Loading

அனைவரிடமும் விடை பெற்று விமானத்தில் யூ.எஸ். பறந்தான் சஜீவ்.

 

அனைவரையும் பிரிவது கவலையாக இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை தவற விட விரும்பவில்லை அவன்.

 

நித்யா கூட, “ரொம்ப லக்கி ஆப்பர்ச்சுனிட்டி சர்வேஷ்.. மிஸ் பண்ணிராதே.. இந்த வாய்ப்பு மூலம் நீங்க லைஃப்ல க்விக்கா செட்டில் ஆகிருவீங்கன்னு எனக்கு தோணுது..” என்க இவன் சட்டென,

 

“நான் போறது உனக்கு கவலையா இல்லயா யுவி…” எனக் கேட்க சஜீவ்வின் கேள்வியில் நித்யா ஒருபுறம் திடுக்கிட அவனின் முதல் முதலான யுவி என்ற அழைப்பு அவளை பேசா மடந்தையாக்கியது.

சஜீவ்வே பின்னர் தான் கேட்ட கேள்வியின் அர்த்தம் உணர்ந்து மனதில்,

 

“யுவி எதுக்காக என்ன மிஸ் பண்ணனும்.. முதல்ல நான் என்ன பதில எதிர்ப்பார்த்து இவ கிட்ட இப்படி கேட்டேன்..” பின்பு சமாளிக்கும் விதமாக,

 

“ஐ மீன் நான் யூ.எஸ். போனா எப்படியும் வர்க்ல தான் கன்சன்ட்ரேஷன் இருக்கும்.. ஃபுள் பிஸி ஆகிறுவேன்.. என்ட் யூ.எஸ். இற்கும் சென்னைக்கும் ஒன்பதரை மணித்தியாலம் டிஃபரன்ட்ஸ்.. எனக்கு மார்னிங்னா உனக்கு நைட்டா இருக்கும்.. நமக்கு பேச கூட டைம் இருக்காது.. சோ நீ உன் ஃப்ரன்ட மிஸ் பண்ண மாட்டியா..” என்க நித்யா,

 

“சொல்ல தெரியல… பார்க்கலாம்.. எனக்கு கூட எக்சேம் நெருங்குது.. சோ ஸ்டடீஸ்ல டைம் போயிரும்…” அதன் பின் ஈஷ்வரியை சமாளித்து ஒருவிதமாய் யூ.எஸ். சென்று விட்டான்.

 

இன்றோடு சஜீவ் சென்று ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் சஜீவ் நித்யா இருவரும் மெசேஜ் மூலம் பேசுவது கூட அரிதாகியது.

 

ஒரு முறை மாத்திரமே இருவரும் மொபைலில் பேசினர்.

 

அன்றொருநாள் மாலை வகுப்பில் பாடத்தை கூட கவனிக்காது கன்னத்தில் கை வைத்து யோசனையில் இருந்த நித்யாவை ஜனனியின் குரல் கலைத்தது.

 

“நித்து.. எந்த கோட்டையை பிடிக்க திட்டம் போடுறாய்…” என்க,

 

“ஆஹ்… ஒன்னுமில்ல ஜெனி… மேம் போய்ட்டாங்களா… ” என நித்யா ஏனோ தானோ என பதிலளிக்க,

 

“ஹேய்.. உனக்கு என்னாச்சி டி… அப்போ இவ்வளவு நேரம் நீ பாடத்தை கவனிக்கலயா.. பாவம் டி அந்த லிப்ஸ்டிக் பேபி வனிதா மிஸ்.. அது க்ளாஸ்க்கு வந்தா இருக்கிற பசங்கள்ள நீ மட்டும் தான் அவரோட பாடத்தை கவனிப்ப.. பாதி க்ளாஸ் அந்த மிஸ் வரும் போதே தூங்கிருவாங்க.. இன்னெக்கி அப்போ அது பாட்டுக்கு கத்திட்டு போயிருக்காவா… ஹஹா… ஐயோ ஐயோ… ஹ்ம்ம் சரி சொல்லு உனக்கு என்னாச்சி…” என ஜனனி கேட்க நித்யா ஜனனியின் முகத்தை சிறிது நேரம் உற்று நோக்கினாள்.

 

மனதில், “இவ கிட்ட சொன்னா திட்டுவாளோ… ச்ச ச்ச.. ஜெனி என்னோட பெஸ்டி.. சோ நான் சொன்னா புரிஞ்சிப்பா..” என்க,

 

“திரும்ப எந்த உலகத்துக்கு டி போய்ட்டாய்.. ” ஜனனி நித்யாவைப் போட்டு உலுக்க நித்யா,

 

“ஜெனி.. நான் ஒன்னு சொன்னா நீ கோச்சிக்க மாட்டியே..” என்கவும் ஜனனி அவளை ஒற்றைப் புருவம் உயர்த்தி சந்தேகமாய்ப் பார்த்த படி,

 

“நீ வர்ர மாடியுலேஷனே சரியில்லயே.. முதல்ல விஷயம் என்னன்னு சொல்லு.. அப்புறம் பாக்கலாம் திட்டுறதா அடிக்கிறதான்னு…” என்றாள்.

 

நித்யாவோ ஜனனியைப் பாவமாகப் பார்க்க, “சரி சரி நீ மூஞ்சிய தூக்கி வெச்சது போதும் நான் நம்பிட்டேன்.. நீ சொல்லு..” என்க,

 

நித்யா ஒரு பெருமூச்சுடன் டென்த் லீவுக்கு ஊட்டிக்குச் சென்றது முதல் இன்று வரை நடந்த அனைத்தையும் கூறினாள்.

 

எல்லாம் கூறி முடித்து விட்டு ஜனனியின் முகத்தை தயக்கமாக ஏறிட அவள் முகமோ கல்லாய் சமைந்திருந்தது.

 

எவ்வித உணர்ச்சியையும் காட்டவில்லை.

 

நித்யா ஜெனி என அவள் கரம் பற்ற அவளோ நித்யாவின் கையை விலக்கி விட்டு பேக்கை எடுத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து சென்றாள்.

 

நித்யா அழைத்தது கூட அவள் செவிகளை எட்டவில்லை.

 

நித்யாவோ அவள் சென்ற திக்கையே வேதனையுடன் பார்த்தவாறு நின்றாள்.

 

எப்போது வீடு வந்து சேர்ந்தாள் என்பதையே அவள் அறியவில்லை.

 

♢♢♢ நமக்கு மிக நெருக்கமானவர்களின் கோபமான வார்த்தைகளை விட அவர்களின் மௌனமே நம்மை உயிரோடு வதைக்க வல்லது… ♢♢♢

 

♢♢♢ தினம் திட்டும் அப்பாவின் வார்த்தைகளைவிட திட்டாமல் நகரும் நண்பனின் மௌனம் கொடியது… ♢♢♢

 

நித்யாவின் நிலை இவ்வாறிருக்க அங்கு சஜீவ்வின் நிலை…

 

நித்யாவின் வீட்டில் அன்று யாரும் இருக்கவில்லை.

 

உறவினர் ஒருவரின் வீட்டு திருமணம் ஒன்றிற்கு ராஜாராமும் வசந்தியும் சென்றிருந்தனர்.

 

ஜனனி பேசாமல் சென்றதால் கவலையுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தவளை வீட்டினுள் நுழையும் போதே இருந்த அமைதி மேலும் அதிகமாக வாட்டியது.

 

தோளில் இருந்த பேக்கை கழற்றி சோஃபாவில் எறிந்து விட்டு சோஃபாவின் கீழே சாய்ந்தவாறு அமர்ந்தவள் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த நிகழ்வை நினைவு கூர்ந்தாள்.

 

சஜீவ்வுமே அன்று விடுமுறை என்பதால் அந் நிகழ்வு பற்றியே எண்ணிக் கொண்டிருந்தான்.

 

அவன் மனதில், “நான் எதனால யுவிக்கு ஒன்னுன்னா துடிக்கிறேன்… அவ கஷ்டப்படுறத பார்த்து என் கண்ணு ஏன் கலங்கனும்… ஒரு வேளை……… ” என அவன் மனதில் உதித்த எண்ணத்தை நினைத்து அதிர்ந்தான்.

 

பின் அவனே, “ச்சீச்சீ… அப்படி எதுவும் இருக்காது.. இது ஜஸ்ட் ஈர்ப்பு.. இந்த வயசுல இது சாதாரணம் தானே.. அதுவும் அவ இப்ப தான் காலேஜ் போறா.. என்ன ரொம்ப நல்ல ஃப்ரன்டா பாக்குறா… சும்மா ஏதாச்சும் கற்பனை பண்ணி அவ ஃப்ரன்ட்ஷிப்ப இழந்துராதே சர்வா…” என தனக்கே கூறிக் கொண்டான்‌.

 

2 நாட்களுக்கு முன்… ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிஸ்டமில் பாடலை ஓட விட்டு அதற்கேற்ப அபினயித்துக் கொண்டிருந்தாள் நித்ய யுவனி.

 

ஆடி ஆடி களைத்துப் போனவள் அருகிலிருந்த மேசையில் வசந்தி வைத்திருந்த ஆப்பிளையும் கத்தியையும் கையிலெடுத்துக் கொண்டு கட்டிலில் அமர சரியாக அவள் மொபைல் அழைத்தது.

 

“எவன்டா அது நேரங் கெட்ட நேரத்துல கால் பண்ணிட்டு…” என மனதில் அர்ச்சித்தவளாய் மொபைலை எடுக்க திரையில் சஜீவ்வின் எண்ணைப் பார்த்ததும் மலர்ந்த முகமாக அழைப்பை ஏற்று,

 

ஹேய் சர்வேஷ்.. வாட் அ ப்ளசன்ட் சர்ப்ரைஸ்.. ரொம்ப நாள் கழிச்சி கால் பண்ணி இருக்கீங்க.. எப்படி இருக்கீங்க.. எப்படி போகுது யூ.எஸ் வாழ்க்கை… ஜாப், தங்குற இடம் எல்லா கம்ஃபடபலா இருக்குதா…” அவள் பாட்டுக்கு பேசிக்கொண்டே போக,

 

“அம்மா தாயே… கொஞ்சம் எங்களையும் பேச விடும்மா.. நான் ரொம்ப நல்லா இருக்கேன்.. எனக்கு இங்க ஒரு பிரச்சினையுமில்ல.. நீ எப்படி இருக்க.. அம்மா அப்பால்லாம் எப்படி இருக்காங்க… ஆமா படிச்சிட்டு இருந்தியா.. பிஸியா.. டிஷ்டர்ப் பண்ணிட்டேனா..” எனக் கேட்டான் சஜீவ்.

 

” எங்க வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்க.. நானும் நல்லா இருக்கேன்.. பிஸி தான் கொஞ்சம்… பட் படிச்சிட்டு எல்லா இல்ல.. ” என்றவாறே ஆப்பிள் துண்டொன்றை வெட்டி வாயில் திணித்துக் கொண்டாள்.

 

சஜீவ், “ஆஹா… அப்படி என்ன மேடம் பிஸியாகுற அளவுக்கு நெட்டி முறிக்கிற வேலை…” என்க,

 

“வேற என்ன சாப்பிட்றதும் ரெஸ்ட் எடுக்குறதும் தான்..” என்க அந்தப் பக்கம் சஜீவ் தலையில் அடித்துக் கொண்டான்‌.

 

பின், “ஏம்மா இதெல்லாம் உனக்கு ரொம்ப பிஸியான வேலையா..” என்க,

 

“ஆமா நமக்கு சோறு தானே முக்கியம்..” என்க சஜீவ்,

 

“சரியான சாப்பாட்டுக்கு பொறந்தவளா இருப்ப போல..” எனும் போதே ஆவ்ஹ்… என்ற சத்தம்.

 

சஜீவ் பதறியவனாய், “ஹேய் யுவி.. என்னாச்சி உனக்கு.. ஏன் கத்தினாய்…” என்க,

 

நித்யா கலங்கிய குரலில், “கைய கட் பணணிக்கிட்டேன் சர்வேஷ்…” என்றதும் சஜீவ் கோபமாக,

 

“ஹேய் உனக்கென்ன பைத்தியமா.. இன்னும் சின்ன குழந்தைன்னு நெனச்சிட்டு இருக்கியா… பாத்து பண்ண மாட்டியா..” என்க,

 

சஜீவ்வின் கோபமான குரலிலும் அவன் பதற்றம் வெளிப்பட்டது.

 

அவனின் இந்த பாசம் கலந்த கோபப் பேச்சு நித்யாவுக்குப் புதிது.

 

ஏனோ நித்யா அதை வெகுவாக ரசித்தாள்.

 

தனக்காக எங்கோ இருக்கும் ஒருவன் கவலைப்படுகிறான். ஆனால் ஏன்…

 

“முதல்ல நீ ஹாஸ்ப்பிட்டல் போ யுவி.. காயத்துக்கு மருந்து போடு..” இன்னும் அவன் பதற்றம் குறையவில்லை.

 

அப்போதே அவனது யுவி என்ற அழைப்பை உணர்ந்தாள்.

 

இது இரண்டாவது முறை அவன் இவ்வாறு அழைப்பது.

 

சஜீவ் யுவி என அழைக்கும் போது இவள் உடல் சிலிர்த்தது.

 

இனம்புரியாத ஒரு உணர்வு.

 

நித்யா, “சின்ன காயம் தான் சர்வேஷ்.. எனக்கு எதுவும் இல்ல.. இதுக்கெல்லாம் ஹாஸ்ப்பிட்டல் போனும்னு அவசியமில்ல…” என்க,

 

“அதெல்லாம் எனக்கு தெரியாது யுவி.. ஏதாவது இன்ஃபெக்ஷன் ஆகி உனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா அப்புறம்…..” அவன் வார்த்தை இடையில் தடைப்பட்டது.

 

“என்ன பேசிட்டு இருக்கேன் நான்…” என மனதில் சஜீவ் நினைக்க, நித்யாவோ யோசனையில் இருந்தாள்.

 

“தனக்கு ஒன்று என்றால் அவன் ஏன் இவ்வளவு பதறுகிறான்.. இடையில் ஏதோ கூறப் போனானே.. அது என்ன.. ” என்பதே அவள் மனதில் ஓடியது.

 

“நித்யா நீ ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணு.. நான் அப்புறம் பேசுறேன்..” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

 

அதன் பின் இருவருக்கும் பேசிக் கொள்ள நேரமிருக்கவில்லை.

 

சஜீவ்விற்கோ நித்யாவுக்கு அழைக்க தயக்கமாக இருந்தது. அவனுக்கே அவன் மனம் இன்னும் புரியவில்லை.

 

நித்யாவும் இரண்டு நாட்களாக இது பற்றித் தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறாள்.

 

ஜனனியிடம் இது வரை நடந்த எல்லாம் கூற அவளும் பேசாமல் சென்றது நித்யாவுக்கு கவலையாக இருந்தது.

 

சஜீவ்வோ ஒரு முடிவெடுத்தவனாய் நித்யாவுக்கு அழைத்தான்.

 

சஜீவ்வின் எண்ணைக் கண்டதும் கண்களில் இருந்து தானாக கண்ணீர் வடிந்தது.

 

அழைப்பு ஏற்கப்பட்டதும் சஜீவ்வின் செவிகளை நித்யாவின் விம்மல்களே அடைந்தது.

 

அவளது அழுகையைக் கேட்டதும் அவன் எடுத்த முடிவே மறந்து போனது அவனுக்கு.

 

“என்னாச்சி யுவிம்மா… ஏன் அழுதுட்டு இருக்காய்.. ” என்க, அவளிடமிருந்து பதில் வரவில்லை அவள் கேவல்களே அதிகமாகியது.

 

“ஐயோ என்னாச்சின்னு அழாம சொல்லு யுவி ஃபர்ஸ்ட்… திரும்ப எங்கயாச்சும் காயப் படுத்திக்கிட்டியா…” என்க,

 

“ஆமா அப்ப தானே உனக்கும் என் கூட பேசாம இருக்க முடியும்… யாருக்குமே நான் தேவை இல்ல.. அதனால தான் யாருமே என் கூட பேச மாட்டேங்குறீங்க.. நீ கூட ரெண்டு நாளா பேசல… நான் என்னமோ வேணும்னு தானே கைய கட் பண்ணிக்கிட்டேன்..” என மீண்டும் அழத் தொடங்கிவிட்டாள்.

 

அவளது குழந்தைத்தனமான சண்டையும் முதன் முதலாக அவளது உரிமையான பேச்சையும் கேட்டவன் முகத்தில் புன்னகை.

 

ஏனென்றால் இது வரை நித்யா சஜீவ்வை நீ வா போ என பேசியதில்லை. ங்க என மரியாதையாகவே பேசுவாள்.

 

அதன்போதெல்லாம் சஜீவ்விற்கு யாரோ மூன்றாம் மனிதர் தன்னிடம் பேசும் உணர்வு.

 

நித்யாவுடன் பேச ஆரம்பித்த புதிதில் இது பற்றி கேட்டதற்கு அவள், “இல்ல சர்வேஷ்.. எனக்கு உங்கள பற்றி எதுவுமே தெரியாது.. இப்ப தான் பேச ஆரம்பிச்சிருக்கோம்.. ஃப்ரென்ட்ஸ்னு கூட சொல்ல முடியாது.. அவளோ க்லோஸ் இல்ல நாம… இப்போ வரைக்கும் நீங்க எனக்கு ஜஸ்ட் தேர்ட் பேர்சன் தான்… எனக்கு ரொம்ப நெருக்கமானவங்கள தான் நான் அப்படி பேசுவேன்… கொஞ்சம் நாள் போகட்டும் பாக்கலாம்.. ” என்றதும் சஜீவ்விற்கு அது ஏதோ போல் ஆகி விட்டது.

 

பின் வந்த நாட்களில் அவள் பேச்சில் மாறுதல் இருந்தாலும் இது பற்றி திரும்ப கேட்கவில்லை.

 

மீண்டும் அவள் ஏதாவது சொல்லி விட்டால்… அதனால் தான்.

 

புன்னகைத்த வண்ணமே, “ஐயோ யுவிம்மா… இதுக்கெல்லாம் போய் யாராவது அழுவாங்கலா… எனக்கு கொஞ்சம் வர்க் பிஸிம்மா.. அதனால தான் மெசேஜ் கூட பண்ண டைம் கிடைக்கல.. சரி முதல்ல நீ இத சொல்லு.. நான் பேசாதது உனக்கு கஷ்டமா இருந்திச்சா.. என்ன மிஸ் பண்ணியா…”  அவள் பதிலைத் தெரிந்து கொள்ளும் ஆவல் அவன் பேச்சில் இருந்தது.

 

ஆனால் நித்யா இருந்த மனநிலையில் அவளுக்கு அது தெரியவில்லை.

 

அவள் மூக்கை உறிஞ்சிய வண்ணம், “ஆமா எவ்வளோ மிஸ் பண்ணேன் தெரியுமா உன்ன… எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்திச்சு.. இன்னெக்கி என்னாச்சு தெரியுமா…” என இன்று நடந்த அனைத்தையும் கூறி ஜனனி பேசாமல் சென்றது வரை கூறினாள்.

 

“ஜெனி கூட என்ன புரிஞ்சிக்கலயேன்னு எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்திச்சு.. அவ ஒரு வார்த்த என் கூட பேசல.. அவ பாட்டுக்கு போய்ட்டா..” என்க,

 

“அந்தப் பொண்ணுக்கு நீ அவ கிட்ட மறச்சது மட்டுமில்லாம முன்ன பின்ன தெரியாதவங்க கூட பேசுறன்னு தான் கோவமா இருந்து இருக்கும்.. பட் நீ வேணா பாரு.. நாளைக்கே அவ உன் கூட பேசுவா.. அப்போ அவ கிட்ட சஜீவ் யாரோ இல்லன்னு நான் சொல்ற விஷயத்த சொல்லு.. கண்டிப்பா உனக்கு எதுவும் சொல்ல மாட்டா..” என்று விட்டு அவன் கூறிய விஷயத்தை கேட்டதும் அவள் முகம் புன்னகையில் விரிந்தது.

 

“நிஜமா தான் சொல்றியா சர்வேஷ்.. ” என்க,

“ஆமாடா… உனக்கே சீக்கிரம் தெரியவரும்.. ” என்றான்.

“ஹ்ம்ம் அப்போ ஓக்கே.. நான் நாளைக்கே ஜெனி கிட்ட இதெல்லாம் சொல்றேன்.. அப்புறம் சர்வேஷ்.. நீ இனி என்ன மாத்தி மாத்தி பேர் சொல்லி கூப்பிடாதே.. யுவின்னே கூப்பிடு… எனக்கு அது ரொம்ப பிடிச்சிருக்கு.. டிஃபரன்ட்டா இருக்கு.. யாரும் என்ன இது வரை அப்படி கூப்பிட்டது இல்ல.. ” என்க,

அவனோ சந்தோஷமாக, “ஓக்கே யுவி.. அப்போ எனக்கு மட்டும் இன்னைல இருந்து நீ யுவி.. ஓக்கேயா.. இப்போ கொஞ்சம் நல்லா சிரி பார்க்கலாம்.. இந்த அழுமூஞ்சி யுவி நல்லாவே இல்ல..”என்றதும் நித்யா மனம் நிறைய சிரித்தாள்.

அதன் பின் நேரம் செல்வதே தெரியாமல் இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அந்த நாள் இருவருக்கும் அழகாகக் கழிந்தது.

 

❤️❤️❤️❤️❤️

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
3
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Jeni advice crct tha 👏👏emma yuvi itha appave ketu iruntha es agirupa ila🤭🤭🤭 vithi valiyuthu.

      1. Author

        Thank you thank you 🤪 nan thane andha vidhi 😂😂😂