முகில் திருச்சி வருவதாக குறுஞ்செய்தி அனுப்பி விட்டு கிளம்பினான்.
“முகி…. வேற யாரையாவது அனுப்ப சொல்லலாம் டா நீ ஏன் போற…. ???” ராகவ் புலம்பி தள்ளினான்.
“””ப்ப்ச் நான் என்ன நிரந்தரமாகவா போறேன்…. மூன்று நாட்கள் கழித்து வந்து விடுவேன் டா…. இங்க இருக்கிற திருச்சி தானே…. !!!””
“””உன்னை…!!! ” ” சரி போயிட்டு பத்திரமாக வரனும்…. சாப்பாடு நல்ல ஹோட்டல் ல பார்த்து சாப்பிடனும்…. !!!”””” சிறு குழந்தைக்கு சொல்வது போல சொல்லிக் கொண்டிருந்தான் ராகவ்.
“””என் அம்மாவுக்கு அப்புறம் நீ தான் டா இவ்வளவு அக்கறையா சொல்ற… !!!”””
“””சரி சரி… டிரெஸ் எல்லாம் பேக் பண்ணிட்டேன் போனதும் ஃபோன் பண்ணு… என பேருந்து நிலையத்திற்கு முகிலை அழைத்து கொண்டு கிளம்பினான்.
பஸ்ஸில் ஏற்றி விட்டவன் நேரே அறைக்கு சென்று அலுவலகம் கிளம்பினான்.
முகில் ஆரண்யாவிற்கு அழைக்க அது அடித்து கொண்டே இருக்க அவள் தான் எடுத்த பாடில்லை.
தீர்த்தன்யா வகுப்பு எடுத்து கொண்டு இருக்க… இவ வேற இந்த ஃபோனை கொடுத்து விட்டு போய் அது அடிச்சுட்டே கிடக்கு என எரிச்சலாக எடுத்து .,”ஹலோ !!!”” என்றாள் .
“””ஹலோ நான்…. முகில் பேசுறேன்…. ஆரண்யா… !!”””
“””ம்ம்ம்ஹ்ம் சொல்லுங்க சார்…. !!!””
“ஆரண்யா என் மெசேஜ் பார்த்தீங்களா… ??”தயங்கி கொண்டே கேட்க .,”ம்ம்ம் சாரி சார் கவனிக்கலை…. நான் நீங்க வர்றீங்கனு மேம் கிட்ட சொல்லிடுறேன் சார்… “என்றாள் பதட்டத்துடன்.
“அச்சோ இவளுக்கு நம்ம எதுக்கு மெசேஜ் பண்றோம் னு புரியலை போல !!” என நினைத்தபடி .,”இல்ல ஆரண்யா நான் உங்க கிட்ட இன்ஃபார்ம் பண்ண தான் மெசேஜ் பண்ணேன்….. தென் நான் மேம்க்கு அல்ரெடி சொல்லிட்டேன்… ” என்றான் அவசரமாக
“”என் கிட்டயா எதுக்கு சார்…. !!”என்றவளை., “” என்ன செய்யலாம் ???” என்று தோன்றியது முகிலுக்கு.
“ஒண்ணுமில்ல சும்மா தான் ஆரண்யா நான் வச்சிடுறேன்” என காலை கட் செய்தான்.
“ஏன் சம்பந்தமே இல்லாமல் நமக்கு சொல்ல நினைத்தாரு…. சரி வரட்டும்…. பார்க்கலாம்…” என நினைத்து வைத்து விட்டு வேலையை கவனித்தாள்.
தீர்த்தன்யா வகுப்பு முடித்து வர .,” ஏன் டி இதை ஏன் டி என் கிட்ட கொடுத்துட்டு போன… நொய் நொய்யுன்னு அடிச்சிட்டே இருக்கு…. வீட்டுக்கு தெரியாமல் மொபைல் வச்சிருக்கறதே தப்பு இதுல உனக்கு இத்தனை ஃபோன் கால் வருது…. ஆமா எதுக்கு டி முகில் சாருக்கு நம்பர் தந்த…. ??””
“ப்ப்ச்… வீட்டு ஃபோனுக்கு மெசேஜ் பண்ணாரு…. தாத்தாவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான் அதனால தான்…இந்த நம்பர் தந்தேன்…. அதுல உனக்கு என்ன பிரச்சினை ??”
“பிரச்சினை எல்லாம் இல்ல….. நீ தாத்தாவுக்கு தெரியாமல் ஃபோன் வச்சிருக்கறதே தப்பு ….இதுல எல்லாருக்கும் நம்பர் கொடுத்து….. ஏதாவது ப்ராப்ளம் ஆகிடுச்சுன்னா… உடனே மேளம் கொட்டு தாலி கட்டு னு வந்து நிற்பார் தாத்தா பரவாயில்லையா ….வேண்டாம்…. முகில் சார் என்ன தான் நம்ம கூட வேலை செஞ்சாலும் அவர் ஒரு பையன் நினைவிருக்கட்டும்….. “
“ஏன் டி நார்மலா நம்பர் தானே கொடுத்தேன் அதுக்கு ஏன் டி இவ்வளவு லென்த்தா டயலாக் பேசுற…. முகில் சார் பையன் தான் நான் என்ன பொண்ணு னா சொன்னேன்…. நாம இப்படி பேசாமல் இருந்தாலும் கல்யாணம் பண்ணி வைக்க தான் போறாரு…. சரி அதை விடு…. இப்ப என்ன முகில் சார் கிட்ட நான் பேச கூடாது அவ்வளவு தானே…… சரி அவர் ஃபோன் பண்ணா நான் இனி என் நம்பருக்கு கூப்பிடாதீங்க…. என் சிஸ்டருக்கு இதெல்லாம் பிடிக்காது னு சொல்லிடுறேன் போதுமா… சரி வா சாப்பிடலாம்…. க்ளாஸ் முடிஞ்சது….” என்றவள் அங்கே வேலை பார்க்கும் மற்றொரு ஆளான ஜீவாவையும் சாப்பிட அழைத்தாள்.
“வந்துட்டேன் தீரு மா…. ஆமா என்ன ட்வின் சிஸ்டர் ரெண்டு பேரும் காரசாரமாக விவாதம் பண்ணிட்டு இருக்கீங்க…. என்ன விஷயம்…. எதுவும் லவ் மேட்டரா…. எதுவா இருந்தாலும் அண்ணன் கிட்ட சொல்லுங்க நான் சால்வ் பண்றேன்…. “
“ம்ம்க்கும்… உன் கதையே டிப்பர் லாரி வச்சு அள்ளுற அளவுக்கு ஓடுது… இதுல நீ எங்க லவ் மேட்டரை சால்வ் பண்ண போறீயாக்கும்…. போய் மொதல்ல அந்த காபி கடைகாரி கிட்ட காதலை சொல்ற வழியை பாரு….. இன்னும்…. கியூ ல நிற்கிறவன் பிரசாத வாளியை தீர்ந்துடுச்சா தீர்ந்துடுச்சான்னு பார்க்கிற மாதிரி… எட்டி நின்னே பாக்க வேண்டியது…. இதுல இவரு எங்க மேட்டரை சால்வ் பண்றாராம்… ” என தீரு அவனை கிண்டல் செய்ய
“நோ… நோ… நோ… சிஸ்டர்…. அப்படி எல்லாம் அண்ணனை பப்ளிக் ல அசிங்க படுத்த கூடாது… …தனியா கூப்பிட்டு போய் கும்மு கும்முனு கும்மிக்கோ அண்ணன் கேட்கவே மாட்டேன்….. ஏன் னா நான் மானஸ்தன்….”
“அப்ப அடி வாங்க தயாரா இருக்கன்னு சொல்லு…..”என தீரு மேலும் அவனை வாரினாள்.
“அஃப்கோர்ஸ் பேபி….. தங்கச்சி கிட்ட அடி வாங்காத அண்ணன் என்ன அண்ணன்…. ஆமா அது என்ன வத்தல் குழம்பா …அதை இப்படி நகர்த்து… “என சிரித்தபடியே வாங்கி கொண்டான்.
“ம்ம்ம்…. இவ்வளவு சூப்பரா வத்த குழம்பு வைக்க உங்க அம்மாவுக்கு மட்டும் தான் தெரியும்…. ப்பா என்ன டேஸ்டு…. ” நாக்கை சுழற்றி சப்பு கொட்டி சாப்பிட ஆரண்யாவோ சிரித்தபடி தன்னுடைய குழம்பையும் அவனுக்கே கொடுத்தாள்.
“ஆரு மா போதும்….” என்றதும்…. “அண்ணா ஆம்பளை புள்ளை நிறைய சாப்பிடனும்… சாப்பிடு…. இனிமேல் நீ சாப்பிட நைட் பத்து மணி ஆகும்…. ஒழுங்கா சாப்பிடு “என தீரு எடுத்து வைத்தாள்.
மூவரும் ஒரு வழியாக சாப்பிட்டு முடிந்ததும் அடுத்த பேட்சிற்கு வகுப்பெடுக்க சென்றனர்.
அந்த பிராஞ்சைஸின் உரிமையாளர் லாவண்யா மேடம் ஜீவாவை அழைத்து முகிலை பேருந்து நிலையத்தில் இருந்து அழைத்து வரும்படி கூறி தனது வண்டி சாவியை கொடுத்தார்.
சற்று நேரத்தில் எல்லாம் முகிலை அழைத்து கொண்டு வர லாவண்யா அவனை விஜய் லாட்ஜில் அறை எண்ணை கூறி தங்க வைத்து விட்டு வரும்படி கூறினார் .
ஜீவாவும் முகிலிடம் .,” சார் உங்களை ஹோட்டல் ல ஸ்டே பண்ணிட்டு காலையில் வர சொன்னாங்க மேடம்!!! வாங்க போகலாம்”” என அழைத்து சென்றான்.
முகிலுக்கு மனம் வாடிப் போனது…. ஆரண்யாவை பார்த்து விடலாம் என்று நினைத்து இருந்தவனுக்கு இந்த விஷயம் ஏமாற்றத்தை தந்தது…… வேறு வழியின்றி ஹோட்டலுக்கு சென்று விட்டான்.
முகிலை விட்டு வந்த ஜீவா …. சென்டருக்கு வந்து விட்டான்.
“டேய் அண்ணா பையா எங்கடா முகில் சார்…” மிகவும் எதிர்பார்ப்புடன் கேட்ட தீருவை… “நீ சரியில்லையே அவரை பார்க்க நீ ஏன் இவ்வளவு அவசரப்படுற….” என நெற்றி சுருக்கி யோசித்தான்.
“அட ஒரு அழகான பையனை பார்க்க ஆர்வம் வராதாப்பா…. யாருக்கு தெரியும் அவர் திடீர் னு நம்ம சொந்தக்காரரா கூட ஆக வாய்ப்பு இருக்கிறது “என்று ஆரண்யாவை பார்த்து கொண்டே சொல்ல அவளோ கோவத்துடன் முறைத்தாள்.
“நீ ஏன் மா கோவப்படுற… நான் பொதுவா சொன்னேன்…. !!”என்றாள் தீர்த்தன்யா.
அன்றைய தினம் கம்ப்யூட்டர் சென்டரில் வேலை முடிந்து சகோதரிகள் இருவரும் கிளம்பிட தீருவிற்கு முகிலிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது.
“ஹாய்… !!”
“ஏய் முகில் மெசேஜ் பண்றாரு…. “
“அச்சோ இது எதுவும் எனக்கு சரியா படலை தீரு… நான் ஃபோன் பண்ணி இனிமேல் மெசேஜ் பண்ணாதீங்க னு சொல்லிடவா…. ??”
“ப்ப்ச்…. பேசும் போதே என்ன வந்திடப் போகுது…. இரு டி…. எப்ப பார்த்தாலும் பயந்துகிட்டு என்னையும் பயமுறுத்த வேண்டியது…. ” என்றவள்…
“ஹாய் முகில் சொல்லுங்க… ட்ராவலிங் நல்லா இருந்ததா சாப்டிங்களா…. என்ன பண்றீங்க… என்னடா இத்தனை கேள்வி கேட்கிறாளே இது நான் பார்த்த ஆரண்யா தானான்னு யோசிக்காதீங்க…. நான் தீர்த்தன்யா…. அப்புறம் அவ கொஞ்சம் ஷை டைப் அதிகம் பேச மாட்டா…. “என பதில் அனுப்பினாள்.
அதை எடுத்து பார்த்தவன் “ப்பா…. அக்கா ஒரு ரகம் தங்கச்சி ஒரு ரகம் போல….. “என சிரித்தபடியே.,” ஹாய் தீர்த்தன்யா… ஜர்னி நல்லா இருந்தது…. சாப்டேன் உங்களுக்கு சென்டர் முடிஞ்சுதா… அன்ட் அவங்களை பார்த்ததும் தெரிஞ்சுடுச்சு அவங்க ஷை டைப் னு …. நோ ப்ராப்ளம் நான் ஜஸ்ட் ப்ரெண்ட்லி யா தான் மெசேஜ் பண்ணேன்…. பட் இட்ஸ் ஓகே அவங்களுக்கு பிடிக்கலை னா வேண்டாம்….குட் பாய்” என அனுப்பி விட்டு வைத்தான்.
அதை படித்து விட்டு .,”ப்ப்ச்…. பாரு அவர் சங்கடப் படுறாரு…. நீ ஏன் தான் இப்படி இருக்கியோ…. சரி விடு இதுவும் நல்லதுக்கு தான்… நாமளும் நம்ம வீட்ல உள்ளவங்களை சமாளிக்க வேண்டாம்….. சரி சீக்கிரம் வாடி பசிக்குது…. “என ஆரண்யாவை அழைத்து கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.
மறுநாள் காலையில்… வழக்கம் போல இருவரும் கம்ப்யூட்டர் சென்டர் வர முகில் காலையிலேயே அலுவலகம் வந்து விட்டான்.
ஜீவா பஸ் ஸ்டாண்டிலேயே எதிர் கொண்டு .,”தீரு நீ முதல்ல ஆபிஸ் போ நான் ஆருவோட… காபி ஷாப் போயிட்டு வர்றோம்” என சொல்ல அவளோ.,” முடியாது நான் தான் உன் கூட வருவேன்…. ஆரு வேணுன்னா சென்டர் போகட்டும்… “என பிடிவாதம் பிடித்தாள்.
“ஸ்ஸ்ஸ்…. தங்கம் இல்ல…. நீ வந்தா ஏதாவது பேசி என்னை ப்ரபோஸ் பண்ண விடாமல் பண்ணிடுவ ….இன்னைக்கு அவ பிறந்த நாள் இன்னைக்கு ப்ரபோஸ் பண்ணிடுறேன் உனக்கு வரும் போது ரெண்டு ஐஸ்கீரிம் ஃபேமிலி பேக் வாங்கி தரேன்….” என சமாதானம் செய்து அனுப்பி வைத்தான்.
கம்ப்யூட்டர் சென்டர் திறக்காததால்… முகில் வெளியே அமர்ந்து இருக்க…. தீர்த்தன்யா சாவியை சுழற்றியபடி வந்தாள். அவள் வரும் போதே முகில் பார்த்து விட்டான்.
“ஆரண்யாவா இது…. ப்பா அங்க பார்க்க அவ்வளவு பவ்யமாக இருந்தா இங்க இவ்வளவு கெத்தா நடந்து வர்றா “என யோசித்து கொண்டு நிற்க…. தீரு அவன் முன் சொடக்கிட்டு கொண்டு நின்றாள்.
“யார் இவன்…. நம்மளை இப்படி பார்க்கிறான்…. கோர்ஸ் படிக்க வந்திருப்பானோ ஆள் செமயா இருக்கானே !!!” என நினைத்து கொண்டு இருக்கும் போதே.,” ஹாய் ஆரண்யா நான் முகில் கிருஷ்ணா….” என்றதும்…. “ஆஹா இவரு தான் முகிலா…. நம்மளை ஆரு ன்னு நினைச்சுட்டு பேசுறாரா கொஞ்ச நேரம் ஓட்டுவோம் “என நினைத்து…. ஆரண்யாவை போல பாவனையை மாற்றி கொண்டு பேசினாள்.
“ஹாய் முகில் சார் வாங்க… ஒரு நிமிஷம் சென்டரை திறந்திடுறேன்…. “என சென்டரை திறந்து வைத்தாள்.
“எப்படி இருக்கீங்க ஆரண்யா…??”.
“ம்ம்ம்ஹ்ம் நல்லா இருக்கிறேன் சார்… நீங்க எப்படி இருக்கீங்க… காபி குடிக்கிறிங்களா… ஒரே நிமிஷம் வாங்கிட்டு வரேன்… “
“இல்ல அதெல்லாம் வேண்டாம்…. நான் சும்மா சும்மா காஃபி குடிக்க மாட்டேன்…. “என்றான்.
சிறிது நேரம் வரை… ஆரண்யா போலவே பேசி கொண்டிருக்க…. முகிலும் தான் ஆரண்யாவிடம் தான் பேசிக் கொண்டிருக்கிறோம் என நினைத்து கொண்டான்.
ஏன்னா நம்ம தீரு குட்டி பர்ஃபார்மன்ஸ் அப்படி….
நன்றாக சென்று கொண்டிருந்த சமயம்… காலையில் பேட்ச் ஸ்டூடன்ட்ஸ் நால்வர் வந்து விட…. அனைவரும் ஒன்றாக சேர்ந்து “குட் மார்னிங் தீர்த்தன்யா அக்கா…. !!”என்றிட முகில் அதிர்ச்சியாக…. “என்ன தீர்த்தன்யாவா ??” என வாய் விட்டே கேட்டு விட அங்கே ஆரண்யாவும் ஜீவாவும் வந்து கொண்டிருந்தனர்.
தீர்த்தன்யாஆரண்யா
……. தொடரும்.
கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.
மிக்க நன்றி சகோதரி