Loading

இத்தனை நாட்களாக உதிரன் ஒரு காவல் அதிகாரி என்று நினைத்து இருந்தவளுக்கு , இன்று அவன் காவல் அதிகாரி இல்லை இராணுவ அதிகாரி என்று தெரிந்ததும் கோவத்தை விட பயமே அதிகமாக வந்தது அவளுக்கு…..

            நீங்க என்னை ஏமாற்றி கல்யாணம் செய்து விட்டீங்க…? எதற்காக இப்படி பண்ணீங்க…? அழுகையுடனே அவனிடம் கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்தாள்… 

             என்னது…! நான் உன்னை ஏமாற்றி விட்டேனே…..! இந்த டையலாக்கை நான் தான் சொல்லனும் …… ஒரு குழந்தையை என்னுடைய தலையில் கட்டிவைத்து , என்னை ஏமாற்றி விட்டாங்க….. நியாயமா பார்த்தா இங்க நான்தான் ஏமாந்து விட்டு இருக்கிறேன் நீ இல்லை…. 

                    அவளோ கோவமாக, யாரைப் பார்த்து குழந்தை என்று சொல்றீங்க…? நான் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தை கூட பெத்துக்க முடியும் …. என்னைப் பார்த்து நீங்க குழந்தைனா சொல்றீங்க…

                  நீங்க மட்டும் தனியா குழந்தையை பெத்துக்க முடியாது……? நீங்க குழந்தையை பெத்துக்க என்னுடைய உதவியும் வேண்டும்…. “உனக்கு ஐந்து குழந்தை தான் வேணும் என்றால் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல, அதற்கு மேலும் குழந்தைகள் வேண்டும் நா கூட சொல்லு எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை”அவன் கூறிவிட்டு அவளைப் பார்த்து கண்ணடிக்க….

                ஏற்கனவே கோவத்தில் இருந்தவள் அவனின் மீது தலையணை தூக்கி வீச…. 

      அதனை தன் மீது படாமல் பிடித்தவன் அவளைப் பார்த்து சிரிக்க….

              அவனைப் பார்த்து முறைத்து விட்டு வேகமாக வெளியே சென்றுவிட்டாள்….. 

            அவள் வெளியே சென்றதும் கதவை சாத்திவிட்டு ,கட்டிலில் படுத்துக்கொண்டு உறங்கி விட்டான்….

           மாலை வரை வெளியவே இருந்துக்கொண்டு, யாராவது கேட்டாள் எதாவது கூறி சமாளித்துக்கொண்டு இருந்தாள்….  

             வசுமதி, கடிகாரத்தைப் பார்த்துவிட்டு மணி ஆறு ஆச்சு, போய் மாப்பிள்ளையை எழுப்பு டி ,சாமி கும்பிடனும்…..போ …போய் எழுப்பு…

           அவள் அமைதியாக இருக்க…. 

          என்னடி நான் சொல்றது உன்னுடைய காதுல கேட்கவில்லையா….? மச மசனு நிக்காம போடி….

            மனதிற்கு அவனைத் திட்டிக்கொண்டே கதவை மெதுவாக திறந்து கொண்டு உள்ளே சென்று பார்க்க “அவனோ நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தான்”…. என்னை ஏமாற்றி கல்யாணம் பண்ணியதே பெரிய தப்பு இதுல என்னுடைய கட்டிலில் படுத்துக்கொண்டு எப்படி உறங்கிக் கொண்டு இருக்கான் பாரு …. இவனை என்னப் பண்ணலாம் என்று யோசித்துக்கொண்டே இருந்தவள் , யாருக்கும் தெரியாமல் வேகமாக ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவந்து , அதில் ஐஸ் கட்டிகளை போட்டு அது கரையும் வரை காத்திருந்தவள் , கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு, அந்த ஐஸ் கட்டிகள் கரைந்த பிறகு …. ஒன்று….இரண்டு….. மூன்று என எண்ணியவள் வேகமாக அவன் மீது குளிர்ந்த தண்ணீரை ஊற்றி விட்டாள்…. 

             நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவனுக்கு, தன் மீது குளிர் நீர் படவும் , வேகமாக எழுந்து உட்கார்ந்து விட்டான்…. அவனின் அருகில் நுவலி வாயை கைகளால் மூடிக்கொண்டு சிரித்துக்கொண்டு இருந்தாள்… 

             அவன் அமைதியாக அவளையே பார்த்துக்கொண்டு இருக்க….. 

              என்ன இவரு இப்படி அமைதியா உட்கார்ந்தே இருக்காரு….? எதாவது பெரிய ஆப்பு வைக்க போறாறோ….? என யோசித்துக்கொண்டு இருக்கும்போதே வசுமதி மறுபடியும் அழைத்தார்…. அவனிடம் சீக்கிரமாக கிளம்பி வர சொன்னாங்க உங்களை அம்மா ….! சீக்கிரம் எழுந்து போய் முகம் கழுவி கொண்டு , உடுப்பு வேற மாற்றிக்கொண்டு வாங்க ……

             அவன் அமைதியாகவே இருந்தான். அவளிடம் எதுவும் பேசவில்லை……. 

               நுவலி, அவனின் அருகில் சென்று “அம்மா சாமி கும்பிட வர சொன்னாங்க “வாங்க போகலாம்….. அவன் அமைதியாக அவளின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருக்க, 

 அவனின் கையைப் பிடித்து இழுத்தாள்…. 

  அவனிடம் எவ்வித மாற்றமும் இல்லாமல் போக, வெளியே வசுமதியும் அழைத்துக் கொண்டே இருக்க ,நம்ம மட்டும் தனியா போனா “அம்மா திட்டு வாங்க “அதுவும் இல்லாமல் இவரு உடுப்பு நனைந்து இருப்பதைப் பார்த்தா இன்னும் எல்லோரும் சேர்ந்து திட்டுவாங்களே….! என்று நினைத்த அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு நிற்க, அவனைப் பாவமாக பார்த்தாள்….. 

       அவனோ அமைதியாகவே இப்பொழுதும் இருக்க….

          அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வெளியே வந்து விடவா என்றது…..

        இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவன் ,அவளை இழுத்து தன் மடியின் மீது உட்கார வைக்க, “அவளோ திமிறி கொண்டே இருந்தாள்”…. அவளை தன் நெஞ்சோடு இறுக்கமாக அணைத்தவன் , அவளின் கண்களில் இரண்டிலும் கண்ணீர் வராதபடி அழுத்தமாக கண்ணீர் சிந்தும் கண்களுக்கு ஒரு முத்தம் வைத்துவிட்டு , “அவளை இன்னும் இறுக்கமாக தன் நெஞ்சோடு இறுக்கி அணைத்துக் கொண்டான்”…. சிறிது நேரம் கழித்து தன்னுடைய பிடியை தளர்த்தியவன் அவளைப் பார்த்து ,”இனிமே எப்பொழுது உன்னுடைய கண்ணுல இருந்து கண்ணீர் வர கூடாது. அப்படி வந்தா நான் ஒரு ஆண் மகனா தோற்று விட்டேன் என்று அர்த்தம்”… “நான் இந்த வேலையில் எனக்கு என்ன எப்ப நடக்கும்னு எனக்கே தெரியாது ….?”…. என்னை மாதிரி ராணுவ வீரன் எல்லாம் கல்யாணம் என்ற ஒன்றை பண்ணாமலே இருந்திருக்கனும் …. நான் இந்த கல்யாணம் வேண்டாம்னு தான் வீட்ல சொன்னேன்…. இந்த கல்யாணம் மட்டுமல்ல …..! எனக்கு கல்யாணமே வேண்டாம் என்றுதான் சொன்னேன்…. ஏன்னா, எனக்குத் தெரியும் என்னோட உயிர் எப்ப என்னைவிட்டு பிரியும்னு எனக்கே தெரியாது……? என்னுடைய அம்மாதான் அழுது ஆர்பாட்டம் நடத்தி உன்னை பொண்ணு பார்க்க அழைத்து வந்தாங்க…. உன்னை தனியா பார்த்து இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லிவிடலாம்னு தான் நினைத்தேன் …… உன்னை பொண்ணு பார்த்த அன்னைக்கு , முதல்முறையா எனக்கு கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும்னு என்னுடைய மனதில் தோன்றியது…. எனக்கே அந்த நிமிடம் ஆச்சரியமா தோன்றியது… நான் இந்தியா முழுவதும் சுற்றி விட்டேன் . சில உலக நாடுகளுக்கும் சென்றுவிட்டேன் அங்கு எல்லாம் இல்லாத பெண்களா….? அவங்க மீது எல்லாம் தோன்றாத எண்ணம் உன்னைப் பார்த்தபிறகு தோன்றியது ….அந்த எண்ணத்தை கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் மறைத்தேன் என்று சொல்லலாம்….. அன்னைக்கே உங்க வீட்டிலும் சரி ,எங்க வீட்டிலும் சரி பிடித்துவிட்டதுனு கல்யாணம் வரைக்கும் பேசிக்கொண்டே போயிட்டாங்க… ஒரு பக்கம் சந்தோசமா இருந்தாலும் இன்னொருபக்கம் எனக்கு கவலையாக தான் இருந்தது…. உங்க வீட்டில் இருந்து நாங்க எங்க வீட்டிக்கு போனபிறகு , உன்னை தனியா எப்படியாவது பார்த்து இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லி கூறலாம்னு இருந்தேன்…. நான் அன்னைக்கே மறுபடியும் யாருக்கும் தெரியாம உன்னைப் பார்க்க வந்த போது , நீ கோவில்ல இருக்கிறாய் என்று சொன்னாங்க……! நானும் அந்த கோவில் முழுவதும் உன்னை தேடிப் பார்த்துவிட்டு கடைசில , கால் வலிக்கிறது அங்கு இருந்த குளத்துக்கு அருகில் வந்து உட்காரலாம்னு நினைத்து வந்தேன்…. அந்த குளத்தில் இருந்து யாரோ பேசற சத்தம் வரவே ‘ஒரு சின்ன நம்பிக்கையில் நீ இருப்பியானு வந்தேன்…. அப்போ உன்னை அந்த மாதிரி பார்த்தப்ப எனக்கு வந்த சிரிப்பு இருக்க அதை வீட்டுக்கு போய் கூட என்னால கட்டுப்படுத்த முடியல தெரியுமா…? உனக்கு….

         நாம அப்படி என்ன அன்னைக்கு பண்ணோம் என்று அவள் யோசிக்க….

         நீ என்னப் பண்ணேன் தானே யோசிக்கிற….? நானே சொல்றேன்…. அந்த குளத்து படிக்கட்டில் உட்கார்ந்துக் கொண்டு , மீன்களிடம் பேசிக்கொண்டே சாக்லேட் சாப்பிட்டுக்கொண்டு இருந்த பார்த்தியா , அதுக்கப்பறம் அந்த மீன்களுக்கு அறிவாளி தனமா சாக்லேட்டையோ குடுத்த பாரு அது எனக்கு சிரிப்பு வந்தது….. உன்னைப் பார்க்க எனக்கு ஜெனிலியா தான் நியாபகம் வந்தது…. அவங்க சந்தோஷ் சுப்பிரமணியம் படத்துல கொஞ்சம் லூசு மாதிரி இருப்பாங்க ஆனா நீ முழு லூசு மாதிரியே இருந்தியா.., அது எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது…. அவள் அவனைப் பார்த்து முறைக்க…. என்னோட கல்யாண ஆசையை இன்னும் அதிகப்படுத்தியது , உன்மேல ஆசை மட்டும்தானா என்று கேட்டால் நான் கண்டிப்பா சொல்லுவேன் உன் மேல எனக்கு ஆசை இல்ல காதல் மட்டும்தான் என்று….. ஆசை கொஞ்ச நாட்களில் மறைந்து விடும், காதலோ சாகும் வரை மறையாது…. உன் மேல இருக்கிறது என்னுடைய உண்மையான காதல் மட்டும் தான்.அதுதான் என்னோட மனசை மாற்றி உன்னை கல்யாணம் பண்ணிக்க வெச்சது….. “எனக்கு உண்மையா தெரியாது …? நான் இராணுவ வீரன் என்று உனக்கு தெரியாதுனு….”

              அவள் அமைதியாக எழுந்து வெளியே சென்றுவிட…

               அவனோ சிறிது நேரத்தில் தன்னுடைய முகம் கழுவிக்கொண்டு , வேறு உடுப்பு மாற்றிக்கொண்டு வெளியே வர… அனைவரும் சாமி கும்பிட தயாராக இருந்தனர்….. உதிரன் வந்ததும் அனைவரும் சேர்ந்து சாமி கும்பிட்டு இரவு உணவையும் உண்டு விட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்…..  

          உதிரன் சாப்பிட்டு முடித்த கொஞ்ச நேரம் வெளியே அவர்களுடன் உட்கார்ந்துக் கொண்டு இருந்தான்….. அவனோ நுவலி எதாவது தன்னிடம் பேசுவாள் என்று எதிர்ப்பார்த்து அவளின் முகத்தைப் பார்க்க, அவளோ இவனிடம் எதுவும் பேசாது மௌனமாக இருந்தாள்…. அவன் சிறிது நேரம் கழித்து அறைக்கு வந்து கட்டிலில் உட்கார்ந்தவனுக்கு ஏதோதோ எண்ணங்கள் தோன்ற நுவலிக்காக காத்திருந்தான்…..

              கொஞ்ச நேரம் கழித்து கையில் ஒரு டம்ளரில் பாலை எடுத்துக்கொண்டு , மற்றொரு கையில் மஞ்சள் , மிளகு , சர்க்கரை கொண்டு வந்து டேபிளில் வைத்துவிட்டு அவனைப் பார்க்க, 

           அவனோ ,இவளின் வருகைக்காக காத்திருந்தவன் அவளைப் பார்த்து,” நுவலி உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கவில்லைனு தெரியுது…. அதுக்கு என்னுடைய வேலைதான் முக்கிய காரணம் என்று தெரியுது ” அதனால நான் என்ன சொல்ல வரேன் என்றால் “நம்ம இந்த கல்யாண பந்தத்தில் இருந்து பிரிந்து விடுவோம்”…. அவன் பேசிய கடைசி வார்த்தைகள் இதுவே ….! அவனின் கண்ணத்தில் பளார் என்ற சத்தத்துடன் அவளின் கை பதிந்து இருந்தது….. அடுத்த நொடி அவன் அப்படியே மயங்கி விழுந்து விட்டான்…..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
10
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Dei nee army nu sollitu nuvali aduchathuke mayanguna epdi da…. Nee mela pesuna dialogue la kettu pullaruchu ukantha kadaisila mayanki bushuuu aakitiye da….