மறவேனோ நெஞ்சாத்தியே…
டைட்டில் ரிசர்வ் பண்ண வந்திருக்கேன் டாவ். இதுக்கு முன்னாடி இந்த தலைப்பு யாருனா ரிசர்வ் பண்ணி இருந்தா சொல்லிடுங்க செல்லம்ஸ்.. இனி யாருனா ரிசர்வ் பண்ணுனா மறக்காம என்கிட்ட ஷேர் பண்ணி விட்ருங்க…
இப்ப குட்டி டீ…
கரகோஷம் அரங்கை நிறைக்க, விழிகள் திறந்து அரங்கை ஒருமுறை பார்த்துக் கொண்டாள் அவள்.
“வாவ் வாவ் வாவ்… என்ன மேம் பாட வராதுனு சொல்லிட்டு இப்படி ரசிச்சு பாடுறீங்க… “ மேடையில் நின்றிருந்த பெண் ஆங்கர் கேள்வியாய்க் கேட்க, கண் சிமிட்டி புன்னகை சிந்தினாள் பெண்ணவள்.
“சிரிச்சே தப்பிக்கிறீங்க பாத்தீங்களா…”
அதற்கும் புன்னகை மட்டுமே அவள் பதில்.
“நிகிதா… உனக்கு ஒரு விஷயம் தெரியுமா நம்ம ரெபேக்கா மேம் இங்க தான் சைலன்ட்… செட்க்கு போய்ட்டா” என்ற ஆண் ஆங்கரின் பேச்சை இடை வெட்டி,
“ ரொம்ப ஜாலியா இருப்பாங்களா அர்ணவ்” என்று கேட்க,
“இதுதான் அவசர குடுக்கைத்தனம் ங்குறது… அதுதான் இல்ல… அவங்க கற்பனைல மிதந்துடுவாங்களாம்… “
“அப்படியா… அது என்ன கற்பனை… டே டிரீமிங் ல இருப்பாங்களோ…”
“டேய் நிகி… அவங்க கவிதை எழுதி காற்றுல பறக்க விடுவாங்களாம்… “
“ ஹே இது நல்லா இருக்கே… மேம்… எங்களுக்காக ஒரு கவிதை இப்ப சொல்லுங்களேன்…”
அவர்களின் கேள்விக்கு அழகாய் வெட்கப்பட்டவள்,
“நோ நோ… பாட்டு பாடிட்டேன் தானே… கவிதை சொல்லி இன்னொரு நாளை ஸ்பெஷல் பண்ணலாம்... இப்ப முடியாது”
“ அதானே… சரி விடுங்க மேம். எங்களுக்கு ஒரு கேள்வி இருக்கு…
எப்பவுமே விமன் சென்ட்ரிக் மூவி எடுக்குற எங்க ரெபேக்கா மேம், இப்போ லவ் மூவி பண்ணுறதா ஒரு நியூஸ் கேள்விபடுறோம். அது உண்மைங்களாங்க மேம்…”
அளவான புன்னகையோடு , “கூடிய சீக்கிரம் அஃபிஷியலா அனௌன்ஸ்மென்ட் வந்திடும்” என்றவள் நன்றி கூறி மேற்கொண்டு பேச விடாமல் மேடையிலிருந்து இறங்கினாள்.
…
” இன்னுமா என்னை நினைவிருக்கு…”
அவள்புறம் தலை சாய்த்து அழகாய் புன்னகைத்து
“அவ்வளவு சீக்கிரம் மறந்திடுவேனா”
அவன் ஒற்றைப் புருவத்தை வில்லாய் வளைத்து ஏற்றி இறக்கிக் கேட்டிட,
“படத்துல நடிச்சு நடிச்சு அந்த பெர்ஃபாமன்ஸ் இங்கயும் வருதுங்க ஹீரோ சார்…”
“டைரக்டர் மேடத்துக்கு கண்ணுல வழியுற காதலை மறைக்கத் தெரியாம என்னைய குத்தம் சொல்லுறீங்களே…”
“இத்தனை உச்சத்தைத் தொட்ட பிறகு ஹீரோ சாருக்கு என்னைய நினைவு வருதுங்களே… அதுதான் ஆச்சரியமே…”
” எதிர்பார்ப்பை நான் சரிகட்ட வேண்டாமா ரைடக்டர் மேடம்…”
.
விரைவில்…
- Select