Loading

சோனா இத்தனை நாட்கள் இப்படி ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு அவளுடைய மாமனால் கொடுமை அனுபவித்தால் என்பதை யாருக்கும் தெரியாமல் மறைத்து விட்டனர். 

இரண்டு குடும்பங்களுக்கும் நல்ல உறவு இருந்ததால் அவர்களும் தங்களின் பிள்ளைகள் வாழ்க்கை நன்றாக அமைந்த சந்தோசத்தில் நிச்சிய தேதியும் குறித்து விட்டனர். 

     உதி, சீக்கிரம் வா டா போகலாம். வீட்டில் எல்லோரிடமும் சொல்லிவிட்டு வா போகலாம்.

       சிங், முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு என்ன நண்பா சொல்ற? இப்ப தானே நான் என்னுடைய காதலி கூட சேர்ந்து இருக்கேன் அதற்குள்ள என்னை வா என்று அழைக்கின்றாயே இது நியாயமா? 

          டேய்! போதும் டா போய் பேசிவிட்டு வா , நீ எதுக்கு இப்படி எல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறாய் என்பதை நான் அறிவேன் போடா போ போய் சோனாவிடம் சீக்கிரமாக பேசிவிட்டு வாடா!

          நண்பேன்டா! உதியை கட்டி அணைத்து விட்டு அறையின் உள்ளே சென்றான். பெரியவர்கள் அனைவரும் வீட்டின் ஹாலில் ஒன்றாக உட்கார்ந்துக் பேசிக்கொண்டு இருக்க , அந்த இருட்டு அறையில் ஒரு மூளையில் அழுதுகொண்டு இருந்தாள் சோனா.

அந்த அறையின் விளக்கை ஒளிரவிட்டன் பார்வையால் தேட, “ஒரு மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டு இருக்கும் அவளை கண்டு மனம் பதறி வேகமாக அவளின் அருகில் சென்று அவளின் கண்ணீரை துடைத்து விட்டான்”. “ஏன்டி இப்படி பண்ற? எல்லா பிரச்சனையும் முடிந்து விட்டதே!”

      சோனா, நீ ஏன்டா இவ்வளவு லேட்டா வந்த? நீ வருவாய் என ஒவ்வொரு நாளும் நான் காத்திருப்பேன் தெரியுமா உனக்கு? என்னால உன்கிட்ட போன் கூட பேச முடியல ? எப்பொழுதும் அவன் என்னை கண்காணித்து கொண்டே இருப்பான் தெரியுமா? நீ வந்தால் பிரச்சனை தீர்ந்து விடும் என்று ஒவ்வொரு விடியலிலும் உன்னை எதிர்பார்த்து காத்து இருப்பேன்டா , நீ தான் வரவே இல்லை அவனின் நெஞ்சிலே குத்தினாள். அவளின் கையை பிடித்துக் கொண்டவன் போதும் டி உன்னுடைய கை வலிக்க போகிறது அமைதியாக இருடி. நா…நான் உன்கிட்ட அப்படி பேசும் போது உன்னுடைய மனசு எவ்வளவு வலித்து இருக்கும்? நீங்க இன்னைக்கு வரவில்லை என்றால் என்னோட நிலைமை என்ன ஆகி இருக்கும் ? நினைத்து பார்க்க வே பயங்கரமாக இருக்கு . தவறாக ஏதாவது நடந்து இருந்தால் கண்டிப்பாக என்னை நீ உயிரோட பார்த்து இருக்க முடியாது டா’ அவளின் கண்கள் கண்ணீரை அருவியாய் கொட்ட , இதற்கு மேல் இவளை பேசவிட கூடாது என்று நினைத்தவன் அவளின் இதழில் தன் இதழினை வைத்து அவளின் பேச்சுக்கு முற்று கட்டை போட்டான். இவனின் செயலில் அவள் தான் அதிர்ச்சி ஆகி கண்கள் விரிய அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.சிறிது நேரத்தில் அவளை விட்டு பிரிந்தவன் அவளைப் பார்த்து ” என்னடி இப்படி பார்த்துக்கொண்டு இருக்க? “சாரி டி உன்னை அமைதிப்படுத்த வேற வழி எனக்கு தெரியவில்லை டி?”.

          அது இல்ல டா நீ இப்ப ரொம்ப மாறிவிட்ட டா. நான் தான் நம்ம வாழ்க்கையில் முதல் முத்தம் கொடுப்பேன் என்று நினைத்தேன் ஆனால் நான் உனக்கு முத்தம் கொடுத்து இருந்தாலும் கண்ணத்திலோ இல்ல நெற்றியிலோ கொடுத்து இருப்பேன் .நீ அதை விட ஒரு படி மேல போய் இதழ் முத்தம் கொடுத்து விட்டாய் டா!” நான் இன்னும் அந்த சம்பவத்தில் இருந்து மீள முடியவில்லை டா” “என்னை ஒரு முறை என்னுடைய கையில் கிள்ளேன் டா” அவனின் முன் தன்னுடைய கையை நீட்ட,

      அவனோ, நான் உனக்கு இது நிஜம் என்பதை புரியவைக்கின்றேன் ” அவள் சுதாரிக்கும் முன் அவளின் இதழ்கள் மீண்டும் அவனிடம் சிக்கி இருந்தன. சுவாசத்திற்காக துடிக்கும் அவளின் இதயத்தின் மீது சற்று இரக்கம் கொண்டு அவளின் இதழை விடுவித்தான். 

          சற்று நேரம் தன்னை ஆசுவாசம் படுத்திக்கொண்டு “ஏன்டா எருமை என்னை கிள்ள தானே சொன்னேன் ! நீ என்ன டா பண்ணி வச்சி இருக்க ? “

         நீ தான் அதிர்ச்சி குறையாமல் இருந்த “உன்னுடைய அதிர்ச்சியை போக்க கிள்ளினால் வலிக்கும் அதை விட வலியே இல்லாத மருந்து தான் நான் உனக்கு குடுத்தது “.

          நீ ரொம்ப முன்னேறி விட்ட டா. உண்மையை சொல்லு அங்க எவளையாவது கரைட் பண்ணி வச்சி இருக்கியா? நீ என்கிட்ட லவ் சொல்லி பத்து நாளுக்கு அப்புறமா தான் முத்தம் கொடுத்த அதுவும் காற்றின் மூலம் போன்ல ” “ஆனா இப்ப நீ நடந்துகிறது பார்த்தா எனக்கு உன் மேல சந்தேகமாக இருக்கு டா “

            அவளை தன்னுடைய கை வளைவிற்குள் கொண்டு வந்தவன் ” நான் ஏகபத்தினி விரதன் டி “. நீ மட்டும் என்னுடைய காதல் உனக்கு மட்டும் தான் என்னுடைய அணைப்பு முத்தம் எல்லாமே 

என்னை நம்பு டி. 

           நம்புறேன் … உன்னை நம்பாமல் வேற யாரை நம்புவது?. “வெளியே இருந்து சீக்கிரம் வாடா மன்வேந்திர சிங் ” உதிரன் தான் கூப்பிட்டு கொண்டு இருந்தான். 

             நான் கிளம்புறேன் மா ! நீ பத்திரமாக இரு . நான் சீக்கிரமாகவே திரும்பி வருவேன் டா .” அவள் புன்னகையுடன் தலையை ஆட்ட” ” நான் மட்டும் உனக்கு நியாபகம் வைத்து கொள்கின்ற மாதிரி ஒரு பரிசு கொடுத்தேனே அதே மாதிரி எனக்கும் நீ ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கா டி உனக்கு?

        எனக்கு என்ன பரிசு கொடுத்த டா?

         “உன்னுடைய உதட்டை கேள் நான் என்ன பரிசு கொடுத்தேன் என்பதை அது சொல்லும் டியர் ” .

            அவனின் வார்த்தைகள் அவளை செங்கொழுந்தாக சிவக்க வைக்க , ” அவனின் நெஞ்சிலேயே முகத்தை புதைத்துக் கொண்டாள்”. “அப்போ எனக்கு உன்னுடைய பரிசு கிடைக்காதா? ” ஏக்கமாக கேட்கும் அவனின் மீது சற்று இரக்கப்பட்டு அவனின் இதழை சிறை செய்து அதன் தன்னுடைய முத்திரையை பதிவு செய்தாள். இருவரும் முதன் முறையாக இன்றுதான் முத்தத்தின் மூலம் தங்களின் காதலை பரிமாறிக் கொண்டனர்.  

          உதிரனின் அழைப்பு மறுபடியும் கேட்க ,” இருவரும் மனமே இல்லாமல் இருவருக்கும் விடை கொடுத்துக் கொண்டார்”. சிங் அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். 

     சோனா, போகும் போது உதியை அணைத்து “தேங்ஸ் அண்ணா! நீங்க மட்டும் இன்னைக்கு இப்படி ஒரு முடிவு எடுத்து இங்கு வராமல் இருந்து இருந்தால் என்னுடைய நிலைமை என்னவாகியிருக்கும் என்பதை நினைக்க வே கொஞ்சம் பயமாக உள்ளது”.

         முடிந்து போன விசயத்தை பற்றி கவலைப்படாத மா. நல்ல வேளையாக உனக்கு எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை அதுவரைக்கும் ரொம்ப சந்தோசம் மா! நாங்க வருகின்றோம் மா.

இருவரும் அங்கிருந்து புறப்பட்டு மறுபடியும் தங்களின் அறைக்கு வரும் போது இரவாகி இருந்தது. அறைக்கு வந்ததும் சிங் , நேராக உதியை அணைத்து அவனின் கண்ணத்தில் முத்தம் வைத்து “தேங்ஸ் டா” என்னுடைய லைப் எனக்கு மறுபடியும் கிடைத்து இருக்கு அதற்கு நீ தான் காரணம் டா. நீ மட்டும் இன்னைக்கு வீட்டுக்கு போகலாம் என்று நினைக்காமல் இங்கே இருந்து இருந்தால் கண்டிப்பாக சோனாவை நான் மிஸ் பண்ணி இருப்பேன். நீ தலைவன் என்பதை அடிக்கடி நிருபித்து விடுகிறாய் நண்பா! உன்னை என்னுடைய நண்பனான கிடைக்க நான் என்ன புண்ணியம் செய்தேனோ தெரியவில்லை டா ஆனா நீ எனக்கு நண்பனாக கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோசம் டா. 

         உதி, “டேய் போதும் டா” காலையில் இருந்து உன்னுடைய வார்த்தைகள் மட்டுமே கேட்டு என்னுடைய காது அழுகின்றது டா. இன்னைக்கு முழுவதும் என் பொண்டாட்டிகிட்ட எதுவுமே பேசவில்லை டா’

        அப்போ என்னுடைய பேச்சு உனக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறதா ? செல்லமாக கேட்டு விட்டு முகத்தை திருப்பி கொள்ள.

          போய் ஒழுங்கா தூங்கு டா . நாளைக்கு காலையில் நீ சரியாக பயிற்சி எடுக்க வேண்டும் புரிகின்றதா ? இப்ப உன்னுடைய நாடகத்தை எல்லாம் நிறுத்திவிட்டு போய் தூங்கு. நாளைக்கு சர்மா சார் கண்டிப்பாக என்னை கேள்வி கேட்க போகிறார் ” யாரை கேட்டு இவனும் நீயும் வெளியே போய் வந்தீங்கனு “.

         அப்பாடா! இப்பதான் நிம்மதியாக இருக்கு. நான் போய் நிம்மதியாக தூங்குகிறேன் நீங்க கர்னல் உதிரனாக நாளைக்கு எப்படி இந்த பிரச்சனையில் இருந்து வெளிவருவது என்பதையே தூங்காமல் யோசித்துக்கொண்டு இருங்க சார்.

         “அடிங்க “, வேகமாக சென்று தன்னுடைய ஆடையை மாற்றிவிட்டு படுத்துக்கொண்டான் சிங். தன்னுடைய மொபைலின் நெட்டை ஆன் செய்து விட்டு வாட்ஸ் ஆப்பை பார்க்க ” நுவலியிடம் இருந்து தான் ஏகப்பட்ட மெசேஜ் வந்து இருந்தது” . ஒவ்வொன்றாக படித்துவிட்டு விட்டு அவளுக்கு போன் செய்தான். 

          ஒரே ரிங்கில் அட்டன் செய்தவள் ” ஏன் மாமா காலையில் இருந்து எனக்கு ஒரு மெசேஜ் கூட பண்ணல?”

          மாமாவுக்கு கொஞ்சம் வேலை டா . என்னுடைய நண்பன் சிங் ஒரு காதல் பண்ணிட்டு லவ் பெயிலியர் ஆகிவிட்டதுனு அவனே நினைத்துக்கொண்டு இங்க சுற்றிக்கொண்டு இருந்தான் . அவனுடைய பிரச்சனையை தீர்த்து வைப்பதற்குள்ள இவ்வளவு நேரம் ஆகி விட்டது டா என்று இன்று நடந்த அனைத்து விசயங்களையும் ஒன்று விடாமல் கூறி முடித்தான். 

        சூப்பர் மாமா! அப்போ நீங்க இப்பதான் வந்தீங்களா? இன்னும் எதுவும் சாப்பிடவில்லை யா? 

        நாங்க இருவரும் வரும் போதே சாப்பிட்டு தான் வந்தோம் டா. இன்னைக்கு முழுக்க உன்னோட நினைப்பு தான் இந்த அத்தானோட மண்டைக்குள்ள ஓடிக்கொண்டே இருந்தது. நீ என்ன பண்ற? சாப்பிட்டியானு ? 

       நான் எல்லாம் நல்லா இருக்கேன் மாமா. பாட்டி அத்தை மாமானு எல்லோரும் என்னை பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்கள். எனக்கு எந்த குறையும் இல்லை. சோனாவின் மாமாவை அப்படியே சும்மா விட்டுட்டு வந்துவிட்டீங்களா? 

             அவனை எப்படி செல்லம் சும்மா விட்டுட்டு வருவது. நான் அடிச்ச அடிக்கு அவன் எழுந்து நடப்பதே வருட கணக்கு ஆகிவிடும். அதையும் மீறி வந்தான் என்றால் அவனுடைய உடம்பில் இருக்கிற எல்லா உறுப்பும் ஒழுங்கா வேலை செய்யுமா? என்பதே கேள்விக்குறியானது.

                 சோனாவோட வீட்டில் யாருக்காவது அவனின் மோசமான செயலை பற்றி தெரியுமா? தெரிந்து இருந்தால் எல்லோரும் எவ்வளவு பீல் பண்ணுவாங்க? சோனாவோட அம்மாவின் நிலைமை நினைக்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு மாமா.

           யாருக்கும் எந்த விசயமும் தெரியாது டா. நீ போய் இப்ப தூங்கு நாளைக்கு மாமா உனக்கு கால் பண்றேன் “குட் நைட் , லவ் யு” 

       லவ் யு டூ மாமா. இருவரும் போனை கட் செய்து விட்டு தூங்க ஆரம்பித்து இருந்தனர். 

           காலையில் போன் அலறி உதியை எழுப்பி விட்டது. போனை அட்டன் செய்தவன் “ஹலோ”    

            எங்கடா இருக்க ? என்ன பண்ணி வச்சி இருக்க? சார் பண்றது எல்லாத்தையும் பண்ணிவிட்டு நிம்மதியாக தூங்கிட்டு இருக்கீங்களோ?

உன்னால என்னுடைய தலை இங்க உருளாம மட்டும் தான் இருக்கு மத்தபடி என்னுடைய கழுத்தை நெறிக்கின்ற மாதிரி எல்லோரும் கேள்வி கேட்டுக்கொண்டு இருக்காங்க டா ? நீ சீக்கிரமாக இங்க வா டா .

        போன் கட் ஆனதும் தலையை ஒருமுறை உலுக்கி கொண்டு குளிக்க சென்றான் . குளித்து முடித்துவிட்டு ரெடியாகி நேராக அகடாமிக்கு சென்றான். அங்கு இவனை வார்த்தைகளாளே வதம் செய்ய காத்திருந்தனர். நேராக சர்மாவை காண அவருடைய அறைக்கு சென்றான் “அங்கு சர்மா சேரில் உட்கார்ந்துகொண்டு டேபிளில் கையை ஊன்றி தலையை பிடித்துக் கொண்டு இருந்தார். 

          ஹாய் பா எத்தனை பேர் என்னை கார்னர் பண்ணி என் மீது கம்பிளைண்ட் கொடுத்து இருக்காங்க ?

         வெளியே இருக்க அத்தனை பேரும் தான் டா ! வெளியே உட்கார்ந்து இருக்கும் அனைவரையும் உள்ளே கூப்பிட ,” வந்தவர்கள் எல்லோரும் கோவமாக உதியைப் பார்த்து முறைத்துக் கொண்டே ” சார் கண்டிப்பாக கர்னல் உதிரனுக்கு தண்டனை வழங்க வேண்டும் . இவர் தான் அரசாங்கம் மாதிரி ஒவ்வொரு முறையும் இவருடைய விருப்பத்திற்கு ஏற்றமாதிரி ஊர் சுற்றுவார் அதை நாங்க வேடிக்கை பார்க்க வேண்டுமா ? இந்த முறை இவனுடைய நண்பனையும் கூட சேர்த்துக்கொண்டு ஊரை சுற்றி இருக்காரு இதை நாங்க எல்லோரும் கண்டிப்பாக வன்மையாக கண்டிக்கின்றோம். 

         உதிரனோ இதுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது போல அங்கு டேபிளின் மீது வைக்கப்பட்டு இருந்த துப்பாக்கியை ஆராய்ச்சி செய்துக்கொண்டு இருந்தான்.

        இங்க பாருங்க சார் கொஞ்சம் கூட மரியாதையே இல்லாமல் எப்படி துப்பாக்கியை பார்த்துக்கொண்டு இருக்காரு பாருங்கள்! “எதாவது ஒரு கேள்விக்காவது பொறுப்பாக பதில் சொல்கின்றாரா பாருங்கள்” எப்படி தனக்கும் இங்கு நடக்கும் சம்பவத்திற்கு ஒரு சம்பந்தமும் இல்லை என்பது போல இருக்காரு பாருங்க ? ஒவ்வொருவரும் உதிரனின் மீது பல புகார்களை அளித்துக் கொண்டே இருக்க ,

      சர்மா, நான் கேட்கின்றேன். நீங்க எல்லோரும் போய் உங்க வேலையை பாருங்க! 

          சார் நீங்க அவரை சும்மா விடக்கூடாது. இவருக்கு கண்டிப்பாக கடுமையான தண்டனை குடுக்க வேண்டும். 

       இவர்களை இன்னும் பேச விட்டால் உதிரன் எதாவது பேசுவான் பிரச்சனை இன்னும் பெரிதாகும் என நினைத்தவர் ” இங்க பாருங்க’ நீங்க சொல்றதை எல்லாம் கேட்க வேண்டுமா என்ன? இங்க நீங்க மேல் அதிகாரியா இல்ல நான் அதிகாரியா? அவனுக்கு தண்டனை தானே தரவேண்டும் அவனுக்கு தண்டனையாக இந்த மாநிலத்தை விட்டு வேற மாநிலத்திற்கு அனுப்பி விடுகின்றேன் போதுமா ? அனைவரின் அவரின் கோவமான பேச்சை கேட்டு அமைதியாக வெளியே சென்றனர். அவர்கள் சென்றதும் தன்னுடைய சேரில் இருந்து எழுந்து நான்கு ஐந்து அடிகளை உதிரனுக்கு வழங்க , ” ஆ வலிக்கிறது பா ” அம்மா வலிக்கிறதே ” என்று சத்தம் போட,

        வெளியில் இருந்தவர்களுக்கு சற்று மனது நிம்மதி ஆனது போல இருந்தது.

     சர்மா, நடிக்காத டா போதும் டா உன்னுடைய நடிப்பு. எதுக்கு நேற்று நீயும் சிங்கும் வெளியே போனீங்க ?

      உதி , அனைத்து விசயத்தையும் சொல்லி முடிக்க.

         ஒரு நல்ல விசயம் தான் செய்து இருக்க , சரி போய் உன்னுடைய டீம் ஆட்கள் என்ன பண்றாங்கனு பாரு டா . 

     சரி பா . அங்கிருந்து தன்னுடைய வீரர்கள் பயிற்சி செய்து கொண்டு இருந்த இடத்திற்கு வந்தவன் அவர்களுடன் சேர்ந்து கடுமையாக பயிற்சி செய்தான் .

           நாட்கள் அதன் போக்கில் வேகமாக போக , அவர்கள் தமிழ்நாட்டிற்கு கிளம்ப வேண்டிய நாளும் வந்தது. தமிழ்நாட்டிற்கு செல்வோர் மீண்டும் காஷ்மீர் வருவார்களா ? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்