Loading

             நீயின்றி நானில்லையே 👫

 

அத்தியாயம் – 2 

 

     பயணம் தொடங்கிட நீதுவிற்கு மனம் முழுக்க பிபினைக் கொண்டிருக்க பிரபஞ்சனை திருமணம் செய்வது தவறு என்று தன்போக்கில் எண்ணிக் கொண்டு இருந்தாள் ‌. கீர்த்திகா தூங்க ஆரம்பித்தாள் ‌. அடிக்கடி அனுஷியா நீதுவை ஓரக்கண்ணால் பார்த்து பிரபஞ்சனுக்கு செய்திகளை அனுப்பிக் கொண்டு இருந்தாள் . இடையில் உண்ண உணவை ஏற்கனவே கீர்த்திகா தயார்செய்து வைத்திருந்தாள் . அனுஷியாவிற்கு பிரபஞ்சன் ஏற்பாடு செய்தபடி அவனது நண்பனான விஜயன் மூலம் ஒரு ஸ்டேஷனில் உணவு கிடைத்தது . உண்டு விட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தாள் கீர்த்திகா .

 

    அரையும் குறையுமாக எதோ பேருக்குக் கொறித்து விட்டு திரும்ப ஜன்னலையே வெறித்துக் கொண்டிருந்தாள் நீது . அவர்கள் இறங்க வேண்டிய ஸ்டெஷன் வர நீதுவும் கீர்த்திகாவும் இறங்கினர் . மறு ஸ்டேஷனில் பிரபஞ்சன் அனுஷியாவை பிக்கப் செய்து கொண்டான் . 

 

    வீட்டிற்குப் போனதும் யாவரும் அவளை அழைத்துக் கொண்டு சென்னை நோக்கி விரைந்தனர் . கல்யாண பொண்ணு இப்படியா இருக்குறது என்று ஆளாளுக்கு கேட்க அனைவரிடமும் நீதுவின் தாய் பிரபஞ்சனின் பெயரால் வாயடைத்தார் . 

 

   ” இல்ல அத்தை அவளுக்கு இண்ணையோடு கடைசி பரிட்சை முடிஞ்சிடுச்சு . படிப்பு தான் பெண் பிள்ளைக்கு முடிச்சே ஆகணும் னு மாப்பிள்ளை தம்பி சொல்லிருச்சு . அடுத்த மாசம் தான் கல்யாணம் வைக்க இருந்தோம் . தம்பி இனி டெல்லி போகுதாம் . இந்த கொரோனா காலத்துல எது என்ன நடக்கும் னு சொல்ல முடியாது ல . அதான் இப்பயே டெல்லி போகுது புள்ள . அப்புறம் கல்யாணம் எப்ப நடக்கும் னு சொல்ல முடியாது னு இப்பயே மாப்பிள்ளை வீட்டுல சொல்லிட்டாங்க . அதான் . பிள்ள இந்த ஒரு வாரமாக தொடர்ந்து பரிச்சை எழுதிருச்சு . நாளு பூரா படிக்கும் ல பிள்ளைய . இதுல காலை ல இருந்தே ட்ராவல் வேற . இதுக்கிடையில இப்ப உடனே அடுத்து ட்ராவல் னு சொன்னா பிள்ளையும் என்ன தான் பண்ணும் ” என்று வாதாடிக் கொண்டிருந்தார் நீதுவின் தாய் கல்யாணி .

 

    நீதுவோ என்ன செய்ய என்று தெரியாது தனது மூளையைப் பிராண்டிக் கொண்டிருக்க பிபினின் மெயில் வந்தது . அதில் , ” நல்ல தோழியாய் இதுநாள் இருந்தமைக்கு நன்றி . ஒரு நல்ல கள்ளம் கபடமற்ற அழகியை மனைவியாகப் பெற்றுவிட்டேன் . உனது அறிவுரைகளுக்கும் நன்றி ‌. இதற்கு மேல் நம் நட்பு தொடர்ந்தால் ஒருவேளை என் மனைவிக்கு துரோகம் செய்வது போல் இருக்கலாம் . இதுவே என் கடைசி மெயில் ” என்று வந்தது . 

 

   இதற்கு மேல் ஒன்றும் இல்லை . என்னைச் சுற்றி சுற்றி வந்த அழகிய வாழ்வை நானே தூக்கி எறிந்தேன் . ஆனால் ஏன் வீணாய் போன கனவு இன்று வந்தது . நான் என் பாட்டிற்கு தானே இருந்தேன் என்று நொந்து கொண்டு இருந்தாள் . 

 

   விடியற்காலை போல அனைவரும் சென்னையை அடைந்தனர் . இன்றுவரை நீது மாப்பிள்ளையைப் பார்த்து இல்லை . மண்டபத்தில் பெரிதாக எந்த ஒரு அலங்காரமும் தொடங்கவில்லை . அறைக்குச் சென்று துக்கத்தில் தூங்கினாள் . தூங்கி எழுந்தவள் அங்கு கண்டது தன் தாயும் யாரோ மாப்பிளையின் சொந்தக்காரர்களும் நன்கு பேசுவதை . எங்கு பார்த்தாலும் தனது சொந்தங்கள் மாப்பிள்ளை வீட்டாரோடு குலாவிக் கொண்டு இருந்தனர் ‌. தன்னையே சமாதானம் செய்து தனது மண வாழ்விற்குத் தன்னைத் தயார் செய்தாள் ‌ . காலை உணவு உண்டு விட்டு திரும்ப தன் அறையிலே தஞ்சம் புகுந்தாள் . மாலை மங்கும் வேளை வரத் தொடங்க நிச்சத்திற்கான ஏற்பாடு நடக்க ஆரம்பித்தது . அனைவரும் அவளை அலங்கரிக்க அழகிய பதுமையாய் மாறி இருந்தாள் . கீர்த்திகா அவளுக்கு திருஷ்டி கழித்தே விட வெளியே வந்து பெற்றோரின் ஆசிர்வாதம் பெற்றாள் ‌ . 

 

    நிச்சயத்தைக் வேறு மண்டபத்தில் வைத்திருப்பதாகச் சொல்ல சரி என்று அங்கு கிளம்பினாள் . ஏன் எதற்கு என்று ஆயிரம் கேள்விகள் கேட்கும் தன் மகள் வாய் திறந்து பேசாது இருக்க கல்யாணி கீர்த்திகாவிடம் கண்ஜாடை காட்டி பேச பொறுத்துக் கொள்ள சொன்னாள் கீர்த்திகா . சரி என்று விட்டு அவரும் தன்பணியைக் கவனித்துக் கொண்டார் . மண்டபம் வர எதையும் கண்ணுயர்த்திப் பார்க்கும் படி நீது இல்லை . யாருக்கோ கல்யாணம் போல எதோ சிந்தனையில் இருந்தாள் . 

 

   நிச்சயம் செய்யும் போது மணமகள் பெயரில் ” நீது கிருஷ்ணா” என்று ஐயர் வாசித்து முடித்திட மணமகன் பெயரில் ” பிரபஞ்சன் ” என்று வாசிக்க ஒருமுறை அது ” பிபின் ” என்று வராதா என்று ஆசையாய் எதிர்பார்த்தாள் . 

 

   மணமகனின் பெற்றோராக தான் கனவில் கண்டவர் நிற்க பேயறைந்தது போல இருந்தது நீதுவிற்கு . திரும்பி மணமகனைப் பார்க்க கோட் பேன்ட் ல் அவளது மன்மதன் பிபினே நின்றான் . ஆச்சரியம் தாளாது கண்களில் அதிர்ச்சி உறைந்தவளாய் நின்றாள் நீது . 

 

   ” செல்லக்குட்டி ஷாக்கடிச்சு மாமா நெஞ்சுக்குள்ள ஒளியுற பழக்கம் இல்லையா ” என்று கண்ணடித்தவாறே கேட்டான் பிபின் எனப்படும் பிரபஞ்சன் . ஐயரின் பணி சிறப்பாக முடிய இளசுகளின் பணி இனிதே ஆரம்பமானது .

 

    பிரபஞ்சனின் அத்தை மகன் ஆதிரனும் நீதுவின் அண்ணன் நித்தியனும் சேர்ந்து மேடையிலிருந்து இருவரையும் கீழே தள்ளி விட்டனர் . சரியாக அதே சமயம் சமுத்திரா ஒரு பாட்டைப் போட்டு விட அனுஷியா கலர் லைட்களை ஆன் செய்தாள் . 

 

 

” அருகில் பக்கமா 

வர வெக்கமா 

அடி நில்லடி கண்ணம்மா 

சொல்லடி செல்லம்மா 

ஹே முணுமுணுக்குற முத்தம்மா

மனசில் என்ன சத்தம்மா

வெளிய அத சொல்லம்மா 

உசிரில் இங்க யுத்தமா

அடி கள்ளி நெஞ்ச கிள்ளி 

தள்ளி வைக்கலாமா “

 

    என்று பாடல் வர அங்கிருந்த இளசுகள் ஓ… வெனக் கத்தினர் . இதுதான் சாக்கு என்று பிரபஞ்சன் நீதுவைத் தூக்கிச் சுற்ற மண்டபம் அமர்களமானது . நினைவு வந்தவளாய் நீது கிருஷ்ணா பிரபஞ்சனோடு இணைந்து ஆடத் தொடங்கினாள் . கீர்த்திகா கண்களில் நிறைவோடு இதைப் பார்த்துக் கொண்டிருக்க ஒரு கரம் அவளைத் தள்ளி விட்டது . அது வேறு யாருமல்ல நித்தியனே . 

 

  வந்ததில் இருந்து ஆதிரனை கீர்த்திகா கண்கொட்டாமல் பார்ப்பது நடந்துகொண்டிருக்க இரவு யாருக்கும் தெரியாமல் அவனை படம் பிடித்துத் தன்னோடு வைத்துக் கொண்டாள் ‌ . இவற்றைப் பிரபஞ்சன் பார்த்துக் கொண்டிருக்க ஆதிரன் கீர்த்திகாவை அறியாமல் கண்ணில் கண்ணாடி போட்டு அவளை சைட் அடிப்பதை நித்தியன் பார்க்க இருவரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டதோடு இரவோடு இரவாக இரு வீட்டிலும் பேசி சம்மதம் பெற்றுக் கொண்டனர் . இருவரையும் நடுவில் தள்ளி விட பயத்தை மீறி கீர்த்தியின் வெட்கத்தில் ஆதிரன் தன்னைத் தொலைத்து அவள் கையைப் பிடிக்க சமுத்திரா 

 

 

  ” நான் சாயும் தோள்மேல் 

வேறொரு தோள் சாய்ந்தாலே தகுமா … ” 

 

   என்ற பாடலைப் போட்டு விட அனுஷியா வழக்கம் போல கலர் லைட்டில் குளிர்விக்க ஆரம்பித்தாள் . ஆயினும் கீர்த்திகா தயங்கியபடி தன் தாயை நோக்க பிரபஞ்சன் அவள் காதுகளில் வந்து , ” இரண்டு வீட்டுலயும் நேத்தே சம்மதம் வாங்கியாச்சு . வந்து என்ஜாய் பண்ணு டா ” என்று சொல்லிச் சிரித்தபடி சென்றான் . இனி கேட்கவா வேண்டும் . அவள் ஆட வர அடுத்த பாட்டாக சமுத்திரா 

 

” உன் கைகள் கோர்க்காமல் 

பயணங்கள் கிடையாது ” 

 

     என்றப் பாடலைப் போட்டுவிட மண்டபத்தின் சப்தங்கள் வானத்தைக் கிழித்துக் கொண்டு செல்வது போல இருந்தது . 

 

இளசுகளின் ஆட்டம் தீர பின்னர் அங்கேயே ஆகிரன் மற்றும் கீர்த்திகாவிற்கு நிச்சயம் செய்யப்பட்டது . பல கனவுகளோடு மறுநாளை நோக்கி இருந்தனர் . அறைக்கு வந்த பின்னரே பிரபஞ்சன் என்று அனைவரும் பிபினை அழைப்பது நினைவு வர எழுந்து சென்று கேட்க போக இருந்த நீதுவை அவளது தாய் அடக்கி இருத்த வேறு வழியற்று குழப்பத்தோடும் சந்தோஷத்தோடும் தூங்கினாள் நீது கிருஷ்ணா .

     

    விடியலை எதிர்நோக்கி பரவசமாக உறங்கினாள் நீது . பிரபஞ்சன் பரவசமாக இருந்தாலும் பெரிதாக வெளியே காட்டிக் கொள்ளவில்லை . தன் போக்கில் ஆதிரனோடு பேசியும் அவனைக் கலாய்த்துக் கொண்டும் இருந்தான் . 

 

      ஆதிரனுக்கு நிச்சயம் முடிந்த பின்னும் திருமண தேதி பின்னரே வைத்தனர் . அடுத்த வருடம் போதும் என்று ஆதிரனும் கீர்த்திகாவும் கேட்டுக் கொண்டபடியினால் திருமணம் தள்ளி வைக்கப்பட்டது ‌ . ஒழுங்காகத் தன்போக்கில் தூங்கிக் கொண்டிருந்த கீர்த்திகாவை அலற வைத்தல் குளிப்பாட்டல் போன்ற நல்ல காரியங்களைச் செவ்வனே செய்து கொண்டிருந்தனர் அனுஷியாவும் சமுத்திராவும் ‌ . 😌

 

     பல அடாவடித்தனங்களோடு காலை விடிந்தது . வெய்யோன் தன் ஆட்சியைக் காலை 6.00 மணிக்குத் தொடங்கினாலும் அந்தச் சென்னை மாநகர் அதிகாலை 3.00 மணிக்கே சற்றுப் பரபரப்பாகத் தான் இருந்தது . முந்தைய நாளின் அலங்காரங்கள் அனைத்தும் மாற்றப்பட்டு தமிழக பாரம்பரிய முறையில் அழகின் ஸ்வரமாக அலங்காரங்கள் ஏற்பாடாகி இருந்தது . நேற்றைய தினம் இருந்த செயற்கைத் தன்மை மறைந்து பாரம்பரியம் மிளிர்ந்தது ‌. 

 

     அதிக சந்தோஷத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நீது 4.00 மணிக்கே எழுந்து வந்திருந்தாள் . இதைக் கண்ட அனைவருக்கும் ஆச்சர்யமே . அவளை அடித்து உருட்டி தண்ணீர் தெளித்து ஊரில் உள்ள மொத்த இடிகளை இறக்கினாலும் அவள் நேரமே எழும் நேரம் என்பது 7.00 மணி தான் . சில நேரங்கள் இவளை தூக்கி எடுத்து காரில் கொண்டு செல்வதும் உண்டு . இன்று 4 . 00 மணிக்கே எழுந்தால் ஆச்சரியம் வராதா என்ன 😂 🤭 .

 

      ” வா வா உன்ன எப்படி எழுப்புறது னு யோசிச்சுட்டே இருந்தேன் . நீயே வந்துட்ட . வந்து பல்லு விளக்கிட்டு இந்தா இந்த காப்பிய குடி . அடுத்து சில சம்பிரதாயங்கள் எல்லாம் இருக்கு . மாப்பிள்ளை தம்பியோட அம்மா கொஞ்சம் நேரத்தில் வந்துடுவாங்க . ” என்றார் கல்யாணி .‌

 

       ” சரி ம்மா ” நல்லப் பிள்ளையாகச் சொல்லி விட்டு உள்ளே சென்றாள் நீது . கீர்த்திகா வாயைப் பிளக்க ” க்ளோஸ் தி டோர் ( Close the door ) ” என்று விட்டு சென்றாள் நீது . 😌 

 

      உள்ளே சென்று தன் சுயகடமைகளை முடித்து விட்டு வந்து தன் அம்மாவிடம் இருந்து காப்பியை வாங்கிக் குடித்தபடி இருந்தாள் ‌ . கீர்த்திகா அவளோடு இல்லாமல் நீங்கி வெளியே சுற்றிக் கொண்டு இருந்தாள் . நீதுவிற்கு நன்கு புரிந்தது . 

 

     ” இந்த கீரைக்கு ( கீர்த்திகா ) எல்லாம் தெரிஞ்சும் கள்ளி ஒண்ணும் சொல்லாம இருந்துருக்கா . கூட்டுக் களவாணி 😪 ” என்று புலம்பிக் கொண்டே இருந்தாள் நீது . 

 

    ‌ இப்படியிருக்க பிரபஞ்சனின் தாய் வந்து செய்ய வேண்டிய சடங்கு செய்துவிட்டு திருஷ்டி கழித்து விட்டுச் சென்றார் . 

 

     அனைவருக்கும் அடுத்த சில மணிநேரங்களில் மணமேடையில் சுழன்று கொண்டிருந்தனர் . ஐயர் ஓயாமல் மந்திரம் ஓத நமது இளசுகள் ரீங்காரம் போல ட்யூன் போட்டு ஓட்டிக் கொண்டிருந்தது .

 

     பல சுற்றுகளுக்குப் பிறகு ஐயர் ” பொண்ணு மாப்பிளைய அழைச்சுட்டு வாங்கோ ” என்று கூற , ” இப்பயாச்சும் கூப்பிட்டீழே ஐயரே ” என்று வடிவேல் போல நகைத்துக் கொண்டான் ஆதிரன் . 

 

     ” ஏன்பா உன் கல்யாண சம்ப்ரதாயமும் நான் தானே பண்ணி வைக்கணும் . நோக்கு பேஷா பண்ணிடுறேன் . இரு ஜாதகத்துல கோளாறு னு உங்க வீட்டாள்கிட்ட சொல்லி வைக்கிறேன் . எப்படி வசதி . ” என்று ஐயர் கூற ஆதிரன் அவரது காலில் விழுந்து , ” ஐயரே அப்படி ஒண்ணும் செஞ்சிடாதேள் . மீ பாவம் இல்லையா . உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு என்ன மன்னிச்சு விடறது ” 

 

    ” அச்சச்சோ என் வீட்டுப் பிள்ளை அ இருந்தா இந்த வேலை பண்ணுறதுக்கு கல்யாண நாணையே தொட விட மாட்டேன் ” ஐயர் 

 

    ” சாமி . விடுங்கோ . பாவம் பிள்ளைய பீதிய கிளப்பாதீங்கோ . அவனே 29 ல நரை விழுந்த பிறகு கல்யாணம் னு யோசிச்சுண்டு இருக்கான் ” என்று சமுத்திரா அவனை வாரி விட , ” விளையாட்டு பிள்ளை ” என்று சிரித்தபடியே கூறினார் ஐயர் . 

 

     ஆடி அசைந்து பிரபஞ்சன் வந்து சேர 🤭 நீது ஒற்றை நிமிடத்தில் வந்து சேர்ந்தாள் . 

 

     ஐயரின் மந்திர உச்சரிப்பில் பிரபஞ்சன் நீதுவின் கழுத்தில் மங்கள நாணாம் தாலியைக் கட்டி அவன் வலிய கரங்களால் நீதுவை கோழி தன் குஞ்சை இறக்கையில் அணைத்து காப்பது போலே அணைத்துக் கொண்டான் . பின்னர் நெற்றியில் குங்குமம் வைத்து தன்னுள் பாதியாக்கிக் கொண்டான் . 

 

     அந்த நிமிடம் வந்த உற்சாகத்திற்கு உலகையே வென்றிடலாம் என்பது போன்று இருந்தது நீதுவிற்கு . கண்களைச் சுழற்றித் தன் பெற்றோர் மற்றும் கீர்த்திகாவைத் தேட கீர்த்திகாவும் அவள் குடும்பமும் நீதுவின் பெற்றோரும் ஒரு ஓரமாய் நின்றுகொண்டிருந்தனர் . நீதுவிற்கு ஒரு மாதிரியாக இருக்க அவள் திரும்பி பிரபஞ்சனைப் பார்க்க அவன் மணமேடையிலே இல்லை . அதிர்ந்து போனாள் . ஒவ்வொரு இடமாகத் தேட அவன் நீது மற்றும் கீர்த்தியின் குடும்பத்தாரோடு எதோ பேசி சம்மதம் தெரிவிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தான் . 

 

   அனுஷியா ஓடி வந்து ” அண்ணி அண்ணா உங்க அம்மாக்களையும் அப்பாக்களையும் மேடைல கூட்டிட்டு வர போயிருக்கான் . அண்ட் உங்க அண்ணா அதா அந்த ஆதிரன் கூட கும்மியடிச்சுட்டு இருக்காரு . ” என்றிட நிறைவாய் அமர்ந்தாள் . சில நிமிடங்களில் அவள் குடும்பத்தோடு மேடைக்கு வந்தான் பிரபஞ்சன் . அவளைப் பார்த்து கண்சிமிட்டி அவளை அணைத்தபடி அமர நம்ம இளசுகள் ஓ… என்று கூவினர் . 

 

       அப்பொழுது தான் நீது ஒரு விஷயத்தைக் கவனித்தாள் . மேடையின் எதிர்ப்புறம் ஒரு கும்பல் இவளை விட்டால் எரித்துவிடுவது போல நின்றுகொண்டிருந்தது . மறுபுறம் ஒரு கும்பல் சந்தோஷமாக அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது . காரணம் புரியாமல் இருக்க , ” கண்ணு , கண்டவங்கள எல்லாம் எதுக்குப் பாத்துண்டு இருக்குற . நம்ம நல்லா இருக்கணும் னு நினைக்குறது ஒரு சிலரானாலும் அவங்க நம்ம வாழ்க்கைக்குப் போதும் . புரிஞ்சுதா . அங்க பாரு. ஒரு கும்பல் கண்ணுல சந்தோஷத்தோடு நீ அவங்க கிட்ட பேசுவியா னு தெரியாம முழிச்சுட்டு ஆனா நீ நல்லா இருக்கணும் னு இறைவனை வேண்டிட்டு இருக்காங்க . அவங்க முகத்தைப் பாரு ‌ . நீ நல்லா இருப்ப ” என்றார் ஐயர் . அவரைப் பார்த்து சிநேகமாக சிரித்தாள் நீது . 

 

      ” உனக்கு மனசுல நிறைய கேள்விகள் இருக்கு . எல்லாத்தையும் பத்திரமா வச்சுக்க . நாளைக்குக் காலைல சொல்லுறேன் . 👍 ” என்றான் பிரபஞ்சன். அங்கிருந்து கிளம்பி சாப்பாட்டை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து சம்பிரதாயங்கள் நடக்க அதிலே அன்று முழுவதும் நிறைந்தது . 

 

    இரவு நேரத்தில் சாந்தி முகூர்த்தம் குறித்திட பாலோடு பிரபஞ்சனின் அறையில் நுழைந்தாள் . அவனோ பப்பரபே என்று நன்கு குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தான் . 

 

” அடப்பாவி. இதுக்கு ஏன் டா மனுஷிய கஷ்டப்பட்டு இந்த பட்டு சேலையக் கட்ட வச்ச 🙆 எல்லாம் என் நேரம் . ” என்று புலம்பிய படி யாரையும் அறியாமல் அவள் அறையில் நுழைந்து சேலையைக் கழட்டி விட்டு ஒரு நைட்டியை அணிந்து விட்டு வந்தாள் . உள்ளே வந்து பார்த்தால் பால் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது . செம்பு காலியாகி இருக்க ‘ என்னடா நடக்குது இங்க 🙄 ‘ என்று நினைத்துக் கொண்டு நிற்க அவளது பின்னால் ஒரு சப்தம் கேட்டது ‌ . ” எவ்வளவு நேரம் இப்படியே நிக்குறதா உத்தேசம் செல்லக் குட்டி ” என்ற படி வந்து பின்னிருந்து நீதுவை அணைத்துக் கொண்டான் பிரபஞ்சன் . ” இதுக்கு மேல நோ வாய் பேச்சு . கம் இன் டு ஆக்ஷன் . கமான் கமான் . ” என்றபடி கண்சிமிட்ட நீதுவின் முகம் சிவந்து விட்டது . மௌனத்தை சம்மதமாய் எடுத்துக் கொண்டு தன் தாரகையின் மீது படர , ” வெயிட் நீது ” என்றான் . என்ன என்பது போல் பார்கக , ” ஒன் மின்ட் ” என்றான் . 

 

[ ” ஹேய் என்ன எங்க ரூம் ல பாக்குறீங்க . டோன்ட் யூ ஹேவ் சென்ஸ் . கெட் அவுட் ” பிரபஞ்சன் . 

 

      ” இது வேற யாருக்கும் இல்ல‌ மக்களே . நமக்குத் தான் . இதுக்கு மேல நாம இங்க நிக்குறது மரியாதையா இல்ல . நாளைக்கு காலை ல இவங்கள நாம பாக்க வரலாம் . வாங்க போவோம் . பை பை பிரபஞ்சா அண்ட் நீது . ஹேப்பி லைஃப் ” மீ 

 

      ” சீக்கிரம் போயேன் மா 🙆 ” பிரபஞ்சன் 

 

       ” ஓகே ஓகே பை பை ” ] 

 

ங்க சந்தோஷமா வாழ்க்கையை ஆரம்பிக்குறாங்க . கிளம்பிட்டு அடுத்த எபிசோட் ல அவங்கள நாம் பாக்கலாம் … 👋👋👋 . 

 

 

 

எழிலுற்றிடும் வாழ்க்கை … 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்