Loading

த்மாவிடம் பேசி முடித்துவிட்டு, அலைப்பேசியை வைத்தவளை கொலைகாண்டுடன் முறைத்துக் கொண்டிருந்தான் ஹரிஹரன்.

தன் நண்பனின் முறைப்பைக் கண்டவள், பல்லைக் காதுவரை இழுத்து இளித்து வைக்க, “கேவலமா இருக்குஎன்றவன்,

லவ்வர்ஸ் கூட இவ்ளோ மொக்கைப் போடமாட்டாங்க ஃபிளவர், ஆனா நீங்க ரெண்டு பேரும் பண்ற அலும்பு இருக்கே! முடியல டா சாமி. உனக்கு நண்பனா வாய்ச்சதுக்கும், பத்துவுக்கு மகனா வாய்ச்சதுக்கும் என்ன நல்லா வச்சு செய்றீங்க!” எனப் பொருமித் தீர்த்தான்.

இதெல்லாம் சகஜம் டா கரிச்சட்டி!” என்றவாறே அவனது தோளில் கைப் போட, அவளது கரத்தை விலக்கிவிட்டவன், “ஒரு கருமமும் வேண்டாம் தாயே! நான் போய் என் ஸ்வீட்டிஸ் கூடக் கடல போடப் போறேன்என அவள் கையில் இருந்த, அலைப்பேசியை வாங்க, அவளோஸ்வீட்டிஸ்ஸா! சரியில்லயே, யாரு டா அவளுங்க?” என்றாள்.

மை கேர்ள் ஃப்ரண்ட்ஸ்எனத் தோளைக் குலுக்கிப் பதில் அளிக்க, “என்னாது! கேர்ள் ஃப்ரண்டா! எவடா அவ, எனக்குத் தெரியாம?” எனச் சண்டைக்கு வரிந்து கட்டிக் கொண்டு வந்தாள் மலர்விழி.

அவளின் ஆவேசத்தைப் பார்த்து வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கியவன், “ஏன், ஐயாவோட பெர்சனாலிட்டிக்கு கேர்ள் ஃப்ரண்ட்ஸ்லாம் கிடைக்க மாட்டாங்களா?” எனப் பனியனில் இல்லாத காலரைத் தூக்கிவிட முயல, அவனை ஏற இறங்கப் பார்த்தவள்,

வாய்ப்பே இல்ல ராஜா!” என இதழ் சுளித்தாள் மலர்விழி. “பொறாமை ஃப்ளவர் உனக்கு, அதான் இப்படி பொங்குற!” என அவன் தன் நிலைப்பாட்டில் உறுதியாய் நிற்க,

சும்மா காமெடி பண்ணாத, எனக்குத் தெரியாம எவக்கிட்ட டா கடல போட்டுட்டு இருக்க? அத சொல்லு மொத!” என அவன் கைகளைத் திருக,

ஏன் டி, நான்லாம் பேச்சுக்குக் கூட கேர்ள் ஃப்ரண்ட் இருக்குனு சொல்லக் கூடாதா! என்னவொரு அநியாயம், அக்கிரமம். இந்தச் சின்னப் பையன யாராவது காப்பாத்த வர மாட்டீங்களா!” என அவன் கதற,

இதோ வந்துட்டேன்என்றவாறே இந்திரா அங்கு வந்துக் கொண்டிருந்தாள். “வந்துட்டா குட்டியானை!” என ஹரிஹரன் புன்னகைக்க,

உன்னப் போய்க் காப்பாத்த வந்தேன் பாரு, என்னை செருப்பால அடிச்சுக்கணும்என இந்திரா அவனை முறைத்தாள்.

இந்தா பேபி மாஎன அவன் டக்கெனத் தான் அணிந்திருந்த காலணியைக் கழட்டி அவளிடம் நீட்ட, பத்ரகாளியானாள் இந்திரா.

உன்ன!” எனச் சுற்றும் முற்றும் தேடியவள், அங்குக் குழவிக் கல் இருக்க, அதனைக் கஷ்டப்பட்டுத்  தூக்கியவள், அவனை நோக்கி எறிய நூலிழை இடைவெளியில் குழவிக் கல்லிலிருந்து தப்பித்தான் ஹரிஹரன்.

இதனைக் கண்டு மலர்விழி வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க, “கொலகாரி, கொலகாரி! ஒரு வெர்ஜின் பையன கொல பண்ண பாக்குறியே! வெர்ஜின் சாபம் சும்மா விடாது டி, உன்னை இதே குழவிக் கல்லால அடிக்கல என் பேரு ஹரிஹரன் இல்ல டி குட்டியானை!” என அவன் சபதம் எடுத்துக் கொண்டிருத்தான்.

போ டா! போ டா! உன் சாபத்தைக் கொண்டு போய் சாணில போடு, ஆளு ஒரு ஃப்ளே பாய், இதுல வெர்ஜின் சாபமாம்!” எனக் கடவாயை தோளில் இடித்துச் சிலுப்பிக் கொண்டு இந்திரா மீண்டும் வீட்டினுள் செல்ல,

இப்போ இந்தக் குட்டியானைய யாரு கூப்டா? வந்தவ என்னைக் கொல்றதுக்குனே வந்திருப்பா போல!” எனப் பொரிந்தவன், சற்று தள்ளிக் கீழே கிடந்த குழவிக் கல்லைப் பார்த்து, “கொஞ்சம் நேரத்துல என் உசுர எடுக்கப் பாத்தியே! இந்த உலகத்துல நான் பாக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு. அதெல்லாம் அனுபவிக்க விடாம என்னை மேலோகம் அனுப்ப பாக்குறியா?” எனக் குழவிக் கல்லை வசைப்பாடிக் கொண்டிருந்தான்.

என்னமோ பண்ணு!” என்றவாறே மலர்விழியும் உள்ளே சென்றிட, இவனோ அந்தக் குழவிக் கல்லிடம் இன்னும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தான்.

தோட்டத்திற்கு வந்திருந்த யாழினி, மலரின் வீட்டுப் பக்கம் கடந்து செல்லும் வழியில் ஹரிஹரனைக் கண்டவள், “யாருடா இது புதுசா ஒருத்தன் இருக்கான்? அதுவும் லூசு மாதிரி கொழவிக் கல்லுக்கிட்ட பேசிட்டு இருக்கான்! ஒருவேளை முத்திடுச்சோ. இருக்கும், அந்த மலரோட தோஸ்து தான இவன், அப்பறம் எப்படி இருப்பான்என முகம் அஷ்டகோணலாக வாய்விட்டு அவனைக் கழுவி ஊத்திக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது நிமிர்ந்துப் பார்த்தவனின் கண்ணில் பட்டாள் யாழினி. இளம்பச்சை வண்ண சல்வார் அவள் மேனியில் தழுவியிருக்க, அப்பொழுது தான் தலைக்குக் குளித்திருப்பாள் போலும்! ஈரத்தலையை உலர வைப்பதற்காக இரு காதோரமும் ஒரு கற்றை முடியை மட்டும் எடுத்து நடு மண்டையில் பூக்குத்தும் பின்னூசியை சொருகி இருக்க, காற்றின் வேகத்திற்கேற்ப கற்றை முடிகள் அசைந்தாடிய வண்ணம் இருந்தது.

ஹே, பட்டர்பிளை!” என இவன் ஒரு கையை உயர்த்தி அவளுக்கு, ஹாய்! என்பதுபோல் காட்ட, அவளோ அவனின் பட்டர்பிளை என்ற விளிப்பில் அக்னி பிளம்பானாள்.

வெயிட், நான் அங்க வரேன் பட்டர்பிளை!” என்ற கைக்காட்டிக் கூறியவன், அவள் அருகில் செல்ல, அவளோ அவனை ஒரு முறைப்பு முறைத்தவாறே நிற்காமல் அங்கிருந்து சென்றாள்.

அச்சோ, வடைப் போச்சே!’ என்ற நிலையில் அவன் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு நிற்க, “இன்னும் இவன் அங்க என்ன பண்றான்?” எனப் புலம்பியவாறே அவனைத் தேடி வந்தாள் மலர்விழி.

கரிச்சட்டி, இங்க என்னடா பண்ற?” என அவன் அருகில் வர, “ஃப்ளவர் அந்த பட்டர்பிளை யாரு, செம பிகருல்ல!” என்றவனின் பார்வைப் போன திக்கை பார்த்தவளின் முகம் அனலானது.

ஒரு ஹாய் சொல்லக் கூட வெட்கப்பட்டுட்டு ஓடிப் போய்ருச்சுஎன யாழினி சென்ற திசையே பார்த்துக் கூறிக் கொண்டிருந்தவன் மலரின் முகபாவனைகளைப் பார்க்கத் தவறி இருந்தான்.

ஃப்ளவர், எனக்காக ஒன்னு பண்றியா? அந்தப் பொண்ண எனக்குக் கொஞ்சம் செட் பண்ணிக் குடேன்என்றவாறே அவன் திரும்ப, அவனின் தோழியோ பார்வையாலே எரித்துவிடுவதுப் போல் கண்கள் கோவப்பழமாய் சிவந்திருக்க, அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது தான் தன் தோழியின் கோப முகத்தைக் கண்டு அதிர்ச்சியுற்றவன், “ஃப்ளவர்!” என்றான்.

ஒழுங்கா இருக்கிறதுனா இங்க இரு டா, இல்லனா பொட்டிய கட்டிக்கிட்டு கெளம்பிரு!” என மூச்சுவாங்கக் கூறியவள், திரும்பி நடந்து செல்ல, தன் தோழியின் கோபத்திற்கான காரணம் புரியாமல் விழித்துக்கொண்டிருந்தான் ஹரிஹரன்.

சிறிது தூரம் சென்றவள், நின்று அவன்புறம் திரும்பிஅடுத்தவாரம் அவளுக்குக் கல்யாணம், ஏதாவது உன் விளையாட்டுத் தனத்தை அவக்கிட்ட காட்டி செருப்படி வாங்கிறாத!” என எச்சரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

என்னது! என் பட்டர்பிளைக்கு அடுத்தவாரம் கல்யாணமா!” என அதிர, அவனின் மனசாட்சியோ, “இப்போ என்ன டேஷ்க்கு இவ்ளோ ஷாக் ஆகற?” என வினவியது.

இல்ல, இந்தப் பிஞ்சு இதயத்தைக் கல்யாணம்னு சொல்லி நொறுக்கிட்டாங்களே!” என நெஞ்சுவலிப்பது போல் நடிக்க,

கண்டதும் காதலா!” என மனசாட்சி நக்கலடித்தது. “ஆமா, எனக்கு ஆக்சிடோசின் கொஞ்சம் ஓவரா சுரந்துருச்சு அவளக் கண்டதும்என நீலிக் கண்ணீர் வடித்தான் ஹரிஹரன்.

ஃப்ளவர் சொன்ன மாதிரி நீ செருப்படி வாங்காம இந்த ஊரவிட்டுப் போக மாட்டப் போல! உன்னால நான்தான் அசிங்கப்படப் போறேன்என மனசாட்சியும் அவனைக் கழுவி ஊத்த,

ச்சே, என் காதலோட புனிதம் உங்க யாருக்குமே புரியல!” என ஹரிஹரன் தன்னால் புலம்பிக்கொண்டிருந்தான்.

இந்தப் புலம்பலுக்கெல்லாம் காரணமானவளோ, “ச்சே, என்ன ஃப்ரண்ட்ஷிப்போ! பார்த்தோனே இப்படி வலியறான், இவன மாதிரி ஆட்கள் தான் இந்த மலருக்குப் பிடிக்கும்போல!” என வாய்விட்டுப் புலம்பியவாறே யாழினி தனது இல்லம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தாள்.

மாலைநேரம், அப்பொழுது தான் வெளியே சென்றிருந்த பாரி, வீட்டிற்குள் நுழையத் திண்ணையில் அமர்ந்திருந்த ராமாயி அப்பாயி, “ஏன்டா பேராண்டி, உன் மாமன் மவ வந்துருக்கா போல!” எனத் தன் விளையாட்டை ஆரம்பித்தார்.

அப்படித்தான் கேள்விப்பட்டேன் அப்பாயிஎன்றவாறே அவரின் கேள்விக்கணைகளிலிருந்து தப்பிச்செல்ல முயன்றவனின் கரத்தைப் பற்றி இழுத்து தன் பக்கம் அமர வைத்தார்.

அப்பாயி, உனக்கு ஊரான் வாய மெல்லனா சோறு இறங்காதா?” என்றான் சற்று கடுப்புடன்.

உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா டா பேராண்டி!’ என மனதினுள் நினைத்தவாறே, “ஏன் டா, நீ உன் சின்னத்த வூட்டுப் பக்கம் ஏதும் போகலியா?” என்றார்.

நானே ரெண்டுநாளா வேற சோலியா வெளிய அலஞ்சுக்கிட்டு கெடக்கேன், இதுல அவக வூட்டுப்பக்கம் போக எனக்கெங்க நேரம் கெடக்குஎன்றான் பாரிவேந்தன்.

அப்படியா சங்கதி!’ என மனதினுள் கூறிக் கொண்டவர், “சரி, அதவுடு. அந்த மலருப் புள்ளய பாத்தியா? டவுன்ல போய்ப் படிச்சுப்புட்டு வந்திருக்கு, எப்படி இருக்கா? நல்லா செவத்தப் புள்ள வேற, இப்போ டவுனுக்குப் போய்ட்டு வந்ததால மகாலட்சுமி கணக்கா இருப்பா, எங்க நான்தான் அத கண்ணால பாக்க முடியல!” என உச்சுக் கொட்டினார்.

அந்தப் புள்ளைக்கென்ன அப்பாயி, சும்மா ராணிக் கணக்கா இருக்கா!” என்றவனின் முகம் பூரிப்படைவதை ராமாயி அப்பாயி தன் மனதில் படம்பிடித்துக் கொண்டார்.

அந்தப் புள்ளைய பாத்தா என்னை வந்து பாத்துட்டுப் போகச் சொல்லு டா பேராண்டி, பாத்து எம்பூட்டு நாளாகுது!” எனப் பாக்கை தட் தட் எனத் தட்டியவாறே தனது பேரன் மனதை அறிய முற்பட்டுக்கொண்டிருந்தார் ராமாயி.

அவக்கிட்ட நான் சொல்றதா!’ என அதிர்ந்தவன், அப்பாயிடம் சரியெனச் சொல்லி வைப்போம் என்று, “சரி ப்பாயி, பாத்தா சொல்லி வைக்குறேன்என எழப் போக, “அட எங்க கண்ணு போற, செத்த உட்காரு!” என அவன் கரங்களை மீண்டும் பற்றி அமர வைத்தார் ராமாயி.

கெழவி இன்னிக்கு ஒரு முடிவோட தான் இருக்கும்போலயே!’ என நொந்தவாறே அவன் அமர, “ஏன்டா கல்யாணத்த பத்துநாள்ள வச்சுக்கிட்டு இப்படி கறுத்துப் போய்க் கெடக்கற? ஏதோ பாராமே, அங்க போய்க் கொஞ்சம் வெள்ளை அடிச்சுக்கக் கூடாதா?” என்க,

என்னது பார்ல போய் வெள்ளை அடிக்கவா!’ என அதிர்ந்தவன், “அய்யோ அப்பாயி, அது பார்லர். பார் இல்லஎனத் திருத்தினான்.

என்ன எளவெடுத்தக் கருமமோ! அங்கப் போய்க் கொஞ்சம் வெள்ளை அடிச்சுக்கிட்டா ஆளு பாக்க ஜம்முனு இருக்கும்னு நம்ம பக்கத்து வூட்டு செம்பாயி மருமவ சொன்னா, நம்ம யாழு புள்ளக் கூட அங்க போறேனு சொல்லுச்சு. உன்ற பொண்டாட்டி ஆகப் போறவ தான, அவளையும் கூட்டிட்டு அங்கப் போய் நீயும் கொஞ்சம் வெள்ளை அடிச்சுக்கிட்டு வா டா பேராண்டி, அப்படியே உன் பாட்டன் மாதிரி செவசெவனு மாறிருவஎன்றார் ராமாயி.

எதிலாவது முட்டிக் கொண்டால் தேவலாம் என்றிருந்தது பாரிவேந்தனுக்கு.

உன்ன பட்டிக்காடுனு யாரும் சொல்ல முடியாது அப்பாயி, உன் வாய்க்கு மெட்ராஸயே வித்துட்டு வந்தாலும் வந்துருவ!” என்றவாறே எழுந்துக் கொண்டான்.

என் அறிவக் கண்டுதான் உன் பாட்டன் என்னைக் கடத்திட்டுப் போய்க் கண்ணாலம் கட்டிக்கிட்டாருஎனப் பெருமை பீற்றல் விட, “அந்தக் கெழவன சொல்லணும் முதல்ல! உன்னைப் போய்க் கடத்திட்டுப் போய்க் கண்ணாலம் கட்டிக்கிட்டாரு பாரு! இதுலயே தெரியுது என் பாட்டனோட டேஸ்ட்என்று முனகியவாறே உள்ளே செல்ல,

ஏன்டா அவஅவன் கண்ணால தேதி குறிக்கிறதுக்கு முன்னாடி ஜோடியா ஊரு சுத்துதுங்க, ஆனா நீ கண்ணால தேதி குறிச்சும் அந்தப் புள்ளைய வெளிய கூட்டிட்டு போகக் காணோம், இதெல்லாம் நான்தான் சொல்லித் தரணும் போலஎன்ற அப்பாயி மேல் கோபம் வந்தாலும் அவன் அடக்கிக்கொள்ள முயல,

வெளியே இருந்து உள்ளே எட்டிப் பார்த்தவர், ‘வாயத் தெறக்கறானா பாரு, கொறவாணி மாதிரி மனசுக்குள்ளயே வச்சுக்கிட்டு சுத்தறான். நான் உனக்கு அப்பாயி டா, எப்படி உன் வாயாலயே சொல்ல வைக்கறனா இல்லயா பாரு!’ எனச் சூளுரைத்துக் கொண்டிருந்தார்.

அவனின் கோபத்தை சாந்தமாக்கத் தொடங்கி இருந்தார் ரேவதி. “அத்தைய பத்தி தான் உனக்கு நல்லா தெரியும்ல கண்ணு, வா. வந்து ஒரு வாய் சாப்பிடு, ஒழுங்காவே சாப்டறதுல்ல நீஎன அவனை உணவுண்ண வைத்தார் ரேவதி.

சாப்பிட்டு முடித்துக் கைக் கழுவிவிட்டு எழப் போனவனிடம், “ஏன் கண்ணு, இந்தக் கண்ணாலத்துல உனக்கு இஷ்டம் தான!” என அவர் பங்கை ஆரம்பிக்க,

அய்யோஎன்றிருந்தது பாரிக்கு. “இந்தக் கெளவி தான் உங்களயும் ஏத்தி விட்டுச்சா! நீ கவலப்படாம கண்ணால வேலய பாரு ம்மாஎன்றவன், தன்னறைக்குச் சென்றான்.

அப்பொழுது கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க, ‘யாரு கார்ல வந்துருக்கிறது?’ என்ற யோசனையிலேயே தன் அறையை விட்டு வெளியே வந்தான்.

ரேவதியும் சத்தம் கேட்டு வெளியே வர, காரிலிருந்து ஹரிஹரன் தனது படை பட்டாளங்களுடன் இறங்கினான்.

மலர் காரிலேயே இருக்க, கார் கண்ணாடியை இறக்கியவன், “நீ வரலயா ஃப்ளவர்?” என்றான் ஹரிஹரன்.

இல்ல டா, நீங்க போய்ப் பேசிட்டு வாங்க. நான் இங்கயே இருக்கேன்என்க, அதற்குமேல் அவளை வற்புறுத்தாமல் நால்வரும் பழனியப்பனையும் சுந்தரபாண்டியனையும் பார்க்கச் சென்றனர்.

சுந்தரபாண்டியனும் அப்பொழுது தான் வீட்டிற்கு வந்திருக்க, ஹரிஹரனைப் பார்த்தவர்வாங்க தம்பி, பாப்பா வரலயா?” என அவர் கண்கள் அவர்கள் பின்னால் தேடி அலைப்புற்றது.

அவ கார்ல இருக்கா அங்கிள்என்றவன், “உங்களையும் பழனியப்பன் அங்கிளையும் தான் பாக்க வந்தோம் அங்கிள்என்றான்.

அப்படியா, உள்ள வாங்க, உக்காந்துட்டு பேசலாம்என்றார் சுந்தரபாண்டியன்.

ஏனோ அந்த வீட்டிற்குள் செல்ல ஹரிஹரனுக்கு மனமில்லாததால், “இல்ல பரவாயில்ல அங்கிள், காத்தாட இங்கயே உக்காந்துக்கலாமேஎன்க, அவர் மறுப்பேதும் கூறாமல்,

யாழு மா உள்ள இருந்து நாலஞ்சு சேர எடுத்துட்டு வாஎன அவர் குரல் கொடுக்க, பழனியப்பனும் பாரியும் வாசலுக்கு வந்திருந்தனர்.

இருவரின் வீட்டிற்கும் ஒரே வாசல் என்பதால் வீட்டின் முன் தென்னம்மட்டையால் பந்தல் வேய்ந்திருந்தனர்.

கீழே சாணிப் போட்டு மொழுகியிருக்க, அங்கு ஒரு கயிற்றுக் கட்டிலையும் நாலைந்து நாற்காலிகளையும் கொண்டுவந்துப் போட்டாள் யாழினி.

யாழினியை அங்குக் கண்டவனின் விழிகள் ஆச்சரியத்தில் விரிய, அவனைக் கண்டு முறைத்தவாறே அவள் நகர்ந்தாள்.

உள்ளே செல்ல முயன்றவளை, “யாழு மா, அம்மாவ காபித் தண்ணிப் போடச் சொல்லுஎனச் சுந்தரபாண்டியன் குரல் கொடுக்க, ‘யாழு, மலரோட சிஸ்டரா!’ எனக் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

தற்போது தான் மலர் ஏன் அவ்வளவு கோபப்பட்டாள் என்பது புரிய, அவனின் பார்வை சற்று தள்ளி நிறுத்தப்பட்டிருந்த காரை நோக்கிச் சென்றது. மலரோ தனது அலைப்பேசியில் மூழ்கி இருந்தாள்.

சொல்லுங்க தம்பிஎன்ற சுந்தரபாண்டியனின் குரல் அவனை நடப்பிற்குக் கொண்டுவர, “நாங்க அஞ்சுபேரும் இங்க பக்கத்துல இருக்கிற ஊருக்குலாம் போய் மெடிக்கல் கேம்ப் போடலாம்னு இருக்கோம் அங்கிள். பக்கத்து ஊர்ல இருக்கிற ஜி.ஹெச் தான் எங்களுக்குப் போஸ்ட்டிங் போட்ருக்காங்க, அதான் உங்கள பார்த்துட்டு உதவி கேட்டுட்டுப் போகலாம்னு வந்தோம்என பழனியப்பன், சுந்தரபாண்டியன் இருவரையும் பார்த்துக் கூறினான்.

அதுக்கென்ன ப்பா, சிறப்பா செஞ்சிருவோம், நம்ம ஊரச் சுத்தியுள்ள எட்டுப்பட்டியும் நமக்குச் சொந்தக்காரக தான். என்ன பண்ணனும்னு சொன்னீங்கனா அத செஞ்சுக் கொடுத்தறோம்என்றார் பழனியப்பன்.

மச்சான் சொல்றதும் சரிதான், நம்ம ஊருக்கு நல்லது பண்ணப் போறீக. கண்டிப்பா எங்களோட ஒத்துழைப்பு உங்களுக்கு இருக்கும், இந்தச் சின்ன வயசுலயே பெரிய மனசோட இத நீங்கப் பண்ணும்போது நாங்க வேண்டாம்னு சொல்லிறவா போறோம், என்ன பண்ணனும்னு சொல்லுங்க. நாங்க வெளிய கிளிய போய்ருந்தாலும் நம்ம மருமவன் பாரி கிட்ட கூட நீங்கக் கேட்டுக்கலாம்என்றவர், பாரியிடம்

ஏப்பா பாரி, இதப் பாத்துக்கலாம்லஎன்றார். “அதுக்கென்ன மாமா, செஞ்சடலாம். நான் கூட இருந்து அவங்களுக்குத் தேவையானத பண்ணிக் கொடுக்கறேன்எனக் கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் அதனைத் தனக்குச் சாதகமாக்க எண்ணினான்.

அப்போ அவங்களுக்குத் தேவையானத பாத்து பண்ணிரு பா பாரிஎன்றார் பழனியப்பன். அப்பொழுது யாழினி காஃபி கொண்டுவந்து அனைவருக்கும் கொடுக்க, அங்கு அமைதியான சூழல் நிலவியது.

இடக்கையால் சுந்தரபாண்டியன் காஃபி டம்ளரைப் பிடித்துக் குடிக்க, அதனைக் கண்ட ஹரிஹரனின் இதழ்கள் புன்னகையில் மலர்ந்தது.

ரைட் ஹேண்ட்ல டம்பளர பிடிச்சு குடியேன் ஃபிளவர்!” எனப் பலமுறை தனது இடக்கரத்தால் டம்பளரைப் பிடித்துக் குடிக்கும் தனது தோழியை மாற்ற முயற்சித்துள்ளான்.

அப்பொழுதெல்லாம், “பழக்கதோஷம் டா கரிச்சட்டி, அத மாத்தவே முடியல!” எனச் சிணுங்கும் மலரைக் கண்டு தலையில் அடித்துக் கொள்வான். உருவத்தில் மட்டுமல்ல, பழக்கவழக்கங்களிலும் தனது தந்தையை உரித்து வைத்திருப்பவள் மலர்விழி.

ஆனால் அவளின் பிடிவாதம் தான் தவறென நினைத்தவாறே சுந்தரபாண்டியனைப் பார்த்தவனுக்கு புரிந்தது அந்தப் பிடிவாதமும் எங்கிருந்தது வந்ததென்று.

அவரும் பிடித்தால் உடும்பு புடி தான். அவரின் நிலைப்பாட்டை யாராலும் மாற்ற இயலாது. அதனால் தானே குணவதியை தனது அருகிலே வைத்துக் கொண்டார். இரு மனைவிகளையும் எப்படித் தான் சமாளிக்கிறாரோ என நினைத்தவனுக்கு அருகில் இருந்த பாரியைக் கண்டும் பரிதாபம் தோன்றியது.

உங்க மாமன் அவர் வாழ்க்கைல மட்டுமில்ல உங்க வாழ்க்கைலயும் நல்லா தன் ரெண்டு மகள் மூலமா விளையாடுறாருஎன நினைத்தவனைப் பார்த்து, காலம் கைக்கொட்டிச் சிரித்தது.

நாளை அவனது வாழ்வும் இருபெண்களுக்கிடையே மாட்டிக்கொண்டு சிரிக்கப்போவதை எண்ணி

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
10
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. யாழினி ஹரிக்கா?.பாரிக்கு மலரா?.

    2. யாழ் ஹரிக்கா? மலர் பாரிக்கா? 🤔🤔🤔