Loading

முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 22

வீட்டிற்கு வந்த செல்வத்தை சீதா மற்றும் வெங்கட் இன்முகத்துடன் வரவேற்றனர். அருண் வெண்பாவுடன் நன்றாக ஒட்டிக்கொண்டான். இருவரும் விளையாட சென்று விட்டனர். நலம் விசாரிப்புக்கு பிறகு செல்வத்திற்கு கீழே ஒரு அறை ஒதுக்க பட அவர் ஓய்வு எடுக்க சென்றுவிட இரவு உணவு தயாரிக்க சீதாவும் கயலும் அடுப்படிக்கு சென்று விட ஆதி தன் அறைக்கு சென்றுவிட்டான். ஆதிக்கு எத்தனை முறை யோசித்தாலும் கயலின் குழப்பத்திற்கு விடை கிடைக்காமல் போக அவளிடமே கேட்டுக்கொள்ளலாம் என நினைத்து கொண்டான். கயல் தனது அறைக்கு வர ஆதி லேப்டாப் இல் ஏதோ வேலை பார்த்து கொண்டு இருந்தான். கயல் ஏதோ பேச வந்து தயக்கத்துடன் நிற்க ஆதி என்னவென கேட்க ஒன்னும் இல்லை என தலை ஆட்டிவிட்டு பாத்ரூமில் புகுந்து கொண்டாள்.

கயல் வெளியில் வர ஆதி அவளை பிடித்து பால்கனியில் அமர வைத்து பேச ஆரம்பித்தான். “இங்க பாரு முதல்ல எதுவா இருந்தாலும் வாயை திறந்து பேசு… என்கிட்ட பேச என்ன தயக்கம்… என்னைய பாத்த பூதம் மாதிரி இருக்கா…??”, என கேட்க அவள் வேகமாக இல்லை என தலை ஆட்ட, “அப்புறம் என்ன எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்லு… நான் எதுவும் நினைக்க மாட்டேன்… சரியா… இனிமேல் நாம பிரிஎண்ட்ஸ்…” என கை நீட்ட ஒரு சிறு தயக்கத்துடன் கை குலுக்கினாள். “என்ன இப்போ ஓகே வா… இனிமேல் பேசணும்…” என சொல்ல வேகமாக தலை ஆட்டிவைத்தாள். “இப்போ சொல்லு என்ன ப்ரோப்லம்… என்கிட்ட என்ன சொல்ல வந்த…?” என கேள்வியுடன் நிறுத்த தயக்கத்துடன் சொல்ல ஆரம்பித்தாள்.

கல்லூரி விழாவில் நடந்தது முதல் சஸ்பெண்ட் ஆனது வரை அனைத்தையும் சொல்லிமுடித்து, “இப்போ திவ்யா காலேஜ் எப்போ வரேன்னு கேட்ட… எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை… எல்லோர் முன்னாடியும் அவமானத்தோட நின்னதை இன்னும் என்னால மறக்க முடியல… திரும்பவும் அங்கையே எப்படி போறது, எப்படி படிக்கறது எல்லாம் யோசிக்கும்போது என்ன பண்றதுனு தெரியல… இதுல அத்தைமா என்ன நினைப்பாங்க, வீட்ல ஒதுக்குவாங்களா… அதுக்கும் மேல நீங்க என்ன முடிவு எடுப்பிங்கனு தெரியல… அதான் பயந்துட்டு எதுவும் கேக்கல…” என சொல்லவந்ததை முழுமூச்சாக சொல்லிமுடிக்க ஆதிக்கு அவளின் பயம், பதட்டம், குழப்பம் எல்லாமே எதற்கு என புரிந்தது.

“கயல்… நீ காலேஜ் போறதுல எனக்கு எந்த ப்ரோப்லம் இல்லை… வீட்லயும் யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க சரியா… பயப்படாத… வெண்பா கூட சேர்ந்து நீயும் காலேஜ் போய்ட்டுவா… இனிமேல் எல்லாம் நான் பாத்துக்குறேன்…” என ஆறுதலாக பேச கயலுக்கு பெரிய பாரமே இறங்கிய உணர்வு… இருந்தாலும் தயக்கத்துடன் “நீங்க என்னைய தப்பா ஏதும் நினைக்கல தானே… அந்த காலேஜ் இன்சிடென்ட்..” என தயக்கத்துடன் நிறுத்த, ஆதி சிரித்து கொண்டே, “அதெல்லாம் நான் எதுவும் நினைக்கல… அது ஜஸ்ட் ஒரு அச்சிடேன்ட்… அவ்ளோதான்… நீ ரொம்ப யோசிக்காத…” என பேசிவிட்டு செல்ல போகும் அவனையே இமைக்காமல் பார்த்து இருந்தால் கயல்.

இரவு உணவின்போது கயல் கல்லூரி போவது பற்றி சொல்ல யாரும் எதுவும் சொல்லவில்லை. சீதா, “என் தங்க பொண்ணு காலேஜ் போகுதா… பரவாயில்ல… நல்ல விஷயம் தான்… ஏய் வாயாடி என் செல்லத்தை பத்திரமா கூட்டிட்டு போடி…” என கயலிடம் ஆரம்பித்து வெண்பாவிடம் முடிக்க, அவள் முறைத்துக்கொண்டே, “அதெப்படி… அவங்க செல்லம்… நான் மட்டும் வாயடியா… இதெல்லாம் அநியாயம் சீது… இத நான் ஒத்துக்க மாட்டேன்…” என பேச “அடி கழுதை பெயர்-அ சொல்லியா கூப்புட்ற… இருடி உனக்கு இருக்கு” என மிரட்ட அதற்குள் வெங்கட், “ஏய் பாப்பா… என் பொண்டாட்டிய நான் மட்டும் தான் அப்படி செல்லமா கூப்புடுவேன்… வேற யாரும் அப்படி சொல்ல கூடாது… இல்லடி பட்டு…” என தன் மனைவியின் கன்னத்தை பிடித்து கொஞ்ச… சீதா, “என்ன பேச்சு பேசுறீங்க.. புள்ளைங்க முன்னாடி… அறிவே இல்லைங்க…” என திட்டினாலும் முகம் வெட்கத்தில் சிவந்து போனது… “அட அட என் பொண்டாட்டி எவ்ளோ அழகா வெட்கப்படறா…” என ஓட்ட அவரை முறைக்க முடியாமல் ஓடிவிட்டார். அனைவரும் சிரித்து கொண்டே நன்றாக சாப்பிட்டுவிட்டு அவர் அவர் அறையில் புகுந்து கொள்ள செல்வத்தை அழைத்து அவர் அறையில் விட்டாள் கயல்.

செல்வம் தயங்கி கொண்டே, “கயல் மா… திரும்பவும் காலேஜ்… அங்க எல்லோரும் உன்னைய…” என்று நிறுத்த “அப்பா… எல்லாமே கடந்து தான் ஆகணும்… இதுக்கு எல்லாம் நம்ம பயந்து நின்னுட்டா எதுவும் நடக்காது பா… பாத்துக்கலாம்… உங்க மாப்பிள்ளை தான் என்கூட இருக்காருல அப்புறம் என்னபா பயம்… நீங்க எதுவும் நினைக்காம இனிமேல் ஆச்சும் நிம்மதியா இருங்க…” என ஆறுதல் சொல்ல அவரும் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. அவரை உறங்க வைத்துவிட்டு அருணை பார்க்க அவன் வெண்பாவுடன் விளையாடி கொண்டு இருக்க இருவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு அறைக்கு சென்று விட்டாள். வெண்பா, அருண் விளையாடி ஒரு கட்டத்தில் தூங்கியும் போக, வெண்பாவின் அலைபேசி அழைக்க எடுத்து பார்த்தால் புது எண் ஆகா இருக்க ‘யாரா இருக்கும்’ என யோசனையுடன் எடுத்துக்கொண்டு அருண் தூக்கம் கலையாதவாறு மெல்ல நகர்ந்து வந்து பேச ஆரம்பித்தாள்.

“ஹலோ… யாரு..?” என கேள்வியுடன் நிறுத்த… “என்னடி பொண்டாட்டி… புருஷன பாத்து யாருனு கேக்குற… என் நம்பர் கூட வெச்சுக்க மாட்டியா…” என்க வெண்பா, “டேய் அறிவு கெட்டவனே… உனக்கு கொஞ்சம் ஆச்சும் அறிவு இருக்கா… நீ எப்போ உன் நம்பர் குடுத்த நாங்க வாங்காம போய்ட்டோம்… அதும் இல்லாம நான் ஏன் உன் நம்பர் வெச்சுக்கணும்… வெண்பா நம்பர் வெச்சுக்குற அளவுக்கு நீ ஒர்த் இல்லடா ஹிட்லர்… டிஸ்டர்ப் பண்ணாம இப்போ எதுக்கு போன் பண்ண அதை சொல்லு…” என நிறுத்த, “அடியே ராட்சசி… நான் உன் புருஷன் டி… மரியாதையா பேசு… சரி ஏதோ முதல் தடவை விட்டுட்டேன்… இதான் என் நம்பர்… நோட் பண்ணி வெச்சுக்க… இனிமேல் போன் பண்ணா யாருனு எல்லாம் கேக்க கூடாது… புரியுதா…” என்க, “பாப்போம், இப்போ எதுக்கு போன் பண்ண அதை சொல்லு…” என கேட்க, “அதுவா நேத்து ஏதோ பேச வந்து பேச முடியல… அதான் இப்போ பேசலாம்னு…” என அந்த நிகழ்வை எண்ணி சிரித்து கொண்டே கூற, “நேத்து தான் என்னைய தூங்க விடலை… இன்னைக்கும் மொக்கை போட வந்துட்டியா.. எதுவா இருந்தாலும் அப்புறம் சொல்லு எனக்கு தூக்கம் வருது…” என போன்-யை வைக்க போக, “அடியே… ராட்சசி… மாமா ஆசையா போன் பண்ணிருக்கானே.. ஏதவாது பேசுவோம்னு இல்லை… நேத்து மட்டும் என்னைய புடுச்சது இப்போ புடிக்கலையா…” என கேட்க வெட்கத்தில் இங்கே சிவந்தவள் அதை அவனுக்கு காட்டாமல், “நான் எப்போடா சொன்ன உன்னைய புடுச்சதுனு…” என்க, “அடி பாவி.. அப்போ நேத்து நடந்தது எல்லாம்… நீயும் வெட்கப்பட்டியே டி… என்னைய கட்டிபுடுச்சியே அப்போ அது எல்லாம்…” என அப்பாவியாக கேட்க “அது… அது… அதெல்லாம் எதுவும் இல்லை.. நீ தான் என்னைய ஏதோ பண்ணிட்ட… தனியா இருக்க பொண்ணுகிட்ட வந்து அவ பெர்மிஸ்ஸின் இல்லாம, நீயே எல்லாம் பண்ணிட்டு ஒரு அப்பாவி பொண்ணு மேல பழி போட்றியா… உன்னைய எனக்கு சுத்தமா புடிக்கல… இப்போ மட்டும் இல்லை எப்பவுமே… புரியுதா… இனிமேல் கற்பனை கோட்டை எல்லாம் கட்டமா போய் வேலைய பாருடா ஹிட்லர்…” என அவனை பேச விடாமல் இவளே பேசி வைத்துவிட்டாள்.

‘அடியே வெண்பா எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு… ஒ காட்… டேய் ஹிட்லர் உன்னைய எனக்கு புடிக்காது டா… I hate you…’ என கத்த அவளின் மனசாட்சி காரி துப்பியது. “ஏண்டி புடிக்காம தான் மேடம் அவனை கிஸ் பண்ணிங்களா..?” என்க, “நான் எங்க பண்ணேன்… அவன் தான் பண்ணான்…” என பிடிவாதம் பிடிக்க, “ஓஹ் மேடம் அப்படி வரிங்க… சரி அவன் தான் கொடுத்தான்… நீங்களும் அதை ஏத்துக்கிட்டு ஒத்துழைப்பு கொடுத்தீங்களே அதுக்கு பெயர் என்ன… அவனை விடாம கட்டிபுடுச்சுக்கிட்டீங்களே அது என்ன… அவனை பாத்து வெட்கபட்டிங்களே அதுக்கு பெயர் என்ன ராசாத்தி… சொல்லுமா கண்ணு…” என நிறுத்த, “அதெல்லாம் எதுவும் இல்லை… ஏதோ தெரியாம நடந்துருச்சு… அதுக்காக எனக்கு அவனை புடுச்சுருக்குனு நான் சொன்னானா…. அந்த ஹிட்லர எனக்கு எப்பவுமே புடிக்காது… போய் வேலைய பாரு…” என திட்டிவிட்டு படுத்துவிட்டாள். மனசாட்சி தான் இவளிடம் பேச முடியாது என ஜக வாங்கிவிட்டது. வெண்பா உருண்டு கொண்டே யோசித்து போன்-யை எடுத்து சிரித்து கொண்டே அவனின் எண்ணை “ஹிட்லர்” என பதிந்து கொண்டாள்.

ரோஹன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தான்… “என்ன இந்த ராட்ஷசி இப்படி சொல்லிட்டா… நேத்து அவ கண்ணுல எனக்கான தேடல் இருந்துச்சே… அப்போ அந்த வெட்கம்… முத்தம் கொடுக்கும்போது எதுவும் சொல்லாம ஏத்துக்கிட்டாலே அதெல்லாம்…” என ஏதோ ஏதோ யோசித்து தலைவலி வந்தது தான் மிச்சம். ‘அடியே ராட்சசி ஏண்டி என்னைய கொல்ற… முடியல டி பைத்தியமே புடுச்சுரும் போல… என்னடா ரோஹன் உனக்கு வந்த சோதனை… நெறைய பொண்ணுங்கள அலையவிட்டதால வந்த சாபமா… இந்த சிறுவண்டு நம்மள இப்படி வெச்சு செய்யுது…’ என யோசிக்க திடீரென ஒரு குரல் சார் என. அவன் சுற்றி தேட, ‘கண்ணு ராசா… நான் இங்க இருக்கேன்…’ என சொல்ல அவனின் அருகில் அவனின் மனசாட்சி அமர்ந்து இருந்தது.

“நீயா… சொல்லு…” என மறுபடியும் தலையை பிடித்து கொண்டு அமர, “ஆமா சார் என்ன பண்ணிட்டு இருக்கீங்க… அவளை புடிக்கல… பழிவாங்குறேன்… நாய் மாதிரி பின்னாடி சுத்த வைக்குறேனு வீர சபதம் எல்லாம் எடுத்தீங்களே… அந்த மானஸ்தன் எங்க…? எங்க…? எங்க…?” என எக்கோ குடுத்துகொடுத்து கேட்க, “நீ எல்லாம் பேசுற அளவுக்கு ஆயிட்டேன் பாத்தியா… எல்லாம் என் நேரம்…” என சொல்ல, “கேட்டதுக்கு பதில் சொல்லு தம்பி…” என நக்கலாக கேட்டது. “அது… அது வந்து… இப்பவும் அவளை எனக்கு புடிக்கலை… அவளை என் பின்னாடி சுத்த வைக்க தான் போறேன்… அந்த ராட்சசியை யாருக்கு புடிக்கும்… சும்மா பேசி அவளை என் வலையில விழ வெச்சு… அவ கஷ்டப்படறத பாத்து நான் சந்தோச படுவேன். அதுக்கு தான் இதெல்லாம்…” என சொல்ல அது நம்பிட்டேன் என்ற ரீதியில் பார்த்துவைத்தது.

“அப்புறம் எதுக்கு சார் காலையில இருந்து அலைஞ்சு… பிச்சை எடுக்காத குறையா அவ நம்பர் வாங்குனீங்க…” என எகத்தாளமாக கேட்க “அது… பேசி பேசி தான் அவளை என் வழிக்கு கொண்டு வரணும்… அதெல்லாம் உனக்கு சொன்னாலும் புரியாது… முதல்ல நீ கிளம்பு” என விரட்டிவிட்டு, அவளை பற்றியே யோசித்து கொண்டு இருந்தான். அலைபேசியில் அவளின் எண்ணை “ராட்சசி” என பதிந்து கொள்ளவும் மறக்கவில்லை. கடைசியில் தூங்கா இரவு ஆகி போனது தான் மிச்சம். (உங்கள வெச்சுகிட்டு எனக்கு தான் பைத்தியம் புடுச்சுரும்…).

ஆதவன் நானும் இருக்கிறேன் என உலகத்திற்கு காட்டிக்கொண்டு இருந்தது. கயல் ஒரு பதட்டத்துடனும், பயத்துடனும் கிளம்பிக்கொண்டு இருந்தாள். காலேஜ் செல்வதை நினைத்து தூக்கம் வராமல் ஆவி போல் விடிய விடிய அலைந்துவிட்டு, நேரத்தில் சென்று சீதா வருவதற்குள் அனைத்தும் சமைத்துவிட்டாள். சீதா அவளை திட்டி செல்லமாக கோவப்பட்டு ஒரு வழியாக அவளை தயாராக சொல்லி அனுப்பிவைத்துவிட்டு மீதம் உள்ள வேலையை செய்ய தொடங்கினார்.

ஒருவித பதட்டத்துடன் தயாராகி கண்ணாடி முன்பு நின்று இருந்தாள். ஆதி அப்போது தான் எழுந்து அருகில் பார்க்க கட்டில் காலியாக இருந்தது. ஒரு ஏமாற்றம் பரவாமல் இல்லை. இருந்தாலும் தன்னை சமன் செய்து கொண்டு பார்க்க அவனின் மனையாள் இதோடு ஆறாவது முறையாக தலைமுடியை களைத்து களைத்து சீவி கொண்டு இருந்தாள். அந்தோ பரிதாபம்…!! அவளுக்கு திருப்தி தான் வரவில்லை. எளிமையான ஒரு காட்டன் புடைவையை குளித்து, ஈரம் சொட்ட சொட்ட நின்றவளை இவன் கண்கள் ரசனையாக அளவெடுத்து ஒரு இடத்தில் நிலைகுத்தி நின்றுவிட்டது. அந்த ஊதா நிற புடவையில் பளீரென்று தெரிந்த அந்த இடுப்பு மடிப்பில் தொலைந்தேவிட்டான் கள்வன். தன்னை சமன் செய்யவே சிறிது நேரம் அவனுக்கு தேவைப்பட்டது.

எதார்த்தமாக திரும்பி பார்த்தவள் அவனை பார்த்து, “அதுக்குள்ள எழுந்துட்டீங்களா… பக்கத்துல காபி வெச்சுருக்கேன்… எடுத்துக்கோங்க…” என சொல்லிவிட்டு தன் வேலையை தொடர்ந்தாள். அவளுக்கு இருந்த பதட்டத்தில் அவனின் பார்வையை சரியாக கவனிக்கவில்லை. அவனும் காபி-யை குடித்து கொண்டே பார்க்க அவளின் தலைமுடி பிரச்சனை முடிவுக்கு தான் வரவில்லை. “என்ன பண்ற…” என கேட்க “அது தலை சீவலாம்னு பாத்த… எதுவுமே செட் ஆகல… அதான்” என சொல்ல “ரிலாக்ஸ்-அ பண்ணு… எதுக்கு இவ்ளோ பதட்டம்… பயப்படாம கிளம்பு நான் கொண்டு வந்து விடுறேன்…” என சொல்லிவிட்டு கழிவறைக்குள் புகுந்து கொண்டான். போனவன் கதவை திறந்து, “இனிமேல் புடவை கட்டாத… காலேஜ்க்கு சுடிதாரே போட்டுட்டு போ…” என சொல்லிவிட்டு கதவை அடைத்து பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

அவன் வருவதே அவளுக்கு ஒரு தைரியமாக, ஏதோ ஒரு சுடிதாரை அணிந்து கொண்டு சீக்கிரமாக தயாராகி கீழே சென்று விட்டாள். அவளுக்கும் புடவை அணிய தோன்றவில்லை தான். ஆதி எதாவது சொல்லிவிட்டால் அதனால் தான் புடவை அணிந்து இருந்தாள். இப்போது அவனே சொல்லிவிட வேறு என்ன உடனே குஷியாகி மாற்றிவிட்டாள். ஆனால் அவன் ஏன் அப்படி சொன்னான் என அவனுக்கு மட்டுமே தெரியும்.

ஆதி-யும் புறப்பட்டு கீழே வர அனைவரும் சாப்பிட வெண்பா மற்றும் கயலை அழைத்து கொண்டு கிளம்ப கயல், சீதாவை கொஞ்சிவிட்டு முத்தம் எல்லாம் மொத்தமாக கொடுத்துவிட்டு ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு கிளம்பினாள். ஆதியும் எல்லோரிடமும் இவர்களை விட்டுவிட்டு நேராக அலுவலகம் செல்வதாக சொல்லிவிட்டு கிளம்பினான். அருண் டிரைவர் உடன் பள்ளி அனுப்பிவைத்துவிட்டு இவர்கள் கிளம்பிவிட்டனர். வெண்பாவிற்கு தான் ஒரே குஷியாக இருந்தது. சந்தோசமாக கிளம்பினாள்.

கல்லூரியில் வந்து ஆதி கம்பீரமாக இறங்க, அனைத்து பெண்களும் அவனை தான் பார்த்து கொண்டு இருந்தனர். முழங்கை வரை மடித்துவிட்ட சட்டையை சரி செய்து கொண்டு, அடங்காத முடியை ஒரு கையால் கோதி கொண்டே, மீசையை முறுக்கி கொண்டு அவன் நடந்த அழகை வார்த்தையால் புகழ முடியவில்லை. வெண்பாவை அவள் வகுப்பிற்கு அனுப்பிவிட்டு கயலை அழைத்து கொண்டு முதல்வர் அறை நோக்கி நடக்க அவளுக்கு இன்னும் பயமாக இருந்தது. பயத்தில் அவனின் கைகளை கெட்டியாக பிடித்து கொள்ள அவன் கண்களாலே சமாதானம் செய்து கொண்டு இருந்தான்.

கதவை தட்டிவிட்டு அறைக்குள் நுழைந்தவனை பார்த்து முதல்வர் ஆடிவிட்டார். வருவது தி கிரேட் பிசினஸ் மேன் ஆயிற்றே. அவனின் பின்னே வந்த கயலை அவர் கண்கள் கவனிக்க மறுக்கவில்லை. அவரை உட்காரவைத்து, “எப்படி இருக்கீங்க ஆதி… உங்கள பத்தி கேள்வி பட்ருக்கேன்… நீங்க இங்க…??” என தயக்கத்துடன் நிறுத்த ஆதி, “ஐம் குட்… அண்ட் இவங்க Mrs கயல்விழி ஆதித்யா… my wife…” என சொல்ல அவருக்கு பயத்தில் வேர்க்கவே ஆரம்பித்து விட்டது. ஆதி, “இங்க நடந்த ப்ரோப்லம்… எல்லாமே எனக்கு தெரியும்… தப்பு யாரு மேல இருக்குனு உங்களுக்கு தெரியுமா… இல்லை நான் தெரியவைக்கட்டுமா…” என சாந்தமாக பேசினாலும் அவனின் குரலில் ஒரு கோவம் இருக்க தான் செய்தது.

முதல்வர், வழிந்த வேர்வையை துடைத்து கொண்டு “எனக்கு தெரியும்… Mr ஆதித்யா… என் பையன் எல்லாமே சொன்னான்… நானே மன்னிப்பு கேக்கணும்னு நினச்சேன்…” என்று சொல்லிவிட்டு கயலை பார்த்து, “என்னைய மன்னிச்சுடுமா…” என வேண்ட அவள் ஒரு சிரிப்பை மட்டும் பதிலாக தந்தாள். இதயத்தை கத்திகளால் பலமுறை குத்தி கிழித்துவிட்டு, இப்போது கத்தியை உருவி எடுத்து மன்னிப்பு கேட்டால் சரி ஆகிவிடுமா என்ன..!! காயம் என்றும் ஆறாத வடுவாக தானே இருக்கும்… அது ஏற்படுத்தின வலி தான் மறந்து போகுமா…!!

ஆதி, “சி… என்ன பிரச்சனை நடந்தாலும், அதை தீர விசாரிக்கணும்… அதைவிட்டுட்டு எல்லா பழியும் தூக்கி அப்பாவிங்க மேல போட கூடாது… நான் இப்படி பொறுமையா பேசுற ஆளே இல்லை… உங்களுக்கு தெரியும்… பட் இருந்தாலும் பேசிட்டு இருக்கேனா அது என் wife-காக தான்… அண்ட் ஒன் மோர் திங்… இனிமேல் இப்படி நடக்காம பாத்துக்கோங்க… புரியும்னு நினைக்குறேன்… என பேசிவிட்டு எழுந்து “என் மனைவியை யாரும் எதுவும் சொல்ல கூடாது… அது உங்க பொறுப்பு… Mr… நான் கிளம்புறேன்” என பேசிவிட்டு இல்லை இல்லை மிரட்டிவிட்டு கயலை அழைத்து சென்றான். அந்த A.C அறையிலும் வியர்த்து போய் அமர்ந்து இருந்தார் முதல்வர். உடனே கல்லூரியில் அனைத்து ஆசிரியர்களுக்கும் சம்மன் அனுப்பி இந்த பிரச்னையை முடித்துவைத்தார்.

கயலுக்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது. அவனிடம் தேங்க்ஸ்… என சொல்லிவிட்டு ஓடிவிட்டாள். அவனும் சிரித்து கொண்டே செல்ல அதை ஓரமாக நின்று ரசித்து பார்த்து கொண்டு இருந்தாள் அவனின் பாப்பா. தன்னை அறியாமலேயே முதல் காதல் விதையை அவளுள் விதைத்து விட்டு சென்றான் கள்வன். அவளுக்கு அது புரியும் நாள் எந்நாளோ….!!

விடிந்தும் விடியாமல் காவல்நிலையத்தில் முன் நின்று கொண்டு இருந்தான் அவன்…?? யார் அவன்…??
பாப்போம்…!!

காதல் தொடரும்.
மீயாழ் நிலா
தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. Vera aaru namma karthik payala than irukkum