ஹலோ உறவுப்பூக்களே! எழுத்தாள தோழமைகளே! வாசக நட்புகளே! 📢📢📢 கலக்கலான ஒரு நாவல் போட்டிக்கு தயாரா? 🎉
தூரிகையின் நம்ப தீபாவளிக்காக, “தூரிகை பட்டாசு போட்டி” அறிவிக்கப்படுகிறது.
🥰“சோஷியலா ஒரு சோஷியல் கன்டெண்ட், கலாட்டவா கலக்கல் காதல், லேசா படபடக்க வைக்கிற பரபரப்பு, சட்டுன்னு கண் கலங்க வைக்கிற சூழ்நிலைகள், மனதை மயங்க வைக்கும் கதை முடிவு… 🥰🎉” இது தான் போட்டியோட தீம் ஃப்ரெண்ட்ஸ்.
கதையில் சமூக கருத்து இருத்தல் அவசியம்.
‘எனக்கு லவ் சப்ஜெக்ட் சுத்தமா வரலை’ன்னு சொல்ற எழுத்தாள நண்பர்களே… வித்தியாசமான கதைக்கருவோடு சேர்ந்த சமூகக் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக போட்டியை அறிவித்துள்ளோம்🎉
கொடுக்கப்பட்ட தீம் – ஐ உபயோகித்து, காதலில் வித்தியாசம் கொடுத்தாலும், சமூகக் கருத்தில் வித்தியாசம் கொடுத்தாலும், இல்லை அடிதடி ஆக்ஷனில் வித்தியாசம் கொடுத்தாலும் ஓகே…
கொடுக்கப்பட்ட ‘தீமை’ பொறுத்து கதை நகர்வு இருத்தல் அவசியம்🥰
நாவலின் வார்த்தை அளவு : 40,000 முதல் 45,000 வரை
அத்தியாயங்கள் : 25 முதல் 30 வரை.
எழுத்தாளரின் பெயர் மற்றும் கதை பற்றிய விவரங்களை ரெஜிஸ்டர் செய்ய கடைசி நாள்: நவம்பர் 3, 2021
நவம்பர் 4 ஆம் தேதி முதல் போட்டியாளர்கள் அத்தியாயங்களை பதிவு செய்யத் தொடங்கலாம். அதனை பற்றிய விவரங்கள் விரைவில் வெளிவரும். போட்டி முடிவடையும் இறுதி நாள்: ஜனவரி 31, 2022.
எழுத்தாளர்கள் தங்களின் பெயரை வெளியிடாமலும் எழுதலாம். தீபாவளி அன்று பதிவிடத் தொடங்குவதால், பெயர் வெளியிடாமல் எழுதும் எழுத்தாளர்களின் டம்மி பெயர்கள், தீபாவளி பட்டாசு வகைகளை முன்னிறுத்தி எழுத்தாளர்களாலேயே தேர்வு செய்யப்படும்.
தீபாவளி திருநாளில் இருந்து, எழுத்தாளர்கள் அத்தியாயங்களை பதிவிடும் சமயத்தில், தளத்தின் சார்பாக சில சுவாரஸ்ய பரிசுகள், எதிர்பாராத ஆச்சர்யங்கள், வாசகர்களுக்கான சில திடீர் பரிசுகள் அனைத்தும் வானவெடியாய் தொடர்ந்து வரப்போகிறது. அத்தனையும் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களை உற்சாகப்படுத்தும் என நம்புகிறோம்.
முதலில் பதியப்படும் 50 கதைகளே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும். ஒரு எழுத்தாளர் ஒரு கதையை மட்டுமே போட்டிக்கு எழுத இயலும்.
தூரிகை பட்டாசு போட்டியின் பரிசு விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
முதல் பரிசு – ரூபாய் 5000/-
பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் பரிசாக வழங்கப்படும். அதோடு போட்டியில் வெற்றி பெற்றமைக்கான சான்றிதழ் அனுப்பப்படும். (மின் சான்றிதழ் அல்ல)
இரண்டாவது பரிசு: ரூபாய் 3000/-
யவன ராணி புத்தகம் பரிசாக அளிக்கப்படும்.
வெற்றி பெற்றதற்காக சான்றிதழ் வழங்கப்படும். (மின் சான்றிதழ் அல்ல)
மூன்றாவது பரிசு – ரூபாய் 2000/-
கிண்டில் மூன்று மாத சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படும்.
அதோடு, வெற்றி பெற்றதற்காக சான்றிதழ் வழங்கப்படும். (மின் சான்றிதழ் அல்ல)
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மேலே கூறிய பரிசுகள் போட்டிக்கதை முடிந்ததும் வெற்றி பெரும் மூன்று வெற்றியாளர்களுக்கும் கொடுக்கப்படுவது. அது மட்டுமின்றி, போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே, ஒவ்வொரு வார இறுதியிலும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பரிசுகள் வரிசையாக காத்திருக்கின்றன.
ஒரு வாரம் முழுக்க எழுத்தாளருக்கான போட்டி அறிவிக்கப்படும். மறுவாரம் வாசகர்களுக்கான போட்டி நடத்தப்படும்.
ஆனால், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான தலைப்பில் போட்டி நடத்தப்படும்.
உதாரணமாக, இந்த வாரம் எழுத்தாளருக்கான போட்டி எனில், அதன் தலைப்பு ‘எழுத்துப் பிழையில்லாத படைப்பு’ என்று கொடுக்கப்படும். அந்த வாரம் முழுதும் பதியப்படும் போட்டிக் கதையின் அத்தியாயங்களில் எந்த எழுத்தாளரின் பதிவுகள் எழுத்துப் பிழை இன்றி காணப்படுகிறதோ அவருக்கு அந்த வாரத்திற்கான ‘நோ மிஸ்டேக் ஆத்தர்’ என்ற ‘டேக்’ உடன், பரிசும் அளிக்கப்படும்.
அதே போல், இந்த வாரம் வாசகர்களுக்கான போட்டி வாரம் எனில், அந்த வார தலைப்பு ‘சியர் அப் ரீடர்ஸ்’ என்று அளிக்கப்படும்.
அந்த வாரம் முழுக்க பதியப்படும் அத்தியாயங்களுக்கு எந்த வாசகர் அதிகமாக ஊக்கப்படுத்தி இருக்கிறாரோ அவரே அந்த வாரத்தின் ‘மோடிவேடட் ரீடர்’ என்ற ‘டேக்’ உடன் பரிசும் பெறுவார்.
இப்படியாக ஒவ்வொரு வாரமும் வித விதமான தலைப்பில், வித விதமான பட்டங்களுடன் பரிசுகளும் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்…🤩🤩🤩
எழுத்தாளர் மற்றும் கதை பற்றிய விவரங்களை கீழுள்ள திரியை க்ளிக் செய்து ஃபார்மை நிரப்பி ‘சப்மிட்’ கொடுக்கவும்.
போட்டிக்கு ரெஜிஸ்டர் செய்ய: https://forms.gle/wVW9btymbqM9fkCS6
மின்னஞ்சல் முகவரி: thoorigaitamilnovels@gmail.com
Wow
Vera level!!!.. Exciting one🥰!!!..
மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.