கடைசி படிக்கட்டில் உள்ளது..
கிடைக்கும் கோப்பையை தங்களுக்கு பயிற்சி அளித்த கேட்ச் சிற்கு சமர்ப்பணம் செய்ய இந்த போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்ற உத்வோகத்துடன் வலை பயிற்சியில் இறங்கினர் அனைவரும்…
அருமையான ஆரம்பம் சூப்பர் 👌👌வாழ்த்துக்கள்👌👌
நன்றி சகி 🙏🙏🙏