Loading

 

நேத்ராவின் பயம் ஏன் என்று அறிய நிமல் சரனை வீட்டிற்க்கு அழைத்திருந்தான். உறங்கும் அவனவளின் முகம் பார்க்க அவனுக்கு அவர்களின் காதல் நாட்கள் நினைவு பெட்டியை திறந்தன. இரண்டரை ஆண்டுகள் முன்பு தன் அலுவலகத்தில் தான் நிமல் நேத்ராவை பார்த்தான். கருப்பு நிற ஆடை உடலை முழுதும் மறைத்திருக்க அவள் கண்கள் மட்டுமே தெரிந்தது. பார்த்ததும் காதல் என் அவள் கண்களை கண்ட நொடியே விழுந்து விட்டான் அவளிடத்தில்.

 

சரணிடம் ஏதாவது பகுதி நேர வேலை ஏற்பாடு செய் என்று நேத்ரா கூறியிருந்தாள். ஆதனால் சரண் அவனும் நிமலும் நடத்தும் அலுவலகத்திற்கே அழைத்து வந்திருந்தான். அவர்களின் அலுவலகம் இம்போட் எக்ஸ்போர்ட் சம்பந்தமானது தான். எனவே இங்கேயே வேலை பார்க்குமாறு சரண் வற்ப்புறுத்தவும் சரி என்று ஒப்புக் கொண்டாள் நேத்ரா. சரணிற்கோ மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இவளுக்கு இருக்கும் ஆஸ்திக்கு வேலை செய்து தான் ஆக வேண்டும் என்றில்லை. ஆனால் இப்படி வேலை செய்து தான் படிப்பேன் என்று கூறிக்கொண்டு திரிபவலை என்னவென்று சொல்வது என்று தனக்குத் தானே புலம்பிக்கொண்டான்.

 

சரண் புலம்பி விட்டு திரும்ப அங்கு நேத்ராவையே வைத்த கண் வாங்காமல் தன் நண்பன் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவன் டேய் நிமலா…… நிமலா……டேய் டேய் இங்க பாருடா….

 

என்னடா சொல்லித் தொலை…..

 

அது…இவ தான் நேரா நான் சொன்னேன்ல பார்ட் டைம் ஜாப் அது இவளுக்கு தான்டா…

 

நிமல் சரணிடம் பேசிக் கொண்டிருந்தாளும் அவனின் பார்வை என்னவோ நேத்ராவின் விழிகளில் தான் இருந்தது. சரனை பார்ப்பதும் அவ்வப்போது நிமலை பார்த்து சிரிப்பதும் என்றிருக்க அவள் முக பாவனை சொல்லா அனைத்தையும் விழிகளில் காட்டிக் கொண்டிருந்தாள். அவளின் விழிகளில் விழுந்தவன் வேலை தராமலா போய் விடுவான். அன்றே வேலையில் சேர்ந்து கொள்ளுமாறும் கூறிவிட்டான்.

 

நேத்ரா நல்ல வசதி படைத்த பெண் தான். அவளின் அப்பா குமரன் மிகப் பெரிய தொழிலதிபர். தொழில் பெரிது என்பதால் அதில் அவருக்கு எதிரிகளும் அதிகம், அதன் பயன் காரில் மனைவியுடன் சென்று கொண்டிருக்கும் போது ஆக்சிடென்ட் செய்யப்பட்டார். தாய் தந்தை இறந்து விட, அத்தனை அன்பு கொட்டி வளர்த்த பெற்றோர் இல்லாமல் துவண்டு போனாள் நேத்ரா. அப்போது வந்து சேர்ந்தது தான் ரகுவின் குடும்பம். ரகு நேத்ராவின் தந்தை வழி உறவு முறை. அவளின் ஆஸ்த்திக்கு ஆசைப் பட்டு அவளை பார்த்துக் கொள்கிறேன் என்று இவளுடன் சேர்ந்தனர் அவனின் குடும்பத்தினர். அவர்கள் வந்த ஒரே மாதத்தில் அவர்களின் குணத்தை அறிந்து கொண்ட நேத்ரா அவர்களுடன் பேருக்கென்றே பழகிக் கொண்டிருந்தாள். நாட்கள் செல்லச் அவர்களின் அத்துமீறல் ஆரம்பித்தது. அப்போது தான் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து கொண்டிருந்தாள் நேத்ரா. அவள் தாமதமாய் வரும் போது வேண்டாத கேள்விகளை கேட்க அவள் அதிலே உடைந்து போனாள்.

 

என்ன இருந்தாலும் உடன் இருக்கும் ஒரே உறவு இவர்கள் தானே என்று சகித்துக் கொள்ள…….அவர்கள் வந்து நின்றது ரகுவுடன் திருமண ஏற்பாட்டில். ரகு ஆரம்பத்தில் நல்லவன் போல் தான் நேத்ராவிடம் பழகினான். ஆனால் நாள் போக்கில் தான் தெரிந்தது அவனுக்கும் தேவை பணம் மட்டும் தான் என்று.

ஒரே பெண் எல்லா சொத்திற்கும் ஒரே வாரிசு தன் மகனுடன் திருமணம் செய்து வைத்தால் எல்லாம் நமக்குத் தான் என அவர்கள் நினைத்திருக்க அதற்கு தடைக் கல்லாய் வந்து நேத்ராவிற்க்கு உதவி செய்தது அருகிலிருக்கும் ஆசிரமத்தின் பொறுப்பாளர் பத்மாவதி. நேத்ரா அம்மா அப்பாவுடன் அடிக்கடி செல்லும் இடம் தான் அந்த ஆசிரமம். எனவே பத்மாவதி அம்மாவிற்கு நேத்ரா நல்ல பழக்கம். அவரே முன்னின்று இனி நேத்ராவை தொல்லை செய்ய கூடாது என்றும் மீறி ஏதேனும் செய்தால் போலீசில் புகார் அளிக்கவும் தயங்க மாட்டேன் என்றும் கூற அத்துடன் அவர்கள் அந்த வீட்டை விட்டு கிளம்பினர்.

 

நேத்ராவிற்க்கு உதவிக்கு ஆள் இல்லை என்று வந்தவர்கள் பத்மாவதி வரவும் அப்போதைக்கு அந்த வீட்டை விட்டு சென்றனர். ஆனால் எப்படியேனும் நேத்ராவிடம் அனைத்தையும் கைப்பற்றிட வேண்டும் என்ற முடிவுடன் தான் சென்றனர். ரகுவிற்கு நேத்ராவின் அழகின் மீதிருந்த ஆசையும் பணத்தின் மீதிருந்த ஆசையும் தான் அவளை எப்படியேனும் அடைந்தே தீரவேண்டும் என்று எண்ண வைத்தது.

 

அந்த நிகழ்விற்கு பிறகு நேத்ராவும் ஆசிரமத்திலே தங்கிக் கொண்டாள். அங்கு தான் சரணின் நட்பு கிடைத்தது. வாரம் ஒருமுறை அங்கு வருவது சரணின் வழக்கம். ஆசிரமத்தின் வளர்ச்சியில் சரணிற்கு பெரும் பங்குண்டு. எனவே அங்கு என்ன நடந்தாலும் அவனுக்கு தெரிந்து விடும். அப்படித்தான் ஒருமுறை பத்மாவதி நேத்ராவை பற்றி அவனிடம் கூறினார்.

 

நேத்ராவை முதலில் பார்த்தவனுக்கு இவர்கள் சொல்வதெல்லாம் உண்மை தானா என்றே குழம்பினான். காரணம் குழந்தைகளுடன் குழந்தையாய் அங்கிருந்த ஊஞ்சலுக்கு சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். ஒரு வழியாய் சண்டையிட்டு குழந்தைகள் எல்லோரும் பின் நிற்க இவள் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தாள். அவளிடம் வம்பு வழக்க வேண்டும் என்று அவ்விடம் சென்றவன் ஹலோ மிஸ் என்ன உங்களுக்கு பச்சை குழந்தைனு நினைப்பா….

 

ஏன் குழந்தைனா தான் ஊஞ்சல் ஆடனுமா என்ன என்று அவன் யாரென்று தெரியும் முன்பே சண்டைக்கு கிளம்பினாள் நேத்ரா. அவளின் பேச்சில் சிரிப்பு வர அது இல்ல பாப்பா பின்னாடி பாரு குட்டி பாப்பாஸ் எல்லாம் ஊஞ்சலுக்காக வெயிட்டிங் என்று சொல்ல…..

 

அது எங்களுக்கும் தெரியும்…என்று மேலும் கோபமாக கூற…

 

அப்போ பாப்பா எந்திரிக்க வேண்டியது தானே……

 

இங்க பாரு என் பேரு நேத்ரா… பாப்பா இல்ல…

 

எது நேரா வா….இது என்ன பேர் நேரா கோணலா…

 

ஹலோ அது நேரா இல்ல நேத்ரா….

 

இவர்கள் பேசிக் கொள்வதை பார்த்து பத்மாவதியே நேத்ராவிடம் சரனை பற்றி சொல்ல அப்போதும் அவள் அவனிடம் சண்டையிடும் தோரணையில் தான் நின்றிருந்தாள். அறிமுகம் முடிய சரண் நேத்ராவிடம் இனி உன் பேரு நேரா தான், நான் அப்பிடித்தான் கூப்பிடுவேன் சரியா என்றதோடு கிளம்பி விட்டான். ஏனோ அவளை சீண்ட வேண்டும் என்று தான் தோன்றியது.

 

அதிலிருந்து அவனுடன் சண்டையிட துவங்கியவள் உயிர் தோழியும் ஆகிப் போனாள். அவனிடம் சொல்லாத விஷயம் எதுவுமில்லை என்ற அளவிற்கு.

 

சரண் மூலம் வேலைக்கும் சேர்ந்து விட்டாள். ஆனால் ஏன் பர்தா அணிந்து வந்தாள்????? பார்க்கலாம்.

 

சரண் நிமலை பற்றி ஏற்கனவே நேத்ராவிடம் கூறியிருந்தான். எப்படி என்றால் எப்போதும் தன் நண்பன் நிமலை பற்றியே மட்டும் தான் பேசிக் கொண்டிருப்பான். ஒரு நாள் அவனின் அருமை பெருமைகளை கூறிக் கொண்டிருக்கும் போது தான் நேத்ரா விளையாட்டுத் தனமாய் என்னடா எப்போ பார் நிமல் நிமல்னு பேசிட்டே இருக்க… அவன் என்ன அவ்லோ பெரிய அப்பா டக்கரா…. என்று கேட்க…நண்பனை சொன்னதும் இவனும் அவளிடம் வாதம் செய்ய அன்றும் அவர்களின் பேச்சு சண்டையில் தான் முடிந்தது.

 

பெரும்பாலும் இவர்களுக்கிடையே நிமலை வைத்து தான் சண்டையே வரும். ஆனால் இனி அவனின் அலுவலகத்தில் அவனுடன் வேலையே செய்ய போகிறாள் என்றால் ஆச்சர்யம் தானே….அது மட்டுமா… அவனை பற்றி பேசினாலே சண்டையிடுபவள் இனி அவனுக்காக சண்டையிட போகிறாள் என்பது ஆச்சர்யம் அல்லவா….. ஏனென்றால்…. காலங்களே மாறும் போது மனிதர்கள் மாற மாட்டார்களா என்ன….

 

நேற்றே சரண் அலுவலகம் அழைத்துச் செல்வதாக கூறிவிட்டான். ஆனால் இன்று தன் தோழி ஒருத்தியை ஏமாற்ற பர்தா அணிந்து கல்லூரி வந்த நேத்ரா அதை மாற்ற நேரமில்லாமல் அதனுடனே சரணுடனும் வந்து விட்டாள். இது தான் சமயம் என்று நிமலும் அவளை வைத்த கண் வாங்காமல் பார்க்க…. அவனின் பார்வையை உணர்ந்த நேத்ரா அவனின் பார்வைக்காகவே  இனி தினமும் பர்தா தான் அணிய போவதாக சரணிடம் கூறிவிட அவனும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் பின்னாளில் அதை வைத்து தான் இவர்களின் பிரிவே என்று அறிந்திருந்தால் இந்த விளையாட்டையும் விட்டிருப்பாள்…. சரணும் தடுத்திருப்பான்.

 

 

வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் கடந்திருந்தது. எப்போதும் மதியம் கல்லூரி முடிந்ததும் அலுவலகம் வந்து விடுவாள் நேத்ரா. ஆனால் அன்று சனிக் கிழமை விடுமுறை என்று காலையிலேயே வந்து விட்டிருந்தாள். நிமல் நேத்ராவை முதல் நாள் பர்த்ததோடு சரி. வேலை பளு அதிகமிருந்ததால் அவளை பார்க்கும் நேரம் அவனுக்கு அமையவில்லை. இவளும் அவனிடம் சற்று பொறாமையாய் இருந்ததால் அவனை கண்டு கொள்ளவில்லை. இன்று தனக்காக கொடுக்கப் பட்டிருந்த சில கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தவள் தற்செயலாக நிமிர…..

 

வாட்ட சாட்டமாக ஃபார்மல் உடையில் கம்பீரமாய் நடந்து வந்து கொண்டிருந்தான் நிமல். க்ளீன் சேர்வ் செய்து முழுக்க முழுக்க பார்மலாக இருந்தவனை பார்த்ததும் அவளுக்குள் ஏதேதோ செய்தது. அது தான் அவளின் காதலுக்கு இட்ட தொடக்க புள்ளி போல….அதிலிருந்து அவனை காணும் போதெல்லாம் கண்களிலே அவனை அளவிட பின்னாளில் முழுதாய் அவனை பிடித்தும் போய் விட்டது.

 

அவன் மட்டும் என்ன அவள் விழிகளிலே விழுந்தவன் அதற்கு பின் அவளை காணாமலா இருப்பான். அவனும் அவளின் விழி அசைவுகளில் தொலைந்து நாள் தோறும் தண்ணீர் ஊற்றி செடி வளர்ப்பது போல கண்களிலே காதல் வளர்த்தான்.

 

முழுதாய் ஒரு மாதம் முடிய….. சரணிடம் நிமலின் மேல் உண்டான காதலை தயங்கிக் கொண்டே நேத்ரா கூற…. சிறிது நேரம் யோசித்தவன் இருவரும் ஏற்றவர்கள் தான் என்று சரண் ஒப்புக் கொண்டான். ஆனால் ஒரு போதும் நிமலிடம் சொல்லக் கூடாது என்று சரணிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாள். எல்லாம் சரியாக…சந்தோசமாக சென்றால் அங்கு ஆண்டவனுக்கு என்ன வேலை. அவனுக்கும் வேலை வேண்டுமே….வேலையும் வந்தது…. காதலாய் நாட்கள் நகர ஒருநாள் மீண்டும் ரகு வந்தான்.

 

நேத்ராவை கண்டு ஏளனமாய் புன்னகைத்தவன்…… அவளை நெருங்கி நின்று……. சீக்கிரம் என்கூட கல்யாணத்துக்கு ரெடி ஆகு நேத்ரா….உன்ன இனிமேலும் சும்மா விட்டுட்டு இருக்க மாட்டேன். என்ன பத்தி இன்னும் முழுசா உனக்கு தெரியாதில்ல…….நான் யாருனு உனக்கு காட்டுறேன்….. எங்களை வீட்ட விட்டு அனுப்பிட்டு சந்தோசமா சுத்திட்டு இருக்க….உன்னோட சந்தோசம் இன்னும் கொஞ்சம் நாள் தான். இப்போவே நல்லா சந்தோசமா இருந்துக்கோ…..உன்னோட சந்தோஷத்துக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க மறுபடியும் நான் வருவேன் என்று அகங்காரமாய் சொல்லிவிட்டு சென்று விட்டான்.

 

அவன் சொன்ன விதத்தில் பயம் வந்தாலும் பத்மாவதி அம்மாவும் சரனும் இருக்கும் தைரியத்தில் சாதாரணமாக விட்டு விட்டாள். அப்போதே யாரிடமாவது சொல்லியிருந்தால் பிரச்சனையை தடுத்திருக்கலாம். ரகுவின் பேச்சை மறந்து படிப்பிலும் வேலையிலும் கவனத்தை செலுத்த தொடங்கியவள் ஒரு கட்டத்தில் நிமலின் காதலையும் புரிந்து கொண்டாள்.

 

இனியும் தாமதிக்க வேண்டாம் நிமலிடம் காதலை கூறி விட்டால் ரகுவிடமிருந்தும் தப்பித்து விடலாம் என்று நிமலிடம் காதலை சொல்ல முடிவெடுத்தாள்.

 

நேத்ரா முடிவெடுத்த நேரம் சரியில்லை போல அந்த நேரத்தில் தான் வந்து சேர்ந்தால் சித்து. சரணின் மூலம் சித்துவை நிமலுக்கு தெரியும் என்பதால் யார் அனுமதியும் இல்லாமல் அவனை பார்க்க அடிக்கடி வர…..நேத்ரா தான் குழம்பி போனாள். தான் கொண்ட காதல் தவறோ என்றும் கூட எண்ணினாள். ஆனால் எல்லாம் சரியாகிடும் நேரம் மீண்டும் ஒரு புயல் அடிக்க நேத்ரா நிமலன் காதல் முற்றிலும் பிரிந்தது.

 

 

 

 

 

 

தொடரும்………prabhaas 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்