Loading

கோபகனலாய் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தான் நீதிமான்.

அவன் எதிர்பார்க்காத ஒன்று நடந்தது அவனுக்கு . முன்பு ஒரு முறை நேரடியாக தாக்கியதை போலவே இப்பொழுதும் நேரடியாக தான் உதிரன் தாக்குவான் அந்த விசயத்தை வைத்தே மக்களிடம் நல்ல பெயர் வாங்கி மறுபடியும் அமைச்சர் ஆகிவிடலாம் என்ற கனவில் “அவன் ஒரு கணக்கு போட்டு வைத்திருந்தான் ” . ஆனால் இன்று நான் நினைத்தது நடக்காமல் அத்தனையும் தலை கீழாக நடந்தது தான் அவனை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அடைய காரணம்.  

       அண்ணே! என்ன யோசித்துக்கொண்டு இருக்கிறீர்கள்? எல்லாம் நம்முடைய கையைவிட்டு போய் விட்டது . உங்க கட்சியில் இருந்தவர்களே உங்களுக்கு எதிரான மாறிவிட்டனர். தலைவர் இப்பொழுது தான் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி கொடுத்து இருக்காரு அந்த வீடியோவை நீங்களே பாருங்கள் என்ற அவனிடம் இருந்து போனை வாங்கி பார்த்தவனுக்கு இன்னும் கோவம் தான் அதிகமாக வந்தது. அவர்களின் கட்சி தலைவர் சுகுமாறன் பத்திரிக்கையாளர்களிடம் கூறியது ” என்னுடைய கட்சியில் இருக்கும் தொண்டர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் ‘ மக்களுக்காக வாழ்வது , மக்களுடைய சொத்தை அபகரிப்பது அல்ல!” நாட்டுக்காக தன்னை அர்பணிக்க வேண்டுமே தவிர நாட்டின் சொத்துக்களை தனதாக்கி விற்றுக் கொள்வது அல்ல!”. என்னுடைய கட்சியில் இருக்க நீதிமானுக்கு எந்த தகுதியும் இல்லை. இத்தனை நாட்கள் அவர் எங்களையும் இந்த நாட்டையும் ஏமாற்றி வாழ்ந்து இருக்காரு “அவரை எங்கள் கட்சியில் இருந்து உடனே நீக்குகின்றோம் “. அவருக்கு கொடுத்த அமைச்சர் பதவியையும் அவரிடம் இருந்து திரும்ப பெறப்படும். நான் ஆணை பிறப்பிக்கின்றேன் ” நீதிமானை பிடித்து சிறையில் அடைத்து ஆயுள்தண்டனை அல்லது தூக்கு தண்டனை கொடுங்கள் “. அந்த போனை தூக்கி எறிந்தான் நீதி. 

         அண்ணா! சொல்லுங்கள் இப்பவே அந்த உதிரனை தூக்கிடலாமா?

          நீ எதுவும் பண்ண வேண்டாம்! நான் சொல்லும் போது செய்தால் போதும். அவனை கொலை பண்ணி என்னுடைய பழியை தீர்த்துக்கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. நான் எப்படி பதவி , அந்தஸ்து எல்லாம் இழந்துவிட்டு இருட்டில் வலியோடு இருக்கின்றேனோ அதே போல அவனும் வலியோட வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும். அவன் சாக கூடாது …. “சாகவே கூடாது ஆனால் அவனை சுற்றி இருக்கும் அனைவரும் வலியால் துடி துடித்து இறக்க வேண்டும்” அதைப் பார்த்து …. பார்த்து இவன் ஆயுள் முழுவதும் என்னை ஏன் பகைத்து கொண்டோமோ என்பதை நினைத்து …. நினைத்து வருந்த வேண்டும். நமக்கான காலம் வரும் அது வரைக்கும் காத்து இருப்போம் . வில்லத்தனமாக எதையோ யோசித்து எதையோ பேசிக்கொண்டு இருந்தான் நீதி.

           தன்னவன் தன்னை விட்டு தொலைதூரம் சென்றாலும் அவனின் வாசமும் நினைவும் தன்னுடனே இருப்பதாய் உணர்ந்தாள் நுவாலி. தன்னுடைய மனதில் இப்பொழுது தான் சிறு வலியை உண்டாக்கி இருந்தாள். 

       காஷ்மீர் சென்றவர்கள் மகிழ்ச்சி களிப்பில் அனைவரும் அறையில் பார்ட்டி வைத்து என்ஜாய் செய்துக்கொண்டு இருந்தனர். உதிரனை மட்டும் தன்னை வந்து பார்க்கும் படி சொன்னார் சர்மா. 

   நேராக அவரிடம் சென்றவன் , ” சொல்லுங்க சார் ? என்னை அழைத்ததற்கான நோக்கம் என்னவோ? “

         நீ செய்த காரியத்திற்கு உனக்கு இரண்டாவதாக ஒரு திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைக்கின்றேன் . அதை பற்றிய உன்னுடைய கருத்து என்னவோ? இதை பற்றி பேசலாம் என்று தான் அழைத்தேன் “கிண்டலாக சர்மா பேச”.

         நோ…. நோ நான் ஏக பத்தினி விரதன். என்னுடைய நுவாலியை இருக்கும் இதயத்தில் வேற எந்த பெண்ணிற்கும் இடம் இல்லை. அவள் ஒருவளே என்னுடைய மனைவி’ அவளைத் தவிர வேறு யாரையும் நான் கனவில் கூட நினைக்க மாட்டேன்! உங்களுக்கு இப்ப யாருக்காவது அந்த பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என தோன்றினால் நீங்களே அந்த பொண்ணை கல்யாணம் செய்துக் கொள்ளுங்கள். நான் வேண்டும் என்றால் இந்த விசயத்தை பற்றி அம்மாவிடம் பேசுகின்றேன் “இவனும் அதே கிண்டலுடன் கேட்க “.

        நீ எதையும் பண்ண வேண்டாம் டா! இப்பொழுது நார்மல் மோடிற்கு வந்தவர் “உன்னை போய் அங்க பாதுகாப்பு கொடுக்க சொன்னா? நீ என்ன டா பண்ணி வச்சி இருக்க ? அந்த அமைச்சரின் கனவையே கொளுத்தி போட்டுவிட்டு வந்து இருக்க “. அந்த ஆளு எவ்வளவு ஆசையாக தொழிற்சாலையை திறக்கலாம் என்ற நினைப்போடு வந்து இருப்பாரு? இப்படி அவருடைய மூஞ்சில கரியை பூசிவிட்டாயே டா ! இந்த ஆப்ரேஸனின் உனக்கு எதாவது ஆகி இருந்தால் நான் என்னப் பண்ணுவேன் என்று நினைத்து பார்த்தாயா? என்னுடைய பொண்ணுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? அதை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் நீயாக உன்னுடைய இஷ்டத்திற்கு ஏதாவது பண்ற ? 

          வருத்தமாக பேசும் அவரை பார்த்து சிரிப்பு தான் வந்தது உதிக்கு. சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு “அவரை அணைத்து சமாதானம் செய்தான் “. அவரை சாதரணமாக மாற்ற நினைத்து “எனக்கு எதாவது ஆகி இருந்தால் என்ன பண்ணுவேன் என்று இவ்வளவு ஃபீல் பண்றீங்களே? என்னுடைய டீம் வீரர்கள் யாருக்காவது எதாவது ஆகி இருந்தால் ஃபீல் பண்ணமாட்டீர்களா? சார் “.

       அவங்களை பாதுகாக்க தான் நீ இருக்கியே? அப்புறம் அவங்களை நினைத்து எனக்கு என்ன கவலை டா!

அவனை விட்டு விலகி நின்றவர் ” எதுக்கு டா மேத்தாவின் துப்பாக்கியை எடுத்த ?” 

        நானா ? எந்த துப்பாக்கி? அவருடையது நான் ஏன் எடுக்க போறேன்? எனக்கே ஒரு துப்பாக்கி இருக்கும் போது ? என்ன பா காமெடி பண்றீங்களா? அந்த மேத்தா எங்கையாவது துப்பாக்கி வைத்துவிட்டு மறந்து இருப்பாரு? போய் அவரை நன்றாக தேட சொல்லுங்கள்!

         டேய் நீ யாரு என்று எனக்கு தெரியும். நீ எந்த நேரத்தில் எப்படி பண்ணுவ என்றும் என்றும் எனக்கு தெரியும் டா! நீ என்கிட்டையே கதையை அளக்காத டா! எதுக்காக டா அவருடைய துப்பாக்கியை எடுத்த ?

           ஈ….. ஈ… அவருடைய கண்ணம் கிள்ளி சூப்பர் கண்டு பிடித்து விட்டீங்க பா. அந்த ஆளு துப்பாக்கி எதற்கு எடுத்தேன் என்றால் ” கொஞ்ச நாளைக்கு அவருடைய சொந்த விசயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்ற நல்ல காரணத்திற்காக மட்டும் தான்!”

        என்னது! நல்ல விசயமா டா? நீ துப்பாக்கியை எடுத்தது? அவரு அழுது விட்டாரு டா, துப்பாக்கி காணாமல் போனதில் இருந்து சரியாகவே சாப்பிடவில்லை போல? கொஞ்சம் ஒல்லியாக மாறிவிட்டார் டா. உனக்கும் தெரியும் தானே! “துப்பாக்கி காணாமல் போனால் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்று? அவருக்கும் வயது ஆகிவிட்டது டா” கடைசி காலத்தில் அவரை மன்னித்து விட்டு விடுடா. துப்பாக்கி மட்டும் கிடைக்கவில்லை என்றால் இவரோடு சேர்ந்து இவருடைய குடும்பமும் காலம் முழுவதும் தண்டனை அனுபவிக்கும் டா. 

         சரி…. சரி கொடுக்கின்றேன், ஆனால் மறுபடியும் அந்த ஆளு ஏதாவது தில்லு முல்லு பண்ணால்? மறுபடியும் காணாமல் போய்விடும். அந்த அரசியல்வாதி நீதிமானுக்கு இவரு எல்லாத்திற்கும் உதவி பண்ணாரு அந்த கடுப்பு தான் வேற எதுவும் இல்லை பா. அவரின் அறையில் இருந்த துப்பாக்கியை எடுத்து அவரிடம் நீட்டினான்.

         சர்மா, அதிர்ச்சி ஆகி “என்ன டா என்னோட அறையில் துப்பாக்கியை வைத்து இருக்க?” இத்தனை நாட்களாக இதை நான் கவனிக்க வே இல்லை.

         வேற எங்க வைத்தாலும் பாதுகாப்பாக இருக்காது பா! அதனால் தான் உங்க அறையில் வைத்தேன். நான் இப்ப கிளம்புறேன் எதாவது என்றால் என்னை கூப்பிடுங்கள் என்று அவன் சென்று விட்டான். சர்மா தான் தன்னுடைய மனதில் ‘ இவனை வைத்துக்கொண்டு ‘ என்று சிரிக்க ஆரம்பித்துவிட்டார். மேத்தாவை வர வைத்து அவருக்கு சில அறிவுரைகளை கூறி மறுபடியும் துப்பாக்கியை தொலைக்காமல் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள சொன்னார். துப்பாக்கியை கையில் வாங்கியவுடன் தான் மேத்தாவுக்கு உயிரே வந்தது. சர்மாவிற்கு நன்றியை தெரிவித்துவிட்டு சென்றார் மேத்தா. 

        பூமி சுழன்று நாட்களை நகர வைக்க,

    நுவலி, போர் அடிக்கிறதே! எல்லா வேலையும் வேலைக்காரர்களே செய்து விடுகிறார்கள் நமக்கு எந்த வேலை இல்லை. சரி நாம வீட்டு முன்னாடி இருக்கும் பூச்செடிகளாயாவது போய் பார்த்து நேரத்தை கடத்தலாம் என நினைத்தவள் வீட்டின் வெளியே நின்று செடிகளை ஆராய்ச்சி செய்துக்கொண்டு இருந்தாள். 

     ஏய் பொண்ணு இங்க வா’ எதிர் வீட்டு திண்ணையில் ஒரு வயதான பாட்டி உட்கார்ந்துக் கொண்டு நுவலியை அழைத்துக்கொண்டு இருந்தார். 

       என்னுடைய பெயர் ஒன்னும் “ஏய்” இல்லை. என்னுடைய பெயர் “நுவலி”..

           என்னது ” காவாலியா”..

       நுவலி, காவாலி இல்ல பாட்டி ,நுவலி…

        அது என்னவோ ஒரு “லி”….. “பேரு வெச்சிருக்க பாரு வாயில நுழையாத பெயரை உங்கப்பன்”.அந்த காலத்துல எங்க அப்பன் எனக்கு “முனியம்மா”னு எப்புட்டு நல்ல பெயரை வெச்சாங்க தெரியுமா?. எப்படி இருக்கு என்னுடைய பேரு? நீயும் வெச்சிருக்க பாரு “காவாலி”னு ….

    எது ” முனியம்மா ” நல்ல பெயரு.. “நுவலி”நல்ல பெயரு இல்ல . எல்லாம் கலிகாலம் டா சாமி.

      முனியம்மா, ஆமா ஏமா உன்னுடைய பெயரு என்ன “காவாலியா ,மாவாலியா”,. இங்க பாரு “உ புருசன் ஓடிபோயிட்டானாமே நெசமாவா”….?

        அவரு ஓடி போகல ….! வேலைக்கு போயிருக்காரு…..

        உனக்கு கல்யாணம் ஆகி எத்தனை நாள் ஆகுது…. எனக்கு எல்லாம் கல்யாணம் ஆன உடனே குழந்தை பொறந்திடுச்சி…. உனக்கு இன்னும் கொழுந்தை பிறக்கல…?

      ” கடவுளே “காப்பாத்து…. எனக்கு கல்யாணம் ஆகி மூனு மாசம்தான் ஆகுது…. அதுக்குள்ள குழந்தையா…! இந்த கிழவியை முதல்ல போட்டு தள்ளனும்…. “அடேய்! உதிரன் உன்னால் தான டா! இந்த கிழவி எல்லாம் என்னை கலாய்க்கிறது என நினைத்தவள் ” அந்த பாட்டியிடம் வேற என்ன பேசுவது ? நாம அமைதியாக வீட்டின் உள்ளே போய்விடலாம்’ தவறாக எதாவது பேசிவிட்டால் நம்முடைய மனது தான் வருத்தப்படும் என யோசித்துக்கொண்டு இருந்தாள்.   

         அந்த நேரம் சரியாக மணி பாட்டி வந்தவர் நேராக எதிர் வீட்டு பாட்டியிடம் சென்று “ஏன்டி முனியம்மா கொஞ்ச நேரம் கூட அமைதியாக இருக்க மாட்டீயா? யாருகிட்ட என்ன பேசுறோம் என்ற இங்கீதம் கூட இல்லையா உனக்கு ?” மத்தவங்க வருத்தத்தில் இருக்கும் போது கிண்டல் பண்ற மாதிரி பேசி அவங்க மனதை நோகடிக்காதே! ஒழுங்கா பேசுவது என்றால்? என்ற பேத்திகிட்ட பேசு இல்லையேல் அமைதியாக இரு. நுவலியின் பக்கம் திரும்பி நீ உள்ள வாடா! அவ இருக்கிறா வெட்டியா ? ஏன்டா கண்ணு உன்ற முகம் ஒரு மாதிரியாக வாடி இருக்கு? உதிரன் நியாபகம் வந்து விட்டதா? இல்லை அந்த முனியம்மா பேசியது வருத்தமாக இருக்கிறதா? உனக்கு என்ன வேண்டுமோ அதை தாராளமா பண்ணு டா. உன்னை யாரும் இங்க எதுவும் சொல்ல மாட்டாங்க புரிகின்றதா ? உனக்கு உன்னுடைய பெற்றோரை பார்க்க வேண்டும் போல இருந்தாலும் போய் பாரு டா கண்ணு.

       அதெல்லாம் ஒன்றும் இல்ல பாட்டி . மணியின் கண்ணத்தை கிள்ளி ” எனக்கு இந்த மாதிரி ஒரு தோழி இருக்கும் போது எனக்கு என்ன கவலை வரப்போகிறது” ஆனால் மாமா தான் எப்படி இருக்காருனு தெரியவில்லை? அவரை பார்த்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகுது .அவரை பார்க்க வேண்டும் போல தோணுது பாட்டி. 

          நுவலியை ஆதரவாக அணைத்துக்கொண்டு ” நீ ஒன்னும் கவலைப்படாதே டா என் கண்ணு ” எல்லாம் சீக்கிரமாகவே சரி ஆகி விடும். பாட்டிக்கு ஏதோ மண்டையில் தோன்ற உடனே நுவலியின் கையை பிடித்து நாடித்துடிப்பை பார்த்தார் . அது இரண்டாக துடிக்க பாட்டியின் முகத்தில் புன்னகை தாண்டவம் ஆடியது. நுவலியின் நெற்றியில் முத்தம் இட்டு ” என் கண்ணு நம்ம வம்சத்திற்கு புது வாரிசை கொண்டு வந்து விட்டடியம்மா! “

 வனஜா … டேய் கண்ணா எங்க இருக்கீங்க?

     கண்ணன், சொல்லுங்க மா? எதுக்கு மா இப்படி சத்தம் போட்டு கொண்டு இருக்கீங்க?

      அடேய் நீங்க ரெண்டு பேரும் தாத்தா பாட்டி ஆக போறீங்க! நான் கொல்லு பாட்டி ஆக போறேன் டா. சீக்கிரம் வசுமதிக்கும் இரத்னத்திற்கும் போன் போட்டு சொல்லு டா! இருவரும் மகிழ்ச்சியில் திக்கு முக்காடி விட்டனர். வசுமதிக்கு போனில் விசயத்தை சொன்னதும் , அவரும் அந்த விசயத்தை தன்னுடைய கணவருக்கு சொல்ல ” ரத்னம் அழுதே விட்டார் “. வசுமதிக்கு தான் போதும் …. போதும் என்றாகிவிட்டது அவரை சமாதானம் படுத்துவதற்குள். 

        மகிழ்ச்சி , சோகம் , அதிர்ச்சி எல்லாம் ஒரு சேர நுவலியை தாக்கி இருக்க, தன்னுடைய அறையில் மெதுவாக அவளின் வயிற்றை தொட்டு பார்த்தாள். அவளுக்கே அவளின் வயிற்றை தொட்ட உணர்வு போன்று இல்லை ஆனால் தொட்டு பார்த்தாள்.இந்த மாதிரி உணர்வுகள், செயல்கள் எல்லாம் இவளுக்கு புதியதாக இருந்தது. தன்னுடைய மூச்சை நன்கு இழுத்து விட்டுக்கொண்டு உதிரனுக்கு வீடியோ கால் செய்தாள். இரவு முழுவதும் வேலைச் செய்து விட்டு அப்பொழுது தான் தன்னுடைய அறையில் குளித்துவிட்டு வந்து கட்டிலில் உட்கார்ந்து கொண்டு இருந்தவனின் போனில் அலற ‘ அதை எடுத்து அட்டண் செய்தவன் முதலில் பார்த்தது ” முகத்தில் சிரிப்பும் , கண்களில் வலியையும் கொண்ட தன் மனைவியை தான் “. அவளுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை? அழுகை மட்டுமே வந்தது. அவளின் அழுகையை கண்டவன் பதறிப்போய் என்னாச்சு மா? ஏன் அழுகின்றாய் ? எதாவது பிராப்ளம் மா? அவள் இல்லை என்று தலை ஆட்டிவிட்டு தன்னுடைய சேலையை வயிற்று பகுதியில் நீக்கி அவனுக்கு காண்பித்து சிரித்தாள். அவளின் கண்ணீரும் சிரிப்பும் இவனிடம் விசயத்தை சொல்ல ‘ போனிலே அந்த வயிற்றில் பல முத்தங்களை கொடுத்தான். நான் உடனே விடுப்பு கேட்டுவிட்டு வருகின்றேன் டி. நீ இப்படி இன்னொரு முறை அழுவ கூடாது புரிகின்றதா? அவனின் சோர்வு எல்லாம் எங்கே சென்றது என்றே தெரியவில்லை?. நுவலி, “ஆம் ” என்று தலையாட்ட , இருவரும் பல கதைகள் பேசிவிட்டு தன்னுடைய போனை வைத்தனர். உதிரனுக்கு இப்பொழுதே அங்க இருந்து இங்க பறந்து போகவேண்டும் என தோன்றியது ஆனால் அந்த மாதிரி நடக்காது என தெரிந்தும் அவனின் மனதில் தோன்றியது. அவளின் ஒவ்வொரு செக் அப்பிற்கும் தான் கூடவே இருக்க வேண்டும் என்று அவனின் காதல் மனது எண்ணியது . ஆனால் நடைமுறையில் இது சாத்தியம் அற்றது என அவனுக்கும் தெரியும். தன்னுடைய போனில் அவளின் போட்டோவை பார்த்துக் கொண்டே ” சாரி டி என்னால் மற்ற கணவர்கள் போல உன் கூட இருக்க முடியாது! என்னால் உன்னுடைய பல ஆசைகளை மண்ணில் புதைக்க வேண்டிய நிலை ” அவனின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டு இருந்தது. சோனாவிடம் போனில் பேசிவிட்டு அறைக்குள் வந்தவன் உதியின் நிலைமையை கண்டு பயந்துபோய் விட்டான். எதற்கும் எந்த சூழ்நிலையிலும் அழாதவன்” எதிரியிடம் மாட்டிக்கொண்ட போது கூட அவனின் பார்வை மண்ணை தொட்டது இல்லை”. அவனின் வீரத்தையும் திமிரும் கண்டும் எதிரிகளே வியந்து போவார்கள் அப்பேற்பட்டவன் இன்று சிறு குழந்தை போல அழுவதை பார்த்து ” வேகமாக அவனை அணைத்துக்கொண்டு என்ன ஆச்சு டா? ஏன் டா ?” 

          அவனின் அணைப்பிலே இருந்துக்கொண்டு “நான் அப்பாவாக ஆக போறேன் டா” ஆனா எங்களால் மற்ற கணவன் மனைவி மாதிரி வாழ முடியாதே டா. ‘ என்னை கல்யாணம் செய்துகொண்ட ஒரே காரணத்தினால் அவளின் ஆசை எல்லாம் அவளின் மனதிலே புதைத்துக் கொண்டு இருக்கா டா’ என்னால் முடியவில்லை டா? ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. 

         சிங், என்ன சொல்வது என்றே தெரியவில்லை? அவனின் எண்ணங்கள் மிக சரியானதே என்று தோன்றியது. அவனை சமாதானம் படுத்தி சாப்பிட வைத்து உறங்க வைத்தான். அவனுடன் இந்த இத்தனை வருட நட்பில் இப்படி நிலைமையை பார்த்ததே இல்லை. எப்படி இருந்தவன் இப்படி குழந்தை போல அழுகின்றானே! அப்போ நம்ப நிலைமை என்னவாக இருக்கும் ‘ நினைத்து பார்க்கும் போதே கொடுமையாக இருக்கிறதே!’ என நினைத்தவன் தன்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தான். 

            நுவலிக்கு பிடித்த பலகாரங்கள் எல்லாவற்றையும் செய்துக்கொண்டு வந்தனர் வசுமதியும் ரத்னமும். அனைவரும் வீட்டில் தாங்கு தாங்கென்று தாங்கினார்கள். உதிரன் விடுப்பு கேட்க சர்மாவிடம் பேசும் முன் அவரே முந்திக்கொண்டு தீவிரவாதிகளின் அட்டுழியங்களை பற்றி கூறிவிட்டு ” நீ தான் டா எல்லையில் இருந்தால் சரியா இருக்கும் டா “. அவரிடம் எதுவும் கூறாது சரி என்று மட்டும் தலை ஆட்டிவிட்டு சென்றான். நுவலியிடம் இந்த விசயத்தை வருத்தத்துடனே கூற “அவளோ இவனுக்கே ஆறுதல் சொல்லி மாமா நீங்க பத்திரமாக இருங்கள் “. என்னை பார்த்துக்கொள்ள தான் எனக்கு இத்தனை உறவுகள் இருக்கின்றதே! இருவரும் தங்களின் வருத்தங்களை மாறி மாறி மறைத்துக்கொண்டு பேசினார்கள். 

          “நாட்கள் எட்டு வைத்து போகாமல் ஓடியது” . இன்று நுவலிக்கு ஐந்தாம் மாத பூ முடிப்பு செய்து இருந்தனர். ஐந்து வகையான சாதங்களை செய்து அவளை மகிழ்ச்சிப் படுத்தினார்கள். தன்னுடைய மகிழ்ச்சியை உதியிடம் மட்டும் பகிர முடியாமல் போனது ” அவனுடைய போன் ரீச் ஆகாமல் இருந்தது . அகடாமியில் தான் அவ்வபோது அவனின் நிலைமையை பற்றி கூறுவார்கள் ஆனால் அவனிடம் மட்டும் பேச முடியவில்லை!”.

          ஏழாவது மாத பூ முடிப்பை ராமும் சுமதியும் நாங்கள் தான் பண்ணுவோம் என்று அடம் பிடித்து அவளுக்கு விழா செய்தனர். உதியிடம் பேசமுடியாத பல சின்ன சின்ன ஆசைகளை தன்னுடைய குழந்தையுடன் தனிமையில் பேசுவாள் . உதியை மட்டும் எப்போதாவது திட்டுவாள் அப்பொழுது எல்லாம் வயிற்றில் இருக்கும் குழந்தை எட்டி உதைக்கும் .உடனே நுவலி ” அப்பனை திட்டினால் மட்டும் உனக்கு கோவம் வருதா? என கேட்கும் பொழுது எல்லாம் “ஆம் ” என்பது போல மறுபடியும் உதைக்கும் குழந்தை. குழந்தை உதைக்கும் மகிழ்ச்சியான தருணங்களை எல்லாம் சொல்லமுடியாத உணர்வுகளோடு தனியாகவே அனுபவித்துக்கொண்டு இருந்தாள். 

         இன்று அந்த வீடே விழாக்கோலம் பூண்டு இருந்தது என்பதை விட ,ஊரே விழாக்கோலம் பூண்டு இருந்தது என கூறலாம். ஒன்பதாம் மாதத்தில் நடைப்பெறும் வளைகாப்பு நிகழ்ச்சி தான் இன்று நுவலிக்கு .சிகப்பு வண்ண பட்டுச்சேலையில் அழகு தேவதையாக தெரிந்தாள் அனைவரின் கண்களுக்கும். நிறை மாத நிலவு பூமிக்கு வந்து விட்டது என்பது போலவே தன் மகளை பூரிப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தார் ரத்னம். எல்லோரும் நலங்கு வைத்து விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடி முடித்தனர். உதிரனுக்கு தன்னுடைய வேலை எல்லாம் முடிந்து மீண்டும் அகடாமிக்கு வந்தான். வீடியோ காலின் மூலம் தன்னுடைய நிறைமாத மனைவியைப் பார்த்து பூரிப்பு அடைந்தான். இரண்டு நாட்கள் கழித்து நான் போய் மாமாவை பார்க்க போறேன் என நுவலி அடம் பிடிக்க, அனைவரும் எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை. முதலில் திட்டியவன் பிறகு சரி என்றான் ” அவனும் அவளை நேரில் கண்டு எட்டு மாதங்கள் ஆகின்றதே “. 

        நாங்கள் யாராவது உன்னுடைய துணைக்கு வருகின்றோம் என்று கூறியவர்களைப் பார்த்து யாரும் வர வேண்டாம் என கூறிவிட்டாள். மணி பாட்டி மட்டும் நீ சொன்னால் நான் கேட்க வேண்டுமா போடி என்று கூறிவிட்டு அவளுடன் சென்றார். 

         இத்தனை நாட்கள் இதற்காக தான் டா காத்து இருந்தேன் இப்பொழுது தூக்கு டா ” அந்த உதிரனின் மனைவியை என்று நுவலியை கடத்தி விட்டனர் நீதிமானின் ஆட்கள் “. 

        

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்