அத்தியாயம் 7
ஞாயிற்றுக்கிழமை என்பதால் சற்று அதிக நேரமாக தூங்கிக் கொண்டிருந்தார்கள் வருணிகாவும் ,சாதனாவும்… …இருவரும் விழித்து பார்த்ததும் எதிரே மிதுன்யா சோகமாக அமர்ந்திருந்தாள்..
வருணிகா,… ஏன்டி,காலங்காத்தாலேயே கப்பல் கவுந்த மாதிரி கன்னத்தில் கை வச்சு உட்கார்ந்துட்டு இருக்குற,..
மிதுன்யாவும் அவளை முறைத்து பார்த்து அந்தப்பக்கமாக திரும்பிக் கொண்டாள்… .
.
உடனே,. சஞ்சானாவும் வருணிகா கேட்டுட்டே இருக்குறா,.. இவ ஏன் பதிலைச் சொல்ல மாட்டேங்குறா… ..
வருணிகாவும், சஞ்சனாவும் எழுந்து பல் விலக்கிட்டு முகம் ,..கால்களைக் கழுவி விட்டு வந்தனர்… .
வா.. மிதுன்யா.. நம்ம போய் காபி குடிச்சுட்டு வருவோம் என கூற,… அவளோ கொஞ்சம் மணியைப் பாருங்க பத்து மணிக்கு மேல காபி குடிச்சு என்ன செய்யப் போறீங்க.. இது மதியம் சாப்பாட்டு நேரம் என்றாள்… .
வருணிகா, “இவ என்னடி இப்படி சொல்றா,.. நீ போய் மணியைப் பாரு,… எனக் கூற….சஞ்சு பார்த்துட்டு வந்து,. ஆமாம் மணி பன்னிரண்டு ஆகப் போகுது…
நாங்க இம்புட்டு நேரம் தூங்கியிருக்கிறோம்.. எங்களை எழுப்பி விடாமல் என்ன பண்ணிட்டு இருக்குற மிதுன்யா…
அட,.. போம்மா.. உங்க இரண்டு பேரையும் எழுப்பி விட்டு,.. எனக்கே டையடு ஆகிப் போச்சு எனச் சலிப்பாக சொன்னாள் மிதுன்யா…
ஹேய்.. மிதுன்யா.. வாடி
.வாடி.. எனக்கு ரொம்ப பசிக்குது.. சாப்பிட்டு வரலாம் என அவளை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்… .
ஒரு வழியாக மதியம் உணவு சாப்பிட்டு அறைக்குள் நுழைந்தார்கள்… மிதுன்யாவும் கட்டிலில் அப்படியே படுத்தாள்… .
வருணிகாவும் ,. அவளின் அருகில் அமர்ந்து… இன்னிக்கு அம்மா வருவாங்கன்னு சொன்னாங்க!. .ரொம்ப ஆசையாக இருந்தேன்… இறுதியாக அடுத்த வாரம் வருவேனு சொல்லிட்டாங்க,… அதான் மனசுக்கு ஒரு மாதிரியாக இருக்குது,மன வருத்தத்தைச் சொன்னாள்… .
ஏன்டி,… இதுக்கெல்லாம் போய் வருத்தப்படுற,. அம்மாவுக்கு ஏதாவது முக்கியமான வேலை இருந்திருக்கும்,.. அதனால் வர இயலாமல் போயிருக்கும் என ஆறுதலாக பேசினாள்…
மெர்லினாவும் பிரேயர் பண்ணிவிட்டு,.. அவளின் அறையை நோக்கிச் சென்றனர்… எதிரே வந்த சாதனாவும் ,ப்ரீத்தியும் வழி மறித்து நிற்க,.
“எதுக்காக இப்படி வழியில் வந்து நிக்குறீங்க, எனஅதட்டினாள்…
மெர்லினா அக்கா,நீங்க எதுக்காக எங்களிடம் முதலில் உள்ள மாதிரி பேச மாட்டீக்கீங்க,.. எங்க இரண்டு பேருக்கும் ஒத்துழைப்பு கொடுக்கிறது நீங்க தான்.. நீங்களே எங்களை விட்டு விலகுவது. ஒரு மாதிரியாக உள்ளது சோகமாக கூறினார்கள்..
மெர்லினா,”தேவையில்லாமல் எதையும் நினைச்சுட்டு இருக்காதீங்க,.. எனக்கு உங்களிடம் பேச நேரமில்லை… ஏற்கனவே ஸ்போர்ட்ஸில் கலந்து கொண்டு இருக்கிறேன்..அதுக்காக பயிற்சி எடுத்துட்டு இருக்கிறேன்.. இந்த விளையாட்டு நானே தனியாக விளையாடி வெற்றி பெறுவதற்காக வாய்ப்பு,.. என்னை எம்போக்குல விட்டுங்க பேசிட்டு சென்றாள்…
என்னடி சாதனா,.. இவுக தனியாக விளையாடி வெற்றி பெற போறாங்களாமே,.. இதெல்லாம் நடக்குற விஷயமா என மெர்லினாவை ரொம்ப இழிவாக பேசினாள் ப்ரீத்தி… .
சாதனா, “ஹேய், மெர்லினா அக்காவைச். சாதாரணமாக எடை போட்டு விடாதே,.. அவங்கள பத்தி நீ இன்னும் புரிஞ்சுக்கல… .அவங்க ஒரு விஷயத்துல ரொம்ப ரிஸ்க் எடுத்துட்டாங்கன்னா,’.. அதுல அவங்க பாதி வெற்றி அடைஞ்ச மாதிரி தான்.. உனக்கே போக போக தெரியும் …
வாடி.. வா.. நம்ம வேலையைப் போய். பார்ப்போம்… ..
மிதுன்யாவோ போர்வையை விரித்துக் கொண்டு இரு கால்களையும் மடக்கிக் கொண்டு கைகளை பின்பக்கமாக வைத்துக்கொண்டு தலையை மேலே கீழே அசைத்தாள்… ..
அவளை கண்காணித்த வருணிகா, “என்னம்மா நடக்குது… ஒருத்தி அருகில் அமர்ந்திருக்கிறேன்,.. என்னிடம் ஏதும் கூறாமல் நீயா என்ன பண்ணிட்டு இருக்குற…
மிதுன்யா, “இத பத்தி உங்களுக்குத் தெரியாதா,. இதுக்கு பெயர் தான் உடற்பயிற்சி..நம்ம உணவு உண்டது நமக்கு செரிமானம் ஆகாமல் இருக்கும்.. அப்போது இந்த மாதிரி செய்தால் சீக்கிரமே செரிமானம் ஆகும் என்றாள் .
வருணிகா, “ஓ.. இப்ப செரிமானத்திற்குக் கூட உடற்பயிற்சி வந்துடுச்சா,…எனக்கு இந்த மாதிரி தேவையே இல்லை.. எனக்கு செரிமானம் ஆகலனா,.. ஒரே ஒரு. சீரகம் போதும்… அப்படியே தூங்கிடுவேன்… .
மிதுன்யா, “நீங்க அகல்யா அக்காவைப் பத்தி சொல்றேனு சொன்னீங்களே,.. இப்போது சொல்லுங்க ஆர்வத்துடன் கேட்க,. .
சஞ்சனா.வந்துட்டாளா,இன்னும்மா பயபுள்ள போன் பேசிட்டு இருக்குறா,. என வருணிகா அவளைப் பற்றி குறைசொல்லிக் கொண்டிருக்க,.. மூக்கு வியர்த்த மாதிரி இதோ வந்துட்டேன் என மகிழ்ச்சியாக வந்தாள்…
சஞ்சு, “ஏதோ என்னைப் பத்தி பேசிட்டு இருக்குற மாதிரி தெரியுது…
மிதுன்யா, “வருணிகா உன்னைப் பத்தி பெருமையாக சொல்லிட்டு இருந்தாங்க அதுக்குள்ளேயும் நீயே வந்துட்டீயே,. வா வந்து உட்காரு… அகல்யா அக்கா கதையை கேட்போம்…
இந்த கல்லூரி முதலில் எம்புட்டு கோலாகலமாக இருந்துச்சு தெரியுமா,…
இரண்டுவருடங்களளுக்கு முன்பு,…
நம்ம கல்லூரியில் வருசத்திற்கு ஒரு முறை ஸ்போர்ட்ஸ் நடக்கும்.. அதுல அகல்யாவும், மெர்லினாவும் சேர்ந்து தான் போட்டியில் வெற்றி பெறுவார்கள்…
நம்முடேய பல்கலைக்கழகம் தான் முதலிடத்தில் பிடித்திருந்ததால் அதை பாராட்டி .இருவருக்கும் கோப்பையும் மெடல் மற்றும் பரிசுத்தொகையும். வழங்கப்பட்டது…..
இருவரும் பரிசுத்தொகையை கல்லூரியில் படிக்கின்ற ஏழ்மையான மாணவ மாணவியருக்கு சரிபாதியாக பிரித்து பகிர்ந்து கொடுத்தனர்… அதுமட்டுமல்ல, மீதமுள்ள தொகையை கல்லூரி நிறுவனத்தில் ஒப்படைத்து நூலகம் ஒன்றை உருவாக்க கடிதம் எழுதிக் கொடுத்தார்கள்…
அவங்க விருப்பத்திற்கு ஏற்ப, நூலகம் ,கேண்டின் முதற்கொண்டு நம்ம கல்லூரியே மாறியது… .
இந்த கல்லூரி மாற்றத்திற்குக் காரணம் மெர்லினாவும், அகல்யாவும் தான் கல்லூரி முதல்வர் உட்பட அனைத்து டிபார்ட்மெண்ட் பேராசிரியர்களும் பாராட்டி புகழ்ந்தனர்… ..
இனியும் வருவாள்… .
, .
.
.