அத்தியாயம் 8
அகல்யா அக்காவும், மெர்லினா அக்காவும் இந்த கல்லூரிக்காக இம்புட்டு செஞ்சுருக்காங்களே, பிறகு எதுக்காக இருவரும் பிரிஞ்சு இருக்காங்க,…. இடையே கேள்வி கேட்டாள் மிதுன்யா… ..
அடியே,..இரு. சொல்றேன் என்றவள் வேகமாக எழுந்து அமர்ந்தாள் ..இவ எதுக்காகஎழுந்ததிருச்சு உட்காருரா என சஞ்சனா மிதுன்யா காதில்முணுமுணுத்தாள்… .
ஹேய்,.. நீங்க இரண்டு பேரும் என்ன முணுமுணுக்கிறீங்கன்னு தெரியுது… ரொம்ப நேரமா கால் இரண்டையும் மடக்கி வைச்சு உட்கார்ந்திருந்தேன்ல,.. அதான் கால் வலிக்குது… .
மெர்லினா, அகல்யா இரண்டு பேரும் சேர்ந்து கல்லூரியின் மாணவிகளுக்கு அதுவும் கஷப்படுகிறவர்களுக்கு மட்டும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தார்கள்… ..இவர்களது நல்சேவையினை பார்த்து கல்லூரி முதல்வரே பெருமைபட்டார்…
இவுக இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து இருப்பது சாதனா,பீரித்திக்கும் பொறாமையாக இருந்தார்கள்… அவங்க இரண்டு பேரையும் பிரிக்கனும் என்பதற்காக காத்திருந்தார்கள்… .அதற்கேற்றாற் போல அவங்களுக்கு சாதகமாக ஒரு. நாள் வந்தது… .
கல்லூரியின் முதல்வரோ அகல்யாவை அழைத்ததைக் கவனித்த சாதனாவும், ப்ரீத்தியும் பின்தொடர்ந்தாரஅறைக்குள்ளேயே
நுழைந்த கல்லூரி முதல்வர் உட்காரும்மா…
பரவாயில்ல சார் என தயங்கினாள்…
நீ தயங்க தேவையில்லை,..உட்காரும்மா என உத்தரவிட்டார்…
உன்னுடைய படிப்புக்கும் ,திறமைக்கும் ஏற்ற மாதிரி பாரின் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது…
அப்படியா சார், எனக்கு ரொம்ப சந்தோஷமாக உள்ளது என வெளிப்படையாக கூறினாள்.. .மெர்லினாவும் நானும் எப்போது கிளம்பனும்… .
உனக்கு மட்டும் தான் இந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு… மெர்லினாவுக்கு கிடைக்கல மா… .
என்ன சார் சொல்றீங்க… அவளும் தானே மதிப்பெண் அதிகம். பெற்றிருக்கிறாள்.. அவளுக்கு மட்டும் ஏன் கிடைக்கல… .
மெர்லினா ஒரு. பாடத்தில் மட்டும் மதிப்பெண் குறைவாக எடுத்திருக்கிறாள்.. அதனால் அவளை தேர்ந்தெடுக்க வில்லை..
ஓ. கே.. சார் எனக்கும் இந்த பாரின் வேலை வாய்ப்பு வேண்டாம்… மெர்லினாவிற்கும் இந்த வாய்ப்பு கொடுத்தால் சந்தோஷப்படுவேன்… பாரின் போகிறதுக்கு என்னை விட சந்தோஷப்பட்டது அவ தான்..அவளுக்கே அந்த வாய்ப்பு இல்லையென்றால் ,நான் போய் என்ன ப்ரோஜனம் என வெடுக்கென்று எழுந்தாள்…
அகல்யா கோபப்படாதே,.. உன்னை தேர்ந்தெடுத்தது நானில்லை… பல்கலைக்கழகத்தில் இருந்து,.. நீ பாரின் போகிறதுக்கு ஒத்துக்கிட்ட ஆகனும்…
என்னை கட்டாயப்படுத்தி சம்மதிக்க முடியாது நான் வாரேன் என்றாள் அகல்யா,…
அகல்யா.. அகல்யா கோபப்படாதே!..நீ முதலில் உட்காரு…நல்லா யோசித்து சொல்லு என மீண்டும் கேட்டார்… .
அகல்யா,..”மெர்லினாவுக்கு யாரும் இல்லை..அவளும் நானும் இறுதி வரையில் பிரியாமல் ஒன்றாக இருக்கனும் அது தான் என்னோட ஆசை…
அகல்யா..இந்த பாரின் வேலை வாய்ப்பு ஒரு தடவை தான் வரும்..கொஞ்சம் நல்லா யோசித்துக் கொள்ம்மா!.. உனக்கு ஒரு நாள் டைம் கொடுக்கிறேன்.. நீ உன்னோட முடிவைச் சொல்லு என்றார் principal…
சார், என்னோட முடிவு இது தான் என்றாள் இறுதியாக…
ஓ. கே.. அகல்யா.. நீ போய் ஒரு பேப்பரில் எழுதி கையெழுத்து போட்டு கொடும்மா.. இல்லையென்றால் மேலிடத்தில் என்னிடம் கேள்வி கேட்பார்கள். அவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது…
ஓ.. கே.. சார்.. என்று சொல்லிட்டு கையெழுத்து போட்டு விட்டு சென்றாள்.சாதனாவும்,ப்ரீத்தியும் மரத்தடியில் சற்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்…
ப்ரீத்தியும், சாதனாவைப் பார்த்ததும்..ஏன்டி.. என்ன யோசிக்கிற… இரு… சொல்றேன்… அவங்க இருவரையும் பிரிக்க நல்ல யோசனை கிடைத்து விட்டது..
அப்படியா!.. சாதனா.. என்ன விஷயம். பாரின் போற விஷயத்தை வச்சு தான் அவங்க இரண்டு பேரையும் பிரிக்க போகிறேன்…
இங்க வா,சாதனா .இப்ப அகல்யா வீட்டுக்குப் போயிருப்பாள்.. நீ என்ன பண்ற… மெர்லினா அறைக்குச் சென்று அகல்யாவுக்கு பாரின் வேலை வாய்ப்பு கிடைச்சிருக்கு.. அவளிடம் principal சொல்லிக்கிட்டு இருந்தாங்க… இந்த விஷயம் உனக்கு தெரியுமா என்று கேட்டுப் பாரு… அவள் கண்டிப்பாக நம்மிடம் அகல்யா சொல்ல வில்லையே என்று சங்கடப்படுவாள்..
அதே விஷயத்தை வச்சு கூட மேன்மேலும் வருத்தப்பட வைக்கலாம் என்றாள்..
அது..எப்படி.. இங்க வாடி..ப்ரீத்தியை அழைத்து .காதில் ரகசியமாக சொன்னாள்…
ப்ரீத்தியும்..அவள் கூறியது போல மெர்லினாவிடம் சொல்ல,, அவளுக்கும் ஒரு சந்தேகம் ஏற்படுகிறது.. அகல்யா அப்படி செய்யமாட்டாளே!.. என்னிடம் எந்தவொரு விஷயத்தையும் முதலில் தான் சொல்வாள்.. ஆனால் கல்லூரியில் உள்ள அனைவருக்கும் தெரிந்த விஷயம் எதற்காக என்னிடம் சொல்லாமல் மறைக்கனும்.
. கண்டிப்பாக ஏதாவது காரணம் இருக்கனும் என்றாள் மெர்லினா…
அதற்கு ப்ரீத்தியும் ஒரு காரணம் இருக்குதுடி… பாரின் போகிறதுக்கு அவளுக்கு மட்டும் தான் தகுதி இருக்கிறதாகவும்,மெர்லினாவுக்கு,
படிப்பு சரியாக வராது எனவும்
principal விடம் , இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு எனக்கு மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கின்றது சொல்லிக்கிட்டு இருந்தாள்…
இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்.. எங்க இரண்டு பேரையும் பிரிக்கிறதற்காக சொல்றியா,..என்று தெளிவாக கேட்டாள்..
நான் எதுக்கு உங்க இரண்டு பேரையும் பிரிக்கனும்..நீ அவ மேல நம்பிக்கை வச்சிருக்க… அந்த அகல்யா உனக்கு துரோகம் செஞ்சுட்டு இருக்கிறாள்.. இதுக்கு மேலயும் நாங்க என்ன செய்யறது..என சொல்லி புலம்பிட்டு போனாள்…
நீயே போய் அகல்யாவிடம் கேட்டுக் கொள்.. நானே விஷயத்தைக் கேள்விப்பட்டோம் அவ்வளவு தான் ..
.
இனியும் வருவாள்… .