Loading

அத்தியாயம் 10

 

நாங்க சொல்ல வருவதை.. கொஞ்சம் கேட்டுட்டு அப்புறம்  சொல்லும்மா.. என்று  பேச  வந்தால் சாதனா ,அதற்கு மெர்லினா, 

போதும்…இப்ப  எதுவும் சொல்ல வேண்டாம்.. காலையில் பார்த்துக் கொள்ளலாம்..எனக்கு தலைவலிக்குது என்றாள்.. 

 

இருவரும் அந்த  ரூமை  விட்டு வெளியே வர.. வருகிற  வழியிலேயே மிதுன்யா  நின்று  கொண்டிருந்தாள்.. 

 

என்னம்மா!..மெர்லினா அக்காவிடம் பேசியாச்சா!.. அக்கா ஏதாவது சொன்னாங்களா.. இல்ல, தலைவலிக்குது கொஞ்சம்  வெளியே  போங்க என்று  சொன்னார்களா!.. 

 

ஏய்!.. எல்லாம் ஒன்னால தான்..டி.. உன்னை என்ன  பண்றேனு  பாரு என்றாள் சாதனா..

 

உன்னால என்ன  பண்ண முடியுமோ பண்ணு… ஆனா,.. நான்  மெர்லினா அக்காவையும்,அகல்யா அக்காவையும்  சேர்த்து தான் வைக்கப் போகிறேன்.. முதலில் இந்த கல்லூரி எவ்வளவு கலையாக கலைகட்டுச்சு.. அதே  போல  மீண்டும்  பழைய நிலைமையில் மாற்றுவேன் என்றாள்  …

 

ஏய்,.. நீ  இங்க  படிக்க தானே  வந்த.. அந்த நோக்கத்தோடு மட்டும் இரு.. அத விட்டுட்டு  தேவையில்லாத விஷயத்துல மூக்கை நுழைக்காதே!.. என்றாள் ப்ரீத்தி… 

 

ஒ.. அதே  கேள்வியை  நான்  உங்களிடம் கேட்டால்,..நீங்களும்  படிக்கத் தானே  வந்துருக்கீங்க.. அந்த படிக்கிற எண்ணத்தில் இருக்கலாம்மே!..எதுக்காக அவங்க இரண்டு பேரையும் பிரிக்கிற  விஷயத்தில் மட்டும் உறுதியாக இருக்கீங்க.. 

.

அது உனக்கு தேவையில்லாத விஷயம்  நீ தலையிடாதே!.. என்றாள் சாதனா.. 

 

நான்  அப்படித்தான்  தலையிடுவேன்.. நீங்க என்னவேணும்னாலும்  செய்யுங்க,.. அவங்க இரண்டு பேரையும் சேர்த்து வைப்பேன்  என்று சொல்லிட்டு சென்றாள்… 

 

மிதுன்யா சொல்வதைக் கேட்ட இருவரும்.. அடியே!.. இவ்வளவு விஷயம் நடந்திருக்குது… சூப்பர்.. மா.. அவங்க இருவரையும் சேர்த்து வைக்க ரொம்ப முயற்சி செய்கிறாய்.. உன்னோட முயற்சி எப்போதும் வீண் போகாது… என்று  சஞ்சனாவும், வருணிகாவும் பாராட்டினார்கள்.. . 

 

சரிடி.. குட் நைட்.. தூங்குவோம் என்று  படுத்தார்கள்… 

 

மெர்லினா மிதுன்யா சொன்னதை நினைத்துக் கொண்டிருந்தாள்… அவ சொல்றத பார்த்தால் சாதனாவும், ப்ரீத்தியும் தப்பா என்னிடம்  சொல்றாங்களா, முக்கியமாக அகல்யா  பத்தி சொல்றாங்களே,.. கல்லூரியில்  என்ன  தான்  நடக்கிறது  ஒன்றுமே புரியலயே… 

 

முதலில் காலையில் எழுந்ததும் கல்லூரியில் போய்  ஏதாவது நோட்டீஸ் போட்டுருப்பாங்க,நம்ம நேராக போய்  பார்த்தால் மட்டுமே காலேஜிக்குள்  என்ன  நடக்கிறது என்பது தெரியும்..அப்படி நோட்டீஸ்  போட வில்லையெனில் யாரிடமாவது விசாரிப்போம் என நினைத்த நொடியில் அப்படியே தூங்கி விட்டாள்… 

 

தாரணியும், நிவாஸ் வருவதற்கு தாமதம் ஆனது.. மதியம்  3மணியளவில் தான் அவங்க  அத்தை வீட்டு வாசலில் நின்றதும் அவங்க மாமா ரங்கநாதன், தாரணியைப் பார்த்து வாம்மா, வாங்க மாப்பிள்ளை இவ்வளவு  தாமதமாக வந்துருக்கீங்க!..  உங்களது    வருகையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறாள்..

 

அவர்களை  வரவேற்று உள்ளே  அழைத்து சென்றார் தேவநாயகியின் கணவர் ரங்கநாதன் ..ஹாலில் தேவநாயகி அமரந்திருக்க,  வாங்க, மகனே,மருமகளே உட்காருங்க உபசரித்து காபியைப் போட்டு வந்து கொடுத்தாள் வேலைக்காரி ருக்குமணி… 

 

நல்லா இருக்குறீங்களா,..என்று  ரங்கநாதன் தேவநாயகியும்  விசாரிக்க அதற்கு நிவாஸ் ,தாரணியும் புன்னகையுடன்  பேசினார்கள் .

 

தாரணியைப் பார்த்து ஏன்டி.. உன்னை  நேற்றே  வரச் சொன்னேன்.. நீ  கரெக்ட்டாக பங்கஷன்  நடக்கப் போகிற நேரத்தை கணக்குப்பண்ணி வந்துருக்க…

 

அத்தை  அப்படியெல்லாம் இல்ல, நாங்க அதுக்காகவே சீக்கிரமாக கிளம்பி இரவிலே  பஸ்  ஏறிவிட்டோம்…வருகிற  வழியில டிராபிக் அதிகமானதால் பஸ்  ரொம்ப  மெதுவாக வந்தது… 

 

அடி..போம்மா.. ஏதாவது  காரணத்தைச் சொல்லிட்டு இருப்ப..உன்  மகன் அல்லது மகளையாவது கூட்டிட்டு வந்திருக்கலாம்மே,.. 

 

அத்தை அவங்க இருவருக்குமே ஒரே  நாளில்  டெஸ்ட்  நடக்குது..இன்னும்  கல்யாணம்  இருக்குதுல.  அப்போது குடும்பத்தோடு வந்துடுறேன் என்றாள்… தாரணியும் அவங்க அத்தையும்  பேசிக் கொண்டே  இருக்க, நிவாஸ்யைக் பார்த்த தேவநாயகி.. என்னாச்சு.. மாப்பிள்ளை.. 

 

சித்தி கொஞ்சம்  தலைவலியாக இருக்கிறது..தலைவில் மாத்திரை  போடுறீங்களா என்று  கேட்க.. 

 

அதெல்லாம்  வேண்டாம்  சித்தி… ஒரு  பத்து நிமிடம்  படுத்தால்  சரியாகி விடும்.. . அப்படியா,.. நீங்க தங்குவதற்கு மேலே ஒரு  ரூம்  இருக்குது.. அங்க போங்க… 

 

ருக்குமணிஎன்று பணி செய்யும்  பெண்ணை அழைத்து இவங்கள, நம்ம  கெஸ்ட் ரூம்  இருக்குதுல அங்க போய் இந்த பேக்கை வச்சுட்டு வா..இவருக்கு அந்த ரூமைக் காட்டு எனக் கட்டளையிட, அதற்குள்ளும்  மாடியிலிருந்து ராதா இறங்கி வந்து தாரணியைக் கட்டி பிடித்தாள்… 

 

ராதவும்  நிவாஸ், அண்ணா. அண்ணி தாரணியைப் பார்த்து அகல்யாவும், சஞ்சீவ்  வந்துருந்தாங்கன்னா,.. சூப்பராக இருந்திருக்கும் என்றாள்..இன்னொரு  முறை  உன்னோட  கல்யாணத்துக்குக் கட்டாயம் அழைத்து வருகிறேன் …. நிவாஸ்  அறைக்கு சென்றான்..அங்கே  போய்  சற்று  நேரம்  ஓய்வெடுத்தான்.. தேவநாயகி வீட்டில்  விருந்தாளிகள் வர  தொடங்கினர்.. 

 

அவர்களை  வரவேற்று நல்லபடியாக உபசரித்தாள்… வீட்டு வேலைகளும்  பரபரப்பாக பார்த்து கொண்டிருக்க… தாரணியும்  சின்ன  சின்ன வேலைகளைப் பார்த்தாள்… அது தேவநாயகிக்கு உதவியாக இருந்தது…

 

நிவாஸ்  தூங்கி எழுந்தவுடன்,அவனது நண்பன்  வேணுவிற்கு போன் செய்து நீ  வீட்டில் தானே  இருக்கிறாய் என்று  விசாரித்தான்…ஆமாம்.. டா.. என்னடா சொல்லு,ரொம்ப நாள் கழித்து போன்  பண்ணிருக்க.. இப்ப  தான்  இந்த நண்பன்  உனக்கு ஞாபகம்  வந்ததா!.. என்றான் வேணு..

 

அதற்கு நிவாஸ், ஏன்டா..நீ வேற.. போடியில்  தானே  இருக்கிறாய்.. உன்னால்  எனக்கு ஒரு  உதவி ஆகனும்  என்றான்… 

 

ம்ம்ம்.. சொல்லு உனக்கு எந்த  ஒரு  உதவி என்றாலும் செய்கிறேன்..என்றான்.. 

 

நீ எங்க  தங்கியிருக்குற, சொல்லு நானும் என்னோட  மனைவியும் ஒரு  பங்கஷனுக்குத் தான் இங்க வந்திருக்கோம்.. அது  முடிந்தவுடனே கிளம்பி விடுவோம்  என்றான் நிவாஸ்.. 

 

சரிடா ..நீங்க போடிக்கு பஸ்  ஏறிட்டு போன்  பண்ணுங்க கண்டிப்பாக காலையில்  வந்து தான்  இறங்குவீர்கள்.. அதுக்குள்ளேயே நான்  காரை  எடுத்துட்டு வந்துடுறேன்.. 

 

சரிடா.. கிளம்பும்  போது  போன்  பண்றேன் என்று  சொல்லி  போனை வைக்க.. அதற்குள்ளும் தாரணி வந்து  சீக்கிரம் கிளம்புங்க. கடைக்கு ஏதோ பொருள்  வாங்கனும்மா.. நான்  மாமா கூட  காரில்  போய்ட்டு  வந்துடுறேன்.. நீங்க டிரஸ்  சேஞ்  பண்ணிட்டு ரூமில்  இருங்க  இல்லையென்றால்  ஹாலில் உட்கார்ந்து இருங்க என்று பரபரப்பாக சென்றாள்..நிவாஸ்மனதிற்குள்ளேயே நம்ம அகல்யாவுக்கு வந்ததில் இருந்தே போன்  பண்ணலயே..

 

அவ எப்படியும்  எக்ஸாம்  முடிஞ்சு வீட்டுல  தான் இருப்பாள் என  நினைத்து போன் செய்தார்.. 

 

டாடி… எப்போது  போனீங்க, அங்க எல்லாரும்  எப்படி இருக்காங்க என்று  விசாரித்தாள்.. அம்மா என்னப்பா பக்கத்தில் இருக்காங்களா என்று கேட்க.. அதற்கு நிவாஸ், அவ  தான்  பங்கஷன்  வீட்டுக்கு வந்தாளே அதில் ஒருத்தியாத ஆகிவிட்டாள்.. ஏதோ ஒரு  வேலையாக சித்தப்பா கூட  போயிருக்காள்… 

 

அப்போது ராதா, அண்ணாஅண்ணா என  கூப்பிட்டாள்.. அண்ணா உங்கள  அப்பா கூப்பிட்டாங்க போன்  பேசிட்டு இருக்கீங்களா.. சரிங்க அண்ணா… 

 

ஏய், ராதா இந்தா..அகல்யா பேசுறா என்று  சொன்னதும். என்னிடம் கொடுங்க என்று  போனை  வாங்கி பேசினாள்… 

 

என்னடி,. அகல்யா..எதுக்குடி.. வரல.. நீயும் என்னுடைய நிச்சயதார்த்தத்துக்கு வந்திருந்தால் நல்லாயிருந்துருக்குமே!.. என்று சொன்னாள்.. மறு பக்கம் அவள்,எனக்கு டெஸ்ட்  ஆரம்பிச்சுட்டாங்க.. இடையில்  லீவு  கிடைக்கும் போது வருகிறேன் என்றாள்.. நீ  நல்லா இருக்கியா… ராதா.. ம்ம்ம்.. சூப்பராக இருக்கிறேன்.. 

 

ராதாவிடம் மாப்பிள்ளை உனக்கு ஓ. கே.. வா.. எனக் கேட்டாள் அகல்யா.. 

 

பரவாயில்லை.. என்னோட லெவலுக்கு கொஞ்சம்  செட்  ஆகாது.. இருந்தாலும் அம்மா, அப்பாவுக்காக ஒத்துக்கிட்டேன் என்றாள் கிண்டலாக.. 

 

உனக்கு ரொம்ப  ஓவர்..டி.. என்று  சிரித்துக் கொண்டே  கேலி செய்தாள் அகல்யா..அதற்குள்ளும் ராதாவை யாரோ கூப்பிட்டது போல்  சத்தம் கேட்க இவளும்..அண்ணா போன்  பேசிட்டு கீழே  போவீங்களா அப்பா சொன்னாங்க என்று சொல்லிட்டு வேகமாக சென்றாள்.. உடனே நிவாஸ்  அகல்யாவிடம் ,அப்பா ,பிறகு கால் பண்றேன் என  சொல்லி வைத்தார்.. 

 

நிவாஸ்,முதலில் குளிச்சுட்டு வருவோம்.. இல்லையெனில் மறுபடியும் யாராவது  கூப்பிட வந்துருவாங்க என்று  சென்றார்.. 

 

எக்ஸாம் முடிஞ்சதும் தன்னோட  அறைக்குச் செல்ல விருப்பமில்லாமல் தனிமையில் போய்  அமர்ந்திருந்தாள்..ச்சே.. காலையிலேயே பார்க்க போகனும்னு நினைச்சேன்.. அதுக்குள்ளேயும் அவங்க இருவரும் வந்துட்டாங்க.. என  குழப்பத்தில்  இருந்தாள்.. அப்போது அகல்யா  இந்த மரத்தடியினில்  ஒன்று  சொன்னது அவளுக்கொன்று நினைவு  வந்தது.. 

 

ஏன்டி.. அகல்யா,டெஸ்ட் முடிஞ்சதும் இங்க வந்து உட்கார சொல்ற.. எதுக்குடி..நம்ம டெஸ்ட்  முடிஞ்சதும் வேகமாக ரூமுக்குப் போக  கூடாது ..சற்று  நேரம் இப்படி காற்றோட்டமாக கண்களை மூடி அமர்ந்தாலே மனசுக்குள் சுகமாக இருக்கும் எந்தவொரு  மன அழுத்தமும் வராது.. அப்படியே ரிலாக்ஸ் ஆக இருக்கும் ..

 

மெர்லினா அதை  நினைத்துப் பார்த்து கண்களை  மூடி  ரிலாக்ஸ் ஆக இருக்க.. அந்த  நொடியில்  சாதனாவும், ப்ரீத்தியும் வந்து அருகில் அமர்ந்தார்கள்… அவள்  கண்களை மூடி இருப்பதைக் கண்டு தோள்பட்டையை அசைத்தாள்.. சாதனா… 

 

பட்டென்று கண்விழிக்க, எதிரே  இருவரும் உட்கார்ந்து இருந்தார்கள்.. அப்போது மெர்லினா மனசுக்குள்ளேயே, இவுக வந்தாலே, ஏதாவது சொல்லி என்னை  ரொம்ப டிஸ்டப்  பண்ணுவாங்க, முதலில் நம்ம  இங்கிருந்து கிளம்பலாம்  என்று  யோசித்த வேளையில்,

 

மெர்லினா.. மெர்லினா..என கூப்பிட்டு கொண்டே  வந்தாள்.. அந்த  கல்லூரியிலேயே படிக்கின்ற மாணவி.. கல்லூரி முதல்வர்  உன்னை உடனே  கூப்பிட்டு வரச் சொன்னார்கள்  என்று  சொன்னதும், அவளும் வேகமாக சென்றாள்… 

 

சாதனாவும், ப்ரீத்தியும் பின்னாலேயே சென்றார்கள்..

 

எக்ஸ்கியூஸ்.. மி.. சார்… 

 

எஸ்.. கமேன்..

 

யூவர்.. sit down.. 

.சொல்லுங்க.. சார்.. உனக்கு பாரின்  போகிறதுக்கு ஒரு  வாய்ப்பு வந்திருக்கிறது.. நீ  போக  தயாராக இருக்கிறாய்,.. 

 

மெர்லினா  சந்தோஷத்தில் பதிலுக்கு என்ன சொல்வது கூட  தெரியாமல் அப்படியே சிலையாக இருக்க, அதனைக் கண்ட கல்லூரி முதல்வர்.. மெர்லினா என்று டேபிளை தட்டியதும்..

 

ஒ.. கே  சார்.. இந்த வாய்ப்பு எனக்கு எதனால் கிடைத்துள்ளது சார்… 

 

உனக்கும்  அகல்யாவுக்கும்  கிடைத்தது… அவள் வரவே மாட்டேன் என்று ஏற்கனவே  கையெழுத்து போட்டு இருக்கிறாள்..அதனால்  அவளை  செலக்ட் பண்ணல, என்றார்… 

 

சார்.. போன  வருடத்தில் பாரின்  போகிற வாய்ப்பு அவளுக்கு தானே  வந்தது என்றாள்..

 

ஆமாம்.. அவள் போகிறதுக்கு இஷ்டமில்லை என்று  ஒரே  முடிவா சொன்னாள்.. நான்   அவளிடம் கட்டாயப்படுத்தி பாரினுக்குப் போனால்  உன்னோட  எதிர்காலம் மிகவும்  நல்லா இருக்கும் என்று  எத்தனை முறை  சொன்னேன்.. அகல்யா கேட்கவே இல்லை… 

 

அவளுடைய  தோழி தான்  அவளுடைய  எதிர்காலம்..இறுதி வரையிலும் ஒன்றாக தான் இணைந்திருப்போம் என்று சொன்னாள்.. மெர்லினாவுக்குக் கிடைக்காத வாய்ப்பு எனக்கு தேவையில்லை என கையெழுத்து போட்டு சென்று  விட்டாள்.. ஆனால் நீ எப்போது கிளம்ப போகிறாய்.. ரொம்ப சந்தோஷம்..அவளுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கவே வில்லை.. நீயாவது நல்ல படியாக அங்க போய்  படிச்சு முன்னேறு என்று அறிவுரை கூறினார்.. 

 

அப்புறம்  அகல்யா இரண்டு நாள்கள்  கல்லூரிக்கு வராமல் போனது.. 

 

ஓ.. அதுவா நான் தான்  அவளை அனுப்பி வைத்தேன்.. என்று சொல்ல ஆரம்பித்தார்..

 

அகல்யா கையெழுத்து போட்ட பிறகு மேலிடத்தில் இருந்து என்னிடம் சில கேள்விகள்  கேட்டதால் அகல்யாவையே சென்னைக்கு அனுப்பி வைத்தேன்.. அகல்யாவும்  முதல் நாளே  கிளம்பி அங்கே  சென்றாள்… எவ்வளவோ அகல்யாவிடம்  பேசி பார்த்தார்கள்  …

 

..ஆனால் ஒரே  முடிவை மட்டும் சொன்னாள்.. எனக்கு வர  விருப்பமில்லை என்று சொன்னதும் அவங்க அடுத்த முறை  நீங்களே  போகனும்னு  நினைத்தாலும் வாய்ப்பு கிடைக்காது என  அங்கேயுள்ள மேடம், சார்  உறுதியாக சொல்லிட்டாங்க,.. அதற்கு அவளும் ஒரே  தீர்மானத்தோடு கையெழுத்து போட்டாள்.. 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்