Loading

மோதும் மேகங்கள்-11
         
           

ஆதி நேராக அவன் போனில் பேசிய வழக்கறிஞரிடம் சென்று சில காகிதங்களை பெற்றுக்கொண்டான்.

பிறகு யாருக்கோ கைப்பேசியில் அழைத்தான்.

      மறுபுறம் அழைப்பை ஏற்றவள், “சொல்லுடி இசை”  என இசை தான் இந்நேரத்தில் அழைத்து இருப்பாள் என நினைத்து ஆப்பிளை கடித்துக்கொண்டே, ஒய்யாரமாக சாய்ந்து அமர்ந்து கொண்டு கதை கேட்க ஆர்வமாய் கேட்டாள் சுவேதா.

     ” ஹலோ ஸ்வேதா. நான் ஆதி பேசுறேன்” என ஆதி மறுபுறம் இருந்து கூற, அலறியடித்துக் கொண்டு தான் சாப்பிட்ட ஆப்பிளை அப்படியே துப்பிவிட்டு  “சா..சார் நான் இசைன்னு நெனைச்சு..”  என ராகம் இழுத்தாள் ஸ்வேதா.

 

        “

பரவால்ல ஸ்வேதா தட்ஸ் பைன்” என்றான் ஆதி.

 

         “

சார் இசை ஏதாச்சு பண்ணிட்டாளா? அவ ஏதாச்சு பண்ணியிருந்தாலும் மன்னிச்சுடுங்க சார்..” என இம்முறையும் அவசரக்குடுக்கை ஸ்வேதா இசை ஆதியை வம்பு இழுத்து இருப்பாள் என நினைத்துக் கொண்டு ஏதேதோ பேச ஆரம்பித்துவிட்டாள்.

 

         “

நோ நோ ஸ்வேதா. அவ ஒன்னும் பண்ணல” என ஆதி கூறினான். இசைக்கும் ஆதிக்கும் எந்த விஷயத்தில் ஒத்துப்போகுதோ இல்லையோ ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல்,வாய் கூசாமல் பொய் பேசும் விஷயத்தில் மட்டும் நன்றாக ஒத்துப் போகும்.

 

         “

அப்போ எதுக்கு சார்.. எனக்கு கால் பண்ணி இருக்கீங்க?”  என சுவேதா தயங்கிக் கொண்டே கேட்டாள்.

 

         “

அது  வந்து… எனக்கு அவளோட அட்ரஸ் வேணும்” என முதலில் தயங்கினாலும் பின்பு எப்படியோ கேட்டுவிட்டான் ஆதி.

 

         “

உங்களுக்கு அவ அட்ரஸ் எதுக்கு சார் ?”  என வினவியவளக்கு   “ஒரு பாஸா  என்னோட அசிஸ்டன்ட்டோட அட்ரஸ் தெரிஞ்சு வச்சுக்கனும்ல்ல அதுக்கு தான் கேட்டேன்” என இசை கூறிய அதே டயலாக் பாஸ் அசிஸ்டன்ட் என மட்டும் மாற்றி கூறினான் ஆதி.

 

       

ஆதிக்கு இசையின் வீட்டு விலாசத்தை குறுஞ்செய்தியாக அனுப்பி விட்டு  “அனுப்பிட்டேன் சார்”  என வேலையை செய்து விட்டதாக கூறினாள் ஸ்வேதா.

 

          “

ஓகே ஸ்வேதா தேங்க் யூ”  எனக் கூறிவிட்டு அவளது பதிலைக் கூட எதிர்பாராமல் தன் வேலை முடிந்தது என அழைப்பை துண்டித்தான் ஆதி.

 

           “

வேலைக்கு சேர்ந்து ரெண்டு நாள் தான் ஆச்சு,அதுக்குள்ள ஆதி சார் கிட்ட நல்ல பெயர் வாங்கிட்டாளே இசை. அவரே கூப்ட்டு அவளோட அட்ரஸ் விசாரிக்கிறார அளவுக்கு வேலை செய்கிறாளே”  என தன் தோழி இசையை பற்றி பெருமையாக எண்ணிக் கொண்டு தான் கடித்து மீது வைத்திருந்த ஆப்பிளை சுவைக்கத் தொடங்கினாள் ஸ்வேதா.

 

        

படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்து இசை சோர்வாக சோபாவில் அமர்ந்து கொண்டு கைபேசியை நோண்ட ஆரம்பித்தாள். கால் லிஸ்டில் இருந்த அபியின் நம்பரை பார்த்த இசைக்கு அப்போது தான் அபியிடம் தான் பேசியவை எல்லாம் நினைவு வந்தது. உடனே புலனத்தில்(வாட்ஸ் அப்)  “சாரி அபி. ஆதிய பத்தி நீ கேட்டதும் டென்ஷன் ஆயிட்டேன்”  என அனுப்பினாள்.

 

       

முகிலன் அவனது கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் முதலில் கண்டது சோபாவில் அமர்ந்து போன் நோண்டிக் கொண்டிருந்த இசையை தான்.

       அவன்  “இசை போய் தண்ணி கொண்டு வா” என கூறி விட்டு சோபாவில் அமர்ந்தான்.

        “நீயே போய் எடுத்துக்கோடா”  என இசை அபியுடன் சாட் செய்து கொண்டிருந்ததால் அந்த ஆர்வத்தில் அவனது முகத்தை கூட காணாமல் பதிலளித்தாள்.

 

        “

இசை இன்னிக்கு உன் டர்ன் தான் நீ தான் செய்யனும். போய் எடுத்துட்டு வா” என இசையை வேலை செய்ய வைக்க வேண்டும் என கூறினான் முகிலன்.

               “டேய் அதெல்லாம் நம்ம வீட்டுக்காக பொதுவா செய்யறதல தான். இது உன் வேலை நீ போய் குடி” என போனில் இருந்து கண்ணை எடுக்காமலே கூறினால் இசை.

 

         

அக்கா தம்பி இருவரும் அடிக்கடி வீட்டு வேலை செய்ய கூறினால் சண்டை இட்டுக் கொள்வதால் கவிதா தான் இப்படி ஒரு திட்டத்தை அவர்கள் வீட்டில் அமல்படுத்து இருந்தார். இசை ஒரு நாள் வேலை செய்தால் எனில் முகிலன் ஒரு நாள் வேலை செய்ய வேண்டும்.அதற்கு இருவரும் கட்டுப்பட்டு அவர் அவர்களே வேலை செய்வர். இவ்வாறான சுழற்சியில் இன்று இசையின் முறை.

 

           “

போறேன் போறேன் கடவுள் இருக்கான் இசை. எனக்காக இந்த ஒரு சின்ன ஹெல்ப்ப கூட பண்ண மாட்டல்ல நீ. உன்ன வச்சு செய்ற மாதிரி வேலை நிறைய வந்துட்டே இருக்கும் பாரு”  என முகிலன்  கூறி வாய் மூடவில்லை அவர்கள் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.

 

          “

கடவுள் இருக்கான்டா முகிலா”  என முகிலன் கூறிவிட்டு இசையிடம்  “இசை காலிங்பெல் அடிக்கிறாங்க பாரு. இது வீட்டோட பொது வேலை தான போய் கதவ தொற” என்றான்.

 

          

எங்கே முகிலன் கூறுவதை இசை காதில் வாங்கினால் தானே அவள்தான் அபியுடன் சாட்டிங்கில் மூழ்கிவிட்டாளே. அவள் போனை பார்த்து தனியாக சிரித்துக் கொண்டு இருந்ததை கண்ட  முகிலன்  “இந்த அம்மா இப்பதான் இருக்க மாட்டாங்க.நான் மொபைல நோண்டுனா மட்டும் கரெக்டா என்ன திட்டுறதுக்கு ஆஜராகி ஆய்டுவாங்க” என புலம்பிக் கொண்டே  “ஹே இசை காது கேக்குதா இல்லையா காலிங் பெல் அடிக்குது. போய் கதவ தொற” என இம்முறை தொண்டை தண்ணி வற்ற கத்தியே கூறிவிட்டான் முகிலன்.

       

  “ஏன்டா இப்படி கத்தற? நீயே போய் தொறக்கலாம்ல?”  என இசை சலித்துக் கொண்டே கூறினாள்.

      “நானே போய் கூடத் தொறக்கலாம் தான். ஆனா தவிச்ச வாய்க்கு தண்ணி கூட தராத உனக்காக தொறக்க முடியாது. நீயே போய் தொறந்துக்கோ போ”  என கோபமாகக் கூறினான் முகிலன்.

 

      “

ஏய் ப்ளீஸ் டா.என் செல்ல தம்பில்ல,ஆசைத் தம்பில்ல,என் தங்கம்ல்ல,என் வைரம்ல்ல.ப்ளீஸ்டா நீ கிச்சனுக்கு தானே போற பால்கார் தான் வந்திருப்பாருனு நினைக்கிறேன். அப்படியே பால் பாத்திரத்தை கிச்சனில் இருந்து எடுத்துட்டு போயிட்டு வாங்கிட்டு வந்துறுடா.  நாளைக்கு உன் டர்ன்க்கு நானே வேலை செய்றேன்” என நாளை அவள் அம்மா வீட்டில் இருப்பார் தன்னை வேலை செய்ய விடமாட்டார் என எண்ணி அந்த அப்பாவி பிள்ளையிடம் கெஞ்சுவது போல் கூறிக் கொண்டிருந்தாள் இசைப்பிரியா.
 

       

முகிலனும் ஒரு கணம் யோசித்துவிட்டு   ‘நாளைக்கு ஃபுல்லா அவளே வேல செய்றேன்னு சொல்லி இருக்கா.இது சின்ன வேலை தானே,இத நமக்கு செய்திடலாம். அவ நாளைக்கு எல்லா வேலை செய்யட்டும்’ என அவளது திட்டத்தை அறியாமல்  “சரி சரி போறேன். ஆனா நீ கொடுத்த வாக்க மீறக் கூடாது” எனக் கூறிவிட்டு பால் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு கதவு அருகே சென்றான்.

             “ஹான். நான் வாக்கு தவறாத பொண்ணுனு உனக்கு தெரியாதா?” என கூறிவிட்டு மீண்டும் கைபேசியின் மூழ்கினாள் இசை.

 

          

கதவைத் திறந்த முகிலன் தன் முன்னால் நிற்கும் நபரை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தான். “ஆதி.. சார்” என கத்த எடுக்கும் முன்பே ஆதி அவனது வாயை பொத்தி விட்டு,  “ஷ்ஷ்ஷ்.உள்ள போய் பேசலாமா?”  எனக் கேட்டான் ஆதி. இசையின் வீட்டுக்கு வரும் போது தொப்பி போட்டு தன் முகத்தை பாதி மட்டும் தெரியுமாறு வந்திருந்தான் ஆதித்யன். ஆனால் அவனின் ரசிகனான முகிலன் அவனை எப்படியோ கண்டுபிடித்து விட்டான்.

          “வாங்க..”  என முகிலன்  ஆதியை உள்ளே அழைத்து வர அவர்களை காணாத இசை, சோபாவில் அமர்ந்துகொண்டு , டீ பாயில் காலை போட்டுக் கொண்டு, கையில் கைபேசியை வைத்து நோண்டிக் கொண்டு “பால் வாங்கிட்டியாடா? ஃப்ரிட்ஜில் வச்சிரு”  என கைபேசியில் இருந்து கண்ணை எடுக்காமலே கூறினாள் இசைப்பிரியா.

           “இசை யார் வந்து இருக்கானு பாரு” என முகிலன் அவள் அருகில் சென்று அவளைத் தட்டி கூற நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்து எழுந்து நின்றாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்