பகுதி – 2
தயாளினி தீபன் ரதி மூவரும் சென்னை வந்திரங்க அவர்களுக்காக காத்திருந்தார் அவர்களால் தாத்தா என உரிமையோடு அழைக்கப்பட்ட மூர்த்தி.
“வாங்க பசங்களா” என்று புன்னைகையோடு வரவேற்க்க மூவரும்வந்து அவரை தொத்திக்கொண்டனர்.
தயா ” எப்படி தாத்தா இருக்கீங்க “
” எனக்கென்னடா சந்தோஷமா இருக்கன் நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷமா இருக்கன் “
ரதி “நாங்க வந்துட்டோம்ல இனி ஏன்டா இருக்கோம்னு யோசிப்பீங்க “என்று நக்கலடித்தாள்.
தீபன் ” ஆமா இனிதான் சிறப்பான தரமான சம்பவங்கள் காத்திருக்கு ” என்று டயலாக் பேசினான்.
தாத்தா சிரிப்புடன் “வாலு பசங்க வாங்க வண்டில ஏறுங்க “
மூவரும் அந்த வண்டியை பார்த்தனர்.
தீபன் ” தாத்தா இது காரா “
தாத்தா ” ஆமா டா எங்க தாத்தா காலத்துல வாங்கினது இன்னும் ஓடுது வாங்க ஏறுங்க ” என்று சொல்ல தீபன் முன்னாலும் ரதி தயா இருவரும் பின்னால் அமரந்துக்கொள்ள காரை கிளப்பினார் தாத்தா.
தாத்தா வண்டியை ரிவர்ஸ் எடுக்க ஒரே முட்டு ஏதோ ஒரு காரின் மீது.
அந்த காரிலிருந்தவன் கோபமாய் இறங்கிட அது சாட்ஷாத் தயாளனேதான்.
தயா ” யோவ் அறிவில்ல உன் டப்பா காரைகொண்டுவந்து முட்டுற “
” ஸாரி தம்பி நான் சரியாதான் இன்டிகேட்டர் போட்டன் அது ரிப்பேரா இருக்கவும் தெரியலை போல “
” இந்த சோப்பு டப்பா காரை எடுத்திட்டு நீலாம் ரோட்டுல வரலைன்னு யார் அழுதா இப்ப நீங்க உடைச்சதுக்கு யார் பணம் கொடுப்பா”
சட்டென தயாளினி இறங்கி அவன் முன்வந்தாள்.
” ஹலோ பாத்தா படிச்சவர்மாதிரி இருக்கீங்க பேசிக் மேனர்ஸ் இல்ல வார்த்தைய அளந்து பேசுங்க அவர் உங்களைவிட வயசுல பெரியவரு “
தயா அவளை ஒரு முறைப்பான பார்வை பார்த்தான்.
தயா ” பச் தப்பு உங்க மேலதான் காரை வந்து மோதுனா யாரா இருந்தாலும் இப்படிதான் பேசுவாங்க”
தயாளினி ” அதுக்குனு நீங்க வாய்க்கு வந்தெல்லாம் பேசுவீங்களா ஒழுங்கா அவர்கிட்ட ஸாரி கேளுங்க “
தயாளன் ” நான் ஸாரி கேக்கனுமா ஏய் தப்பா வந்திட்டு பேச்சபாரு போட்டனா அவ்ளோதான் ” என கையை முறுக்கிட தயாளினியோ அசராமல் அவனை முறைத்திட அவள் கண்கள் தயாளனை கட்டிபோட்டது.
அதற்குள் அந்த பக்கமிருந்து அர்ஜூன் தயா என்று அழைக்க இந்த பககம் தீபன் தயா என்றழைத்தான்.
இருவரும் திரும்பி பார்க்க தீபனும் அர்ஜூனும் வந்தனர்.
அஜ்ஜூ ” என்னடா பிரச்சனை “
தீபன் ” என்ன பிரச்சனை “
தயாக்கள் ” கார் மோதிடுச்சி ரொம்ப ஓவரா பேசுறா ” என இருவரும் ஒரு சேர கூறி ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்துக்கொண்டனர்.
அஜ்ஜூ ” விடுடா நமக்கு லேட்டாகுது வா போகலாம். இந்த லோக்கல் பார்டிங்களோட நமக்கென்ன பேச்சு “
தீபன் ” ஏய் யார பாத்து லோக்கல்னற மூன்ஜிய பேத்துடுவன் “
தாத்தா ” டேய் தீபா சும்மா இரு தம்பி மன்னிசிடுங்க எங்கமேலதான் தப்பு இதுக்கு எவ்ளோ பணம்னு சொல்லுங்க தரன். “
தயா ஏளனமாய் உதடு வளைத்து “உங்க வாழ்நாள் பூரா சம்பாதிச்ச காச குடுத்தாகூட இதை சரிபண்ண உங்களால பணம் கொடுக்க முடியாது போங்க ” என்று சொல்லி முகம் சுழித்து சென்றுவிட தயாதான் அவனது திமிரான பேச்சில் கடுப்பாகி நின்றாள். இவனெல்லாம் என்ன மனிதன் பணத்திமிர்பிடித்த ஜென்மம் என்று நினைத்துக்கொண்டாள்.
தாத்தா ” வா தயாமா நமக்கு வேலையிருக்கு போகலாம் “
இரு தயாக்களும் சண்டைகோழியாய் சிலுப்பிவிட்டு அவர்கள் வழியில் சென்றனர்.
தயா மற்றும் அர்ஜூன் காரில் சென்று கொண்டிருந்தனர்.
தயா தயாளினி மீது கடுப்பில் இருந்தான். கடுப்பாக வந்தது அவனுக்கு அவனிடமே எதிர்த்து பேசியவள் அவன் கோபபட்டபோதும் அசராமல் நின்றது அவனுக்கு அவமானமாய் இருந்தது. அவனால் என்ன செய்துவிட முடியும் என நினைத்துவிட்டாள் போலும என்று நினைக்க நினைக்க எரிச்சல்வந்தது.
அப்போது சரியாய் அவனது தங்கை அமிர்தா அழைத்தாள்.
” ஹலோ சொல்லு அமி “
“அண்ணா எங்கருக்க சீக்கிரம் வா இன்னைக்கி காலேஜ்ல பேரண்ட்ஸ் மீட் இருக்குல “
” இதோ வந்திட்டே இருக்க அமி நீ கிளம்பி ரெடியா இரு “
” சரி ணா வெச்சிடுறன்.”
அஜ்ஜூ ” என்னடா இன்னைக்கி என்ன பஞ்சாயத்து “
தயா ” தெரியலைடா எவனை என்ன பண்ணி வெச்சாலோ மாசத்துக்கு ஒரு கம்ப்ளைன்ட் இவனை அடிச்சி மூன்ஜை உடைச்சிட்டா அவனை அறைஞ்சிட்டா காதை கிழிச்சிட்டான்னு “
” ஆமா உன் தங்கச்சியாச்சே உன்னமாதிரி தான இருப்பா நீ பொண்ணுங்களை கண்டா எறிஞ்சி விழற அவ பசங்களை கண்டா எறிஞ்சி விழறா ஜீன் டிஃபக்ட் என்ன பண்றது “
தயா ” கையை முறுக்கி மச்சா என்னவோ சொன்னியே என்ன சொன்ன என்காதுல சரியா விழலை”
” ஒன்னும் சொல்லலை மாமே சும்மா சும்மா நீ கைய இறக்கு “
” அது “
” ஆமாடா எத்தனை நாளைக்குதான் அண்ணனும் தங்கச்சியும் இப்படியே இருக்கிறதா உத்தேசம் அவங்ககிட்ட பேசலாம்ல “
” வேணாடா எங்களை கண்டுக்காதவங்க எங்களுக்காக பேசாதவங்க எங்களுக்கு வேணா எங்களுக்கு நாங்களே போதும் “
” தங்கச்சி வாழ்க்கையே நீயே உன் பிடிவாதத்தால கெடுத்துடாத தயா ஏன்னா அவ எனக்கும் தங்கச்சிதான் அவளோட நல்லதுல எனக்கும் அக்கரை இருக்கு “
“அவங்களுக்கு இருக்கிற பிடிவாதம் எனக்கும் இருக்கிறதுல எந்த தப்பும் இல்லை “
அதற்குள் அமிர்தாவின் கல்லூரி வந்துவிட்டது.
அதற்குள் அமிர்தாவை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
அமிர்தா பெயரைப்போன்றே அமிர்தமானவள். அள்ளி பருக துடிக்கும் அழகுடையவள். இரண்டாமாண்டு மருத்துவம் படிக்கிறாள். அவளது அழகிற்காய் அறிவிற்காய் பணத்திற்காய் பலர் அவள் பின்னால் சுற்ற இவளுக்கு கோபம்வர தன்பின்னால் வருபவனை பிடித்து சாத்த
மாதம் ஒரு பிரச்சனை. ஏனென்றால் அமிர்தாவிற்கு ஆண்களென்றால் அலர்ஜி எவனாவது அவளிடம் பேசினால் இல்லை இல்லை ஏறெடுத்து பார்த்தாலும் முடிந்தது அவன் கதை இழுத்து சாத்திவிடுவாள் காதோடு சேர்த்து.
தயா கல்லூரியிலிறங்கி அமிர்த்தாவை தேடிப்போக அவளோ டீஷர்டின் கையை முட்டிவரை மடக்கிவிட்டுகோண்டே நடந்துவந்தாள்.
அஜ்ஜூ ” நடைய பாத்தியா பொண்ணுமாறி எங்கனா அடக்க ஒடுக்கமா வராலா “
அமிர்தா ” என்ன சொன்ன ” என்று கையை முறுக்கி கேட்க,
அஜ்ஜூ ” தங்கச்சி நடந்துவரான்னு சொன்னடா கன்னு குட்டி அண்ணா உன்னை ஏதாவது தப்பா சொல்லுவனா அதுக்கெதுக்கு நீ கைய முறுக்குற ஃபிரியா விடு ” என்றான் கேவலமாய் இளித்து.
தயா ” இன்னைக்கி என்ன ஆச்சி “
அமிர்தா “மினிஸ்டர் பையன் டேட்டிங் கூப்பிட்டான் அடிச்சிட்டன் கழுத்து திரும்பிடுச்சி “
அஜ்ஜூ ” அவளை முறைத்து உனக்கு பிடிக்கலைனா பிடிக்கலைன்னு வாய்ல சொல்லு மொதல்ல அப்றம் கேக்கலைனா அடி எடுத்ததும் ஏன் கை நீட்டுற அமி நாங்க உனக்காக பேச ஒரு பாயிண்ட் கூட கிடைக்கமாட்டிகிது. போனவாரம் இப்படிதான் அந்த பிஸ்னஸ்மேன் பையனபோட்டு அடிச்ச
அடிக்கிறது அடிக்கிற வெளியவெச்சாசும் அடிக்கலாம்ல காலேஜ்லயே அடிச்சி பிரச்சனை. “
அமி நான்தான் அடிக்கிறன்னு தெரியுதுல அப்றம் ஏன் அவனுங்க என்ட்ட பேசுறானுங்க
தயா டேய் அவ அடிச்சது சரிதான் விடு நாம பேசிக்கலாம் அதான தங்கச்சிய விட்டு குடுத்திடமாட்டியே
அவனிடம் பேசி சரிகட்டிவிட்டு வந்தான். பின் இருவரும் அவர்களின் ஆய்வுகூடத்திட்கு சென்றனர்.
அன்றைய வேலைகள் பரபரப்பாய் நடந்தது.
தயா ” யாழி இன்னைக்கி எத்தனை சாம்பில்ஸ் “
யாழி ” ஆயிரத்தி பத்து ரிப்போர்ட் மூனுநாள் கழிச்சி கிடைக்கும்னு எல்லா ஹாஸ்பிடல்க்கும் இன்பார்ம் பண்ணிட்டன் அந்த எம்எம் ஹாஸ்பிடல்தான் சலிச்சிகிறாங்க மூனுநாளான்னு “
தயா ” அப்போ அவங்களுதை பார்த்து சீக்கிரம் ரிப்போர்ட் குடுத்திடு அப்றம் அந்த ஆள்கிட்ட பேசுனியா நமக்கு சாம்பிள்தர ஒத்துகிட்டானா “
” ஹான் ஒரு பேஷன்ட்க்கு ஐநூறு ரூபான்னதும் பல்லை இளிச்சிட்டு சரின்னுட்டான் “
அஜ்ஜூ ” பணம் மா பணம். எல்லா இடத்துலயும் டப்புதான் பேசும் “
வசி ” டேய் எல்லாத்தையும் பணத்தால வாங்கிடலாம்ற மாறி பேசாதீங்க பணத்தால வாங்க முடியாதது நிறைய இருக்கு உலகத்துல “
தயா சிரித்தான் ” டேய் வரவர நம்ம வசி நல்லா நகைச்சுவை பண்றான்.”
யாழி “ஆமா சரியா சொன்ன அப்படி பணத்தால வாங்க முடியாதது என்னவோ சொல்லுங்கள் வசீம் என்றாள் நாடகபானியில் “
வசீம் ” ஏன் நம்ம நட்பு இல்லையா அன்பு பாசம் நேர்ம இதெல்லாம் பணத்தால வாங்கிட முடியாது “
அஜ்ஜூ ” டேய் 80s ஹீரோ இப்பலாம் காசு இருந்தாதான் அந்த அன்பு பாசமெல்லாம் கூட கிடைக்கும் நம்ம பிரண்ட்ஷிப்ப பணத்தால வாங்க முடியாதுதான் ஒத்துகிறன் ஆன நம்ம நட்போட அடிப்படையே நாம எல்லாரும் பணக்காரங்க ஒரே ஸ்டேட்டஸ்ல இருக்கவங்கன்றத எங்ககிட்ட பணம் இல்லைனா நீ எங்களோட இவ்ளோ க்ளோஸா இருப்பியா எல்லா இடத்திலயும் பணம்தான் டா “
வசீ ” அப்படிலாம் இல்ல “
யாழி ” ஓஓஓ அப்படியா அப்போ நாங்க ஒரு மூனுமாசம் உன் அக்கௌன்ட்க்கு உன் ஷேர் அ போடாம இருக்கோம் அப்போ பாக்கலாம் நீ இதே தாட் ஓட இருக்கியான்னு “
வசீ ” அப்போ பணமில்லைனா நீங்களாம் பிரிஞ்சிபோய்டுவீங்களா “
அஜ்ஜூ ” பிரிஞ்சிபோய்டுவோம்னு சொல்லிட முடியாது காசு இருக்கிற இடத்தை தேடிபோவோம் “
தயாவும் யாழியும் அஜ்ஜூ சொன்னதையே ஆதரித்தனர். வசீமால் அவர்களின் வாயை அடைக்க முடியவில்லை அமைதியாகிவிட்டான்.
அவன் முகம் வாடியதை பார்த்த மூவரும் அவனருகில் சென்று ஆளுக்கொரு பக்கமாய் அமரந்துக்கொண்டனர்.
தயா ” மச்சா கோச்சிட்டியா “
அஜ்ஜூ ” டேய் விளையாட்டுக்குதான பேசுனோம் சும்மா உன்ன வெறுப்பேத்தடா “
யாழி ” உன்ன ஹர்ட் பண்ணிருந்தா ஸாரி மச்சான் “
வசீ ” டேய் ஹர்ட்லாம் இல்ல என்ன சொல்றதுன்னு தெரியலை அதான் அமைதியாகிட்டன் “
தயா ” மூன்ஜிய இப்படி வெக்காத மாமே நல்லா இல்ல எங்களுக்கு தெரியும். நீ பணம் இருந்தனாலதான் எங்களோட பிரண்டானானு இல்லை நம்மளையும் மீறி நம்மகிட்ட தோன்றின உணர்வுதான் நம்ம நட்பு அவன் சும்மா கலாய்க்க பேசுனா “
வசீக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. இதுதான் இவர்கள் காரசாரமாக வாக்குவாதம் நடத்துவார்கள் தலைகணம் பிடித்துக்கொண்டு பேசுவார்கள் ஆனால் ஒருவர் முகம் சுருங்கிவிட்டாலும் மூவருமே சட்டென இறங்கிவந்து சமாதனபடுத்துவார்கள்.
அஜ்ஜூ ” மாமே என் கசின் ஒருத்தி தர்ஷினின்னு நம்ம லேப்ல வேலை செய்ய ஆசைபடுறா என் அத்த ரொம்ப தொல்ல பண்ணுது வேலை வாங்கிதரசொல்லி நான் உன்கிட்ட கேட்டு சொல்றன்னு சொன்ன என்ன சொல்ற “
தயா ” வரசொல்லுடா இதுல என்ன இருக்கு “
யாழி ” ஏய் அப்படிலாம் யாரையும் சேர்த்திடகூடாது இன்ட்டெர்வியூ வெப்போம் டேலன்ட் இருந்தா வேலை குடுப்போம் தண்டத்துக்குனா எல்லாத்துக்கும் சம்பளம் அழ முடியாது. “
அஜ்ஜூ ” ம்ம் சரி நாளைக்கு வர சொல்ற.”
யாழி ” தயா அமி காலேஜ்ல என்ன பிராப்லம் “
தயா ” அவ மினிஸ்யர் பைய தவடாவ திருப்பிட்டா “
யாழி ” ரைட்டு இந்த மாசத்தோட ரெண்டாவது சம்பவமா “
தயா சிரித்தான் ” அவதான் அடிக்கிறான்னு தெரியுது இவனுங்க ஏன் பின்னாடி சுத்துறானுங்கன்னு தெரியலை “
யாழி ” நல்லவேளை அவளா அடிச்சிடுறா உன்ட சிக்குநானுங்க நீ மரண ஒருத்தனை அடிச்சி படுக்க வெச்சியே அந்த கதைதான் நடக்கும் “
இதே கேட்ட வசிக்குதான் எங்கோ சங்கு ஊதும் சத்தம் கேட்டது. முகம் பீதியடைந்தது.
தயா வசீயை அழைத்தான்.
” மாமா “
…….
” டேய் வசி “
……
” டேய் வசீ ” என்றே சத்தமாக அழைக்க
” ஹான் சொல்லு மச்சா…..இல்ல தயா “
” தீடீர்னு என்ன இப்படி பேசுற ” என்றவன் ,
” எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நீபோய் அமி ய பிக்அப் பண்ணி வீட்டுல விட்டுடு “
வசீ வழிபிதுங்கி ” என்னது நானா ” என்றான.
தயா ஏன் அதுல என்ன பிரச்சனை உனக்கு நீதான எப்பவும் கூப்பிடுவ இப்ப என்ன தயங்குற
இல்ல தயக்கம் இல்லை பிரச்சனைலா இல்ல அது எனக்கு நீ நான் அவ
ச்சீபோய் வீட்லவிடு இப்பதான் வார்த்தைய தத்தி தத்தி பேசி பழகிட்டு இருக்க எங்க மூனுபேருக்கும் வேலை இருக்கு அதான் உன்ட சொல்ற
வசியோ அவளை நான் கூப்பிபோகனுமா என்று பயத்தில் எச்சில் விழுங்கிவிட்டு எழுந்தான்.
ஒரு வாரம் முன் நடந்த சம்பவத்தை எண்ணி……