Loading

கதவை திறந்தவள் எதிரில் நின்றவரை பார்த்து கடுங்கோவத்தில் முறைத்து கொண்டு இருந்தாள்.

அங்கு நிற்கவே பிடிக்காமல் விறுவிறுவென்று மேல் தளத்தில் இருக்கும் அவளின் அறைக்கு சென்றாள்.

“யுவி பேபி, என்ன பட்டு மா எங்க போறே அம்மா கூப்பிட கூப்பிட எங்க டா மா போற? “என்று குடி போதையில் தள்ளாடி கொண்டு உளறினாள் அனி என்கிற அனித்ரா

“அனி… அனி கொஞ்சம் நேராக நில்லு டி ப்ளீஸ் பாப்பா பாரு கோச்சிக்கிட்டு போறா”என்று கூறி கொண்டே அவன் தன் தோள் மீது சாய்த்து கொண்டான்.

“பிரணவ்.. விடு என்..ன என் பாப்பாக்கு நா…ன் வாங்கிட்டு வந்த டை..ரிரிரி மில்க்க கொடுக்க போறேன் விடு டா” என்றவள் பிரணவின் பிடியில் இருந்து விடுபட போராடினாள்.

“நீ இந்த மாதிரி செய்தால் எப்டி அனி உன்கூட பேசுவா அவ மேலே போயிருக்கா நீயும் மேல போய் குளித்திட்டு இந்த டிரஸ்ஸ சேஞ்சு பண்ணிக்கோ ப்ளீஸ் டி” என்று கெஞ்சுபவனை கண்கள் விரிய பார்த்து விட்டு மெய் மறந்து அவனை கட்டி அணைக்க சென்றாள்.

இதை யாவும் பார்த்து கொண்டே வந்த விராட், ” சூப்பர்  அமேஸிங்கா ரெண்டு பேரும் பேர்ஃபாம் பண்ணீங்க ச்சை உங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் கூட அறிவு இல்லையா??” வார்த்தைகள் கடுமையாக வந்து விழுந்தாலும் உள்ளுக்குள் மருகினான்

“விராட் சார் அது… வந்து… அது…” என்று பிரணவ் இழுக்க

போதும் என்பது போல் கரத்தை அவன் முன் நீட்டியவன் தனது காதலியாகிய மனைவி அனித்ராவை தர தரவென்று இழுத்து கொண்டு மேலே சென்றான்.

கணவனின் தொடுதலை உணர்ந்தவள், மது போதையிலும் கொதித்தெலுந்து கத்த தொடங்கினாள்.. “ஹேய் இடியட் நீ ஏன் டா என்ன தொடுற நீ தொட்டாலே என் உடம்புலாம் அப்டி எரியுது “

“எரியும் டி நல்லாவே எரியும் ஆனா இவன் தொட்டா குளு குளுன்னு இருக்கும்ல?? அனி எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் டி எப்போ தோ நிக்குறானே இவன் கூட சேந்து சுற்ற ஆரம்பித்தியோ அப்போவே உன்மேல கொஞ்சம் கொஞ்சமா வெறுப்பு வளர ஆரம்பிடுச்சி…ப்ளீஸ் இந்த நாயே இன்னிக்கே அறுத்து விட்டு வா அனி.. ப்ளீஸ் டி பொண்டாட்டி என்று கோவமாக ஆரம்பித்து கெஞ்சினான்.

காளி அவதாரமாய் உருவெடுத்த அனித்ரா விராட்டின் சட்டையை பிடித்து கொண்டு … “யார நாய்னு சொல்ற நீ தான் டா நாய் என் நண்பன நாய்னு சொன்ன மரியாதை கெட்டுடும்.பிரணவ் எனக்கு சோல்மேட் மாதிரி அவன பற்றி பேச உனக்கு தகுதியே இல்ல” என்று பொங்கி எழுந்தாள்.

“ஓஓ உனக்கு என்னையும் பாப்பாவையும் விட அவன் ரொம்ப முக்கியமா போய்ட்டான்ல,இப்டி ஈவினிங் அஞ்சு மணிக்கு எந்த பொண்ணு டி குடிச்சிட்டு வீட்டுக்கு வருவா… இது எல்லாத்துக்கும் காரணம் இவன் தான் டி…என் அனி இவ இல்ல அவ அப்பாவி யாரையும் ஹுர்ட் கூட பண்ண மாட்டா புரிஞ்சிக்கோ டி” என்று பேசி கொண்டே அவளை அணைக்க போனவனை

தன் பலத்தை கொண்டு தள்ளியவள் 

என்ன தொடாதனு சொன்னேன்ல என்று மீண்டும் பழைய புராணத்தை பாடினாள்.

மேலே நின்று நடக்கின்ற கூத்தை கவனித்த இவர்களின் புதல்வி யுவிஷா செய்வதறியாது தலையில் அடித்து கொண்டாள்.

அதை விராட்டும் கவனிக்காமல் இல்லை  “அங்கு பாரு அனி நம்ம குழந்தைய பாரு மேல இருந்து நம்மள கவனித்துட்டு தான் இருக்கா நம்ம சண்டையால அவள் ரொம்பவே மனசு உடைந்து போறா.. ப்ளீஸ் அவளுக்காகவாது இந்த பீடைய அறுத்து விடு டி “

“மைண்ட் யுவர் வர்ட்ஸ் மிஸ்டர் விராட் நானும் போனா போகுதுனு பார்த்தா ரொம்ப வார்த்தைய வரம்பு மீறி யூஸ் பண்றீங்க… நான் இவ்வளவு நேரம் அமைதியா இருந்ததுக்கு காரணம் என் தோழி அனிக்காக தான் வீணா என்னால ரெண்டு பேரும் சண்டைய போடாம போய் ஒழுங்கா குடும்பம் நடத்துற வழிய பாருங்க” என்று தோள்களை சிழுப்பி கொண்டே பிரணவ் கூறினான்.

அவனின் இந்த பேச்சை சற்றும் பொறுத்துகொள்ளாமல் விராட் அவனின் சட்டையை பிடித்து மரியாதையா என் வீட்ட விட்டு வெளியே போ, நல்லவன் மாதிரி வேஷம் போட்டு என் பொண்டாட்டிய ஏமாற்றலாம் ஆனா என்ன ஒரு டேஷ் கூட பண்ண முடியாது என்று தலையில் விரலை வைத்து சைகை காட்டினான்.

ஆத்திரத்தில் அவனின் வெள்ளை மூக்கு சிவந்து..மேலும் தொடர்ந்தான்

உன்னால தான் என் அனி ட்ரிங்க்ஸ் பண்ணிருக்கா நீயெல்லாம் ஒரு பிரண்ட்டா சாரி சாரி நீயெல்லாம் முதல்ல மனுஷனா இருந்தா தானே இந்த கேள்விய என்னால கேட்க முடியும்?? கையை விரித்து நக்கலாக கேள்வி எழுப்பியவனை

பிரணவ்வும் அதே நக்கல் தோணியுடன் உனக்குலாம் பொண்டாட்டிய வச்சி வாழ வக்கு இல்லனாலும் பேச்சுலாம் ரொம்ப நல்லாவே பேசுற… நீ என்ன என்ன கொடுமைலாம் என் அனிய பண்றியோ அதான் துக்கம் தாங்காமல் தினம் தினம் குடிக்குறா அதுக்கு என்ன எதுக்கு குறை சொல்ற என்று நெஞ்சை நிமர்த்தினான்.

ஆனால் இவர்களின் சண்டைக்கு ஆரம்ப புள்ளியாக இருக்கும் அனித்ரா  தனது டி ஷர்ட்டில் வாயை துடைத்து கொண்டு குழந்தை போல் டைனிங் டேபிளில் உறங்கி கொண்டு இருந்தாள்.

“சுத்தம் என் அனி உன்னாலே தூங்கிட்டா பாரு போய் புருஷன் மாதிரி அவ கிட்ட முதல்ல நடந்துக்கோ” என்று கூறி விட்டு வேகமாக அங்கு இருந்து பிரணவ் சென்றான்.

போகும் அவனை வெறி கொண்டு பல்லை கடித்து தன்னை தானே கட்டுப் படுத்திய விராட் ஓங்கி அருகில் இருக்கும் கண்ணாடியில் தன்னுடைய விரல்களை மடக்கி குத்தினான்.

அந்த வலியில் முகத்தை சுருக்கியவன் வாஷ்  பேசனில் ரத்தம் வடிகின்ற கரத்தை கழுவி கொண்டு மேலே இருக்கும் தனது மகளை காண சென்றான்.

விராட்டிற்கு தன் மகள் என்றால் கொள்ளை பிரியம்… ஏன் உலகத்தில் உள்ள அனைத்து மகள்கலும் தன் அப்பாவிடத்தில் தானே மிக நெருக்கமாக இருக்கிறார்கள்…? நம் யுவிஷா மட்டும் என்ன விதிவிளக்கா?

ஆனால் அனித்ராவிற்கு குழந்தை குடும்பம் என்றுலாம் வாழ பிடிக்கவில்லை.. இப்படி கூற வேண்டாம் என்று நினைக்குறேன் அவ்வாறு வாழ்ந்தவள் தான் ஆனால் அவளின் நட்பு வட்டாரம் அது போல் செய்துவிட்டார்கள்.

அனித்ரா டாப் ஐந்து ஃபேஷன் டிசைனர்களில் நான்காவது இடத்தை தன் கல்லூரி பயிலும் பொழுதே பிடித்துருந்தாள்.

அவளிற்கு டிரேடிஷனல்லை விட மாடர்ன் தான் மிக பிரியம்…விராட்டிற்கோ டிரேடிஷனல் 

மீது பிரியம்.இவ்வாறு எதிர்மறை ஜோடியா இருக்காங்களே இவங்க எப்டி லவ் பண்ணி கல்யாணம் பண்ணாங்கனு தானே யோசிக்குறீங்க 🤔?

அனைத்திற்கும் விடை போக போக கிடைக்கும் 😇❤️

விராட் அறையில் நுழையவும் யுவிஷா ஹெட்ஃபோன்ஸ்ஸை கழட்டவும் சரியாக இருந்தது.

“குட்டு என்ன பண்ணிட்டு இருக்கீங்க” என்று முகத்தில் புன்னகையுடன் வினவும் தந்தையை சிறிதும் பொருட்படுத்தாதவள் போனில் கேண்டி கிருஷ் விளையாடி கொண்டு இருந்தாள்.

“குட்டு ஏன் அப்பா கிட்ட பேசவே மாற்றீங்க?? அப்பா மேல என்ன டா கோவம்” அவளின் கரத்தை தன் கரத்துக்குள் எடுத்து வைத்து கொண்டு விராட் வினவ

தனது கரத்தை உருவி கொண்டவள் “ஜஸ்ட் கெட் அவுட் டாடி, ஐ அம் நாட் ரெடி டூ டாக் வித் யூ”… கூறி விட்டு மீண்டும் போனில் கவனத்தை செலுத்தினாள்.

“குட்டு உன் அம்மா தான் இப்டி நடந்துக்குறானு பாத்தேன் இப்போ நீயும் அப்பாவ வெறுக்குறல சரி நீங்க ரெண்டு பேரும் நிம்மதியா இருங்க… நான் உங்கள விட்டுட்டு போய்டுறேன்” என்று சோகமாக கூறும் தந்தையை பார்த்து விட்டு கண்டும் காணாமல் அருகில் இருந்த ஆப்பிள் ஜூஸ்ஸை பருகினாள்.

இதற்கு மேலும் பேசினால் அது சுவரிடம் பேசுவதற்கு சமம் என்று உணர்ந்தவன் நடையை கட்டினான்.

“டாடி போறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு ஸ்டோரி சொல்லிட்டு போ”என்று கூறியவளை புன்னகையுடன் பார்த்தவன்   “என்ன கதை டா சொல்லனும்” ஆர்வமாக வினவினான்

யோசிப்பது போல் பாவனை செய்தவள் “ம்ம்ம் நீ எப்போ மம்மிய முதல்ல பார்த்தனு சொல்லு”

“ஓகே குட்டு சொல்றேன்” என்று விட்டு மேலே பார்த்தவனை விசித்திரமாக பார்த்தவள் “என்ன இருக்கு மேல பார்க்குற டாடி?             

“ம்ம் அதான் குட்டு பிளாஷ் பாக் சொல்ல போறேன்ல” என்று அசடு வழிந்தவனை கேவலமாக லுக்கு விட்டவள் “சொல்லி தொலையும்” என்றுவிட்டு தனது தந்தையின் மடியில் படுத்துக் கொண்டு கதை கேட்க ஆரம்பித்தாள்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு….

தொடரும்…. ❤️😇 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  8 Comments

  1. Sangusakkara vedi

   Y ani ipdi behave panra…. Aprm ethuku lv mrg panralam…. Virat ah santhega padralo … Pranav nallavana kettavana… Knjm nallavana thn teriyuthu… Flash back solla late panniruvingalonu ninachen…. Super sis….

  2. Oosi Pattaasu

   ‘நீ நான் நாம்’ ஒரு சிம்ப்ளி கியூட்டான ஸ்டோரி.
   இதோட பாசிட்டிவ்ஸ்,
   1. அப்பா, பொண்ணு இடைல இருக்க பாண்டிங் செமையா இருக்கு.
   2. ஃப்ரெண்ட்ஷிப் சரியா அமையலைன்னா, ஒருத்தவங்க எந்தளவுக்கு மாறிடுவாங்கன்னு காட்டுன விதம்.
   3. அங்கங்க வர்ற குட்டி காமெடி.
   அப்புறம் நெகட்டிவ்ஸ்,
   1. ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்ஸ் கொஞ்சம் இருக்கு.
   2. நிறைய இடத்துல கொட்டேஷனே இல்லப்பா. பன்க்சுவேஷன் மிஸ்டேக்ஸ் அதிகமா இருக்கு.
   3. குட்டி, குட்டி எபிஸா இருக்கு. கொஞ்சம் பெருசா போடுங்களேன்.
   மொத்தத்துல இந்த ஸ்டோரி செம கியூட்டா இருக்கு. வேற லெவல்…

  3. Sangusakkara vedi

   1. தன்னோடு மனைவி தன் மகள் முன்னாடி இப்படியெல்லாம் நடந்துக்குறாளேன்னு அவனுடைய பயம், பதட்டம் எல்லாம் தத்ரூபமா இருந்தது‌.

   2. என்னதான் அப்பா மேல கோபமா இருந்தாலும் ஒரு கதை சொல்லிட்டு போங்களேன்னு சொன்னது தந்தை மேல் அந்த குழந்தை வச்சுருந்த பாசத்தை காட்டுது. கோவமா இருந்தாலும் எனக்கு சொல்லுங்கன்னு சொன்ன அந்த உரிமை சிலிர்க்க வைத்தது.

   3. கெட்ட சிவா சத்தால் அழிஞ்சவங்க பல பேர் இருக்காங்க. அவங்க கூட இருக்குறவங்களும் போடுற வேதனையை காட்டிய விதம் அருமை.

   4. விராட் நட்பு, மகள் பாசம், காதல் மனைவியை பத்தின ஏக்கம் னு எல்லாத்துலயும் விராட்டே ஸ்கோர் பண்றாரு..

   குறைகள்

   1. சின்ன சின்ன ஸ்பெல்லிங் எரர்ஸ்.

   2. பாதி இடத்துல கமா, புள்ளி, மேற்கோள் எதுவுமே இல்ல.

   3. லாஜிக் எரர்ஸ். அதாவது அனியை எப்போ பார்த்தாங்கன்னு சொல்ல ஆரம்பிக்கும் போது 15 வருடங்களுக்கு முன்புன்னு ஸ்டார்ட் பண்றீங்க. யுவி க்கு 15 வயசு ஆகுது. பிளஸ் ஒன் இயர் பிரெக்னன்ஸின்னு வச்சா கூட 16 வரும். இதுல எத்தனை வருசம் அவங்க லவ் பண்ணுனாங்கன்னு தெரியல. அதையும் பார்த்து தான் சொல்ல முடியும். அதை சேன்ஜ் பண்ணிட்டா நல்லா இருக்கும்.

  4. அருமையான குடும்பம் சார்ந்த காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்.

  5. hani hani

   அழகான குடும்பக்கதை. கூட சுத்தறவன் நல்லவனா கெட்டவனா னு தெரியல. இவ்வளவு குடிக்குற அளவுக்கு பிரச்சனை என்னவா இருக்கும்? சில விசயங்கள் தோனுச்சு.
   1 கொட்டேஷன் பல வாக்கியத்துல இல்ல. சில வாக்கியத்துல ஆரம்பத்துல போட்டுட்டு முடிக்கும் போது போடல. அத படிச்சு பார்த்து மாத்திக்கோங்க

   2 பாப்பா வயசு பதினஞ்சு. அப்புறம் எப்படி பதினஞ்சு வருசத்துக்கு முன்ன வரும்? அவங்க கல்யாணம் குழந்தை பிறக்குறதுல டைம் ஆகுமே. இல்ல இதுல வேற ட்விஸ்ட் இருக்கா 🤔

   3 இடையில நீங்க பேசுறதுக்கு () இந்த சிம்பள் யூஸ் பண்ணல. கதையோய அது வந்தாலும் அத யூஸ் பண்ணுங்க. அப்போ தான் வித்தியாசம் தெரியும்.
   வாழ்த்துக்கள் ❤️

  6. Oosi Pattaasu

   விண்வெளில சுத்துது புவி, விராட்டோட லிட்டில் ப்ரின்சஸ் யுவி…

  7. kanmani raj

   குடியை விரும்பறா அனி, குடித்தனத்தை விரும்புறான் விராட், இவங்களுக்கு நடுவுல தவிக்குறா யுவி…