அன்று ஞாயிற்றுக்கிழமை.
ப்ரேம், ஜனனி திருமணம் நடந்து ஒரு வாரம் முடிந்திருந்தது.
திருமணத்திற்கு பிறகான சடங்குகள் அனைத்தும் முடிவடைந்திருந்தது.
இன்னும் ஊருக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த படி மொபைலில் ஹெட்செட் அடித்து பாட்டு கேட்டுக் கொண்டிருந்த நித்ய யுவனியின் கவனத்தை ஒரு கார் ஹார்ன் சிதறடித்தது.
சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த வசந்தி, “யுவனிம்மா… ரொம்ப நேரமா வீட்டு முன்னாடி யாரோ ஹார்ன் அடிக்கிறாங்கம்மா.. போய் யாருன்னு பாரு..” என்க,
ஒரு காதிலிருந்த ஹெட்செட்டை கழற்றிய படி சென்று கதவை திறந்தவள்,
“ஹேய் சித்து.. என்னப்பா சொல்லாம கொல்லாம வந்திருக்காய்.. நீ கால் பண்ணப்ப கூட எதுவும் சொல்லலயே…” என்க,
“நிது… நீ ரெடி ஆகி கூட இல்ல.. ஜனனி அப்போ உன் கிட்ட எதுவும் சொல்லல்ல போல.. மோர்னிங் கால் பண்ணி பன்னண்டு மணிக்கு உன்ன கூட்டிக்கிட்டு க்ரீன் ஹில் ரெஸ்டூரன்ட் வர சொன்னா..” என சித்தார்த் கூற,
“ஓஹ்.. அவ என் கிட்ட எதுவும் சொல்லலயே.. சரி சித்து நீ வெய்ட் பண்ணு.. நா ஃபிப்டீன் மினிட்ல ரெடி ஆகிட்டு வரேன்…” என்றவள் கிச்சனை நோக்கி “மா…. சித்து வந்திருக்கான்.. அவனுக்கு ஏதாச்சும் குடிக்க குடுங்கம்மா..” என்றவாறே தயாராக சென்றாள்.
அவள் சென்றதும் வசந்தி சித்தார்த்திற்கு கூல் ட்ரிங்க் கொண்டு வந்து கொடுக்க அதை அவன் நன்றி கூறி பெற்றுக் கொண்டு குடித்தான்.
அவன் குடித்து முடியும் வரை அமைதியாக இருந்த வசந்தி பின் மெதுவாக பேச்சைக் கொடுத்தார்.
“ஆமா சித்தார்த் கண்ணா.. உன்னோட அப்பாம்மா எல்லாரும் என்ன பண்ணுறாங்க.. நீ மட்டும் தான் வீட்டுக்கு ஒரே புள்ளயா..” என வசந்தி கேட்க சித்தார்த்,
“அப்பா கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வெச்சி இருக்காரு.. அம்மா ஹௌஸ் வைப்.. அப்புறம் எனக்கு ஒரு தங்கச்சி.. பேரு காயத்ரி.. நிது கூட தான் படிச்சா காலேஜ்ல.. இங்க சென்னைல தான் அப்பொய்ன்மன்ட் கிடைச்சிருக்கு… நியுட்ரிஷனிஸ்ட்..” என குடும்ப தகவல்கள் கூறிக் கொண்டிருக்கும் போதே நித்யா தயாராகி வந்தாள்.
அவள் வந்ததும் சித்தார்த் எழுந்து கொள்ள நித்யா,
“சரிம்மா ஜெனி எதுக்கோ கூப்பிட்டிருக்கா.. நாங்க போய்ட்டு வரோம்.. நீங்க எனக்காக வெய்ட் பண்ணாதீங்க.. கரெக்ட் டைமுக்கு சாப்டுங்க.. அப்பா வந்தா சொல்லிருங்க..” என்ற படி கிளம்ப,
“2 பேரும் பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க.. யுவனிம்மா திருப்ப எங்கயாச்சும் விழுந்து காயப்படுத்திக்காதே.. கைல இருக்குற காயம் கூட இன்னும் ஆறல.. கண்ணா வீட்டுல எல்லோரையும் கேட்டதா சொல்லு.. ஒரு நாளைக்கு எல்லாரையும் வீட்டுக்கு கூட்டி வாப்பா..” என வசந்தி கூற,
“கண்டிப்பா ஆன்ட்டி..நாங்க கிளம்புறோம்..” என சித்தார்த்தும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினான்.
GREEN HILL RESTAURANT என பெயரிடப்பட்ட அந்த உயர் ரக ரெஸ்டூரன்ட்டில் பேமிலி செக்ஷனில் புக் செய்யப்பட்ட மேசையை சுற்றி அனைவரும் அமர்ந்திருக்க சஜீவ்வோ ப்ரேமை முறைத்தவாறு இருந்தான்.
அவன் முறைப்பை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் ஜனனியுடன் மும்முரமாக பேசிக்கொண்டிருந்தான் ப்ரேம்.
பொறுமை அனைத்தும் இழந்தவனாக சஜீவ், “டேய் ஹரி… நீ தானே இவன் கூப்டான்னு என்ன இழுத்துட்டு வந்தாய்.. இப்போ எதுக்கு வர சொன்னன்னு கூட சொல்லாம அவன் பொண்டாட்டிய கொஞ்சிட்டு இருக்கான்.. இத பாக்கத் தான் அவ்வளவு அவசரமா இழுத்துட்டு வந்தியா..” என ப்ரேமை அர்ச்சித்தவாறு ஹரிஷிடம் கேட்க,
அவனோ எப்போதோ அவன் வேலையைத் தொடங்கியிருந்தான்.(அதாங்க.. திவ்யாவ சைட் அடிக்கிறது..)
அனைவரும் இவன் சொல்வதை காதிற்கே எடுக்காதவாறு ஜோடி ஜோடியாக கதை அளந்து கொண்டிருந்தனர்.
அஞ்சலியோ மொபைலில் ஏதோ தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
கோபமாக வெளியே செல்ல எழுந்து ஒரு அடி எடுத்து வைத்த சஜீவ் அப்போது தான் ரெஸ்டூரன்ட் வாசலில் சிரித்த முகமாக யாருடனோ பேசியவாறு வந்து கொண்டிருந்த நித்யாவை கண்டவன் முகத்தில் புன்னகையுடன் சடன் ப்ரேக் போட்டு நின்றான்.
நித்யாவின் பின்னே பேசியவாறு வந்த சித்தார்த்தைக் கண்டவன் முகம் மீண்டும் இறுகியது.
அவன் பார்வை செல்லும் இடத்தை கவனித்த ப்ரேம், “இதோ..முக்கியமானவங்களே வந்துட்டாங்க..” என்க அவ்விடம் வந்த நித்யா,
“ஹாய் காய்ஸ்… என்ன எல்லாருமே இருக்கீங்க.. எனக்காக தான் வெய்ட்டிங்கா..சாரி கொஞ்சம் லேட் ஆகிடுச்சி..” என்க அவள் தலையில் நங்.. என்று குட்டிய சித்தார்த்,
“நீ கொஞ்சமாவா லேட் ஆனாய் நிது.. நான் வந்து எவ்வளவு நேரமா உனக்காக வெயிட் பண்ணேன்.. மேடம் நல்லா மேக்கப் போட டைம் எடுத்துட்டு கொஞ்சம் லேட் ஆகிடுச்சாம்.. இந்த கொடுமையை நீயே கேளு ஜனனி..” எனக் கூறி ஹரிஷுடன் ஹைபை போட,
அவன் மண்டையில் இரு தடவை குட்டி பழி தீர்த்துக் கொண்டாள் நித்யா.
“சரி சரி எல்லோரும் உக்காருங்க.. ஃபர்ஸ்ட் உங்களுக்கு பிடிச்சத்த ஓடர் பண்ணுங்க..” என ப்ரேம் கூறி முடிக்க முன்னே ஒரு வாரம் பட்டினி கிடந்தது போல் நான் நீ என மாற்றி மாற்றி சண்டை பிடித்துக் கொண்டு ஓடர் செய்தனர்.
ஓடர் செய்த உணவுகள் வர அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க ஆரவ்,
“சரி மச்சி.. இப்போ சொல்லு எதுக்காக சடனா இந்த பார்ட்டி..” என ப்ரேமை பார்த்து கேட்க,
“நாங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ரத்துக்கு முக்கிய காரணம் நித்துவும் சஜீவ் அண்ணாவும் தான்.. சோ அவங்களுக்காக தான் இந்த பார்ட்டி..” என ஜனனி பதிலளிக்க உண்பதை நிறுத்திய நித்யா சஜீவ்வை பார்க்க அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளின் அந்த பார்வை என்ன கூறுகிறது என யாரும் அறியார்.
அதன் அர்த்தம் அவள் ஒருத்தியே அறிவாள்.
ஹரிஷின் குரலிலே அவர்களது பார்வை கலைந்தது.
“என்னடா சொல்றாய்.. இவங்க எப்படி நீங்க சேர்ரத்துக்கு காரணமா இருப்பாங்க.. சஜீவ் ஃபாரின்ல இருந்தான். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் இந்தியா வந்தான்.. நானும் அவன் கூட தான் இருந்தேன்.. யுவனி பேங்களுர்ல இருந்தாள்.. அவ கூட அஞ்சி வருஷமா சென்னை வரலன்னு சொன்னீங்க.. அப்புறம் எப்படி..” என ஏதோ புரிந்தும் புரியாததுமாய் ஹரிஷ் வினவ திவ்யா அவன் காதிற்கு அருகில் சென்று,
” அத பத்தி நான் உங்களுக்கு அப்புறம் சொல்றேன் ரிஷி..இப்போ வேற எதுவும் கேக்காதீங்க..” என்க,
தன்னிடம் திவ்யா நேரடியாக பேச மாட்டாளா என ஏங்கிக் கொண்டிருந்த ஹரிஷிற்கு அவள் பேசியது மட்டுமன்றி அவள் தனிப்பட்ட முறையில் வித்தியாசமாக ரிஷி என்று அழைக்கவும் அனைத்தும் மறந்தான்.
உடனே அவள் நம்பரையும் கேட்டு தெரிந்து கொண்டான்.
அதன் பிறகு அனைவரும் சாதாரணமாக பேசிக்கொள்ள நித்யாவும் சஜீவ்வும் ஒரு வார்த்தை பேசாது அமைதியாக சாப்பிட்டனர்.
சித்தார்த்தும் அஞ்சலியும் அவர்களது காலேஜ் கதை பேசிக்கொண்டிருந்தனர்.
அந்த சில மணி நேரத்தில் இருவரும் நல்ல நண்பர்கள் ஆகினர்.
சாப்பிட்டு முடித்த நித்யா எழுந்து கொள்ள, “ஹேய் நித்தி.. ஏன் எந்திரிச்சிட்டாய்.. ஐஸ் க்ரீம் கூட சாப்டல.. உன்னோட ஃபேவரிட் சாக்கலேட் ஃப்ளேவர் மா..” என ஆரவ் கூற நித்யா புன்னகைத்தவாறு,
“இல்ல ஆருண்ணா… அம்மா ரொம்ப நேரமா கால் பண்ணுறாங்க.. நான் கிளம்புறேன்.. தேங்க்ஸ் ஜெனி.. தேங்க்ஸ் ப்ரேம்ணா.. என்ட் ஆருண்ணா எனக்கு நெறய விஷயம் முன்னாடி ரொம்பவே பிடிச்சி இருந்திச்சு.. பட் எப்போதுமே ஒரே மாதிரி இருக்க முடியாதே.. காலத்துக்கு ஏத்த மாதிரி நாமலும் மாறனும்.. முன்னாடி பிடிச்ச விஷயம் எதுவுமே இப்போ சுத்தமா பிடிக்கல.. ஐ ஹேட் தெம்…” என்று கூறி ஒரு புன்னகையை தந்து விட்டு அங்கிருந்து சென்றாள்.
அவள் என்ன கூறி விட்டு செல்கிறாள் என அனைவரும் புரியாமல் விளிக்க சஜீவ்விற்கு மட்டும் அதன் அர்த்தம் தெளிவாகப் புரிந்தது.
அவள் சென்றதும் சித்தார்த்தும் எழுந்து, “ஓக்கே காய்ஸ்.. ஐ மே லீவ் நவ்…நிதுவ நான் தான் ட்ராப் பண்ணனும்.. தேங்க்ஸ் ப்ரேம் ப்ரோ என்ட் ஜனனி ஃபார் தி பார்ட்டி..” என்று விட்டு வெளியேறினான்.
சஜீவ் இறுகிய முகத்துடன் சித்தார்த் செல்லும் வழியை வெறித்தான்.
❤️❤️❤️❤️❤️
– Nuha Maryam –
இவங்க வாழ்க்கையில்லே என்ன தான் பா நடந்திச்சு. நித்தி சஜீவேரொம்ப தான் முறைச்சுக்குறா🤭🤭🤭 பாவம் அவன்.
Adhu romba periya kadha sis 🙊