தனிமையிலேயே உலாவருகின்ற
நேரத்திலேயே!..
என் இரு விழிகள் வானத்தை. நோக்கியதன்றோ!…
அந்திமாலைப் பொழுதிலேயே
இருள் சூழ்ந்த வேளையிலேயே!…
மேகத்தோடு செந்நிற வண்ணமாக
தோன்றிடுமே பிறையே! ….
ஆகாயமோ, அழகான வண்ணத்திலேயே!….
அந்திவானத்தில் அத்தனை காட்சிகளல்லவா!..
அந்தி நேரத்தில் மழைப்பொழிந்தாயோ!…
சூரியன் மறைகின்ற பொழுதிலேயே!..
சந்திரனின் பிரகாசம்
மிளிருமோ!..
அந்தி வேளையில் பறவைகள்
உல்லாசமாக பறக்கின்றனவே!..
அனைத்துமே ஒன்றாக இணைந்திடும்
காட்சிகளை ரசித்தனவே!..
Nice