Loading

ரை வந்தடையும்வரை யாழினி அமைதியாக வர, ஹரிஹரனும் அதற்குமேல் அவளை வம்பிழுக்கவில்லை. ஊருக்கு வந்தவுடன் முதல் வேலையாக தங்களுக்கென பார்த்திருந்த வீட்டை பார்க்கச் சென்றனர் இருவரும்.

சுந்தரபாண்டியனின் இல்லத்தில் இருந்து பத்து வீடுகள் தள்ளி தான் இருந்தது அந்த வீடு. யாழினியின் உறவினரின் இல்லம் தான். அவர்களின் மகன் சென்னையில் இருப்பதால் பெற்றோரும் அங்கே சென்றிருக்க, வீடு வெறுமனே பூட்டி வைக்கப்பட்டிருந்தது.

விஸ்தாரமான ஓட்டு வீடு அது. வாசலில் சிறு தாழ்வாரம், அதனையடுத்து திண்ணை, உள்ளே ஹால், அதன் வலப்புறம் சமையலறையும், பூஜையறையும் இருந்தது. இடப்புறம் இரு படுக்கையறைகள். வீட்டின் பின்பக்கம் கழிப்பறை வசதியுடன் கூடிய கொல்லைப்புறம்

சண்முகமும் உடன் வந்திருக்க, “வீடு ரொம்ப அழகா இருக்குங்க மச்சான்என்றான் ஹரிஹரன். “இது எங்க பெரியப்பா வீடு தான்ங்க மாப்பிள்ளை, நீங்க இங்க தாராளமா எவ்ளோ நாள் வேணும்னாலும் தங்கலாம். அவங்க இப்போதிக்க ஊருக்கு வர்ற மாதிரி இல்ல, அங்கேயே செட்டில் ஆகிட்டாங்க. சும்மா பூட்டியே இருந்துச்சு, உங்களுக்காக கேட்டவுடனே பெரியப்பா சம்மதம் சொல்லிட்டாங்கஎன்றான்.

வெள்ளிக் கிழமை வீடு பால் காய்ச்சறதுக்கு ஏற்பாடு பண்ணனும் மச்சான், ரொம்ப பெருசா வேண்டாம். சின்னதா பண்ணிக்கலாம்என்றவன், “யாழு, நீ ரெடியா இரு. சாயந்திரம் கடைக்குப் போய் தேவையான பொருள் வாங்கணும்என்றான் தன் மனைவியிடம்.

அவள் சரியென தலையாட்ட, “மாப்பிள்ளை, ஏற்கெனவே அப்பா யாழுவுக்கு சீர் கொடுக்க எல்லாம் வாங்கி வச்சுருக்காரு, இப்போ நீங்க வாங்கணும்னு அவசியம் இல்ல. அதுலயே எல்லா பொருளும் இருக்கும்என்றான் சண்முகம்.

எனக்கு இந்த சீர் வாங்கிறதுல அவ்ளோ விருப்பம் இல்லங்க மச்சான், யாழு ஆசைப்பட்டா அத வாங்கிக்கட்டும். ஆனா, நானும் என் மனைவியும் வாழப் போற வீட்டுக்கு தேவையான பொருட்கள நான் வாங்கணும்னு ஆசைப்படறேன்என்றவன் யாழினியை பார்க்க அவளோ எதுவும் கூறாமல் அமைதியாக நின்றிருந்தாள்

சண்முகமும் எதுவும் பேசாமல், அங்கிருந்து கிளம்பினான். அவன் கிளம்பியவுடன், “நான் சொன்னதுல உனக்கு கோபமா பட்டர்பிளை?” என்றான் ஹரிஹரன்.

இல்லங்க, ஆனா இதெல்லாம் நம்ம ஊர்ல ரொம்ப பார்ப்பாங்க. உங்களுக்கு இந்த சீர்வரிசைலாம் பெருசா தெரியாம இருக்கலாம், ஆனா பொண்ண பெத்தவங்களுக்கு அது தான் மரியாதைஎன்றாள் மெதுவாக.

ம்சரி, ஆனா எனக்கு இதுல விருப்பம் இல்ல பட்டர்பிளை, உனக்கு விருப்பம்னா .கேஎன தோளைக் குலுக்கியவன், “நான் பிரண்ட்ஸ்ஸ போய் பார்த்துட்டு வரேன். நீ ஈவ்னிங் கிளம்பி இரு, வெளிய ஷாப்பிங் போகலாம்என்றவன், அங்கிருந்து கிளம்ப, “இப்போ சீர் வாங்கறதா இல்ல வேண்டாம்னு சொல்றதா!” எனக் குழம்பிப் போனாள் யாழினி.

மருத்துவ முகாம் முடிந்து அப்பொழுது தான் நண்பர்கள் மலர்விழியின் வீட்டிற்கு வந்திருக்க, நடுகூடத்தில் அமர்ந்து குணவதி கொடுத்த தேநீரை அருந்திக் கொண்டிருந்தனர்.

மலர்விழியும் அங்கு தான் இருக்க, கதவோரத்தில் நின்று உள்ளே நடப்பனவற்றை பார்த்துக் கொண்டிருந்தான் ஹரிஹரன்.

எதேட்சையாய் வாயிலைப் பார்த்த இந்திரா, “டேய் ஹரி, நீ எப்போடா இங்க வந்த?” என ஆச்சரியமாய் வினவ, ஹரி என்ற பெயரைக் கேட்டு திரும்பிப் பார்த்த மலர்விழியின் முகம் ஒருநொடி மலர்ந்தாலும் அடுத்த நொடியே கடுகடுவென ஆனது.

ஏன் குட்டியானை, நான்லாம் இங்க வரக்கூடாதா?” என்றவாறே உள்ளே வர, அவனைக் கண்ட குணவதி, “அடடே, வாங்க தம்பிஎன அழைக்க வந்தவர், “வாங்க மாப்பிள்ளைஎன மலர்ந்த முகத்துடன் அழைக்க, “வரேங்க சின்ன மாமியாரேஎன குனிந்து பவ்யமாக கூற, “அட என்னப்பா இது!” என்றார் குணவதி.

கரெக்ட்டா தான ஆன்ட்டி கூப்ட்டேன்!” என அவன் வினவ, புன்னகைத்தவர், “யாழுவும் கூட வந்திருக்கிறாளா தம்பி?” என்க, “ஆமா ஆன்ட்டி, ரெண்டு பேரும் தான் வந்தோம். எங்க கேம்ப் முடியற வரை இங்க தான் இருக்கப் போறோம்என்றவன், “நீங்க பஸ்ல வரலயா ஆன்ட்டி? உங்கள அங்க பார்க்கலயே?” என்றான் ஹரிஹரன். “இல்ல தம்பி, நம்ம ஊர்க்காரங்க கொஞ்சம் முன்னமே கார்ல கிளம்புனாங்க அவங்களோட வந்துட்டேன்என்க, “…” என்றவன், மலர்விழியை பார்க்க, அவளோ டம்பளரை தன் தாயின் கையில் திணித்துவிட்டு எதுவும் பேசாமல் தன் அறைக்குச் சென்று தனது கைப்பையை எடுத்துக் கொண்டு, “நான் போய்ட்டு வரேன் ம்மா. போய்ட்டு வரேன்என தன் நண்பர்களையும் பார்த்துக் கூறியவள், கிளம்ப எத்தனிக்க, “சாப்ட்டு போகலாம்ல மலர்!” என்றார் குணவதி.

உங்க வரவேற்புலயே என் வயிறு நிறைஞ்சுருச்சு ம்மா, மிச்சம் மீதி இருக்கிறத உங்க சின்ன மருமகனுக்கு போடுங்கஎன சின்ன மருமகனில் சற்று அழுத்தம் கொடுத்துக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள். ஹரிஹரனோ தன்னிடம் பேசாமல் போகும் தன் தோழியை பார்த்தவண்ணம் நின்றிருந்தான்.

அவ அப்படி தான் தம்பி, நீங்க சாப்ட வாங்கஎன குணவதி அழைக்க, “இல்லங்க ஆன்ட்டி, இப்போதான் சாப்ட்டு வந்தேன். அப்படியே இந்த பக்கிங்கள பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்என்க, அதன்பின் நண்பர்களின் அரட்டை அரங்கம் ஆரம்பித்தது.

அப்புறம் டா ஹரி, கல்யாண வாழ்க்கைலாம் எப்படிப் போகுது?” என்றாள் இந்திரா. “ப்ச்என அவன் உச்சுக்கொட்ட, “என்னடா கேள்வி கேட்டா பதில சொல்லாம உச்சுக் கொட்றஏன் உன் பொண்டாட்டி, அதாவது உன் தோழியின் தங்கை உன்னை நல்லா பார்த்துக்கிறது இல்லையா?” என அவள் நீட்டி முழக்க, “அத ஏன் டி கேட்கிற, அவ அக்காகாரிய விட மோசமா இருக்காஇப்போ தான் மலை இறக்கிட்டு இருக்கேன்என்றான் ஹரிஹரன்.

டேய், அப்போ ஒன்னுமே நடக்கலையா?” என இந்திரா கிசுகிசுக்க, “என்ன டி நடக்கணும் புரியலஎன அவள் கேட்டது புரியாமல் முழித்தான் ஹரிஹரன்.

தத்தி, தத்திஎன தலையில் அடித்துக் கொண்டவள், “அப்போ நீ இன்னும் வெர்ஜின் பையன் தானா!” என்க, ‘அடிப்பாவிஎன்றிருந்தது ஹரிஹரனுக்கு.

ஏன் குட்டியானை உனக்கு இந்த வெ, மா, சூ, சொ இதெல்லாம் கிடையாதா?” என்க, “அதெல்லாம் எந்த கடைல டா விக்கிது, எனக்கு ஒரு ரெண்டு கிலோ வாங்கி குடேன்என்றாள் இந்திராகாந்தி.

இவள!” என அவளை அடிக்க அருகில் ஏதாவது சிக்காதா எனத் தேட, “இந்து எஸ்கேப்என்றவாறே இந்திரா அங்கிருந்து ஓடினாள். அவள் சென்றவுடன், “அப்போ உண்மையாலுமே எதுவும் நடக்கலயா டா?” என செந்தில் வினவ, “டேய்!” என்றான் அழாத குறையாய்.

ப்ச் போடா, நீ தான் நம்ம கேங்லயே முதல்ல எல்லாத்தையும் தெரிஞ்சுக்குவனு பார்த்தேன்அதுவும் இல்லயா!” என அவன் சோககீதம் வாசிக்க, அங்கொருத்தி செந்திலை ஏகத்துக்கும் முறைத்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது தான் சிலம்புவைக் கண்டவன், “பேபி மா!” என இளித்து வைக்க, தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து எழுந்து செல்ல, இப்பொழுது சீரியஸ்ஸாக, “யாழினி இந்த கல்யாணத்த ஏத்துக்கிட்டாங்களா டா? ஏன்னா…” என அவன் சற்று தயங்க, “அவ இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா நார்மல் ஆகறா டா. அதுக்குள்ள நான் அவக்கிட்ட உரிமை எடுத்துக்கிட்டா அந்த ரிலேஷன்ஷிப் ரெண்டு பேருக்குமே சந்தோசத்த குடுக்காது. அவ மனசு புல்லா எனக்கே எனக்குனு இருக்கும்போது தான் எங்க வாழ்க்கைய ஆரம்பிக்கணும் டா, அப்போ தான் அவளுக்கும் எந்த குற்றவுணர்வும் இருக்காதுஎன்றான் ஹரிஹரன்.

தன் நண்பனை அணைத்துக் கொண்டவன், “சீக்கிரம் எல்லாம் சரி ஆகும் டாஎன்க, அதன்பின் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் ஹரிஹரன்.

மலர்விழி வீட்டிற்கு வந்தபின் தான் வெளியே சென்றிருந்த பாரிவேந்தனும் வீட்டிற்கு வந்தான். உள்ளே நுழைந்தவுடன், “சாப்பிட்டியா புள்ள?” என தன் மனைவியை பார்த்து வினவ, “டேய், திண்ணைல ஒருத்தி உக்காந்துருக்கேன், கண்ணு தெரியுதா?” என்றார் ராமாயி.

இந்த கெழவியஎன நறநறவென பல்லைக் கடித்தவன், வேகமாக அவர் அருகில் வந்து, “கல்யாணத்தையும் பண்ணி வச்சுட்டு இப்படி நந்தி மாதிரி நுழையறதே வேலையா போச்சுஎன்றான் பாரிவேந்தன்.

அட உக்காரு டா பேராண்டிஎன அவனை தன் அருகே அமர வைத்தவர், “அம்மாடி மலரு, உன் புருஷனுக்கு தண்ணி கொண்டு வந்து குடுஎன்க, மறுபேச்சு பேசாமல் உள்ளே இருந்து தண்ணீரோடு வெளியே வந்தாள் மலர்விழி.

கமலம் வாசலைக் கூட்டிக் கொண்டிருக்க, அவர் காதில் விழும்வண்ணம், “என்னவொரு பணிவு என் பேரன் பொண்டாட்டிக்குஎன நெட்டி முறிக்க, ‘ஆஹா, இந்த கெழவி இன்னிக்கு என்ன சண்டைய இழுத்து வாசல்ல போடப் போகுதோஎன மனதினுள் நொந்தவாறே, “அப்பாயி!” என பல்லைக் கடித்தான் பாரிவேந்தன்.

அட நீ செத்த சும்மா இரு டா, நீ போய் உன் புருஷனுக்கு சோறு போட்டு கொண்டு வா மலருஎன்க, அவரின் பேச்சைத் தட்ட முடியாமல், அவள் தட்டில் சாதமிட்டு தண்ணீர், குழம்பு சகிதமாக வெளியே எடுத்துவர, “நீ சாப்பிடு டா பேராண்டிஎன்றார்.

வெளியே நடப்பவைகளை ரேவதியும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார். ஆனால் தன் அத்தையிடம் அவர் எதுவும் பேச முடியாதே, அதனால் அமைதி காக்க, தன் கணவனுக்கு உணவு பரிமாறினாள் மலர்விழி.

என் பேத்தி என் பேரனுக்கு எவ்ளோ அழகா சோறு பரிமாறுறா, புருஷன் பொஞ்சாதினா இப்படி இருக்கணும்என்க, பாரிவேந்தனுக்கு சாதம் உள்ளே இறங்க மறுத்தது.

அட நீ சாப்பிடு டாஎன்க, “அப்பாயி!” என்றான் பாரிவேந்தன் சற்று கடுப்புடன். “நான் செய்றத நீ வேடிக்கை மட்டும் பாரு!” என கிசுகிசுத்தவர், “ஏன் டி கமலம், உன் மருமகனும் மகளும் எங்க?” என்றார்.

அவரோ கூட்டிக் கொண்டிருந்த துடைப்பத்தை கையில் வைத்துக் கொண்டே, “அவங்க வீடு பார்க்க போய்ருக்காங்க பெரியம்மா!” என்றார். “அப்படியா சங்கதிஎன அவர் இழுக்க, “அவளுக்கென்ன பெரியம்மா, நல்ல குடும்பத்துல தான் வாக்கப்பட்ருக்காஉங்களுக்கு தான் அந்த கொடுப்பினை இல்லாம போச்சுஎன நொச்சுக் கொட்டியவாறே உள்ளே செல்ல, “இது தேவையா அப்பாயி!” என கடிந்துக் கொண்டான் பாரிவேந்தன்.

அப்படி இல்ல டா பேராண்டி, தெரிஞ்சோ தெரியமலோ அந்த யாழு பிள்ளை வாழ்க்கை திசைமாறிப் போக நானும் ஒரு காரணம் ஆகிட்டேன். அவ போன வீட்ல புருஷனோட நல்லா இருக்கணும்ல. இப்போ இங்க நடந்ததெல்லாம் கண்டிப்பா கமலா அவ காதுல ஓதுவா, அப்பயாச்சும் அவ உன்னை மறந்து தன் புருஷன கவனிப்பால்ல. அவளும் எனக்கு பேத்தி தான டா பேராண்டி!” என்க, அதற்குமேல் அவரிடம் எதுவும் பேச முடியவில்லை.

மலர்விழி தன் கணவனுக்குப் பரிமாறிவிட்டு அறைக்குச் செல்ல, ராமாயி பாட்டியின் அருகே அமர்ந்த பாரிவேந்தன், “நீ எது பண்ணாலும் அதுல ஒரு காரணகாரியம் இருக்கும். அத புரிஞ்சுக்காம உன்மேல கோபப்பட்டுட்டேன் அப்பாயிஎன்க,

அட போ டா கிறுக்குப் பயபுள்ள, உன் கோபம் என்னை என்ன பண்ணப் போகுது. போய், உன் பொண்டாட்டிய கவனி, இப்போ நான் பேச்சுக்கு சொன்னதெல்லாம் சீக்கிரம் உண்மையாகணும், சரியாஎன அவன் தலையை கோதிவிட, “சரி அப்பாயிஎன்றவனுக்கு கண்களில் நீர் கோர்த்தது.

அவர் மட்டும் இல்லை என்றால் இன்று அவன் காதலை விட்டுக் கொடுத்து யாழினியை தான் திருமணம் செய்திருப்பான். அவரின் பேச்சு சிலசமயம் கோபத்தை உண்டாக்கினாலும், அனைவரின் மேலும் அவர் வைத்துள்ள அன்பு அளவற்றது. அவன் அமைதியாக இருக்க, “நேரமாச்சு டா, போய் உன் பொண்டாட்டிய பாருஎன்க, எழுந்து உள்ளே சென்றான்.

மலர்விழி உடைமாற்றிவிட்டு அமர்ந்திருக்க, “நீ சாப்பிட்டியா புள்ள?” என்றான் பாரிவேந்தன். “ம்…” என அவள் தலையாட்ட, “உனக்கு என்மேல கோபம்னு தெரியும் புள்ள, ஆனா அந்த கோபம் போக நான் என்ன பண்ணனும்னு தான் தெரியலஎன்றவனின் குரலில் அவனின் வேதனையும் ஒலித்தது.

அவள் இன்னும் மௌனத்தையே கடைபிடிக்க, “நம்ம விசயத்த விடு, ஹரி என்ன தப்பு பண்ணான் புள்ள? நீ பேசாம இருக்கிறதால அவன் ரொம்ப மனசொடைஞ்சுப் போய்ட்டான் புள்ள…” என்றான் பாரிவேந்தன்.

அவன் பண்ண தப்பு உங்களுக்கு தெரியாதாங்க? என்ன காரியம் பண்ணி வச்சுருக்கான்? அவன் எனக்கு நண்பன் மட்டுமில்ல, ஒரு அப்பாவா, ஏன் சில நேரங்கள்ள எனக்கு ஒரு அம்மாவா கூட இருந்திருக்கிறான். ஆனா, இது அவன் வாழ்க்கைங்க. அதப் போய் எனக்காக…” என்றவள் அதற்குமேல் முடிக்க முடியாமல் தவித்தாள்.

அவன் வாழ்க்கைய அவனுக்காக மட்டும் தான் வாழணும், அடுத்தவங்களுக்காக வாழ ஆரம்பிச்சா அந்த வாழ்க்கைல என்ன சந்தோசம் கிடைக்கும்?” என்க, அவள் கூறுவது சரியென்றாலும், அவன் காதலித்து தானே யாழினியை ஏற்றுக் கொண்டான். அதனை எவ்வாறு அவளிடம் கூறுவது எனப் புரியாமல் தவித்தான் பாரிவேந்தன்.

இனி அவனுக்காக என்கிட்ட தூது வராதீங்கஎன்றவள், அறையை விட்டு வெளியேற தலையில் கைவைத்த வண்ணம் அங்கேயே அமர்ந்தான் பாரிவேந்தன்.

அன்றைய பணியை முடித்துவிட்டு ஆதவன் இளைப்பாறத் தொடங்க, நிலவு தன் பணியை ஏற்றுக்கொண்டு நிலமகளின் மீது தன் ஒளிக்கதிர்களைப் படரவிட்டது.

ஹரிஹரனும் யாழினியும் டவுனிற்கு சென்று வீட்டிற்குத் தேவையானப் பொருட்களை வாங்கிக் குவித்தனர். ஹரிஹரன், வாங்கும் ஒவ்வொரு பொருளையும் யாழினியிடம் கருத்துக் கேட்டே அவளுக்கு பிடித்தவைகளை வாங்க, அவனுடன் ஓரளவு சகஜமாகப் பேசத் தொடங்கி இருந்தாள் யாழினி.

இரவு வீட்டிற்கு வந்தவர்கள், ஏற்கெனவே ஒட்டடை அடித்து கூட்டி வைத்திருந்ததால் பொருட்களை அடுக்க ஆரம்பித்தனர். சண்முகம் இரவு உணவை அங்கேயே கொண்டு வந்துக் கொடுத்துவிட்டு, “உதவிக்கு நாங்க வேணும்னா வரட்டுமா மாப்பிள்ளை?” என்க, “இல்ல மச்சான், பெரிய வேலை எதுவும் இல்ல. நாங்களே பார்த்துக்கிறோம்என்றான்

சண்முகம் கிளம்பியவுடன், யாழினி அவனுக்குப் பரிமாற, “நீயும் உக்காரு பட்டர்பிளை, ஒன்னாவே சாப்பிடலாம்என அவளையும் தன்னுடனே உணவருந்த வைத்தான் ஹரிஹரன். பெரும்பாலான பொழுதுகளை அவளுடனே அவன் கழிக்க, அவன் தன்னுடன் இருக்க விருப்பப்படுவதை அறிந்தும் அறியாதது போல் இருந்தாள் யாழினி.

மறுநாள் வழக்கம்போல் செயல்பட, இந்திராவும் சிலம்புவும் மட்டும் அன்று மருத்துவ முகாமிற்குச் சென்றிருந்தனர். மலர்விழிக்கும், செந்திலுக்கும் மருத்துவமனையில் டியூட்டி இருக்க, காலையிலேயே சென்றிருந்தனர் இருவரும்.

வழக்கம்போல் கிராமம் ஒன்றில் முகாம் இருக்க, இந்திராவும் சிலம்புவும் அங்கு சென்றனர். “இந்து நீ இங்கப் பார்த்துக்கோ, நான் பக்கத்துல இருக்கிற ஸ்கூல் பசங்களுக்கு போய் செக்கப் பண்ணிட்டு வந்தறேன்என்றவள்,

மேனேஜ் பண்ணிக்குவ தான டி?” என்றாள். “அதான் சிஸ்டர் கூட இருக்காங்கள்ள டி, நான் பார்த்துக்கிறேன், நீ போய்ட்டு வாஎன அவளை அனுப்பிவிட்டு வந்திருந்தவர்களை பரிசோதிக்க ஆரம்பித்தாள்.

வந்த இரண்டு மணி நேரம் மட்டும் பெரும்பாலும் வேலை இருக்கும். அதன்பின் ஓட்ட வேண்டிய நிலை தான். ஆனால், அன்று அரைமணி நேரம் மட்டுமே வேலை இருக்க, அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் அலைப்பேசியில் மூழ்கிப் போயிருந்தாள் இந்திரா.

காலையில் இருந்தே அவளுக்கு ஒருமாதிரி இருக்க, அடிவயிறு லேசாக வலிக்கத் தொடங்கியது. உடன் இருந்த செவிலியரும் அருகில் ஏதோ வேலையாக சென்றிருக்க, அவள் மட்டுமே அமர்ந்திருந்ததால் அடிவயிற்றை பிடித்த வண்ணம் அமர்ந்திருந்தாள் இந்திரா.

அவசரமாய் அலைப்பேசியில் அன்றைய தேதியை பார்த்தவள், “இத எப்படி மறந்தேன், இன்னிக்கு பிரீயட்ஸ் டைம்லஎன தலையில் அடித்துக் கொண்டவள், வலியை பொறுத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

அப்பொழுது அந்த ஊருக்கு வேலை விசயமாக வந்திருந்த சண்முகம், அவளைக் கண்டு அவள் அருகே வந்தான். “ஹாய் ஹண்ட்ரட் கேஜி தாஜ்மஹால்என்றவன், “எங்க உங்க வானரக் கூட்டம்?” என்றான்.

எப்பொழுதும் அவனை எதிர்த்துப் பேசும் அவள் இன்று அமைதியாக இருக்க, “ஆர் யூ .கே இந்து?” என்றான் சண்முகம். அவள் வலிய வந்த புன்னகையுடன், “அதெல்லாம் ஒன்னுமில்ல. மலருக்கும், செந்திலுக்கும் இன்னிக்கு டியூட்டி இருக்கு. சிலம்பு பக்கத்துல ஸ்கூல் வரைக்கும் போய்ருக்காஎன்றாள்.

என்னவொரு அதிசயம், கேட்ட கேள்விக்கு சமத்தா பதில் சொல்றா!’ என யோசித்தவன், அவளை ஆழ்ந்துப் பார்க்க அவளோ கீழே குனிந்த வண்ணம் வயிற்றை ஒரு கையால் பிடித்துக் கொண்டு வலியை தாங்க முடியாமல் பல்லை இறுகப் பற்றியிருந்தாள்.

அவள் நிமிர, அவன் எங்கோ வேடிக்கைப் பார்ப்பது போல் பார்வையை ஓடவிட்டான் சண்முகம். அவள் வேகமாக தனது கைப்பையை ஆராய்ந்துப் பார்த்து, தேடியது அங்கு இல்லாமல் போக முகம் சோர்ந்துப் போனது.

அவளது முகமாற்றங்களைக் கவனித்தவன், “சரி, நான் கிளம்புறேன்என அவன் வண்டியை இயக்க, அவள் புன்னகையுடன் தலையாட்டினாள். அவன் சென்றபின் மீண்டும் தனது கைப்பையை ஆராய்ந்தவள், உள்ளே நாப்கின் இல்லாது போக, “அய்யோ, எப்பவும் உள்ள ஒன்னு வச்சுருப்பனே, எங்க போச்சுஎன முனகியவாறே, மீண்டும் தேடினாள்.

வீடு போற வரைக்கும் தாங்காதே, இப்போ என்ன பண்றதுஎன அவள் கண்கள் சுற்றிலும் பார்க்க, அந்த ஊரில் ஒரு பெட்டிக் கடையை தவிர வேறொன்றும் இல்லை

சோர்ந்து போய் அமர்ந்தவளுக்கு, வயிற்று வலி வேறு படுத்தி எடுத்தது. பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் இந்திராகாந்தி. பத்தே நிமிடத்தில் மீண்டும் சண்முகம் அங்கு வர, ‘இப்போ தான போனாரு, அதுக்குள்ள திரும்ப வர்றாருஎன அவள் யோசனையுடன் அவனைப் பார்க்க, அவனோ வண்டியை நிறுத்திவிட்டு வண்டியின் முன்பக்கம் உள்ள சீட் கவரில் இருந்து நாப்கினை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்.

அவளுக்கோ சங்கடமாய் இருக்க, “வாங்கிக்க இந்துஎன்றவன், தனது சட்டைப் பாக்கெட்டில் இருந்து ஒரு மாத்திரை கவரை எடுத்து அவள்முன் வைத்தவன், “மெடிக்கல்ல இந்த பெயினுக்கு மாத்திரை கேட்டேன், இதான் கொடுத்தாங்க. சரியான மாத்திரையானு பார்த்துட்டு மாத்திரை போட்டுக்கோஎன்றவன், அவளுக்கு மேலும் அங்கு நின்று சங்கடத்தைக் கொடுக்காமல் அங்கிருந்து கிளம்பினான்.

அவளோ மாத்திரையை கையில் எடுத்தவாறே போகும் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவனோ மின்னல் வேகத்தில் அங்கிருந்து மறைந்திருந்தான். தான் எதுவும் வாய்விட்டு கூறாமல் இருந்தாலும், தன் முகக்குறிப்பை வைத்து தேவையானதை உணர்ந்தது மட்டுமில்லாமல் தயக்கமின்றி நாப்கினை வாங்கி வந்து தந்துவிட்டு செல்பவனை இமைக்க மறந்து அவன் சென்றபின்பும் அவன் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தாள் இந்திரா.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
5
+1
1
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. எப்பா சொல்லிக்க பொரிங்க உங்க காதல் 🤔🤔🤔