Loading

முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 15

காலையில் எழுந்த வெண்பாவிற்கு இதயத்தின் ரணம் சற்று குறைந்து இருந்தது. அந்த தாலியை பார்த்து ஒரு வெற்று புன்னைகையை சிந்திவிட்டு தனக்கு தானே சில முடிவுகள் எடுத்து கொண்டு எழுந்து பிரெஷ் ஆகி கீழே சென்றாள். இவளுக்காக அனைவரும் காத்து இருந்தனர். ஆதி அலுவலகம் செல்லவில்லை. அங்கு சென்றாலும் அவனுக்கு கவனம் இருக்காது. அதனால் கார்த்தியை அனுப்பி விட்டு வீட்டிலே இருந்தான். வெண்பாவே எழுந்து கீழே வரும் வரை யாரும் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என சொல்லிவிட்டான். அதனால் வெண்பா கீழே வந்ததும் முதலில் அவளை சாப்பிட வைத்தனர். அதன் பிறகு ஆதி தான் பாப்பா, இப்போ எப்படி இருக்கு… நீ ஓகே தான என ஒருவித தயக்கத்துடன் கேட்க வெண்பா சிரித்து கொண்டே எழுந்து அனைவரும் முன் நின்று, பேச ஆரம்பித்தாள்.

வெண்பா, “எல்லோரும் ஏன் இப்படி இருக்கீங்க… நான் நல்லாதான் இருக்கேன்… காலையில ஆட்டோல போகும் போது ஒரு கூமுட்டை எவனோ கடத்திட்டான்… கண் முழித்து பாக்கும்போது எங்கையோ ஒரு ரூம்ல அடைச்சு கட்டி போட்ருந்தாங்க .. என்கிட்டே ஒரு கத்தி எப்படியும் இருக்கும் சேப்டிக்கு, அங்க இருந்தவங்க அசந்த நேரமா பார்த்து கயிறை அறுத்துட்டு எஸ்கேப் ஆயிட்டேன்… அவ்ளோதான் அண்ணா… நான் யாரு ஆதி தங்கச்சி ஆச்சே…” என சிரித்து கொண்டே சொல்ல, அவனும், “என் தங்கச்சி மேல யாரவது கை வைக்க முடியுமா… சரி பாப்பா அந்த இடம் நியாபகம் இருந்தா சொல்லு பாப்பா, அண்ணன் பாத்துக்குறேன்…” என கேட்க இருட்டில் சரியாக தெரியலை அண்ணா, அங்க இருந்து தப்பிச்சு வரணும்னு மட்டும் தான் தோணுச்சு… வேற ஏதும் கவனிக்கலை…” என சொல்ல அவனும் அதற்கு மேல் ஏதும் கேட்கவில்லை.

அப்போது தான் சீதாவிற்கு, வெங்கட்டிற்கும் மூச்சே சீராக வந்தது. “எனக்கு ஒன்னும் இல்லமா… அழுகாத… உன் பொண்ணால யாருக்கும் ஏதும் ஆகமா இருந்தா சரி தான்…” என கிண்டல் செய்ய சீதாவும் தன் மகளை செல்லமாக முறைத்துவிட்டு அணைத்து கொண்டார். ஆதிக்கு அவள் சொல்வதில் நம்பிக்கை இல்லை, இருந்தாலும் மேலும் அதை பற்றி கேட்டு கஷ்டப்படுத்த விருப்பம் இல்லாமல் விட்டுவிட்டான். வெண்பா, “கொஞ்சம் பயம் அண்ணா, எங்க உங்களை எல்லாம் பாக்காம எதாவது ஆயிடுமோ அப்படினு, அதான் பயந்துட்டேன்…” என சொல்ல அனைவரும் அவளை கவலை உடன் பார்க்க, “ஹலோ…!! உடனே பீலிங்ஸ்-அ கொட்டிராதிங்க… எங்க என் தொல்லை இல்லாமல் எல்லோரும் ஜாலியா இருப்பிங்களோனு பயந்துட்டேன்… அதெப்படி நான் இல்லாம நீங்க மட்டும் ஹாப்பியா இருக்கலாம்… அதெல்லாம் முடியாது…” என சொல்ல ஆதி அவளை குட்டி சாத்தன் என தலையில் தட்டி அணைத்து கொண்டான்.

அந்த நாள் முழுவதும் குடும்பமாக நேரத்தை கழித்தனர். வெண்பா தன் இயல்புக்கு திரும்பி கொண்டு இருந்தாள். காலேஜ்க்கு செல்லவில்லை. ஆதி, தன் தங்கையுடன் விளையாடி அவளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தான். அவனுக்கு வெண்பா ஏதோ மறைப்பதாக தோன்றினாலும் பெரிதாக காட்டி கொள்ளவில்லை. கார்த்திக் ஆதியின் வீட்டிற்கு வந்து எல்லோரிடமும் பேசிவிட்டு வெண்பாவையும் கலாய்த்து கொண்டு இருந்தான். வெண்பா, “டேய் தடிமாடி… ஓவரா கலாய்க்குற… எனக்கு காலம் வரும் அப்போ பாத்துக்குறேன்…” என பழிப்பு காட்டிவிட்டு ஓடிவிட்டாள்.

இரவு நேரம்… ஆதியும் கார்த்தியும் காரில் பேசி கொண்டே சென்றனர். ஆதி, “மச்சி வெண்பா சொல்றதுல எல்லாமே பொய்ன்னு தோனுது… அவளை யாரு கடத்துனாங்க தெரியலை… நீ எதுக்கும் அந்த கதிரவன் மேலையும் ஒரு கண்ணு வை… யாரு கடத்துனாங்கனு தெரியட்டும் அவனுக்கு இருக்கு…” என கண்கள் சிவக்க கோவமாக சொல்ல கார்த்தியும் “சரி மச்சான்” என்றான்.

உயர்தர மக்கள் அதிகமாக வந்து போகும் ஒரு இரவு நேர கேளிக்கை விடுதி அது. அங்கு தான் கார்த்திக் ஆதியை அழைத்து வந்தான். “மச்சான் நீ ரொம்ப டென்ஷன்ல இருக்க… அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்… ஜஸ்ட் சில் மச்சான்… வா” என இழுத்து சென்றான். ஆதிக்கும் அது தேவை பட்டதால் எதுவும் சொல்லவில்லை. பாடல்கள் காதை கிழிக்கும் அளவுக்கு ஒலித்து கொண்டிருந்தது. ஆண், பெண் பேதமின்றி எல்லாரும் மது கோப்பையுடனும், அரைகுறை ஆடையுடனும் நிற்க கூட முடியாமல் ஆடி கொண்டிருந்தார்கள்.

ஆதியும் கார்த்தியும் அடிக்கடி இங்கே வருவதால் அவர்கள் எப்போதும் அமரும் இடத்தில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர். அவர்கள் இருவருக்கும் குடிக்கும் பழக்கம் இல்லாததால் கையில் நார்மல் கூல் ட்ரிங்க்ஸ்சை வைத்து இருந்தனர். கார்த்தி, “ஒரு பொண்ணு கூட நம்மள பாக்க மாட்டேங்குதே…” என்ற கவலையுடன் இருக்க ஆதி அவனை கலாய்த்து சிரித்து கொண்டு இருந்தான்.

ஒரு மாடர்ன் யுவதி ஆதியை விடாமல் பார்த்து கொண்டு இருந்தாள். அவன் போட்டிருந்த கருப்பு நிற சட்டை அவன் உடலை இறுக்கி பிடித்து இருக்க, உடற்பயிற்சி செய்த அவன் தேகத்தையும் அவன் அழகையும் இன்னும் கூட்டி காட்ட, அடங்காத முடியை ஒரு கையால் கோதி கொண்டே தன் நண்பனிடம் பேசி கொண்டு இருக்கும் அவனை தான் முழுங்குவது போல் பார்த்து வைத்தாள். அங்கே இருக்கும் பாதி பெண்கள் அவனை தான் அப்பட்டமாக சைட் அடித்து கொண்டு இருந்தனர். அவனின் கண்கள் தன் மேல் படதா என்ற ஏக்கம் அவர்கள் கண்களில் ஏராளம்.

ஆண்மையின் இலக்கணமாக இருந்தவனை விழிகளால் களவாடி கொண்டே ஆதியின் அருகில் வந்து, Baby, shall we dance?… என ஒரு மார்கமாக பார்த்து கொண்டே கேட்க அவன் அவளை ஒரு முறை முறைத்துவிட்டு… sorry.. not interested..! என திரும்பி கொண்டான். அவளும் விடாமல் பேபி, ஒரு தடவை என்கூட டான்ஸ் ஆடி பாரு… interest தான வந்துரும்… என ஒரு விதமாக குழைந்து கொண்டே கேட்க அவனுக்கு தான் கோவம் அதிகம் ஆகிக்கொண்டே சென்றது. இருந்தாலும் நாகரீகம் கருதி அமைதியாக அவளை முறைத்து விட்டு திரும்பி கொண்டான். இவளும் இது தான் வாய்ப்பு என்று அவனை பற்றி தெரியாமல் அவனை உரசி கொண்டே அவனின் கை மேல் இவளின் கையை வைத்து தடவி கொண்டே அவனின் மார்பு வரை ஒரு வித கிறக்கத்துடன் பார்த்து கொண்டே கையை கொண்டு சென்றாள்.

ஆதிக்கு வந்த கோவத்தில் விட்டான் ஒரு அறை. அவன் அடித்த அடியில், அந்த இடம் எங்கும் அமைதி. அந்த பெண் கையை கன்னத்தில் வைத்து கண்களில் திமிருடனும் பலபேர் மத்தியில் தான் அவமான பட்டுவிட்டோம் என்ற கோவத்துடனும், எதிரில் இருந்த ஆதியை பார்வையில் சுட்டு எரித்து கொண்டிருந்தாள். ஆதியும் அவளை கண்கள் சிவக்க முறைத்து கொண்டிருந்தான். அதற்குள் கார்த்திக் அவனை இழுத்து கொண்டு சென்றுவிட்டான். போகும் அவனை கண்களில் கொலைவெறி மின்ன பார்த்து கொண்டு இருந்தாள் அடி வாங்கிய பெண்.

இங்கேயோ ஆதி கார்த்தியை முறைத்து கொண்டிருந்தான். “டேய், ஏன்டா என்னைய இழுத்துட்டு வந்த, அவளுக்கு ரொம்பதா திமிரு, என்ன கொழுப்பு இருந்தா என்கிட்டே அப்படி நடந்துருப்பா. இன்னும் ரெண்டு அரை குடுக்கணும்னு நெனச்சா அதுக்குள்ள நீ இழுத்துட்டு வந்துட்ட ” என்று தன் நண்பனை கழுவி ஊற்றி கொண்டிருந்தான் ஆதி. கார்த்திக், “நீ விட்ட ஒரு அரைகே அவ ரெண்டு நாள் எந்திரிக்க மாட்ட, இதுல இன்னும் நீ அடிச்சுருந்த, அவ்வளவுதான் நீயும் நானும் கொலை கேஸ்ல உள்ளதா போகணும். அதுவும் இல்லாம எல்லோரும் நம்மள வேற ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்கடா அதா உன்னைய கூட்டிட்டு வந்த” என்று தன் பக்க நியாத்தை சொல்லி தன் நண்பனை சமாதான படுத்திக்கொண்டிருந்தான்.

ஆனாலும் ஆதியின் கோவம் மட்டும் குறையவே இல்லை. அதை கண்டு கொண்ட நண்பனுக்கு ‘இதுக்கு மேல இவன உள்ள கூட்டிட்டு போனோம் அவ்ளோதான் நாளைக்கு போலீஸ் ஸ்டேஷன்லதா இருக்கனும் பேசாம போயிரலாம்’ என நினைத்துவிட்டு “மச்சான் கிளம்பலாம்டா எனக்கு வேற ரொம்ப பசிக்குது போலாம்டா” என எப்படியோ பேசி ஆதியை அழைத்து சென்றான். இவனும் கார்த்திக் பசி என்றதும் ஏதுவும் பேசாமல் இருவரும் கிளம்பி விட்டனர்.

வெண்ணிலா மேகத்தில் மறைந்து மறைந்து விளையாடி கொண்டு இருக்க அதை விழி எடுக்காமல் பார்த்து கொண்டு இருந்தால் வெண்பா. கடந்த இரு நாட்களில் தன் வாழ்க்கை முழுவதுமாக மாறி விட்ட ஒரு உணர்வு. இதெல்லாம் ஏன்? எதற்காக? என்ற கேள்விக்கு ஆன விடையை தான் தேடி கொண்டே இருக்கிறாள். கிடைத்தபாடு தான் இல்லை. நொடிக்கு ஒரு முறை தன் கழுத்தில் தொங்கி கொண்டு இருக்கும் தாலியை எடுத்து பார்த்தாள். கண்மூடி நேற்று நடந்த நிகழ்வை நினைத்து பார்த்தாள்.

வெண்பா நாற்காலியை மெதுவாக தள்ளி கொண்டே நகர, அங்கு யாரோ வரும் அரவம் கேட்க அமைதியாக அமர்ந்து கொண்டாள்.ரோஹன் கண்களில் ஒரு திமிருடன் வர, ச்ச… இவன் தானா…என்று நினைத்து கொண்டாள். அவன் அருகில் வந்து அவளை பார்த்து நக்கலாக சிரித்து கொண்டே அவனின் ஆட்களிடம் கண்ணை காட்ட, அவர்கள் வேகமாக வெண்பாவின் கட்டுகளை கழட்டி விட்டு வெளியில் சென்று விட்டனர்.

அறையில் ரோஹன், வெண்பா மட்டுமே. வெண்பாவிற்கு ஒன்றும் புரியவில்லை, எதற்கு கட்டுகளை கழட்டினார்கள்? ஏன் இருவரையும் தனியே விட்டு சென்றனர்? என்று குழப்பம் இருந்தாலும் எதுவும் கேட்டு கொள்ளாமல் நிற்க, ரோஹன் வாய் விட்டு சிரித்து கொண்டே அவளிடம் நெருங்க, அவளும் அசராமல் அவன் பார்வையை எதிர்கொள்ள, “பரவாயில்ல, உன் கண்ணுல பயம் தெரியும்னு எதிர்பாத்தேன்… தைரியமா தான் இருக்க.. சரி இருக்கட்டும்… விஷயத்துக்கு வருவோம்…” என சற்று இடைவெளி விட்டு நிறுத்த அவள் கேள்வியுடன் திமிராக பார்த்து கொண்டு இருக்க… அவளை நெருங்கி தன் கையில் இருக்கும் ஒரு தங்க தாலியை எடுத்து அவள் கழுத்தில் போட்டான்.

வெண்பா, சுதாகரிப்பதற்குள் அவளின் கழுத்தில் அவன் கட்டிய தாலி தொங்கி கொண்டு இருந்தது. வெண்பாவிற்கு அதை பார்த்து கோவம், ஆத்திரம் எல்லாம் வர அவனை அடிக்க போக… அவனின் ஒற்றை வார்த்தையில் அதிர்ந்து நின்று விட்டாள். “இனிமேல் நீ என் பொண்டாட்டி…” என நக்கலாக சொல்லிவிட்டு அவனே சிரித்தும் கொண்டான். “நான் ஏன் இப்படி பண்ணணு உனக்கு குழப்பமா இருக்கும்… எனக்கு தெரியும்… கவலைப்படாத… நானே சொல்றேன்… வாழ்க்கை முழுக்க உன்னைய பாக்க பிடிக்கலை… கண்முன்னாடி வராத… உன்னைய தான் ரொம்ப வெறுக்கிறேன்… நான் எப்படி பட்டவனு உனக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை… வெண்பா சைட் அடிக்க கூட நீ தகுதி இல்லை… உன்னைய தவிர யாரை வேணும்னாலும் லவ் பண்ணுவேன்… ஏன் கல்யாணம் கூட பண்ணிக்குவேன்… ப்ளா… ப்ளா… இப்படி எல்லாம் சொன்னியே… அதனால தாண்டி உன்னைய கல்யாணம் பண்ணேன்…வாழ்க்கைல இனிமேல் பாக்கவே கூடாதுனு நினைக்குற என் முகத்தை தான் நீ பார்க்கணும் எப்பவுமே… உன் கண்ணுல தெரிஞ்ச திமிரு, நக்கல் எல்லாத்தையும் அடக்கி காட்டுறேண்டி…இனிமேல் நீ என் அடிமை… உன்னைய நாய் மாதிரி என் பின்னாடி சுத்த வைக்குறேன்டி… பயப்படாத…. நான் ரொம்ப நல்லவன் தான் மத்தவங்களுக்கு உனக்கு இல்லை… புரியும்னு நினைக்குறேன்… இனிமேல் நான் சொல்றது தான் கேக்கணும்… புருஞ்சு நடந்துக்கிட்டா உனக்கு நல்லது… சரியா செல்லம்…” என அவள் கன்னத்தை கிள்ள போக பின்னால் நகர்ந்து அவனை தீயாக முறைக்க, அதை கண்டு கொள்ளாமல் அவளின் தோளில் வலுக்கட்டாயமாக கை போட்டு வெளியில் அழைத்து வந்து தன் ஆட்களிடம் சொல்லி வீட்டில் விட சொன்னான்.

வெண்பாவிடம், “கவலை படாத செல்லம்… மாமா சீக்கிரமா உன்கிட்ட வந்துருவேன்…இப்போதைக்கு வீட்டுக்கு போ… சீக்கிரமா எல்லாம் நல்லது நடக்கும்…” ஏதோ பல நாள் காதலித்து வந்த காதலியை பிரிந்து போகும் போது பேசுவது போல பேசி கொண்டு இருக்க வெண்பாவிற்கு ஏற்கனவே இருந்த கோவம் இன்னும் அதிகம் ஆகிக்கொண்டே இருக்க, விட்டால் கண்களிலேயே அவனை எரித்து இருப்பாள். ஆனால் அதெல்லாம் கணக்கில் எடுக்காமல் அவன் அவளை இறுக அணைத்து விடுவித்தான். அவளுக்கு தான் அவன் அணைப்பு நெருப்பில் நிற்பது போல இருக்க அவனை முறைத்து தள்ளி கொண்டு இருந்தாள். அவளை பத்திரமாக வீட்டில் விட சொல்லி அனுப்பி வைக்க, வெண்பா தன் நிலையை எண்ணி கண்ணீர் விட்டு கொண்டே செல்ல அதை பார்த்த ரோஹனுக்கு எதையோ சாதித்த உணர்வு.

தான் பேசிய வார்த்தைகளை எண்ணி, அவனே கண்கலங்கி நிற்க போவது தெரியாமல் பேசி விட்டான். இவன் தான் அவள் பின்னாடி நாய் போல சுற்ற போவது தெரியாமல், தன்னுடைய சுயநலத்திற்காக, ஆண்மகன் என்ற திமிறினால் இவன் செய்த செயலுக்கான தண்டனை வெகு சீக்கிரத்தில் கிடைக்க போவது அறியாமல் சந்தோசத்தின் உச்சத்தில் இருந்தான்.

இதெல்லாம் எண்ணி பார்த்த கொண்டே அறைக்கு வந்த வெண்பாவிற்கு கண்களில் முழுவதும் கண்ணீர். கண்மூடி திறப்பதற்குள் அனைத்தும் நடந்து விட்டது. அவனை கொன்று போடும் அளவு வெறி வந்தது. ஆனால் எதுவாக இருந்தாலும் யோசித்து பொறுமையாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அமைதியாக வந்துவிட்டாள். அந்த தாலியை கழட்டி அவன் முகத்தில் விட்டு ஏறிய வெகு நேரம் ஆகாது. ஆனால் இவளுக்கும் அதன் மதிப்பும், மரியாதையும் தெரியும். பிடித்தோ.. பிடிக்காமலோ… இது நடந்துவிட்டது. அதனால் பொறுமை காத்தாள். ‘டேய் ஹிட்லர்… இந்த வெண்பாவை பத்தி உனக்கு தெரியலை… இனிமேல் தெரிஞ்சுப்ப… யாரு யாரு கிட்ட மாட்டிருக்காங்கனு போக போக தெரியும்… இத பத்தி யாருகிட்டயும் சொல்ல போறது இல்லை… உனக்கு எல்லாம் இந்த வெண்பாவே போதும்… நான் உன் பின்னாடி நாய் மாதிரி சுத்துவேனா… ஹா ஹா ஹா… பாப்போம்…’ என நினைத்து விட்டு படுத்து விட்டாள்.

ரோஹன் தனது அறையில் நடந்து கொண்டே யோசித்தான். அவனுக்கு ஆதியை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது. அதற்காக தான் வெண்பாவை கடத்தி அவனை கதற வைக்க பிளான் போட்டு அதை செய்தான். முதலில் அவளை பார்க்கும் போது அவள் பேசினது அவனுக்கு எரிச்சலை தான் தந்தது. அதன் பிறகு அவளை பார்த்தது, அவள் பேசிய வார்த்தைகள், அந்த திமிர், ஆணவம், நீ எல்லாம் ஒரு ஆளா என்ற ஏளன பார்வை இதெல்லாம் அவனுக்கு கோவத்தை உண்டு பண்ண அவளின் திமிரை அடக்க நினைத்து என்ன செய்வது அவளை எப்படி பழிவாங்குவது என்றெல்லாம் தீவிரமாக யோசித்து தான் இந்த முடிவை எடுத்து அதை செயல்படுத்தியும் விட்டான். எல்லாம் நினைத்து கொண்டு படுத்தவனுக்கு அவளை சீக்கிரமே கதற வைக்க வேண்டும் என நினைத்து கொண்டே தூங்கிபோனான்.

பெண்கள் என்றால் சுத்தமாக பிடிக்காமல் இருந்தவன் ஒரே நாளில் ஒரு பொண்ணை பார்த்து அவளையே கல்யாணமும் செய்து உள்ளான். இது தான் விதியோ!!!
விடியல் யாருக்கு என்ன வைத்து காத்திருக்கிறதோ பாப்போம்….

காதல் தொடரும்.
மீயாழ் நிலா
தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. priyakutty.sw6

      விருப்பம் இல்லாம அவங்க கழுத்துல தாலி கட்டிட்டு பேச்சு… 😡

      ம்ம்.. வெண்பா.. தைரியம்… 🤩

      அவர் அப்படி சுத்தறத பாக்க வெயிட்டிங் dr… ❤