Loading

     நீயின்றி நானில்லையே 👫

 

அத்தியாயம் – 5

     

       பிரபஞ்சனின் பதிலில் மலைத்துப் போய் நின்றாள் நீது .

 

      ” இன்னும் ஒரு… சின்ன சந்தேகம் .  . கேக்கவா  ” நீது .

 

     ” இன்னுமா  … ஏற்கனவே நீ யோசிச்ச எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டேனே … இனி என்ன இருக்கும் . சரி சொல்லு செல்லக் குட்டி. இந்த குட்டி மூளை என்ன எல்லாம் யோசிக்குது . சரி சொல்லுங்கோ …  . ” பிரபஞ்சன் ‌.

 

    ” அது வந்து … நம்ம கல்யாணம் நடந்தப்ப ஒரு கும்பல் தனியா குறுகுறுனு பாத்துட்டே இருந்துச்சே . யாரு அவங்க ‌ . பார்த்தா ரொம்ப வேண்டப்பட்டவங்க போல தான் இருந்துச்சு . ஆனா நீங்க வெறுத்த மாதிரி ஆர் அவங்க சந்தோஷத்த நான் கெடுத்தது போல அம்புட்டு கோபமா பாத்துட்டே இருந்தாங்க .  . நான் அவங்கள இண்ணு வரைக்கும் பாத்தது இல்ல . யாரு அவங்க . என்னய ஏன் இப்படி பாத்துட்டு இருந்தாங்க 🙄” நீது கிருஷ்ணா. 

 

     ” அதுவா அதுங்க டஸ்ட் மா . அதுங்க எல்லாம் நம்ம குட்டி மூளை ல ஸ்டோர் ஆகக் கூடாது . அதுனால தான் நானே சொல்லல . உன்னோட மனசும் மூளையும் அழகானது . அதுல அழுக்கு படியவே கூடாது னு நான் நினைக்கிறேன் . ” பிரபஞ்சன் . 

 

     ” நான் ரப்பர் வச்சு எரேஸ் பண்ணலாம் . நீங்க சொல்லுங்க . ” நீது . 

 

     ” சரி சொல்லுறேன் .  ‌ . நிரஞ்சன் ஃபேமிலி பத்தி சொன்ன நான் என்னோட ஃபேமிலி பத்தி சொல்லவே இல்லை . நினைவு இருக்கா … 👀 . என்னோட அம்மா அண்ட் அப்பா காதல் கல்யாணம் லாம் கிடையாது . ஆனா அது ஒரு அழகான குடும்பம். அம்மா அப்பாவோட அத்தை மகள் . அப்பாவுக்கு 5 அத்தைங்க . 2 மாமாங்க . அதுல 4 அத்தைக்கு பெண் பிள்ளை . மாமா ல 2 பேருக்கும் பெண் பிள்ளை உண்டு . மொத்தம் 7 பெண் பிள்ளைங்க . அதுல 4 பேர் அப்பாவ விட மூத்தவங்க . 3 பேர் ல ஒருத்தங்க அப்பாவ விட 14 குறைவு . பேலன்ஸ் 2 ” பிரபஞ்சன் . 

 

    ” என்ன உங்க தாத்தாக்கு வேற வேலையே இல்லை போல . இப்படி பெருசா பெத்து லிஸ்ட் தந்துருக்காரு ” நீது . 

 

     ” அந்த ஆளுக்கு வேற வேலை இல்லை னு சொல்லுற . அப்போ நாம  “பிரபஞ்சன் . 

 

    ” அட கேடிப்பயலே … ஓடிடு . சோ … முதல் ல சொல்லி முடி . ஹிஸ்டரி கேட்டே மண்டை குழம்புது . ” நீது . 

 

    ” ஹ்ம்ம் ரைட் … அதுல 1 பொண்ணோட குடும்பம் ரொம்ப வசதி . இன்னொரு பொண்ணு குடும்பம் வசதி குறைவு . எங்க அப்பா வசதி குறைஞ்ச வீட்டு பொண்ண தான் கட்டிப்பேன் னு அடிநடத்தி கட்டிக்கிட்டாரு. அதாவது எங்க அப்பா கடைக்குட்டி . சோ குடும்பத்து செல்லம் போல சொத்தும் அதிகம் . ” பிரபஞ்சன் .

 

     ” ஓ … ” நீது . 

 

    ” ஹ்ம்ம் . எங்க அப்பாக்கு சொத்து அதிகமா கிடைச்சது யாருக்கும் பிடிக்கல . ஆனா உண்மையிலே தாத்தா எங்க அப்பா க்குத் தான் குறைவா சொத்து குடுத்துருக்காரு . எங்க சொத்து ல பாதி ட்ரஸ்ட் க்கு தான் போகும் . எங்க ஊரு ல கல்யாணம் முடிஞ்சு பையனுக்கு கோவில் சார்பாக சில ரூபாய் கிடைக்கும் . அது காரணம் காட்டி கோபமா இருந்தாங்க ‌ . எங்க தாத்தா பாட்டி இறந்த பிறகு எங்க சித்தப்பு பெரியப்பு மாமா அத்தை லாம் கொல்ல ட்ரை பண்ணாங்க . ” பிரபஞ்சன் . 

 

   ” வெயிட் வெயிட் . உனக்கு அத்தை மாமா இருக்கும் . ஓகே … பட் பெரியப்பா , சித்தப்பா லாம் எப்படி ” நீது . 

 

   ” அது வேற யாரு . தூரத்து சொந்தம் பக்கத்து சொந்தம் லாம் சொத்து னா அலைஞ்சுட்டு வருமே அப்படி வந்தது தான் . ” பிரபஞ்சன் .

 

  ” ஓ… ” நீது . 

 

   ” ஒரு நாள் நாங்க குடும்பத்தோட வீட்டுல அனுஷியாவுக்கு 2வது பிறந்த நாள் கொண்டாடிட்டு இருந்தோம் . முதல் ல கருகுற வாடை வந்துச்சு . அப்புறம் என்ன னு பாக்க போனப்ப எங்க பனங்காடு பின்னாடி இருந்தது மொத்தமா தீஞ்சு போச்சு . . எங்க உசுரே எங்க பனங்காடு தான் . அதுல உள்ள ஒவ்வொரு மண்ணும் எங்க உயிருல கலந்தது . அதை அணைச்சு மிஞ்சியது சாம்பல் தான் ‌ . அது முடிச்சிட்டு வரும் ப எங்க வீடு இல்ல . ஒவ்வொண்ணா போச்சு . ஒரு குடிசை போட்டு அதுல தங்கி இருந்தோம் ‌ . நடுராத்திரி அந்த குடிசையும் எரிஞ்சு . காயங்களோடு அப்பா அம்மா எங்கள தப்பி ஓட வச்சாங்க ‌ . ஆனா அவங்க எங்கள விட்டுப் பிரிஞ்சுட்டாங்க 😢” பிரபஞ்சன் . 

 

    ” அது பண்ணியது அவங்க னு எங்களுக்கு தெரியும் . எங்க சொத்த ஆதிரன் அம்மா உதவியோடு கொஞ்சம் நாள் ல மீட்டோம் ‌ . நீலிக் கண்ணீர் வடிச்சு இங்க வந்து சேந்துட்டாங்க . ஆதிரன் அம்மா கிட்ட அவங்க பொண்ண எனக்கு கட்டி வைக்க வழி பார்த்தாங்க . ஆனா அம்மா என்ன கட்டாயப்படுத்தல . நான் உன்ன விரும்புகிறேன் னு தெரிஞ்சதும் உன்ன கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்ண ஆரம்பிச்சாங்க . கல்யாணம் ஆகும் நாள் மட்டும் இங்க இருக்கலாம் னு விதிமுறையோடு இங்க இவ்வளவு நாள் இருந்தாங்க . நேற்றே விரட்டிட்டோம் . அவங்களுக்கு நாங்க அதிக சொத்தோடு இருக்கோம் னு தெரியுமா … அவங்க பொண்ணு இருக்க வேண்டிய இடத்தில் நீ இருக்குற னு வஞ்சம் . இனி அவங்க இருக்க வேண்டிய இடம் ஜெயில் . அதுக்கான வழியை அம்மா ஏற்படுத்திட்டாங்க . வேலை முடிஞ்சு . ஆனா சில பிரச்சனை சில நேரங்கள் இங்க இருக்கும் . சோ கேர்ஃபுல் அ இருந்தா போதும் . அந்த பிரச்சனை வேற எதும் இல்லை . என் கூட தங்கச்சி னு பெயர் இரண்டு தர்பூசணி இருக்குல . அதுங்க தான் . உன்னோட உயிர கையில எடுக்காம இருந்தா சரி ” பிரபஞ்சன் . 

 

   நீதுவிடம் அமைதியே எஞ்சி இருக்க , ” இனி என்ன டவுட் ” பிரபஞ்சன் . 

 

   ” இல்ல அந்த ஐயர் உண்மையிலே ஐயர் தானா ” நீது . 

 

    ” ஏன் இந்த சந்தேகம் . ” பிரபஞ்சன் 

 

    ” சாதா கல்யாண நேரம் பேசுறது கரெக்டா பேசுனாரு . பட் என்கிட்ட அட்வைஸ் பண்ணும்போது ஐயர் பாஷையும் நம்ம பாஷையும் கலந்து பேசுனாரு . இண்ணைக்கு ஆதிரன் கிட்ட லோக்கல் பாஷை அச்சு அசலாக பேசுறாரு . அதான் …  ” நீது ‌ 

 

    ” அதுவா அவரு எங்க பெரியப்பா . அவரு நான் தான் உன்னோட கல்யாணத்துக்கு தாலி எடுத்துத் தருவேன் னு சொல்ல அவர ஐயரா மாத்தி விட்டோம் . எங்க குலதெய்வம் கோயில் ல போற்றியா இருக்குறாரு . சுத்தமா ஐயர் பாஷை வராது . மனப்பாடம் பண்ணி அடிக்கடி இதுபோல கல்யாணம் நடத்துவாரு  ” பிரபஞ்சன் .  

 

    ” ஓ… ஓகே ஓகே ” நீது .

 

    ” எனக்கு ஒரு சந்தேகம் . உங்க அம்மா அப்பா கூட காதல் திருமணம் பண்ணுனவங்க தான் . நான் போய் எல்லா விஷயமும் சொல்லி கேட்டதும் இரண்டு நாள் என்ன பத்தி விசாரிச்சு முடிச்சுட்டு கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாங்க . ஆனா நீ ஏன் கடைசி வர கல்யாண மாப்பிள்ளை ஃபோட்டோ னு குடுத்ததயும் பாக்கல . அண்ட் காதல் னு சொன்னாலே எட்டடி பாஞ்சு ஓடுன . கடைசி ல என்ன கண்டாலே பயந்து ஓடுன . ஆனா உன்னோட டையரி ல என்ன பத்தி வர்ணிச்சு எழுதி வச்சுருந்த . இதுக்கு என்ன ரீசன் ” பிரபஞ்சன் . 

 

     ” அது … ” நீது . 

 

தொடரும் … 

 

 

 

     

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்