இருவரும் மேடை ஏற, பாடல் ஒலித்தது, முதல் பாடல்,
ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட,
வசமா வந்து மாட்டிக்கிட்ட
ஆஹா கன்னிப்பொண்ணு
கம்மன் தட்டை காள வருதே மல்லுக்கட்ட நீட்டாதே
கண்ணுக்குள்ள கத்திய வச்சு நீட்டாதே ஹோய்
தீட்டாதே கன்னத்திலே கன்னம் வச்சி தீட்டாதே
ஹோய்
ஆளில்லா ஆத்தங்கர
அதுக்கு இப்ப என்னாங்கிற
ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட,
வசமா வந்து மாட்டிக்கிட்ட
என்று பாடல் ஒலிக்க, அழகாக குத்து டான்ஸ் ஆடினர் இருவரும்.
அடுத்ததாக,
சாத்தியமா நான் சொல்லுறேன்டி
உன் பார்வை ஆள தூக்குதடி
சத்தியமா உன்ன பாத்துக்குறேன் உனக்காக வாழ்க்கை வாழும்படி
கிறுக்கி உன் கிறுக்கல் எழுத்துலதான்
கிறுக்கா என்ன நீ மாத்திபுட்ட
மனசில் இருக்குற ஆசையத்தான்
கிறுக்கா நான் உன்மேல காட்டிப்புட்டேன்..
என்ற பாடல் ஒலிக்க, தியா நின்றப்படியே இருக்க அவளை சுற்றி சுற்றி பாடல் பாடிய படியே ஆடினான் சூர்யா. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது, ஒரு தலை காதலன் போல தெரிந்தான் சூர்யா.
அவனை கண்டு கொள்ளாமல் தியா நிற்க அதை நடனத்துக்கு அது சரியாக பொருந்தியது.
அடுத்தாக,
நகரும் நெருப்பாய் கொழுந்து வெட்டெறிந்தேன்..
அணைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்..
காலைபனியாக என்னை வாரிகொண்டாய்..
நேரம் கூட எதிரி ஆகிவிட
யுகங்கள் ஆக வேடம்மாறி விட..
அணைத்து கொண்டாயே பின்பு
ஏனோ சென்றாய்..
ஏனோ சென்றாய்!!
என்று பாடல் வர, காரணம் தெரியாது பிரிந்த காதலன் போல, பாடலை படியவரே தியாவை நெருங்கியவன், அவள் இரு தோள்களையும் பிடித்து தன்னோடு இணைத்து கொள்ள, தியா தான் அதிர்ந்து போனாள்.
விலக முற்பட அழுத்தமாக இழுதிருந்தான். தியாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால் அதை பார்ப்பதற்கு படங்களில் வருவது போல் தத்ரூபமாக இருந்தது.
அவள் விலக நினைத்ததை ஆடும் உற்சாகத்தில் அவன் உணரவே இல்லை.
தியா சற்று தடுமாறி தான் போனாள்.
காற்று நீ யாக வீச
என் தேகம் கூச..
எதை நான் பேச
கலைந்து போனானே
கனவுகள் உரச..
பறித்து போனாயே
இவளது மனச..
இருள் போலே இருந்தேனே
விளக்காக உணர்ந்தேனே
உன்னை நானே..
பார்வை கொஞ்சம் பேசுது
பருவம் கொஞ்சம் பேசுது
பதிலாய் எதை பேசிட..
தெரியாமல் நான்..
கூச்சம் கொஞ்சம் கேக்குது
ஏக்கம் கொஞ்சம் கேக்குது
உயிரோ உனை கேட்டிடா..
தருவேனே நான்..
அன்பே அன்பே மழையும் நீ தானே
கண்ணே கண்ணே
வெயிலும் நீ தானே
ஒரு வார்த்தை உன்னை
காட்டமறு வார்த்தை என்ன.. மீட்டாவிழுந்தேனே
கலைந்து போனேனே..
பறித்து போனாயே
காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே…
என்று பாடல் ஒலிக்க, சூர்யாவின் கையில் பாவையாகி போனாள் தியா.
அவளை சுற்றி விட்டு கையில் பிடிக்க சங்கடமாக விலக அவள் முற்பட, கையை பிடித்து இழுத்தவன் அவள் இடை வளைத்தான். மீண்டும் விலக எண்ணி நகர போனவளின் இரு கைகளையும் கொணர்ந்து விரித்த அணைக்க, இப்போது முழுவதும் அதிர்ந்து போனாள்.
அதிர்ந்த தியாவின் முகத்தை தான் அவனும் பார்த்து கொண்டு இருந்தான். அவள் என்ன நினைக்கிறாள் என்று கூட அவனால் உணர முடிந்தது தான்.
இந்த போட்டியில் தோல்வி அடைவதால் எந்த இழப்பும் இல்லை ஆனாலும் ஏன் அவன் இவ்வாறு செய்கிறான் என்ற கேள்விக்கு அவனிடமே பதில் இல்லை.
மூளை அவளுக்காக அவளை விட்டு விலகு விடு சூர்யா என்று உத்தரவிட்டாலும் அவன் மனம் ஏற்கவில்லை அதை. மூளையும் மனமும் செய்த யுத்தத்தில் மனமே வென்றது.
எனவே அவனும் விலகவில்லை அவளை விட்டு. அவளுக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய துணித்தவன், இப்போது அவளுக்கு விருப்பம் இல்லை என்று அறிந்தும் அதை செய்யாமல் இருக்க முடியவில்லை. விதி வலியது தான்.
இதற்கு முன் வந்த பாடலின் போது அவள் நிலையை அவன் அறியவில்லை. ஆனால், இப்போது அறிந்தும் விலக மனம் வரவில்லையே, இதை தான் காதல் என்று சொல்வார்களோ!
அவளோட கல்லூரி பயின்ற நாட்களில் தோன்றாதது.. அவளை மணந்த போது கூட வராத எண்ணம், தடுமாற்றம் இன்று மட்டும் ஏன்?!.
அவன் மனம் கேள்வி எழுப்ப.. அதற்கு பதில் தான் தெரியவில்லை பாவம். அவன் மனமே இப்படி பல குழப்பங்களில் தவிக்க, தியாவோ அவன் செயலுக்கு அர்த்தம் என்னவென்று புரியாமல் இருந்தாள்.
முதன் முதலாக தன் தியா வித்யாசமாக தெரிவது போல உணர்தான். எண்ணங்கள் பல வழியில் பயணித்தாலும் கையும் காலும் நடனத்தை சீரும் சிறப்புமாக செய்து கொண்டு இருந்தான்.
தியாவும் அவனை தான் பார்த்தாள், அவன் இவ்வாறு நடந்து கொள்பவன் அல்ல தான். ஆனால் இன்று என்னவாயிற்று இவனுக்கு என்று சிந்தித்து கொண்டே, அவன் கண்ணை பார்த்தவளுக்கு புரிந்து விட்டது. அவன் வேறு ஒரு மனநிலையில் வேறு லோகத்திலும் இருப்பது.
ஆனால், அவனோ அவள் மேல் இப்போது திடீர் என வந்து செல்லும் உணர்வின் அர்த்தம் புரியாது இருந்தான். ஒரு வழியாக பாடல் முடிய, தியாவை சாய்த்து இடை வளைத்த வாறு பிடித்தான்.
அப்படியே நிற்க, அனைவரும் ஆரவாரமாக கை தட்ட தொடங்க, அந்த சத்ததில் தான் சுயம் அடைந்தான், சூர்யா. மெதுவாக அவள் கண்களை பார்த்தவாரே நிமிர, அவளும் அவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள்.
இருவரும் ஏதோ ஒரு அன்னையத்தை உணர்ந்தனர். அவர்கள் நடனம் மிக அழகாக இருக்க பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
ஆனால், இவர்கள் இருவரும் தான் எதையும் பெரிதாக எடுத்து கொள்ளும் நிலையில் இல்லையே, அவரவர் சிந்தையில் புதிதாய் உதித்த உணர்வைப் பற்றி ஆராய்ந்து கொண்டு இருந்தனர்.
போட்டி முடிந்ததை கூட இருவரும் உணரவில்லை, முடிவினை அறிவிக்கும் போதே அதை பற்றிய நினைவு வர, இருவரும் கவனிக்க தொடங்கினர்.
“இது தான் போட்டியோட மிகவும் முக்கியமான இடம், ஆமா.. நீங்க எல்லாரும் ஆவளோட எதிர் பாத்துட்டு இருக்க இந்த போட்டியோட ரிசல்ட் தான் அது.. இப்போ நான் யாரு வின்னர்னு சொல்ல போறேன்.. கவுன் டவுன் ஆரம்பிக்கலமா.. லேட்ஸ் ஸ்டார்ட்.. கம் ஆன்..
10
9
8
7
6
5
4
3
2
1″,
“அண்ட் தி வின்னர் ஆப் தி கேம் அண்ட் டுடே’ஸ் ஷோ ஐஸ், நன் அதர் தன், தி சூப்பர் டான்சர்ஸ், மிஸ்டர். சூரியதேவ் அண்ட் மிஸஸ். தியாரதித்தி சூர்யதேவ்.. லேட்ஸ் வேல்கம் தெம் வித் கிராண்ட் அப்லாஸ்”, என்று கை தட்ட, அபடுவரும் தட்டினார்.
அந்த ஓசைக்கு இடையே இருவரும் மேடைக்கு சென்றனர். ஒருவரை ஒருவர் பாராது நிற்க, “நான் ஆரம்பத்துலயே சொன்னேன்.. வின்னர்கு ஒரு சூப்பர் பரிசு காத்துட்டு இருக்குன்னு”, என்று தொகுப்பாளினி சொல்ல, அங்கு ஒரு பெரிய அளவிலான பரிசு பெட்டி கொண்டு வர பட்டது.
அனைவரும் என்னவென்று புரியாமல் பார்க்க, “யாரும் ரொம்ப யோசுக்க வேணாம்.. இந்த பாக்ஸ்ல நியூ பார்ன் பேபி ஒன் இயர் யூஸ் பண்ண தேவையான எல்லாமே இருக்கு”, என்று சொல்ல அனைவரும் ஒரு மாதிரி பார்த்தனர்.
“அட இங்க நாங்க என்ன ஒலிம்பிக் போட்டியா நடத்துறோம்.. இது ஒரு சின்ன கேம் ஆனாலும் நாங்க உங்களுக்கு பயன் படற மாதிரி இருக்கனும்னு இதை குடுக்கறோம்… எப்டி”, என்று தோரணயக கேட்க, சபாஷ்.. என்பது போல இருந்தது..
அந்த பரிசை இருவரும் வாங்கி கொண்டனர். விழா முடிந்து அறைக்கு வந்து சேர்ந்தனர்.
அந்த பரிசு நடுவில் இருக்க அதை பார்த்த வண்ணம் இருந்தனர் இருவரும்.
“நீ இன்னைக்கு ஏன் சூர்யா அப்படி பிஹேவ்.. பண்ண”, என்று எங்கோ பார்த்த வண்ணம் தியா கேட்க, “எங்க..”, என்றான் ஒரே வரியில்.
“அவனை நேராக ஒரு பார்வை பார்த்தவள், “டான்ஸ் ஆடும் போது”, என்றாள் கடுப்பாக.
“ஓ.. எப்டி பிஹேவ் பண்ணேன்”, என்றான் மீண்டும் அதே அதே பாணியில்.
இப்போது கடுப்பானவள், “ஒன்னும் இல்ல”, என்று சொல்லி முடிக்க, “இல்ல என்னமோ சொல்ல வந்தியே”, என்று மீண்டும் வம்புக்கு அவளை இழுக்க,
“அதான் ஒன்னும் இல்லனு சொல்லிட்டேன்ல.. புரியதவதுக்கு சொல்லலாம் நடிக்கறவனுக்கு என்ன சொல்ல”, என்று சத்தமாக அரம்பித்தவள், முணுமுணுப்புடன் முடித்தாள்.
ஆனால், அவன் காதுகளில் நன்றாவே கேட்டது. அவளறியாமல் சிரித்து கொண்டான்.
அவள் தான் எண்ணெய்யில் போட்ட கடுகு போல இருந்தாள். முகத்தில் தான் எத்தனை கடுகடுப்பு.. அப்பப்பா.. இருந்தும் ஒரு முடிவெடுத்தவனாய் அவளை பார்த்து நக்கல் சிரிப்போடு தான் அவளவன் இருந்தான்.
தன்னை பார்த்து சிரித்து கொண்டு இருந்தவனை வெறியாக முறைத்தாள் தியா. அவன் எங்கே அதை எல்லாம் கண்டு கொண்டால் தானே.
நொந்து போனவள், படுத்து உறங்கியே விட்டாள். சிரித்து கொண்டே இருந்தவன், அவள் உறங்கியதும் ஜெய்க்கு போன் செய்தான்.
நாளை இருவரும் ஊருக்கு திரும்ப வேண்டும், அதைப் பற்றி பேசவே அழைத்தான்.
“வேணாம் ஆகாஷ் சொன்னா கேளுங்க.. அவ்ளோதான் கத்திருவேன்.. அப்றம் உங்க மனம் தான் போகும்.. பாத்துகோங்க..”, என்று எச்சரித்த படி பின்னால் நகர்ந்து கொண்டே போனாள் ஸ்வாதி.
“சரி.. ஸ்வா கத்திக்கோ.. ஆனா முதல நின்னு பேசு.. ஏன் பயப்படற.. நில்லு ஸ்வா”, என்றபடி அவனும் முன்னேறி வர,
“அத்தை.. அத்த.. இங்க வாங்க.. ரிது.. ரிது எங்க டி இருக்க.. வா”, என்று அவள் கத்தியது ஜெய்க்கு கூட சரியாக கேட்கவில்லை. “ஐயோ.. ஸ்வா மெதுவா.. மெதுவா எதுக்கு இவ்ளோ சத்தமா கத்தற.. காது வலிக்குது”, என்று காதை தேய்த்த படி அவளை நோக்கி வர,
அவளால் பின்னால் அதற்கு மேல் நகர முடியாமல், சுவர் இருக்க, சுவரையும் தன்னையும் நொந்து கொண்டு நின்றாள். அவள் நிமிர்ந்து பார்க்க, அவளை நெருங்கி இருந்தான்.
அவனை நேராக பார்த்தவள், “இப்போ சொல்றேன்.. ஆகாஷ். இப்போ மட்டும் என்ன நீங்க போக விடலனா அப்றம் எப்பவுமே இந்த ரூம்க்கு வர மாட்டேன்.. காபி, ஜூஸ்னு எதுவுமே கொண்டு வர மாட்டேன்.. சொல்லிட்டேன்”, என்று விராப்பாக அவள் பேச,
அவனுக்கோ சிரிப்பு தான் வந்தது, “ஓ.. அப்படியா.. வரமாட்டியா? ஸ்வா”, என்று ஏக்கமாக கேட்பது போல கேட்க, அவன் உண்மையாக கேட்கிறான் என்று நினைத்து கொண்டவள், “ஆமா இப்போ போக விட்டா வருவேன”, என்றாள் எங்கோ பார்த்து கொண்டு.
“சேரி.. நம்ம கல்யாணத்துக்கு அப்றம் நீ எங்கே இருப்பனு சொல்லு அப்போ தான நானு அங்க வர முடியும்”, என்று அவள் காதுகளில் கிசுகிசுக்க, அவன் மூச்சு காற்றை சுவாசித்து கண் மூடி லாய்த்திருந்தவள், அவன் பேச்சில் நினைவுக்கு வந்து முறைக்க,
“என்ன ஸ்வா திடீர்னு முறைக்கற.. மாமா பாவம்ல.. பயமா இருக்கு மா”, என்று உண்மையாகவே பயந்தவன் போல சொல்ல, அவனை கண்களால் சுட்டெரித்தாள் ஸ்வாதி.
“நான் என்ன ரெத்த காட்டெரியா இல்ல கொல்லி வாய் பிசாசை இல்ல மோகினி பேய்யா.. நீங்க பார்த்து பயப்பட.”, என்று மூச்சிரைக்க அவள் கேட்க,
“இல்ல.. டா மாமா அப்படி சொல்லுவேனா உன்ன”, என்று விளக்கம் தர முயல “ஒன்னும் வேணாம் தள்ளுங்க”, என்று அவனை ஒரே தள்ளாக தள்ளிவிட்டு அவள் செல்ல, “ஸ்வா.. ஸ்வா.”, என்று அவள் பின்னே செல்ல, அவன் போன் சிணுங்கியது. அவள் வேறு சென்று விட கடுப்பாகிவிட்டான்.
“ச்ச.. இப்டி ஆகிருச்சே..”, என்று போனை பார்க்க சூர்யா தான் அழைத்திருந்தான். “இவன..” என்று திட்டியபடி போனை எடுத்தான்.
அப்போ.. சூர்யா பண்ணுனானே அது தான்.
“உனக்கென்ன டா. பிரச்சனை. சொல்லு”, என்று போனை எடுத்தவுடன் ஜெய் சிடுசிடுக்க, அதற்கு புரியாமல், “என்ன ஆச்சு மச்சான் பேச்செல்லாம் வித்தியாசமா இருக்கு யருக்கிட்டயாச்சும் செம்மையா செருப்படி எதுவும் வாங்குனியா டா..” என்று அதிமுக்கியமாக கேட்க,
அதில் வெறியானவன், “நேர்ல வாங்க ஐயா அத விளக்கமா சொல்றேன்.. இப்போ நீங்க எதுக்கு போன் பண்ணீங்க அதை சொல்றிங்களா”, என்று இழுவையாக சொல்ல,
“அது நாளைக்கு நாங்க வந்துருவோம்.. டா அத உன்கிட்ட சொல்லத்தான் போன் பண்ணேன்..”, என்றுவிட்டு பின் இருவரும் சிறிது நேரம் இந்த நான்கு நாட்கள் எவ்வாறு ஓடியதை பற்றி ஒருவருக்கு ஒருவர் தெரிவித்து கொண்டனர்.
“நான் ஊருக்கு வந்துட்டு உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேசணும்.. ” என்று சூர்யா சொல்ல, “ஏன் அத இப்போவே சொல்றது”, என்றான் ஜெய்.
“இல்ல.. டா நேர்ல தான் சொல்லுவேன்.. அதான் சரியா இருக்கும் “, என்று முடித்து விட்டு அழைப்பை துண்டித்தான்.
அழைப்பைத் துண்டித்து ஜெய் கீழே வர, அவன் அம்மா ஜானகி அவனுக்காக காத்துகொண்டு இருந்தார். “என்னமா நீங்க இன்னும் தூங்கலையா?.. சாப்டீங்களா இல்ல அதுவும் இல்லையா?.”, என்று கேட்டபடி அவர் அருகில் அமர்ந்தான்.
“சாப்பாடெல்லாம் சாப்டாச்சு டா. உன்கிட்ட பேசலாம்னு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்”, என்று அவர் சொல்ல, “என்கிட்ட வா?. என்னமா சொல்லுங்க.. என்ன விஷயம்னு”, என்றான் அலைபேசியை நோண்டியவாறு,
“நான் உன்கிட்ட முன்னாடியே பேசினது தான் டா.. உனக்கும் ஸ்வாதிக்கும் கல்யாணம் பண்றது பத்தி… நீ சரின்னு சொல்லிட்டு அதுக்கு அப்புறம் எதுவுமே கண்டுக்கவே இல்லையே பா”, என்க
“என்னமா உங்க பிரச்சனை நாந்தான் சரின்னு சொல்லிட்டேன்ல அப்புறம் என்ன?”, என்று அவன் கடுகடுப்பாக கேட்க,
“அதுதான் பா நீ சரின்னு சொல்லிட்டல்ல அப்றம். ஆக வேண்டிய வேலையை பாக்க வேணாமா? நான் நாளைக்கு ஜோசியரா வர சொல்றேன்”, என்று அவர் அடுக்க,
“அம்மா என்னமா நீங்க இவ்வளவு அவசர படுத்தறீங்க”, என்று அவன் கோவப் பட ,
“டேய் என்னடா சரின்னு சொல்லிட்டு இப்போ இப்படி பேசுற?, நீ என்ன வேணா சொல்லிக்கோ.. நாளைக்கு ஜோசியர் வர சொல்ல தான் போறேன்.. ஒரு நல்ல நாள் பார்க்க சொல்லணும்.. உங்க நிச்சயதார்த்தத்தை முதல்ல முடிச்சுட்டு தான் அடுத்த வேலை இனி”, என்றவாறு எழுந்து சென்றுவிட,
அங்கேயே அமர்ந்து இருந்தான் ஜெய். நடந்ததை கவனித்துக் கொண்டிருந்த ஸ்வாதி, அவனிடம் வர, “என்ன ஸ்வா”, என்று வந்த அவன் வார்த்தையில் என்ன உணர்வு உள்ளது என்றுதான் அவளால் புரிந்து கொள்ள இயலவில்லை.
ஆழமாக மூச்சை இழுத்துவிட்டவள், “என்ன பிடிக்கும்னு சொல்றீங்க.. லவ் பண்றேன்னு கூட சொல்லிட்டீங்கன்னு வெச்சுகோங்களேன். அப்புறம் என் கல்யாணத்தை பத்தி பேசினா மட்டும் கோவ படுறீங்க.. ஒருவேளை..”, என்று அவள் இழுக்க,
“ஸ்வா ஏற்கனவே கடுப்புல இருக்கேன்.. நீ வேற ஏதாச்சு உன் இஷ்டத்துக்கு புரிஞ்சுகிட்டு அதுக்கு என்கிட்ட விளக்கம் கேட்காதே”, என்று பட்டென கூறியவன் விறு விறு என்று சென்று விட, அவள் தான் அவன் சென்ற, திசையை பே’ வென பார்த்த படி குழப்பமாக நின்றாள்.
தன் அறையில் தண்ணீர் தீர்ந்து விட்டதாள், அதை எடுக்க எத்தனித்த, ரிது என்று அழைக்கப்படும் ரிதன்யாவிற்கு தன் அறையில் ஏதோ சத்தம் கேட்க,
சத்தம் வந்த திசையில் பார்க்க, அங்கே நிலழாடியத, அதை பார்த்து பயந்தவள், யரையேனும் அழைக்க முற்பட்ட,
அதற்குள் அத்த நிழலுக்கு உரிமையான உருவம் அவள் வாயை தன் கை கொண்டு பின்னால் இருந்த படியே அணைத்து அடைத்தது. அந்த ஸ்பரிசத்திலேயே உணர்ந்து விட்டாள் ரிது. அது யாரென்று.
“மவனே.. இரு டா”, என்று எண்ணிக்கொண்டவள் அதன் காலை ஓங்கி மிதித்தாள். அதை எதிர்பாராத அந்த உருவம் வலியில் அலற, அதை பார்த்து சிரித்து கொண்டு நின்றாள் ரிது.
“ஏய்.. ராட்சசி.. எதுக்கு டி.. மிதிச்ச.. அம்மா.. வலிக்குதே..”, என்று சாய் காலை பிடித்து கொண்டே அவளை முறைத்தவறே சொல்ல, “என்ன.. அம்மாவா.. வலிச்சா ஐயோ ரிதுனு தான் கத்தனும்.. அம்மானுலாம் கத்த கூடாது..”, என்று நடந்தவாறு கையை ஆட்டி சொல்ல,
“மவளே.. உன்ன”, என்று அவள் கையை அவளுக்கு வலிக்கும் படி பின்னால் வளைத்தான். “ஐயோ. ம்மா.. டேய் விடு.. வலிக்குது”, என்று அவள் வலியில் முகத்தை சுருக்கி கெஞ்ச,
“ஆன்.. ஐயோ சாய்னு கத்து ரிது விடறேன்..”, என்று அவளை போலவே சொல்ல.. “டேய். நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்.. நிஜமா வலிக்குது விடு டா”, என்று கெஞ்சவே விட்டான்.
அவள் கையை பிடித்து தேய்த்து கொண்டே, “வலிக்குதா”, என்று சாய் கேட்ட, “இல்ல.. நல்லா சொகமா இருக்கு.. விடு”, என்று கையை உறுவி அவளே தேய்த்தவாறு, “நீ எப்டி இங்க வந்த.. அண்ணாக்கு தெரியுமா”, என்று வினவ,
“ஆன். உங்க அண்ணன்கிட்டா சொன்னா, அப்டியே இதான் பா என் தங்கச்சி ரூம்னு அனுப்பி வைப்பாரு பாரு.. ஏண்டி நீ வேற..”, என்று கைகளில் நெட்டி முறித்தவன், கட்டிலில் அமர,
கண்கள் சுருங்க அவனை பார்த்தவள், “அடேய்.. அப்போ நீ வந்தது அண்ணனுக்கு தெரியாத..”, என்று மீண்டும் வினவ, “இவ்ளோ நேரம் என்ன சொல்லிட்டு இருந்தேன்.. உன்ன பாக்கணும்னு தோணுச்சு அதான் வந்தேன்.. நீ இன்னும் கோவமா இருக்கியா”, என்று கையை பிடித்து கொண்டு கேட்க
திடீர் என்று அவளுக்கு நினைவு வர, “ஆமா நான் கோவமா தான் இருக்கேன்.. நீ போ இங்க இருந்து”, என்று முகத்தை திருப்பி கொள்ள, ” என்ன ரிது இவ்ளோ நேரம் நல்லா தான இருந்த, திடீர்னு கோவமா பேசற.. நான் பன்னதுக்கு தான் சாரி கேட்டேன் ல.. மறுபடியும் கேட்கவா “, என்று அவள் கையை விடாமல் பிடித்தவாறு கேட்க,
அவன் கையை தட்டி விட்டவள், “நீ ஒன்னும் சொல்ல வேணாம்.. இங்க இருந்து போ”, என்று கத்தியே விட்டாள்.
“யார போக சொல்ற.. ரிது”, என்று கேட்டவாறே ஜெய் கத்தி விட்டு சென்றதில் சற்று வருந்திய ஸ்வாதி ரிது அறையில் விளக்கெறிவத்தை பார்த்து இன்றாவது அவளிடம் கதையை கேட்டு விடலாம் என்று எண்ணி கதவை திறந்து உள்ளே வர, அங்கு சாய் இருப்பதை பார்த்து சற்று திகைத்து போனாள்.
“சாய் நீ.. நீ.. இங்க என்ன பன்ற, ஆகாஷ பாக்க வந்தியா”, கேள்வியுடனே பதிலையும் அவனுக்கு எடுத்து கொடுத்தாள்.
“அவங்களே பதில் சொல்றாங்க.. அதையே சொல்லுவோம்”, என்று நினைத்தவன், “ஆமா ஸ்வாதி அக்..” என்று அவன் முடிக்கும் முன்னே,
“ஹே.. அப்படினா நீ இங்க ரிது ரூம்ல என்ன பண்ற”, என்று சரியாக கேட்க, “போச்சு டா.”, என்று மனதில் எண்ணியவறே அமைதியாக நிற்க,
“என்ன சாய் பதில் சொல்லு”, என்று கேட்டவள், ரிதுவையும் ஒரு பார்வை பார்த்தாள். அதற்குள் காலில் ஏதோ ஊறுவது போல, இருக்க குனிந்து பார்த்தாள் சாய் தான் அவள் காலிலே விழுந்து விட்டான்.
அவன் செய்கையை புரியாமல், அதிர்ந்து விலகினாள் ஸ்வாதி. ரிதன்யாவோ பக்கேன சிரித்து விட்டாள்.
“ஏய்.. சாய்.. என்ன பண்ற நீ.. எழுந்திரி பர்ஸ்ட்..”, என்று அவள் கத்த “நீங்க எதுவும் பண்ண மாட்டேன்னு சொல்லுங்க அப்போ தான் நான் மேல எழுந்திரிப்பேன்”, என்று அவன் அடம்பிடிக்க,
“உன் பாஸ் மேல அவ்ளோ பயமா.. சரி.. நான் ஜெய்கிட்ட சொல்லமா இருக்கணும்னா.. நீ நான் சொல்றத கேட்கணும்.. ஓகேவா”, என்று ஒப்பந்தம் பேச, “சரி “, கீழே இருந்தே அவன் சொல்ல, வாயிற்றை பிடித்து சிரித்து கொண்டு இருந்தாள் ரிது.
“என்ன பண்ணனும்”, என்று எழுந்தவன் கேட்க, “அது வேற ஒன்னும் இல்ல.. உங்க லவ் ஸ்டோரிய கொஞ்சம் சொல்லுங்க”, என்று அவள் கேட்க, “இவளுக்கு எப்டி தெரியும்..”, என்று விளங்காமல் அவளை பார்த்தவன் மனவோட்டத்தை அறிந்த ஸ்வாதி,
“எனக்கு தெரியும்.. ரிது சொன்னா”, என்றாள். அவனோ இன்னும் அதே அதிர்ச்சியுடன் தன் ரிதுவை பார்க்க, அவள் இன்னும் தான் நிறுத்தாமல் சிரித்து கொண்டு இருந்தாள்.
“அடிப்பாவி மகளே.. இது தெரியாம காலுல வேற விழுந்துட்டேனே..”, என்று அவளை முறைக்க, “ஏண்டா இப்டி பல்ப் வாங்கற..”, என்று அவள் தலையில் கொட்ட, அவனும் அடிக்க போக, அவனை தடுத்த ஸ்வாதி,
“பர்ஸ்ட். எனக்கு கதைய சொல்லுங்க நாலு எப்பிசோடா வெய்ட்டிங்.. சீக்கிரம் சொல்லு..”, என்று அவனை கேட்க ரிது விட்ட இடத்தில் இருந்து திடங்கினான் சாய்.
“அன்னைக்கு அந்த சேஞ்ஜிங் ரூம்ல இருந்து எல்லாரும் போய்ட்டாங்கனு தான் நான் நினைச்சேன்.. காரணம் ஒரு பொண்ணு கிட்ட எல்லாரும் போயிடங்களானு நான் கேட்ட அப்போ அப்படி தான் சொல்லுச்சு.. இவ உள்ள இருந்தது எனக்கு தெரியாது..
நான் அடுத்து மைம் பண்ண வேண்டி இருந்தது.. என்கூட பண்ற எல்லாரும் முன்னடியே ரெடி ஆகிடாங்க.. நான் வேலையெல்லாம் முடிக்க லேட் அகிருச்சு அதான் அப்போ போனேன்..
நான் உள்ள போய் ரெடி ஆக ஆரம்பிச்சேன்.. பாதில திடீர்னு ஒரு பொண்ணு கத்தற சவுண்டு கேட்க, டக்குனு திரும்பி பார்த்தா.. இவ..
இவ என்ன பார்த்து கத்தி, திட்ட, அடிக்க வர, நானும் சண்ட போடன்னு கொஞ்ச நேரம் ரணகலம் தான் அங்க.. அப்றம் என்ன நடந்துச்சுன்னு தெருஞ்சுகிட்டு ரெண்டு பேரும் மாறி மாறி சாரி கேட்டு.. ஒரு வழியா அப்படி இப்படி முடிச்சுருச்சு..
அப்றம் பார்க்கும் போதெல்லாம் ஒரு ஸ்மைல் 2 மினிட்ஸ் டாக்னு கொஞ்சம் கொஞ்சமா க்ளோஸ் ஆகிட்டோம்.. இவ இல்லாம வாழவே முடியாதுனுலாம் தோணால..
ஆனா ரிது இருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்னு தோணுச்சு.. அவகிட்டயும் சொன்னேன்.. கோவ படல.. யோசிச்சு சொல்றேன்னு சொன்னா..
நான் அப்றம் அத பத்தி பேசல..
அப்றம் ஒரு நாள் அவளே வந்தா.. நல்லா யோசிச்சுட்டென்.. உங்கள எனக்கு பிடிச்சு இருக்கு.. என்னோட மீதி வாழ்க்கை உங்க கூட தான் வாழணும்னு ஆச படறேன்னு சொன்னா.. இப்போ கூட ஞாபகம் இருக்கு எனக்கு..
அப்போ நல்ல மழை.. நனைச்சுட்டே சொன்னா.. அப்போ ஸ்டார்ட் ஆனது தான் எங்க லவ்ஸ்.. ரிதுக்காக தான் பாஸ் ஆபிஸ்ல சேர்ந்தேன்.. பாஸ்கிட்டயே உங்க தங்கச்சியை சைட் அடிக்கறேன்னு சொல்லுவேன்..
அவரு கண்டுக்கவே மாட்டாரு.. இதெல்லாம் தெரிஞ்சா என்ன பண்ணுவாறுனு தான் தெரில.. ஏதாவது பிரச்சனை வந்த.. நீங்க தான் எங்களுக்கு உதவி பண்ணனும்.. இதுல இவ வேற இப்போ கோவமா இருக்கா.. எனக்கு இப்போ வாட் டூ டூனே தெரியல..”, என்று உற்சாகமாக ஆரம்பித்தவன் சோகமாக முடித்தான்..
அனைத்தையும் கேட்டு முடித்த ஸ்வாதி, “என்ன ரிது என்ன பிரச்சனை உனக்கு.. எதுக்கு கோவமா இருக்க”, என்று கேள்வி எழுப்ப,
அவளோ சாய்யை முறைத்தாள்…
“சார் பண்ணத்துக்கு கோவ படாம என்ன கொஞ்ச சொல்றியா..”, என்று இன்னும் அவனை முறைக்க, “நான் தான் மன்னிப்பு கேட்டேன்ல ரிது”, என்று அவளிடம் செல்ல,
“போய் ஒரு க்ளாஸ போட்டு ஓடச்சுட்டு அது கிட்ட சாரி கேளு.. அப்றம் அது பழைய படி மாறுன என்கிட்ட வந்து கேளு..”, என்று அவனிடம் சொல்ல,
“சும்மா கண்ட பார்வர்ட் மெசேஜ்ஸ்யும் படிச்சுட்டு.. வந்து அதெல்லாம் சொல்லிட்டு இருக்காதா ரிது”, என்று அவன் கடுகடுக்க அவள் பேசவே இல்லை.
“ரெண்டு பேரும் முதல என்ன சண்டைனு சொல்லுங்க..”, என்று ஸ்வாதி இருவரையும் பார்த்து கேட்க,
“அத நானே சொல்றேன் ஸ்வாதி.. இவன் என்ன நம்ம ஆபிஸ் பக்கத்துல இருக்க பார்க்ல வெய்ட் பண்ண சொன்னான். நானும் இவன் வருவான் வருவான்.. அன்னைக்கு புல்லா வைட் பண்ணேன்..
இந்த எருமை வரவே இல்லை. நாணும் ஏதோ வேலை போலனு நினைச்சேன்.. அப்றம் சொல்றான் “உன்னை வர சொன்னதையே மறந்துட்டேன்னு” எனக்கு எப்டி இருக்கும்..
இவன நம்புனா என்ன ஆகும் அன்னைக்கு தான் தெரிஞ்சுது.. அப்படி என்ன மறதி ஒரு மனுஷனுக்கு.. செம்ம கோவம்.. அதான் இன்னும் பேசல. நீயே சொல்லு யாரு பக்கம் .நியாயம் இருக்குனு”, என்று அவனை குற்றம் சாட,
“இதெல்லாம் ஒரு சண்டை.. இதுக்கு நான் ஒரு நாட்டாமை வேற.. தூ.. எப்படியோ போங்க.. எனக்கு கதை புல்லா தெரிஞ்சுரிச்சு அது போதும்.. நான் கெளம்பறேன்.. டேய் நீயும் கெளம்பு”, சாய்யிடம் முடிக்க,
“ரிதுவ சாமாதனம் பண்ணிட்டு போறேன்”, என்று அவன் பர்மிஷன் கேட்க, “அதெல்லாம் வேணாம்.. அப்றம் பண்ணிக்கோ.. இப்போ போ..”, என்று அவனை யாருக்கும் தெரியாமல் வந்த வழியே அனுப்பி விட்டாள்.
அவன் சென்ற திசையை பார்த்து புன்னகைத்த ரிது உறங்க செல்ல, ஸ்வாதியும் அறைக்கு சென்று விட்டாள். இப்படியே இந்நாள் முடிந்து விட,
சூர்யாவும் தியாவும் வீடு வந்து சேர்ந்தனர்..
சோர்வு அதிகமா தியா உறங்கிவிட்டாள். சூர்யா தான் இருவருக்கும் சமைக்க ஆரம்பித்தான்.
ஏதேதோ யூ டியுப் வீடியோக்களை பார்த்து ஏதோ செய்து கொண்டு இருந்தான்.