இருவரும் வெவ்வேறு மனநிலையில் கண்மூடி படுத்துக்கொண்டு இருக்க, உறக்கமோ தன்னுடைய பணியை செவ்வனே செய்தது…
காலை கதிரவன் கண்ணைத் தொட்ட பிறகு தான் , விடிந்து விட்டது என்று புரிந்தது அவளுக்கு….. கண்விழித்துப் பார்த்தவருக்கு இன்னும் உதிரன் எழாமல் இருப்பது ஆச்சரியமாக இருந்தது… ‘இரவு உண்ட மாத்திரையின் வீரியத்தில் உறங்கி கொண்டு இருக்கிறான் என நினைத்தவள் ‘ அவனை பார்த்துக்கொண்டு இருக்க….
அவளின் பார்வை வீச்சின் தாக்கம் அவனை எழுப்பியது போன்று மெதுவாக அவன் கண்விழித்துப் பார்க்க. தன்னையே கலங்கிய கண்களுடன் பார்த்துக்கொண்டு இருக்கும் மனையாளைப் பார்த்து மென்புன்னகை சிந்த, அவளோ, அவனை குற்றம் சுமத்தும் பார்வை பார்த்து விட்டு சில நொடிகளில் பார்வையை மாற்றாக் கொண்டாள்.
அவன்தான் கள்வன் ஆச்சே…! கண்டு பிடித்து விட்டான் அவளின் முகம் மாற்றத்தை. ‘ கேட்டால் எப்படியும் சொல்ல மாட்டாள் என்பதை உணர்ந்தவன் ‘ அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்துவிட்டு எழுந்து சென்றான்….
அவன் சென்றபிறகு ம்ம் கூட , அவள் கட்டிலை விட்டு எழாமல் விட்டத்தை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தாள். ஏனோ அவளுக்கும் தெரியவில்லை .?” ஏன் இந்த வலி என்று. அவளுக்கும் தெரியாமல் அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வெளியேறியது…
‘வெள்ளை நிறமும் ஓர் வண்ணமாகினும் அதனுடன் மற்ற வண்ண நிறங்கள் சேர்ந்தால் தான் அழகு ‘ . வாழ்க்கையில் கொஞ்ச நேர இருமையையே தாங்க முடியவில்லை, இதில் வாழ்க்கை முழுவதும் இருமையா.? தனக்கு தானே கேள்வி கேட்டுக் கொண்டவளுக்கு அழுகையே பதிலாக வந்தது….
தம்பி…’ நுவலி எழுந்து விட்டாலா.? இன்னமும் உடம்பு முடியாம படுத்துக்கொண்டே இருக்காளா..? உடம்பு முடியவில்லைனா வீட்டில இருக்கிற எங்ககிட்ட எதாவது சொன்னால் தானே தெரியும் அப்படியே அமைதியாக இருக்க வேண்டியது. இவ நேற்று மட்டும் இல்ல எப்பவுமே இப்படிதான் தம்பி. நீங்க தான் அவளை பத்திரமா பார்த்துக்கொள்ள வேண்டும். அவ எங்களுக்கு ஒரே பெண்பிள்ளை வேற , நானாவது அவ கஷ்டப்படும் போது கொஞ்சமாவது தாங்கிக் கொள்வேன். ஆனா உங்க மாமா இருக்காரு பாரு அப்படியே மயங்கியே விழுந்து விடுவாரு . இவ கண்ணில் இருந்து கண்ணீர் வருவதற்கு முன்னே அவரின் கண்ணில் இருந்து கண்ணீர் எட்டிப்பார்க்கும் .இந்த மனுசன் என்னை கூட அப்படி தாங்கு தாங்கு தாங்கினது இல்லை. ஆனா நுவலியை நெஞ்சிலே வைத்து தாங்கி இருக்காரு. அவ எங்களுக்கு இருக்கிற ஒரே ஆறுதல் அவளை எப்பொழுதும் கஷ்டப்படுத்தாதீங்க..!.தாய்க்கே உரிய பாசத்தில் அவனிடம் பேசிக்கொண்டு இருந்தார் வசுமதி…
அத்தை நீங்க எதை நினைத்தும் கவலைப்படாதீங்க……! அவளை நான் தான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு மாறு சொல்லிட்டு வந்து இருக்கேன்.அவ இன்னும் கொஞ்ச நேரத்தில் எழுந்து கொள்வாள். அவளை நான் பத்திரமா பார்த்துக் கொள்வேன் .நீங்க பார்த்துக்கொண்ட அளவுக்கு என்னால பார்த்துக்கொள்ள முடியுமானு தெரியவில்லை.?. ஆனா நான் கண்டிப்பாக முயற்ச்சி பண்ணுவேன்….
உதிரனின் பதிலை கேட்டு மனதிற்குள் சந்தோசப்பட்டவர் வெளியே சத்தமாக சிரித்து விட்டார்…
வசுமதியின் சிரிப்பு சத்தமோ உதிரனுக்கு குழப்பத்தை தந்தது. குழம்பிய முகத்துடனே அவரைப் பார்க்க ….
வசுமதி, என்னாச்சு தம்பி நான் ஏன் சிரிக்கிறேன்.?. தானே பார்க்கிறீங்க. அவன் “ஆமாம் ” என்று தலையாட்ட.
நான் எதுக்கு சிரித்தேன்னு கூறுகின்றேன் ‘ நுவலிக்கு உடம்புக்கு காய்ச்சல் வந்தது , நானும் வீட்டில் இருந்த பொருட்களை வைத்து கசாயம் செய்து குடுத்தும் உடம்புக்கு சரியாகவே இல்லை’. அவங்க அப்பாவுக்கு சாப்பாடே தொண்டை குழியில் இறங்கவே இல்லை. அவதான் உடம்பு சரியில்லாமல் சாப்பிடாமல் இருக்கா , நீங்க ஏன் சாப்பிடாம இருக்கீங்க..?
என்னுடைய பொண்ணு அங்க உடம்பு சரியில்லாம படுத்த படுக்கையா இருக்கா, எனக்கு மட்டும் எப்படி சாப்பாடு உள்ளே போகும்.?.என்னுடைய பொண்ணு சாப்பிடாம நானும் சாப்பிட மாட்டேன். இப்பவே வா நாம மருத்துவமனைக்கு குழந்தையை கூட்டி போய் என்னனு பார்த்துவிட்டு வந்துவிடலாம். சரினு நானும் அவளை கூட்டிக்கொண்டு போய் டாக்டர்கிட்ட காண்பித்தோம். அவரும் செக் செய்துவிட்டு ‘ இது நார்மல் பீவர் தான் பயப்பிடற மாதிரி எதுவும் இல்லை .’ நான் எழுதி தருகின்ற மாத்திரையை சாப்பிட சொல்லுங்க, இப்ப ஒரு ஊசி மட்டும் போட்டுக்கொண்டு போங்க.
சரினு , நான் தான் போய் மருந்து மாத்திரை எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தேன். அவ அவங்க அப்பாவை விட்டு நகரவே இல்லை.அவளுக்கு எப்ப உடம்பு சரியில்லாமல் போனாலும் அவங்க அப்பாவின் மார்பு தான் அவளின் உறங்கும் இடம். இவரும் அவளை விட்டு நகரவே மாட்டாரு, என்ன வேலை இருந்தாலும் எல்லாத்தையும் நிறுத்தி வைத்து விட்டு இவ பக்கத்துலே இருப்பாரு. அவளுக்கு எப்ப சரி ஆகுதோ அப்பதான் வேலைக்கு போவாரு. நான் வாங்கி வந்த ஊசியை சிஸ்டர்கிட்ட குடுத்து அவளுக்கு ஊசி போட சொன்னேன். சிஸ்டரும் ஊசி போட ரெடியா இருந்தாங்க .ஆனா அவ கொஞ்சம் பயந்து கொண்டே இருந்தா’ வெளியே தைரியமாக இருப்பது போல காட்டிக்கொண்டா. அமைதியா அவ போய் நாற்காலியில் உட்கார, சிஸ்டர் ஊசி எடுத்து அவ கையில் குத்த போனாங்க..
இவரு அந்த சிஸ்டர் கிட்ட ‘ சிஸ்டர் மெதுவா ஊசி போடுங்க .குழந்தை வலி தாங்க மாட்டா ‘ , சீக்கிரமா ஊசி போட்டு விடுங்கள். பிளீஸ் குழந்தைக்கு வலிக்காத மாதிரி போடுங்க, ஏற்கனவே உடம்பு சரியில்லாததால் உடம்பு முழுவதும் வலியோடு இருக்கும். நீங்களும் ஊசி போட்டு குழந்தைக்கு மேலும் வலியை குடுத்து விடாதீங்க…’
ஒரு கட்டத்திற்கு மேல் அந்த சிஸ்டரே கடுப்பாகி “சார் நீங்க வெளியே போங்க, நான் வலிக்காத மாதிரி ஊசி போட்டு விடுகின்றேன்” இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று கூட்டி வருவதற்குள்ள எனக்கு உயிர் போய் உயிர் வரும்.
சாரி சிஸ்டர், நீங்க ஊசி போடுங்க . நான் எதுவும் பேசமாட்டேன். அந்த சிஸ்டர் ஊசியை எடுத்து அவ கையில் ஊசி போட்டு விட்டு திரும்பி அவரைப் பார்க்க அவரோட கண்கள் கலங்கி, கண்களில் இருந்து கண்ணீர் வெளியே வர தயாராக இருந்தது. அந்த சிஸ்டர் அவரை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு போக, எனக்கோ அவளுக்கு ஊசி போட்டு முடித்தபிறகு தான் உயிரே வந்தது.
அவளுக்கு ஒரு இரண்டு …மூன்று நாட்களில் உடம்பு சரியானது, அதுவரைக்கும் எனக்கு சோதனை காலம்தான். அப்பாவும் பொண்ணும் வீட்டை ஒரு வழியாக்கி விடுவாங்க . எனக்கு எப்பதான் இவளுக்கு உடம்பு சரியாகுமோனு தோன்ற ஆரம்பித்துவிடும்…
அவ குழந்தையா இருக்கும் போது நீங்களும் மாமாவும் தான் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அவரு மட்டும் தனியா பார்த்துக்கொண்டு இருக்காரு , நீங்க ஏங்க அத்தை குழந்தையை கூட பார்த்துக் கொள்ளாமல் இருந்து இருக்கீங்க. நியாயமாக பார்த்தால் அவரு உங்க மேல கோவம் பட்டு இருக்கனும். ஏதோ மாமா நல்லவரா இருக்க போய் ‘நுவலி குழந்தையாக இருக்கும்போதே பார்த்துக்கொண்டு இருந்து இருக்காரு ‘.
அட நீங்க வேற மாப்பிள்ளை. குழந்தை குழந்தையினு நான் சொன்னதைக் கேட்டு ‘அவளை குழந்தையினு நினைத்து விட்டீங்களா ?, அவனுடைய தலை ஆமாம் என்று ஆட்ட… நான் சொன்ன கதையெல்லாம் உங்க கல்யாணத்துக்கு பத்து நாட்களுக்கு முன்னாடி வந்த பீவரில் நடந்த கதை .
அவளுக்கு இனிமே உடம்பு சரியில்லாமல் போச்சு உங்க நிலமை ரொம்ப கஷ்டம் தான். அதை நினைத்து தான் நான் சிரித்தேன்….
உதிரனோ ஏதோ சிந்தித்துக் கொண்டு இருக்க. இப்பவும் குழந்தைப் போல பார்த்துக்கொள்ளும் பெற்றோர்கள் கிடைக்க நுவலி ஏதோ புண்ணியம் செய்து இருக்க வேண்டும் .இனிமே நம்ம பாடு திண்டாட்டம் தான் போல.?. கடவுள்கிட்ட வேண்டிக்கொள்ள வேண்டும் நான் இல்லாத பொழுது அவளுக்கு உடம்பு சரியில்லாமல் போககூடாது என நினைத்தவன் தன்னுடைய காலை வேலையை பார்க்க சென்றான். வசுமதியும் காலை உணவை செய்து விட்டு, மதிய உணவிற்கு என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டே வீட்டுக்கு உள்ளே சென்றார். நுவலி எழுந்து காலை கடன்களை முடித்துவிட்டு ‘ ஹாலிற்கு வர சாப்பாடு ரெடியாக இருந்தது’ . ரத்னவேல் காலையிலே சாப்பிட்டு விட்டு வயல்வெளிக்கு சென்று இருந்தார். சிறிது நேரத்தில் உதிரனும் வந்துவிட, மூன்று பேரும் சேர்ந்து உணவை உண்டனர்.வசுமதியோ சாப்பாட்டில் தன்னுடைய திறமையை காண்பித்து இருந்தார். உதிரனோ ,சாப்பாடு அருமையாக உள்ளது என புகழ்ந்து கொண்டே சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். சாப்பிட்டு முடித்ததும் நுவலி தன்னுடைய அறைக்கு சென்றுவிட, அவளின் பின்னாலயே உதிரனும் சென்றான். அவன் கவனித்துக் கொண்டே தான் இருந்தான் நுவலியை, சாப்பிடும்போதும் கூட ஒரு வார்த்தை பேசவில்லை. உணவும் கொஞ்சமாக தான் சாப்பிட்டாள்.
அந்த அறையின் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு அவளின் அருகில் அமர்ந்தவன், என்ன ஆச்சு மா.?. ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க?. நீ இப்படி உட்கார்ந்து இருக்கிறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவள் அமைதியையே பதிலாக தர..
பொறுமையை இழந்தவன், அவளைப் பார்த்து இப்ப நீ மட்டும் என்னனு சொல்லல நான் இனிமே உன்கிட்ட பேசமாட்டேன் புரியுதா..?..
நுவலியோ அமைதியாக அவனின் மடியில் படுத்துக்கொண்டு , தன்னுடைய முகத்தைப் புதைத்துக் கொள்ள , அவளை வலுக்கட்டாயமாக தன்னில் இருந்து பிரித்தவன் “இப்ப எதாவது சொல்லுடி ” சற்று காட்டமாக கத்த…
அந்த கத்தலில் அவளை மிரட்சியாக பார்க்க. அவனோ தன்னையே நொந்து கொண்டு “சாரி டா” நீ இப்படி அமைதியாக இருக்கிறது என்னை ரொம்ப கோவம் படுத்தி பார்க்கிறது. நீ எப்பவும் என்கிட்ட சண்டை கூட போட்டுக்கொண்டே இரு ஆனா பேசாம மட்டும் இருக்காத டி. அவளின் தலையில் மென்மையாக முத்தம் வைத்த விட்டு அவளைப் பார்க்க….
நுவலி, அவனைப் பார்த்து நான் இப்படி இருக்கிறதுக்கு நீதான் காரணம் தெரியுமா.?.
என்னது .? நானா.?. அவன் கேள்வியுடன் அவளைப் பார்க்க.
நுவலி, மறுபடியும் பேச ஆரம்பித்தாள். எனக்கு நான் கல்யாணம் பண்ணிக்க போகின்றவர் எப்பொழுதும் என்கிட்ட பேசிக்கொண்டே இருக்கனும், எனக்காக நேரத்தை ஒதுக்கனும் இன்னும் பல … பல கனவுகளோடு தான் நான் இருந்தேன். உன்னையும் அப்படிதான் நினைத்து கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்க அப்பா சொன்ன பிறகு தான் தெரியும் “நீ ஒரு காவலாலினு” நானும் சரி காவலாலி தானே எப்போதும் என்கிட்ட பேசமுடியவில்லை நானும் பரவாயில்லை ஆனா தினமும் பார்க்கலாமேனு நினைத்தேன்.. நீ நேற்று சொன்ன பிறகு தான் தெரியுது “நீ ஒரு இராணுவ அதிகாரினு” உன்கிட்ட போன்ல பேசவே அரிதான விசயமாக இருக்கும் போது தினமும் எப்படி நான் பார்ப்பேன்..?. நான் தினமும் உனக்கு என்ன ஆச்சோனு உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருக்கனும். உன்னால என்கூட நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் வர முடியாது. நான் நினைக்கும் போது எல்லாம் உன்னை கண்டிப்பாக பார்க்க வே முடியாது. கூறிக்கொண்டே அவனின் மடியில் மீண்டும் தலைவைத்துப் படுத்தக் கொள்ள… அவனுக்கோ என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதி காத்துக் கொண்டு இருந்தான்….
So sweet udhi nee …. Nan ilathappo unaku udambu sari ilama poga kudathunnu nee pray pannuna parthiya anga nikura nee…. Soooo sweet…. Acho pavam pilla emanthuruchu iven enna solli samathana paduthu porannu teriyala…
Thank you sago 🥰