எப்பொழுதும் சுறு சுறுப்பாகவும், செயலில் ஒரு வேகத்துடன் இருக்கும் சிங் இன்று குழுவாக சேர்ந்து நண்பர்களுடன் பயிற்சி செய்யும் பொழுது சாதாரண பந்தை தடுக்க முடியாமல் விட்டதால், அந்த பந்து அவனின் நெற்றியில் பட்டு இரத்தத்தை வரவழைத்து விட்டு சென்றது. அந்த குழுவில் இருந்த அனைவருக்கும் இது அதிர்ச்சி என்றால் உதிரனுக்கு பேரதிர்ச்சி ஆனது. சிங்கை அங்கிருந்து தனியாக அழைத்து வந்து அவனுடைய நெற்றியில் வழியும் இரத்தத்தை துடைத்துவிட்டு காயத்திற்கு மருந்து வைத்து கட்டுப் போட்டு விட்டான் உதி.
அவனோ வலி என்ற ஒன்று இருக்கா இல்லையா என்பதை கூட வெளிக்காட்டாமல் அமைதியாக சிலை போல் உட்கார்ந்துக் கொண்டு இருந்தான்.
உதி, என்ன தான் டா உனக்கு பிரச்சனை ? என்னனு சொன்னால் மட்டுமே உன்னுடைய பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் இல்ல நான் இப்படியேதான் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருப்பேன் என்றால் கடைசி வரை இப்படியே தான் இருக்கனும் .
அவன் அப்பொழுதும் அமைதியாகவே இருக்க,
உதி, நண்பா! உனக்கே தெரியும் எனக்கும் பொறுமைக்கும் ரொம்ப தூரம் என்பது. நானும் நேற்றில் இருந்து உன்னை பார்த்துக்கொண்டே தான் இருக்கின்றேன் நீயும் என்கிட்ட சரியாக பேசவில்லை உன்னுடைய முகம் சரியில்லை என்னதான் ஆனது சொல்லி தொலை டா “அவனிடம் இருந்து வார்த்தைகள் சற்று கோவமாக வர”
சிங், எதுவும் பேசாமல் தன் நண்பனை அணைத்துக் கொண்டான்.
சிறிது நேரத்தில் உதியின் உடலில் ஈரம் பட சிங்கை விலக்கி பார்த்தான். தன்னுடைய சட்டை நனைந்து தன்னுடைய உடலில் அவனின் கண்ணீர் பட்டுள்ளது ஆனால் ஏன் இவன் அழுகின்றான்? என்ற கேள்வியுடன் சிங்கின் முகத்தைப் பார்க்க , ” அவனின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் வெளியே வந்து அவனின் கண்ணத்தை நனைத்து அவனின் ஆடையையும் நனைத்து கொண்டு இருந்தது”. அவனின் கண்ணீரை துடைத்து விட்டவன் தன்னுடைய தோளில் சாய்த்துக் கொண்டு ஆதரவாக அவனின் முதுகை வருடிவிட்டு கொண்டு இருந்தான். சிறிது நேரம் அமைதியாக உதியின் அணைப்பில் இருந்தவன் , அவனை விட்டு விலகி அமர்ந்து பேச ஆரம்பித்தான்.
மச்சான்! உனக்கே தெரியும் தானே நான் சோனாவை எந்த அளவிற்கு காதலித்தேன் என்று ? அவருடன் கல்யாணம் செய்து எப்படி எல்லாம் வாழவேண்டும் என்று ஒவ்வொரு நாளும் என்னுடைய மனதில் ஒரு கனவு கோட்டையே கட்டி வைத்திருந்தேன். இப்ப அந்த கனவு கோட்டை மட்டுமல்ல என்னுடைய மனதும் சுக்கு நூறாக உடைந்து விட்டது டா. அவளுக்கு இப்ப நான் வேண்டாமா மச்சான் ‘
உதிக்கும் தெரியும் சிங்கின் காதல். இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கிறது என்ற எண்ணத்தில் அவர்களின் காதலை பற்றி பெரிதாக கேட்காமல் விட்டுவிட்டான். அவர்கள் இருவரின் புரிதல் இன்று ஏன் பிரிவை தந்து இருக்கிறது என்பது உதிரனுக்கு புரியவே இல்லை.
நான் ஒன்றும் அவள் பின்னாடி சென்று அவளை காதலிக்க சொல்லி வற்புறுத்தினேனா? இல்லையே! நான் என்னுடைய குடும்பத்தார்களுடன் சந்தோசமாக தானே இருந்தேன் . எனக்கு விருப்பம் இருந்ததாலே தான் இந்த வேலைக்கு வந்து சேர்ந்தேன் ,அவனால் அதற்கு மேல் பேசமுடியாமல் வார்த்தைகள் தொண்டையிலே சிக்கிக் கொண்டன . பேச கூட முடியாமல் பேச அவனின் வாயில் இருந்து கடைசியாக காற்று மட்டுமே வந்தது.
உதிரன் அவனுக்கு குடிக்க தண்ணீர் குடுத்து குடிக்க சொன்னான். அவன் தண்ணீர் குடித்ததும் சிறிது நேரம் தன்னை சமாதானம் செய்துக்கொண்டு மறுபடியும் பேச ஆரம்பித்தான்.
அவளுடைய பெயர் சோனா என்னுடைய பக்கத்து வீட்டில் தான் இருந்தாள்.நான் ஊருக்கு எப்பவாவது தான் போவேன் அதனால் வீட்டில் இருப்பவர்களை தவிர்த்து வெளி ஆட்கள் யாரை பற்றியும் எனக்கு பெரிதாக தெரியாது . நான் காலேஜ் மும்பையில் இருந்து தான் படித்தேன் அப்பொழுது எல்லாம் வீட்டிற்கு அடிக்கடி செல்ல மாட்டேன் .என்னுடைய படிப்பு செலவிற்காக அங்கேயே பகுதி நேரமாக வேலைச் செய்துக்கொண்டு இருந்தேன். எங்க வீட்டில் அப்போ ரொம்ப கஷ்டமாக இருந்தது, எனக்கு காலேஜ் படிக்க வேண்டும் என தோன்றியதால் வீட்டில் கூட யாருக்கும் சொல்லாமல் மும்பை சென்று வேலைச் செய்து அதில் இருந்து வந்த வருமானத்தில் காலேஜ் பீஸ் கட்டி படித்துக்கொண்டு இருந்தேன். வீட்டில் என்னை காலேஜ்க்கு அனுப்ப விருப்பம் இல்லை ” பள்ளிக்கூடம் முடித்ததும் வேலைக்கு போ அப்பொழுதுதான் வீட்டு கஷ்டம் கொஞ்சம் சரியாகும்னு எங்க அப்பா சொல்லிவிட்டார் ” அவங்க மேல இருந்த பயத்தில் யார் இடமும் சொல்லாமல் ஓடிவந்து விட்டேன். என்னுடைய சாப்பாடு , துணி, புத்தகம் இப்படி எல்லாவற்றிற்கும் என்னுடைய வேலை மட்டுமே உதவியாய் இருந்தது. காலேஜ் சேர்ந்து ஆறுமாதம் கழித்து தான் வீட்டுக்கு போனேன் என்னைப் பார்த்ததும் எங்க அம்மா என்னை கட்டிக்கிட்டு “ஓ” வென்று அழ ஆரம்பித்தாங்க , நான் வேற அந்த சமயம் சரியான சாப்பாடு இல்லாமல் கொஞ்சம் மெலிந்து போய் இருந்தேனே அதனால அம்மா என்னை நினைத்து ரொம்பவே கவலை அடைந்து போனாங்க! அந்த நேரம் பார்த்து என்னுடைய வில்லன் வந்தாரு “யார் அந்த வில்லன் என்று யோசிக்கிறீயா ? அவர் தான் என்னுடைய அப்பா”. அவரைப் பார்த்ததும் கொஞ்சம் பயந்து தான் இருந்தேன் அந்த பயத்தை வெளியே காட்டிக்கொள்ளக்கூடாதுனு எங்க அம்மாவை இறுக்கமாக அணைத்துக்கொண்டேன் ” சரியாக சொல்லனும்னா எங்க அம்மாவின் வயிற்றில் மறுபடியும் போய் ஒளிந்து கொள்வது போல ” எங்க நேராக என்னிடம் வந்து இப்ப என்ன பண்ற டா ?
“காலேஜ் படிக்கிறேன் பா “, “உனக்கு காலேஜ் படிக்க பணம் ?”, “நானே பார்ட் டைம் வேலை செய்து படித்துக்கொண்டு இருக்கேன் பா ” எங்க அப்பா உடனே என்னை தூக்கி சுத்தனாரு பாரு அந்த நொடி இப்பவும் என்னுடைய கண்ணுக்குள்ள இருக்கிறது . அவருடைய பெரிய மீசை முறுக்கி விட்டுட்டு “நீ என்ற மகன் என்பதை நிருபித்து விட்டாய் டா ! நீ படித்து முடித்ததும் சரியான வேலைக்கு போய் இந்த குடும்பத்தை காப்பாற்றுவாய் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது டா! நானும் உங்க அம்மாவும் இல்லை என்றாலும் உன்னுடைய தங்கச்சியை பத்திரமாக கல்யாணம் செய்து கொடுப்பாய் என்ற நம்பிக்கை இருக்கு டா!” ஏன் பா இப்படி எல்லாம் பேசுறீங்க? நான் சீக்கிரமாகவே காலேஜ் முடித்துவிட்டு வேலைக்கு போய் சம்பாரித்து நம்ம குடும்பத்தை காப்பாற்றுவேன் பா”. அந்த நேரத்தில் என்னுடைய தங்கை பள்ளி முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்ததும் என்னைப் பார்த்து விட்டு “ஓ வென்று ” ஒரே அழுகை. “என்னை ஏன்டா விட்டு போன என்று என்னுடைய கண்ணத்தில் இரண்டு அடி குடுத்தா பாரு கண்ணம் சிவந்து பண்ணு மாதிரி ஆகிவிட்டது”. அப்படியே என்னுடைய கல்லூரி வாழ்க்கை முடிந்து ஒரு முடிவுக்கும் வந்தது. வேலைத் தேடி ஒவ்வொரு கம்பெனியாய் ஏறி இறங்கியது தான் மிச்சம் எவனும் வேலை தரவில்லை என்னுடைய குடும்பத்தை நினைக்கும் போது கவலையாக இருந்தது அப்பொழுது தான் ஒரு முடிவுக்கு வந்தேன் நான் ஏன் யாரோ ஒரு கம்பெனி காரனிடம் வேலை கேட்டு அலைய வேண்டும்? நாம நம்முடைய நாட்டை பாதுகாக்கும் வேலையை சந்தோசமாக செய்துவிட்டு போகலாமே என்ற எண்ணம் தோன்றியது உடனே அதை செயல்படுத்தவும் தொடங்கினேன். என்னுடைய முதல் இராணுவ தேர்விலேயே நான் வெற்றிபெற்று விட்டேன் ஆனா உடற்பயிற்சி தேர்வில் வெற்றி பெறுவேனா? என்ற சந்தேகம் எனக்கு தோன்ற ஆரம்பித்துவிட்டது. உடனே என்னுடைய அப்பா எனக்காக அவரும் காலையில் சீக்கிரமாக எழுந்து என்னுடன் உடற்பயிற்சி செய்வாரு தெரியுமா டா ? அப்படி எல்லாம் என்னை குழந்தை மாதிரி வளர்த்த என்னை ஏமாத்தி விட்டு போயிட்டா கொலைகாரி.
உதிரன் அமைதியாக அனைத்தும் கேட்டுக்கொண்டு இருக்க. சிங்,அந்த உடல் தேர்விலும் நான் வெற்றி பெற்று ட்ரெயினிங் வந்து வேலைக்கும் வந்துவிட்டேன். எங்க அப்பா அன்னைக்கு தெருவிலேயே என்னைத் தூக்கு சுத்தனாரு “இதோ இந்த கண்ணத்தில் முத்தம் மாறிமாறி கொடுத்தாரு அவ்வளவு பாசம் என் மேல” எங்க நினைத்த மாதிரியே கொஞ்ச நாட்களில் எங்க குடும்ப வறுமையை போக்கி விட்டேன் என்னுடைய தங்கச்சி ஆசைப்படியே அவளுக்கு பிடித்த காலேஜ் ஒன்றிலே சேர்த்து படிக்க வைத்தேன். அவ படிப்பு முடிந்ததும் அவளுக்கு கல்யாண ஏற்பாடு செய்தாங்க “ஒரு நல்ல குடும்பத்தில் என்னுடைய தங்கையை கட்டிக் கொடுத்து விட்டோம்”. அந்த கல்யாணத்தில் தான் முதன் முதலாக அவளை நான் பார்த்தேன் “அவ என்னைப் பார்த்து அழகா சிரித்தாள் பாரு அந்த சிரிப்பு ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை”.
என்னுடைய தங்கச்சி கல்யாணம் முடிந்ததும் நான் திரும்பி வேலைக்கு வந்துவிட்டேன் அவளோட நினைப்பு எனக்கு சுத்தமாக இல்லாமல் இருந்தது. நான் மீண்டும் ஊருக்கு போய் இருந்தபொழுது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எங்க வீட்டில் வந்து என்னுடைய சட்டை காலரை பிடித்து “இங்க பாரு உன்னை எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு ‘ஐ லவ் யு ‘ இப்ப நான் போறேன் நல்ல பதிலா எனக்கு சொல்லு புரிந்ததா? ” ஒரு புயல் மாதிரி வந்தா என்கிட்ட அவ காதலை சொன்னா உடனே போய்விட்டாள் “. அவ யாருனு கூட எனக்கு தெரியாது இந்த அழகுல நமக்கு காதல் தான் ஒரு கேடு என்ற நினைப்போடு என்னுடைய வேலையை பார்க்க சென்றேன் அதான் உறங்க போய்விட்டேன். மறுநாள் எங்க அம்மா “டேய் தம்பி இன்னைக்கு கோயில்ல பூஜை இருக்க நீ போய் சாமி கும்பிட்டு வா! அம்மாவால் வரமுடியாது கொஞ்சம் கால் வலிக்கிறது டா”. சரிம்மா நான் கோவில் போகின்றேன் என்று கூறிவிட்டு அன்னைக்கு கோவில் போனேன். கோவில்ல தீடீர்னு என்னுடைய முன்னாடி வந்து ” உன்னுடைய மனுசுல என்னத்தான் நினைத்துக்கொண்டு இருக்க டா ?” , ” என்னது டா வா! அப்படி சாக் ஆகிட்டேன் நான் “. இங்க பாரு உன்னுடைய முடிவு என்னனு இப்பவே என்கிட்ட சொல்லு? உனக்காக நானும் எத்தனை வருசம் தான் காத்திருப்பது . நீ எதுக்கு எனக்காக காத்திருக்கிறாய்? எத்தனை வருசமாக காத்து இருக்கிறாய் ?
என்னுடைய பெயர் என்னவென்று உனக்கு தெரியுமா? என்னுடைய ஊர் எது னு உனக்கு தெரியுமா? என்னை பற்றி உனக்கு எதாவது தெரியுமா? நான் இல்லை என்று தலை ஆட்ட . உடனே அவ எனக்கு அதுதான் தெரியுமே உனக்கு எதுவும் தெரியாது என்று. என்னுடைய பெயர் சோனா இப்ப மட்டும் தான் . கல்யாணத்திற்கு அப்புறம் சோனா மன்வேந்திர சிங் .நான் உங்க பக்வீட்டில் தான் இருக்கின்றேன் .நான் “உன்னை ஒரு நாளும் பார்த்ததே கிடையாதே ? என்கிட்ட பொய் சொல்லாதே! யார் நீ?”.
சோனா, ஆமாம் உன்கிட்ட பொய் சொல்லி உன்னுடைய சொத்தையா நான் எழுதி வாங்கிக் கொள்ளப் போறேன்? நீ என்ன உங்க வீட்டிலேயே இருக்கியா என்ன? பள்ளிகூட படிப்பை முடித்ததும் ஊரை விட்டு ஓடி போயாச்சு , வீட்டுக்கு வருவது அமாவாசைக்கு ஒரு முறை ஆடிக்கு ஒரு முறை இதுல பொட்டபுள்ள மாதிரி வீட்டுக்குள்ளேயே அடைந்து இருப்பது. இப்ப கூட அத்தை உன்னை கோவில் போக சொன்னதைக் கேட்டு தானே கோவிலுக்கு வந்து இருக்க?
ஆமாம் உனக்கு எப்படி தெரியும்?.
சோனா, இது பெரிய உலக இரகசியம் பாரு. இங்க பாரு டா நான் உன்னை நீ வீட்டை விட்டு வெளியே ஓடி போனதில் இருந்து காதலித்து கொண்டு இருக்கேன். உன்னைப் பற்றி எல்லா விசயமும் எனக்கு தெரியும். உன்கிட்ட பேச வேண்டும் என்று உன்னுடைய இராணுவ அகடாமிக்கு போன் பண்ண என்கிட்ட நீ ஒரு முறை கூட பேசியதே இல்லை தெரியுமா ? ஒவ்வொரு முறையும் ஆவலாக உன்னிடம் போன் பேசலாம்னு போன் பண்ணா, நீ என்கிட்ட பேசவே மாட்டாய் இதுல என்னை யார் என்றே தெரியாதுனு சொல்லி வச்சி இருக்க உன்னை என்னப் பண்ணலாம் டா?
சிங், உண்மை அது தானே! உன்னை யார் என்றே எனக்குத் தெரியாதே? பிறகு எப்படி உன்னிடம் நான் போன் பேசுவேன் சொல்லு?
சோனா, நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது ஒழுங்கா இப்ப ஊருக்கு போவதற்கு முன்னாடி என்கிட்ட உன்னுடைய காதலை சொல்லிவிட்டு போ புரியுதா?
சிங், இங்க பாரு மா எனக்கு ஆல்ரெடி காதல் இருக்கு. உன்னைப் பார்த்தால் என்னுடைய தங்கை மாதிரி தோணுது .
அடிங்க ! யார் பார்த்து தங்கச்சி மாதிரி தோணுதுனு சொல்ற? கனவில் கூட அப்படி எல்லாம் நினைக்கக்கூடாது புரியுதா? இது கோவிலா போச்சு இல்ல உன்னை என்ன கேள்வி கேட்டு இருப்பேன் என்று எனக்கே தெரியாது? . அப்பறம் என்ன சொன்ன? உனக்கு ஆல்ரெடி காதல் இருக்குனு தானே இருந்துட்டு போட்டும் நாட்டு மேல தானே உனக்கு காதல் . என்ன பேந்த … பேந்த முழிக்கிற ? எப்படி இதெல்லாம் எனக்கு தெரியும் என்றா? நான் காதலிக்க தொடங்கிய போதே உனக்கும் எனக்கும் கல்யாணம் செய்து வைத்து இருந்தால் இந்நேரம் நமக்கு ஒரு பத்து வயதில் பிள்ளையே இருந்து இருப்பான் .
சிங், நீ ஆசையை ரொம்ப வளர்த்துக் கொண்டே போகிறாய். என்னுடைய வேலை என்னவென்று உனக்கு தெரியும் அதில் என்னுடைய இறப்பு எப்ப வேண்டும் என்றாலும் நிகழும் .
சோனா, நிறுத்து இது எல்லாம் எனக்கும் தெரியும். நீ எப்ப இராணுவத்தில் சேர்ந்தாயோ அப்ப இருந்து உன்னை உயிராய் சுவாசிக்க ஆரம்பித்து விட்டேன் . என்னை ஏமாற்றிவிட்டு எவளையாவது கல்யாணம் பண்ணிக்கலாம் என்ற எண்ணம் எதாவது இருந்தால் அதை அடியோடு அப்படியே அழித்து விடு புரிகின்றதா? அப்படி ஏதாவது ஏடா கூடமா பண்ண உன்னை எதுவும் செய்ய மாட்டேன் உன்னை கல்யாண பண்ணிக்க போற பொண்ணை கொலை பண்ணி விடுவேன் புரியுதா?
சிங், ஏமாற்றி விட்டேன் என்று சொல்லாதே! யாராவது கேட்டால் என்னை தப்பா நினைப்பாங்க புரிகின்றதா?
சோனா, நீ அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்ட அந்த விசயம் தான் எனக்கு நல்லாவே தெரியுமோ? இங்க பாரு உன்னுடைய பதிலுக்காக நான் காத்திருப்பேன் உன்னுடைய பதிலை பொறுத்துதான் நான் அடுத்து என்ன செய்வது என்பது அமையும் இப்ப நான் வீட்டுக்கு போறேன்.
சிங், நீ சாமி கும்பிட வரவில்லையா?
சோனா, நீ ஓகே சொல்லு அப்போ சாமிக்கு பால் அபிஷேகம் பண்றேன். இப்ப நீ மட்டும் போய் சாமி கும்பிட்டு எனக்கும் சேர்த்து வேண்டிக்கொள் .
சிங், என்ன பொண்ணு டா இது இப்படி பேசிவிட்டு போறா என்று நினைத்து விட்டு சாமி வணங்கிவிட்டு வீட்டிற்கு சென்றான். இரவு உணவை உண்டுவிட்டு உறங்க போனா உறக்கம் வரவே இல்லை அவள் பேசிய விசயங்கள் மட்டுமே என்னுடைய மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருந்தது.விடியும் நேரம் உறக்கம் வர அப்பொழுது தான் கண்ணை மூடினேன். அங்கு இருந்த அடுத்த சில நாட்களும் அவளை என்னால் பார்க்க வே முடியவில்லை மனது ஏதோ போல் இருந்தது. ஒரு நாள் என்னுடைய தங்கச்சி கல்யாண ஆல்பம் எடுத்து பார்த்துக்கொண்டு இருந்தேன் அதில் ஒரு போட்டோவில் என்னுடைய அருகில் மிக நெருக்கமாக நின்றுக்கொண்டு இருந்தாள் .அந்த போட்டோவில் ரொம்ப அழகா இருந்தாள் ” அவளுடைய கண்ணு என்னையே தான் பார்த்துக்கொண்டு இருந்தது”. அப்பறம் அவளைப் பற்றி ஒவ்வொரு விசயமாக சேகரிக்க ஆரம்பித்தேன். அவ எனக்காக தான் நான் படித்த காலேஜ்ல வந்து சேர்ந்து இருக்க, நான் எப்பொழுது எல்லாம் வீட்டுக்கு வரேனோ அப்பொழுது தான் அவளும் என் கூட வீட்டுக்கு வந்து இருக்கா அதுவும் என் கூடவே தான் வந்து இருக்கா ஆனா எதுவும் எனக்கு தெரியவில்லை . நான் அங்கிருந்து கிளம்ப வேண்டிய நாளும் வந்தது அன்னைக்கு தான் மனசு ரொம்ப கஷ்டமாக இருந்தது டா. அவள் வெளியே வருவாளா என்று என்னுடைய மனம் ஏங்கியது ஒரு முறையாவது அவளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. நான் வீட்டில் இருந்து கிளம்பும் போது என்னை ஏமாற்றாமல் அவளும் என்னைப் பார்த்தாள் , ஏனோ ரொம்ப நேரம் அழுது இருப்பா போல கண்ணு எல்லாம் சிவந்து வீங்கி இருந்தது. அவளுடைய கண்ணில் தெரிந்த வலி என்னை ஏதோ பண்ணியது நண்பா! உடனே அவகிட்ட என்னுடைய காதலை சொல்லவேண்டும் என்று துடித்த என்னுடைய மனதை கட்டுப்படுத்திக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன். சில நாட்கள் கழித்து அவளுக்கு நான் போன் செய்தேன் , புது நம்பர் என்பதால் யார் என்று கேட்டாள்?
“பிறந்த நாள் வாழ்த்துக்கள் பொண்டாட்டி ”
உடனே அவ அழ ஆரம்பித்துவிட்டாள்.
எதுக்கு டி இப்ப அழுகின்றாய்?
சோனா, ஏன்டா எருமை இப்ப தான் என்னுடைய நியாபகம் உனக்கு வந்ததா? என்னை நீ ரொம்ப கஷ்டப்படுத்திவிட்ட நீ நேர்ல வா அப்ப உன்னை என்ன பண்றேன் பாரு டா. ஏன்டா ஒரு லவ்வருக்கு தூங்கி எழுந்து பொறுமையாக விஷ் பண்ற? ஏன் பன்னிரெண்டு மணிக்கு விஷ் பண்ணா என்ன டா?
அடியேய் நீ தூங்கி கொண்டு இருப்பாய் என்று நினைத்தேன் டி. சாரி மா பிறந்த நாள் அதுவும் யாராவது அழுவார்களா?
நீ தான் டா என்னை அழ வச்ச . இப்படியே எங்களின் காதல் தொடங்கியது .இருவருக்குமே நல்ல புரிதல் தான் இருந்தது. தீடீரென்று நீ ஊருக்கு போயிருந்த நேரம் எனக்கு போன் பண்ணி நாம பிரிந்து விடலாம் என்னால உன்னை கல்யாணம் செய்துக்கொண்டு சாவோடு போறாட முடியாதுனு சொல்லிவிட்டு வைத்துவிட்டாள் . நான் மறுபடியும் கால் பண்ணும் போது அவளுடைய மாமன் பையன் போன் எடுத்து உனக்கு எதுக்கு டா இவ வேணும்னு சொல்ற? அவ எல்லாம் உனக்கு கிடைக்க மாட்டா ‘ அப்படி உனக்கு கிடைத்தாலும் நான் விளையாடி தூக்கிப் போட்ட வேஸ்ட் பந்து போல தான் உனக்கு கிடைப்பா என்று அசிங்கமா சொல்றான் டா . மறுபடியும் கால் பண்ணும் போது போன் ஸ்விட்ச் ஆப்னு வந்து விட்டது டா. அவன் அவளை பற்றி அப்படி பேசும் போது என்னால் ஒன்னும் செய்ய முடியாத அளவுக்கு இருந்தேன் என்பதை நினைக்கும் போது எனக்கு என்னை நினைத்தே அசிங்கமாக இருக்கு டா. கண்ணீரில் கரையும் தன் நண்பனை வாரி அணைத்து, இந்த பிரச்சனைக்கு இன்றே ஒரு தீர்வு காண வேண்டும்னு என்று சிங்கை அழைத்துக்கொண்டு பஞ்சாப் சென்றான் உதிரன். சில மணி நேரத்தில் பஞ்சாப் சென்று அடைந்து விட்டனர். நேராக சோனாவின் வீட்டிற்கு தான் சென்றார்கள் அந்த வீட்டில் சோனாவிடம் அவளுடைய மாமன் ஏதோ கூறி மிரட்டி கொண்டு இருந்தான் . இவர்களைப் பார்த்ததும் கண்களால் அவளை மிரட்டி விட்டு “நீ எதுக்கு டா இங்க வந்த? “அவன் பேசிய கடைசி வார்த்தைகள் இதுவே உதியின் கை அவனின் கண்ணத்தில் இடியாய் இறங்கி இருந்தது.
சிங் , கீழே உட்கார்ந்த நிலையில் அழுது கொண்டு இருந்த சோனாவை தன் தோளோடு அணைத்துக்கொண்டு அவளின் கண்ணீரை துடைத்து விட்டான்.
உதி, இங்க பாரு தங்கச்சி இங்க என்ன நடந்தது என்று நீ சொன்னால் மட்டுமே எங்களுக்கு தெரியும் ‘ அப்பதான் எங்களால் ஒரு தீர்வு சொல்ல முடியும்.
சிங்கின் தோளில் தன்னுடைய முகத்தை புதைத்துக் கொண்டு ” அவன் என்னுடைய அம்மா குளிக்கும் போது வீடியோ எடுத்து என்னை மிரட்டி அவனுடைய ஆசைக்கு இணங்க சொல்றான்” அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை கண்ணீர் மட்டுமே வந்தது.
உதிரனுக்கு வந்த கோவத்தில் அவனை அடித்த அடியில் பிஞ்ச நார் போல் ஆனான். அவனிடம் இருந்த அனைத்து வீடியோக்களையும் அழித்து விட்டு , அன்றே இரு குடும்பங்களிடமும் பேசி நிச்சியத்தையே முடிவு பண்ணிவிட்டான் உதி.
உதியை கட்டிக்கொண்டு தேங்ஸ் மச்சான். நீ இல்லை என்றால் இந்த பிரச்சனை இன்று முடிந்து இருக்காது டா.
உதி , போதும் டா ‘ அங்க ரூம்ல என்னுடைய தங்கச்சி காத்துக் கொண்டு இருக்கா போய் பேசிவிட்டு வா நாம மறுபடியும் போகனும்.
சரி என்று தலை ஆட்டி விட்டு அறைக்குள் சென்றவன் தங்கள் காதலின் முதல் இதழ் முத்தத்தை அவளுக்கு வழங்கினான்.