Loading

ஹோட்டல் சங்கீதாஸில் தீர்த்தன்யா வெளியே ஃபலூடாவை வெளுத்து வாங்கி கொண்டிருக்க இளம்பரிதி தன் நண்பனுடன் உள்ளே நுழைந்தான்.

(தீரு  கொஞ்சம் நிமிர்ந்து பாரு 😁😁😁😁 வருது உனக்கு ஆப்பு ம்ஹூம் அவ கேட்கலை ஃபலூடாவை விட்டு கண்ணை எடுக்கலை… அட போம்மா நான் போறேன் அய்யோ பரிதி வரானே அடியே தீரா நிமிர்ந்து பாருடி…. அவ பார்க்க மாட்டா….  கண்ணை ஃபலூடாக்குள்ளார போட்டுட்டு தேடிட்டு இருக்கா. …. சுத்தம்….  இனி நடக்க போற சம்பவத்துக்கு நான் பொறுப்பு இல்ல மக்களே அவன் பக்கத்தில் வந்துட்டான் இனி மலைக்கோட்டை விநாயகர் தான் காப்பாத்தனும்)

“இங்க என்ன பண்ற ஆரு எங்க ??”குரல் தீருவின் அருகில் கேட்டது.

“ஆத்தி எங்கேயோ கேட்ட குரல்…  குரலுக்கு சொந்தக்காரன் யாருப்பா….  ஆஆஆ… அண்ணா….  நீயா…  அச்சோ இவன் எங்க இங்க….  இவன் இந்த மாதிரி ஹோட்டலுக்கு எல்லாம் வர மாட்டானே….  பக்கத்தில் இருக்கும் இந்த மலைக் குரங்கு தான் கூட்டிட்டு வந்திருக்கும்….  தீரு இப்ப என்ன செய்றது இவன் கிட்ட என்ன சொல்லி தப்பிக்கிறது…  ஆருவை எப்படி வெளியே வர வைக்கிறது அது ரெண்டும் என்ன ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கோ தெரியலையே ….. ???”தலையை ஆட்டி ஆட்டி யோசித்து கொண்டிருந்தாள்.

“ஏய் தீரு உன்னை தான் கேட்கிறேன்… இங்க என்ன பண்ற… ??”

“ஹான் அண்ணா….  நீ எங்கே இங்க….  நானும் ஆருவும் சாப்பிட வந்தோம் அவ பாத்ரூம் போயிருக்கா வந்ததும் கிளம்பிடுவோம்…” 

“இவ்வளவு காஸ்ட்லி ஹோட்டல் ல தான் சாப்பிட வருவீங்களோ….  ஏன்  இந்த  ஐஸ்கிரீம் எல்லாம் சின்ன கடையில் சாப்பிட கூடாதோ….  காசை கரியாக்கறதே வேலையா வச்சிருக்கறது …. “என்றிட .,”ம்ம்க்கும் ஆரம்பிச்சுடுச்சு அச்சோ இப்ப நான் ஆருவை எப்படி வெளியே வர வைப்பேன்…  அட ஆண்டவா…  என நினைத்து கொண்டே அண்ணா நாங்க இப்ப கிளம்பிடுவோம்….  சரி நீ வந்த வேலையை பாரு….  நான் அவ வந்ததும் கிளம்புறேன் “

“இல்ல ஆரு வரட்டும் இவன் வேற உங்க ரெண்டு பேரையும் பார்க்க வீட்டுக்கு வரேன் னு சொல்லிட்டு இருந்தான் இங்கேயே பார்த்துட்டா ஊருக்கு கிளம்புவான்” விடாப்பிடியாக நின்றான் பரிதி. .

“அட கெரகமே….  ஏன் டா இப்படி படுத்துற…. அய்யோ ஆரு வந்து தொலையேன் டி இங்க ஒருத்தன் உசுரை எடுக்கிறான் ” மனதிலேயே புலம்ப ஆருவின் காதில் விழுந்து விட்டது போல முகிலுடன் கையை கோர்த்து கொண்டு வெளியே வந்தாள்.

“ஆத்தி இவ என்ன  ஜோடி போட்டு வர்றா….  கையை எடு டி பார்த்தான்…. நம்மளை பாத யாத்திரைக்கு அனுப்பிடுவான்….. ” நல்ல வேளை ஆரண்யா பரிதியை பார்த்து விட்டாள் .

கையை சட்டென்று எடுத்து கொண்டு .,”முகி எங்க அண்ணன் நிற்கிறான் நான் முன்னாடி போறேன் நீங்க அப்புறமா வாங்க மாட்டுனோம் அவ்வளவு தான் மங்காத்தா ஆடிடுவான்  …..பாய் பாய் ஃபோன் பண்றேன்… அச்சோ அவ என்ன சொல்லி சமாளிச்சான்னு தெரியலையே ” என்றவள் விடுவிடுவென்று ஓடினாள்.

“ஏன் டி பாத்ரூம் போக இவ்வளவு நேரமா அண்ணா அதோ வந்துட்டா ஆரு….  “இப்போது தான் நிம்மதியாக மூச்சு விட்டாள் தீர்த்தன்யா.

முகில் வராத ஃபோனில்  .,”ம்ம்ம்ஹ்ம்… சொல்லு டா…. ம்ம்ம் சரி… தெய்வமே நீ வேற லெவல்…. நான் வீட்டுக்கு போயிட்டு கால் பண்றேன்” என்றபடி வெளியேறினான்.

ஆரு சிரித்துக் கொண்டே தலை குனிந்து கொண்டாள்.

“உனக்கு சிரிப்பா இருக்கா டி சரி உங்க அண்ணனை சென்ட் ஆஃப் பண்ணிடு டி கிளம்பலாம் “முணுமுணுத்தாள் தீர்த்தன்யா.

“சரி சரி கிளம்புங்க…. ஊரை சுத்தாமல் சீக்கிரம் வீட்டுக்கு போகனும்….  ” என்று விட்டு தன் நண்பனுடன் உள்ளே நுழைந்தான்.

“ஸ்ஸ்ஸப்பா….  முடியலைடி ஆமா இவ்வளவு நேரம் என்ன தான் டி பேசுனீங்க… வா வா  முதல்ல இடத்தை காலி பண்ணுவோம்….  அப்புறம் முகிலுக்கு ஃபோன் பண்ணி ஃபலுடாவுக்கு தேங்க்ஸ் சொல்லனும்…. செம டேஸ்டு….”

“வாடி போகலாம்…  இதெல்லாம் கேட்டுக்கிட்டு …” ஒரு வழியாக இருவரும் வெளியே வர முகில்  அங்கேயே நின்று  ஃபோன் செய்தான்.

“ஆரு மா அது தான் உங்க அண்ணனா…  ஒரு இன்ட்ரோ தந்திருக்கலாம் இல்ல…  மச்சான் கூட ஒரு  ஹேண்ட் சேக் பண்ணி இருப்பேன்…  இப்படி பண்ணிட்டியே… ??”

“ம்ம்ம்ஹ்ம்… மாட்டி இருந்தா அவன் மட்டன் குருமா பண்ணி இருப்பான்…. உங்களுக்கு  ஹேண்ட் சேக் கேட்குதோ…..  வைங்க சார் ஃபோனை  வீட்டுக்கு  போயிட்டு கூப்பிட சொல்றேன் …” என வைத்து விட்டாள் தீரா.

முகில் சிரித்துக் கொண்டே பேருந்து நிலையத்தில் சென்னை பஸ் ஏறினான்.

பஸ் ஏறியதில் இருந்து வீடு செல்லும் வரை இருவரும்  ஃபோனில் பேசிக் கொண்டே வந்தனர்.

நாட்கள் அழகாக நகர ராகவ் வாரம் ஒரு முறை முகிலிடம் பேசினான் . இங்கே ஆரண்யா முகிலின் காதலும் சிறு தொடுகையிலும் அன்பான வார்த்தைகளிலும் வளர்ந்தது.  அவ்வபோது இருவரும் தீர்த்தன்யாவின் உதவியால் யாரும் அறியாமல் மாதம் ஒரு முறை சந்தித்து கொண்டனர்.

ஒரு வருடம் காற்றாய் கரைந்திருந்தது…..  இந்த ஒரு வருடத்தில் ஆரண்யா முகிலின் குடும்பத்தை பற்றி கேட்டு களைத்து போனாள்….  அவனும் சொல்கிறேன் என மழுப்பி வந்தான்.

ஹோட்டல் விஜயா :

“இதோப் பாருங்க முகில் நான் கேட்டா சொல்ல கூடாதா…. ஏன் நான் உங்க குடும்பத்தை பத்தி தெரிஞ்சுக்க கூடாதா….  எது கேட்டாலும் சொல்ல மறுக்கிறீங்க….  ஒரு வருஷம் முடிஞ்சு போச்சு… அப்பாவும் தாத்தாவும் மறுபடியும் கல்யாணம் பத்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க ….நீங்க உங்க வீட்டில் பேசி வந்து பொண்ணு கேளுங்க…..  ப்ளீஸ் முகில். “

“ஆரு …எனக்கு ஒரு அக்கா ஒரு அண்ணா அவ்வளவு தான்…. கூடிய சீக்கிரம் நான் அப்பா அம்மா கூட வந்து பொண்ணு கேட்கிறேன்….  சரியா  என்னை லவ் பண்ற தானே அப்போ நான் சரியானவன்னு நம்புற தானே… ??”

“அந்த நம்பிக்கை எல்லாம் இல்லாமையா உங்க கூட பழகிட்டு இருக்கேன்…..  எனக்கு பயமாக இருக்கு முகி… “

“நான் உன்னை ஏமாத்த மாட்டேன் ஆரு நம்பு ப்ளீஸ் கூடிய சீக்கிரம் திருமதி முகில் கிருஷ்ணாவா ப்ரமோட் பண்ணிடுறேன்…  இப்ப கொஞ்சம் சிரியேன்….  மூஞ்சியை தூக்கி வச்சிருக்கறது நல்லாவே இல்லை… ” முகம் சுருக்கி கெஞ்சியவனை பார்த்து சிரித்தபடி .,”இப்படியே ஏதாவது சொல்லி சமாதானம் பண்ணிடுங்க … சரியான ஆளு தான்…. ” என்றாள் புன்னகை முகமாக

“ம்ம்ம்ஹ்ம்… சரி கிளம்பலாம்… டைம் ஆகிடுச்சு….  நான் சென்னை போனதும் ஃபோன் பண்றேன் சரியா….  அப்புறம் ரொம்ப நாளா கேட்கிறேன் இல்ல கொஞ்சம் கன்சிடர் பண்ணு மா ப்ளீஸ்….”

“கல்யாணம் முடிஞ்சதும் நீங்க கேட்குறதை வேணுங்க வேணாங்க தரேன் ஓகே…  பாய்… “என நடக்க “இதெல்லாம் அநியாயம் ஆரு….  சரி கோவிலுக்கு மட்டும் போயிட்டு வீட்டுக்கு போகலாம்…”

“சரி போகலாம் எந்த கோவிலுக்கு போறது… ??”

“ஸ்ரீ ரங்கம் போகலாமா….??” 

“நான் தீரு கிட்ட கேட்டு சொல்றேன் “

“தீரா தான் ஸ்ரீரங்கம் போகலாம் னு ப்ளான் போட்டா “

“அதானே பார்த்தேன்….  சரி கிளம்புங்க போயிட்டு சாமி கும்பிட்டதும் கிளம்பிடுவோம் சரியா. ???”

“ம்ம்ம்ஹ்ம் ஓகே…” 

ஆரண்யா ,தீர்த்தன்யா ,ஜீவா, முகில் , நால்வரும் கோவிலுக்கு கிளம்பினர்.

ஸ்ரீ ரங்கம் ரங்கநாதரை தரிசித்து விட்டு வெளியே வர தீர்த்தன்யா பிரசாதம் வாங்கி கொண்டு வந்து அமர்ந்தாள் .

“ம்ம்ம்ஹ்ம் ஆரு கை காட்டு ஜீவாண்ணா நீயும் முகில் நீங்களும் தான்…..” என சொல்ல மூவரும் கை நீட்ட மூவருக்கும் பிரசாதத்தை  கொஞ்சம் வைத்து விட்டு…” ம்ம்ம் சின்ன பிள்ளைங்க இதுக்கு மேல சாப்பிட கூடாது….  மிச்சம் எல்லாம் போனா போகுதுன்னு நானே சாப்பிட்டுக்கிறேன் ஓகே….  லெட்ஸ் ஸ்டார்ட்….” என சொல்ல ஆருவோ “உன்னை…. அடி வாங்க போற டி நீ அவங்க ரெண்டு பேருக்கும் குடு டி…”.  என்க முகில் தான் தடுத்தான்.

“தீரா நீ சாப்பிடு…. ஆரு….  பேசாம இரு… உனக்கு வேணுன்னா வாங்கிக்கலாமா ??”

“இல்ல முகி அதெல்லாம் வேண்டாம்…  அவ கொஞ்சம் அப்படி தான் “என தயங்க .,”இப்ப நான் ஒண்ணும் சொல்லலை மா….  தீரா அப்படி இருக்கிறது தான் எனக்கு பிடிச்சு இருக்கு….  எனக்கு ஒரு தங்கை இருந்தா அவ தீரா மாதிரியே இருக்கனும் னு நினைச்சு இருக்கேன் தெரியுமா “என்று சிரித்துக் கொண்டான்.

“ஹலோ அதுக்காக நான் உங்களை அண்ணானு சொல்ல முடியாது….  நீங்க எனக்கு மாமா தான் சொல்லிட்டேன்…. எனக்கு ரெண்டே அண்ணன் தான் அது பரிதி அண்ணாவும் ஜீவாண்ணாவும் தான் ம்ம்ம்ஹ்ம்…. “என்றிட ஜீவாவோ….  “ஆமா முகில் இவ கிட்ட அடி வாங்க என்னை மாதிரி ஆளால தான் முடியும்….  இவளை அடிக்க பரிதியால தான்  முடியும்…. ” என சிரித்தான்.

“இப்ப நீ என்ன சொன்ன…. ??” என கோபமாக கேட்டவளிடம் இருந்து தப்பி கை கழுவ ஓடினான்…  ஜீவா.

“முகில் சிரித்துக் கொண்டே ஏன் ஆரு பரிதி அடிப்பாரா… ???”என கேட்க

“ம்ம்ம்ஹ்ம் ஆமாம் முகி இவ எப்போதும் அண்ணாவை வம்பு பண்ணுவா அதனால தான்… நான் இதுங்க சண்டையில் கலந்துக்கவே மாட்டேன்…. “என்றாள் சிரிப்புடன்.

“எனக்கு இப்படி இருக்கிறது ரொம்ப பிடிக்கும் தெரியுமா….  ஆனால் படிப்பு எல்லாம்  ஹாஸ்டலில் போயிடுச்சு…. காலேஜ் மட்டும் தான் வீட்டில் இருந்து  போனேன் அதுக்கு உள்ள என் அக்காவுக்கு மேரேஜ் ஆகிடுச்சு அண்ணா  வேலைக்கு போயிட்டு இருந்தார்… அதனால இந்த வாய்ப்பு எல்லாம் கிடைக்கலை “என்று வருத்தப்பட்டான் முகில்.

“அவ்வளவு தானே….  நம்ம மேரேஜுக்கு அப்புறம் இது மாதிரி நிறைய என்டர்டெயின்மென்ட் கிடைக்கும் என்ஜாய் பண்ணுங்க “என சிரித்தாள் ஆரண்யா.

“ஆரு திரும்பு….  ” என்றவன் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டான்.  கண்களை மூடி அந்த நிமிடத்தில் உறைந்திருந்தவள் கண்களை மெதுவாக திறந்தாள்.

“என்னாச்சு ஆரு நான் வச்சு விடலாம் இல்ல….  !!!”

“இல்ல… ரொம்ப ஹாப்பியா இருந்தது இந்த நிமிஷம் இப்படியே நீளக் கூடாதா னு இருக்கு …. “

“சீக்கிரம் இந்த நிமிஷம் வந்திடும்….  சரி கிளம்பலாம் உனக்கு டைம் ஆகுது இல்ல. “

நால்வரும் கிளம்பினர். 

தீர்த்தன்யா ,ஆரண்யா இருவரும் வீட்டிற்கு செல்ல அங்கே எல்லோரும் அமைதியாக அமர்ந்து இருந்தனர்.

அவர்களின் தாத்தா தான் ஆரம்பித்தார்.

“என்னம்மா வேலை முடிஞ்சதா…. ??”

“என்ன திடீர் னு புதுசா கேட்கிறார் ஏதோ சரியில்லையே … என யோசித்த தீர்த்தன்யா  முடிஞ்சிடுச்சு தாத்தா” என்றாள் அமைதியாக

“சரி உள்ள போங்க “அவரது குரலில் அசாத்திய அழுத்தம்…. மேற்கொண்டு யாரும் எதுவும் பேசவில்லை.

“ஆரு எதுவோ சரியில்லை டி எல்லோரும் பார்க்கிற பார்வையே வித்தியாசமா இருக்கு…. ”

“நடக்கிறது நடக்கட்டும்…..  உண்மை தெரிஞ்சாலும் அவங்க கிட்ட சம்மதம் வாங்கி முகில் கூட வாழ்வேன்” என்று ஆடை மாற்றினாள்.

ஒரு வாரம் வரை என்ன விஷயம் என்று யாரும் கூறவில்லை.  இரு சகோதரிகளும் வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தனர். ஆனால் பரிதி கொண்டு போய் விட்டு அழைத்து வந்தான். 

“அண்ணா நீ ஏன் எங்க கூட வர்ற போற ஏன் அப்பா கூட அரிசி மில்லுக்கு போகலையா…  ??”

“ஏன் உங்க கூட வர்றது உங்களுக்கு சுதந்திரமா இல்லையோ…  பேசாம வேலையைப் பாருங்க …. இல்ல வேலைக்கு போறதும் கட் ஆகிடும்….  ரெண்டு பேரும் திருட்டு தனமா பண்றீங்க…  உங்களுக்கு இருக்கு….  ஆரு இதை நான் உன் கிட்ட இருந்து எதிர் பார்க்கலை….  என்னம்மோ செய்….  ஆனால் ஒண்ணு மட்டும் உறுதியா நினைச்சுக்க நம்ம வீட்டில் காதல் கல்யாணம் பண்ண சான்ஸே இல்ல….  என் காதலையே ஏற்காதவங்க….  பொம்பளை பிள்ளையோட காதலை ஏத்துப்பாங்களான்னு யோசிச்சுக்க….  பிரசன்னா மாதிரி முடிவு எடுத்திடாத….  அவ்வளவு தான் சொல்வேன்…. “என கிளம்பி விட்டான்.

“தீரு ஃபோன் தா டி முகில் கிட்ட பேசனும் “என்றிட அவள் தனது கைப்பையில் தேட ஃபோன்  பேக்கில் இல்லை…. 

“ஆரு ஃபோன் இல்ல….  கண்டிப்பாக நம்ம இல்லாத நேரத்தில் நம்ம ரூமை சோதனை போட்டு இருக்காங்க…  போச்சு டி இப்ப என்ன பண்றது…. ???”

ஆருவுக்கு திக்கென்று இருக்க அலுவலகத்தில் இருந்த ஃபோனுக்கு அழைத்த முகில் விஷயத்தை தெரிந்து கொண்டான்..

“ஆரு நோ வொர்ரிஸ்…..  நான் இருக்கேன்…  இன்னும் ரெண்டு நாள் ல  நம்ம மேரேஜை பத்தி பேசிடலாம்…  அப்புறம் நம்ம சென்டரோட ஆண்டு விழா வருது இல்லையா அப்போ எல்லா விஷயத்தையும் பேசிக்கலாம்…. கண்டிப்பாக சென்னை வந்திடனும்…. “என்றான்.

“முகில் தெரிஞ்சு தான் பேசுறீங்களா…. வீட்ல நம்ம லவ் மேட்டர் தெரிஞ்சுடுச்சு எப்படி அனுப்புவாங்க….??” 

“ப்ளீஸ் எப்படியாவது வந்திடு மா…. கண்டிப்பாக என் ஃபேமிலியை உனக்கு அறிமுகம் பண்ணி வைக்கிறேன்….  அடுத்து உங்க வீட்டில் வந்து பேசுறது தான் பாக்கி….  “என கெஞ்சுதலாக கேட்டான்.

“கண்டிப்பாக விட மாட்டாங்க…. முகி…. ஆனால் ட்ரை பண்றேன் “என சமாதானம் செய்தாள்.

“ஆரு சென்னை செல்வாளா??? முகில் தன் குடும்பத்தினரை அறிமுகம் செய்வானா….???  ஆண்டு விழாவில் நடக்கப் போவது என்ன????

விரைவில் அடுத்த எபியில் பார்ப்போம் நண்பர்களே

…… தொடரும்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

வணக்கம் நண்பர்களே படித்து விட்டு மறக்காமல் கமெண்ட்ஸ் போடுங்கப்பா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்