தன் மன்னவனின் உடல் காயத்தில் வலி ஏற்படுத்தாமல் , அவனின் நெஞ்சு கூட்டினை தலையணையாக கொண்டு உறங்கி கொண்டு இருந்தாள் நுவலி…..
தன் மனையாளின் தலையும் தனக்கு மயில் இறகு போன்றே சுகத்தை தரும் என்று நினைத்து அவளை தன் நெஞ்சின் மீது தூங்க வைத்துவிட்டு தானும் நிம்மதியாக உறங்கி கொண்டு இருந்தான்….. மனங்கள் இரண்டும் நிம்மதி கொண்டு உறங்க , காலம் தன் கடமையை செவ்வனே நிறைவேற்றியது…..
தன்னுடைய அத்தை மகளை பார்க்க யாருக்கும் தெரியாமல் ஒளிந்து … ஒளிந்து அவளின் வீட்டிற்குள் பூனை நடை கொண்டு நுழைய , வீட்டின் உள்ளே ஒருவரும் இல்லை….அந்த நடுவில் நின்றுக்கொண்டு தலையை திருப்பி சுற்றியும் தேடியவன் கடைசியாக சுமதியின் அறைக்கு சென்றான்….. அவள் அங்கு தான் இருப்பாள் என நினைத்துக்கொண்டு ,அவளின் அறை கதவை திறக்க….. அவன் நினைத்தது போல அறையில் தான் இருந்தாள்….
கட்டிலில் உட்கார்ந்துக் கொண்டு விட்டத்தை வெறித்து பார்த்தபடி இருக்க , கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்காமல் வந்து அவளின் கண்ணத்தை நனைத்து…. அவளின் நிலமையை கண்டு பதறியவன் வேகமாக ஓடி சென்று அவளின் கண்ணீரை தன் கையால் துடைத்து விட்டவன் ,அவளை தன் தோளின் மீது சாய்த்துக் கொண்டு ஆறுதலாக அவளின் தலையை வருடி விட்டான் ….
அவளின் கண்ணீர் நிற்க , அதுவரை அமைதியாக இருந்தவள் அவனை தள்ளிவிட்டு “இப்ப எதுக்கு டா இங்க வந்த ….? “….
மெத்தையில் “தொப்” என்று விழுந்தவன் , அவளின் கேள்வியில் வேகமாக எழுந்து உட்கார்ந்துக் கொண்டு பார்க்க…..
என்ன பார்வை …? நான் போன் பண்ணும் போது , நீ போனை எடுக்காமல் இருந்த தானே…! இப்ப மட்டும் எதுக்கு டா வந்த….?
அடியேய்….! இது எல்லாம் அநியாயம் பார்த்துக்கோ…… நான் என்னவோ ஆசைப்பட்டு உன்னுடைய போனை எடுக்காத மாதிரி சொல்ற….? என்னுடைய போனுக்கு சிக்னல் இல்லாமல் போனதற்கு நான் என்ன பண்ணுவேன் டி…
இதெல்லாம் நல்லா வக்கணையா பேசு… இப்ப எதுக்கு இங்க வந்த…..? அவள் சற்று காட்டமாக கேட்க….
நான் என்னுடைய அத்தையை பார்க்க வந்தேன்…. பார்த்து ரொம்ப நாள் ஆச்சு … அந்த ஒரு காரணம் மட்டும்தான் வேற எதுவும் இல்லை…..
இது என்னுடைய ரூம்… இங்க உங்க அத்தை எல்லாம் யாரும் இல்லை.. என்னுடைய ரூம் விட்டு வெளியே போ டா….
எதுக்கு டி என்னை வெளியே துரத்துவதிலே கண்ணா இருக்க…?
ஆமாம் டா .அப்படி தான் துரத்துவேன்… உன்னால தானே ‘அண்ணாவுக்கு இப்படி ஒரு நிலமை ”..
அவள் முறுக்கி கொண்டு நிற்க….
என்னது….? என்னால அவனுக்கு இப்படி ஒரு நிலமையா…..? நான் ஏதோ ரவுடிகளை அனுப்பி உன்கிட்ட தகராறு செய்ய சொல்லியும் , அப்படியே யாராவது தடுக்க வந்தாங்கனா …? அவங்களை கத்தியால் குத்த சொன்ன மாதிரியும் அல்லவா இருக்கு உன்னுடைய பேச்சு…. தங்கச்சியை காக்க அண்ணன் கத்தி குத்து வாங்கி இருக்கான் இதற்கு நான் என்ன பண்ணமுடியும்…?
நீ வந்து இருந்திருந்தா இந்த பிரச்சனை எல்லாம் வந்து இருக்காது தானே…!
நான் எதுக்கு டி வரணும்… உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் சொல்லுங்க மேடம்…. ? …. அவளிடமே கேள்வியை கேக்க , பேதையவள் என்ன சொல்வது என்று தெரியாமல் உறைந்து நின்றாள்…. இதுவரை இருவருமே தன்னுடைய காதலை தன்னுடைய மனதிற்குள் புதைத்து வைத்துக்கொண்டு இருக்கின்றனர்….
உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தானடா…..” எதுக்கு இப்ப என்னை பாக்க வந்த….? எதுக்கு என்னை ஆறுதல் படுத்துன…? புத்திசாலித்தனமாக கேள்வியை கேட்க….
அவனோ அசால்டாக , உதிரன் தான் சொன்னான் நீ ரொம்ப பயந்துட்டனு அப்பறம் நீ என்னுடைய அத்தை மகளும் தானே…..’ அதனால தான் பார்த்துவிட்டு போகலாம்னு வந்தேன் …… இங்க வந்தா நீ என்னை துரத்துவதிலே குறியா இருக்க …?
“ஓ” யாரோ சொல்லிதான் என்னை பாக்க வந்தியா….? அப்படி ஒரு ஆறுதல் எனக்கு தேவையில்லை. இப்பவே என்னுடைய அறையை விட்டு வெளியே போடா…. சற்று காட்டமாக கத்திவிட்டு திரும்பி நின்று கொள்ள….
தனக்கு முதுகை காட்டிக்கொண்டு இருக்கும் அவளைப் பார்க்கவே சிரிப்பு தான் வந்தது அவனுக்கு…. அவளுக்கு கேட்கும் படி சத்தமாக ‘அப்ப சரி நான் வரேன் , என்று கூறிவிட்டு கிளம்ப ….
அவன் ” சரி” என கூறியதும் கண்களில் இருந்து கண்ணீர் தான் வழிந்து ஓடியது….
மெதுவாக அந்த அறையில் உள் பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு ,அவளின் பின்னாடி வந்து அணைத்துக் கொண்டு , அவளின் தோளின் மீது தன்னுடைய தலையை வைத்து கண்மூடி நின்றான்…..
முதலில் பயந்தவள்… பிறகு இவன் தான் என்றதும் அவனிடம் இருந்து விலக திமிற ஆரம்பித்தாள்….
அவனின் பிடி போக …. போக இறுக்கமாக போக…..
இதற்கு மேலும் அவனிடம் இருந்து திமிறினால் வேலைக்கு ஆகாது என்று நினைத்தவள்….. அவனிடம் ‘எதுக்கு இப்படி வந்து என்னை அணைத்துக் கொண்டு இருக்கீங்க….?” உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் தான் இல்லையே….? நான் உங்க உறவுகார பொண்ணு அவ்வளவு தானே…..! இப்ப எந்த உரிமையில் என்னை தொட்டு இருக்கீங்க ….?
எனக்கு என்ன உரிமை இல்லைனு நீ சொல்ற டி….? அவளிடமே கேள்வியை திருப்ப….
உனக்கும் எனக்கும் எந்த உரிமையும் இல்ல , வெளியே போடா……
அப்படியா…! நான் வெளியே போனா மேடம் ஏன் கண்ணுல தண்ணியை திறந்துவிட்டீங்க….?
நான் உனக்காக ஒன்னும் அழவில்லை….. அண்ணாக்கு இப்படி ஆனதற்கு நான் தானே காரணம் … அதை நினைத்து தான் அழுதேன் போதுமா….
ரொம்ப ஓவரா பண்ணாத டி….
யாரு ஓவரா பண்றது…? நீயா நானா டா …? என்னை விட்டுட்டு போடா ….. எனக்காக தான் நீ வரவில்லையே….
ஏன்டி, என்கிட்ட வம்பு இழுக்கவே உங்க அம்மா உன்னை பெத்துகிட்டாங்களா…? ஏன்டி இப்படி மனுசனை திட்ற….?
வேற என்ன பண்ண சொல்ற….? உனக்கும் எனக்கும் எந்த சொந்தமும் இல்லாதபோது ‘ நான் உன்கிட்ட பேசுவதை யாராவது பார்த்தா நாளைக்கு அது எனக்கு தான் பிரச்சனையா வந்து முடியும் ,…
நான் உன்கிட்ட பேசுவதற்கும் நாளைக்கு உனக்கு பிரச்சனை வருவதற்கும் என்ன சம்மந்தம் டி….?
உனக்கு என்ன நீ பையன் . நான் பெண் ….
ஆமா அது எனக்கு தெரியுமே…! நீ பொண்ணு, நான் பையன்னு …..
அவளுக்கோ அவன் வேண்டும் என்றே பேசுகிறான் என்று தோன்றியது…. நீ இங்கிருந்து போ ….. என்னை தனியா விட்டுட்டு போ… நீ விளையாட நான் ஒன்னும் பொம்மை இல்லை …..அவளின் கண்களில் இருந்து மீண்டும் கண்ணீர் வெளியே வந்து “அவளின் கண்ணத்தை அப்படியே அவனின் கண்ணத்தில் பட்டது”..
இதற்கு மேலும் இவளிடம் பதில் எதிர்பார்த்தால் கிடைக்காது என நினைத்தவன் ,அவளை தன்னை நோக்கி பார்க்கும்படி திருப்ப … அவளோ அவனைப் பார்க்காமல் தலை குனிந்த படியே நின்றாள்…. அவளின் தலையை தூக்கி “என்னை பாருடி”
அவள் அமைதியாக கண்ணை மூடிக் கொண்டு , பார்க்க மாட்டேன் என்பது போல தலையை இடதுபுறமாக ஆட்ட….
இந்த பொண்ணுங்களே இப்படிதான் என நினைத்தவன் ” அவளின் கண்களில் இருந்து வழிந்து ஓடும் கண்ணீரை துடைத்து விட்டு , எனக்கு உன் மேல என்ன உரிமை இருக்குனு நான் சொல்றேன்…. இல்லை…இல்லை … செயலாகவே செய்து விடுகின்றேன் என்றவன் அவளின் நெற்றியில் தன்னுடைய நெற்றியை முட்டியவன் அவளின் இதழில் அழுத்தமாக தன்னுடைய இதழை பதித்து “தன்னுடைய உரிமையை காட்டினான் “….
இதனை எதிர்ப்பார்க்காத சுமதி முதலில் அதிர்ந்து பின்னர் சந்தோசம் அடைந்தாலும் அவன் வாய் வார்த்தையாக எதுவும் கூறவில்லையே என நினைத்தவள், அவனை வேகமாக தள்ள விட “அவனோ தொப்பென்று கட்டிலில் போய் விழுந்தான்”….
சிரித்துக்கொண்டே அவளின் முகத்தைப் பார்க்க , அவளோ தன்னுடைய முகத்தில் குழப்ப ரேகையை படரவிட்டு இருந்தாள்….
அவளின் கையை பிடித்து வேகமாக தன்னை நோக்கி இழுக்க…. அவனின் அருகில் தொப்பென்று விழுந்தவள் ” அவனைப் பார்த்து முறைக்க”….
என்னடி முறைக்கிற….?
எதுக்கு டா …? எனக்கு முத்தம் கொடுத்த…?
நீ என்னுடைய அத்த பொண்ணு அந்த உரிமையில் குடுத்தேன்…. அவளின் கண்களில் மீண்டும் கண்ணீர் கோர்த்துக் கொண்டு நிற்க…. அவளோ குற்றம் சுமத்தும் பார்வையை அவன் மீது பதித்து இருந்தாள்….
என்னடி இப்படி கண்ணுல ரெடியா கண்ணீரை வெச்சி இருக்க…?… இந்த மாமன் உசுரோட இருக்கும் வரைக்கும் உன்னுடைய கண்ணில் இருந்து கண்ணீர் வர கூடாது …. இப்ப என்ன …? உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்னு சொல்லனுமா …? சொல்றேன் நல்லா உன்னுடைய மர மண்டையில் பதிய வைத்துக்கொள்…. நீ என்னுடைய அத்த பொண்ணு மட்டுமல்ல , வருங்கால என்னுடைய மனைவி. இப்ப என்னுயிர் காதலி ,புரிந்ததா…? இப்ப சொல்லு உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்….
அவளோ அமைதியாக அவனைப் பார்த்து வெளியே போ ….என்னுடைய அறையை விட்டு வெளியே போடா ….
ஏன்டி , என்னை பிடிக்கவில்லையா…? அவனின் முகம் சோகமாக மாற,
அவனை சரமாரியாக அடித்தவள், ” நீ என்னை காதலிக்கிறேன்னு சொல்ல எத்தனை நாள் டா உனக்கு தேவை ….?” நானும் இப்ப சொல்லுவ…? அப்ப சொல்லுவனு பார்த்தா , சார் இப்பதான் சொல்றாரு … அதுவும் என்னை நல்லா அழ வெச்சிட்டு…. போடா ….
“அச்சச்சோ” என்னுடைய செல்லம் என்னுடைய காதலுக்காக எதிர்ப்பார்த்து இருந்தீங்களா…? அது இந்த மாமனுக்கு தெரியாம போச்சே….! ஏங்க மேடம் நீங்க வந்து உங்க காதலை என்கிட்ட சொல்லி இருக்கலாமே…? நீங்க ஏன் சொல்ல வில்லை…?
நீ வந்து முதல்ல சொல்லுனு எதிர்பார்த்தேன்….
நான்தானே இப்பவும் முதல்ல சொன்னேன்…. இப்ப நீங்க உங்க வாயால உங்க காதலை சொல்லுங்க….
முடியாது போடா…. என்னை அழ வெச்சிட்டு இப்ப வந்து அன்பா பேசுனா நான் சொல்லிடனுமா…? முடியாது போடா….
இதெல்லாம் சரியே இல்லையே…! இப்படி ஏடாகூடமாக பேசுற இந்த வாய்க்கு ஏதாவது தண்டனை தரணுமே என யோசிக்க….
தண்டனை தானே நான் தருகிறேன் என்று அவனின் உதட்டை நறுக்கென்று கடித்து வைத்தாள் சுமதி….
“ஆ” என்ற சத்தத்தோடு, அவனின் வலிக்கு அவளின் முத்தத்தின் மூலமே மருந்தை பூசி கொண்டான் ராம்.
உதிரனும் நுவலியும் பேரு (Pair uh), ரெண்டு பேருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு ரொம்ப கேரு (Care uh)…
மிக்க நன்றி சகோ🥰
கடைசியா ராமும், சுமதியும் சொல்லிட்டாங்க காதலை, இனியும் கதையில வருமா மோதல்.
Thank you sago 🥰
Ooii love birds oru valiya kadhala solli sernthutunga… Aana intha nuvali innum divorce pathi kekalaye…
Thank you sago 🥰