பல வருடங்கள் கழித்து சந்தித்துக் கொண்ட இருவரின் மனதிலும் மாறுபட்ட உணர்ச்சிகள்.
ஆறடி உயரம்.. ஜிம் செய்து வலிமை பெற்ற உடம்பு.. ட்ரிம் செய்யப்பட்ட தாடி.. டெனிம் மற்றும் கரு நீல முழுக்கை ஷேர்ட் அணிந்து மடித்து விடப்பட்டிருக்க, அதிலிருந்து வெளிப்பட்ட முறுக்கேறிய புஜங்கள் என சஜீவ்வை ஆணழகனாகவே காட்டியது.
தன்னை மறந்து அவனை நித்யாவின் காதல் கொண்ட மனம் இரசித்துக்கொண்டிருக்க பட்டென அவள் மூளை எச்சரிக்கை மணி அடித்தது.
இத்தனை வருடமும் கடினப்பட்டு மறக்க முயற்சி செய்த சம்பவங்கள் அவள் முன் நிழலாடின.
அவள் செவிகளில்,“எனக்கும் உனக்கும் எப்போதுமே செட் ஆகல நித்யா.. இப்படி ஒரு லைஃப் எனக்கு வேணாம்.. என்னோட அம்மாவோட பேச்சை என்னால தட்ட முடியாது.. அவங்களை கஷ்டப்படுத்தி கிடைக்கிற எதுவும் எனக்கு அவசியமில்லை.. இத்தோட எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்.. இனி நமக்குள்ள எதுவும் இல்ல.. எந்த நிலைமையிலும் இனி என்னோட பேச முயற்சி பண்ணாதே… ஸ்டே அவே ஃப்ரம் மை லைஃப் மிஸ். நித்ய யுவனி.. பாய்…” என்ற வார்த்தைகளே ஒலித்தன.
இதயத்தில் சுருக் என ஏதோ தைத்தது போல் உணர சட்டென அவனிடமிருந்து தன் பார்வையைப் பிரித்துக் கொண்டாள்.
நித்யாவின் முக மாற்றத்தைக் கண்ட சஜீவ் தான் செய்த தவறின் பலன் தான் இது என மனதைத் தேற்றிக்கொண்டான்.
அதற்குள் ஜனனி சித்தார்த் பற்றிய அறிமுகத்தை முடித்திருந்தாள்.
நித்யா, “ப்ரேம்ணா… ஆருண்ணா… எப்படி இருக்கீங்க ரெண்டு பேரும்.. ஆமா இவர் யாரு..” என ஹரிஷை காட்டி கேட்க,
“ப்ரீ.. டாக்டர் மேடம்க்கு சும்மா இருக்க சொல்லு.. அவங்க தான் இப்போ ரொம்ப பெரியவங்க ஆகிட்டாங்களே.. இவ்வளவு நாள் இந்த பாசமெல்லாம் எங்க போச்சாம்..?” என்ற ஆரவ்வின் கோபமான பேச்சில் நித்யாவின் முகம் சுருங்கியது.
“அவன் கிடக்கிறான் விடு மா நித்தி.. நாங்க நல்லா இருக்கோம்.. நீ தான் ரொம்ப மாறிட்ட போல.. அப்புறம் இவன் ஹரிஷ்.. எப்ரோட்ல இருந்து கொஞ்சம் நாள் முன்னாடி தான் வந்தான்.. அதனால தான் உனக்கு தெரியல.. இவன பத்தி வேறு ஏதாச்சும் தெரியனும்னா நம்ம திவ்யா கிட்ட கேளு…” என கூறி ப்ரேம் சிரிக்க, திவ்யா அண்ணா… என சினுங்கினாள்.
பிறகு ஒருவருக்கொருவர் நல விசாரிப்புகள் நடக்க ஆரவ்வும் சமாதானம் ஆகி இருந்தான்.
இதற்கிடையில் ஹரிஷ் ப்ரேம் காதில், “மச்சான் யுவனி நம்ம எல்லோருக் கூடவும் நல்லா பேசுறா.. பழகுறா.. பட் நானும் அந்த பொண்ணு வந்த நேரத்துல இருந்து பார்க்குறேன்.. நம்ம சர்வேஷ கண்டுக்க கூட மாட்டேங்குறா.. அவனும் மூஞ்ச தொங்கப் போட்டுட்டு இருக்கான்.. ஆரவ் வேற அவ கூட ரொம்ப உரிமையா சண்டை போடுறான்.. என்னடா மச்சான் நடக்குது இங்க…” என கிசுகிசுக்க,
“ஹரி..நீ இங்க இல்லாத இந்த சில வருஷத்துக்குள்ள இங்க என்னென்னவோ நடந்துச்சிடா.. நான் அப்புறம் உனக்கு எல்லாம் விளக்கமா சொல்றேன்..” என பதிலளித்தான் ப்ரேம்.
இங்கு நம் நாயகனோ தன்னவள் தன்னிடம் ஒரு வார்த்தையாவது பேச மாட்டாளா என ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் நித்யாவோ மறந்தும் அவன் பக்கம் திரும்பவில்லை.
தன்னை யாரோ உற்று நோக்கிக் கொண்டிருக்க அது யாரென புரிந்தும் சாதாரணமாக இருக்க போராடிய நித்யாவின் முயற்சி தோல்வியில் முடிய,
“சரி நீங்க எல்லோரும் இருங்க.. நான் உள்ள போய் அப்பா, அம்மா கூட பேசிட்டு வரேன்.. சித்து வா போலாம்..” என யார் பதிலுக்கும் இடமின்றி சித்தார்த்தின் கரம் பற்றி உள்ளே அழைத்துச் சென்றாள் நித்யா.
இவர்களுக்கு இடையிலுள்ள உரிமையான பேச்சையும் செயலையும் கவனித்த அனைவரும் இருவருக்குள்ளும் இருப்பது எந்த மாதிரியான உறவு என குழம்பிப்போய் விழிக்க, சஜீவ்விற்கு மட்டும் ஏனோ சித்தார்த்தின் மீது காரணம் அறியா வெறுப்பு தோன்றியது.
மண்டபத்தினுள் ஜனனியின் திருமண வேலைகளில் ஈடுபட்டிருந்த வசந்தியின் (நித்யாவின் தாய்) கண்களை திடீரென யாரோ பின்னிருந்து கைகளால் மூட முதலில் பயத்தில் கத்தப் பார்த்து பின் இன்ப அதிர்ச்சியாய்,
“யுவனிம்மா….” என திரும்பி அணைத்துக்கொள்ள, தாயின் கண்களிலிருந்து தன் கைகளை அகற்றிய நித்யா,
“மம்மா…இவ்வளவு ஈசியா கண்டுப்பிடிச்சிட்டீங்களே…” என சினுங்க,
“தாய் அறியா சூல் உண்டோ..” என பின்னிருந்து குரல் கேட்க திரும்பியவள் பப்பா.. என ஓடிச்சென்று தன் தந்தை ராஜாராமை அணைத்துக் கொண்டாள்.
“எப்படி இருக்காய் யுவனிம்மா.. தனியாவா இவ்வளவு தூரம் வந்தாய்..” என ராஜாராம் கேட்க பதறிய வசந்தி,
“என்னங்க சொல்லுறீங்க.. பேங்களூர்ல இருந்து ஊருக்கு வயசுப்பொண்ணு தனியாவா வந்திருக்கா..” என்க,
“ஐயோ மா.. இப்போ எதுக்கு சும்மா பயப்படுறீங்க.. நான் ஒன்னும் தனியா வரவில்லை.. அந்த சித் பையன் என்ன தனியா விட்டா தான் அதிசயம்… ஓய் சித்… இங்க வா..” என தூரமாய் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த சித்தார்த்தை அழைத்த நித்யா,
“பப்பா.. மம்மா.. இது சித்தார்த்.. என்னோட கொலிக் & ஓல்சோ என்னோட வெல் விஷர்..பேங்களூர்ல நான் தனியா இருந்தப்ப எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணி இருக்கான்.. உங்க கிட்ட இவன பத்தி நான் கொஞ்சம் சொல்லி இருப்பேன்னு நெனக்கிறேன்..” என சித்தார்த்தை அறிமுகப்படுத்த,
“வணக்கம் அங்கிள்.. வணக்கம் ஆன்ட்டி..” என கை கூப்பி வணங்கிய சித்தார்த்தை முதல் பார்வையிலே அவர்களுக்கு பிடித்து விட்டது.
வசந்தி,ராஜாராம் இருவரின் மனதிலும் ஒரே எண்ணம் தோன்ற ஒருவருக்கொருவர் ஒரு அர்த்தப் பார்வையில் தம் விருப்பத்தை பரிமாறிக்கொண்டனர்.
விதி இவர்களுக்கென வேறொரு கணக்கு போட்டு வைத்திருக்க இவை ஏதும் அறியாமல் இங்கு இவர்கள் தங்களுக்குள்ளே முடிவு எடுத்துக்கொண்டனர்.
“ஈஷ்வரி… ஈஷ்வரி… நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்காய்… அங்க உன்னோட மருமகள் வந்திருக்கா.. சீக்கிரம் வா.. என்ன இருந்தாலும் உன் பையனோட செலெக்ஷன் சூப்பர் ஈஷ்வரி.. எனக்கு மட்டும் ஒரு பையன் இருந்திருந்தா அந்த பொண்ண எங்க வீட்டுக்கு மருமகளா கூட்டிப் போயிருப்பேன்..” என ப்ரேமின் தாய் ஜானகிக்கு உதவிக் கொண்டிருந்த ஈஷ்வரியிடம் வந்த பெண்மணி கூற, “என்ன சொல்லுறீங்க பத்மாக்கா.. யாரு என்னோட மருமகள்..” என ஈஷ்வரி கேட்க, “என்ன ஈஷ்வரி இப்படி சொல்லிப்புட்ட.. நீ தானே ஒரு தடவை என்னிடம் உன் பையன் ஒரு பொண்ண காதலிக்கிறதாவும் அன்னைக்கு அந்த பொண்ண பார்த்து பேசிட்டு அவங்க வீட்டுல உன் பையன் உன்ன பேச சொன்னதாவும் சொன்னாய்.. அந்த பொண்ணு பேரு கூட ஏதோ சத்யாவோ நித்யாவோ..” என அந்த பெண்மணி கூற,
“ஓஹ்..நீங்க அதை சொல்லுறீங்களாக்கா? எனக்கு அந்த சம்பந்தம் அவ்வளவா பிடிக்கல.. என் பையன் கிட்டயும் தெளிவா சொன்னேன்.. அவனும் என்னோட பேச்ச மீறல.. ஈஷ்வரி பையனாச்சே..” என பெருமையாய் கூற,
“ஹ்ம்ம்.. ஏதோ சொல்றாய்.. யாருக்கு யாருன்னு விதி இருக்கோ அது தானே கிடைக்கும்.. பொண்ணு மகா லட்சுமியாட்டம் இருக்கா.. எந்த வீட்டுக்கு மருமகளா போக குடுத்து வெச்சிருக்கோ…” என புலம்பியவாறு அந்த பெண்மணி செல்ல,
“ஹ்க்கும்..ஊரு உலகத்துல இல்லாத பொண்ணு தானே..என்னோட பையனுக்கு நல்ல வசதியான என் பையனுக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ணா தேடிக் கண்டுப்பிடிச்சி கூட்டி வரேனே.. அதுக்கு அப்புறம் பார்க்க முடியும் மொத்த ஊரு கண்ணும் இந்த ஈஷ்வரி மருமகள் மேல தான் இருக்கும்..” என கூறியவாறு மீண்டும் தன் வேலையில் கவனம் செலுத்த இது வரை எல்லாம் வேடிக்கை பார்த்த ஜானகியோ மனதில்,
“அந்த பொண்ணோட நல்ல நேரம் இவ வீட்டுக்கு மருமகளா வந்து வாய்க்கல.. இல்லன்னா என்ன கஷ்டம் பட்டிருக்குமோ..” என எண்ணிப் பெருமூச்சு விட்டார்.
❤️❤️❤️❤️❤️
மூணாவது அத்தியாயம் பத்தின உங்க கருத்த சொல்லிட்டு போங்க மக்களே… நன்றி…
– Nuha Maryam –
சூப்பர் எபி சிஸ்😍😍இந்த அம்மா, அப்பா கிட்ட ஒரு பையனே பிரண்ட்லியா இன்ட்ரோ பண்ண முடியுதா😷 இனி எல்லாம் வசந்தமே ஈஷ்வரி மாறி தானே இந்த அம்மாவும் சீன் போடுது.
கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.
என்ன பண்ண சிஸ்.. அவங்க அந்த காலத்து மனுஷங்க.. அப்படி தானே இருப்பாங்க..
Thanks ma.. keep supporting ☺️
நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல்
Thank you ☺️ keep supporting