மோதும் மேகங்கள்-17
இசையும் அபியும் சிரித்து பேசி செல்வதை கண்ட ஆதி கோபமாக படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்தான். இசையிடம் கூறாமல் சென்ற ஆதி கோபத்தில் தனது கைபேசியை மட்டும் எடுத்துக் கொண்டு அதை மறந்துவிட்டு சென்றிருந்தான். இசையும் ஆதியின் மேல் இருந்த கடுப்பில் ஆதி விட்டு சென்றதை கவனிக்கவில்லை. அதை எடுக்க வந்த ஆதி, அபியுடன் இசை சந்தோஷமாக சிரித்து பேசுவதை கண்டு “என்ன மட்டும் கடுப்பாகிட்டு நீ மட்டும் சந்தோஷமா இருக்கியா?” என எண்ணி அவனுக்கு பிபி எகிறியது.
இதையெல்லாம் கவனிக்காத அபி மற்றும் இசை அவரவர் வீட்டிற்கு சென்று விட ஆதிக்கு இன்னும் கோபம் அதிகமானது. தான் வந்ததை கூட கவனியாமல் அபியுடன் பேசுகிறாளா அல்லது வேண்டுமென்றே இவ்வாறு எல்லாம் செய்கிறாளா என அவனுக்கு சந்தேகம் வந்து தனது கைபேசியை எடுத்தான்.
அதில் இசையின் நம்பரை தேட எங்கே அவன் சேவ் செய்திருந்தா தானே கிடைக்க.காலையில் தனக்கு கால் செய்யப்பட்டு இருந்த எண்களில் இருந்து அவளது நம்பரை தேடி கண்டுப்பிடித்து அவளுக்கு அழைத்தான் ஆதித்யன்.
ஆனால் இசை வேண்டுமென்றே ஆதி அழைப்பது தெரிந்தும் அழைத்தால் அழைக்கட்டும் எனக்கு என்ன வந்தது என்பது போல அலைபேசியை வைத்துவிட்டாள்.
ஆதி மீண்டும் மீண்டும் அழைக்க இசையும் மீண்டும் மீண்டும் செய்ததே செய்ய ஆதியும் விடுவதாகவே இல்லை. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க மாட்டாது இசை அழைப்பை நிராகரித்து விட்டாள்.
கோபத்தின் உச்சிக்கு சென்ற ஆதி அவளது வீட்டிற்கே சென்று விடலாம் என முடிவு செய்துவிட்டு அவளை அழைத்துக் கொண்டே செல்ல இசையும் விடாமல் அழைத்து தொல்லை செய்கிறானே என கடுப்பில் அழைப்பை ஏற்று கோபமாக “ஹலோ” என்றாள்.
மறுபுறம் இருந்த ஆதி ஹலோ என்று கூடக் கூறாமல் நேராக “எங்க இருக்க?” எனக் கேட்டான்.
“நான் எங்க இருந்தா உனக்கு என்ன?” என இசை எகிற, “கேட்ட கேள்விக்கு பதில்” என ஆதி அமைதியாக அதே சமயம் கடுங்கோபத்துடன் வினவினான்.
“வீட்ல தான்” என்ன இரண்டே வார்த்தைகளில் இசை முகம் சுளித்துக் கொண்டே கூற, “என்கிட்ட சொல்லாம நீ எப்படி உன் வீட்டுக்கு போலாம்?” என அடுத்த கேள்வியை ஆதி முன் வைத்தான்.
“நான் உன்கிட்ட ஏன் சொல்லிட்டு போனும்?” என இசை கத்த, “ஹே இம்சை கத்தாத. நீயே ஏன் கிட்ட சொல்லிட்டு போனும்னா, நான் தான் உன்னோட பாஸ். சோ நீ சொல்லிட்டு போக வேண்டியது உன்னோட கடமை” என ஆதி கூறினான்.
“நான் உனக்கு கீழ தான் வேலை செய்றன்றது முதல்ல உனக்கு ஞாபகம் இருக்கா? எல்லார் கிட்டயும் சொல்லிட்டுப் போற, ஆனா என்கிட்ட மட்டும் சொல்லல. நான் தான உன்னோட அசிஸ்டன்ட்?. இல்லனா அந்த பதவியிலிருந்து எனக்கு விடுதலை அளிச்சிட்டியா?” என இசை கேட்டாள்.
“நான் என்ன செய்யனும்னு நீ எனக்கு கத்துத்தராத. எனக்கு தெரியும் யார் கிட்ட எப்படி நடந்துக்கனும்னு. நீ ஏன் சொல்லாமல் போன? அதுக்கு மட்டும் பதில சொல்லு” என ஆதி கூற, “சொல்றதுக்கு நீ அங்க பஸ்டு இருந்தாதானே” என இசையும் ஆதிக்கு சமமாக பதிலடி கொடுத்தாள்.
“நான் இல்லன்னா என்ன? என் நம்பர் உன்கிட்ட இருக்கு தானே? கால் பண்ணிட்டு சொல்லிட்டு போய் இருக்கனும்ல்ல. காலையில் என் தூக்கத்தை கெடுக்கறத்துக்கு மட்டும் கரெக்டா போன் பண்ண வேண்டியது” என கூறினான் ஆதி.
“உன்ன போய் காலைல வந்து எழுப்புனம்னு எனக்கு என்ன தலையெழுத்தா? இப்ப கூட நான் இந்த வேலையை விட்டு நின்னுறேன். நீ வேற யாரையாவது உனக்கு ஏத்த மாதிரி அசிஸ்டன்ட் வச்சுக்கோ” என இசையும் ஆதியிடம் எகிறினாள்.
“ஹே இம்சை நான் ஒன்னும் உனக்கு ஆப்ஷன் நான் தரல.இத தான் செய்யனும் ஆர்டர் போடுறேன்.என்ன புரியுதா?” என அதிகாரமாக கூறினான் ஆதி.
“புரியுது சார்” என பல்லைக் கடித்து கொண்டு பதிலளித்தாள் இசை.
“ஹா குட். அப்புறம் நாளைக்கு எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்துறு” என எனக் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான் ஆதி.
“நான் ஏன்..” என இசை கத்தும் போது தான் அழைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பதை அவள் கவனித்தாள். மீண்டும் அவள் ஆதிக்கு அழைக்க, ஆதி இசைக்கு பழிக்கு பழி வாங்க வேண்டும் என நினைத்துக் கொண்டு தனது கைபேசியை சைலன்ட்டில் போட்டு விட்டு தனது மகிழுந்தை ஓட்ட தொடங்கினான்.
இசை அவனுக்கு அழைத்து அழைத்து வெறுத்து போய் தனது கைப்பேசியை கட்டிலின் மேலே தூக்கி எறிந்தாள்.
ஆதியின் வீட்டில் ராகுல் சாராவின் மீது தண்ணீர் ஊற்றியதில் கடுப்பான சாரா தனது உடையை மாற்றிக் கொண்டு கோபமாக வீட்டை விட்டு செல்லலானாள். ஆதி, சாரா, ராகுல், தருண் நால்வரும் ஒன்றாகவே சுற்றிவிட்டு ஆதியின் வீட்டிற்கே பெரும்பாலும் வருவதால் சாரா அவள் ஷாப்பிங் செய்து வைத்திருந்த ஒரு ஆடை ஆதியின் வீட்டில் இருந்தது அதை தான் இப்போது அவர் மாற்றிக் கொண்டு வெளியில் செல்கிறாள்.
சாரா செல்வதை கண்ட தருண் ராகுலிடம் “டேய் மச்சி சாரா கண்டு போறாட..” எனக் கூறி முடிக்கவில்லை அதற்க்குள் கனவு உலகத்தில் மிதந்து கொண்டிருந்த ராகுல் சாராவை கொண்டு அவள் பின்னாலே ஓட ஆரம்பித்தான்.
“சாரா சாரா நில்லடி..” என மூச்சு வாங்கிக் கொண்டே கத்திக் கொண்டு அவன் பின்னால் சென்று கொண்டிருக்க முன்னால் அவன் பேச்சை எல்லாம் கண்டு கொள்ளாது முன்னால் நடந்து கொண்டே இருந்தாள்.
‘பேசினாலே இவ சரிப்பட்டு வரமாட்டா இவளுக்கெல்லாம் ஆக்சன் தான் கரெக்ட்’ என மனதில் நினைத்துக் கொண்டே ராகுல் சாராவின் கை பிடித்து அவளை நிறுத்திவிட்டு அதுவரை பேசிக்கொண்டிருந்தவன் ஒன்றும் பேசாமல் அமைதியாக நின்றான்.