Loading

வணக்கம் மக்களே வாங்க  கதைக்குள்ள  போகலாம்……….

 

தொலைத்தேனடி – 5  💖💖💖💖💖

 

                    அபி பயந்துகிட்டே  வீட்டுக்கு வந்தா………. அவளோட முகத்தை பார்த்த லதா வேலை கிடைக்கவில்லையோ என்று நினைத்து விட்டார்……..

 

லதா: பாப்பா என்ன ஆச்சு

அபி:  ஒன்னும் இல்லை மா

லதா: அப்புறம் முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு

அபி: அப்படிலாம் இல்ல மா

லதா: இல்லை ஏதோ இருக்கு பொய் சொல்லாத வேலை கிடைக்காதா

அபி: நான் சொன்னேனா

லதா : ஏன் அப்புறம் இப்படி இருக்க

அபி: தலைவலி

லதா ;  இரு இரு காபி கொண்டு வரேன்

 

                            லதா அபிக்கு காப்பி கொண்டுவந்து கொடுத்தாங்க……… அபி அமைதியா அந்த காப்பிய யோசனை பண்ணிட்டே குடிச்சா………

 

லதா:  அபிமா  பயப்படாத கல்யாணம் அவளோ கஷ்டமா இருக்காது

அபி: மா நான் இப்போ எனக்கு வேலை கிடைக்காதுனு சொன்னேனா

லதா: அதான் உன் மூஞ்சிலேயே எழுதி ஒட்டி இருக்கு

அபி : அப்படி எல்லாம் இல்ல எனக்கு வேலை கிடைக்கும் நீங்க கம்முனு போங்க

 

                       அபி அவளோட ரூமுக்கு போக போன  ஆனால் லதா அவளை விடுவதா இல்லை……….. அவ பின்னாடியே ரூமுக்கு போனாங்க………

 

லதா: இங்க பாரு  அபி நீ பயப்பட இதுல ஒண்ணுமே இல்ல

அபி: மா என்ன கொஞ்ச நேரம் தனியா விடுங்க

லதா: அப்படிலாம் விட முடியாது எனக்கு பதில் சொல்லு 

அபி: என்ன மா சொல்லணும் எனக்கு வேலை  கிடைக்கலைன்னா தான    இந்த கல்யாணம்  எனக்கு வேலை கண்டிப்பா கிடைக்கும்

லதா: பார்க்கலாம் இன்னும் ரெண்டு நாளில தெரிஞ்சுடும் அப்புறம் உன்னை பார்த்துக்கிறேன்.

 

                         அவங்க சொல்லிட்டு  அங்க இருந்து போயிட்டாங்க………. அபி என்ன செய்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தா…….. 

அபி mv : இப்போ வேலை கிடைக்குது கிடைக்கல அது அடுத்த விஷயம்   நம்ப அந்த பிரேம் கிட்ட வேலை செய்ய முடியுமா அவன் முகத்தையே பாக்க கூடாதுன்னு இருக்கேன் இப்போ அவன் கூட எப்படி வேலை செய்கிறது கல்யாணம் கூட அப்பாகிட்ட பேசி நிறுத்திவிடலாம் ஆனால் அந்த  பிரேம்…………. கடவுளே என்ன செய்யறது…….. ஆனா இப்போ நமக்கு வேறு வழியும் இல்லை அப்பா கிட்ட   பேசியும் அம்மா கேட்க மாட்டாங்க என்னதான் செய்வது…………..

 

                        அபி இவ்ளோ யோசிப்பதற்கு காரணம் அந்த பிரேம் தன்னோட பருவ வயதில் ஏற்பட்ட காதலின் விளைவு தான் இது   அந்த காதல்  அவளின் வாழ்வை புரட்டிப் போட்டது………… தனக்கு ஏற்பட்ட அவமானம் வழி மனக்கசப்பு இது எல்லாமே சேர்ந்து இனி கல்யாணமே வேணாம் என்று அவள் மனதில் பதிந்து விட்டது ஆனால் என்ன செய்ய விதி வலியது அவனிடமே அவளை கொண்டு வந்து சேர்த்துவிட்டது……….

 

லதா :  பாப்பா உண்மைய சொல்லு நாங்க தானே  ஜெயித்தோம்

அபி; மா அப்படிலாம் இல்லை எனக்கு கண்டிப்பா வேலை கிடைக்கும் நீங்க போங்க முதல்ல

லதா: சரிதான் போடி

 

                               லதா வெளிய வந்துட்டாங்க………..

 

அபி: கடவுளே இவங்க கிட்ட மல்லுக்கட்ட முடியாது அதுக்கு அந்த பிரேம் கூடவே குப்பை கொட்டி விடலாம் பாக்கலாம் என்ன நடக்குதுன்னு………..

                   

 

பிரேம் இல்லம்,

 

பிரேம்: மா

ஷீலா: வாப்பா……… ஏதாவது குடிக்கிறியா

பிரேம்: அதெல்லாம் எதுவும் வேண்டாம்…….. இங்கு வாங்க உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்

ஷீலா: சொல்லுடா

பிரேம்: என்ன கல்யாணம் பண்ணிக்கோ சொல்லுவீங்களா அதற்கான பதில் சீக்கிரமா உங்க முன்னாடி கொண்டு வந்து  நிறுத்துகிறேன்

ஷீலா: நம்பலாமா

பிரேம்: கண்டிப்பா

ஷீலா: சரிப்பா

                         பிரேம் அவனோட PA க்கு போன் பண்ணான் ………

பிரேம் : வீட்டுக்கு வா

பிரேம் PA : சரி சார்       

             கொஞ்ச நேரத்துல அவன் பிரேம் வீட்டுக்கு வந்துட்டான் ……….

பிரேம் PA : சார் கூப்பிட்டீங்க

பிரேம் : இந்தா

பிரேம் PA : என்னது சார் இது

பிரேம் : இனிமே உனக்கு இங்க வேலை இல்லை நீ போலாம்

பிரேம் PA : என்னாச்சு சார் …….😳😳😳😳

பிரேம் ; பயப்படாத நம்மளோட பெங்களூரு பிரென்ச் நீ தான் பாக்கணும் இனி

பிரேம் PA : ஆனா சார் என்ன ஆச்சு

பிரேம் : ஹே மேன் சில் நீயும் எத்தனை நாள் எனக்கு PA வா இருப்ப அதான் உனக்குன்னு தனியா பொறுப்பு குடுத்திருக்கேன் போ அதை ஒழுங்கா செய்

பிரேம் PA : சரி சார் ஆனா

பிரேம் : என்ன மேன்

பிரேம் PA:ஆனா சார் இங்க உங்களுக்கு யாரு PA

பிரேம் : இன்னிக்கு செலக்ட் பண்ண பொண்ணு தான்

பிரேம் PA: சார் எனக்கு ஒரு சந்தேகம் இப்போ நீங்க என்னை பொறுப்பு வரணும்னு அங்க அனுப்புறீங்களா இல்லை அந்த பொண்ணு உங்களுக்கு PA வா இருக்கணும்னு என்னை அனுப்பறீங்களா

பிரேம் : ரெண்டும் தான்

பிரேம் PA: சரி சரி சார்

பிரேம் : கிளம்பு நாளைக்கு காலைல அங்க இருக்கனும் நீ

பிரேம் PA: சரிங்க சார்

                     அவன் சிரிச்சுட்டே கிளம்பிட்டான் ……….

பிரேம் : பேபி ஐ அம் கமிங் போர் யு ……..இனிமே என்கிட்ட இருந்து உன்னை விடமாட்டேன்

அபி இல்லம் ,

அபி mv : என்ன டா பண்றது ஒரே குழப்பமா இருக்கு அவன் நம்பலை வேலைக்கு எடுப்பான் ……ஆனா நம்ப போகணுமே ………..போனா இவன் கூட நம்ப வேலை செய்ய முடியுமா ஒருவேளை அம்மா சொன்ன போல கல்யாணம் பண்ணிக்கிட்டா அது வாழ் நாள் சிறை ஆகிடும் உண்மையான வாழ்கை வாழாம நம்பலை கல்யாணம் பண்ணிக்கிட்டவன்க்கும் நம்ப துரோகம் பண்ற போல ஆகிடும் இல்லை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது …………எல்லாத்துக்கும் காரணம் அவன் தான் என் நிம்மதியை கெடுத்துட்டான் ………..பாவி ……………

                             எல்லாருக்கும் அந்த வயசுல காதல் வரும் தான் ஆனால் நம்ப அபிக்கு அது ரொம்ப மனசுல ஆழமா பதிஞ்சுடுச்சு கல்யாணம்னாலே அவன் மட்டும் தான் ஞாபகம் வரான் ……….அவன் ஏற்படுத்தின காயம் அவ மனசுல ஆழமா இருக்கு இன்னும் ………….

 

அபி : பாவி என்ன இப்படி புலம்ப வெச்சுட்டானே என்ன தான் பண்ணுவேன்

                 லதா மறுபடியும் உள்ள வந்தாங்க ………

லதா : பாப்பா

அபி : என்ன மா

லதா : ஒரு வரன் வந்துருக்கு

அபி : மா ………..(கத்துனா )

லதா : ஏன் டி இப்போ கத்துற நான் என்ன சொன்னேன் இப்போ

அபி : இந்த கல்யாண பேச்சை விடு மா

லதா : அது எப்படி டி

அபி : மா ப்ளீஸ்

ராஜா : லதா என்ன இது

லதா : பாருங்க அவ வரும் போதே மூஞ்சிய பார்த்தேன் சரில என்னனு கேட்டா ஒன்னும் இல்லன்னு சொல்றா

அபி : அம்மாவை பாருங்க பா நான் இன்டெர்வியூல தோத்துட்டேன் அப்போ நாங்க சொன்ன போல கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்றாங்க

லதா ; அடிப்பாவி நான் எப்போ அப்படி சொன்னேன்

அபி : அப்பரும்

லதா : இங்க பாருங்க அவ வரப்போவே ஒரு மாறியா வந்தா நான் என்ன ஆச்சுன்னு கேட்டேன் ஒன்னும் சொல்லல வேலை கிடைக்காதான்னு கேட்டேன் அதுக்கும் ஒன்னும் சொல்லல அப்போ நான் என்ன நினைப்பேன் அதான் கல்யாணம் பத்தி சொன்னேன்

ராஜா : அட ஆண்டவா ரெண்டு பேரும் கம்முனு இருங்க இன்னும் ரெண்டு நாள் இருக்குல்ல பாத்துக்கலாம் சும்மா சும்மா அதே பேசிகிட்டு வா லதா எனக்கு சாப்பாடு எடுத்து வெய் பசிக்குது

லதா : ஆமா உங்க புள்ளைய சொன்ன மட்டும் வந்துடுங்க

ராஜா : வா மா வா மா …….

            லதா சாப்பாடு எடுத்து வெக்க போய்ட்டாங்க ……………….அபியும் பின்னாடியே போனா ………..

அபி : மா

லதா : என்னடி

அபி : கோச்சுக்காத மா

லதா : அப்பரும்

அபி : இன்னும் இரண்டு நாளுல ரிசல்ட் வந்துடும் பாருங்க கண்டிப்பா நான் செலக்ட் ஆகிருப்பேன்

லதா : ஒருவேளை ஆகலினா

அபி : ஆகலினா நீங்க சொல்ற மாறி கல்யாணம் பண்ணிக்குறேன்

லதா : இப்போ தான் என் தங்க பொண்ணு

அபி : 😊😊😊😊

            லதா சாப்பாடு எடுத்து வெச்சாங்க ………எல்லாரும் உக்காந்து சாப்பிட்டாங்க ……….அபி அவளோட ரூம்க்கு வந்துட்டா ……….

அபி : அவன் என்னை எப்படியும் செலக்ட் பண்ணிடுவான் …….ஆனா அவன் முகத்தை டெய்லி பாக்கணும்

                 அவளோட கடந்த காலத்தை நினைச்சுட்டே கண்ணு மூடி படுத்தா ………அப்படி என்ன ஆகியிருக்கும் பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில் …………..

மீண்டும் அன்பில் …………

 

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்