Loading

கடம்பம்பட்டி கிரமத்தை சேர்ந்த ராஜன் தான் அந்த ஊரின் பண்ணையார்.

 

அவரின் பல ஏக்கர் தோட்டங்களை தலைமுறை தலைமுறையாய் பாதுகாத்து வந்தவர்கள் தான் வீரபாண்டி குடும்பந்தினர்.

 

என்னதான் வீரபாண்டி குடும்பத்தினர் தோட்டத்தை பராமரித்து வந்தாலும் பாதுகாப்பு என்று வரும் போது ராஜன் நம்புவது நாய்களை தான். ஆனால் அந்த நாய்களை வளர்த்து வந்தது வீரபாண்டி குடும்பத்தினர்.

 

வீரபாண்டி குடும்பத்தில் தற்போது பண்ணையை பாதுகாத்து வருவது வீரபாண்டியின் மகன் வேலுவும் அவரது 20 வயது மகன் முருகனும் தான்.

 

முருகன் தான் பாதுகாப்பு நாய்களான செவளைக்கு கடம்பனுக்கும் பொறுப்பு. முருகன் செவளையையும் கடம்பனையும் தன் செந்த தம்பிகளாக வளர்த்து வந்தான்.

 

அன்று முருகன் செவளை மற்றும் கடம்பனை வெளியே அழைத்து சென்றான். அப்போது அவ்வழியே வந்த முத்து சும்மா இருக்காமல் கடம்பனை வெறுப்பேற்ற, கடம்பன் முத்துவை துரத்தியது.

 

கடுப்பான முத்து கடம்பனை நோக்கி கல்லை எடுத்து வீச, ‘என் தம்பி மேலயே கல்ல வீசுறீயா உன்ன நான் சும்மா விடமாட்டேண்டா’ என முருகன் முத்துவை தன் கையில் இருந்த கம்பை வைத்து தாக்கினான்.

 

அதில் காயமடைந்த முத்து காவல் நிலையத்தில் முருகன் மீதும் கடம்பன் மீதும் புகார் கொடுத்துள்ளார்.

 

காவல் நிலையத்தில் புகார் அளித்த முத்து கடம்பனை வெறுப்பேற்றும் போது அதுவும் ஒரு உயிர் தான் என்பதை மறந்து விட்டு, முருகன் தாக்கியதும், கடம்பன் மீதும் புகார் கொடுக்கும் போது நியாபகம் வந்தது நியாயம் தானா! 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்