Loading

மக்களே!!!

“நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!” கதையின் பத்தொன்பது அத்தியாயங்கள் பதிவிட்டிருக்கேன்.

கதையோட ஆரம்பத்துலயே இது ஒரு உண்மையா நடந்த சம்பவத்த கதையா எழுதுறேன்னு சொல்லி இருந்தேன்… அதோட கொஞ்சம் என் கற்பனையும் கலந்திருக்கும்.

கதைல சஜீவ் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்த மறக்கனும்னு நித்யா காதல சொன்னதும் அவளும் தன்ன ஏமாத்த பாக்குறான்னு தவறா புரிஞ்சிக்கிட்டு அவளோட வாழ்க்கைல விளையாடுறான்..

தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்துல நித்யா மேல அவனுக்கு ஏற்கனவே இருந்த ஈர்ப்ப கூட மறந்துடுவான்…

இதுவரைக்கும் போட்ட அத்தியாயங்களில் சஜீவ் பண்ற சின்ன சின்ன தப்ப பெரிசு படுத்தாம நித்யா அவன ஏத்துக்குறது போல இருக்கும்.

இனி வர அத்தியாயங்களில் அவன் இதை விட பெரிய தப்பொன்னு பண்ணி அதுக்கப்புறம் அவங்க வாழ்க்கைல வர மாற்றங்கள் பத்தி சொல்லுறதா இருக்கும்.

இது உண்மையா நடந்த சம்பவம்.

தன் காதலனோ கணவனோ எவ்வளவு தப்பு பண்ணாலும் அந்த தப்ப மன்னிச்சி ஏத்துக்குற பெண்கள் இன்னுமே இருக்காங்க..

அத பத்தி சொல்றது தான் இந்த கதை.

இந்த கதை மூலமா ஆண்கள் என்ன பண்ணாலும் பெண்கள் மன்னிச்சி ஏத்துக்கனும்னோ இல்ல பெண்களை அவமானப்படுத்தனும்னோ சொல்ல வரல…

நானும் ஒரு பொண்ணு தான்.. அதனால நிச்சயமா பொண்ணுங்கள இழிவா நடத்துறத்த நான் ஊக்குவிக்க மாட்டேன்…

இந்த கதையோட போக்குல சில பேருக்கு முரண்பாடு இருக்கலாம்…

உங்க மனச புண்படுத்தும் விதமா இருந்தா மன்னிச்சிக்கோங்க…

ஆனால் கதை இப்படி தான் போகும்… சஜீவோட பாய்ன்ட் ஆஃப் வியுவயும் கதைல சொல்லுவேன்…

அதனால கதை முடிவு வர உங்க ஆதரவ தருமாறு வேண்டிக் கொள்கிறேன்…

நன்றி!!! ☺️☺️☺️

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Based on true stry ah😨😨😨😨 intha announcement ah ipo tha pakure😶. apo real lyf sajeev um psycho va sis🙊🙊. reality la namala kasata paduthuravanga mindset ah yosika matom sajeev side la irunthu epdi think panuran, yen ipdi ellam pannuranu sollaruthu spr sis👏👏

      1. Author

        Yh sis… True story than… knjma en katpana kalandhiruku… Sajeev point of view um pinnadi warum..