வணக்கம் உறவுப்பூக்களே! கடந்த வாரம் நடைபெற்ற “ஃபாஸ்ட்ராக்” போட்டியின் முடிவுகள் இதோ…
குறிப்பு: இந்த வார தேர்வுக்கும் இறுதி முடிவுக்கும் சம்பந்தம் இல்லை. இறுதி வெற்றியாளர்கள் முழு கதையின் எழுத்துப் பிழை, எழுத்து நடை, மேலும் கொடுக்கப்பட்ட ‘தீம்’ – ஐ பொறுத்தே தேர்வு செய்யப்படுவார்.
ஐந்து நாட்களும் தொடர்ந்து அத்தியாயம் பதிவிட வேண்டும் எனவும், அதிலும் ஒரு அத்தியாயம் 1500 வார்த்தைகளுக்கு மேல் இருத்தல் அவசியம் என்றும், மேலும் ஒரு நாளைக்கு ஒரு அத்தியாயம் வீதம் ஐந்து அத்தியாயங்கள் பதிய வேண்டும் என்ற விதிமுறையுடன் போட்டி அறிவித்திருந்தோம்.
அப்போட்டிக்கு பல பட்டாசு எழுத்தாளர்கள் தங்களின் அதிவேக அத்தியாயங்களை தொடர்ந்து பதிந்தனர். கலந்து கொண்ட அனைவர்க்கும் வாழ்த்துகள்.
இதில், சரியாக அனைத்து அத்தியாயங்களிலும் 1500 வார்த்தைகளுக்கு மேல் உபயோகித்து, தினம் ஒரு பதிவு மட்டுமே பதிந்து, போட்டியில் வெற்றி பெற்ற நம் ஃபாஸ்ட்ராக் எழுத்தாளர்கள்:
1. சந்திரப்பாவை நீயடி – அணுகுண்டு வெடி.
2. உடல் பொருள் ஆவி நீயடி – பம்பரவெடி
3. முடிவில்லா காதல் நீயே – மீயாழ் நிலா
வெற்றி பெற்றவர்களுக்கு தூரிகை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள்.
மேலும், தொடர்ந்து ஐந்து அத்தியாயங்கள் பதிந்த எழுத்தாளர்கள், ஒரு நாளைக்கு இரண்டு அத்தியாயங்கள் பதிந்தும் சிலர், 1500 வார்த்தைகளுக்கு சிறிது குறைந்தும் எழுதி இருந்ததால் அவற்றை தேர்வு செய்ய இயலவில்லை. ஆகினும் தொடர்ந்து பதிவிட்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் நட்புகளே.