Loading

அத்தியாயம் 3

 

 

   காலேஜீக்கு அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள் சஞ்சனா… ஏன்டி… இப்படி   அவசரமாக கிளம்பிட்டு  இருக்க, 9.30 தானே  கிளாஸ்… அதுக்குள்ளேயும்  ரெடியாக இருக்கிற,.. 

 

ஓ… நீ… புதுசா  வந்ததால உனக்கு  தெரியாது… ஒரு  நிமிஷம் இரு… வருணிகா… வருணிகா… கூப்பிட… அவளும்  சஞ்சனாவுக்கு டிபன்  கொண்டு  வந்தாள்… 

 

இந்தா…சாப்பிட்டு போ…ஏம்மா எனக்கு பசியில்லை.. அதனால வந்து  சாப்பிடுறேன்…. 

 

“சொல்லுடி… எதுக்காக சீக்கிரம்  கிளம்புறேனு… மிதுன்யாவிடம் சொல்லு… எனக்கு  லேட்  ஆச்சு… நம்ம   கிளாஸில் சந்திப்போம்… 

 

சஞ்சு… சஞ்சு… நில்லுடி… சாப்பிட்டு  ..போம்மா…. 

 

நீயாவது  சொல்லு..இவள்  தனியாக  படிக்கப்  போறாளா!.. அவ  யாரிடம்  படிக்கிறா!.. 

 

இவ, தனியாக  போய் படிக்கப்  போறாளா!.. சிரித்துக் கொண்டே இருந்தவளை,.  

 

வருணிகா… சொல்லிட்டு  சிரிம்மா.. நானும் சிரிப்பேன்ல என்றாள்  மிதுன்யா…

 

சஞ்சனா அவ  மாமா பையனை  விரும்புகிறாள்..தினமும்  எட்டு  மணிக்கு சந்திக்க  போவாள்… 

 

மாமா பையனும்  இவளும்  சிறு  வயதில்  இருந்தே ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக நேசிக்கிறார்கள் அப்படி ஒரு  காதல்… கண் மூடித்தனமாக  வைச்சிருக்க அவ  மாமா பையன்  அசோக்…. 

 

ஓ.. கோ… சஞ்சனாவுக்கு அப்படி  ஒரு  கமிட்மெண்டா… அதான் குஷியாக சாப்பிடாமல்  போறாளோ!… 

 

அசோக்  என்ன பண்றாங்களாம்.. நீ  இத  பத்தி நீ  கேட்டியா வருணிகா… 

 

அப்பப்ப்பா,..தினமும் அத பத்தி தான்  பேசுவா, அசோக்.. அசோக்.. தான் வாயிலிருந்து  வரும்… என்னமோ… நேற்று  நீ  புதுசா வந்திருந்ததால  அவ  எதுவும் பேசல  ..

 

சரி… இத  நானே  தான்  சாப்பிடனும்.. மிதுன்யா கிளம்பியாச்சா,.. போவோமா.. 

போலாமே… 

 

இருவரும்  சாப்பிட்டு  அவங்க  கிளாஸ்க்குச் சென்றார்கள்… இவளும் புதுசாக  சேர்ந்திருந்ததால்  அனைவரும்  இவளை  நோக்கினார்கள்…

 

வருணிகாவை கூப்பிட்டு  ..இவங்க  ஏன்  என்ன  வச்சக்கண்ணு  வாங்காம்மா பாக்காங்க!..  இங்க உள்ள எல்லோரும் இப்படி தான்… நம்ம கிளாஸ்க்கு புதியதாக வருபவர்களை இப்படி  ஒரு  பார்வை நோக்குவாங்க,.. 

 

நீ  வா… அருகில் உட்காரு… இழுத்து அமர வைத்தாள்  வருணிகா.. 

 

எதிர்த்த  பெஞ்சில் அமர்ந்த  மாணவிகள் இவளது  பெயரை கேட்க  வந்த போது  மேம்  உள்ளே நுழைந்து விட்டார்கள்.. 

 

எல்லோரும் வந்தாச்சா!.. 

 

இனியும்  யாராவது  வந்தால்  அவங்க  வெளியே  தான்  நிக்கனும் என  சத்தம்  போட்டார்கள்… 

 

மிதுன்யா  வருணிகாவிடம்  ..இன்னும்  சஞ்சனா  வரல…என  மெதுவாக பேச.. வருவாள்…ஆனால்  இந்த மேம்  இருக்கும் போது  கண்டிப்பாக வரமாட்டாள் …

 

ஏன்டி… இந்த  மேம் திட்டுவாங்களா!.. 

 

இவள்  பேசுவதை  கண்காணித்த மேம் லீலா… 

 

எழுந்திரும்மா,..வருணிகா.. உம்  பக்கத்தில் அமர்ந்திருக்காளே.. எழுந்திருக்கச்  சொல்லு…

 

ஏய்  …உன்னைத்  தான்  …

 

நீ  யாரு… உன்னுடைய  பெயர்  என்ன?.. 

 

மேம்.. மிதுன்யா… 

 

மிதுன்யாவா.. 

 

உம்  பெயர் லிஸ்ட்டில் இல்லையே. 

 

இல்ல…. மேம்.. நான்  நியூ ஜாயிண்ட்… நேற்று  தான்  வந்தேன்… 

 

கொஞ்சம்  நல்லா  லிஸ்ட்டில் பாருங்க  மேம் ..

 

ஏய்..எனக்கு  கண்ணு  தெரியலனு குத்திக்காட்டிறியா.. 

 

பேசாமல்  வெளியே போ…நீ  வேற  கிளாஸாக  இருக்கும்..இந்த  கிளாஸ்னா உன்னுடைய  பெயர்  லிஸ்ட்  என்  கைக்கு  வந்திருக்கும்…

 

போ… வெளியே  போ… சொல்லிக் கொண்டிருக்கையில்… 

 

எகஸ்கியூஸ்  ..மீ… மேம்… 

 

உள்ளே… வாங்க… 

 

இந்தாங்க  புதுசா  வந்த  பெண்ணின் பெயர் லிஸ்ட்.. இத  சார்  இப்போது தான்  கொடுத்து  விட்டாங்க!..  

 

ஓ… நீங்க …போங்க…

 

ம்ம்ம்.. நீ  உட்காரும்மா….

 

மிதுன்யா…தானே… 

 

எதுக்காக  அவளிடம்  பேசிக்கிட்டு இருந்த.. 

 

நான்  உள்ளே  வந்துட்டா… 

 

நடத்துவதை  மட்டும்  கவனிங்க…நீ  புதுசாக  வந்ததால் தெரிஞ்சுக்கோ. 

 

கவனிக்காமல்  யாராவது  இருந்தால் அன்று  நான்  கிளாஸ்  முடியற வரைக்கும் வெளியே  தான் நிற்கனும்… 

 

வருணிகா..சஞ்சனாவ எங்க…என்னோட  கிளாஸ்க்கு  வருகிற  மாதிரியே தெரியலயே…

 

என்னாச்சு… 

 

உடனே… மேம்.. அவளுக்கு  உடல்நிலை சரியில்லை..அதான்  வரல  …நாளைக்கு  வந்துடுவா… 

 

என்  கிளாஸ்க்கு  மட்டும்  அவளுக்கு உடம்பு  சரியில்லாமல் போகுது அப்படித்தானே… வருணிகா…. 

 

மேம்.. அப்படியெல்லாம் இல்ல  மேம்.. 

 

“அதற்குள்ளும் உள்ளே  நுழைந்தாள் சஞ்சனா…. ‘

 

ஸாரி… மேம்… இனிமேல்  லேட்டாக  வரமாட்டேன்… 

.

கோவிலுக்குப்  போனேன்  மேம்… எங்க சொந்தக்காரங்க இந்த  சென்னையில் தான்  உள்ளார்கள்… ஒரு  functions  அதான்… 

 

வருணிகா  உடம்பு சரியில்லை என  சொன்னாள்… 

 

மேம்  நேற்று  தான்  வயிற்றுவலி.. அதான்  மேம்  வர  இயல  வில்லை… புரிஞ்சுக்கோங்க…. என  பேசி  சமாளித்து  விட்டாள்… 

 

நீ  போய்.. உட்காரு.. இனிமேல்  இதுதான்  கடைசி… என்னுடைய  கிளாஸில்  எப்போதும்  இருக்கனும் போ… உட்காரு… 

 

பாடத்தை தொடர  ஆரம்பித்தார்கள்… ஆரம்பித்தவுடன் பெல்  அடித்து  ஒன் அவர் முடிஞ்சதா.. ஓ.. கே… நாளைக்கு பார்க்கலாம்… 

 

அடுத்த  நிமிடத்தில் மிதுன்யா.. ஏன்டி  இவ்வளவு  லேட்… 

 

உண்மையாகவே கோவிலுக்குப் போய்ட்டு தான்  வந்தேன்… நம்ம  அப்புறம்  பேசலாம்  நெக்ஸ்ட்  கிளாஸ்  சார்  வந்துட்டாங்க… 

 

மிதுன்யா இந்த  கிளாஸ்  எப்படி  போகுதுனு  பார்ப்போம்… மிதுன்யா எதிர்பார்த்ததை விட   சுறுசுறுப்பாகவும் ,ஜாலியாகவும்  சென்றது… 

 

மதிய  வேளை  நேரமாகியது… ஒவ்வொரு  பாடமும்  நன்றாக தெளிவாக  நடத்தினார்கள் என்று  சஞ்சனாவிடம்  சொல், ஒருவரையொருவர்  பேசிக் கொண்டிருக்க பெல் அடித்தது… 

 

ஹாஸ்டலுக்குச்  சென்று  சாப்பிட்டு  முடித்து,.. கையை  வாஷ்  செய்ய  வரும்  போது  மெர்லினாவைச்  சந்திக்கிறாள் மிதுன்யா… 

 

மெர்லினா அவளை  பார்த்தும்  பார்க்காதது  போல்  செல்ல, மிதுன்யா  பின்னாலேயே மெர்லினா  அக்கா நில்லுங்க.. நில்லுங்க.. என  ஓட… 

 

மிதுன்யா  ஓடுவதைப் பார்த்த அகல்யா  இவ  எதுக்காக அவ  பின்னாலேயே ஓடுறா… 

 

ச்சே… நிக்கவே  மாட்டிக்கிறாங்க.. என்று சொல்லி திரும்ப… 

 

அகல்யா  அவளைப் பார்த்து,.. என்னம்மா.. மிதுன்யா… 

 

நேற்று  மெர்லினாவிடம்  சண்டை  போட்டுக்  கொண்டிருந்தாய்… இன்று நீயே  கூப்பிட்டாலும் அவ  உன்னை  திரும்பிப்  பார்க்காமல்  செல்கிறாள்… 

 

ஆமாம்… அக்கா…சிரிக்க..

 

ஏம்மா,.. பார்த்து.. சிரி ..

 

அக்கா.. இங்க  வாங்க கொஞ்சம்  உட்காருங்க…. 

 

நடந்த  எல்லாத்தையும்  சொல்லி  முடிக்க,.. அதை  கேட்ட  அகல்யா  ஷாக்  ஆகிப்  போனாள்… 

 

என்னக்கா.. டப்பென்று  எந்திருச்சுட்டீங்க!.. 

 

“கிளாஸ்க்கு  நேரமாச்சா!.. நீங்க வேணா  போங்க  …நம்ம  ஈவ்னிங்  பேசுவோம்…’

 

ஏய்… மண்டு… மண்டு… என்ன  பேசி வச்சிருக்க.. அவ  யாரென்று  தெரியுமா!.. உனக்கு அந்த விஷயம் எப்படி சொல்ல.. அவளிடம்  எதுக்குடி பேசுன… இன்னும் அவ என்னன்ன  செய்ய  போறாளோ!..  குழப்பத்தோடு புலம்பிக்  கொண்டாள்… 

 

இத பத்தி நாளைக்குச்  சொல்கிறேன்… bye.. bye… bye… 

 

அகல்யா.. அக்கா.. கத்தினாள்…

 

ஏய்,.. அங்க பாரு. மிதுன்யா.. அங்க நிக்கிறா.. என்று கூறினாள் சஞ்சனா… 

 

ஏபுள்ள.. உன்னை எங்கெல்லாம் தேடுறது.. 

 

அகல்யா அக்காவிடம் பேசிக்கிட்டு இருந்தேன்.. அதுவும் மெர்லினா அக்காவைப் பத்தி கேட்டாங்க சொல்லிட்டு இருந்தேன்… 

 

அகல்யா அக்காவிடம்  நீ  பேசியதை எல்லாம் சொல்லிட்டியா!… அதிர்ச்சியுடன்  கேட்க… 

 

வருணிகா என்னம்மா!.. இவ ஏன்!?..இப்படி  கேட்கா,.. அவங்ககிட்ட  கூறினால் தப்பா…

 

தப்பு இல்ல… மெர்லினாவும்  அகல்யாவும்  நல்ல  தோழிகள்.. அதாவது பெஸ்ட்  பிரண்ட்ஸ்…. அவங்க  இந்த  காலேஜில்  எவ்வளவு நல்லது  செஞ்சுருக்காங்க உமக்கு தெரியாதுல அதான்… அவ ஷாக் ஆகுறா. 

 

அகல்யா அக்காவும்,..மெர்லினா அக்காவும்   தோழிகளா!.. 

 

இருவரும் பேசிக் கொள்ளமாட்டார்களா!… 

 

ம்ம்ம்… பேசமாட்டாங்க.. இரண்டு பேருமே காலேஜில் முதலிடம் தான்  வருவாங்க.. ஸ்போர்ட்ஸ்ல அதுவும் நம்ம பல்கலைக்கழகம் தான்  முதலிடத்தில் வந்தது.. அவங்க  இரண்டு பேருமே ஒன்னா  இருக்கும்போது நம்ம கல்லூரியில் அப்படி ஒரு  அருமையான நாள்கள்.. அத நினைக்கும்  போது இப்பவே புல்லரிக்குது.. 

 

வருணிகா சொல்லுடி.. அவங்க  ரெண்டு பேர  பற்றி  தெரிந்து கொள்ள  ஆவலாக  இருக்கின்றேன்.. 

 

ஆமாம்.. எமக்கு சின்ன  சந்தேகம்… நீயும்  இப்போது தான்  First year  நியூ  ஜாயிண்ட்  உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் மறுகேள்வி கேட்டாள்  சஞ்சனா… 

 

லூசு… சஞ்சு… 

 

உம்மிடம்  எத்தனை முறை தான் கூறுவது.. என்னோட  அத்தை  பொண்ணு  இங்க தான்  படிச்சு முடிச்சாங்கன்னு… 

 

ஓ… ஸாரி.. ஸாரி.. டி.. பேபி.. தெரியாமல்  கேட்டுட்டேன்… 

 

வருணிகா …சொல்லு.. அதற்குள்ளும்  பெல்  அடிச்சுட்டாங்க,.. 

 

ஐய்யோ.. அடுத்த கிளாஸ்  வந்துருச்சு…

 

நம்ம  ரூமில்  போய் சொல்றேன்.. சரியா  மிதுன்யா… எனக் கேட்டாள் வருணிகா… 

 

ம்ம்ம்..ஓ.. கே.. வாங்க  போவோம்.. கிளாஸ்ல  யாருமே  சிரிச்சு பேச மாட்டாங்களா,..

 

பேசுவாங்க,.. புதுசு என்பதால் கொஞ்சம் தயங்குவார்கள்… அதான்  நம்ம  மூன்று  பேரும் பேசிக்கிறோமே,..இதுக்கு மேலயும்  உன்கிட்ட  யாருடி  பேசனும்  வம்பிழுப்பது போல  துள்ளி  எழுந்த சஞ்சனா.. 

 

அடுத்த நிமிடத்தில் மேம்  வந்துட்டாங்க… 

 

அவங்களும் வந்தாங்க.. கிளாஸ்  எடுக்கிறாங்க..கிளம்பிடுறாங்க.. ஏதாவது  டவுட்  இருக்கான்னு  கேட்கிறாங்களா.. 

 

என்னடி.. இது… எல்லாரும் ஸ்டாப்பும் இப்படித்தானா.,,வருத்தத்துடன்  பேசினாள்…

 

கொஞ்சம்  பொறுமையாக  இரு.. இப்போது வருகிற  மேம்  செம…செம.. யாக இருப்பார்கள்..இவங்க  பேசுவதே கேட்டுக்கிட்டே  இருக்கலாம்… 

 

இதோ  வந்துட்டாங்க…

 

ஹாய்!.. every body. 

 

இன்னிக்கு  நாள்  எப்படி  போனது…யாராவது  எந்திருச்சு  சொல்லுங்க..  

 

மிதுன்யா  வேகமாக  நல்லாவே  போகல.. எனச்  சொன்னதும்… 

 

கெட். அப்… என்ன  சொன்ன,..

 

இன்று  நல்லாவே  போகலயா… ஏம்மா… நியூ  ஜாயிண்ட்டா,.. 

 

எஸ்.. மேம்… இன்னிக்கு நாள்  உனக்கு  அப்படிதான்  இருக்கும் ..போக  போக  பழகிடும்… 

 

ஏனா!.. எமக்கும்  புதுசா  ஜாயிண்ட் அன்றைக்கு இப்படி தான்  இருந்துச்சு..அதனால  டோண்ட் பீல்..

 

ஓ.. கே… வா.. 

 

அந்த  மேம்  விறுவிறுப்பாக கிளாஸ் நடத்த சுவாரஸ்மாக கவனித்த மறுகணம்  நேரம்  போனதே  தெரியல… 

 

அவங்க பெயரைக்  கேட்க  ஆவலாக  இருந்துச்சு.. 

 

எக்ஸ்கியூஸ்.. மி… மேம்… 

 

டெல்… மி…கேர்ள்…. 

 

யுவர்  நேம்… ப்ளீஸ்… 

 

மை.. நேம்.. சாருலதா…

 

ஓ.. கே… டியர்… 

 

..இன்னிக்கு  கிளாஸ்  ஓவர்… ஏதாவது  டவுட்  இருந்தால் நாளைக்கு  உங்களுக்காக  ஒதுக்கிற  அரைமணிநேரத்தில் கேட்கலாம்… 

 

சஞ்சனாவிடம்  ,மிதுன்யா லாஸ்ட் அவர்  நேரம் போனதே  தெரியலடி… வெரி  interesting…

 

வருணிகா  நீ கூறியது  போலே  அவங்க நல்லா  தான்  பேசுறாங்க… 

 

இன்னிக்கு  வந்த  சாருலதா  மேம்  தான்  எனக்கு  பிடிச்சிருக்கு… 

 

சரிடி… ஹாஸ்டலில் போய்  பேஷ்  வாஷ்  பண்ணிட்டு  டி  குடிக்க  வருவோம் …

 

சஞ்சனாவிடம் என்னடி  இன்னிக்கு  உன்  மாமா  பையனைப் பத்தி  பேசவே இல்ல  …

 

என்னத்த  பேச,.. அவனிடம்  பேச  நேரமே  இல்லடி… அதான் சொந்தக்காரங்க மொட்டை functions  வெரி  பிஸியாக  இருந்தான்…

 

நீ  ஆட்டோவில்  போனியா,.. இல்ல  உன்  அசோக் கூப்பிட  வந்தாங்க,.. அவன்  தான்  வருவேனு  சொன்னான்… கடைசி  நிமிடத்தில் பிஸியாக  இருக்கேன்   கோவிலுக்கு  வந்திடுனு  சொல்லிட்டான்… அவனிடம்  பேசுவதற்கு கூட  நேரம்  இல்ல,..பைக்கில் காலேஜ்க்கு  வரைக்கும்  விடுவான்  என  எதிர்பார்த்தேன்… 

 

அதுவும்  வரல… அதான்  அவன்  மேல  கோபத்தில்  இருக்கேன்… 

 

அவங்க உண்மையாக  பிஸியாக  இருந்துருப்பாங்க !..நீ அத  நினைச்சு  கவலைப்படாத,. கண்டிப்பாக  உனக்கு  கால்  பண்ணுவாங்க சொல்லிக்  கொண்டிருந்தாள் மிதுன்யா… 

 

சஞ்சனாவிற்கு  போன்  ரிங்  ஆச்சு… அவள்  போனை  பார்த்த  சந்தோஷத்தில்  மிதுன்யாவின் கண்ணத்தில் முத்தமிட்டு சொன்னது  போல  அசோக்  போன்  பண்ணிட்டான்… 

 

பேசிட்டு  வருகிறேன் என்றாள்  சஞ்சனா… 

 

மிதுன்யா  அமர்ந்திருக்கும் பக்கத்தில்  உள்ள  நாற்காலியில் சாதனாவும்,. ப்ரீத்தியும்  உட்கார்ந்தார்கள்… முகத்தை  ஆக்ரோஷமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்… கவனித்த  வருணிகாவும் மிதுன்யாவிடம் ஏன்டி.. இவுக  ரெண்டு  பேரும்  வம்பிழுக்க  வந்துருக்காங்க!.. கொஞ்சம்  உஷாராக  இரு..எதுவும் பேசாதே என  கண்டித்தாள்… 

 

மிதுன்யாவும்  அவங்க  ரெண்டு  பேரையும்  சாதாரணமாக  நோக்கினாள்.. 


இனியும் வருவாள்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்